பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 03, 2010

கு'பேர' ராஜ்ஜியம் - இந்தியா டுடே கட்டுரை

டிவி சேனல் முதல் சினிமா தயாரிப்பு வரை ஒட்டுமொத்த மீடுயா உலகமும் கருணாநிதி குடும்பத்தின் ஆளுகைக்குள் இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இது நல்லதுதானா ?

வாசகர்கள் விருப்பம் - இந்தியா டுடே கட்டுரை இங்கே

34 Comments:

புரட்சித்தலைவன் said...

good post

Anonymous said...

Why all are so silent on this topic including kalaigar ji?

Anonymous said...

கலைஞர் குடும்பம் ஒட்டுமொத்த சமூதாயத்தின் சீரழிவு என சொன்னால் கொஞ்சம் கூட தப்பில்லை. அனைத்து துறையிலும் அவர்களது ஆட்டம் அடங்காமல் இருக்கின்றது என்பதற்கு இது போன்ற ஜன ரஞ்சகமான பதிவுகளே சாட்சி. கடந்த மூன்று வார ஒ பக்கங்கள் தொடரை படித்து பாருங்கள். இதை விட ஒரு மோசமான ஆட்சி தமிழக சரித்திரத்திலே இருக்காது.

Anonymous said...

Kaalam Oru Naal Maarum !!

R. Jagannathan said...

இந்தியா டுடேயின் கட்டுரை எழுத்தாளர் பூணூல் வம்சமோ என்று கருணாநிதி நினைக்க வாய்ப்பு அதிகம். ஏதாவது கலைநிதி / இளமதி / மாடசாமி என்ற பெயரில் எழுதியிருக்கலாம்.
உண்மையில் இந்த வம்ச விவகாரம் குறித்து இத்தனை விமர்சனம் வேண்டுமா என்று சந்தேகமாக இருக்கிறது. அவர்கள் வெளியிட்ட / தயாரித்த / நடித்த படங்கள் நன்றாக இல்லை என்றால்வர்களுக்குத் தான் நஷ்டம். மீடியாவில் வரும் விளம்பரத்தைப் பார்த்து யாரும் சினிமாவுக்குப் போவதாக தெரியவில்லை. சினிமா பைத்தியங்கள் எப்படியும் போவர்கள். மற்றவர்கள் விம்ர்சனம் படித்தோ, நண்பர்கள் சொல்லக் கேட்டோ படம் பார்ப்பார்கள். என்னைப் போன்றவர்கள் ‘ உலகத் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக திரைக்கு வந்து சில வாரங்களே / நாட்களே ஆன படங்கள்’ டி வி யில் வரும்போது பார்த்துக் கொள்வோம்.

மு க பேச்சில் ‘ துவம்சம் பண்ண முடியும், ஆனால்..’ என்றது கண்டிக்கத் தக்கது. சன் குழுமத்தின் சக்சேனா தன் காரின் மீது மொதியவர் குடும்பத்தையும், அவர் நண்பர் ஓட்டலையும் 100 பேர் கொண்ட ரௌடிக்கும்பலால் தாக்கியது இந்த பின்னணியில் தான் அதாவது இந்த தைரியத்தில் தான் என்று தெரிகிறது. நேற்று செய்தியில் சக்சேனா பெயரைப் போட்ட தினமலர், இன்றைய விரிவான செய்தியில் அவர் பெயரை விட்டு விட்டது. விகடனும் குமுதமும் ஞாநி யின் கட்டுரைளை நிறுத்தியதும் மு க / தி மு க குண்டர்கள் மீதான பயம் தான் காரணம் என்பது வெளிப்படை. இதை மு க உடனடியாக நிறுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். - ஜெ.

Anonymous said...

where is yellow (idly vadai's )comment??

Srikanth said...

ஏன் இந்த பதட்டம்... ஒரு வரி எழுதியதில் இத்தனை தமிழ்ப் பிழைகள்?

பெசொவி said...

