சினிமா பாடல் காட்சிகளுக்கு மலேசியா சிங்கபூர் என்று போவார்கள். இப்ப வெளியீட்டுக்கும் போகிறார்கள். க்லோபல் வார்மிங் காரணமாக இருக்கலாம். எந்திரன் பாடல்கள் இன்று வெளியிடப்படுகிறது. சூப்பர் ஸ்டார், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் ராவணாவை விட அதிக எதிர்ப்பார்ப்பு!. இதுவரை எந்த படத்திலும் இந்த மாதிரி காட்சிகளை பார்த்திருக்க மாட்டீர்கள், இது வித்தியாசமாக படம், ரஜினி சார் சூப்பர், ஐஸ் சூப்பரோ சூப்பர் போன்ற ஹைப் எல்லாம் திட்டமிட்டு பத்திரிக்கையில் வர தொடங்கியிருக்கிறது.
படத்தில் ஆறு பாடல்கள்...
1. புதிய மனிதா...
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ.ஆர்.ரஹ்மான், ஹதீயா ரஹ்மான்
பாடல் : வைரமுத்து
மைக்குக்கு Feedback கிடைக்கும் போது, வரும் சவுண்டுடன் ஆரம்பித்து மெதுவாக ஆரம்பிக்கும் பாடல் எஸ்.பி.பி வந்த பின் வேகம் பிடிக்கிறது. ஏ.ஆர்.ரஹமான், ஹதீயா ரஹ்மான் சேர்ந்து கலக்கியிருக்கியிருக்கிறார்கள். மெதுவாக ஒரு ரோபோ உருவாகுவது போல பாடல் அமைத்திருக்கிறார்கள். எஸ்.பி.பி வந்தவுடன் ரோபோவுக்கும் பாடலுக்கு உயிர் வந்துவிடுகிறது. மனிதனுக்கும் ரோபோவும் போட்டி போட்டுக்கொண்டு பேசிக்கொள்ளுவது போல அமைந்த பாடல் வரிகள் அருமை. "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும், என் தந்தை மொழி தமிழ் மொழி அல்லவா ?" தாய் மொழியை தந்தை மொழியாக்கிய பெருமை வைரமுத்துக்கு.
2. காதல் அணுக்கள்...
பாடியவர்கள் : விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
பாடல் : வைரமுத்து
டெஸ்பரடோ ஆங்கில படத்தில் மெக்ஸிகோ பாடல் ஒன்று வரும் அதை போல ஆரம்பிக்கும் காதல் டூயட். ஸ்ரேயா கோஷல் பாடினாலும் விஜய் பிரகாஷ் 'ஹய்யோ' என்று சொல்லும் போது நம்மை அள்ளிக்கொண்டு போகிறார்.
காதல் அணுக்கள்
உடம்பில் எத்தனை ?
நியூட்ரான் ஏலேக்ட்ரோன் -உன்
நீல கண்ணில் மொத்தம் எத்தனை ?
உன்னை நினைத்தாள்
திச்சுகள் தோறும் ஆசை சிந்தனை ஹய்யோ
என்று ஒருவர் மாறி ஒருவர் காதல் வரிகளை இறைத்துக்ஜொல்லும் வழக்கமாக பாடல், நிச்சயம் கேட்க கேட்க ஹிட்டாகும் என்று நம்புகிறேன். நடுவில் oh baby oh baby என்று வரும் வரிகள் நிச்சயம் மூன்றாம் முறை கேட்கும் போது தான் புரியும் :-)
3. இரும்பில் ஒரு இதயம்...
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், காஷ் என் கிறிஸ்ஸி
பாடல் : மதன் கார்க்கி, காஷ் என் கிறிஸ்ஸி(ஆங்கில வரிகள்)
ரோபோ என்று சினிமாவில் வந்தால் ஒரு பாடல் சின்தசைசர் குரலில் வர வேண்டும் என்பது எழுதப்படாத விதி. 'விக்ரம்... விக்ரம்..." என்று நாம் ஏற்கனவே கேட்ட மாதிரி ஆரம்பித்து நல்ல வேளை அதை பாடல் முழுவதும் இல்லாமல் கொண்டு வராமல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் காஷ் என் கிறிஸ்ஸி பாடி கலக்கியிருக்கும் பாடல். தமிழ் வரிகளை ஏ.ஆர்.ரஹ்மான் பாட ஆங்கில வரிகளை காஷ் இன் கிரிஸ்ஸி பாடியிருக்கார். வித்தியாசனாம கலக்க பாடல். பாடல் லிரிக்ஸ் புரிகிறது !
4. அரிமா அரிமா...
பாடியவர்கள் : ஹரிகரன், சாதனாசர்க்கம்
பாடல் : வைரமுத்து
அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?
என்று எந்திரனாக இருக்கும் மனிதனுக்கு காதல் வந்து பாடும் பாடல் என்பதால் ஹரிஹரன் பாடாமல் கொஞ்சம் மிரட்டியிருக்கார்.
திரையரங்களில் நிச்சயம் மக்கள் கை தட்ட வேண்டும் என்று இந்த வரிகள் எழுதப்படிருக்கலாம்.
இவன்
பேரைச் சொன்னதும், பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கைதட்டும்
இந்த பாடல் கொஞ்சம் சுமார் தான்.
5. கிளிமஞ்சரோ...
பாடியவர்கள் : ஜாவிட் அலி, சின்மயி
பாடல் : பா.விஜய்
ஷங்கர் படத்தில் க்ளைமேக்ஸுக்கு 20 நிமிஷம் முன்னாடி ஒரு "உப்பு கருவாடு", "ரதீ தீ தீ தீ" பாடல் மாதிரி ஒன்று வர வேண்டும். அந்த வரிசையில் இந்த பாடல். ஜாவிட் சத்தம் போட்டு பாடினாலும் பாடலில் ஸ்பீட் கம்மி. பா.விஜய் பாடல் வரிகள் ரொம்ப சுமார் ரகம் தான். சின்மயி பாடியிருக்கார் என்று அவரே டிவிட் செய்து சொல்லிக்கொள்ள வேண்டும். நிச்சயம் தியேட்டரில் மக்கள் தம் அடிக்க வெளியே போக கூடிய பாடல் இது என்று நினைக்கிறேன். ஷங்கரிடம் ஒரு நம்பிக்கை, காட்சிகளில் நம்மை கட்டிப் போட்டுவிடுவார் பார்க்கலாம்.
6. பூம் பூம் ரோபா டா...
பாடியவர்கள் : யோகி பி, கீர்த்தி, ஸ்வேதா, தன்வி
பாடல் : மதன் கார்க்கி
கிட்டதட்ட "ஒரு குடை சன்லைட்" மாதிரி ராக் கலந்த சிவாஜி பாடல். படத்தில் எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும். பட்டி தொட்டி ரோபோ, சுட்டி சுட்டி ரோபோ என்று ரோபோ பாடல். அடுத்த வருடம் நர்சரி ரைம்ஸில் இந்த பாடல் சேர்த்தாலும் ஆச்சரியப்பட கூடாது. நிச்சயம் குழந்தைகள் பள்ளி விழாக்களில் ரோபோ வேஷம் போட்டு ஆட போகிறார்கள்.
7. பூம் பூம் ரோபா டா தீம் பாடல்
பாடியவர்கள் : பிரதீப் விஜய், பிரவீன் மணி, யோகி பி
கம்யூட்டர் மியூசிக், ஜதி எல்லாம் கலந்த தீம் பாடல். படம் முழுக்க ரோபோ அட்டகாசங்கள் செய்யும் போது வரும் தீம் பாடல்.
கனகவேல் காக்க பாடல்கள் இதை விட பெட்டர் என்று பா.ரா டிவிட் செய்வார் கண்டுக்காதீங்க :-)
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, July 31, 2010
எந்திரன் பாடல்கள் FIR
Posted by IdlyVadai at 7/31/2010 12:00:00 PM 32 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Thursday, July 29, 2010
தன் வண்டவாளங்களை தகர்க்கும் பா.ம.க
தமிழக அரசியல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பீஹார் அரசியல் போல் தரம் தாழ்ந்து வருகிறது. காமராஜரும், கக்கனும் இருந்த புனிதமான தமிழக அரசியலில் இன்று குண்டர்களும், சமூக விரோதிகளும் ஜாதிப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.
பாமகவினர், வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரியலூரில் நடந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாமகவின் வெற்றிக்கொண்டான் காடுவெட்டி குரு, வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்காவிடில் தண்டவாளங்களைத் தகர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். இவர் ஏற்கனவே கருணாநிதியை அவதூறாகப் பேசியதற்காக குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டு, பின்பு கூட்டணி கண்டபிறகு, கூட்டணி தர்மத்தின்பாற்பட்டு மன்னிக்கப்பட்டார்.
பாமக மறுபடியும் அதிமுக கூட்டணிக்குச் சென்று விட்டு, பிறகு வழக்கம்போல திமுக கூட்டணிக்குத் திரும்பி அன்புமணி ராமதாஸுக்கு மந்திரி பதவி பிச்சையில் தோல்வி கண்ட பிறகு காடுவெட்டி குரு சகட்டு மேனிக்கு பேச ஆரம்பித்துள்ளார்.
அதன் ஒருகட்டமாகத்தான் இந்த தண்டவாளாத் தகர்ப்பு எச்சரிக்கை. அரசனும் கைவிட்டு, புருஷனும் கைவிட்ட கையறு நிலையில் பாமக மறுபடியும் வன்னியர் இடஒதுக்கீட்டு விவகாரத்தை இப்போது கையிலெடுத்துள்ளது. ஏன் இந்த திடீர் வன்னியர் பற்று இவர்களுக்கு வந்தது ?
அநேகமாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஏதாவது ஒரு கழகக் கூட்டணியில் ஐக்கியமாகும் வரை இந்த ஜாதி பஜனை தொடரலாம். பொதுச் சொத்தான தண்டவாளத்தைத் தகர்ப்பேன் என்கிற இம்மாதிரியான குண்டர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பினால் நாடு என்னவாகும் ? தமிழ் நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் பா.ம.க உருப்படாமல் போகவேண்டும்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அன்புமணி, வன்னியர்கள் கொதித்தெழுந்தால் தமிழகம் தாங்காது என்று அரசிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தையே கொதித்தெழக் கூடிய அளவிற்கு சக்தி வாய்க்கப்பெற்ற அன்புமணி எதற்காக ராஜ்யசபா சீட்டிற்காக கோபால புரத்தில் பிச்சை எடுத்து அல்லாடுகிறார் என்பதுதான் பெரிய புதிர்.
ரமணா விஜயகாந்த் பாணியில், புள்ளி விவரம் தருகிறார் அன்புமணி. என்னவென்றால்? 53 உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே வன்னியராம்; தமிழகத்தில் பணியாற்றும் 355 ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒன்பது பேர் மட்டுமே வன்னியராம்; இது போன்று ஒவ்வொரு பதவிக்கும் ஒரு கணக்கு தருகிறார். வன்னியர் மீது இவர்களுக்கு அக்கறை இருந்தால் அவர்களை உங்களை போல டாக்டருக்கு படிக்க வையுங்கள் அல்லது பின் கேட் வழியாக உங்களை போல மந்திரி பதவி கொடுங்கள். முதலில் உங்கள் கட்சிகளில் அவர்களுக்கு இடஒதுக்கீடு தாங்க அப்பறம் தண்டவாளங்களை தகர்கலாம்.
தேர்தல் நெருங்க நெருங்க, காலையில் கக்கா வரலை என்றால் கூட ஆர்பாட்டம் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.
Posted by IdlyVadai at 7/29/2010 07:42:00 PM 20 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
குறியீடு சொல்லும் குறுஞ்செய்தி
இந்திய ரூபாய்க்கான குறியீடு பற்றி இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்தி எழுத்து 'ர' ஆங்கில எழுத்து 'R' இரண்டையும் சேர்த்து உதயகுமார் என்பவர் வடிவமைத்துள்ளார். தமிழர்.
உலக செம்மொழி மாநாடு நடந்த முடிந்த இந்த சமயத்தில் இவருக்கு பரிசு கிடைத்திருப்பது எமக்கு எல்லாம் பெருமை. ஆனால் நம் தமிழ் நாட்டில் யாரும் இவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பது தான் உண்மை. ஹிந்தி எழுத்தையும் ஆங்கில எழுத்தும் சேர்த்து வடிவமைத்தால் எப்படி கண்டுகொள்ளுவார்கள் ? தமிழ் பற்றுக்கும் வெறிக்கும் இது எடுத்துக்காட்டு.
சமீபத்தில் இவர் பேட்டி ஆனந்த விகடனில் வந்தது. அதில் ஒரு கேள்விக்கு அவரின் பதிலில் 101% உடன்படுகிறேன். இனி அந்த கேள்வி பதில்..
"ஒரு தமிழராக இந்தக் கேள்வியைத் தவிர்க்க முடியலை... தமிழராக இருந்தும் ஏன் இந்தி எழுத்துருவைப் பயன்படுத்தி நீங்க குறியீட்டை வடிவமைச்சு இருக்கீங்க?" "போட்டியின் நிபந்தனைகளுள் ஒன்று, குறியீடு இந்திய கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்க வேண்டும் என்பது!
இந்தி எழுத்துருக்களால்தான் ஒட்டுமொத்த இந்தியாவின் பாரம்பரியம் பளிச்சிடும்னு நம்பி னேன். நம்ம புராணங்கள், வேதங் கள்னு மக்களோட கலாசாரக் கூறுகள் எல்லாமே 'இந்தி'ங்கிற மொழி அடிப்படையிலேயே இருக்கு. பொதுவா, இந்தியாவுக்கு வெளியே, 'இந்தியா'ன்னு சொன்னதும் இந்தி பேசறவங்களும், இந்தி சினிமா உலகமும்தான் நினைவுக்கு வருது. ஓர் இந்தியனா யோசிச்சதால், இந்தியின் தாக்கத்தை என்னால் தவிர்க்க முடியலை. நீங்க ஏன் அப்படிப் பார்க்குறீங்க? ஒரு தமிழன்தான் இந்தி மொழியின் சிறப்பை உலகுக்கு எடுத்துச் சொன்னான்னு பாருங்க. தமிழர்களுக்கு இதில் ஒரு செய்தி... இந்தி நாம் தவிர்க்கக்கூடிய மொழியல்ல. எனக்கு இந்தி தெரிஞ்சதால மட்டும்தான் இந்த வெளிச்சம் சாத்தியமாச்சு! அதே சமயம், தமிழுக்கும் என்னால முடிஞ்ச சேவையைப் பண்ணிட்டுதான் இருக்கேன். இப்போ நான் பண்ணிட்டு இருக்குற பிஹெச்.டி., ஆராய்ச்சிப் படிப்பே தமிழ் மொழிமீதுதான். தோன்றியதில் இருந்து இன்று வரை நாம் எழுதிட்டு இருக்குற தமிழ் எழுத்துக்கள் மாறிட்டே இருக்கு. அந்த மாற்றங்களுக்கான காரணம்பற்றியும் அதில் எந்த எழுத்துக்களை நம்மால் கணினி யில் சுலபமாகப் பயன்படுத்த முடியும் என்பதைப்பற்றிய டைப்போகிராஃபி மீதும்தான் என் ஆய்வுப் படிப்பு!"
உதயகுமாரின் பதிலில் உடன்படாதவர்களுக்கு ஒரு நற்செய்தி - 3 இடியட்ஸ் ஹிந்தி படம் விரைவில் தமிழுக்கு வர போகிறது, வந்தவுடன் பாருங்கள். அது வரை காத்திருங்கள்.
பிகு1: இவர், ரிஷிவந்தியம் தொகுதி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகு2: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததும் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக முதல்வரிடம் தெரிவிததுள்ளார் அழகிரி
Posted by IdlyVadai at 7/29/2010 07:43:00 AM 38 comments
Labels: செய்திவிமர்சனம்
Wednesday, July 28, 2010
கோபப் பேச்சு
செம்மொழி மாநாடு முடிந்த இரண்டு வாரங்களில் ஜெயலலிதா கோவையில் கண்டன ஆர்பாட்டம் என்று அறிவித்து அதை பொதுக் கூட்டமாக மாற்றி காட்டினார். இட்லிவடையில் ஏன் இதை பற்றி எழுதவில்லை என்று கூட சிலர் கேட்டார்கள். நாங்கள் அதை ஒரு முக்கிய செய்தியக இதை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் கலைஞர் நினைத்து நினைத்து திட்ட ஆரம்பித்ததால் இந்த பதிவு. ஜெயலலிதாவின் கோவை பேச்சுக்கு கலைஞர் கொடுத்திருக்கும் டைட்டில் 'கோபப் பேச்சு' கலைஞரை பின்பற்றி இந்த பதிவுக்கும் அதே தலைப்பு.
எதிர்கட்சிகளின் வழக்கமான டெம்பிளேட் - சட்ட ஒழுங்குப் பிரச்சனை, மணல் கொள்ளை, காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு, மின்வெட்டு மற்றும் இதர பிரச்சனைகளைக் ஒரு பிடி பிடித்தார் ஜெயலலிதா. ஆனால் இந்த பேச்சு எதற்கு கலைஞருக்கு ஜூரத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று யோசித்தால் சில விஷயங்கள் புலப்படுகிறது.
செம்மொழி மாநாட்டுக்கு ஒரு வாரம் கூடிய கூட்டம் ஒரே நாளில் இங்கு கூடியதால் திமுகவினர் கலக்கம் அடைந்துள்ளார்கள். இதில் வேடிக்கை என்ன என்றால் ஜெயா டிவி மாபெரும் கூட்டம் என்று சொன்னால் பரவாயில்லை ஆனால் முரசொலியே (வயிற்றெரிச்சலுடன்) ஒப்புக் கொண்டுள்ளது. என்ன கூடவே தலைக்கு 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுத்து கூட்டி வந்த கூட்டம் என்று சமாதானப் படுத்திக் கொண்டுள்ளது.
செம்மொழி மாநாட்டுக்கு இலவச பேருந்து, லெமன் ரைஸ் என்று இவர்கள் கொடுத்தது எல்லாம் எந்த கணக்கில் வருமோ ? ஒரு முழு அரசாங்க இயந்திரமும் ஒரு வருடமாகப் பாடுபட்டு, பல கோடியில், நான் ரிடையர் ஆக போகிறேன் என்று உதார் விட்டு, ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம், சும்மா பதினைந்து நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்ட மாநாட்டிற்கு திரண்டது என்றால்? எனக்கே கோபம் வருகிறது கலைஞருக்கு வராதா ?
சில மணிநேரப் பொதுக் கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டம் கூடியதும், கடைசியில் ஜெயலலிதா கூட்டணி பற்றி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னதும், கலைஞர் குடும்பம் பற்றி கூறிய பேச்சும் திமுகவின் கலக்கத்திற்குக் ( எரிச்சல் என்று சொல்ல வேண்டும்) இன்னொரு காரணம்.
நான் சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு சப்பை கட்டும் விதத்தில் கருணாநிதி பல நாட்களாக பதில் அளித்துக் கொண்டே இருப்பதை பார்க்கும்போது, கோவை மட்டும் குலுங்கவில்லை, கருணாநிதியும் குலுங்கிப் போய் இருக்கிறார் என்கிறார் ஜெயலலிதா. சில சாம்பிள் குலுக்ஸை பார்க்கலாம்.
டிக்கெட் வாங்கக்கூட பணமில்லாமல் திருவாரூரில் திருட்டு இரயில் ஏறி சென்னைக்கு வந்தவர் கருணாநிதி. தற்போது இவருடைய குடும்பம் ஆசியாவின் பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறதே. இந்த தகுதி கருணாநிதி குடும்பத்திற்கு எப்படி வந்தது?
