பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 08, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 8-9-2010

இட்லிவடைக்கு முனி கடிதம்.....


அன்புள்ள இட்லிவடை,

நீ கடிதம் எழுதுவியா என்பதே பெரிய புதிர். இதில் ஹைக்கூ புதிர் எல்லாம் போட்டு எதற்கு எல்லாரோட டயத்தையும் வீணடிக்கிறாய்? நீ எப்பத்தான் திருந்தப் போறியோ!! அந்த ராகவேந்திரருக்குதான் வெளிச்சம்.

ராகவேந்திரரைக் கூப்பிட்டதாலே முதலில் ரஜினி பற்றி சொல்லிடறேன். அதுவும் எந்திரம் பாடல் பற்றி லேட்டஸ்டாக இப்படி ஒருத்தர் எழுதி இருக்கற நியூஸ். ( இவர் எல்லா படத்தையும் திராபை என்று திட்டிவிட்டு பார்த்துவிடுவார் )

எந்திரன் திரைப்படப் பாடல்களைக் கேட்கக் கேட்க மிகவும் பிடித்துப் போய்விட்டது. இன்னும் கேட்கக் கேட்க கொஞ்சம் சலிப்பும் வந்துவிட்டது. சில நாள்கள் கேட்காமல் இருந்து, நேற்றிலிருந்து மீண்டும் கேட்க ஆரம்பித்தேன். என்னவோ மிகவும் பிடித்த நண்பர் நீண்ட நாட்களாகப் பேசாமல் இருந்து, திடீரென்று பேசத் தொடங்கியது போன்ற ஒரு அனுபவம். அரிமா அரிமா அசத்தல் பாடல். வைரமுத்து கலக்கல். பா.விஜய் எழுதிய ‘கிளிமாஞ்சாரோ’ பாடல் இனிமை. பாடல் வரிகளில் தொடர்ச்சியின்மை என்பது ஒரு மைனஸ் பாயிண்ட் என்றாலும், பல வரிகள் அசத்தல். புதிய மனிதா என்னும் வயதான எஸ்பிபியின் பாடலும், ஐசக் அஸிமோவின் மூளையோ பாடலும் மரண மொக்கை. (படம் பார்த்த பின்பு இந்த இரண்டு பாடல்களும் செம சூப்பர் என்று எழுத வாய்ப்புள்ளது! ரஜினி படத்தை அப்படி விட்டுவிடமுடியாது.) ...


செய்திதான் இப்படின்னா, அதை விட இதற்கு வந்த பின்னூட்டத்தைப் பாரு

வயசானதால எக்கச்ச்ச்ச்சக்க்க்க்கமா மேக்கப் போட்டு தூக்கிநிறுத்தின ரஜினிக்கு, வயசானாலும் வாய்ஸ் மாறாத இளமையான எஸ்பிபி குரலே எக்ஸ்ட்ரா மேக்கப் மாதிரிதான். இதுவே ரொம்ப ஜாஸ்தின்னு திருப்திபட்டுக்கச் சொல்லுங்க. வந்திட்டாய்ங்க!!


இந்த சூடான காமெடிப் பின்னூட்டம் யாருது தெரியுமா? நெட்டுல நல்லா சமைக்கும் பிரபல மாமியின் பின்னூட்டம். இதையே கமலை பற்றி எழுதியிருந்தா இவர் துள்ளி குகித்து ஓடி வது சண்டை போட்டிருப்பார். மேக்கப் மாமாவுக்கு ரசிகை யாக இருக்கலாம் அதற்காக ரஜினி பற்றி இப்படி எல்லாம் பேச கூடாது. சரக்கு மாஸ்டரும் மாமிக்கு பயந்துக்கொண்டு இந்த ரஜினி கமெண்டை கண்டுக்காம விட்டுவிட்டார் என்று கேள்வி. ( எதற்கும் இளமையாக கமல் படத்தை போட்டு வைபோம் இல்லை சண்டைக்கு வந்துவிடுவார் ).