எல்லாம் சரி, ஐநூறும் ஆயிரமும் வாங்கிக் கொண்டு வோட்டு போட்ட குடிமகன்கள் இந்தக் கட்டுரையைப் படித்திருப்பார்களா?, படித்து தங்கள் தவறை உணர்ந்திருப்பார்களா? அப்படி ஒரு வேளை நடந்து, அவர்கள் திருந்தினால் போதும், இது போன்ற நிகழ்வுகள் தொடராது. இல்லையேல், :(((((((((((((((((((((((((((((((((((((

ரோமிங் ராமன் said...

அப்பாடா!! இ வ பாஷையில் சொன்னால் இ.டுடேக்கு ஒ சி விளம்பரம்..
( கம்ப்யூட்டர்ல சரியா படிக்க முடியவில்லை ... நானும் ஒரு இ .டு .வாங்கி படித்து விட்டு மீண்டும் வருகிறேன் ஹி ஹி ..!!)

கிண்டி செக்கர்ஸ் இன்ல நடந்த சம்பவம் பத்தி எழுதலியா??

Anonymous said...

Did fools in TN didn't know, that both DMK and ADMK are nonetheless equal when it comes to corruption. The fools have voted them again by accepting bribe.
What RIGHT does a equally corrupt, shameless Tamilan have, to speak about DMK, MK and his family? Where did his morale and dignity go, when he shamelessly sold his votes for a cutting,briyani and bribe.
I tell you, now that DMK has learnt the "sananayaka vithai" of winning elections,no one can ever topple DMK for the next decade.
Ashamed of being a Tamilan.

ungalrasigan.blogspot.com said...

கலைத்துறையில் ஒரு குடும்பத்தின் விழுதுகள் வேர் விட்டு, ஊன்றி வெற்றிகரமாக ஜெயிப்பது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. தொழிலும் கலையும் ஜெயிக்க வேண்டுமானால், மக்களைத் திருப்தி செய்யவேண்டும். அரசியலில் வேண்டுமானால் கூட்டணி கோல்மால்கள் உதவலாம். கலையும் தொழிலும் உண்மையானதாக இருந்தாலன்றி ஜெயிப்பது கடினம். அதை விமர்சிப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சியைததான் காட்டும்.

யதிராஜ சம்பத் குமார் said...

Why all are so silent on this topic including kalaigar ji?//

பொறுங்கள்!! இக்கட்டுரையின் கடைசி பத்திக்காக இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா டுடேவிற்கு முரசொலியில் உபநயனம் நடைபெறும்.

Unknown said...

அருமையான கட்டுரை, இதில் எள் அளவும் கற்பனை அல்ல தமிழ் நாட்டில் இன்று என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு கை கண்ணாடி போல் அமைந்திருக்கிறது இந்த கட்டுரை இதற்கும் பூணுல் மாட்டி பார்பணீயம் பேசி ஒரு அறிக்கை விடுவார் திருக்குவளை தீயசக்தி (உபயம் ஜெ ஜெ ). இவர்கள் ஆட்சி தொடருமே ஆனால் களத்தில் குதிக்க தயாராக இருக்கும் வாரிசுகளின் பட்டியல் அச்சம் கொள்ளச்செய்கிறது.
என்றைக்கு தமிழன் இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச அரிசி, மற்றும் பலப்பல இலவசங்களுக்கு அடிமையாய் போய், பிரியாணிக்கும், பணத்துக்கும், குங்குமச்சிமிழ், குடம், குத்துவிளக்கு, quarter இவைகளுக்காக மட்டுமே ஒட்டு வியாபாரம் செய்கிறானோ அன்றுவரை தொடரும் இவர்களின் ஆதிக்கம்.
இவர்கள் சேமித்திருக்கும் சொத்து இன்னும் பல தேர்தல்களுக்கு போதுமானது.

geeyar said...