"திருட்டு ரயில் ஏறி வந்தவன் நான்" என்று எப்போதும் நான் கூறிக் கொண்டதில்லை.ஈரோட்டில் குடியரசு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். கோவை, சேலத்தில் பல திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதி சம்பாதித்து அதன் பின் தான் சென்னை வந்தேன். நான் எழுதிக் குவித்த திரைப்படங்கள், நூல்கள் வாயிலாக சம்பாதித்தேன். அவற்றிலிருந்து பொது நலன்களுக்காக நிதியும் வழங்கி வருகிறேன்.
அப்பா முதல்வர், மகன் துணை முதல்வர், பெரியமகன் மத்திய அமைச்சர், மகள் எம்.பி., மகனின் நண்பர்கள் சிலருக்கு மத்திய அமைச்சர் பதவி இவ்வாறு சர்வாதிகாரி ஆட்சியில் கூட பதவிகள் பங்கு போட்டது இல்லை.
நான் ஒரு குடும்பத் தலைவனாக இருந்து - அகில இந்திய அளவில் பண்டித நேரு அவர்களின் குடும்பத்தைப் போல - தமிழகத்தில் என்னுடைய குடும்பமும், நானும் அரசியலில், நாட்டு மக்களுக்கான தொண்டிலே ஈடுபட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார். குடும்பமாக இருப்பது தான் தொல்லை.
பல பேர் அந்த வாய்ப்பு இல்லாத காரணத்தால் - அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தால் எதற்கெடுத்தாலும், என்னைப் பற்றிப் பேச வேண்டுமென்றால் - என்னைப் பற்றிச் சாட்டுகின்ற பெரிய குற்றச்சாட்டே, நான் ஒரு குடும்பஸ்தன் என்பது தான்.
அவர்களுக்கு அது வாய்க்கவில்லை என்பது என்னுடைய தவறல்ல.
கூட்டணி உண்டு கூட்டணியை நான் பார்த்துக்கொள்கிறேன். கருணாநிதியின் கொட்டத்தை நீங்கள் அடக்குங்கள், அடக்குவோம்"
நான் அவரை ஜெயலலிதா அம்மையார் என்று தான் கூறிவருகிறேன். ஆனால், அவர் என்னை கருணாநிதி என்றே பெயரைச் சொல்லி பேசுகிறார். என் பெயரைச் சொல்லி அவர் அடிக்கடி திட்டும்போது, யார் அந்த கருணாநிதி, ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தருபவர் தானே என்று மக்களிடம் நான் பிரபலமாவேன். என்னை திட்டுபவர்கள் பெருக, பெருக, திமுக வளர்ந்துக் கொண்டேயிருக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது.
காவிரி விஷயம் தொடர்பாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டிற்கு கருணாநிதியின் பதில், ஜெயலலிதா கர்நாடகத்தில் பிறந்தவர் என்பது. இது எவ்விதத்தில் பதிலாகும் ?
"என்னுடைய பேனாவிற்கு ஓய்வில்லை. எழுதிக் கொண்டேயிருக்கின்றேன். "எழுதினேன், எழுதுகிறேன், எழுதிக் கொண்டேயிருப்பேன்" என்று கலைஞர் சொல்லுவது தான் கொஞ்சம் கவலை அளிக்கிறது.
கடைசியாக "நீங்கள் விரும்பிய கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், தேர்தல் பணியை நீங்கள் துவங்குங்கள்" என்று கூறிய பின் சில காங்கிரஸ் தலைவர்கள் சமீபத்திய தாக்குதல்கள் கலைஞர் குலுக்கலுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்.
கலைஞர் சும்மா இருப்பாரா ? சோனியாவை 'பதிபக்தி இல்லாதவர்; இந்தியாவை ஆளத் தெரியாதவர்' என்று ஜெயலலிதா விமர்சித்ததை காங்கிரஸ் நண்பர்கள் அவ்வளவு சுலபத்தில் மறந்திருக்க மாட்டார்கள் என்று கருணாநிதி காங்கிரஸுக்கு கருணை மனு போடுகிறார்.
ஆனால் அம்மையார் சும்மா இல்லாமல்
முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்கள் மதுரைக்கு வந்த போது அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தப்பட்டது; கருணாநிதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்திருப்பதாகக் ஜெயின் கமிஷன் அறிக்கை குற்றம் சாட்டியது; பெருந்தலைவர் காமராஜருக்கு சுவிஸ் வங்கியில் பணம் இருக்கிறது என்று சொன்னது; விதவை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் கேட்டு இந்திரா காந்தி அவர்கள் விண்ணப்பித்தால் அது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கிண்டல் அடித்தது ஆகியவற்றை எல்லாம் நினைத்துப் பார்த்து, கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ் கட்சியும் தன்னைவிட்டு விலகிவிடுமோ என்ற அச்சத்தில் கருணாநிதி இது போன்று புலம்புகிறார் போலும்!சில டிட் பிட்ஸ் : ஜெயலலிதா கூட்டிய கூட்டதுக்கு கோவை நகரில் வரும் வாகனங்களை திருப்பி விட்டு கூட்டம் வராமல் பார்த்துக்கொண்டதாம் காவல் துறை ( ஆ.வி நியூஸ் ). அதையும் தாண்டி கூட்டம் வந்ததால், சென்னையிலிரிந்து "இவ்வளவு கூட்டம் எப்படிய்யா வந்தது?" என்று செல்லமாக விசாரித்தார்களாம்.
செம்மொழி மாநாட்டுக்கு கோவை வணிகர்களிடம் கலக்ஷன் செய்தார்களாம் அதிலும் கோவை மக்கல் ஏக கட்டுப்பில் இருக்கிறார்களாம்.
இது கூட பரவாயில்லை, கனிமொழி "காமராஜரின் வாரிசு கருணாநிதி என்று ஒரு போடு போட்டார் பாருங்க" இதுக்கு மேல என்னால் எழுத முடியவில்லை.
எதுவாக இருந்தாலும், கலைஞர் கூட்டணி பற்றி பயப்பட வேண்டாம், ஜெயலலிதாவின் கடந்த கால டிராக் ரெக்கார்ட் அது மாதிரி.
Posted by IdlyVadai at 7/28/2010 02:26:00 PM 17 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Monday, July 26, 2010
மண்டேனா ஒன்று - 26/7/2010
அடுத்ததாக பங்கு பரிவர்த்தனையில் நீங்கள் முடிவெடுக்க வேண்டியது எம்மாதிரியான சந்தையில் பரிவர்த்தனை செய்ய வேண்டுமென்பதை. உங்கள் முகவரிடம் நீங்கள் படிவத்தை நிரப்பும் பொழுதே அதற்கான விருப்பத்தைத் தெரிவு செய்து விட வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை National Stock Exchange (Nifty(National Fifty)) என்றும், Bombay Stock Exchange (BSE (Sensex, Sensitivity Index)) என்றும் இரண்டு பெரிய பரிவர்த்தனை மையங்கள் செயல்படுகின்றன. இதில் பம்பாய் பங்குசந்தையில் சுமார் 4925 நிறுவனங்களும், தேசிய பங்குசந்தையான நிஃப்டியில் சுமார் 2000 ற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தேசிய பங்குசந்தையான NSE இந்தியாவினுடைய மிகப்பெரிய பங்குசந்தையாகவும், உலகின் மூன்றாவது பெரிய பங்குசந்தையாகவும் கருதப்படுகிறது. பம்பாய் பங்குசந்தை ஆசியாவின் மிகப்பழமையான பங்குசந்தையாகும். இது 1875 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
பம்பாய் பங்குசந்தையைப் பொருத்தவரை, இந்தியாவிலுள்ள பல்வேறு துறைகளைச் சார்ந்த முதல் பெரிய 30 நிறுவனங்களைத் தெரிவு செய்து, அவற்றின் தர நிர்ணயத்திற்கேற்றவாறு சில புள்ளிகள் கொடுக்கப்பட்டு, அவற்றின் சராசரி மதிப்பானது "ஸென்ஸெக்ஸ்" குறியீட்டு மதிப்பையும், அவற்றின் ஏற்ற இறக்கத்தையும் நிர்ணயம் செய்கின்றது. நிஃப்டிக்கும் இதே போன்றுதான். நிஃப்டியில் இந்தியாவின் முதல் பெரிய ஐம்பது நிறுவனங்கள் கணக்கில் கொள்ளப்படும். இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளைப் பொருத்து பங்கு வர்த்தக சூழல் மாறுபடும். ஆனால் இந்நிறுவனங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குரியது. இந்நிறுவனங்களில் செயல்பாடுகள் தவிர்த்து, சந்தை நிலவரங்களைப் வேறு சில காரணிகளும் நிர்ணயம் செய்கின்றன. இந்திய பொருளாதாரம், உலக சந்தைகளின் வர்த்தக நிலவரம் போன்றவையும் இந்திய பங்கு வர்த்தக சூழலை நிர்ணயிக்கின்றன.
அடுத்தகட்டமாக, எம்மாதிரியான நிறுவனங்களின் பங்குகளை வாங்கினால் லாபகரமாக இருக்கும்? அந்நிறுவனங்களை எவ்வாறு தெரிவு செய்வது என்பது பங்குவர்த்தகத்தில் மிக முக்கியமாக அவதானிக்க வேண்டிய விஷயம். அது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக நாம் முதலீடு அல்லது வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற நிறுவனத்தின் வர்த்தகம், மற்றும் அவற்றினுடைய பொருளாதார நடவடிக்கைகள் பற்றித் தெரிந்து கொள்வது அவசியம். ஆனால் தேசிய பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள சுமார் இரண்டாயிரம் நிறுவனங்களையும், பம்பாய் பங்கு சந்தையில் இடம்பெற்றுள்ள சுமார் பனிரெண்டாயிரம் நிறுவனங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள நமக்கு பொறுமை, நேரம், சக்தி இவையெல்லாம் இருக்கிறதா? நிச்சயமாகக் கிடையாது. அப்படியே முயன்றாலும் குழப்பம்தான் மிஞ்சும். சாதாரணமாக சந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் சந்தை முதலீடு சில லட்சங்களிலிருந்து, பல லட்சம் கோடிகள் வரை வேறுபடும். அவற்றின் பங்கு விலைகள் ஐம்பது பைசாவிலிருது, சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை அதிகபட்சமாக செல்லும். இவற்றில் சரியான நிறுவனங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதற்கான சில அடிப்படை வழிகளை இப்போது பார்ப்போம்.
* 250
கோடி ரூபாய் சந்தை முதலீடு :
முதலில் நாம் வாங்க எத்தனிக்கின்ற நிறுவனத்தின் சந்தை முதலீடு குறைந்தபட்சம் 250 கோடி ரூபாயாவது இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். தேசிய பங்குசந்தையில் இவ்வாறான நிறுவனங்கள் சுமார் 500 இடம் பெற்றிருக்கின்றன. பொதுவாக குறைந்த சந்தை முதலீட்டைக் கொண்ட நிறுவனங்கள் தங்களுடைய முதலீட்டாளர்களுகாக அதிகமாக எவ்விதத்திலும் மெனக்கெடாது.
*
மொத்த விற்பனை ( Total Volume )
அடுத்ததாக, நாம் முதலீடு/பரிவர்த்தனை செய்யவிருக்கின்ற நிறுவனப் பங்கின் அன்றாட மொத்த விற்பனை நிலவரம் (வாங்குதல், விற்றல் இரண்டையும் சேர்த்து) எப்படி இருக்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய அம்சம். குறைந்தபட்சம் சில ஆயிரம் பங்குகளாவது விற்பனை ஆகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மிகக் குறைந்த அளவே விற்பனை ஆகும் பங்குகளை வாங்கினால், சந்தை சரிவு முகமாக இருக்கும் போது நஷ்டம் தவிர்க்க இயலாததாகிவிடும். தவிர இந்நிறுவனப் பங்குகளின் ஏற்ற இறக்கம் இரண்டுமே சந்தை நிலவரத்திற்குத் தொடர்பில்லாமல் அபரிமிதமாக இருக்கும். அதனால் இது போன்ற பங்குகளைத் தவிர்த்து விடுவது நல்லது.
*
நிறுவனத்தின் வர்த்தக நடைமுறை மற்றும் லாபங்கள்
பல நிறுவனங்கள், தங்களது ஆரம்ப கட்ட முதலீட்டுத் தேவைகளை தங்களது பங்குகளை வெளியிடுவதன் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்ளும். இதனால் ஏற்படும் சுமைகளை பின்னர் செய்யப்படும் வர்த்தக நடவடிக்கைகளின் மூலமாக ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பது அந்நிறுவனங்களின் வியாபார யுக்தி. இது மேம்போக்காக கவர்ச்சியான யுக்தியாகத் தெரிந்தாலும், இதில் அதிக ரிஸ்க் அடங்கியுள்ளது. ஆரம்பகட்ட முதலீட்டுத் தேவைகள் என்பது தொழிற்சாலைகளை நிறுவுவது, ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வது மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்றவை ஆகும். எப்போதுமே புதிதாகத் துவங்கப்படும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் எழ வாய்ப்புகள் அதிகம். இதனால் செலவீனங்கள் அதிகரிக்கும். இதன் தாக்கம் சந்தை இறங்குமுகமாக இருக்கும்போது நிறுவனப் பங்கு விலைகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஒதுக்கி விடுவது நலம்.
*
பணப் புழக்கம்
வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்கள், தங்களது பணப்புழக்கம் பற்றிய தகவல்களை வெளியிடாமல், லாபத்தை மட்டும் முன்னிறுத்திக் காண்பிக்கும். இவை பெரும்பாலும் விரிவாக்க பணப்புழக்கம் மற்றும் லாபம் ஆகியவை இரண்டும் சரி விகிதமாக இருந்தால் பங்குகளின் மதிப்பில் ஏற்றம் ஏற்படும். ஆனால் இரண்டிலும் வேறுபாடுகள் தோன்றினால் பங்குதாரர்கள் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும்.
மேற்கூறியவையெல்லாமே அடிப்படை விஷயங்கள்தான். இன்னமும் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் போகப் போக பார்க்கலாம்.
(...தொடரும்)
Posted by IdlyVadai at 7/26/2010 11:16:00 AM 8 comments
Labels: யதிராஜ சம்பத் குமார், வர்த்தகம்
Saturday, July 24, 2010
இறைவனின் சிரிப்பில் ஏழையை காணலாம்
Posted by IdlyVadai at 7/24/2010 01:52:00 PM 10 comments
Friday, July 23, 2010
மூளைக்கு வேலை டாப் 6.5
அமெரிக்க விஞ்ஞானிகள் நம்மூர் விஞ்ஞானிகள் போல் சும்மாவே இருப்பதில்லை. கலிபோர்னியா பல்கலையின் நரம்பியல் துறை விஞ்ஞானிகளின் சமீபத்திய கண்டுபிடிப்பை “மனோதத்துவ கணக்கீடு” என்று பெயரிட்டுள்ளனர். அதாவது ஒருவரது மூளையை ஸ்கேன் செய்து அவர்களது எதிர்காலத் திட்டங்களைக் கண்டுபிடிக்க இயலுமாம். இதை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினால், குறிப்பாக தமிழ் நாட்டில் ? சில மூளைகளை பார்சல் செய்து அனுப்பினோம். அனுப்பிய இரண்டு மணி நேரத்தில் கிடைத்த ரிசல்ட் கீழே. மூளைக்கு வேலை என்று தலைப்பு இருந்தாலும் அது இருந்தாலும் தேவைப்படாது என்பது இந்த பதிவின் சிறப்பு.
1. முதல் மூளையை ஸ்கேனிங் செய்த போது மிஷினில் ஒரே கை தட்டல் சத்தமாக கேட்டுக்கொண்டே இருந்தது. அவ்வப்போது சுருதி சேராமல் ஜால்ரா சத்தமும் கேட்டது. நல்ல வேளை டாக்டர்கள் குழுவில் தமிழ் நாட்டு டாக்டர் இருந்தால் அதற்கான காரணம் உடனே தெரிந்தது. அடிக்கடி பாராட்டு விழாவுக்கு போனதால் கைதட்டல் ஓசை பலமாக பதிவு செய்ததால் இது மாதிரி என்று விளக்கம் கொடுத்தார். ஆட்சி அமைத்தபின் அவ்வப்போது "பலரும்" கலைஞரை மீட் பண்ணி பேசியதால் வந்த ஃஎ பெக்ட்தான் இரண்டாவது சத்தம் என்றும் எடுத்தியம்பினார். திடீர் என்று அ-அமைச்சர், ஆ-ஆட்சி, இ-இலவசம் உ-உண்டி, என்ற முதல் வார்த்தைகளுடன் செம்மொழிக் கவிதைகள் வர ஆரம்பித்த போது டாக்டர்கள் குழம்பி போய் முதல் வார்த்தைகளை மட்டும் புரிந்துகொண்டு அதிலிருந்து கொஞ்சம் செம்மொழி கற்றுக்கொண்டார்கள். இன்னும் கொஞ்சம் ஸ்கேன் செய்த போது "நான் மாநாடு முடிந்த பின் ஓய்வு பெற போகிறேன்" என்றும் "நான் எப்ப அப்படி சொன்னேன்?" என்ற பதிலும் மாறி மாறி வந்துக்கொண்டே இருந்ததைப் பார்த்துக் கணக்கு தெரிந்த விஞ்ஞானி ஒருவர் கலைஞரின் infinity theory ஞானத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டு போனார். திடீர் என்று வாலி, வைரமுத்து என்று வர தொடங்கி "“Scanning operation aborted. invalid command!!" என்று திரையில் தோன்றி, ஸ்கேனிங் மிஷினிலிருந்து புகை வரத் தொடங்கியதால், இம்முயற்சி பாதியில் என்று கைவிடப் பட்டது. ஸ்கேன் மிஷினில் ஏதோ ஒளி கதிர்கள் அனுப்பும் ஸ்பெக்டரம் கருவியில் ஏதோ பிரச்சனை என்று தெரிந்துக்கொண்டார்கள்.
2. அடுத்ததாக வேறு ஒரு மிஷின் வாங்கி ஒருவரை ஸ்கேன் செய்த போது மாம்பலம், மயிலை, மந்தவெளி போன்ற இடங்களில் ஆர்பாட்டம் செய்யப் போவதாகத் தகவல்கள் கிடைத்தன. எல்லா ஆர்பாட்டத்துக்கும் நடுவில் கொடநாடு செல்வதற்குண்டான தேதிகளும், ரெடிமேட் அறிக்கைகளும் வந்த வண்ணம் இருந்தது. வாரத்துக்கு ஒரு முறை கட்சியிலிருந்து நீக்கப்படவிருப்போர் பட்டியலுமாக அதில் அடங்கும். கூட்டணி தொடர்பாக ஏதாவது தகவல் கிடைக்குமா என்று முயன்றபோது ஒன்றும் கிடைக்காமல் எங்கோ மூலையில் வை ஒரு இடத்திலும் கோ ஒரு இடத்திலும் கண்டுபிடிக்கப்பட்டது. ராமதாஸ் முன்பு சொல்லிய அன்புத் தங்கை வசனங்கள் பாதி அழிந்த நிலையில் இருந்தது. டாக்டர்கள் எவ்வளவு முயன்றும் காங்கிரஸ், தேமுதிக என்ற வார்த்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் கடைசியில் “நீங்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கடைசியில் ஏதோ வர டாக்டர்கள் அதுக்கு மேலே ரொம்ப தேடினால் மிஷினில் புகை வரப் போகிறது என்று நிறுத்திக்கொண்டார்கள்.
