கவிதை புதிர் கீழே...
ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
-------
விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
---------- எழுதுகோல்.
கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் --------
அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
-------- ஆட்சி
நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
---------
இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத -------
எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
--------
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
--------
இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
--------
அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
--------
காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
--------
சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
--------
காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
--------
அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
--------
மேலே உள்ள கவிதை(?) ஒரு பிரபல நாளிதழில் வந்தது. எழுதியவர் ஹரன்பிரசன்னா இல்லை. -------- என்ற இடத்தில் என்ன வரும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். முடியாதவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் :-) பிகு: சரியான விடை வரும் வரை பின்னூட்டங்கள் வெளியே வராது
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, September 07, 2010
புதிர் - ஹைக்கூ கவிதை
Posted by IdlyVadai at 9/07/2010 11:49:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
23 Comments:
கலைஞர்
இது கூட தெரியாமல் இருக்க நான் என்ன மிருகமா(?)...
விடை: கலைஞர்.
ஹிஹிஹிஹிஹிஹி
ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
எங்கள் பகுத்தறிவு பகலவன்
விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
எப்போதும் கையில் எழுதுகோல்.
கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் வாழும் வள்ளுவர் டாக்டர் கலைஞர்
அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
கழகத்தின் பொன்னான ஆட்சி
நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
இவர் தென்பாண்டி சிங்கம்
இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத கோபாலபுரத்து கோமான்
எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
தமிழ்நாட்டுக்கு ஒளியில்லா நட்சத்திரம்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
கலைஞர் மணிமண்டபம்
இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
நுழைய கட்டணம் வெறும் ஐந்தாயிரம்
அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
மறை கழண்ட சக்கரம்....
காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
கட்டுமரமாக மிதந்து மீண்டும் கரையேறும் வித்தகன்
சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
துகிலுறிந்தான்பட்டி தூயவன்
காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
ஜகத் ஜல்லி ஃபேன்....
அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
இவன் தலைமையே நமக்கு என்றென்றுமென்பது நம் தலையெழுத்து
மஞ்சள் புடவை, மஞ்சள் கமெண்ட் எல்லாம் பார்த்த பிறகும் எங்களுக்குத் தெரியாதா என்ன? விடை: கலைஞர்
Who else? Idly vadai thaan.
Kalaignar
கண்டுபுடிச்சிட்டேன்...
‘ஜெயலலிதா’
MK
யோவ், இதை ஒரு சவாலாக வெளியிட்டு இருக்கிறீரே! / ஓய்வெடுக்காத ஞாயிறு, தொல்காப்பியப் பூங்கா, திருவாரூர் தேர் ... / வேறு யாரய்யா கலைஞரைத் தவிர?
அப்புரம், இதைப் படித்தீர்களா - கலைஞரும் க்ருஷ்ண பரமாத்மாவும் ஒன்று! மணி அடிக்கமாட்டேன் என்று ஒத்துக்கொண்ட பின்னும், கிருஷ்ணர் வெண்ணையை திருடி சாப்பிடும் போது மணி அடித்தவர் சொன்ன காரணம் - நெய்வேத்யம் செய்யும்போது மணி அடிக்கவேண்டும்.
அதே போல், பாராட்டு வேண்டாம் என்றாலும்,'கலைஞர் விழா’ என்றால் பேராசிரியர் செல்வகணபதிக்கு பாராட்டாமல் இருக்க முடியாதாம்! - ஜெ.
விடையும் தெரியும், நான் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்றும் தெரியும்.
...............என்ற இடத்தில் என்ன வரும் தெரியுமா?
(தன் குடும்பத்தார் மேல் மட்டும்)கருணை நிறைந்த (ஏதோ கொஞ்..............................சுண்டு)நிதி சேர்த்த ஒருவரின் பெயர் வரும்.
இதுக்கு ஏன் ஹைக்கூ கவிதை என்று பெயர் தெரியுமா?
வாங்கின காசுக்கு ரொம்ப ஹையாக கூவுவதால் தான், சரியா?
kalaigar
in the prseent trend , it could be only MK
Sankaran
kalaingar
இதற்கான விடையைத்தான் எங்கள் தலைவர் அன்றே 'தி.....தீ...' என்று பாடி விட்டாரே!
kalaignar :) :)
kalaingar :) :)
கோபி, கவிதை சூப்பரோ சூப்பர்.
ஹலோ!, என்ன இது சின்னபுள்ளத் தனமா இருக்கு....
எங்க தலைவருக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்....அவர் எவ்ளோவ் குடுத்தாலும் தா(வா)ங்குவார் தெரியும்ல...
Ellam OK who is the girl in the picture.
நடிகர் முரளி மாரடைப்பால் காலமானார்!!
அவரை இழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
இதுக்கு மேல பேசாம…. நீ போயிறு
விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
விளக்கணைந்த பின்னும் உபத்திரவம் இந்த எழுதுகோல்.
கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் சட்டைப்பையில் தான் பிரபஞ்சம்
அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
பட்டப்பகலிலும் சூ(ர்)ன்யத்தின் ஆட்சி
நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
கருமையின் வண்ணத்தில் படபடக்கும் கொடிகம்பம்
இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத பேங்க் பேலன்ஸ்
எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
மொத்தத்தில்
எட்டாத உயரத்தில் என் தலைவன்
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
இலவச திட்டத்தில் இனாமாய் கிடைக்கலாம்
இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
மூலத்தை விடவும் பொழிப்புரைக்கு விலை அதிகம்
அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
கார் எல்லாம் கொடுத்துடாதீங்க… அக்கப்போர்.
காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
இன்னமும் தீராத விளையாட்டுப்பிள்ளை
சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
ஓட்டை வாங்கி ஆட்டை போடுவதிலும் மன்னன்
காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
சுட்சு போட்டால் காற்று தரும் நிற்பந்தம் இல்லையே…
அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
என்றிவரை அகற்றுவார்
மக்கள் எழுந்து
Post a Comment