முடிந்தவன் சாதிக்கிறான். முடியாதவன் போதிக்கிறான். இங்கே சில ஜன்மங்கள் வயிறு எரிந்து வாயில் வந்ததை பேனாத்திக் கொண்டு இருக்கின்றன. அரசியல் பலம் அதிகாரம் மட்டும் சன் குடும்பத்தை இந்த அளவு உயரத்திற்கு கொண்டு செல்ல முடியாது. அதற்கு பின்னால் கலாநிதி மாறன் இருக்கிறார். அதே அதிகார பலத்தில்தானே சுதாகரன், தினகரன், மகாதேவன் என மன்னார்குடி கும்பல்கள் இருந்தன. ஏன் அவர்களால் இந்த உயரத்தை எட்ட முடியவில்லை. அதிகாரபலம் உள்ளே நுழைவதை எளிதாக்கலாம். ஆனால் அத்துறையில் வெற்றிபெற அவை கை கொடுக்காது. கொஞ்சம் பூணுலை கழட்டிவிட்டு யோசியுங்கள்.

Anonymous said...

////கலைத்துறையில் ஒரு குடும்பத்தின் விழுதுகள் வேர் விட்டு, ஊன்றி வெற்றிகரமாக ஜெயிப்பது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. தொழிலும் கலையும் ஜெயிக்க வேண்டுமானால், மக்களைத் திருப்தி செய்யவேண்டும். அரசியலில் வேண்டுமானால் கூட்டணி கோல்மால்கள் உதவலாம். கலையும் தொழிலும் உண்மையானதாக இருந்தாலன்றி ஜெயிப்பது கடினம். அதை விமர்சிப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சியைததான் காட்டும்.////

வந்துட்டார் யா..... ஞானி கட்டுரையை படியுங்கள். யார் வென சினிமா துறைக்கு வரலாம் (ஆனா நடிகர்கள் அரசியலுக்கு வரக் கூடாது!?) , ஆனா இந்த கருணா குடும்பம் அதிகார துஷ்ப்ரயோகம் செய்யறதுதான் பிடிக்கலை.

Anonymous said...

மிகவும் நன்றி இட்லிவடை. இங்கு திருமங்கலத்திலிருந்து திருவள்ளூர் வரை வந்த 1/2 நாளில் அனைத்து இந்தியா டுடே புத்தகங்களும் தீர்ந்து விட்டது. எங்கே படிப்பது என்று ஒரே யோசனை. நீர் அசத்தி விட்டீர் ஸ்வாமி...

Anonymous said...

//நீர் அசத்தி விட்டீர் ஸ்வாமி...//Anony

இந்தியா டுடே பத்திரிக்கையில் வந்ததை இட்லிவடையில் அப்படியே எடுத்து போட்டுவிட்டார்கள் . இதில் அசத்துவதற்கு என்ன இருக்கிறது அனானி? கருணாநிதிக்கு நிறைய கூஜாக்கள் இருப்பது போல் இட்லிவடைக்கு நீங்கள் கூஜாவா?

Sathish Nandan said...

scanned copy sariyilla...clear copy upload pannunga

Chicken 65 said...

அந்த கட்டுரைல எல்லாரையும் 'ரொம்ப நல்லவங்க' ன்னு எழுதிட்டு, கடைசில மட்டும் சில வார்த்தை போட்டு இருக்காங்க.. சொல்லறத தெளிவா ! நேரடியா! சொல்ல வேண்டியது தானே இவ்ளோவ் பெரிய்ய பத்திரிக்கைக்கு ஏன் இந்த பயம்??
ஒரு பழமொழி தான் நாபகத்துக்கு வருது!
"பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்"
ஆனா ஒன்னு மஞ்சள் பத்திரிகை "இந்திய டுடே" கிட்ட இருந்ந்து இது வந்ததே பெரிய விஷயம்...

Anonymous said...

லக்ஷ்மி சுப்ரமணியன் அவர்களுக்கு நல்ல தைரியம் தான்... கழகக்குஞ்சுகள் இதைப்படித்தால் ஆட்டோ அனுப்பி விடப்போகிறார்கள்!
இ.வ.க்கு நன்றி!

