ஆர்.எம்.வி ரசிகர்: நான் அப்பவே சொன்னேன் இல்ல அவர் திருந்திட்டார்னு ..அட.அவர் திருந்திடடார் ன்னு அவரே சொன்னார்பா.
வேளுக்குடி ரசிகர்: நாராயணா… இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா...
கலைஞர் பேச்சின் முழு விவரம் கீழே..
இந்த நாட்டிய நாடகத்தைப் பற்றி, சுருக்கமாக - ஆனால் சுவையாக தலைமையேற்றுள்ள நீதியரசர் ராமசுப்பிரமணியன் எடுத்துச் சொல்லியிருக்கின்றார். நீதியரசர் என்ற காரணத்தால், ஜட்ஜ்மென்டை ஒத்தி வைத்துவிட்டு அந்த முடிவை முதலிலே சொல்லக்கூடாது என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் எனக்குப் புதியவர்கள். இந்த மேடையிலேதான் அவர்களுடைய அறிமுகம் - அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு - இவையெல்லாம் ஜெகத்ரட்சகனால் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.
"இதற்கு முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே!'' என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அவர்களுடைய சொற்பொழிவில் - சொல்லப்பட்ட கருத்துக்களில் ஒன்றிரண்டு சொற்களில் எனக்கும், அவர்கள் கையாண்ட சொற்களுக்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆனால், எதைச் சுற்றினாலும், கடைசியாக "தமிழ் தான்'' என்று அவர்கள் முடித்த அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்விலே நாங்கள் உடன்பாடு கொண்டவர்கள்.
அந்த உடன்பாடு, உணர்வு - இவைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலேதான், அண்மையில் கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அந்த மாநாட்டிலே தமிழைக் கேட்கும்போது, எந்த உணர்வு ஏற்பட்டதோ, எந்தளவிற்கு இந்தத் தமிழ் மொழி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டதோ, அந்த உணர்வு அந்த மாநாடோடு நின்று விடாமல், தொடர்ந்து இந்த நாட்டிய நிகழ்ச்சியிலும், அது கொழுந்து விட்டெரிந்து, தமிழகத்திலே எல்லோரையும் இணைக்கக்கூடிய ஒரு ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தான், "போர்வாளும் பூவிதழும்'' என்ற தலைப்பிலே இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகின்றது.
"போர்வாளும் பூவிதழும்'' என்பது இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதைப்போல, "வன்மை - மென்மை'' என்ற இரண்டையும் குறிப்பிடுகின்ற இரண்டு சொற்களாக இருந்தாலும்கூட, "போர்வாள் பெரிதா? பூவிதழ் பெரிதா?'' என்ற வினா ஒரு இளைஞனுடைய - ஒரு வீரனுடைய உள்ளத்திலே எழும்போது, "இரண்டையும் விட, அவன் எதிர்நோக்க வேண்டிய கடமையென்று ஒன்று இருந்தால், அதுதான் பெரிது'' என்பதை உணர்த்துகின்ற வகையிலேதான் இந்த நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சில சங்க காலப் பாடல்களை வைத்து, சங்கப் புலவர்கள் யாத்த அந்தச் செய்யுள்களை வைத்து பின்னிய ஒரு ஓரங்க நாடகம். அதை இவ்வளவு திறமையாக நாட்டிய நாடகமாக நடித்துக் காட்ட முடியும் என்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பவர் நம்முடைய அன்பிற்கும், நன்றிக்கும் உரிய கலைமாமணி பத்மா சுப்பிரமணியம் ஆவார்.
அவர்களுடைய நிகழ்ச்சிகள் இதே மாமன்றத்தில் எத்தனையோ நடைபெற்றிருக்கின்றன. நானும் அருகிலே உள்ள இல்லத்திலேதான் இருந்திருக்கின்றேன். ஆனால், இந்த நிகழ்ச்சியைக் காணுகின்ற வாய்ப்பினை நானும் பெற்று, நீங்களும் பெற்றுள்ள இந்தச் சூழல் - தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டுமென்று அனைவரும் எண்ணுகின்ற ஒரு சூழல். இதிலே எப்படி வேளுக்குடி கிருஷ்ணன் வந்தார்? திருச்சி கல்யாணராமன் வந்தார் என்று சில பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதுதான் ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான். அவர்தான் இவர்கள் இருவரையும் இந்த விழாவிலே பங்கு பெறச் செய்து, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை இன்றைக்கு ஊட்டியிருக்கிறார். அதற்காக நான் ஜெகத்ரட்சகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்.