3. அடுத்து வந்த மூளையை ஸ்கேன் செய்த போது "அன்பு(டன்)மணியும் இருக்கணுமே அமைச்சரா என்றும்/வம்புடன் பணமே குறி" என்று வெண்பாம் வந்தது. யார் யாரிடம் எப்ப காலில் விழ வேண்டும், எப்ப திட்டி அறிக்கை விட வேண்டும் என்ற தகவல்கள் இருந்தது. சினிமா நடிகர்கள் புகை பிடித்தால் என்ன அறிக்கை விட வேண்டும், ரஜினி படம் வந்தால் என்ன அறிக்கை விட வேண்டும் என்று சகல சினிமா விஷயங்களும் கூடவே வந்து மருத்துவரின் சினிமாப்பாசத்தைப் பறை சாற்றியது. இதுவரை யாருக்கும் தெரியாத ஒன்றைக் கடைசியில் கண்டுபிடித்தார்கள் விஞ்ஞானிகள். மூளையின் ஒரு பகுதியில் திமுக என்றும் மற்றொரு பகுதியில் அதிமுக என்றும் இருந்தது. ரொம்ப ஆராய்ந்ததில் இவரின் மூளையும் ஆக்டோபஸ் மூளையும் கிட்டதட்ட ஒன்றாக இருப்பது தெரிந்தது. பேசாமல் பாலுக்கு பதில் அடுத்த உலககோப்பைக்கு இவரை உபயோகிக்கலாம் என்று நினைத்துக்கொண்டார்கள். எந்தெந்த வருடம் யார் முதலமைச்சராக வருவார்கள் என்ற கணக்கும் இருந்தது. எல்லாவற்றையும் விட, அன்புமணியை ராஜ்யசபா மூலமாக அனுப்பி, பிரதமராக்க முடியுமா என்ற திட்டம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் ஸ்கேனிங் மிஷினே திணறியது.
4. இன்னொருவர் மூளையை ஸ்கேன் செய்த போது சினிமாவா, அரசியலா என்ற குழப்பமே இருந்தது. அட என்னங்கண்ணா இன்னுமா தெரியலை? ஸ்கேன் செய்த போது எதற்கு ராகுல் காந்தியை பார்த்தார் என்ன பேசினார் என்ற தகவல் எதுவும் இல்லை. ஆனால் அந்தத் தகவலுக்குப் பக்கத்தில் கல்யாண மண்டபம் பிரச்சனை ஒன்று இருந்தது. குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா என்ற சில சொற்களைத் தொடர்ந்து திரையரங்க உரிமையாளர்கள் 35 சதவீத தொகையை திருப்பி தர வேண்டும் என்பதை தொடந்து 3 இடியட்ஸ் ரீமேக் என்று வருவது யாரைக் குறிப்பிட்டுள்ளார் என்று தெரியாமல் தவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். நடு நடுவில் என்னங்கண்ணா என்னங்கண்ணா என்று வருவது எதற்கு என்றும் அவர்களுக்குப் புரியவில்லை.
5. அடுத்த மூளையை ஸ்கேன் செய்த போது இது மனித மூளையா எந்திரனுடைய மூளையா என்று இயந்திரம் குழம்பியது. வெளியே சங்கரிடம் கன்சல்ட் செய்துவிட்டு விஞ்ஞானிகள் மேக்கப் போடாத மூளையைக் கண்டு பிடித்தார்கள். அதில் வழக்கம் போல இமய மலை, நதிநீர் இணைப்புக்கு ஒரு கோடி, ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது போன்ற தெரிந்த தகவல்களை ஒதுக்கிவிட்டு பார்த்தால் இவருக்கு ஒரே ஒரு ஆசை தான் இருந்திருக்கிறது. உலக அழகியுடன் நடிப்பது என்ற ஆசை தான் அது. விஞ்ஞானிகள் இவர் அரசியலுக்கு வருவாரா என்று தேடித்தேடிப் பார்க்க கடைசியில் அந்த மெஷின் மொத்தமாகப் படுத்து பிறகு அதுவாகவே ரீபூட் ஆகியது.
6. நம்மைப் போல ஒருவன் என்று நினைத்து அடுத்த மூளையை ஸ்கேன் செய்த போது கடவுள் உபதேசம் ஒரு பக்கமும் கறுப்பாக மிருகத்தின் உபதேசம் ஒரு பக்கம் இருப்பதும் தெரிந்து விஞ்ஞானிகள் உஷார் ஆனார்கள். பல வசனங்கள் இருப்பது தெரிந்தாலும் எல்லாம் இரண்டு மூன்று முறை வந்தது. பக்கத்தில் இருந்த நம் தமிழ் விஞ்ஞானி இது எல்லாம் அவர் ஒத்திகை செய்தது என்று விளக்கம் கொடுத்தார். எல்லாவற்றையும் ஒத்திகை செய்துவிடுவார் போல என்று மற்றவர்கள் பேசிக்கொண்டார்கள். திடீர் திடீர் என்று சுத்தத் தமிழில் வார்த்தைகள் வந்து எரிச்சல் அடைய செய்தது. பெரியார் பெருமாள் என்று வந்ததாலும் குழம்பி போனார்கள். இவரே ஒரு பெரிய தசாவதார விஞ்ஞானி, அவரை எதற்கு ஸ்கேன் செய்ய வேண்டும் என்று நிறுத்திக்கொண்டார்கள்.
6.5 கடைசியாக ஒரு முளை பாக்கி இருக்க அதை நீயா நானா என்று போட்டிப் போட்டுக்கொண்டு விஞ்ஞானிகள் ஸ்கேன் செய்த போது சாரு நித்திய என்று வர அது யாருடைய மூளை என்று கண்டுபிடிக்க முடியமல் மனம் கொத்திப் பறவையை படித்தவர்களை போல திண்டாடினார்கள்.
இவர்களுக்கு எல்லாம் ஓகே. என்னை மாதிரி ஆளுங்களுக்கு என்ன பண்ணுவாங்க? ஸ்கேன் பண்ணா என்ன வரும்? யாராவது சொல்லுங்க. :-)
Posted by IdlyVadai at 7/23/2010 10:54:00 PM 10 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை
Thursday, July 22, 2010
தில்லாலங்கடி
போன வார செய்தி:
துர்கையம்மன் போன்று சித்திரித்து போஸ்டர் அச்சடிக்கப்பட்ட வழக்கில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்கு பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
இந்த வாரச் செய்தி :
தற்போது சன் பிக்சர்ஸ் கைவண்ணத்தில் வந்துள்ள ஒரு புதுப்படத்தில் ஜெயம்ரவியும் தமன்னாவும் பேசிக்கொள்ளும் ஒரு காட்சியில், நீங்கள் பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று தமன்னா சொல்ல, நீயும் சோனியாகாந்தியைப் போல ஒரு கட்சித்தலைவியாக வரவேண்டும் என்று ஜெயம்ரவி சொல்கிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணித்தலைமையை ஏற்று மத்திய அரசைத் திறம்பட வழி நடத்திச்செல்லும் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவி அன்னை சோனியாகாந்தியின் பெயரைக் களங்கப்படுத்தும் வகையில் மேற்கூறிய வார்த்தைகள் அடங்கிய வசனத்தோடு இந்தத் திரைப்படத்தின் விளம்பரம் தேவையற்ற முறையில் குடும்பத் தொலைக்காட்சிகளில் தற்போது திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
அநாகரீகமற்ற இச்செயலைக் கவரிமான் காங்கிரஸ் தொண்டர்கள் எவரும் கணமும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். அவ்வசனத்திற்குக் கதரியக்கக் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன்.
என்னுடைய டவுட்-1: துர்கையும் தமன்னாவும் ஒன்றா ?
இரண்டாவது டவுட்:
என்னுடைய டவுட்-2: ஜெயம் ரவி காங்கிரஸ்காரரா ? அதுனாலதான் சோனியா மாதிரி வரணும் என்று சொன்னாரா ?
பதிலுக்கு தம்மனா அவரை ஏன் ராகுல் காந்தி மாதிரி வரணும் என்று சொல்லலை ?
Posted by IdlyVadai at 7/22/2010 08:58:00 PM 16 comments
Monday, July 19, 2010
மண்டேனா ஒன்று - 19/7/2010
மண்டேனா ஒன்று கட்டுரையின் தொடர்ச்சி......
சுதந்திரம் என்பது அனைவராலும் எப்படி வேண்டுமாயினும் பயன்படுத்தப்படக்கூடிய உரிமம் அல்ல, ஆனால் அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு தகுந்தாற்போல் மட்டும் வளைக்கப்படக் கூடியதா? "காந்தியின் படுகொலை காந்தியவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்து விடவில்லை" என்று கூறுகிறார் மஹராஷ்டிர துணை முதல்வர் கோபிநாத் முண்டே, மேலும் தொடர்கையில், " இந்நாடகத்திற்கான தடையினால் கோட்ஸேவினுடைய கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்ய முடியாது" என்று கூறுகிறார். ஆனால் இவருடையே இதே விதமான வாதம் இவருடைய கட்சியினுடைய எம்.எஃப்.ஹுஸேன் மற்றும் சில பாப் பாடகர்களின் மீதான எதிர்நிலைபாடுகளுடன் பொருந்திப் போகுமா? உறுதியான நிலைபாடென்பது எப்பொழுதுமே அரசியல் வசதிகளுக்காக மாற்றிக் கொள்ளக்கூடியதல்ல. மஹராஷ்டிர சிவ சேனா மற்றும் பாஜக ஆகியவை இந்நாடகத்தின் மீதான வற்புறுத்தப்பட்ட தடை நடவடிக்கையினால் அதிருப்தியுற்றுள்ளது புரிந்துகொள்ளக் கூடியதே. பாஜக முகாமில் உள்ள ஒரு சாரார், வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் தனது கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் விதமாகச் செயல்படவில்லை என உறுதியாக நம்புகின்றனர். இது, எவ்வாறாயினும், ஒரு தீவிரமான கண்ணோட்டம். எனினும் கட்சித் தலைமை இந்த கோட்ஸே தொடர்பான சர்ச்சையை, "காந்தியைக் கொன்றவர்கள்" என்று தங்கள் மீது இருக்கும் ஒருவிதமான பழியிலிருந்து விடுபடுவதற்குண்டான வாய்ப்பாகவே கருதுகின்றனர். அரசியல் அரங்கில் தனக்குரியதான மரியாதையைத் தேடும் படலத்திலிருக்கும் பாஜக, கோட்ஸேவின் கொள்கைகளுடன் தங்களுக்கிருக்கும் தொடர்புச் சங்கிலியின் கடைசிக் கண்ணியை அறுத்தெறியக் கூட தயங்காது. சங் பரிவாரின் தலைமையிடத்தில் காந்திக்கென்று ஒரு இடம் கொடுத்த பிறகு, பாஜக தன்னுடைய பழைய கொள்கைகளுக்குத் திரும்புவது சந்தேகம்தான்.
எந்நிலையிலும், கோட்ஸேவினுடைய சிக்கலான கொள்கைகளைப் புரிந்து கொள்வது கடினம். ஜான் எஃப் கென்னடியையோ அல்லது மார்டின் லூதர் கிங்கையோ கொலை செய்த கொலையாளிகளைப் போன்று மாறுபட்ட மனநிலையைக் கொண்டவரல்ல கோட்ஸே. கோட்ஸே முறையாகப் படித்துப் பட்டம் பெற்றவரல்லராயினும், எது சரி, எது தவறு என முழுமையாகவும், மிகத்திறமையாகவும் வாதிடக் கூடிய அளவிற்கு வன்மையான மராத்தியப் புலமை கொண்டவர். "காந்தியினுடைய கொலை கூலிக்காக செய்யப்பட்ட ஒப்பந்தக் கொலையல்ல" என்று கூறுகிறார் விக்ரம் சாவர்க்கர், இவர் முன்னாள் ஹிந்து மஹாசபாவினுடைய தலைவர். தனிப்பட்ட முறையில் கோட்ஸேவையும், ஆப்தேவையும் நன்கறிந்தவர். " கோட்ஸே கற்றறிந்த மனிதர், தவிர அவருடைய கொலைச்செயலுக்குப் பின்னால் கொள்கை ரீதியான காரணங்கள் இருந்தன" என்கிறார்.
காந்தியினுடைய கொலைக்குப் பின்னாலிருந்த தன்னுடைய கொள்கை ரீதியான காரணங்களை கோட்ஸே தன்னுடைய விரிவான நீதிமன்ற வாதத்தில் விளக்கியுள்ளார். சமகால அரசியல் ரீதியிலான, தத்துவார்த்த ரீதியிலான தன்னுடைய அவ்வாதத்தில், போற்றுதலுக்குரியதாகவும், வணங்குதலுக்குரியதாகவும் உள்ள தங்களது தேசத்தினைத் துண்டாட காந்திக்கு எவ்வித உரிமையும் இல்லை என்று கூறியிருக்கிறார். கோட்ஸேவின் நீதிமன்ற வாதம் அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒன்றாக அமைந்திருந்தது. நீதிபதிகளே அசரும் அளவிற்கு அவருடைய வாதம் அமைந்திருந்தது. மூன்று பெஞ்சுகளை உள்ளடக்கிய மேல்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்தானத்திலிருந்த ஜி.டி.கோஸ்லா, பின்னாளில் எழுதும்போது, "கோட்ஸேவின் வாதத்தைக் கேட்ட நீதிமன்றத்திலிருந்த பெண்களனைவரும் கண்ணீர் சிந்தி அழுதனர்" என்று குறிப்பிட்டிருந்தார். கோட்ஸேவின் வாதத்தினைக் கேட்ட பொதுமக்களை ஜூரிகளாக நியமித்திருந்தால், தீர்ப்பு கோட்ஸேவிற்குச் சாதகமாக அமைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தன்னுடைய சகோதரரைப் பற்றிய வாத பிரதிவாதங்களை அரசாங்கம் முடக்க முயல்வதற்கான காரணங்களை ஆராய்கிறார் கோபால் கோட்ஸே. "உண்மைகள் வெளிவருவதை அவர்கள் விரும்பவில்லை" என்று கூறுகிறார்.
கோட்ஸே, சட்டத்திற்குப் புறம்பான தனது செயலிலிருந்த நீதியை நிலைநாட்டுவதற்காக ஆற்றிய உணர்வுப் பூர்வமான உரைதான் அரசாங்கத்தின் பயத்திற்கு ஆணிவேராக அமைந்தது. 1950 களில், இன்னமும் குழந்தைப்பருவத்திலேயே இருந்த இந்திய ஜனநாயகத்திற்கு அது ஒரு நியாயமான பயம்தான். பிரிவினையும், அதைத் தொடர்ந்த கொடூரங்களும் மக்கள் மனங்களில் பசுமையாகவே இருந்ததுவும், கோட்ஸேவினுடைய செய்தி அதனை இன்னமும் உசுப்பி விடுவதற்கு ஹேதுவாக இருந்ததுவுமே இதற்குக் காரணம். ஆனால் இது ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய நிலை. இப்பொழுது பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் மறுகுடியமர்த்தப்பட்டு, மிகவும் வசதியாகவே வாழ்கின்றனர். கோட்ஸே பயந்ததுபோல் தேசிய உணர்வு பண்டமாற்று செய்யப்பட்டுவிடவில்லை. இன்னமும் சொல்லப் போனால் ஹிந்துத்துவா கொள்கைகள் கூட இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கோட்ஸே நீதியின் முன் நிறுத்தப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டார். இப்பொழுது அவர் வரலாற்றுக்குச் சொந்தமானவர்.
கோட்ஸேவினுடைய கூட்டாளி மதன்லால் பாஹ்வா, காந்தி கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரை அவருடைய ப்ரார்த்தனைக் கூட்டத்தில் வெடிகுண்டு வீசி கொல்ல முயற்சி செய்து, தோல்வியடைந்த போதுகூட, காந்தி மதன்லால் பாஹ்வாவிற்காக மன்னிப்பை யாசித்து, அவரையும் புரிந்து கொள்ள வேண்டுமென்றார். பாஹ்வா பகவத் கீதையினால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்ட காந்தி மேலும் கூறுகையில், " தங்கள் கருத்திலிருந்து மாறுபட்டவர்கள் தீயவர்களாகத்தானிருக்க வேண்டும் என்ற நினைப்பை இளைய சமுதாயம் மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
மேற்கூறிய இச்செய்தி, கடந்த காலத்தை வைத்துக் கால்பந்தாட்டம் ஆட நினைக்கும் அத்தனை அரசியல்வாதிகளுக்கும் கட்டாயப் பாடமாக்கப்பட வேண்டும்.
புனேவில் கோட்ஸேவையும், ஆப்தேவையும் ஆதர்ஸமாக எண்ணும் பலர் இன்னமும் இருக்கின்றனர். மஹாத்மாவைக் கொன்றவர்களுடைய வம்சாவளிகளுக்கு, காந்தியைக் கொன்ற தங்களது முன்னோர்களின் செயலை உயர்த்திப் பிடிப்பதை ஒரு பெருமையாகவே கருதுகின்றனர்.
அம்பாலா சிறைச்சாலையில், மரணத்தை ஏற்பதற்கு சில மணித்துளிகளுக்கு முன்னதாக, தனது உயிலை தனது தண்டனையை நிறைவேற்றுவதை உறுதி செய்கின்ற மாஜிஸ்ட்ரேட் மூலமாக உறுதி செய்து கொண்டார். அவ்வுயிலில் கோட்ஸே தனது மூத்த சகோதரருக்கு சில விஷயங்களைப் பணித்திருந்தார். " அகண்ட ஹிந்துஸ்தானத்தின் மண்ணில் என்று புனிதமான சிந்து நதி சுதந்திரமாகப் பாய்கிறதோ, அன்று தனது சாம்பல் அதில் கரைக்கப்பட வேண்டும், இதற்கு எத்தனை காலமானாலும் அது பொருட்டல்ல. அதுவரையிலும் தனது சாம்பலைப் பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
சிதையூட்டப்பட்ட பிறகு, நாராயண் ஆப்தே மற்றும் கோட்ஸேவினுடைய அஸ்தி அவர்களுடைய குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்படவில்லை. சிறை அதிகாரிகள் அவர்களுடைய சாம்பல் குடுவைகளை ரயில்வே பாலத்திற்கடியிலுள்ள காகர் நதியில் வீசியெறிந்து விட்டனர். இவ்விஷயத்தை அந்த அதிகாரிகளுள் ஒருவர் கடைத்தெருவில் தற்செயலாய் ஒருவரிடம் சொல்ல, அந்த நபர் அதனை இந்திராசென் ஷர்மா என்ற ஹிந்து மஹாசபா ஊழியரிடம் தெரிவித்தார். உடனே இந்திராசென் ஷர்மாவும், மற்றுமிரு ஹிந்து மஹாசபா ஊழியர்களும் அவ்விடத்தை அடைந்து, அதனை மீட்டனர். " அந்த நதி வெறும் ஆறு அங்குல ஆழமே உடையது" என்று கூறும் இந்திராசென் ஷர்மா, தற்போது ஓய்வு பெற்று தில்லியில் வசித்து வருகிறார். எப்படியோ முயன்று பாதி சாம்பலை மீட்டு விட்டோம் என்று மேலும் தொடர்ந்தார். மீட்டெடுக்கப்பட்ட சாம்பல் உள்ளூர் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றிய ஓம் ப்ரகாஷ் கோஹல் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் மூலமாக நாசிக்கிலுள்ள டாக்டர். எல்.வி.பரஞ்ச்பே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு அவர் மூலமாக அது 1965 இல் கோபால் கோட்ஸே சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டவுடன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டு, அது இன்றளவிலும் அவரது இல்லத்தில் வெள்ளிக் குடுவையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருக்கிறது. கோட்ஸேவினுடைய கனவு நிறைவேறுவதற்காக அவரது அஸ்தி காத்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 15 அன்றும் கோட்ஸே மற்றும் ஆப்தேவுடைய நினைவு தினம் புனேவில் அனுசரிக்கப்படும். அகண்ட பாரத வரைபடத்திற்கு நடுவே கோட்ஸே மற்றும் ஆப்தே ஆகியோரது படங்கள் பதிக்கப்பட்டு, அதற்கு மாலையிடப்பட்டு, அவர்கள் இறந்து கடந்த வருடங்களின் எண்ணிக்கையை நினைவுறும் பொருட்டு அத்தனை தீபங்கள் ஏற்றப்படும். இறுதியாக, அங்கு கூடியுள்ளவர்கள் கூட்டாக இணைந்து கோட்ஸேவினுடைய கனவான அஹண்ட பாரதத்தை உருவாக்கப் பாடுபடும் பொருட்டு உறுதிமொழி எடுத்துக் கொள்வர். ஜெருசலேமை மீட்க யூதர்களுக்கு 1600 ஆண்டுகள் ஆனது. ஒவ்வொரு ஆண்டும், அடுத்த ஆண்டு ஜெருசலேமை அடைவோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வர், என்று கூறுகிறார் கோபால் கோட்ஸே.