R.Gopi said...

இந்த கட்டுரைக்கு எதிர்வினை, இன்றைய முரசொலியில் வந்துள்ளதா?

ஏனென்றால், இது போன்ற விஷயங்களுக்கெல்லாம் “தல” உடனே பதில் சொல்வாரே!!

தேடுதல் said...

இதையெல்லாம் பார்க்கும் போது

IRVING WALLACE எழுதிய ”The Almighty" என்ற நாவல் ஞாபகத்திற்கு வருகிறது. அதிகபட்ச அதிகாரம் எதை நோக்கி இட்டுச் செல்லும் என்று கவலையாக இருக்கிறது.

Vijays said...

இதுல என்ன தப்பு இருக்கு. அவங்க படம் எடுக்றங்க. அத ரிலீஸ் பண்றாங்க. 95 % அவங்க தான் படம் ஹிட் ஆகுது.

Anonymous said...

உண்மையிலேயே கருணாநிதி குடும்ப மாஃபியாவை நீங்கள் ஒவ்வொருவரும் மனம் நொந்து எதிர்ப்பவராக இருப்பீர்களாயின் கீழ்க்கண்ட சின்ன உங்களால் முடிந்த ஒரு சேவையைச் செய்யலாம், மனம் தான் வேண்டும். நம் அளவில் இந்த கேடுகெட்ட தமிழ்நாட்டைக் கொள்ளை அடிக்கும் மாஃபியாக் கும்பலுக்கு நம் அளவிற்கு நம் கண்டனத்தைச் செய்யலாம். செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கருணாநிதியைக் குறை சொல்லி எந்த பயனுமில்லை. இதைக் கூடச் செய்யாவிட்டால் நாம் இரட்டை வேடம் போடும் நபர்களாகி விடுவோம். இந்தக் கும்பலை நாம் தான் வளர்த்து விட்டோம் நாமே சாவு மணி அடிக்க வேண்டும். இதை வாசிக்கும் ஒவ்வொரு மான ரோஷ, அறவுணர்வு நேர்மை நியாயம் உள்ள ஒவ்வொரு தமிழனும் அவசரமாகவும் அவசியமாகவும் செய்ய வேண்டிய கடமைகள். இன்று இதைச் செய்யா விட்டால் நாளைக்கு உங்கள் கோமணம் கூட மிஞ்சாது என்பதை நினைவில் வையுங்கள்

1. கருணாநிதி குடும்பம் நடத்தும் தினசரிகள் பத்திரிகைகள் அனைத்தையும் புறக்கணியுங்கள் வாங்காதீர்கள். கருணாநிதி கும்பல் நடத்தும் 40 சொச்சம் பத்திரிகைகளில் ஒன்றிற்கேனும் நீங்கள் சந்தா கட்டியிருந்தால் இன்றே நிறுத்தவும்

2. கருணாநிதி அண்ட் சன்ஸ் அண்டு க்ராண்ட் சன்ஸ் அண்டு மருமகன்ஸ் நடத்தும் எந்த சினிமாவையும் பார்க்காதீர்கள் ஆதரவு தராதீர்கள். முக்கியமாக வரவிருக்கும் எந்திரனை எவரும் காசு கொடுத்து தியேட்டரில் போய் பார்க்காதீர்கள். பாம்புக்குப் பால் வார்க்காதீர்கள். அது ரஜினிகாந்த படமாகவே இருந்தாலும் கூட நீங்கள் ரஜினி ரசிகராக இருந்தாலும் கூட நாட்டின் நலன் கருதி தயவு செய்து புறக்கணியுங்கள். கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் எந்திரனை பாய்காட் செய்யுங்கள். அக்கிரமக்காரர்களுக்கு துணை போகாதீர்கள்

4. கருணாநிதி கும்பல் நடத்தும் எந்த டி வி க்கும் சப்ஸ்க்ரிப்ஷன் செய்யாதீர்கள். நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக அந்த சப்ஸ்கிரிப்ஷனை ரத்து செய்யுங்கள். நீங்கள் ஒரு பணம் கொடுப்பது விரியன் பாம்புக் குட்டிகளுக்கு என்பதை நினைவில் கொள்ளுங்கள்

5. கருணாநிதி குடும்பம் நடத்தும் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேய்ஸில் பயணம் செய்யாதீர்கள்.