திருச்சி கல்யாணராமன் தொடக்கத்திலே பேசும்போது, ஒரு கோரிக்கை வைத்தார். அதெல்லாம் நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல; நிறைவேறிவிட்டதாக அவர் கருதிக் கொள்ளலாம். இதிலே ஒரு சின்ன சிறப்பு என்னவென்றால், என்னுடைய ஒரு பக்கத்திலே வைணவம்; இன்னொரு பக்கத்திலே சைவம் - இரண்டும் அமர்ந்திருப்பதைப் போல உங்களுக்குத் தெரியும். அந்த இரண்டையும் சமப்படுத்துவதற்காகத்தான், நடுவிலே நீதியரசர் இன்றைக்கு இந்த விழாவிலே பங்கு பெற்றிருக்கின்றார். "வேளுக்குடி கிருஷ்ணன்'' - "கிருஷ்ணன்'' என்றாலே, வைணவப் பெயர் என்பது உங்களுக்குத் தெரியும். "கல்யாணராமன்'' - அதுவும் வைணவப் பெயர்தான். "ராமன், கிருஷ்ணன்'' - இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய நீதியரசர் பெயர் இரண்டுக்கும் பொதுவான பெயர் - "ராமனும், சுப்பிரமணியனும்'' - சைவமும், வைணவமும் சேர்ந்த பெயர். அத்தகைய ஒரு ஒற்றுமையோடு இந்த நிகழ்ச்சியிலே தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.
சில பேர் மண்டபத்திற்கு வெளியிலே நின்று காத்துக் கொண்டிருப்பார்கள். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் - இவர்களெல்லாம் கலந்து கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியில் - "வேளுக்குடி கிருஷ்ணன் என்ன பேசுவாரோ? திருச்சி கல்யாணராமன் என்ன பேசுவாரோ? என்ன கலாம் விளையுமோ? வேடிக்கை பார்க்கலாம்'' என்று யாராவது இருந்தால், ஏமாந்து போயிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் எதையும், எந்த இடத்திலும், அளவோடு அளந்து பேசக்கூடியவர்கள்; பண்பானவர்கள். அந்தப் பண்பை எங்களுக்கு - எங்களுடைய மொழி கற்றுக் கொடுத்திருக்கிறது. எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே தமிழ் மொழி, அவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு உணர்த்திய தமிழ் மொழி, எங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. எனவே, எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும்? எப்படி நம்முடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள்.
மிக விறுவிறுப்பான காலம் - அண்ணாவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், ஆர்.பி. சேதுப்பிள்ளையும் சொற்போர் நடத்திய ஒரு காலக்கட்டத்திலே கூட, அண்ணாவுடைய பேச்சைக் கேட்டு, சோமசுந்தர பாரதியார் வியந்ததும், ஆர்.பி. சேதுப்பிள்ளை புகழ்ந்ததும் சரித்திரம் சொல்லும். ஆகவே, எங்களுடைய தமிழ், தமிழ் ஆற்றல், நாங்கள் கற்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பழகுகின்ற முறை, எடுத்துச் சொல்கின்ற லாவகம், இவைகளெல்லாம் திராவிட இயக்கத்திலே அண்ணாவால் எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதை அவர்கள் இந்த மேடையிலே உணர்ந்திருப்பார்கள்.
நாராயணா நாராயணா...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, July 13, 2010
நடன நடிப்பு = நாட்டு நடப்பு
Posted by IdlyVadai at 7/13/2010 12:37:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
27 Comments:
இங்கே சந்துரு சந்துரு என்ற மான்ஸ்தன் இருந்தாரு அவரைக் காணோம்.
:>
அது யாரு பக்கத்துல? ஸ்ரீரங்கம் கோவில் யானைக்கு போட்ட நாமம் மாதிரி போட்டுகினு ?