இந்த நினைவுக் கூட்டத்திற்கு கூடும் மக்களின் எண்ணிக்கை சிறியதாக இருந்தாலும், சமீப காலங்களில் இம்மாதிரியான கோட்ஸே நினைவுக் கூட்டங்கள் இந்தியா முழுவதிலும் அதிகரித்துள்ளன. இப்பணியில் ஆழ்ந்துள்ளவர்களுக்கு கோட்ஸே ஆதர்ஸ புருஷராக விளங்குகிறார். "ஹிந்து மஹாசபாவினுடைய அடிப்படைக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்ட எங்களைப் போன்ற இளைய சமுதாயத்தினரைப் பொருத்தவரை அன்று தேச விரோத நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட காந்தி இம்மரணத்திற்குத் தகுதியானவர்தான்." என்று கூறுகிறார் வீர் சாவர்க்கரின் மருமகனான விக்ரம் சாவர்க்கர். இந்த சமாஜத்தின் ஒரு பகுதியினர் நாதுராமுடைய செயலின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர் என்று கூறுகிறார் கோபால் கோட்ஸே. கோட்ஸேவின் மீது மக்களுக்கு அனுதாபம் இருந்தது, ஆனால் அரசாங்கத்திற்கு பயந்தனர்.
மக்களின் பயம் புரிந்து கொள்ளக் கூடியதே. காந்தியின் கொலைக்குப் பிறகு கோபம் கொண்ட காங்கிரஸார் புனேவிலுள்ள பிராமண சமூகத்தின் பக்கம் திருப்பி விடப்பட்டனர். புனேவிலுள்ள பிராமண சமூகத்தின் மீது கலவரத்தில் ஈடுபட்டனர். சில வாரங்களுக்கு புனேவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்து மஹாசபாவுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர். " அது மிகவும் கஷ்டமான காலகட்டம்" என்று நினைவு கூர்கிறார் சிந்து கோட்ஸே, கோபாலினுடைய மனைவி. எங்கள் வீடு சூறையாடப்பட்டு, நாங்கள் துன்புறுத்தப்பட்டோம். சிந்து கோட்ஸேவினுடைய பெயரில் இருக்கும் கோட்ஸேவைக் கூட நீக்கி விடும்படி சிந்துவினுடைய நலம் விரும்பிகள் அறிவுறுத்தினர். ஆனால் சிந்து மறுத்துவிட்டார். "நான் கோட்ஸே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறேன், நான் இறந்த பின்னும் கோட்ஸேவாகவே இருப்பேன்". நாதுராமினுடைய தமையனின் மனைவி என்பதில் பெருமிதமடைகிறேன், என்று கூறுகிறார் சிந்து கோட்ஸே.
என் மீது பலதரப்பிலிருந்தும் தொடுக்கப்பட்ட விமர்சனங்களினால், எனக்கு என் செயலின் நீதியின் மீதிருந்த நம்பிக்கையைத் தகர்த்து விட முடியவில்லை, என்று மேல்முறையீட்டு நீதிமன்ற வாதத்தில் குறிப்பிட்டார் நாதுராம் கோட்ஸே.
தொடர்ச்சியாக புகைக்கும் பழக்கமுடைய நாராயண் தத்தாத்ரேய ஆப்தேயை மணந்து கொண்ட போது ஜம்புதாய் ஆப்தேவிற்கு வெறும் 14 வயதுதான். தனது 31 ஆவது வயதிலேயே விதந்துவாக்கப்பட்டுவிட்ட அவர். அதற்கு அடுத்த ஆண்டே தனது ஒரே குழந்தையையும் பறிகொடுத்து விட்டார். தற்போது தனது தந்தைக்குச் சொந்தமான பூர்வீக வீட்டின் மாடிப் பகுதியில் வசித்து வருகிறார். கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள ஒரு பழைய கடிகாரம்தான் அவருடைய ஒரே விலையுயர்ந்த உடைமை. அவரது கணவரை நினைவு படுத்தும் விதமாக அவர் வைத்திருப்பது, ஆப்தேயின் பழைய புகைப்படமும், அவர் கட்டிய மங்கல சூத்திரமும்தான் (தாலி). ஆப்தே தான் இறந்தாலும், தன்னை ஒரு விதவையாக வாழக்கூடாது என்று அறிவுறுத்தியிருப்பதால், அதனை இன்னமும் அணிந்திருப்பதாகச் சொல்கிறார். அரசியலிலிருந்து எப்போதும் விலகியே இருக்கும் ஜம்புதாய் ஆப்தேவிற்கு, காந்தியின் கொலையில் தன்னுடைய கணவரின் பங்கு அவர் பம்பாயில் கைது செய்யப்பட்ட பிறகுதான் தெரியும். அதனால் நீங்கள் கோபமடைந்தீர்களா? என்று கேட்டதற்கு, எதற்காக கோபமடைய வேண்டும்? என் கணவர் தேசத்திற்காக தன் உயிரையே அற்பணித்திருக்கிறார். இது தியாகம். எதற்காக வருத்தம்? என்று வினவுகிறார்.
1940 களில் புனேவில் கோட்ஸே மிகவும் பிரபல்யமான நபர். நாராயண் ஆப்தேவினுடைய தந்தை மிகவும் மதிக்கப்பட்ட கல்வியாளர். நகரின் மிகப்பழமையான பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள். காந்தியினுடைய கொலையில் இவர்களுடைய பங்கு இவர்கள் சார்ந்த சமூகத்தை வேண்டுமானால் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கலாம், ஆனால் அச்சமூகம் அதில் தொடர்புடைய இவர்களுடைய குடும்பத்தினரை ஒதுக்கி வைத்து விடவில்லை. கோபால் கோட்ஸே சிறையிலிருந்த போது சிந்து கோட்ஸே ஒரு சிறிய பொறியியல் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஜம்புதாய் ஆப்தே ஒரு நர்சரி பள்ளி ஆசிரியையாக ஓய்வு பெற்றிருந்தார். கோபால் கோட்ஸேவின் குழந்தைகள் என்பதால் எங்களது குழந்தைகள் பள்ளியில் தனிமைப்படுத்தப்படவில்லை. போதிக்கும் சமூகத்தினர் மிகுந்த புரிதலுடன் இருந்தனர். ஜம்புதாயும் அவ்வாறே கூறினார். எங்கள் சமூகம் எங்களுக்கு மிக்க ஆதரவாக இருந்தது.
(முற்றும்)
Posted by IdlyVadai at 7/19/2010 07:15:00 PM 22 comments
Labels: கட்டுரை, யதிராஜ சம்பத் குமார்
Sunday, July 18, 2010
ஒற்றுமைச் செய்திகள்
இந்த வார இரண்டு ஒற்றுமை செய்திகள். இரண்டிலும் காங்கிரஸ் இருப்பது ஒற்றுமை ஆனால் நிச்சயம் செய்திகளில் ஒற்றுமை எதுவும் இல்லை. ஜாலியா படிங்க...
ஒற்றுமை செய்தி 1:
தமிழக காங்கிரஸில் எல்லோரும் வேஷ்டி கட்டிக்கொண்டு இருப்பார்கள் இது ஒற்றுமை ஆனால் கூட்டம் என்று வந்தால் கோஷ்டியால் வேஷ்டி கிழியும், இவர்கள் வேஷ்டி கட்டிக்கொண்டு இருப்பதே அதற்கு கிழிக்க தானே!.
ஆனால் அனைத்து கோஷ்டி தலைவர்களும் ஒற்றுமையுடன் இருப்பதா திடுக்கிடும் தகவல் ஒன்று சில நாட்கள் முன் வெளியானது. இத்தகவலை வெளியிட்டவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். நேற்றைய முன்தினம் காமராஜர் பிறந்த தினத்தை முன்னிட்டு, பெரம்பூரில் காமராஜர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில் இந்த அதிசய தகவலை வெளியிட்டார். இதில் கூடுதல் விசேஷம் என்னவெனில், அவரோடு அம்மேடையில் தங்கபாலு, வாசன் என இரு முக்கிய வேஷ்டி தலைவர்களும் இடம்பெற்றிருந்ததுதான்.
இன்னொரு ஆச்சரியமும் நடந்தது, இளங்கோவனுக்கு பின் ஒருவர் பின் ஒருவராக உரையாற்றிய தலைவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை நிலவுவதாக வற்புறுத்திக் கூறினர். இது கூட பரவாயில்லை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தேசிய சிந்தனை உடையவர்கள் என்ற ஒரு புதிய செய்தியையும் ஈ.வி.கே.எஸ் வெளியிட்டார்.
கலைஞர் ஆட்சி தான் காமராஜ் ஆட்சி என்று முன்பு புகழ்ந்தவர்கள் இவர்கள். இவர்களுடைய தேசிய சிந்தனை எத்தகையது என்பதனை இவர்களுடைய கூட்டணிக் கட்சிகளான தனித் திராவிட நாடு கோரிய திமுகவையும், தமிழகம் தனியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற பிரிவினை கோரும் கோஷ்டியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகளையும் பார்த்தாலே தெரியும். இது கூட பரவாயில்லை தமிழக காங்கிரஸை புல் பூண்டு இருந்த இடம் தெரியாமல் அழிப்போம் என்று உறுதி பூண்ட கட்சி இந்த சிறுத்தை கட்ட்சி. எப்போர்பட்ட தேசிய சிந்தனை இவர்களுடையது.
இதை எல்லாம் விடுங்க சார், "எங்களிடையே யார் பெரியவர், யார் சிறியவர் என்ற வேறுபாடு இல்லை" என்றார். சத்திய மூர்த்தி பவனில் இது கிடைக்கிறதோ இல்லையோ அரிவாள் வெட்டும், குஸ்திகளும் நிச்சயம் கிடைக்கும். சில சமயம் இவர்களின் குஸ்திகளை காண்பிக்கும் போது ஏதோ WWF சேனல் பாக்கும் உணர்வு ஏற்படும். மிகச் சமீபத்தில் நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலில் கழக பாணியில் பணம் கொடுத்து தங்களது வேட்பாளர்களை வெற்றி பெற செய்தார்கள்.
அன்று பேசிய ஈ.வி.கே.எஸ்ஸின் பேச்சில் காரம் சற்று தூக்கலாகவே இருந்தது. யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்று சொல்லிச் சொல்லியே மு.க'வை முரத்தில் புடைத்தெடுத்தார். அதிலிருந்து சில ஹைலைட்கள் :
* தனக்கென்று ஒரு குடும்பம் இருந்தால், மக்கள் தொண்டாற்ற முடியாதென்பதாலேயே காமராஜர் தனக்கென்று ஒரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளவில்லை. காமராஜர் பயந்தது இன்று உண்மையாகிவிட்டது. நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. காமராஜருக்கு குடும்பமும் இல்லை, சொத்தும் சேர்க்கவில்லை.* காமராஜர் பெயரைச் சொல்லி அரசியல் நடத்த வேண்டிய நிலை தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. காமராஜர் உயிருடன் இருக்கும்போது அவர் ஹைதரபாத் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கிறார் என்று குற்றம் சாட்டியவர் இன்றும் இருக்கிறார். சாமானியனாகப் பிறந்து சாமானியனாகவே மறைந்தவர் காமராஜர். ஆனால் சாமானியனாகப் பிறந்து குபேரனாக இருப்பவர்கள் சிலர் காமராஜரோடு தங்களை ஒப்பிட்டுக் கொள்கின்றனர்.
* திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே உள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியை வளர்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. சோனியாவும், ராகுலும் யாருடன் கூட்டணி என்று சொல்கிறார்களோ அவர்களின் வெற்றிக்காக உழைப்போம். 43 ஆண்டுகளாக மற்றவர்களுக்காக பாடுபட்டு வருகிறோம். தமிழக காங்கிரஸின் நிலை தில்லிக்குத் தெரிய வேண்டும், அதனை வாசன் தான் எடுத்துச் சொல்ல வேண்டும். எனக்கு ஏற்கனவே பொல்லாப்பு பட்டம் இருக்கிறது.கூட்டணி வெற்றிக்கு உழைத்து அதே சமயம் தமிழகத்தில் காங்கிரஸை நம்பர் ஒன் கட்சியாக மாற்ற முடிவு செய்திருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமாகும் என்று நாம் யோசிக்க கூடாது இப்படி ஒன்றுடன் ஒன்று ஒற்றுமையில்லாமல் இருக்கும்போது, தமிழக காங்கிரஸில் மட்டும் ஒற்றுமை இருக்கிறது என்றால் எப்படி நம்புவது?
பெப்சி கோக் போல காமராஜர் தமிழ்நாட்டில் ஒரு பிராண்ட் இமேஜ் அவ்வளவு தான்!
ஒற்றுமை செய்தி - 2எஸ்.எம்.கிருஷ்ணா நல்ல வேளை பாகிஸ்தான் போன போது கோட் சூட் போட்டுக்கொண்டு போனார். வேஷ்டி கட்டிக்கொண்டு போனால் அதையும் கழட்டியிருக்கார்கள். குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே விவாகரத்து கிடைக்கிறது. ஆனால் நாம் இன்னும் இந்தியா பாகிஸ்தான் பேச்சு வார்த்தை என்று பேசிக்கொண்டே இருக்கிறோம். இதிலும் வேடிக்கை இருக்கு - தீவிரவாதத்தை ஒடுக்கும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையே கிடையாது என்று சொல்லிக் கொண்டே, அங்கும் இங்குமாக அவர்களைப் பார்த்து, கை குலுக்கி, பேச்சுவார்த்தைக்கு இணங்கி விடுகின்றனர்.
இவர்கள் பேச்சு வார்த்தையில் என்ன பேசுவார்கள் என்று யாருக்கு தெரியாது. எல்லா பேச்சு வார்த்தையும் வழ வழா கொழ கொழாதான். ஒரு வேளை வெண்டைக்காய் கூட்டு எப்படி செய்வது என்று பேசுவார்களோ என்னவோ!
மும்பை தாக்குதலை நாம் பாராளுமன்ற தாக்குதல் போல மறந்துவிட்டோம். ஆனால் காங்கிரஸ் அரசை சும்மா சொல்ல கூடாது அதை நினைவு வைத்துக்கொண்டு பேச்சு வார்த்தை நடத்த போயிருக்கிறார்கள். இந்தியா சார்பில் போனது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா. அவர் மூன்று நாள் பயணமாக இஸ்லாமாபாத் சென்றார். அஜண்டா வழக்கமானது தான் - அமைதிப் பேச்சுவார்த்தை + மும்பை தாக்குதல் விவகாரம். அங்கு சென்ற கிருஷ்ணாவை, பாகிஸ்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி அவமரியாதை செய்துள்ளதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. பேச்சு வார்த்தைக்குப் பிறகு கூட்டாக பேட்டியளித்த போது, கிருஷ்ணாவை வைத்துக் கொண்டே, குரேஷி இந்திய உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளையையும், ஜமாத் உத் தவா தலைவர் சையதையும் ஒப்பிட்டுப் பேசினார் என்று தெரிகிறது. எம்மாதிரியாக ஒப்பிட்டார் என்பது பற்றியதான விளக்கமான தகவல்கள் இல்லை. மும்பை தாக்குதலில் ஐஎஸ் ஐக்குத் தொடர்பிருப்பதாகக் கூறிய ஜி.கே.பிள்ளைக்கும் கிருஷ்ணா முன்னிலையிலேயே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் குரேஷி.
இவை தவிர, பேச்சு வார்த்தையின் போது அடிக்கடி கிருஷ்ணா இந்திய அரசைத் தொடர்பு கொண்டு பேசியதாகவும், சுயமாக முடிவெடுக்க இயலாதவர் என்ற ரீதியில் அவமரியாதை செய்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இவ்வாறான குற்றச்சாட்டுகள் மிகுந்த அத்து மீறியதும், கடுமையான கண்டனத்திற்குரியதும் ஆகும். பாகிஸ்தான் அரசாங்கம், அந்நாட்டு ராணுவத்திற்கும், ஐ எஸ் ஐ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் உட்பட்டது என்றும் உலகிற்கே தெரிந்த விஷயம். ஆனால் சோனியா ஒருவருக்கே உட்பட்ட கிருஷ்ணாவை அவர் அவமரியாதை செய்திருப்பது எவ்வகையில் பொருந்தும்? எது எப்படியோ?? வட இந்திய செய்தி சானல்களுக்கு இன்னும் இரண்டு நாட்களுக்கு அரைப்பதற்குண்டான தீனி கிடைத்து விட்டது.பாகிஸ்தான் இந்தியாவை வைத்து காமெடி செய்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இப்பொழுது கிருஷ்ணா, ராஜரீதியாக குரேஷியை தில்லிக்கு அழைத்துள்ளார். என்ன நடக்கும்? இரு நாட்டுக் கொடிகளையும் நடுவில் நிறுத்தி, சம்பிரதாய கைகுலுக்கல்களுக்கிடையே, இரண்டு நாட்கள் பேச்சு வார்த்தை நடக்கும். கடைசியில் பேச்சு வார்த்தை தோல்வி என மறுநாள் தினசரிகளில் தலைப்புச் செய்தி வரும்.
ஒற்றுமை நிச்சயம் கிடைக்காது என்று தெரிந்து ஒற்றுமை பற்றி பேசும் இவர்களை பாராட்ட வேண்டும். மன்மோகன் சிங் நல்ல பிரதமாரா என்று கேள்விக்கு இந்த வார குமுதம் அரசு பதில்கள் - நல்ல பிரதமர் தான், அமெரிக்காவுக்கு என்று பதில்.
யதிராஜ் + இட்லிவடை ஒற்றுமையாக எழுதிய பதிவு ... ஒற்றுமை தொடரும்..:-)
Posted by IdlyVadai at 7/18/2010 09:44:00 AM 19 comments
Labels: அரசியல், செய்திவிமர்சனம்
Friday, July 16, 2010
ஆழித் தேர்
நமது ஊர் கோவில்களில் எல்லாம் திருவிழா என்றால், ”தேரோட்டம்” நிச்சயமாக இடம் பெறும். எல்லா ஊர்களிலும் தேர் திருவிழா நடைபெறும். ஊர் கூடி தேரிழுப்பார்கள். இரண்டு வடங்களைக் கொண்டு, காலையில் தொடங்கி, மாலையில் நிலைக்கு கொண்டு வந்து விடுவார்கள். இதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்தது தானே என்கிறீர்களா?
ஊர் கூடி இழுத்தால் மட்டும் போதாது, புல்டோசர்கள் நான்கை வைத்து தேர் இழுத்து பார்த்திருக்கிறீர்களா? லாரி, லாரியாக ஸ்லீப்பர் கட்டைகளையும், முட்டுக் கட்டைகளையும் வைத்து அங்குலம் அங்குலமாக தேர் நகர்ந்து பார்த்திருக்கிறீர்களா? ஹைட்ராலிக் ப்ரேக் முறையில் தேர் அசைந்து ஆடுவதை பார்த்திருக்கிறீர்களா? தேர் என்று நிலைக்கு வரும் என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான கூட்டம் காத்திருந்ததை கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
மேற்க்கண்ட கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பதில் இல்லையென்றால், நீங்கள் திருவாரூர் ஆழித் தேரைப் பற்றிக் கேள்விப் பட்டதில்லை.