6. கருணாநிதி குடும்பம் நடத்தும் எந்தவொரு ஹோட்டலிலும் தங்குவதையோ உணவு அருந்துவதையோ செய்யாதீர்கள்

7. கருணாநிதி குடும்பம் விற்கும் எந்தப் பொருளையும் வாங்காதீர்கள்

8. இவர்கள் குடும்பம் நடத்தும் எந்தக் கேபிள் சர்வீசுக்கும் பணம் கட்டாதீர்கள் ஆதரவு தராதீர்கள்

மேலே சொன்ன சின்ன விஷயங்களை நாட்டின் நலன் கருதி செய்வீர்களா? இதைக் கூடச் செய்யா விட்டால் நீங்கள் கருணாநிதியைக் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை. மனசாட்ச்சியைக் கேளுங்கள் மாஃபியாவை புறக்கணியுங்கள்

Anonymous said...

ஜன்னல் வழியே
கருணாநிதி காமராஜுமல்ல, கர்ண மகாப் பிரபுவுமல்ல ! – துர்வாசர்

கருணாநிதிக்கு அடிக்கடி தன்னை ‘நேர்மையின் திருவுருவம்’ என்று உலகத்துக்கு காட்டிக் கொள்ளும் அடங்காத ஆசை ஏற்படுகிறது. ஒருவன் தனக்குத்தானே ‘நேர்மையாளன்’ என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்துக் கொண்டால், அவனைப் பார்த்து உலகம் எள்ளி நகையாடும்.
மகாத்மா காந்தி தன்னைத்தானே ‘மகாத்மா’ என்று சொல்லிக் கொள்ளவில்லை. ‘மகாத்மா’ என்ற பட்டம் உலகம் கொடுத்தது. ‘காமராஜ் ஊழலில்லாத ஆட்சியைத் தந்தார்’ என்று இன்றும் ஜனங்கள் காமராஜை நினைவு கூர்கிறார்கள். ஒருநாளும் காமராஜ், தன்னைத்தானே ‘நான் நேர்மையாளன்’ என்று கொட்டடித்துக் கொண்டு திரிந்தது கிடையாது. ‘நேர்மையானவர்’ என்பதை ஜனங்கள் சொல்ல வேண்டும்.

கட்சிக்காரர்களைத் தவிர வேறு யாரும் கருணாநிதியைப் புகழ மாட்டேன் என்கிறார்கள். அதனால் கருணாநிதி தன்னைத்தானே புகழ்ந்து கொள்கிறார்.

கருணாநிதிக்குத் தன்னைப் பற்றிப் பல தவறான உயர் மதிப்பீடுகள் உண்டு. தான் ஒரு மிகச் சிறந்த இலக்கியவாதி, நேர்மையாளன், மிகச் சிறந்த கவிஞர், மிகச் சிறந்த முதலமைச்சர் என்று தன்னைப் பற்றி, அளவுக்கதிகமான மதிப்பீடுகளை வைத்துக் கொண்டு, படாதபாடுபடுகிறார்.

‘நேர்மையான முதல்வர்’ என்றால் காமராஜும், பக்தவத்சலமும்தான் ஜனங்களுக்கு ஞாபகத்துக்கு வருவார்கள். கருணாநிதி மிகச் சிறந்த கதை – வசனகர்த்தாவாக இருந்தது பராசக்தி, மனோகரா காலத்தில். பராசக்தி, மனோகராவைப் போல் அவரது உளியின் ஓசையோ, மண்ணின் மைந்தனோ, கண்ணம்மாவோ வசனத்துக்காக ஓடவில்லை. இந்தத் திரைப்படங்கள் பராசக்தி, மனோகரா அளவுக்கு வெற்றிகரமான படங்களல்ல. வந்த சுவடு தெரியாமல் ஓடிவிட்ட படங்கள் இவை. இவர் முதல்வராகவோ, ஒரு கட்சியின் தலைவராகவோ இல்லாவிட்டால், இவரது கதை – வசனத்துக்கு எவனாவது 50 லட்சம், 70 லட்சம் என்று அள்ளிக் கொடுப்பானா?