அப்போ வேளுக்குடி கிருஷ்ணனும் திருச்சி கல்யாணராமனும் திராவிடைர்களா? ஆரீய பதர்கள் இல்லையா?
வீரமணி … இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா...
மொழி இவர்களுக்கெல்லாம் கற்றுக் கொடுத்திருக்கக் கூடிய பண்பின் இன்னொரு பக்கம், சொல்லி மாளாது. நெற்றித் திலகத்தை ரத்தம் வடிகிறது என்று கூறச் செய்த பண்பும் இதே தமிழ் கற்றுக் கொடுத்ததுதான். ராஜாஜியை குல்லுக பட்டர் என்று அடைமொழியிட்டு அழைக்கக் கற்றுக் கொடுத்ததுவும் இதே தமிழ்தானோ?
இடத்துக்கேற்ற வகையில் பேசும் வல்லமை பெற்ற கருணாநிதி இவ்விதம் பேசியதில் ஒன்றும் வியப்பில்லை. ஆனால், ஒரு ஆபத்து நிகழ வாய்ப்பிருக்கிறது. பிற்காலத்தில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஏடாகூடமாக பேசிவிட்டு அன்றே வேளுக்குடி கிருஷ்ணனும் திருச்சி கல்யாணராமனும் இதைக் கேட்டு ஒப்புதல் அளித்திருக்கிறார்கள் என்று இவர்களையும் இக்கட்டில் மாட்டிவிடலாம். இதிகாச கிருஷ்ணனும் ராமனும் இவர்களைக் காப்பாற்றட்டும்.
நவரச நாயகன் கார்த்திக் நடித்த படம் "மேட்டுக்குடி". அதில் வில்லனாக ஒரு மலையாள நடிகர் நடித்திருப்பார். அவருக்கு இரண்டு மகன்கள் இருப்பார்கள். அவர் சாமி ஆடுவதாக சொல்லி ஊரில் தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்வார்.
இப்போ கருணாநிதி அதை தான் செய்கிறார். தமிழின் பெயரால் எல்லாத்தையும் பேசி நெஞ்சை நக்க பாக்குறார்...
வர வர இவரு தொல்ல தாங்க முடியலை... உண்மையிலையே நாராயணனை கூப்பிட வேண்டியது தான்...
//வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்.//
அப்படின்னா வேளுக்குடி கருணாநிதியை போற்றிப்புகழ்ந்து பேசலையா?
ரொம்ப வருத்தப்பட்டிருக்காரே??
ஒரு போட்டி: இன்னும் எத்தனை நாளைக்கு முக செம்மொழி மாநாட்டைப் பற்றி பேசுவார்?
திருவாளர்கள் வேளுக்குடி கிருஷ்ணன் மற்றும் திருச்சி கல்யாணராமன் பேச்சின் முழுவடிவத்தையும் தயவு செய்து பதிவிடுங்கள்..நன்றி
கருணாநிதியையோ கருணாநிதியின் நாக்கையோ நம்மால் கட்டுப் படுத்த முடியாது. இந்து மத துவேஷி கருணாநிதியின் நாட்டிய நாடக விழாவில் கலந்துக் கொண்ட வேளுக்குடி கிருஷ்ணனுக்கு எங்கே போயிற்று மானம் ரோஷமெல்லாம்? இந்த விழாவில் இவர் கலந்துக் கொள்ளவில்லை என்று யார் அழப் போகிறார்கள்? இனிமேல் இது போன்ற கருப்பு ஆடுகள் உருவாவதை தடுப்போம்.
ஆன்மீகப் பேச்சாளர்களில் நடிகர் அஜித் குமார் ரேஞ்சுக்கு யாரும் இல்லை போலிருக்கிறது.
// இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்.// எவ்வளவு மென்மையான எச்சரிக்கை! சிரித்துக் கொண்டே கண் ஜாடை காண்பித்துவிட்டார் தம்பிகளுக்கு! இல்லை என்றால் வேளுகுடியும், கல்யாண ராமனும் யார் யாரை சந்திக்க வேண்டியிருந்திருக்குமோ, என்ன என்ன பட வேண்டியிருந்திருக்குமோ! பிழைத்தார்கள்.- ஜெகன்னாதன்
வேளுக்குடி, திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள் என்ற விவரம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் இங்கே போடவும்.