”திருவாரூர் தேரழகு” மாத்திரம் இல்லை. தலைமுறை, தலைமுறையாக, ஆழித் தோரோட்டத்தை நடத்தும் குடும்பங்களுக்கு, ஒரு தவம்.
சுமார் 96 அடி (30 மீட்டர்) உயரம், 360 டன் எடை கொண்ட தியாகராஜரின் ரதம்தான் திருவாரூர் தேர். ஆசியாவின் மிகப் பெரிய தேர்களில் ஒன்று என்று புகழப் படும் ஆழித்தேர் நான்கு நிலைகளை கொண்டது. முதல் நிலை 6 மீட்டர்களும், இரண்டாவது நிலை 1.2 மீட்டர்கள் உயரமும் கொண்டது. மூன்று மட்டும் நான்காவது நிலைகள 1.6 மீட்டர் உயரம் கொண்ட பீட வடிவமைப்பு கொண்டது. இந்த நிலைகளில் தான் தியாகேசப் பெருமான், அம்மையுடன் வீற்றிருப்பார்.
இரும்பு தகடுகள் பொருத்தப்பட்ட தேரினுடைய ஆறு சக்கரங்கள், ஒவ்வொன்றும் 2.59 மீட்டர் விட்டம் கொண்டது. தேரை நிறுத்த ஹைட்ராலிக் ப்ரேக் முறை, திருச்சி பாரத் மிகுமின் நிறுவன (BHEL) பொறியாளர்களைக் கொண்டு கையாளப் படுகிறது.
மரத்தினால் ஆன தேரில், அழகிய கலை நயத்துடன் புராணத்திலிருந்து சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. மரத்தேரின் மீது, 20 மீட்டர்கள் அளவிற்க்கு, மூங்கில் கம்புகள், தோரணங்கள், தேர் சீலைகள் கொண்டு அலங்கரிக்கப் பட்டு, காகிதக் கூழில் செய்யப் பட்ட பிரம்மா தேரோட்டியாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும் நிறுத்தகின்றனர்.
26 டன் எடை கொண்ட அலங்கரிக்கப்படாத தேர், அலங்கரிக்கப் பட்டபின் 360 டன் எடை கொண்ட ஆழித் தேராக உருவெடுக்கிறது. தேரை அலங்கரிக்க மட்டும் 3000 மீட்டர் அளவிலான தேர்சீலைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. தேரின் உச்சியில் 1 மீட்டர் உயரத்திற்க்கு கூம்பு வடிவ கலசமும், கொடியும் வைக்கப் பட்டு, 30 மீட்டராக வடிவெடுக்கின்றது. (சென்னை வள்ளுவர் கோட்டம், திருவாரூர் தேர் மாதிரியில் வடிவமைக்க பட்டது)
சுமார் 24 மீட்டர் கொண்ட நான்கு மிகப் பெரிய வடங்கள் தேரை இழுக்க பயன்படுத்தப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் வரை, தேரிழுக்க, திருவாரூருக்கு அருகில் உள்ள வடபாதிமங்கலம் சர்க்கரை ஆலையிலிருந்து ஆட்களை அழைத்து வரப்படுவார்கள். நவீன யுகத்தில், பெல் நிறுவன பொறியாளர்களின் மேற்பார்வையில் ஹைட்ராலிக் முறைகள் பொருத்தப் பட்டு, முன்னால் இரண்டு புல்டோசர்கள் இழுக்க, பின்னால் இரண்டு புல்டோசர்கள் தள்ள ஒன்று அல்லது இரண்டு நாட்களில் நிலைக்கு கொண்டு வந்து விடுகின்றார்கள். ஒரு காலத்தில் மனித சக்தியால் இழுக்கப் பட்ட தேரை நிலைக்கு கொண்டு வர ஆறு மாதங்கள் ஆனதாம்
ஆழித் தேரின் சிறப்பம்சம், வளைவுகளில் திரும்புவது. ஒரு வீதியிலிருந்து மற்றொரு வீதிக்கு தேர் திரும்புவதை காண்பது கண் கொள்ளாக் காட்சி. தேர் சக்கரங்களுக்கு அடியில் கிரீஸ் தடவப்பட்ட மிகப் பெரிய இரும்பு தகடுகளை வைத்து, நின்ற நிலையிலேயே (முன் நகராமல்) தேர் திரும்புவதை வெளி நாட்டவர்களும் கண்டு வியப்பார்கள். தேர் திரும்பும் காணொளி இங்கே
ஒரு வேளை தேர் பாதையிலிருந்து விலகி சென்று விட்டால், தேரின் பாதையை மாற்ற லாரி மற்றும் ட்ராக்டர்களில் ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் முட்டு கட்டைகள் கூடவே கொண்டுவரப்படும்.
1927-ம் ஆண்டு வாக்கில், தேர் மேற்கு கோபுரத்திற்க்கு அருகில் வரும் போது தீப்பிடித்து எரிந்து போய்விட்டதாகக் கூறுவார்கள். பின்பு புதிய தேர் செய்யப் பட்டு 1947 வரை நடைபெற்ற திருவிழா, சுதந்திரத்திற்க்கு பின் நிதி பற்றக்க்குறையால் நிறுத்தப்பட்ட தேரோட்டம் 1970-ஆம் ஆண்டு வாக்கில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் திரும்ப தொடங்கியது.
”அஸ்தத்தில் கொடியேற்றி, ஆயில்யத்தில் தேரோட்டி, உத்திரத்தில் தீர்த்தம்” என்பது 27 நாட்கள் நடைபெறும் திருவாரூர் பங்குனி உத்திர திருவிழாவின் சாராம்சம். அதாவது மாசி மாதம் (பிப்ரவரி) அஸ்த நட்சித்தரமன்று கொடியேற்றி, பங்குனி (மார்ச் இறுதி/ஏப்ரல் முதல் வாரம்) ஆயில்யம் நட்சத்திரத்தில் தேர் ஒட்டி, பங்குனி உத்திர நட்சத்திரன்று சுவாமி தீர்த்தம் கொடுப்பது ஐதீகம்.
தியாகேசர், ஆழித் தேருக்கு எழுந்தருளுவதற்க்கு முன்னால், தேவாசரிய மண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்திற்க்கு கொண்டு வரப்படுவார். அங்கிருந்து தேரோட்ட தினத்திற்க்கு இரண்டு நாட்கள் முன்பு தேருக்கு கொண்டுவரப்படுவார். முறைப்படி எல்லாம் நடந்தால், அடுத்த ஒரு வாரத்திற்க்குள், சுவாமி யதாஸ்தானம் வரவேண்டும். பணம் சம்பாதிக்கும் கும்பல்கள தங்கள் வேலையை காட்ட தொடங்கியதன் விளைவு, கடந்த சில ஆண்டுகளாக எல்லாம் மாறி போய்விட்டது.
தொண்ணூறுகளின் இறுதிவரை ஐதீக முறைப்படி நடைபெற்று வந்த பல்வேறு சிறப்புகள் வாய்ந்த ஆழித் தேரோட்ட திருவிழா, அதற்க்குப் பின்பு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கைக்கு மாறி அவர்களுக்கு ஏற்ற நாட்களில், அவர்களுக்கு ஏற்றார் போல் நடத்தப்படும் சடங்காக மாறிப் போனதுதான் சோகம்.
கடந்த பல ஆண்டுகளாகவே, தேரோட்டத் திருவிழா, குறிப்பிட்ட பங்குனி ஆயில்ய நட்சத்திர தினத்தில் நடைபெறுவது இல்லை. பள்ளி/கல்லூரி தேர்வு சமயமாக இருப்பதால், திருவிழாவை மே அல்லது ஜூன் மாதத்தில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுவரை சுவாமி, ஆயிரங்கால் மண்டபத்தில் மாதக் கணக்கில் தேவுடு காக்க வேண்டிவரும்.
பள்ளி மாணவர்களின் படிப்பு வீணாகப் போகக் கூடாது என்ற அக்கறை எல்லாம் ஒன்றும் கிடையாது. அப்படி அக்கறை ஏதாவது இருந்தால் கிரிக்கெட் போட்டிகளை நடத்த மட்டார்கள் அல்லவா? இதை விட பல்லாயிரம் மக்கள் கூடும் மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் மாதத்தில்தான் நடக்கும் என்பது குறிப்பிடதக்கது. பள்ளி நாட்களில் நடத்தினால் திருவிழாக் கூட்டம் குறைந்து, அவர்களுக்கு வருமானம் இல்லையாம்.
இந்து அமைப்புகள் மட்டும் ஐதீக முறைப்படி குறிப்பிட்ட நாளில் தான் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று போராடி வருகிறார்கள். ஆயில்ய நட்சத்திரம் வரும் நாளில், இந்து அமைப்புகள், தாங்களே செலவு செய்து சப்பரம் போன்ற ஒன்றை இழுத்து வருவார்கள். அரசு நிர்வாகம் தனது சகல அஸ்திரங்களையும் பிரயோகித்து, அவர்க்ளை ராஜ வீதிகளில் வரவிடாமல் செய்யும். இந்த ஆண்டும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தது.
அடுத்தது, தேரோட்டத்திற்க்கு நாள் குறித்துவிட்டு, தேரை முன்னதாகவே கட்டி வைத்து விட்டு, சுவாமியை தேருக்கு கொண்டு வந்து ஒரு வாரம்/பத்து நாட்கள் வைத்து, பார்வையாளர்களை தேரில் ஏறவைத்து அதற்க்கு கட்டணம் வசூலித்து காசு பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வழியாக, ஆழித் தேரோட்டம் நடைபெறும். செருப்பு/ஐஸ்கீரிம் உட்பட சகலவிதமான பொருட்களும் கிடைக்கும் திருவிழா வியாபாரம், பெரிய கோவிலின் நான்காம் பிரகாரத்தில் (ஆயிரங்கால் மண்டபத்தின் முன்) கொடி கட்டி பறக்கும்.
இத்தனைக்கும் தியாகேசப் பெருமான் ஒன்றும் பஞ்சபராரி அல்ல. பல கோடி ரூபாய் சொத்து உள்ள, தமிழகத்தின் பெரிய கோவில்களில் ஒன்று. கோவிலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் இருந்தன. இன்று என்னவானது என்று நான் சொல்ல வேண்டியதில்லை.
சரித்திர புகழ் வாய்ந்த ஒரு ஆழித் தேரோட்டம், சீர் குலைந்து போய் ஒரு சடங்காக வியாபாரிகளால் நடத்தப் பட்டு கொண்டிருக்கிறது.
திருவாருர் ஆழி தேர் யூ ட்யூப்பில் காணொளி -1
காணொளி-2
காணொளி-3
திருவாரூர் பிக்காசா ஆல்பம்
திருவாரூர் கோவில் 360 டிகிரி கோணத்தில் – தினமலர் தளத்தில்
பங்குனி 10 (மார்ச் 26) அன்று நடைபெற வேண்டிய இந்த ஆண்டிற்க்கான தேரோட்டம், அதிகாரிகள்/மற்றும் அரசியல்வாதிகளின் கைங்கர்யத்தால் ஜூலை 16-ம் நாள், இன்று நடைபெறுகிறது.
- சாந்தப்பன்
போன பதிவில் கடவுளிடம் கேட்டதற்கு உடனே இந்த பதிவை அனுப்பிவிட்டார் :-)
Posted by IdlyVadai at 7/16/2010 04:32:00 PM 23 comments
Labels: ஆன்மிகம், விருந்தினர்
Thursday, July 15, 2010
செவ்வடையான மசால்வடையே! - எல்லே ராம்
’செவ்வடையான மசால் வடையே!’ என்று இப்போது நாம் ஆர்க்கெஸ்ட்ராவோடு பாட்டுப் பாடலாம், ஆர்ப்பரிக்கலாம், கோடிகளைச் செலவழித்துக் குனியமுத்தூரில் கோலாகலமாகக் கொண்டாடலாம். ஜனாதிபதி முதல் ஜால்ரா கவிஞர்கள் வரை நேரே வரச்சொல்லி ஆர்டர் போட்டு, மசால் வடை புகழ் பாடச் சொல்லி ஆனந்த ஏப்பம் விடலாம்.
ஆனால் மசால் வடையின் செவ்வடை ஸ்டேட்டஸ் அவ்வளவு சுலபமாகப் பெறப்பட்டதல்ல!
ஆதிகாலத்திலிருந்தே பலப்பல தினுசு வடைகள் உலகெங்கும் மெயின் டிஷ்ஷாகவும், சைட் டிஷ்ஷாகவும் அசை போடப்பட்டு வந்தாலும், ’செவ்வடை அந்தஸ்து எந்த வடைக்கு?’ என்கிற கேள்வி மட்டும் பல டீக்கடைகளிலும், ‘பார்’களிலும் கேட்கப்பட்டுவந்த கேள்விதான்.
‘என்று தணியும் இந்த தயிர்வடை தாகம்? என்று மடியும் எங்கள் கீரைவடை மோகம்?’ என்று புரட்சி மகாகவி பாரதியாரையே புலம்பவைத்த மேட்டர் அல்லவா!
’செவ்வடையான மசால் வடை’க்குத்தான் எவ்வளவு எதிரிகள், எவ்வளவு அரசியல் உள்குத்துகள்?
இது பற்றிய நமது நிருபரின் கைப்பக்குவக் கிளறல்!
பாரெங்கும் ஆயிரக் கணக்கான வடைகள் இருந்தாலும், ஏன் இந்தியாவிலேயே பலாப்பழ வடையிலிருந்து, பம்பளிமாஸ் வடை வரை இருந்தாலும், தென்னகத்தில் புழங்கும், குறிப்பாகச் சென்னையில் மணக்கும் மசால் வடையே செவ்வடை அந்தஸ்துக்கு உரியது என்று இந்திய அரசும் அறிவித்திருக்கிறது. இதன் பின்னணி அரசியல் என்ன? ஆலூ வடை, தயிர் வடை, கீரை வடை, காலிஃப்ளவர் வடை, வெங்காய வடை போன்ற இந்திய வடைகளுக்குள்ளும் இந்த செவ்வடை ஸ்டேடசுக்குக் கடும் போட்டி. மற்ற எல்லா வடைகளையும் ஊசிப்போனவை, உப்பு போதவில்லை, ‘கப்’படிக்கிறது, காரம் போதவில்லை என்றெல்லாம் சொல்லித் துப்பி மசால் வடை மட்டுமே செவ்வடை ஏன்று வாய் கொள்ளாமல் எல்லோரையும் சொல்லவைத்தது எப்படி?
ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து வெளிபிட்ட குறிப்பொன்றில், ‘எவ்வடை செவ்வடை?’ என்பதையெல்லாம் இனிமேல் தீர்மானிக்க ஊசவடோ என்கிற ஜப்பானியர் ஒருவடை -மன்னிக்கவும், ஒருவரை- நியமித்திருக்கிறது என்பது தெரியவந்தது.
என்னடா இது மசால்வடைக்கு வந்த சோதனை, ஜப்பானுக்கும் மசால் வடைக்கும் என்னய்யா சம்பந்தம் என்றெல்லாம் கேட்டால் நாம் வடைத்துரோகி ஆகி விடுவோம் என்று பயமாகவும் இருக்கிறது. இருந்தாலும் அவரையே ஒரு முறை துணிந்து இதுபற்றிக் கேட்டுவிடுவோம் என்று அவரைத் தொலைபேசினேன்.
சம்பிரதாயமாக முதலில் ஏழெட்டு தடவை குனிந்து நிமிர்ந்து ’யூகோசோ இரஷாய் மாஷிடா’ என்று நாங்கள் வணக்கங்கள் சொல்லிக்கொண்ட பிறகு நான் முதுகுவலியுடன் என் சந்தேகத்தைக் கேட்டேன்:
”அறுவடைவீடுகொண்ட திருமுருகா’ என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு முருகன் ஆறு வடைகளை ஒரே நேரத்தில் எப்படி அபேஸ் செய்தார் என்கிற பிரமிப்பு வரும். நக்கீரரும் ஆறு வடைகளைப் பற்றித்தானே பொதுவில் புகழ்ந்திருக்கிறார், இதிலே மசால் வடைக்கு மட்டும் அப்படி என்ன தனி மகிமையை நீங்கள் கண்டீர்கள்? செவ்வடையாக மசால்வடையை மட்டும் எப்படி அங்கீகரித்தீர்கள்?”
ஊசவடோ ஒரு முறை ஜப்பானிய மொழியில் கனைத்துக் கொண்டார்.
”திருமுருகாற்றுவடையில் ஆறுவடைகளைப் பற்றிச் சொல்லி இருப்பதாகச் சொல்வதே முதலில் தவறு. 'ஆறு' என்றால் வழி; 'ஆற்றுப்படுத்துதல்' என்றால் 'வழிகாட்டுதல்'. 'ஆற்றுவடை' என்பது தமிழ்க் கவிதை வகைகளில் ஒன்று. ஒரு வள்ளலிடம் பரிசுகள் பல பெற்றுத் தன் வறுமை அழிந்த ஒருவன், வறுமையில் வாடும் இன்னொருவனை அந்த வள்ளல் இருக்கும் இடம், போகும் வழி, வள்ளலின் ஊர், பெயர், அவன் குணங்கள் யாவற்றையும் சொல்லி, "அங்கே போய் உன் வறுமையை நீக்கிக்கொள், பெரிய விருந்து இல்லாவிட்டாலும், வடையாவது கிடைக்கும்" என்று ஆற்றுப்படுத்துவது இப்பாடல் வகையின் இலக்கணம். திருமுருகாற்றுவடை என்ற நூலில் முருகன் இருக்கும் ஆறு தலங்களின் பெருமைகளைக் கூறி ஆத்மவடைக்கும் வழிகாட்டுகிறார் நூலாசிரியர் நக்கீரர்.
’ஆற்றுவடையில் சொல்லப்பட்ட ஆறு வீடுகள்’ என்ற வழக்கு மாறி, பின்பு படைவீடு, ஆறுபடை வீடு , ஆறு வடை வீடு என்று பேச்சு வழக்கிலும், நூல்களிலும் வரத் தொடங்கின என்பது தணிகைமணி செங்கல்வராய பிள்ளை போன்ற அறிஞர்களின் கருத்து. அருணகிரிநாதர் கூட 'ஆறுபடை வீடு' அல்லது ‘ஆறுவடை வீடு’ என்கிற சொற்றொடர்களைப் பயன்படுத்தாமல், 'ஆறு திருப்பதி' 'அறுபத நிலை' 'ஆறு நிலை' போன்ற சொற்றொடர்களையே பயன்படுத்தினார். குமரகுருபரர் கூட ஆறு வடை வீடு என்று சொல்லவில்லை. 'ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்பினுடன் கூறுமவர் சிந்தை குடிகொண்டோனே' என்கிறது கந்தர் கலிவெண்பா. குமரகுருபரர் 17-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். அதனால்... ஆறு படை வீடுகள் என்ற தொடர் கடந்த 400-ஆண்டுகளில் வந்த ஒரு சொற்றொடர் என்பது தெளிவாகிறது. ஆறுவடை என்கிற பதமே தற்காலப் புழக்கத்தில் இருக்கிறது”
இப்படிப் போட்டு சாத்து சாத்தென்று சுத்தத் தமிழில் சாத்தினால் நான் என்ன செய்வேன்? ’சயோனாரா’ கூடச் சொல்லாமல் லைனை உடனே கட் செய்துவிட்டேன்.
இந்த ஓட்டை வடை மேட்டர் இவ்வளவு சீரியஸான மேட்டர் என்பது தெரியாததால், வேறு யாரைக் கேட்டுத் தெளியலாம் என்று நான் யோசித்தேன்.
சுள்ளிக்காட்டுப் புலவர் ஒருவரை செல்போனில் பிடித்தேன்.