மிகச் சிறந்த எழுத்தாளன் என்று பெருமை கொண்டாட புதுமைப்பித்தன், கு.ப.ரா., மௌனி, கு. அழகிரிசாமி... என்று இலக்கியத்துக்காகப் பாடுபட்ட பலர் இருக்கிறார்கள். வெகுஜன எழுத்தாளர்கள் வரிசையில் கூட கருணாநிதியின் எழுத்து வராது. கல்கி, ஜெயகாந்தன், அகிலன், நா.பார்த்தசாரதி, பாலகுமாரன்... என்று ஒரு பெரிய வரிசையே இருக்கிறது. இதற்காகவும் கருணாநிதி பெருமைப்பட முடியாது.
தொடரும்.....

Anonymous said...

பேச்சாளர்கள் என்றால், இதிலும் கருணாநிதிக்கு முதலிடத்தையோ, நான்காவது இடத்தையோ கூட தூக்கித் தந்துவிட முடியாது. தி.மு.க.வில் அந்தக் காலத்திலேயே அண்ணாதுரை, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன் இவர்களைத்தான் சிறந்த பேச்சாளர்கள் என்பார்கள். காங்கிரஸில் சின்ன அண்ணாமலையை நல்ல பேச்சாளர் என்பார்கள். அரசியலுக்கு அப்பால் கி.வா.ஜ., திருக்குறள் முனுசாமி என்றுதான் பட்டியலிட முடியும்.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் மாறி மாறி முதல்வர்களாக வருகிறபோது, அவர்களுக்கு விழா எடுப்பதையும், ‘அவர்களை விட்டால் தமிழ்நாட்டை ஆள வேறு ஆளே இல்லை’ என்கிற மாதிரி விழுந்து விழுந்து பாராட்டுவதையும் தங்களுடைய மேடை தர்மமாகவே சினிமா உலகினர் வரித்துக் கொண்டு விட்டார்கள். இந்த ரகமான சினிமா உலக ஜால்ராக்களின் வீடு கட்டும் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய டாக்டர், கலைஞர், முத்தமிழ் வித்தகரான கருணாநிதி, தனது குடும்பத்தினர் சினிமா துறையில் ஈடுபடுவதை விமர்சிப்பவர்களைப் பார்த்து, பிருதிவிராஜ் கபூர் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா, ரஜினிகாந்தின் குடும்பம் சினிமாவில் ஈடுபடவில்லையா என்றெல்லாம் பேசியிருக்கிறார்.

பிருதிவிராஜ் கபூர் ஒரு காலத்திலும் முதல்வராக இருந்ததில்லை. அவர் முதல்வராக இருந்து, அந்தச் செல்வாக்கை வைத்துக் கொண்டு ராஜ்கபூர், ஷம்மிகபூர், சசிகபூர் இவர்களெல்லாம் சினிமாவுக்கு வரவில்லை. பிருதிவிராஜ் கபூரும், அவரது மகன்களும் நடிகர்கள். அவ்வளவுதான்.

ரஜினிகாந்த் மகளைத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே தனுஷ் நடிகராகி விட்டார். தமிழர்கள் அறிந்த நடிகராகி விட்டார். ‘நான் ரஜினிகாந்தின் மருமகன்’ என்று சொல்லிக் கொண்டு தனுஷ் யாரிடமும் தனது சினிமா செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவில்லை. அந்தத் தேவையும் தனுஷுக்கு ஏற்படவில்லை.