கருணாநிதி இந்த மாதிரி நெஞ்ச நக்கற வேலைய ரொம்ப நல்லா செய்தார்... செய்கிறார்... செய்வார்..
என் ரத்தத்தில் குறையாத க்ளூகோஸே
உன்னை எதிர்ப்பவர் எல்லாம் இங்கு அட்டுபீஸே
என்றெல்லாம் ஜகத் கருணாநிதியை புகழ்ந்தால், ”தலை”க்கு இதை விட மமதை வரும்..
It is a pity that Karunanidhi can get away with anything he says, however, scandalous or untruthful it is. As Mr. Jagannathan says it is a veiled threat to Vellakudi. The Press and the public tolerate whatever is stated by Karunanidhi. Here is one man who can get away with calling Rama a drunkard. His family has amassed wealth and nobody either in the press or in public is asking the source. The entire Govt. is run for a single family and its welfare. The Congress which can only to a certain extent correct these things is a mute spectator for some personal gains. Even intellectuals like Chidambaram praise Karunanidhi for just an MP seat. Karunanidhi knows very well that the voting arithmetic is on his side and he need not fear anyone. There are people who are willing to pledge their conscious for petty favours. Our is a only State where Vice Chancellors of Universities will bend backwards to please Karunanidhi. Even in UP where Mayawati is another self-styled demo-Goddess the University Vice chancellors or Judges do not stoop down to this level. Karunanidhi knows nothing can harm him and no honest criticsm will come from the intellengentia or the press. In Tamil Nadu yarukkum vetkamallai. Everybody is willing to tolerate or praise Karunanidhi for their selfish gains. Even PMK which was for prohibition has pleged its honor for an MP seat. Mr. Karunanidhi knows nobody can do anything to him only an act of God can save Tamil Nadu. My appeal to IdliVadai will be to suspend talking about these shameless characters for some time and do some social service like motivating youngsters and building up atleast a good future for Tamil Nadu 10 years later. You can publish good articles from elsewhere and urge poeple to do social work.
எப்படி அர்ஜுனனனுக்கு மாங்காயின் காம்பு மட்டும் தெரிஞ்சுதோ, அதே மாதிரி காரியவாதி -சுயநலவாதி-****-இவர்களுக்கெல்லாம் எதனை எப்படி handle பண்ணினால் தனக்கு (மட்டும்) நல்ல பெயர் ,பணம் அதைவிட முக்கியமாக வோட்டு கிடைக்கும் என்பதை அந்த கீதாச்சார்யன் ப்ரோக்ராம் பண்ணி வச்சிருக்கான் போல!! ஆனாலும் எல்லாமே நாடகமே!! கிருஷ்ணா சீக்கிரமா வாடா!!
எப்படி அர்ஜுனனனுக்கு மாங்காயின் காம்பு மட்டும் தெரிஞ்சுதோ, அதே மாதிரி காரியவாதி -சுயநலவாதி-****-இவர்களுக்கெல்லாம் எதனை எப்படி handle பண்ணினால் தனக்கு (மட்டும்) நல்ல பெயர் ,பணம் அதைவிட முக்கியமாக வோட்டு கிடைக்கும் என்பதை அந்த கீதாச்சார்யன் ப்ரோக்ராம் பண்ணி வச்சிருக்கான் போல!! ஆனாலும் எல்லாமே நாடகமே!! கிருஷ்ணா சீக்கிரமா வாடா!!