சரக்கு என்றதும் ஒரு மேட்டர். தமிழ் ஹிந்துவில் எங்கேடா சரக்கு கிடைக்கும், எதை எழுதலாம் என்று பார்த்துக்கொண்டே இருப்பார்கள் போல. ரஜினி வீட்டு கல்யாணத்தில் மடிசார் கட்டிக்கொண்டு இருக்கும் பெண்களை பார்த்து - ஹிந்து மதம் தழைத்து ஓங்கிவிட்டது. இப்ப வீரமணி என்ன சொல்ல போகிறார் என்று கட்டுரை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். அதே நாள் ஏதோ ஒரு தொலைக்காட்சியில் "இது நம்ம ஆளு" படம் போட்டு அதில் மடிசார் கட்டிக்கொண்டு "நான் ஆளான தாமரை" என்று பாக்கியராஜுடன் ஷோபனா ஒரு டான்ஸ் ஆடினார். நல்ல வேளை இதை பார்க்கவில்லை, இல்லை என்றால் பாக்கிரயாஜின் ஹிந்து மத பற்று பற்றி எழுதியிருப்பார்கள். எதற்கு மடிசார் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

விஜயகாந்திடம் கூட்டணி வைத்துக்கொள்ளுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இப்ப லேட்டஸ்டாக "நான் அரசியல் மூலம் பிழைக்க வரவில்லை. வரும் சட்டசபைத் தேர்தலில் மக்கள் ஏற்றுக் கொள்ளும் கூட்டணி அமைப்பேன். 30 சீட்டு, 40 சீட்டுக்காக யாருடனும் கூட்டணி அமைக்க மாட்டேன்." என்று ஏதேதோ சொல்லியிருக்கார். என்ன என்று தான் புரியவில்லை. முன்பு "மக்களோடும், தெய்வத்தோடும் கூட்டணி... தமிழகத்துக்கு நன்மை செய்யும் கட்சியுடன் கூட்டணி... மக்கள் ஏற்றுக் கொள்ளும் கூட்டணி.." என்றார். இப்படியே போனால், "கூட்டணி வைக்காத கட்சியோடு கூட்டணி... கூட்டணியில் இருந்து வெளியில் வரும் கட்சியோடு கூட்டணி'ன்னு என்று சொல்லுவார் என்று ஜோக்கடிக்கிறார்கள். தனக்கு யானை மாதிரி பலம் என்று பேசிண்டு இருந்த விஜயகாந்த் இப்போ எலிய விடப் பரிதாபமா ஆயிட்டாரு.

யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்பது பழமொழி. ஜெ கூட்டம் முன்னே மு.க. கூட்டம் பின்னே என்பது புது மொழி. கோவைக்கு அடுத்து இப்ப திருச்சியில் கலைஞர் கூட்டம் கூட்டுகிறார். மதுரையில் ஜெ கூட்டும் கூட்டம் பற்றி தான் எல்லோரும் பேசுகிறார்கள். நிச்சயம் இந்த கூட்டத்துக்கு ஆங்கில மீடியாக்கள் இப்பவே தயாராகிவிட்டார்கள் என்று கேள்வி. மதுரையில் கூட்டம் வருதா என்று பார்க்க மக்கள் கூட்டம் வரும்.

தமிழகத்தில் உள்ள அனைவரையும் தன் மக்களாகக் கருதி நன்மைகளைச் செய்ய வேண்டுமே தவிர, தன் மக்களை மட்டுமே தமிழக மக்கள் எனக் கருதி செயல்படக் கூடாது. எனவே தான், தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்புகின்றனர், இது நேற்று இளங்கோவன் பேசியது. டெல்லியின் ஆதரவோடு தான் இவர் பேச ஆரம்பித்திருக்கிறார் என்று நினைக்கிறேன். இனி கூட்டணி எப்படி அமைய போகிறது என்பதைத்தான் பார்க்க வேண்டும். விஜயகாந்த் தனித்து நின்றால் தான் திமுகவிற்கு ஆதாயம். ராமதாஸ் தங்கள் பக்கம் வருவதை விட விஜயகாந்த தங்கள் பக்கம் வராமல் தனியாக நின்றால் அது திமுகவிற்கு வெற்றியாகும்.