ஆனால், சன் டி.வி. தமிழ்நாட்டிலும், இதர மாநிலங்களிலும் எப்படி வேரூன்றியது? இதற்கு கருணாநிதி, முரசொலி மாறனின் அரசியல் செல்வாக்கும், அதிகாரமும் எப்படிப் பயன்பட்டது என்பதைப் பிறந்த குழந்தை கூட அறியும். கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஏகப்பட்ட நிதிகள் இப்போது சினிமா துறையில் ஈடுபட்டுப் படங்களைத் தயாரிக்கிறார்கள், வாங்கித் திரையிடுகிறார்கள். இவர்கள் எல்லாம் 2006-க்கு முன்னால், கருணாநிதி மீண்டும் முதல்வராவதற்கு முன்னால் எங்கே இருந்தார்கள்? 2006-க்கு முன்னால் இந்த உதயநிதி, கலாநிதி, துரை. தயாநிதி, அருள்நிதி முதலான நிதிகள் எல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? இப்போது எப்படி சினிமாவுலகில் தனிக்காட்டு ராஜாக்களாக வலம் வருகிறார்கள் என்பதெல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.

ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்கிற மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி ‘என் குடும்பத்தினர் சினிமாத் துறையில் ஈடுபடக் கூடாதா’ என்று சமூகத்தைப் பார்த்துக் கேட்கிறார். காமராஜ் தன் தாயார் இருந்த தெருவுக்கு தண்ணீர் குழாய் போட்டுத் தரும் சலுகையைக் கூட காட்டவில்லை. அப்படிப்பட்ட காமராஜை உலகம் நேர்மையாளர் என்று சொல்லுமா, தனது மகன், மகள், பேரன், பேத்தி, பூட்டன் என்று சகலரையும் அரசியலிலும், சினிமாவிலும் நுழைக்கிற கருணாநிதியை நேர்மையானவர் என்று உலகம் சொல்லுமா? மக்களை சர்வ மடையர்கள் என்று கருணாநிதி நினைத்து விட்டார். கருணாநிதியை நேர்மையானவர் என்று சொன்னால், ‘நேர்மை’ என்ற சொல்லே தன்னை மாய்த்துக் கொண்டு விடும்.

நமது முத்தமிழ் வித்தகர், டாக்டர், கலைஞர் கருணாநிதிக்கு, தான் கர்ணன் வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்காரன் என்றும் நினைப்பு. தி.மு.க.வை ‘ஊழல் கட்சி’ என்று விஜயகாந்த் சொன்னதற்குப் பதில் சொல்ல, தான் வழக்கமாக எழுதி எழுதி மாயும் முரசொலி கேள்வி – பதில் பகுதியைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். தனது தான தர்மங்களைப் பெரிய பட்டியலே இட்டுள்ளார். ‘திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதில் கிடைத்த பணத்தை எது எதற்கெல்லாம் தானமாகக் கொடுத்தேன், எத்தனை பேருக்குப் பொற்கிழி கொடுத்தேன், வீட்டை ஆஸ்பத்திரிக்கு எழுதி வைத்தேன், இப்படிப்பட்ட கர்ணப் பிரபுவான என்னைப் போயா, ஊழல்வாதி என்பது? என்று விஜயகாந்திடம் சீறியிருக்கிறார்


நன்றி:துக்ளக் -துர்வாசர் கட்டுரை


தொடரும்....

Anonymous said...

கர்ணன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் கொடுத்த மாமனிதன். கருணாநிதியை யாரும் வள்ளல், கொடையாளி என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள். வழக்கமாக மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளும் அவரது ஜால்ரா கூட்டம் கூட, கருணாநிதியை கடையேழு வள்ளல்களுக்குப் பின் வந்த எட்டாவது வள்ளல் என்று சொல்ல மாட்டேன் என்கிறது.