//கருணாநிதியையோ கருணாநிதியின் நாக்கையோ நம்மால் கட்டுப் படுத்த முடியாது. இந்து மத துவேஷி கருணாநிதியின் நாட்டிய நாடக விழாவில் கலந்துக் கொண்ட வேளுக்குடி கிருஷ்ணனுக்கு எங்கே போயிற்று மானம் ரோஷமெல்லாம்? இந்த விழாவில் இவர் கலந்துக் கொள்ளவில்லை என்று யார் அழப் போகிறார்கள்? இனிமேல் இது போன்ற கருப்பு ஆடுகள் உருவாவதை தடுப்போம்.//
ஒரு சாதாரண வலைத்தளத்தில் சொந்த பெயரை போட பயந்துகொண்டு அனானி யாக பதிவு செய்யும் நீர்,ஒரு சாதாரண குடிமகனான திரு.வேளுக்குடி,மாநில முதலமைச்சரின் அழைப்பை நிராகரித்து அவர் விழாவில் பங்கேற்க கூடாது என எதிபார்க்கிறீர்!!நல்ல வினோதம் ஐயா!!
ஆனானப்பட்ட பகவான் சாய்பாபாவே
இவர் வீடு தேடி சென்றார்.
ராவணன் ஜாதகம் உச்ச நிலையில் இருக்கும்போது அவன் நவக்ரகங்களையும் தன் சிம்மாசனத்தின் படிகட்டுகளாகப் போட்டு அதன் மேல் ஏறி செல்வானாம் .இப்போ மு.க ஜாதகமும் உச்சத்தில் உள்ளது யாரும் எதுவும் செய்ய முடியாது.
முடிந்தால் தேர்தலில் மாற்றி ஒட்டு போடுங்கள்.(என்ன ராவணனுக்கு பதில் சூர்ப்பனகை ஆட்சி ..)
வணக்கம்,
தயவு செய்து எனக்கு வாக்கு அளிக்கவும்.
இது ஒரு போட்டி.
இதில் நான் மட்டும் தான் இந்தியாவில் இருந்து என்று நினைக்கிறேன்.
http://apps.facebook.com/big-three-d-contest/contests/37479/voteable_entries/6161654?order=votes
நன்றி.
கனடாவில் இருந்து செந்தில்குமார்.
Idu orupakkam. Innourpakkam after this much of work our CM has done for Tamil - Look what is happening for Tamilan's VESHTI.
Who is more powerful? Tamil Nadu cricket Association is more powerful than our Chief Minister.TN celebrated our Tamil culture with pride. However TNCA will not let our CM walk in to their club with VESHTI (the Dress reflecting our Tamil culture). TNCA uses our Tamilian Tax money. But they are shameful of our Tamil VESHTI and they will not let even our CM in their premises with VESHTI. U know who is more powerful
தர தரன்னு நாடு ராத்திரியில வீடு புகுந்து இழுத்துக்கிட்டு பொய் புழல போட்டாதான் சிலருக்கு புத்தி வரும்
அமெரிக்கா நாராயணன்
நீங்கள் தேர்தலுக்குத் தேர்தல் எலக்ஷனில் நிற்கும் அமெரிக்கா நாராயணனா? திருச்சி கல்யாணராமன் போல நீங்களும் கருணாநிதிக்கு ஜால்ரா போட்டு மடிப் பிச்சை கேட்க்கக் கிளம்பி விட்டீர்களா என்ன? ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு ரூல்ஸ் ஐயா இஷ்டம் இருந்தால் போங்கள் இல்லாவிட்டால் போடா ஜாட்டான் என்று சொல்லி விட்டு உங்களுக்கு ஒரு கிளப் நடத்திக் கொள்ளுங்கள். இஞ்சினீயரிங் காலேஜ் எலக்ட்ரிக்கல் மெக்கானிக்கல் லாபுக்குள் போக வேண்டும் என்றால் சட்டையை இன் செய்து பேண்ட் போட்டு ஷூ அணிந்துதான் போக வேண்டும். அங்கு போய் நான் வேட்டி கட்டிக் கொண்டு போவேன் என்று சொல்ல முடியுமா? கிரிக்கட் விளையாடப் போகும் பொழுது வேட்டிக் கட்டிக் கொண்டு போனால் தடுக்கி விழுந்து பல் கில் உடைந்து விடும். ஏற்கனவே அது ஒரு தண்ட விளையாட்டு இதில் இப்படி பல்லை உடைத்துக் கொள்ள வேண்டுமா? அப்படியே கிளப் என்றாலும் ஒவ்வொரு கிளப்புக்கும் ஒரு ரூல்ஸ் இருக்கும் பிடிக்கவில்லையென்றால் அந்தக் கண்றாவி இடத்துக்கு எல்லாம் ஏனையா செல்கிறீர்கள்? கருணாநிதி வருவதாகச் சொன்னால் வேட்டி என்ன அம்மணமாக வந்தால் கூட சலாம் போடு வரவேற்பார்கள். இந்த வேஷ்டி ரூல்ஸ் எல்லாம் உமக்கும் எனக்கும்தான். அந்த கிளப் பக்கம் எல்லாம் போகாமல் ஏதாவது கோவில் குளம் என்று போனால் நாலு புண்ணியமாவது கிடைக்கும். இப்ப இதுதான் நாட்டிலே மிக முக்கிய பிரச்சினையாக்கும்?