சினிமாவிலும் கூட்டணி ஆரம்பித்துவிட்டது. கஜினி ஏ.ஆர்.முருகதாஸ், ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து தமிழில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். தமிழில் ரமணா, கஜினி, தெலுங்கில் ஸ்டாலின், இந்தியில் கஜினி என இந்திய அளவில் கவனத்தை தன் பக்கம் திருப்பிய ஏ.ஆர்.முருகதாஸ். கூட்டணியில் அமைந்த புதிய படத்தை தமிழில் இயக்க விருப்பம் என்று சொல்லியுள்ளார்.

போன வாரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீதான தற்காலிக பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டு அவர் டான்சி நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறார். சில கேள்விகள் - உமாசங்கர் தப்பு ஏதும் செய்யவில்லையா? அல்லது அவர் செய்த தப்பு பரவாயில்லையா? இல்லை இந்த சஸ்பென்ஷன் மிரட்டும் வேலையா? இல்லை தலித் ஓட்டு வேண்டும் என்று இவரை திரும்பவும் கொண்டு வந்தார்களா? இல்லை அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து எடுத்து வேறு துறைக்கு மாற்றும் உத்தியா? சும்மா சொல்லக்கூடாது முகமது பின் துக்ளக் கூட இந்த மாதிரி தந்திரக்காரனாக இருந்திருக்க மாட்டார். எப்படியோ பல கோடிகளை மறைக்க இந்த சஸ்பென்ஷன் நாடகம் இனிதே நிறைவு பெற்றது. நம்ம மக்களும் மாறி மாறி கழகத்துக்கு ஓட்டுப் போட்டு இந்த மாதிரி நாடங்களை இலவசமாப் பார்த்து ரசிப்பாங்க.


விஜய்காந்த் மாதிரி புள்ளி விவரம் சொல்ல வேண்டும் என்றால் நம் நாட்டில் எவ்வளவு பேர் பிச்சை எடுக்கிறார்கள் என்று தெரியாது. அதற்கு தான் இப்ப மக்கள் கணக்கெடுப்பு எடுக்கிறார்கள். அதிலும் ஒவ்வொரு ஜாதியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று தான் கவலைப்படுகிறார்கள். பேசாம தமிழ் மேட்ரிமோனியில் கேட்டிருந்தால் சொல்லியிருப்பார்கள்.
எவ்வளவு பேர் பசியுடன் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு எடுக்கலாம்.

இந்திய உணவு கிடங்குகளில் சேமித்து வைக்கபடும் உணவு தானியங்களில் பனிரெண்டு மில்லியன் டன் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன. சென்ற வருடம் அறுபத்தி ஓராயிரம் டன் தானியம் உணவு கழகக் கிடங்கில் சரி வரப் பாதுகாக்கபடாததால் வீணானது. இதை அப்புறப்படுத்த இந்திய உணவு கழகம் செய்த செலவு இரு நூற்றி ஐம்பத்தி ஒன்பது கோடி ரூபாய். ஏழைகளுக்கு விநியோகிக்கும் தானியங்களை விட எலிகளுக்கு உணவாக வழங்கப்படும் தானியம் அதிகம் என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது .

உணவுக் கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் பற்றிய பொது நல வழக்கில் தானியங்களைப் பத்திரப்படுத்த வசதி இல்லை எனில் அதை ஏழைகளுக்கு இலவசமாக தரலாம் .என்று உச்ச நீதிமன்றம் ஆலோசனை சொன்னது..இரண்டாவது முறை இதே வழக்கு விசாரணைக்கு வந்த போது நாங்கள் சொன்னது ஆலோசனை அல்ல உத்திரவு என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தார்கள். உடனே அமைச்சருக்கும் பிரதம மந்திரிக்கும் ரோஷம் வந்துவிட்டது. ஒருவருக்கு கூட்டணி கட்சி முக்கியம், இன்னொருவருக்கு கிரிக்கெட் முக்கியம். எழைகள் ? இந்த அழகில் அமெரிக்காவில் சரத்பவார் கட்சியின் கிளையை துவக்கியுள்ளார்கள்.

ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால், அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்து விடும். இதனால், விளைச்சலை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டு விடுவர். இது நம்ம பாரத பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது. இவர் சொன்னதை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டில் பல பேர் மன ரீதியாகப் பாதிப்பு அடைந்து இருக்க வேண்டும்.

காமன்வெல்த் போட்டி தீம் பாடலுல் வெளியான உடன் ரஹ்மானுக்கு வழங்கப்பட்ட ரூ.5 கோடி வீண்' என்கிற ரீதியிலும் விமர்சனங்கள் கிளம்பியிருக்கின்றன. கேட்க கேட்க தான் ரஹ்மான் பாடல் பிடித்து போகும் என்பது பலருக்குத் தெரிவதில்லை. பலர் இந்த பாடலில் எனர்ஜி இல்லை என்று சொல்லுகிறார்கள். அப்படி சொல்லுபவர்கள் முஸ்லி பவர் எக்ஸ்டரா சாப்பிட்டுவிட்டு இந்தப் பாடலைக் கேட்க சிபாரிசு செய்கிறேன். வர்ற தேர்தல்ல மீண்டும் ஜெயிக்க ஒரு ஃப்ரீ கலர் டி.வி. வாங்கிண்டா கூடவே ஒரு கிலோ முஸ்லி ஃப்ரீ என்று அறிவிக்க கலைஞருக்கு இலவசமா சிபாரிசு செய்யறேன்.

இன்றைய தினம் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பேருந்துகளையே பார்த்திராத குக்கிராமங்களில் கூட பெருமளவிலான அரசாங்க மற்றும் தனியார் சொகுசு பேருந்துகள் வெள்ளமென காணப்பட்டன என்று திருச்சி சிறப்பு நிருபர் சொல்லுகிறார். காரணம் வேறொன்றுமில்லை. அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பிற்காக கருணாநிதி திருச்சி வந்திருக்கிறார். அவர் பங்கேற்கும் கூட்டத்திற்காக ஆள் பிடிப்பதற்காக அரசாங்கப் பேருந்துகள் பணியமர்த்தப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தலைக்கு தலா 200 மற்றும் ஒரு குவார்ட்டர், பிரியாணி. பெண்மணிகளுக்கு தலா ரூபாய் நூறு மற்றும் பிரியாணி என திருச்சியில் பிள்ளை பிடிக்கும் கும்பல் போல் ஆள் பிடிக்கிறார்கள். சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து பெருமளவிலான அரசாங்க பேருந்துகள் திருச்சி கூட்டத்திற்காக கருணாநிதி மற்றும் ஸ்டாலின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஒரு கிராமத்திலிருந்து இவ்வளவு பேர் கட்டாயமாகக் கூட்டி வரப்பட வேண்டுமென உள்ளூர் கழகத்தினருக்கு மேலிட உத்தரவாம். அதற்கு அரசாங்க இயந்திரம் அத்தனையும் முழு வீச்சில் செயல்படுகின்றன. விஜயகாந்த் சொன்னது போல், கருணாநிதி ஜெயலலிதாவிற்கு நிஜமாகவே பயப்படுகிறார் என்பது ரொம்பத் தெளிவாத் தெரியுது.

கூடவே தினகரன்ல (மற்றும் பல நாளிதழ்களில் ) வந்த அரசு விளம்பரத்தப் பாரு.
மக்கள் வரிப் பணம் எம்புட்டுத் தண்ணியாக் கை மாறுகிறது பாரு. அதுவும் அரசு செலவில் ஜெயலலிதாவிற்கு இலவச விளம்பரம்.