பாவம், முத்தமிழ்காரர். பார்த்தார். தானே அவ்வப்போது ‘நான் கொடுத்தேன், நான் கொடுத்தேன்’என்று கொட்டடிக்கிறார். ரோட்டோரம் இருக்கிற பிள்ளையார் கோவிலில் நாற்பது ரூபாய்க்கு ஒரு டியூப் லைட்டை வாங்கிப் போட்டு விட்டு, அதில் ‘உபயம் : ஆத.கணபதி. ஆத.பழ. கந்தசாமி’ என்று சிலர் தங்கள் பெயர்களைப் போட்டுக் கொள்வதற்கும், கருணாநிதி மேடைக்கு மேடை சமயம் கிடைக்கிறபோதெல்லாம் ‘நான் வீட்டைத் தானமாகக் கொடுத்தேன், நான் பொற்கிழி கொடுத்தேன், அதைக் கொடுத்தேன், இதைக் கொடுத்தேன்’ என்று தம்பட்டம் அடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? கருணாநிதி ஒரு காலத்திலும் கர்ணனாக முடியாது. அவரிடம் கைநீட்டி வாங்கியவர்கள், ஐயோ பாவம்...!

‘நான் உனக்குப் பணம் கொடுத்தேனே, பணம் கொடுத்தேனே’ என்று ஊரெல்லாம் தம்பட்டம் அடிக்கிற ரகத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. கருணாநிதி காமராஜுமல்ல. கர்ண மகாப் பிரபுவுமல்ல.


நன்றி:துக்ளக்-துர்வாசர் கட்டுரை

முற்றும்.!

Anonymous said...

எவ்வள்வு எழுதினாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உரைக்குமா? அவர்கள்தான் சோற்றால் அடித்த பிண்டங்களாயிறே.(நன்றி:வார்தை உபயம் மு.க

Anonymous said...

avanga munnernaa ungaluku yenpaa poramai?? poi ambaaniya pathi eluthugalen.

Anonymous said...

///கலைத்துறையில் ஒரு குடும்பத்தின் விழுதுகள் வேர் விட்டு, ஊன்றி வெற்றிகரமாக ஜெயிப்பது ஒரு குற்றமா? எனக்குப் புரியவில்லை. தொழிலும் கலையும் ஜெயிக்க வேண்டுமானால், மக்களைத் திருப்தி செய்யவேண்டும். அரசியலில் வேண்டுமானால் கூட்டணி கோல்மால்கள் உதவலாம். கலையும் தொழிலும் உண்மையானதாக இருந்தாலன்றி ஜெயிப்பது கடினம். அதை விமர்சிப்பது, பொறாமை, காழ்ப்புணர்ச்சியைததான் காட்டும்.
/// CORRECT

Anonymous said...

///துக்ளக் -துர்வாசர் கட்டுரை/// Tamil nattu kirukkan( subramaniya samikku aduthu)

Anonymous said...

If you are working for a corporate company, you will be knowing how much difficult it is to establish a company amidst the competition. SUN network also faced lots of hurdles to establish themselves in the industry.

Many of you might be knowing,Mu.Ka Muthu's grand father is great musician CS Jayaraman. He was in Cine industry. Karunanidhi is still working in Cine Industry. Murasoli Maran was a dialogue / script writer and produced several movies in Tamil.MGR and Jayalalitha acted in some of the movies that Maaran produced. Amirtham, Karunanidhi's Sister's son is also a Film Director / Producer.

Then Mu Ka Muthu came into film industry. (He was far better than the current Tamil Heros). His acting, face cut and Tamil Pronunciation were very good. He was a very good singer too ( He became a singer, not because of Karunanidhi's son, but by his own capabilities)

Before starting SUN TV, Kalanidhi Maaran was running a Video Journal " Poomaalai" which became Sun TV later.

Please do not underestimate the efforts that went into SUN Network. It is not that much easy to establish an Organization.

Karunanidhi was not in POWER continuously ,when SUN TV was established.


Let us appreciate good efforts and Let's not be greedy on others progress.

Azhagar Shankar said...

Idli vadai,

You are 100% correct. please visit my blog www.periyakottai.blogspot.com.

Kamaraj M said...

MGR ippo illai. adhuthaan kaaranam.