பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 14, 2010

மண்டேனா ஒன்று 14/9/2010

இது விபரீதமான போக்கு
"கொள்கை", என்ற பதம் அரசியல்கட்சி வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஆயினும் இவ்வார்த்தைக்கு அறிவார்ந்த விளக்கம் ஏதும் அவர்கள் வசம் இருப்பதாகத் தெரியவில்லை. கட்சித் தலைவர்களால் சந்தர்ப்பத்தைப் பொருத்து வசதிக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை, அவ்வளவே!! இப்பொழுது இவ்வார்த்தையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டுள்ளவர் தமிழக காங்கிரஸின் முக்கிய கோஷ்டித் தலைவர்களுள் ஒருவரான கே.வி.தங்கபாலு அவர்கள் ( இவர் தமிழக காங்கிரஸின் தலைவரும் கூட.). காரணம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.
சமீபகாலமாகவே ஈவிகேஎஸ் திமு கழகத்தை விமர்சித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இது கழகத்தினருக்கும், குறிப்பாக கருணாநிதிக்கும் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தங்கபாலுவிற்கும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது போல் தெரிகிறது. காரணம் அதிகம் தேவையில்லை. தன்னை மிஞ்சிய தலைவர் கட்சியில் யாரும் இருந்துவிடக் கூடாது என்ற டிபிகல் காங்கிரஸ் தலைமையின் போக்கு காங்கிரஸில் உள்ள ஒவ்வொருவருவரிடமுமே இருப்பதுதான்.

நேற்றைய தினம் நாகர்கோவிலில் ஒரு கூட்டத்தில் பேசிய இளங்கோவன், தனது வழக்கமான நையாண்டியுடன் தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை, ரேஷன் அரிசி கடத்தல், மணற் கொள்ளை மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது என்பன போன்றவற்றில் தனது அதிருப்தியை வெளிப்படையாக தனது விமர்சனத்தின் மூலம் தெரிவித்தார். தவிர, ரேஷன் அரிசி கடத்தலில் "அவர்கள் கட்சியின்" முக்கியப் பிரமுகர்களுக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிவித்திருந்தார் (இதற்கு முன் தினம்தான் ஜெயலலிதாவும் இதே போன்றதொரு கருத்தை வெளியிட்டிருந்தார்). இதுதான் தங்கபாலுவின் தற்போதைய எரிச்சலுக்குக் காரணம். இது தொடர்பாக பதிலளித்துப் பேசிய தங்கபாலு, கட்சியின் தலைமைக்கும், கொள்கைக்கும் விரோதமாகப் பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும் என தெரிவித்துள்ளார். தவிர, தனது தலைவர் பதவிக்கு வேட்டு வைக்கும் விதமாக இளங்கோவன் மேலிடத்தில் போட்டுக் கொடுப்பத்தாகவும், அதற்குத் தாம் அஞ்சப் போவதில்லை என்றும் தெரிவித்தார். இப்பொழுது இதில்தான் நமக்கு சந்தேகம்.

இப்பொழுது இளங்கோவனது இந்தக் கருத்தால் கட்சித் தலைமைக்கும், கொள்கைக்கும் என்ன விரோதம் ஏற்பட்டுவிட்டது? இளங்கோவன் கூட்டணிக் கட்சியென்றும் பாராமல், அவர்களுடைய முறைகேடுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் விமர்சித்து வருகிறார். இது எவ்வாறு காங்கிரஸின் கொள்கை விரோதமாகும்? அப்படியென்றால் காங்கிரஸின் கொள்கைகள்தான் என்ன? தங்கபாலுவின் கூற்றுப் படி வைத்துக் கொண்டால், முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருப்பதுவும், அதற்குத் துணை போபவர்களுக்குத் துதி பாடுவதுவும்தான் காங்கிரஸின் கொள்கை என்று அர்த்தமாகிறது. ஒரு தேசியக் கட்சிக்கு இப்பேர்ப்பட்ட அவப்பெயரை ஏற்படுத்தக்கூடிய கருத்தைக் கூறியிருக்கும் தங்கபாலுதான் இங்கு கட்சியின் நடவடிக்கைக்குரியவறாகிறார்.