ஒரு பக்கம் மக்கள் காசைத் தண்ணியா அரசு செலவு பண்ணாலும், மக்களுக்கு சில்லறைத் தட்டுப்பாடு ரொம்பவே மோசமா இருக்கு. கொஞ்ச நாளுல அம்பது காசு, ஒரு ரூபா, ரெண்டு ரூபா எல்லாம் பொருள்காட்சியில்தான் பாக்க வேண்டி இருக்கும் போல. இதற்கான காரணங்களில் ஒன்று மிகவும் விசித்திரமானது. அலங்கார நகைகள் செய்வதற்காக, சில்லரை நாணயங்கள் சட்டவிரோதமாக உருக்கப்படுவதே இதற்குக் காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.

கடைசியாக இரண்டு செய்திகள்:
1. தொடக்க விழாவின் போது அலங்காரம் மற்றும் வாண வேடிக்கை நிகழ்த்த ரூ.40 கோடி ஹீலியம் பலூனுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் சும்மா இருக்கிறார்.

2. நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 37% மக்களுக்கு பராமரிப்பில்லாமல் வீணாகும் உணவு தானியங்களை இலவசமாக வழங்குங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதற்கு பிரதமர் எப்படி எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லியுள்ளார்.




கை சின்னத்தில் இவ்வளவு பெரிய ஜோக் இருப்பது பிரதமருக்கு தெரிந்திருக்கு, நமக்கு தெரியாமல் போய்விட்டது!

16 Comments:

sathish (bengaluru) said...

Jayavukku kootam,
karunavukku attam,
Idlyvadaikku kondattam.

Krish said...

////. புதிய மனிதா என்னும் வயதான எஸ்பிபியின் பாடலும், ஐசக் அஸிமோவின் மூளையோ பாடலும் மரண மொக்கை////

stupid! The lyrics are awesome in both songs!

குரோம்பேட்டைக் குறும்பன் said...

கேட்க கேட்கத்தான் பிடிக்கும் என்றார்கள்.
கேட்டேன்.
மீண்டும் கேட்டேன்.
மீண்டும்.
மீண்டும்.
இன்னமும்.
மேலும்.
ஆஹா பிடிச்சிடுச்சு
பிடிச்சுடுச்சு !
பிடிச்சிடுச்சு !!
டர்ர்ர் டர்ர்ர்ர் .... டாய் ... ஹூய்!!!!!

ரோமிங் ராமன் said...

உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்!! அல்லது எச்சரிக்கிறேன்!!போஸ்ட் சம்பந்தப்பட்ட எல்லாருடைய படமும் போட்டிருக்கீங்க.. அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்கும் எங்கள் தலைவர் படமே போடவில்லை-- ஏன்?? அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால்தானே உங்கள் பூணூலில் மாட்டிக் கொண்டிருக்கும் உங்கள் பேனா அவர் படம் போட மறுக்கிறது!!

Anonymous said...

//அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால்தானே உங்கள் பூணூலில் மாட்டிக் கொண்டிருக்கும் உங்கள் பேனா அவர் படம் போட மறுக்கிறது!!//

இதனை நான் மேல் ஆட்சேபம் செய்கிறேன் ! அவர் பிற்படுத்தப்பட்டவர் அல்ல; மிகவும் பிற்படுத்தப்பட்டவர்!

Anonymous said...

கேட்க கேட்கதான் பிடிக்கும். மெத்த சரி.
பாபு
கோவை

Anonymous said...

//ஆஹா பிடிச்சிடுச்சு
பிடிச்சுடுச்சு !
பிடிச்சிடுச்சு !!
டர்ர்ர் டர்ர்ர்ர் .... டாய் ... ஹூய்!!!!!//
கு.குறும்பன்

விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தால் சூப்பரா இருந்திருக்கும் போல. நாக்குமுக்கா ரேஞ்சுக்கு !

கௌதமன் said...

label சொல்வது முனீஸ்வரனுக்குக் கடிதம்.
ஆரம்பிப்பது 'இட்லிவடைக்கு முனி கடிதம்'.
இது எப்பவுமே வருகின்ற இட்லி வடை குழப்பம்.