’எனக்கு டை பிடிக்கும், அடை பிடிக்கும், சொல்லடை பிடிக்கும், துடியிடை பிடிக்கும், நன்னடை பிடிக்கும், ஏன் எனக்கு செவ்வடையான மசால்வடையும் மிகப் பிடிக்கும்’
ஆஹா, யாப்பு, காப்பு, ஆப்பு என்று செமத்தியாக ஏதோ மாட்டிக்கொண்டேன் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது.
’என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாக மசால்வடை செய்யுமாறே’ என்று திருமூலரே திருமந்திரத்தில் என் புகழைப் பற்றிச் சொல்லி விட்டார்’ என்று சொந்த சரக்கைப் பற்றி ஆரம்பித்தார் சுள்ளிக்காட்டார்.
திருமந்திரத்துக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம், அவர் அப்படியா சொன்னார் என்று நான் திரு திருவென்று விழிக்கையில் அவர் தொடர்ந்தார்:
”மசால்வடையை மட்டம் தட்டிப்பேசுவது ஆரிய, பார்ப்பன சூழ்ச்சி. அது பலிக்காமல் போனதால் இப்போது மசால்வடையும் கைபர் கணவாய் வழியாக இங்கே வந்ததுதான் என்று ‘சோ’ போன்றவர்கள் சொல்லி வருவது கண்டனத்திற்குரியது. மாஷாபூபம் என்கிற மொத்தை வடையைத்தான் சவுண்டி பிராமணர்கள் காலம் காலமாகச் சாப்பிட்டு ஊரையே நாறடித்து வந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே குறிப்பு இருக்கிறது.
’நீலவிதானத்து நித்திலப் பூப்பந்தர்க்கீழ்
வான் ஊர் மதியம் சகடனைய வானத்துச்
சாலியொரு மீன் தகையாளைக் கோவலன்
மாமுது பார்ப்பான் மசால்வடை காட்டிடத்
தீவலம் செய்வது காண்பார் கண் நோன்பென்னை’
என்று சிலப்பதிகார நூல் கண்ணகி_கோவலன் திருமணச் சடங்கைக் கூறுகிறது. அங்கே நெருப்பிலே இடப்பட்டது மசால்வடையே அன்றித் தயிர் வடையல்ல, சாம்பார் வடையுமல்ல. சாம்பாரையோ, தயிரையோ நெருப்பிலே போட்டால் அது அணைந்து போய் துர்சகுனமாகும் என்பது பகுத்தறிவுத் தமிழருக்குத் தெரியாததல்ல. மசால்வடை நின்று திகுதிகுவென்று எரியும், கமகமவென்று மணக்கும். எலிப்பொறியில் மசால்வடை மணத்துக்காக எலி சிக்குவது போல் என் அன்பினால், காதலினால் உன்னைக் காலம் காலமாகச் சிறை வைக்கப் போகிறேன் என்று மணமகன் சொல்வதாக இங்கே அது குறிப்பினால் உணர்த்தப்படுகிறது.
இங்கே இன்னொரு கருத்தையும் நான் சொல்லிவிடக் கடமைப்பட்டிருப்பதை நினைவு கூர்கிறேன். ‘மாமுது பார்ப்பான்’ என்பது மகா கெழபோல்ட்டான அய்யரைக் குறிக்கும். ஏன் அழகான பிராமண இளைஞனை அங்கே சடங்கு செய்யச் சொல்லாமல் வயதான முதியவரைக் கூப்பிட்டிருக்கிறார்கள், அவன் மேல் ஏன் பெண் வீட்டாருக்கு நம்பிக்கை வரவில்லை என்கிற முக்கியமான விஷயத்தை நான் உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன். இதற்கும் ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா?’வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
‘மசால்வடை காட்டிட’ என்கிற வரிகளை உற்றுக் கவனியுங்கள். தீப ஆராதனை கூட அந்தக் காலத்தில் இருந்தது கிடையாது. கையில் மசால்வடையை வைத்துக்கொண்டு தீப ஆராதனை போல் மேலும் கீழும் ஆட்டி ஆட்டி, நெருப்பையும் சுற்றிச் சுற்றி வருவதே பழந்தமிழர் வழக்கம். பிறகு தான் அது தாலியாகப் பெண்ணின் கழுத்தில் ஏறும். இதை வடைத்தாலி என்றும் கூறுவர். சமீபத்திய பெரும் இதிகாசப் படமொன்றில் நான் இந்த ஐடியாவைச் சொல்லி, பெரிய இயக்குனர் ஒருவரும் இதை ஒரு பாடல் காட்சியில் சேர்த்திருக்கிறார். உசிரே போனாலும் இந்த மாதிரி உதிரிக் காட்சிகளின் உள்குத்தை நீங்கள் ரசிக்காமல் இருக்கக்கூடாதென்பதை இங்கே சொல்லிக் கொல்வதும் என் கடமை. எடிட்டிங்கில் இது கட் பண்ணியிருக்கப்படலாம்., அமிதாபுக்கெல்லாம் இது புரியாது.
சொல்லப்போனால் தங்கத்தில் தாலி கட்டுகின்ற சடங்கு கூட சிலப்பதிகாரத் தமிழரிடையே இருந்தது கிடையாது. தங்கத்தின் விலை கன்னாபின்னாவென்று பிற்காலத்தில் எகிறப்போகிறது, ஒரு கிராம் தங்கம் வாங்கக்கூடக் காசில்லாமல் தமிழன் சிங்கி அடிக்கப் போகிறான் என்பது சிலப்பதிகாரத்திலேயே உட்கருத்தாய்ப் பொதிந்திருக்கிறது. பிற்காலத் தமிழருக்கும் பொருந்தும் வகையில் மஞ்சள் மசால்வடையில் மஞ்சள் நூலைக்கட்டி அதை மணாளன் மங்கையின் கழுத்தில் கட்டி, மங்கையும் அதையே மணாளனும் முதல் மசால் வடையுமே தன் பாக்கியம் என்றெடுத்துக் கண்ணில் ஒத்திக்கொள்கிற வழக்கம், ஒரு கடி கடிக்கிற வழக்கம்தான் (மணாளனை அல்ல, மசால் வடையை) தமிழ்ப் பெண்களின் வழக்கம். அதை விடுத்துத் தமிழ்ப் பெண்களின் கற்புக்கே மாசு கற்பிக்கும் வழியில் வடநாட்டுப் பெண்கள் இங்கே வந்து மசால் வடையாவது மண்ணாங்கட்டியாவது, கல்யாணத்திற்கு முன்பே மசால்வடையை ஒரு வெட்டு வெட்டுவதில் தப்பில்லை என்று சொல்வது விந்தையிலும் விந்தை.”
சார், சார்! போதும், போதும். நீங்க எங்கேயோ கோவில் கட்டற ரேஞ்சுக்குப் போயிட்டீங்க. அப்படியே நிப்பாட்டிக்கறது தான் உங்களுக்கும் எனக்கும் நல்லது”
வெளிநாட்டுக் கிழாரும் சொல்லிவிட்டார், உள்நாட்டுத் தமிழ்ப் புலவரும் சொல்லிவிட்டார், இன்னும் ஒரே ஒரு அரசியல்வியாதியைவாவது கேட்டு விடலாம் என்று தெருமாவைப் பிடித்தேன் போனில்.
”நாம் அன்றாடம் கலந்தடிக்கும் சாம்பார் வடைக்கும் தயிர் வடைக்கும் கூட செவ்வடை அந்தஸ்து கிடையாதா, தெருமா? இது அடுக்குமா?”
”கிடையவே கிடையாது. சிங்களவனின் சதியால் மல்லுங், சம்போல், சொதி போன்ற சிங்கள ஐட்டங்களுக்கும் செவ்வடை அந்தஸ்து கொடுக்கவேண்டுமென்று அலைகிறது ஒரு ராஜபக்ஷய பட்டாளம். இந்த சதிக்கு ’ரா’ போன்ற நம் உளவு நிறுவனங்களும் துணை போவதே நம் கேவலத்தை, அவலத்தை, வெட்கக்கேட்டை சுட்டிக் காட்டுகிறது. நீண்ட தூர இந்திய ரயில் பயணங்களில் இந்த ஐட்டங்களை செவ்வடை என்று பொய் சொல்லி விற்பதற்கான ஒரு ஒப்பந்தம் இலங்கையுடன் போடப்பட்டிருக்கிறதென்பது எனக்கும் தெரியும். இரயில்களில் செவ்வடை தவிர வேறு எதையாவது யாராவது விற்க முனைந்தால் சும்மா இருக்காது எங்கள் ’செவ்வடை காப்புப் படை’. தண்டவாளத்தைப் பெயர்த்தெடுத்தாவது நாங்கள் இந்த சதியை முறியடிப்போம். ஆனால் அதற்கு முன்னாலேயே எங்கேயாவது துருப்பிடித்த தண்டவாளங்கள் உடைந்து நொறுங்கி விழுந்தால் அதற்கும் எங்கள் செவ்வடை காப்புப் படைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நான் இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன். என் தம்பி கோமானின் கருத்தும் இதேதான் என்று போட்டுக் கொள்ளுங்கள்”
இவ்வளவு பேரைக்கேட்டுவிட்டு சினிமாக்காரர்கள் யாரையும் கருத்து கேட்காமல் விட்டால் எப்படி?
”வெளிநாட்டுப் படப்பிடிப்பிலே நான் இருந்தாலும் உள்நாட்டு செவ்வடை விடயங்கள் எனக்குத் தெரியாமல் போகலாமென்று மனப்பால் குடித்தவர்கள் சற்றே மனங்குமுறிக் கமற நேரிடலாம். ஏனென்றால் கருப்புச் சட்டை போட்டாலும் நானும் செவ்வடைக்காரனே என்பதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்த லாபமும் இல்லையென்றாலும் அதைச் சொல்லாமல் விட்டுவிட்டால் பொருட்குற்றம் வந்துவிடுமோ என்று நான் பயப்படுவதாக யார் வேண்டுமானாலும் ஒரு நிலைப்பாடு எடுத்துக் கொள்ளட்டும். பரமக்குடி தமிழ்ப் பாட்டி சுட்ட வடையும் மசால்வடையேயன்றி மற்றேதுமில்லை. இது பற்றித் தென்னாப்பிரிக்காவிலே படமெடுக்க நான் ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து வைத்துக்கொண்டு கிரேக்க நாட்டு ஃபைனான்சுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். அதிலே நான் செவ்வடை மசால்வடையாகவே நடிப்பதாக வரும் செய்திகளின் உண்மைத்தொனியை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் ஊகத்திற்கே விடலாமா என்று நான் யோசிக்கிறேன்”
இத்தனை பிரபலங்களைப் பேட்டி கண்டபின், சு. சுவாமியைப் பேட்டி காணாவிட்டால் எப்படி இதெல்லாம் பூரணமாகும் என்று நான் யோசித்துக்கொண்டே இருக்கும்போது என் செல்பேசி ஒலித்தது.
“இந்த மசால் வடை - செவ்வடை மேட்டர்ல நீங்க யார் யாரைப் பேட்டி கண்டேள், அவா என்னென்ன சொன்னாள்ங்கறதெல்லாம் நேக்கு எஃப்பிஐ ரிப்போர்ட்ஸ் கொடுத்துட்டா. இன் ஃபேக்ட் நான் இப்ப சான் ஃப்ரான்சிஸ்கோவில தான் இருக்கேன். நீங்க என்னைக் கேட்கலைன்னாலும் நான் சொல்றேன் எழுதிக்குங்கோ. ஜூனியர் கக்கன்ஜி தெரியுமில்லியா, அவரும் இப்ப என் கூடத்தான் வந்திருக்கார். அவர் தான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர். அம்மாவும் ஓகேன்னு கொடநாட்லேர்ந்து சொல்லிட்டா.
இந்த செவ்வடை மேட்டர்லாம் சுத்த ஹம்பக். சோனியாவும் கருணாநிதியும் சேர்ந்து பண்ற அட்டகாசம். ஒபாமாவே என்னை போன்ல கூப்பிட்டுச் சொல்லிட்டார். நான் வோர்ல்ட் கோர்ட்ல இது பத்திக் கம்ப்ளெய்ன் பண்ணி இருக்கேன். ‘தி ஹேக்’ல ஆர்க்யூ பண்ண டேட்ஸ் கொடுத்துட்டா. முப்பது பில்லியன் நஷ்ட ஈடு கேட்டு போபால் விக்டிம்சுக்குத் தந்துடுவேன்.
செவ்வடையாவது, வெங்காய அடையாவது? எல்லாமே சுத்தப் பேத்தல். ஓட்டையே இல்லாத மசால் வடையிலே எப்படிப்பா தாலியை கோர்ப்பாளாம்?
இன் ஃபேக்ட் இந்த வடைக்கெல்லாம் ஆதிமூலமே அமெரிக்காள் சாப்டற பேகிள் (Bagel) தான். மாவுல ஓட்டை இல்லாட்டா பேகிள். ஓட்டை போட்டுட்டா அது டோநட் (doughnut). எங்க டோநட்டையும் சேப்பு டோநட்டுன்னு சொல்லுங்கோன்னு அமெரிக்காள் பிடிவாதம் புடிக்றாளா, என்ன? நம்மளோட இட்லி, தோசை, வடை எல்லாமே ரொம்ப ஹெவி வாயுப் பண்டம். இதையெல்லாம் ரெகுலரா சாப்டா, ராக்கெட் இல்லாமலேயே நாம் சந்திரனுக்குப் போய்டலாம்னு யாரோ தமிழ்நாட்ல தப்புத்தப்பா சொல்லிக் கொடுத்திருக்கா.
ஒரு ரகஸ்யம் சொல்றேன். சசிகலா கிட்டே மட்டும் சொல்லிடாதீங்கோ. டோநட்லேருந்து தான் வடையே வந்துது.
நான் திரும்ப வந்து ‘முருகன் டோநட் கடை’ன்னு ஆரம்பிக்கப் போறேன். அவஸ்யம் திறப்பு விழாவுக்கு வந்துடுங்கோ!”
எனக்கு வயிற்றைக் கலக்குவது போல் இருந்தது. நானே லைனை கட் பண்ணி விட்டேன்.
இவ்வடை தோற்கின் எவ்வடை ஜெயிக்கும்?!
( நன்றி: இந்த வார கல்கி )
இதோ வடை என்று வந்திருக்கே என்று இந்த பதிவு :-)
Posted by IdlyVadai at 7/15/2010 10:50:00 AM 35 comments
Labels: எல்லே ராம், கட்டுரை, நகைச்சுவை, பத்திரிகை
Wednesday, July 14, 2010
முதல்வரும் இரு ஆன்மீக உபன்யாசகர்களும்
"வேளுக்குடி, திருச்சி கல்யாணராமன் என்ன பேசினார்கள் என்ற விவரம் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை" என்ற என் கமெண்டுக்கு, நிகழ்ச்சிக்கு சென்ற ஒருவர் தான் பார்த்த அனுபவத்தை (?) எனக்கு மெயிலில் அனுப்பியுள்ளார். பல இடங்களில் எடிட் செய்த அந்த மெயில் கீழே...
தமிழில் ஆழமான ஞானமும் தெளிவான புலமையும் உடையவர்கள் கனா வுக்குக் கானா குனாவுக்குக் கூனா என்று அடுக்கு மொழியில் பேசித் திரிவதுதான் தமிழ் என்று நினைக்கும் போலித் தமிழறிஞர்கள் இல்லை. தமிழ் வளர்ந்தது சமயத்தால். தமிழை உண்மையில் செழுமைப் படுத்தியவர்கள் பக்தி இலக்கியத்தை வளர்த்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் இன்னும் எண்ணற்ற பக்தி கவிதைகள் படைத்த கவிஞர்களும் பாடகர்களும் பொளராணிகர்களுமே ஆவார்கள். அர்த்தமுள்ள இந்து மதம் படைத்த கண்ணதாசனும், கம்பராமாயணத்தையும், தேவாரம் திருவாசகம் மற்றும் புராணங்களையும் தன் கம்பீரமான குரலில் வளர்த்த வாரியார் அவர்களையும் புலவர் கீரன் போன்றவர்களும் இன்னும் எண்ணற்ற உபன்யாசகர்களும் இல்லாமல் தமிழ் இன்று இல்லை. ஆனால் அவர்களையெல்லாம் ஒதுக்கி விட்டு ஏன் கம்பனையே ஒதுக்கி விட்டு இன்று இவர்கள் தங்கள் புகழ் பாடுவதற்காக ஒரு செம்மொழி மாநாடு நடத்தியிருக்கிறார்கள்.
அது செம்மொழி மாநாடாக நடக்கவில்லை மாறாக ஒரு குடும்பத்தின் புகழ் பாடும் செம்மறியாட்டுக் கும்பலின் மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது. தினம் தினம் நான்கு பேர் கூடி தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற புகழ் போதையில் திளைத்த கருணாநிதிக்கு அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர் சேர்ந்து இன்னும் ஒரு பாராட்டு நிகழ்ச்சியை
ஏற்பாடு செய்து அதில் தமிழின் மிகச் சிறந்த அறிஞர்களில் இருவர்களான திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்களையும் திருச்சி கல்யாணராமன் அவர்களையும் அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்களை அழைத்து ஏற்பாடு செய்தவர் பற்றி உங்களுக்கே தெரியும். தன் பேச்சில் இவரை 'ஆழ்வார்' என்று அழைத்த போதே வேளுக்குடி பயந்திருப்பார்.
துரதிருஷ்டவசமாக மேற்கண்ட நிகழ்ச்சிக்கு நானும் செல்ல நேரிட்டு விட்டது. வேள்குடி பெயரையும், கல்யாணராமன் பெயரை பார்த்ததும் இவர்களின் தேன் தமிழ் காதில் கேட்கும் ஆசையில் நானும் சென்று விட்டேன். ஜால்ராக்களின் அடித்த வழக்கமான பஜனைகள முடிந்த பின்னால் வேளுகுடி தன் அற்புதமான உரையை ஆரம்பித்தார்.
திரு.வேள்குடி கிருஷ்ணன் அவர்கள் திராவிட வேதமான ஆழ்வாரின் பிரபந்தப் பாடல்கள் குறித்து மிக அற்புதமான உருக்கான கேட்ப்போர் மனதும், நெஞ்சும், காதும் குளிர ஆழ்வார் பாடல்கள் குறித்து விளக்கினார். வேள்குடி கிருஷ்ணன் ஒரு ஆடிட்டராக இருந்து பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் நிதி அதிகாரி வேலையை உதறி விட்டு நாராயணன் புகழ் பரப்பி வருகிறார். நாரயணனின் பரிபூரண ஆசிகள் பெற்ற வேள்குடி தமிழ் கேட்ப்பவர்களை உருக்க வைப்பது. எந்தவித உச்சரிப்புப் பிழைகளும் தமிழ் இலக்கணப் பிழைகளும் இல்லாத சிறப்பான தமிழ் அவருடையது. குழலிது யாழிலுது என்பார் வேள்குடி தம் தமிழ் உரை கேளாதோர். பூரணமான ஞானமும் அறிவும் நிரம்பிய உண்மையான தமிழறிஞர் வேள்குடி தன்னைத்தான் உலகத் தமிழர்களுக்கு எல்லாம் தலைவன் என்று இறுமாந்திருந்தவர்களுக்கு நிச்சயம் அப்படி ஒரு நிறைகுடத்தின் உரையைக் கேட்டு எப்பேர்ப்பட்ட ஆழமில்லாத ஒரு போலி என்பதை நிச்சயம் அன்று உணர்ந்திருப்பார். அவர் ஆணவத்திற்கும் புகழ் மமதைக்கும் ஒரு பேரிடி விழுந்திருக்கும். இருந்தாலும் வேளுகுடி கிருஷ்ணன் போன்றவர்களின் பேச்சைக் கேட்டால் கொடிய மனமும் உருகும், பாவிகள் மனதிலும் கருணை சுரக்கும். ஆனால் யாருக்கு என்ன சுரந்தது என்று நான் சொல்லப்போவதில்லை.