Idu orupakkam. Innourpakkam after this much of work our CM has done for Tamil - Look what is happening for Tamilan's VESHTI.
அப்படி என்ன திஸ் மச் ஆஃப் வொர்க்கை உங்க முதல்வர் தமிழுக்குச் செய்து விட்டார்?
தன் குடும்பத்தோட போய் குத்தாட்டம் பார்த்து விட்டு வந்ததா? 300 கோடி ரூபாய் தண்டச் செலவு செய்து தன்னைப் புகழச் சொல்லிக் கவியரங்கம் என்ற கண்றாவியை நடத்திக் கொண்டதா? கம்பரையும், ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் ஒதுக்கி அவமானம் செய்ததா? இந்த கருணாநிதி குடும்பத்துத் திருவிழாக்கும் தமிழுக்கும் என்னையா சம்பந்தம்? செம்மறி ஆட்டுக் கும்பல் போல மக்கள் கூட்டம் கூடமாகச் சென்று இந்த ரெக்கார்டு டான்ஸ்களையும் அனாவுக்கு ஆனா போட்டு பாடிய குப்பை கவிதைகளைக் கேட்டதும்தான் மிச்சம். இந்த கூத்தால் ஒரு பைசா பிரோயஜனம் கிடையாது. அப்படி என்னத்தையா செய்து கிழித்து விட்டார் கருணாநிதி? வந்துட்டானுங்கப்பா உடனே ஜால்ராவத் தூக்கிக் கிட்டு.
இந்த வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு வேற வேலை இல்லையா அல்லது மிரட்டி அழைத்துக் கொண்டு போனார்களா? தசாவதாரம் படத்தில் படத்தில் கமலஹாசன் நாராயணனை அன்றி வேறு யாரையும் புகழ்ந்து பாட மாட்டேன் என்று சொல்வாரே? ஓம் நமோ நாராயணா தவிர வேறு எதையும் ஓத மாட்டேன் என்று சொன்னானே பிரகலாதன் அந்தப் பரம்பரை ஐயா வீர வைணவராகிய வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள். அவருக்கு மானம் உள்ள தமிழர்கள் அனைவர் சார்பிலும் ஒரு பெரிய நமஸ்காரம் செய்து கொள்கிறேன். அன்று அஜித் பேசியதை விட ஆயிரம் மடங்கு அதிகமாக கருணாநிதியின் ஆணவத்திற்கு செவிட்டில் அறைந்தாற் போல அடி கொடுத்திருக்கிறாரையா இந்த வீர வைஷ்ணவர். வாழ்க நீர் பல்லாண்டு
கழுதைக்குக் கற்பூர வாசனை தெரியுமோ தெரியாதோ ஆனால் கருணாநிதிக்கு தமிழும் தெரியாது ஆழ்வார் பாடல்களின் நயமும் தெரியாது. அவருக்குத் தெரிந்தது எல்லாம் குத்துப் பாட்டு, ரெக்கார்டு டான்ஸ், வாலி, வைய்யிர முத்து கவிதைகள் (!!!) அப்புறம் பாராட்டுக் கூட்டங்கள். வச்சிக்கிட்டா அவர் வஞ்சனை செய்கிறார். அவரிடம் போய் வேளுக்குடி பேச்சைக் கேளுங்கள் என்று சொன்னால் அவருக்கு என்ன புரியும்? தெரியும்? ஆத்தைக் கண்டாரா அழகரைக் கண்டாரா? ஆழ்வாரைத்தான் கண்டாரா? ஆழ்வார் பாடல்கள் படித்தவன் எவனாவது இப்படி ஒரு கள்ளச்சாராயக் காரனைப் பார்த்து ஆழ்வாரே என்று அழைப்பானா? சொல்லுங்கள்?