தனக்கில்லாத தைரியமும், அதனால் இளங்கோவனுக்குக் கிட்டும் விளம்பரமும் தங்கபாலுவின் வயிற்றெரிச்சலுக்குக் காரணமாக இருக்கலாம். தவிர, திமு கழகத்தின் இம்மாதிரியான முறைகேடுகளைக் கண்டும் காணாமலும் இருந்தால், காங்கிரஸாருக்கு மற்ற காரியங்களை கழகத்தினரிடம் சாதித்துக் கொள்வது எளிது என்ற எண்ணமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், இம்மாதிரியான கூட்டணிக் கட்சியின் அராஜக நடவடிக்கைகளைக் கண்டு மெளனியாக இருப்பதுவும், அதனைக் கண்டிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற ரீதியில் மிரட்டல் விடுப்பதுவும், தமிழகத்தில் எவ்வகையிலும் காங்கிரஸுக்கு நன்மைகளைச் செய்து விடாது. இது தங்கபாலுவுக்கும் தெரிந்திருக்கும். இந்நிலையிலும் இவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருவது 2011 இல் மட்டுமல்ல, 2111 இந்திலும் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டில் ஏதாவதொரு கழகத்தையே சார்ந்திருக்கும் விதமான ஒரு துர்பாக்ய நிலையைத்தான் தோற்றுவிக்கும். அதுதான் தங்கபாலுவின் விருப்பம் போலும். எனவே இவ்விபரீதமான பாதையிலிருந்து விலக, தூங்குவது போன்ற பாசாங்கிலிருக்கும் தமிழக காங்கிரஸும், அதனை இயக்கும் மத்திய காங்கிரஸும் காலா காலத்தில் விழித்துக் கொள்வது அவரவர்களுக்கும் நலம், தமிழகத்தின் எதிர்காலத்திற்கும் நலம்.

இதையெல்லாம் விட வேடிக்கையான விஷயமென்னவெனில், இளங்கோவனைப் பற்றி இவ்வளவும் பொறிந்து தள்ளியதற்குப் பிறகு, தாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருப்பதாகத் தெரிவித்ததுதான்.

எனக்கு என்னவோ யதிராஜ் கூட காங்கிரஸ் கட்சிக்காரர் என்ற சந்தேகம் வருது :-)

17 Comments:

Anonymous said...

கார சார பதிவு
ஜெ. பாபு
கோவை

எழிலன் ராஜா said...

Saffron Terrorism .என்ற புதிய கண்டுபிடிப்பை உதிர்த்தாரே நமது, அதாவது மஞ்சத்துண்டின் வார்த்தையில்
சொன்னால் சிவகங்கை சின்ன*** .

இப்போது மோடி அவர்கள் காஷ்மீர் தீவிரவாதத்துக்கு என்ன கலர் என்று கேட்டதற்கு வாயில் ரம்ஜான் பிரியாணியை இன்னும் குதப்பிகொண்டிருக்காரோ.. பதிலை காணோமே..

இந்த பிரகஸ்பதி உள்துறையை நிர்வகிக்கும் லட்சணம் சிவராஜ் பாட்டிலே எவ்வளவோ தேவலாம் போலுள்ளதே..

R. Jagannathan said...

யதிராஜ் காங்கிரஸ் கட்சி என்றால் போதாது, அவர் இளங்கோவன் க்ரூப் என்றும் தெளிவு படுத்தவும்! பதவியிலோ அரசு உதவியுடன் லாபகரமான தொழிலிலோ இல்லாதவர்கள் தான் இளஙோவன் மாதிரி பேசுவார்கள். அவரும் மாறுவார்! பொறுத்திருங்கள்! - ஜெ.

மணிகண்டன் said...

அம்மாவிடம் வரவிடாமல் தடுப்பது தங்கபாலுவா ? யதிராஜ் கோவம் வருகிறது என்றால்,

thiru said...

If TN Congress leadership is not changed and will continue like this, Not 2011, may be till 3011, Ruling TN will remain as a dream!!

Anonymous said...

துக்ளக் கேள்வி-பதில் பகுடியில்.....
1.கே : காங்கிரஸ், தி.மு.க. இடையேயான உறவு தற்போது எப்படி உள்ளது?

ப : கலைஞருக்குச் சந்தேகம் வருகிற அளவில் இருக்கிறது. ஆனால், ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை வருகிற அளவுக்கு இருக்கிறதா என்பது


2.கே : கலைஞரை அதிகம் எரிச்சலூட்டுவது இளங்கோவனா, விஜயகாந்தா?
ப : விஜயகாந்த் எங்கே எரிச்சலூட்டுகிறார்! ‘தன் தலைமையில் கூட்டணி’ என்று போகாத ஊருக்கு வழி தேடி, கலைஞரை குஷிப்படுத்துகிறாரே அவர்! இளங்கோவனின் பேச்சு எரிச்சலூட்டும்; அதற்கு மருந்து விஜயகாந்த் பேச்சு.

ரோமிங் ராமன் said...

மித மிஞ்சிய ஊழல் இங்கு தலை விரித்து ஆடுகிறது..எப்படியோ எஙகாவது ஒரு ப்ரளயம் வந்து,இந்த தமிழ் நாட்டுக்கு(மட்டுமாவது) ஒரு நல்லது நடந்தா சரி!!! காங்கிரஸ் அம்மா கூட்டணி கூட தி மு க வை வீழ்த்துமே(வீழ்த்தக்கூடும்!!) அன்றி நாட்டுக்கு நல்லது செய்யும் என்று நம்ப இயலாது!!
ஆனாலும் இங்கு தி மு க வின் வீழ்ச்சி கண்டிப்பாக உடனடி தேவை!!
எனக்கென்னவொ EVKS ஐ இயக்கும் சாவி டெல்லியிலிருந்து வருகிறதோ என்று தோன்றுகிறது!!