நோட்டுக்கு வோட்டு said...

// இப்படியே போனால், "கூட்டணி வைக்காத கட்சியோடு கூட்டணி... கூட்டணியில் இருந்து வெளியில் வரும் கட்சியோடு கூட்டணி'ன்னு என்று சொல்லுவார் என்று ஜோக்கடிக்கிறார்கள். தனக்கு யானை மாதிரி பலம் என்று பேசிண்டு இருந்த விஜயகாந்த் இப்போ .....//

சென்ற உள்ளாட்சி தேர்தல்களில் வி கட்சியை சேர்ந்த பல வேட்பாளர்கள், பெட்டி வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்கள் என்று செய்தி வந்தது. இந்த முறையும் 234 தொகுதிகளில் போட்டி இட்டால, கட்சிக்காரர்கள் நிறைய கல்லா கட்டலாம். எனவே, யாருடனும் அவர் கூட்டணி வைத்துக் கொள்ளக்கூடாது. இதனால், ஆளும் கட்சிக்கும் லாபம், அவருடைய கட்சிக்கும் லாபம்.

சனீஸ்வரன் said...

முனீஸ்வரனுக்கு சனீஸ்வரன் எழுதிக் கொள்வது:

மை டியர் முனீஸ்வரரே,

ரஜினி வீட்டுக் கல்யாணம் பற்றி தமிழ் இந்துவில் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று படித்துவிட்டு எழுதினீர்களா?

மடிசார் பற்றியா எழுதியிருக்கிறார்கள், கருநாநிதி ஆட்சியிலும் மானத்தோடு வாழ்வதைப் பற்றித்தான் எழுதியிருக்கிறார்கள்.

சந்தேகம் இருந்தால் படித்துப் பார்க்கவும்:

http://www.tamilhindu.com/2010/09/rajini-daughter-wedding-some-thoughts/

Anonymous said...

3 ஆதார குணங்களும் S. ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுந்தரராமசாமி, சாரு ஆகியோரும்

http://ramasamydemo.blogspot.com/2010/09/3.html

lux said...

I expected an "ANJALI" column from you for Actor Murali.

sathish (bengaluru) said...

http://timesofindia.indiatimes.com/opinions/6525135.cms

article about karunanidhi in timesofindia

Unknown said...

//புதிய மனிதா என்னும் வயதான எஸ்பிபியின் பாடலும்,//

இதை விமர்சனம் செய்தவருக்கு காது பங்சரா அல்லது மனதில் ஏதேனும் கோளாரா, இந்த பாடலில் S.P.B யின் இளமை மாறாத குரலை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்க எதிர்மறையாய் விமர்சித்தால் விளம்பரம் கிடைக்கும் என்ற கீழ்த்தரமான ஆசையா?. கேவலமான விமர்சன்ம்.

micman said...

விஜயகாந்த் ஒன்னும் பயந்த எலி கெடையாது ... பதுங்கும் புலி .
அரசியிலுக்கு இதோ வரேன் .. அப்போ வரேன்.. இதோ வந்திட்டே இருக்கேன் நு "டகில் பாஸ்" காட்டுறவங்க மத்தியில
தைரியமா பல இன்னல்கள சந்திக்கும் சிங்கம் விஜயகாந்த் ...
தனித்து போட்டியிட்டு கொண்டு இருந்த விஜயகாந்த.. நீ கூட்டணி வெச்சா தான் இன்னமும் முன்னேற முடியும்னு உசுப் பேத்தினது மீடியா ... இப்போ குழப்புவதாக இங்கே கலாய்கிரிங்க ...

முன்பாக ஒரு குழப்பு வாதி தமிழ் நாட்டில் உள்ளார் ... அவரின் படப் பாடல்களே புகழ்ந்து தள்ளி உள்ளீர்கள் ...
என்ன கொடும பாஸ் இது !!!

Anonymous said...

muhammad bin tughlak thanthirakkaran illa. sariyana eccentric jayalalithaa madhiri. annikku enna thonuthoa adha seivaar.