நாயைக் குளுப்பாட்டி நடு வீட்டில் கொண்டு வைத்தாலும் அது குப்பைத் தொட்டி நாடியே ஓடும்.
குப்பைத் தொட்டி என்றதும் உடனே நினைவுக்கு வருவது “குப்பைத் தொட்டி” என்றொரு கதை: அதை முதலில் படியுங்கள். இந்த சரோஜாதேவி ஸ்டைல் ஆபாசக் கதை எழுதிய கபோதியைக் கரெக்டாகக் கண்டு பிடித்துச் சொல்பவர்களுக்கு இட்லி வடை ஒரு பாட்டில் கம்ப ரசம் கொரியரில் அனுப்பி வைப்பார்.
குப்பைத் தொட்டி
-----------------------------
குத்து விளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது. அதிலிருந்து நேரம் இரவாகத்தான் இருக்கும் என்று முடிவு கட்டி விடலாம். இரவு நேரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள் ஓர் அம்மை. பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காதுதான் என்று நாம் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்து விடும் அளவில் பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. வர்ணனையைக் கவனிப்போம். குத்து விளக்கின் ஒளியில் கட்டில் ஒன்றுத் தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா அதன் மீது மெத்தென்ற மஞ்சம். மல்லிகை முல்லை ரோஜா மலர்கள் தூவப் பட்ட மஞ்சம். கட்டில் மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரம் இருந்தாலும் பால்நிலவாய் ஒரு மங்கை அந்தப் படுக்கையுல் இருக்கிறாள். அவள் கொந்தலர் பூங்குழல் கொண்ட கோதை பெயரோ நப்பின்னை. கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்து விட்டால் பூரணத்துவம் பெற முடியாதே? அந்த மங்கையின் மாங்கனியான மார்பினில் மீது தன் மார்பகத்தை வைத்தவாறு பிரரர்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்கிறான். அவன் ஆடவனா இல்லை இல்லை ஆண்டவன். ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை. மலர்மார்பா வாய் திறந்து எனக்கருள்வாய். என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார். அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக்குள்ளேயே போய் விடுகிறார். போனதும் கண்ட காட்சிதான் குத்து விளக்கு எரியும் அறையின் கோலாகலக் காட்சி.
குத்துவிளக்கெரியல் கோட்டுக்கால் கட்டிலின் மேல் மெத்தன்ற மஞ்ச சயனத்தின் மேலேறி கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வவத்துக் கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்
இந்தப் பாடலத்தான் அந்தக் கசங்கிய தாளில் படித்துப் பார்த்தேன். ஐயோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடையோரம் அப்படியே சப்ரமஞ்ச மஞ்சமாகி விடக் கூடாதா? எனக்குப் பக்கத்திலேயே ஒரு பெண் குப்பைத் தொட்டி வந்து சேரக் கூடாதா? அப்படி ஒரு அதிர்ஷடம் வந்தால் அவளோடு நான் எப்படி இன்பமாக இருப்பேன்? கண்மனி என்று அழைப்பதற்குப் பதிலாக குப்பை மணி என்று அழைப்பேன். இப்படியாக காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது. யார் பெற்ற பெண்னோ? பெற்றவர்கள் தூக்கி எறிந்து விட்டுப் போய் விட்டார்கள். யாரோ ஒரு ஆழ்வார் எடுத்து வளர்க்கிறார். கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன் தான் கலந்தாரோ தெரியவில்லை ஒரு பாட்டு படித்து விட்டே இந்தப் பாடு படுகிறேனே எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பயித்தியக்கார விடுதியில்தான் கொண்டு போய் வைக்க வேண்டும்
Who Else apart from our Great Semmozhi KALAINGAR can write this?Maha kevalam and Most Cheapest explanation.
The video that was on maximum demand is here : http://www.youtube.com/watch?v=0EkQa5PE1Qk
Post a Comment