Anonymous said...

இந்த தலைவர்கள் தானாக தனித்து நின்று வெற்றி பெற முடியாதவர்கள். இவர்கள் ஜெயாவிடம் காலில் விழுந்து படிவதும் கருணாநிதியிடம் முறைப்பதும் வழக்கமான ஒன்று. இதற்க்கு இடதுசாரிகளின் நடவடிக்கைகளே சாட்சி. மருத்துவரும் வைகோவும் விதிவிலக்கல்ல. இந்த தலைவர்களால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை.

mak said...

what is the color for killed "indian or indian muslim" in gujarat? Is it "saffron terrorist" or "hindu terrorist"?

Don said...

No doubt Rahul and EVKS are in the same track. But Thangabalu seems to be in a different track. Rahul is without doubt against any alliances, which is likely to favor EVKS moves. I think, Congress strategy in TN is to let these leaders fight till the election, after which the Congress will decide it's actual stand based on people's mindset. It's a good approach, instead of unanimously opposing the ruling party like PMK. In other words, Thangabalu's remarks are also part of the whole script that EVKS reads. I wish EVKS wins at the end. But people of Tamilnadu are not going to change, they go after freebies and are most likely to sell their votes for quarter and briyani. DMK will never be defeated as long as Tamilnadu is corrupt.

velji said...

though his views are correct, elangovan is not a worthy politician and all his attacks against dmk are blessed by the high command to maintain balance of power!

Anonymous said...

what is the color for killed "indian or indian muslim" in gujarat? Is it "saffron terrorist" or "hindu terrorist"?

-------
The Colour is always Green both in Godhra and thousands of Hindus massacred by Muslims later on.

எழிலன் ராஜா said...

\\நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.// --- தினமலர் செய்தி.

இந்த யோக்கியவானை தமிழக அரசு சஸ்பெண்டு செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக தெரிய வில்லையே. ஆனால் அந்த உத்தரவை விளக்கியதுதான் தவறு.

IV உங்கள் கருத்தென்ன?

எழிலன் ராஜா said...

\\நான் இப்போதும் சட்டப்படி இந்துதான். கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்தவ ஆலயத்திற்கு சென்று வருகிறேன். தாழ்த்தப்பட்ட ஒருவர் எந்த கோவிலுக்கு செல்கிறார், எந்த சாமியை கும்பிடுகிறார் என்றெல்லாம் வருவாய்த்துறையினர் தோண்டித் துருவி பார்க்க சட்டத்தில் இடம் இல்லை. தலித்கள், கிறிஸ்தவ பாதிரியாராக கூட மாறலாம். ஆனால், சர்டிபிகேட்படி இந்துவாக இருக்கவேண்டும் அவ்வளவுதான். லஞ்சஒழிப்பு துறை ஆணையத்தின் கையேட்டில் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல்கள் புரிந்தால் அவர்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளன. இதை நான் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். அதில் இருந்து ஐந்தாவது நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டேன். நான் குறிப்பிட்ட எந்த அமைப்பையும் சாராமல் தமிழக மக்களுக்காக பணியாற்றுவேன். அவசியம் ஏற்பட்டால் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவை சந்திப்பேன். அது என் உரிமை. இவ்வாறு உமாசங்கர் பேசினார்.// --- தினமலர் செய்தி.

இந்த யோக்கியவானை தமிழக அரசு சஸ்பெண்டு செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக தெரிய வில்லையே. ஆனால் அந்த உத்தரவை விளக்கியதுதான் தவறு.

IV உங்கள் கருத்தென்ன?

R.Gopi said...

”ஊதல் வியாபாரி” என்று மு.க.வை விளித்ததற்காக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை முன்பு வறுத்தெடுத்தாரே மு.க. & கோ...

சுவாசிகா said...

எந்திரனை விடும்..

முதலில் லிங்கு லிங்குசாமிகிட்ட சொல்லி பாதசாரி பதிவுக்கு சரியான லிங்கை கொடுக்க சொல்லவும்!


அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

Anonymous said...

//இந்த யோக்கியவானை தமிழக அரசு சஸ்பெண்டு செய்ததில் தவறு ஏதும் இருப்பதாக தெரிய வில்லையே. ஆனால் அந்த உத்தரவை விளக்கியதுதான் தவறு. //

'உப்புமா சங்கர்',

இந்தாளு பெரிய உத்தமர் என எல்லோரும் புகழ்ந்தது வீண்....
சராசரி குறுக்கு வழி ஆசாமி....