வேளுகுடி அவர்கள் தீவிர வைணவர். உபன்யாசத்தின் பொழுது நாராயணனை தவிர வேறு ஒருவரையும் துதிக்க மாட்டார். அவர் ஆண்டவனை மட்டுமே தொழுது தன் உபன்யாசத்தை நடத்துபவர். அதுதான் சம்பிரதாயம் அவரது மரபு. அன்றைய நிகழ்ச்சியின் பொழுதும் தன் வழக்கப் படி சம்பிரதாயப் படியே கட்சி மேடை போல இல்லாமல் யாரையும் அவர்களே இவர்களே என்று அழைத்து துதிபாடாமல் ஆழ்வார்களின் பாடல்களில் உள்ள சுவைகளையும் அவற்றில் உள்ள தத்துவ மேன்மையையும் மட்டுமே உள்ளம் உருக தன் கம்பீரமான கேட்ப்போரை மயக்கும் அற்புதக் குரலில் சொற்பொழிவாற்றினார். அன்று அவர் கருணாநிதியை பெயரை ஒரு இடத்தில் கூட அழைக்காமல் தன் உரை நிகழ்த்தினார் என்பது ஹைலைட்! கடைசியில் இப்படி ஆழ்வார்களால் போற்றப்பட்ட தமிழுக்கு மாநாடு நடத்தியது பாராட்டு்க்குரியது என்று முடித்துவிட்டார்.
கருணாநிதி கலந்து கொண்ட நிகழ்ச்சியிலேயே அவரைக் குறிப்பிடாமல் அவர் புகழ் பாடாமல் ஒருவர் ஆண்டவனின் புகழை மட்டுமே பேசி விட்டு ஆளுபவனை உதாசீனம் செய்தது கருணாநிதியைப் பெரிதும் தைத்திருக்கிறது. அதனால்தான் வேளுகுடியை குத்தும் வண்ணம் உள்குத்து வைத்து "இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்" என்று பேசியுள்ளார் கலைஞர்.
அடுத்து திருச்சி கல்யாணராமன். பல ஆன்மீக அன்பார்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டு இருப்பவர். ஆனால் அன்று வேளுகுடி அவர்களின் கண்ணியத்திற்கும் பக்திக்கும் மாறாக நடந்து கொண்டார் திருச்சி கல்யாணராமன். சுயநலத்திற்காக எத்தனையோ பேர் துதிபாடுவதும், கால்களில் விழுவதும் தமிழ்நாட்டில் தினமும் நடப்பது தான். ஆனால் அனுதினமும் ஆண்டவன் புகழ் பரப்பும் புகழ் பெற்ற அறிஞரான திருச்சி கல்யாணராமன் அன்றைய தினம் நடந்து கொண்ட விதம் படு கேவலமாக இருந்தது. அவரது பேச்சும் நடவடிக்கையும் ஆபாசத்தின் உச்சம். வாலியே வெட்கித் தலைகுனிய வைக்கும் ஒரு செயலாக அமைந்து விட்டது. இது காறும் தன் அருமைத் தமிழால்
புலமையால் பேச்சாற்றலால் ஆன்மீக அன்பர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வந்த கல்யாணராமன் இந்த ஒரு நிகழ்த்தியில் தரம் தாழ்ந்து தன்னை அதல பாதாளத்தில் தள்ளி விட்டார். இத்தனை வருடங்கள் அவர் ஆற்றிய உபன்யாசங்களுக்கும் பேருரைகளுக்கும் அர்த்தம் இல்லாமல் செய்து விட்டார். பணத்திற்காகவும் பதவிக்காவும் புகழ் பாடும் அற்பர் கும்பலையெல்லாம் நாண வைத்து விட்டார். ஒரு வாலியும், ஒரு எஸ் வி சேகரும் புகழ் பாடினால் நமக்கு அதிர்ச்சி இல்லை. ஆனால் நாளெல்லாம் பக்தி வளர்த்த ஒரு அறிஞர் கேவலம் தனக்கு சன் டிவியிலும், கலைஞர் டிவியிலும் சான்ஸ் வேண்டும் என்று இறைஞ்சிக் கெஞ்சிக் கேட்ட கேவலத்தைக் கண்ட பலரும் அவமானத்திலும் அருவருப்பு உணர்ச்சியிலும் உறைந்து போயினர். நான் ஒரு பிராமணன் எனக்கு டி வி சான்ஸ் கொடுங்கள் நான் மடிப்பிச்சை கேட்க்கிறேன் என்று அவர் பிச்சைக்காரனை விடக் கேவலமாகக் பொது மேடையில் கெஞ்சியதும் என்ன என்று சொல்லுவது. நாளைக்கு மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி கல்யாணராமன் உபன்யாசம் நடக்க வாய்ப்பு இருக்கிறது அவ்வளவு ஏன் இவர் மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு நடுவராக கூட பிரமோஷன் கிடைக்கலாம்.
இது மட்டுமல்ல. திருச்சி கல்யாணராமனின் யோக்கிதை கொஞ்ச நாளைக்கு முன்பு வெட்ட வெளிச்சமானது பலருக்குத் தெரியாமல் போயிருக்கலாம். எம் எஸ் சுப்புலெஷ்மி ஒரு பெண் என்பதால் அவர் விஷ்ணு சகஸர்நாமம் பாடியிருக்கக்கூடாது என்று சொன்னவர் இவர். பட்டி தொட்டியெல்லாம் ஒரு பெண் பாடிய விஷ்ணு சகஸரநாமம் ஒலித்ததால், அது பாவத்தைச் சேர்த்துவிட்டது என்ற பொர்ருள் பட பேசினாராம்.
- [ edited ]
"என்ன கொடுமை சரவணன் இது?"
Posted by IdlyVadai at 7/14/2010 01:24:00 PM 36 comments
Labels: அரசியல், ஆன்மிகம், நிகழ்ச்சி தொகுப்பு, விருந்தினர்
Tuesday, July 13, 2010
நடன நடிப்பு = நாட்டு நடப்பு
ஆர்.எம்.வி ரசிகர்: நான் அப்பவே சொன்னேன் இல்ல அவர் திருந்திட்டார்னு ..அட.அவர் திருந்திடடார் ன்னு அவரே சொன்னார்பா.
வேளுக்குடி ரசிகர்: நாராயணா… இந்தக் கொசுத் தொல்ல தாங்க முடியலடா...
கலைஞர் பேச்சின் முழு விவரம் கீழே..
இந்த நாட்டிய நாடகத்தைப் பற்றி, சுருக்கமாக - ஆனால் சுவையாக தலைமையேற்றுள்ள நீதியரசர் ராமசுப்பிரமணியன் எடுத்துச் சொல்லியிருக்கின்றார். நீதியரசர் என்ற காரணத்தால், ஜட்ஜ்மென்டை ஒத்தி வைத்துவிட்டு அந்த முடிவை முதலிலே சொல்லக்கூடாது என்ற நிலையில் அமர்ந்திருக்கிறார். வேளுக்குடி கிருஷ்ணனும், திருச்சி கல்யாணராமனும் எனக்குப் புதியவர்கள். இந்த மேடையிலேதான் அவர்களுடைய அறிமுகம் - அவர்களுடைய பேச்சைக் கேட்கின்ற வாய்ப்பு - இவையெல்லாம் ஜெகத்ரட்சகனால் உருவாக்கித் தரப்பட்டிருக்கிறது.
"இதற்கு முன்பு இந்த உரைகளைக் கேட்கவில்லையே!'' என்ற ஆதங்கம்தான், அவர்களுடைய உரைகளைக் கேட்டபிறகு எனக்கு ஏற்பட்டது என்று சொன்னால், அது மிகையாகாது. அவர்களுடைய சொற்பொழிவில் - சொல்லப்பட்ட கருத்துக்களில் ஒன்றிரண்டு சொற்களில் எனக்கும், அவர்கள் கையாண்ட சொற்களுக்குமிடையே வேறுபாடு இருக்கலாம். ஆனால், எதைச் சுற்றினாலும், கடைசியாக "தமிழ் தான்'' என்று அவர்கள் முடித்த அந்த உணர்வு இருக்கிறதே, அந்த உணர்விலே நாங்கள் உடன்பாடு கொண்டவர்கள்.
அந்த உடன்பாடு, உணர்வு - இவைகளை எடுத்துக்காட்டுகின்ற வகையிலேதான், அண்மையில் கோவையில் நாங்கள் நடத்திய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தவர்கள் அல்லது இந்த அரசை நடத்துகின்றவர்கள் மாத்திரம் கலந்து கொள்கின்ற மாநாடாக அல்லாமல், எல்லோரும் கலந்து கொள்கின்ற மாநாடாக - எல்லா சமயத்தவரும் - எல்லா மதத்தினரும் - எல்லா கொள்கை படைத்தவர்களும், எல்லா அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும் கலந்து கொள்கின்ற மாநாடாக - அந்த மாநாட்டை நடத்தியதற்குக் காரணமே, அது தமிழ் மாநாடாக - தமிழர்களின் மாநாடாக - உலகத் தமிழர்களின் மாநாடாக நடைபெறவேண்டும் என்பதால்தான். தமிழர்களாக இருப்பவர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். தங்களைப் பற்றி சந்தேகம் கொண்டவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.
அந்த மாநாட்டிலே தமிழைக் கேட்கும்போது, எந்த உணர்வு ஏற்பட்டதோ, எந்தளவிற்கு இந்தத் தமிழ் மொழி நம்மையெல்லாம் ஒன்றுபடுத்தியிருக்கிறது என்ற உணர்வு ஏற்பட்டதோ, அந்த உணர்வு அந்த மாநாடோடு நின்று விடாமல், தொடர்ந்து இந்த நாட்டிய நிகழ்ச்சியிலும், அது கொழுந்து விட்டெரிந்து, தமிழகத்திலே எல்லோரையும் இணைக்கக்கூடிய ஒரு ஆற்றலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த நிகழ்ச்சியில் இந்த நாட்டிய நாடகம் இணைக்கப்பட்டிருக்கின்றது. அதனால் தான், "போர்வாளும் பூவிதழும்'' என்ற தலைப்பிலே இந்த நாட்டிய நாடகம் நடைபெறுகின்றது.
"போர்வாளும் பூவிதழும்'' என்பது இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டதைப்போல, "வன்மை - மென்மை'' என்ற இரண்டையும் குறிப்பிடுகின்ற இரண்டு சொற்களாக இருந்தாலும்கூட, "போர்வாள் பெரிதா? பூவிதழ் பெரிதா?'' என்ற வினா ஒரு இளைஞனுடைய - ஒரு வீரனுடைய உள்ளத்திலே எழும்போது, "இரண்டையும் விட, அவன் எதிர்நோக்க வேண்டிய கடமையென்று ஒன்று இருந்தால், அதுதான் பெரிது'' என்பதை உணர்த்துகின்ற வகையிலேதான் இந்த நாட்டிய நாடகம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை நான் சில சங்க காலப் பாடல்களை வைத்து, சங்கப் புலவர்கள் யாத்த அந்தச் செய்யுள்களை வைத்து பின்னிய ஒரு ஓரங்க நாடகம். அதை இவ்வளவு திறமையாக நாட்டிய நாடகமாக நடித்துக் காட்ட முடியும் என்கின்ற ஆற்றலை வெளிப்படுத்தியிருப்பவர் நம்முடைய அன்பிற்கும், நன்றிக்கும் உரிய கலைமாமணி பத்மா சுப்பிரமணியம் ஆவார்.
அவர்களுடைய நிகழ்ச்சிகள் இதே மாமன்றத்தில் எத்தனையோ நடைபெற்றிருக்கின்றன. நானும் அருகிலே உள்ள இல்லத்திலேதான் இருந்திருக்கின்றேன். ஆனால், இந்த நிகழ்ச்சியைக் காணுகின்ற வாய்ப்பினை நானும் பெற்று, நீங்களும் பெற்றுள்ள இந்தச் சூழல் - தமிழுக்கு ஆக்கமும், ஊக்கமும் வழங்கவேண்டுமென்று அனைவரும் எண்ணுகின்ற ஒரு சூழல். இதிலே எப்படி வேளுக்குடி கிருஷ்ணன் வந்தார்? திருச்சி கல்யாணராமன் வந்தார் என்று சில பேருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். அதுதான் ஆழ்வார் செய்த வேலை. நாங்களெல்லாம் ஆழ்வார் என்று அழைப்பது ஜெகத்ரட்சகனைத்தான். அவர்தான் இவர்கள் இருவரையும் இந்த விழாவிலே பங்கு பெறச் செய்து, எங்களுக்குத் தமிழ் இன்பத்தை இன்றைக்கு ஊட்டியிருக்கிறார். அதற்காக நான் ஜெகத்ரட்சகனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.
வேளுக்குடி கிருஷ்ணன் மிகுந்த தமிழ் ஆர்வத்தோடு, தமிழ் இனிமை சொட்டச் சொட்ட, இங்கே தன்னுடைய உரையை நிகழ்த்தியிருக்கின்றார். இந்த மேடையிலே எவ்வளவு கட்டுப்பாட்டோடு, நாளைக்கு வெளியிலே சென்றால், யார் யாரைச் சந்திக்க நேரிடும் என்கின்ற அந்த உணர்வோடு, இங்கே எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவு பேசி, எங்களையெல்லாம் மகிழ்வித்திருக்கின்றார்.
திருச்சி கல்யாணராமன் தொடக்கத்திலே பேசும்போது, ஒரு கோரிக்கை வைத்தார். அதெல்லாம் நிறைவேற்ற முடியாத கோரிக்கை அல்ல; நிறைவேறிவிட்டதாக அவர் கருதிக் கொள்ளலாம். இதிலே ஒரு சின்ன சிறப்பு என்னவென்றால், என்னுடைய ஒரு பக்கத்திலே வைணவம்; இன்னொரு பக்கத்திலே சைவம் - இரண்டும் அமர்ந்திருப்பதைப் போல உங்களுக்குத் தெரியும். அந்த இரண்டையும் சமப்படுத்துவதற்காகத்தான், நடுவிலே நீதியரசர் இன்றைக்கு இந்த விழாவிலே பங்கு பெற்றிருக்கின்றார். "வேளுக்குடி கிருஷ்ணன்'' - "கிருஷ்ணன்'' என்றாலே, வைணவப் பெயர் என்பது உங்களுக்குத் தெரியும். "கல்யாணராமன்'' - அதுவும் வைணவப் பெயர்தான். "ராமன், கிருஷ்ணன்'' - இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய நீதியரசர் பெயர் இரண்டுக்கும் பொதுவான பெயர் - "ராமனும், சுப்பிரமணியனும்'' - சைவமும், வைணவமும் சேர்ந்த பெயர். அத்தகைய ஒரு ஒற்றுமையோடு இந்த நிகழ்ச்சியிலே தங்களுடைய கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.
சில பேர் மண்டபத்திற்கு வெளியிலே நின்று காத்துக் கொண்டிருப்பார்கள். கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் - இவர்களெல்லாம் கலந்து கொள்கின்ற ஒரு நிகழ்ச்சியில் - "வேளுக்குடி கிருஷ்ணன் என்ன பேசுவாரோ? திருச்சி கல்யாணராமன் என்ன பேசுவாரோ? என்ன கலாம் விளையுமோ? வேடிக்கை பார்க்கலாம்'' என்று யாராவது இருந்தால், ஏமாந்து போயிருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். நாங்கள் எதையும், எந்த இடத்திலும், அளவோடு அளந்து பேசக்கூடியவர்கள்; பண்பானவர்கள். அந்தப் பண்பை எங்களுக்கு - எங்களுடைய மொழி கற்றுக் கொடுத்திருக்கிறது. எங்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே தமிழ் மொழி, அவர்களுக்கும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அவர்களுக்கு உணர்த்திய தமிழ் மொழி, எங்களுக்கும் உணர்த்தியிருக்கிறது. எனவே, எப்படிப் பேச வேண்டும்? எப்படிப் பழக வேண்டும்? எப்படி நம்முடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லவேண்டும் என்பதை உணர்ந்தவர்கள் நாங்கள்.
மிக விறுவிறுப்பான காலம் - அண்ணாவும், நாவலர் சோமசுந்தர பாரதியாரும், ஆர்.பி. சேதுப்பிள்ளையும் சொற்போர் நடத்திய ஒரு காலக்கட்டத்திலே கூட, அண்ணாவுடைய பேச்சைக் கேட்டு, சோமசுந்தர பாரதியார் வியந்ததும், ஆர்.பி. சேதுப்பிள்ளை புகழ்ந்ததும் சரித்திரம் சொல்லும். ஆகவே, எங்களுடைய தமிழ், தமிழ் ஆற்றல், நாங்கள் கற்ற கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பழகுகின்ற முறை, எடுத்துச் சொல்கின்ற லாவகம், இவைகளெல்லாம் திராவிட இயக்கத்திலே அண்ணாவால் எங்களுக்கெல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்ட ஒன்று. அதை அவர்கள் இந்த மேடையிலே உணர்ந்திருப்பார்கள்.
நாராயணா நாராயணா...
Posted by IdlyVadai at 7/13/2010 12:37:00 PM 27 comments
Monday, July 12, 2010
எல்லோரும் எழுத்தாளரே - கடுகு
சற்று முன் எழுத்தாளர் கடுகுவுடன் ஒரு சாட்டிங்...
"அது எப்படி சார் நீங்க மட்டும் நல்லா எழுதறீங்க? எங்களுக்கு அந்த டெக்னிக்கை கொஞ்சம் சொல்லிக் கொடுக்கிறது" என்ற பிட்டை போட அவர் உடனே சீரியஸாக
"ரொம்ப சுலபம் எல்லாவற்றுக்கும் ஒரு ஃபார்முலா இருக்கு" என்றார்.
"அப்படியா ? எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்று மடக்க
"அதுக்கு என்ன 40 வருஷம் முன்னாடி எழுதின ஒரு கட்டுரை இருக்கு உங்களுக்கு அனுப்பறேன். அதை படித்தால் நீங்களும் எழுத்தாளர் தான்" என்று உடனே அனுப்பினார்.
நான் மட்டும் எழுத்தாளர் ஆனால் போறுமா ? செம்மொழி மாநாடு நடந்த இந்த வருஷம் தமிழ் வலைப்பதிவர்கள் எல்லோரும் எழுத்தாளர் ஆக வேண்டாமா ? அதனால் எல்லோருக்கும் இந்த கட்டுரையை மறுபிரசுரம் செய்வதில் மகிழ்ச்சி.
அந்த கட்டுரை... படித்தவுடன் நான் மட்டும் இல்லை... நீங்களும்... ஏன் எல்லோரும் எழுத்தாளர் தான்!.....
எல்லோரும் எழுத்தாளரே - கடுகு
ஹலோ.. எழுத்தாளர் சார்...உங்களைத்தான் கூப்பிடுகிறேன். ஆமாம் உங்களைத் தான் எழுத்தாளர் என்று கூப்பிடுகிறேன். உங்களில் பலர் எத்தனை கதை, கட்டுரைகளை மனதிலேயே எழுதிக் கிழித்துப் போட்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால், எத்தனையோ நாவல்களையும் கவிதைகளையும் எழுதி இலக்கிய உலகத்தை நிரப்பி இருப்பீர்கள்! (ஏன், நான்கூடத்தான்!)
பாவம், உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. அதாவது அப்படி நீங்கள் நினைத்துக் கொண்டு அல்லது சமாதானப்படுத்திக் கொண்டு அல்லது.. ஏமாற்றிக் கொண்டு எழுத்தாளராக முடியாமல் நின்று கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு சில உபயோகமான குறிப்புகள் தர எனக்கு ஆசை. கதை அமைப்பு, நடை முதலிய துறைகளில் சிறிது கோடி காட்ட எண்ணம். மலர்ந்தும் மலராத எழுத்தாளராகிய நீங்கள் இவைகளை வைத்துக் கொண்டு இந்திரஜாலம் செய்துவிட மாட்டீர்களா? சாமர்த்தியசாலிகள் ஆயிற்றே நீங்கள்!
சிரிப்பு சிறுகதைமுன்பெல்லாம் நம் பத்திரிகைகளில் ஹாஸ்யக் கதைகள், ஹாஸ்ய வெடிகள் வெளியாகும். இப்போது வெளியாவதில்லை. ஆகவே ஹாஸ்ய கதை எழுதாதீர்கள். இப்போது சிரிப்புக் கதைகள், நகைச்சுவை கட்டுரைகள் தான் வெளியாகின்றன. அதனால் சிரிப்புச் சிறுகதை எழுத முனையுங்கள்!
சிரிப்புச் சிறுகதைகளின் கதாநாயகனுக்கு சேகர் என்றோ ரமேஷ் என்றோ பெயர் வைக்கக் கூடாது. கதாநாயகிக்கு சுந்தரி என்றோ மஞ்சுளா என்றோ இருக்கக் கூடாது. இந்த மாதிரிப் பெயர்களே கதைகளில் வரக்கூடாது.
திப்பிராஜபுரம் வஜ்ஜிரவேலு, சுங்குவார்பேட்டை அங்குசாமி, ஜிலுஜிலு கம்பெனி மானேஜர் ஜம்புகேசவலு, `சண்டமாருதம்' ஆசிரியர் மங்கள சபாபதி, பர்வதவர்த்தினி அம்மாள், மீனலோசநாயகி, ஆடியபாதம், பரிமள குஜாம்பாள் என்ற மாதிரிப் பெயர்கள்தான் சிரிப்பு வருமாம்.
இரண்டாவது: கதையில் பல இடங்களில் பகபகவென்று சிரித்தாள்- வயிற்று வலிக்க சிரித்தாள், ஹாஹ்ஹா, ஹாஹ்ஹா, ஐயோ, அம்மாடி, சிரிப்பு தாங்க முடியலையே' என்று எப்படியாவது சேர்க்க வேண்டும். அப்போதுதான் கதையில் சிரிப்புச் சூழ்நிலை உண்டாகும்.
மிகைப்படுத்தல் தான் சிரிப்பின் ரகசியம். ஆகவே கதாநாயகன் இட்லி சாப்பிட்டான் என்று எழுதுவதற்கு பதில் `பதினேழு இட்லிகளை உள்ளே தள்ளிவிட்டு, கால் லிட்டர் காபியை மடக் மடக்கென்று குடித்தான்' என்று எழுதினால் வாசகர்கள் இளிப்பார்கள்!
உபமானத்திலும் புதுமை வேண்டும். வீணையும் இசையும் என்பது போன்ற பழங்காலத்தை உதறிவிடுங்கள். ஜிகினாவும் கவர்ச்சியும் போல, சென்னையும் தண்ணீர் பஞ்சமும் போல, பத்திரிகையும் துணுக்கும் போல என்று எழுத வேண்டும்.
கதையில் வரும் தெருப் பெயர்கள், வீட்டுப் பெயர்கள் போன்றவையிலும் சிரிப்பு குமிழ்விட்டுக் கொப்பளிக்க வேண்டும். `ஜின்னான்னக்கடி உருண்டை கிருஷ்ணன் தெரு, `ஆப்பக்கார சிங்கணசாமி வீதி' என்பது போன்றவைகளைப் போட்டு நிரப்ப வேண்டும்.
சிரிப்புக் கதைகளுக்கு நடைதான் முக்கியம். கடிதங்களாகவே கதை எழுதும் பாணி, `பானி' (தண்ணீர்) பட்ட பாடு ஆகிவிட்டது. இருந்தாலும் யாரும் விடமாட்டேன் என்கிறார்கள். இந்தக் கடிதக் கதைகள் கலியாணத்தில்தான் முடியும். மற்றொரு விதம், மெட்ராஸ் தமிழில் `பிச்சு' வாங்குவது, `ஐயோ, என்னை விட்டு விடுங்கள்' என்றாலும் அதை விடாமல் நையப் புடைக்கிறார்கள். நமது தொல்காப்பியமும் திருக்குறளும் சிலப்பதிகாரமும் அழிந்து போனாலும் போகலாம். ஆனால் இந்த `இன்னா வாத்யரே' தமிழ் சாகாது என்பது நிச்சயம்.
மூன்றாவது விதம்: ஆங்கிலத்தை இடையிடையே போட்டுச் சிலேடை செய்வது, ஆங்கிலத்தைத் தமிழ் கதைகளில் அதாவது சீரியஸ் சிறுகதை, நாவல்களில் கூட உபயோகிப்பது ஃபாஷனாகிவிட்டது. சிரிப்பு கதைகளில் ஜோக்கடிக்க ஆங்கில வார்த்தைகளைப் போடலாம்.
இவைகளை எல்லாம் விடச் சிரிப்புச் சிறுகதை எழுதத் தேவை நல்ல கதை. நல்ல சிரிப்பு சம்பவங்கள். (இவைகள் இருந்தால் மேலே கூறிய வேறு எவையும் தேவையில்லை.)
உருக்கமான சிறுகதை
இப்படிப்பட்ட கதைகள் எழுதுவதுதான் மிகச் மிகச் சுலபம். வாழ்க்கையில் நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் எத்தனை தொல்லைகள், பிரச்னைகள், இடர்ப்பாடுகள் வருகின்றன என்பதை நாம் அறிவோம்.
அவைகளிலிருந்து, சுமார் அரை டஜன் `ஐட்டம்'களைப் பொறுக்கி எடுத்துப் போட்டு ஜால வித்தை செய்ய வேண்டும்.
இம்மாதிரிக் கதைகளில் நிறையக் கண்ணீர் வரவேண்டும். ஓட்டைக் குடிசை, காலிக் கஞ்சிக் கலயம், குழந்தைகளுக்கு டைபாய்டு (அல்லது உங்களுக்குப் பிடித்தமான வேறு ஏதாவது வியாதி!) மனைவிக்கு பிரசவ சமயம் - இப்படி எத்தனையோ உபகரணங்கள் உண்டு.
"விடிந்தால் தீபாவளி, பரட்டைத் தலையும் சூம்பிய வயிறுமாகக் குழந்தை சின்னாயி தூங்குவதைப் பார்த்த சின்னப்பனுக்கு வருத்தம் அழுத்தியது. பையைத் துழாவினால் ஒரு பத்து பைசா நாணயம் அவனைப் பார்த்துக் கேலியாக சிரித்தது.." இப்படி ஆரம்பித்தால், அடுத்த கணம் வாசகர்கள் கைக்குட்டையை நாடிப் போவார்கள். (அல்லது சிலர் பத்திரிகையைப் சுருட்டி வீசிப் போட்டு விடுவார்கள்).
சுண்ணாம்பில் இருக்கிறது சூட்சுமம் என்பார்கள். அதுமாதிரி, கதை முடிவில்தான் சோகம் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும்.
"ஜன்னலின் ஓரமாக உட்கார்ந்து வெறுமையாய்க் காட்சியளித்த வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களிலிருந்து வழிந்த நீர் உலர்ந்திருந்தது- அவள் வாழ்க்கையைப் போல், அவளுக்கு விடிவு காலம் உண்டா?" இப்படி ஒரு கேள்வியை வாசகரின் மேல் தூக்கிப் போட்டுவிட்டுக் கதையை நிம்மதியாக முடிக்கலாம்.
பெருமூச்செறிந்தாள். நெஞ்சம் அடைத்தது. இதயம் கனத்தது. வாழ்க்கை இருண்டது. கால்களின் கீழ் தரை சரசரவென்று சரிந்தது. கண்ணீரும் கம்பலையும் (கம்பலை பதத்திற்கு அர்த்தம் தெரிந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.) சோகம் பிழிந்து எடுத்தது. இம்மாதிரி சொற்களை முதலில் முன்கூட்டியே சேகரித்து வைத்துக் கொண்டு கதையின் இடையிடையிலே தூவிவிட்டால், சோகம் பிரமாதமாக அமையும்.
காதல் கதைகாதல் கதை எழுதுவது ஒருவிதத்தில் சுலபம். மற்றொரு விதத்தில் கஷ்டம். காதல் கதைகளில் காதலனும் காதலியும் (சேகர், ஸ்ரீதர், கீதா, மாலா, மல்லிகா, உஷா, சங்கர், நளினி -இப்படித்தான் அவர்களின் பெயர்கள் இருக்க வேண்டும்) கடைசியில் கலியாணம் செய்து கொள்வார்கள். வாழ்க்கையில் காதல் ரொம்ப ரொம்பக் குறைவு; அதுவும் சந்தோஷமான திருமணத்தில் முடியும் காதல் விவகாரம்; நூற்றில் ஒரு கேஸ்தான்.
ஆகவே, இக்கதைகள் எழுதுவதில் தனி திறமை வேண்டும். காதல் மலர, வளர, செழிக்க பல வாய்ப்புகள், தரப்படவேண்டும். வாழ்க்கையில் கிடைக்காத அல்லது மிகவும் துர்லபமாக இருக்கும் இவைகளை சிருஷ்டி செய்வது கடினம்.
பஸ் ஸ்டாப், சினிமாக் கொட்டகை, நாடக நிகழ்ச்சி, கல்லூரி விழா, பாங்க் கவுண்டர், டெலிபோன் விசாரணை குமாஸ்தா, லேடி டைப்பிஸ்ட், சமூகசேவகி, மியூசிக் டீச்சர், யாவும் தீர்ந்து போன விஷயங்கள். புதிதாக எழுதப்படும் கதைகளுக்கு யார் யாரை, எப்படிப் பிடித்துப் போட்டுக் காதல் செய்யச் சொல்வது என்பது மிகவும் தொல்லையான சமாசாரம்.
என் நண்பரான சினிமாக் கதாசிரியர் ஒரு சமயம் சொன்னார். "லவ் சீன் எழுதுவதுதான் என்னைப் பொறுத்த வரை மிகவும் மண்டையை உடைக்கும் காரியம். ஒன்று பாக்கி விடாமல், பல விதங்களில் லவ் சீன்களைத் தயாரித்து விட்டார்கள். காதல் காட்சி இல்லாமல் படம் எடுக்க விரும்புகிறேன்."
ஆகவே காதல் கதை எழுதாதீர்கள் என்று சொல்லவில்லை. ஓசியில் கிடைக்கிறது என்று ஆப்பிள் பழத்தை ஏவாள் என்றைக்கு சாப்பிட்டாளோ, அன்றே காதல் உலகில் மலர்ந்துவிட்டது. காதல் இல்லாமல் மனிதர்கள் வாழலாம்; பத்திரிகைகளால் வாழ முடியாது. காதல் கதைகள் வாழ்க!
காதல் கதைகள் வர்ணனையில்தான் மிளிர வேண்டும்.
கதாநாயகி கட்டழகுக்காரி என்றால் போதாது. வெளிர் நீலத்தில் சின்னச் சின்ன வெள்ளைப் பூ போட்ட நைலக்ஸ் புடவையை அவள் கட்டியிருப்பதை வர்ணிக்க வேண்டும். எள்ளுப் பூவைப் பார்த்திராத `அரிசிக் காய்ச்சி மர' எழுத்தாளராக இருந்தாலும், நாயகியின் நாசி எள்ளுப்பூ போன்று இருந்தது என்பதை ரசிப்புடன் கூற வேண்டும். முன்பெல்லாம் முக அழகை மட்டும் விவரிப்பார்கள். இப்போது காலம் முன்னேறிவிட்டது; அல்லது கீழிறங்கி விட்டது என்று கூறலாம். முக அழகிலிருந்து கழுத்து, தோள் என்று இடுப்புக்கு கீழ் கட்டப்பட்டுள்ள `சாரி' வரை வர்ணனைகள் எழுதப்படுகின்றன.
வாளிப்பு, பூரிப்பு, செழுமை,, வழவழப்பு, இளமைத்துடிப்பு, கவர்ச்சி போன்ற வார்த்தைகள் உங்களுக்குத் தெரியுமல்லவா? போதும், இவைகளை வைத்துக் கொண்டு விந்தைகள் புரிய முடியும்.
காதலுக்குக் கண் இல்லை என்பார்கள். காதல் கதைகளுக்குக் கருத்தோ, கதையோ கிடையாது. ஆகவே, வெறும் பேனாவை எடுத்து மாறன் கணைகளைச் சரசரவென்று வீசலாம்.
சரித்திரக் கதைஇன்று தமிழில் சரித்திரக் கதைகள் எழுதுவது மிக எளிதான காரியம். ஏதாவது ஒரு காதல் கதையை எழுதுங்கள். தமிழ்நாட்டின் பழைய சரித்திரத்தைப் படித்தறியாதவர்கள் கூட எழுதலாம். கதை எழுதி முடித்த பிறகு சில சில மாற்றங்கள் செய்தால் சரித்திரக் கதை பிரமாதமாக அமையும்.
செய்முறை கீழே தரப்படுகிறது.
முதலில் எழுதப்படும் கதை:
"தலப்பாகட்டில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஸ்கூட்டரில் ஏறிச் சென்று கொண்டிருந்த மணியின் பார்வை சட்டென்று எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்த மாலினியின் மேல் விழுந்தது. அவள் ஒரு பெரிய கட்டடத்தில் நுழைந்தாள். அவள் அணிந்திருந்த `சைனா' புடவை மாலை வெயிலில் பளபளத்தது.
இதை சரித்திரக் கதையாக மாற்றுவது எப்படி?
"பால் சோறும் பலாக்கனியும் உண்டுவிட்டு புரவியில் ஏறிப் பாதை வழியே மெல்ல வந்து கொண்டிருந்த இளவரசன் மார்த்தாண்ட மணிவர்மனின் பார்வை ஒரு கணம் எதிர்ச்சாரியில் மலர்ப் பூங்காவின் பின்புறம் சென்று கொண்டிருந்த ராஜ பாதையின் மேல் சென்றது. அங்கே அழகு மயில் என ஒயிலாகச் சென்றுக் கொண்டிருந்தாள் எழில் மங்கை மாளவிகா. அவள் பூப் போன்ற பாதங்களால் நடக்காமல் அன்னமென மென்காற்றில் மிதந்து செல்வது போல் சென்றாள். அருகே இருந்த மாட மாளிகையின் வேலைப்பாடுகள் அமைந்த மணிக் கதவுகளைத் திறந்து சென்றாள். அவள் அணிந்திருந்த முத்து மாலையும், காதில் நடனமாகிக் கொண்டிருந்த குண்டலமும், சங்குக் கழுத்தை தழுவிய நவரத்னாபரணமும், -இவைகளும் சாவகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மென்பட்டாலான மேலங்கியும் அந்தி வெயிலில் தகதகவென்று பளபளத்து ஒரே தேஜோமயமாகக் காட்சி அளித்தது...
போதுமா? சரித்திரக் கதைகளில் வீடுகள் கிடையாது. கோட்டை, அரண்கள் உண்டு. ஜன்னல்கள் , சாளரம் ஆகும் அல்லது பலகணி ஆகும். சூரியன் ஆதவன் ஆவான், இத்யாதி.
ஒரு சின்னக் குறிப்பு: கதையின் நடுவே ஏதாவது ஓர் இடத்தில் ஒரு நட்சத்திரக்குறி போடுவது மிக மிக அவசியம். அதற்கு ஓர் அடிக்குறிப்பு: ஆங்கிலத்தில் ஏதாவது சரித்திரப் புத்தகத்தின் பெயர், பக்க விவரம் போன்றவைகளைப் போட வேண்டும். இம்மாதிரி ஒரு சரித்திரப் புத்தகம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை!
புதுமைக் கதைஇன்று புதுமைக் கதைகளுக்குத்தான் மவுசு. கதை அம்சம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. நடைதான் முக்கியம். நடையில் பல சர்க்கஸ் வேலைகள் செய்ய வேண்டும். ஆங்கில வார்த்தைகளை உரையாடலில் உபயோகிக்கலாம். ஆனால் ஆங்கிலத்திலேயே எழுதினால் சிறப்பாக இருக்கும். (பள்ளிக்கூட `மாகஸீன்களில்' தமிழ்க் கட்டுரைகள் ஒரு பகுதியும் ஆங்கிலக் கட்டுரைகள் ஒரு பகுதியுமாகப் பிரசுரிப்பார்களே, அதுபோல்தான் புதுமைக் கதைகளும். ஆனால் இவைகளில் இரண்டும் கலந்து வரவேண்டும்)
'ங' மாதிரி கையை உயர்த்தினான். 'க்' மாதிரி வளைந்து கிடந்தது, '. ஒ, ஒ என்று கூட்டம் நெறித்தது. குழந்தை ஞொய் ஞொய் என்று அழுதது. 'அ' சினிமாப் படங்களில் வருவது போல உடை உடுத்தியிருந்தாள் அல்லது கழற்றி இருந்தாள். இந்த வழியில் கற்பனையைப் பறக்கவிடுங்கள்.
கதை என்று இருக்க வேண்டியதில்லை. திடீர் முடிவுகள், எதிர்பாராத திருப்பங்கள், சட்டென்று ஒரு கேள்விக்குறியைப் போட்டுவிட்டுக் கதையை அந்தரத்தில் முடிப்பது ஆகியவைகளைத் தாராளமாகப் பயன்படுத்தலாம், இத்தகைய கதைகளில்.
தமிழில் உள்ள ஒரு சில எழுத்துக்களை சாதாரணமாக நடைமுறையில் உபயோகிப்பதில்லை. அப்படிப்பட்ட எழுத்துக்களைக் கதையில் நுழைக்க வேண்டும். சில `சாம்பிள்'கள்; நாய் ஙெங்ஙெ என்று அழுதது. ஒய்ங்ஞ்ங் என்று அழுதது, ஒய்ங்ஞ்ங் என்று எண்ணெய் போடாத கதவு ஙீரீச்சிட்டது, மூக்கால் ஞேசினாள்.புதுமைக் கதைகளில் சாதாரணமாக ஆங்கில இசைப் பின்னணி இருந்தால் மேலும் நன்றாக அமையும். கதாநாயகன் ரேடியோவைத் திருப்பினான் என்பதற்குப் பதில், `ரேடியோகிராமில் பீட்டில் இசை முழங்கிக் கொண்டிருந்தது' என்று எழுதலாம். ஜாஸ், பாப், ரோலிங் ஸ்டோன்ஸ்,, ட்ரம்பெட், ஷேக், , நைட் கிளப், காபரே, ஜாம் செஷன், எலக்ட்ரிக் கிடார், இன்-பீட் இப்படித் திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். கதைக்கு நடுவே அள்ளிப் போட உபயோகமாக இருக்கும்!
`கவர்ச்சி'யையும் சேர்க்க வேண்டும். ஹீரோவின் கையில் வெறும் புத்தகத்தைக் கொடுக்காதீர்கள். `ஃப்ரம் ரஷியா வித் லவ்'. `நாட்டி ஜோக்ஸ் ஃப்ரம் பிளேபாய்' - இப்படி ஒரு புத்தகம் இருப்பது நலம்.
புதுமைக் கதைகளில் சில சில இடங்களில் லேசான `பச்சை' அடிப்பதும் முக்கியமானதாகும்.
முடிவுரை:
ஆகவே, என் அருமை எழுத்தாளரே! எழுத்தின் ரகசியத்தைக் கூறிவிட்டேன். இனி நீங்கள் எழுதிக் குவிக்கலாம். அதாவது உங்களுக்கு நேரம் இருந்தால்!
இவ்வளவு வக்கணை பேசுகிறீர்களே, நீர் ஏன் ஒரு நல்ல கதை எழுதக்கூடாது என்று என்னைக் கேட்கிறீர்களா?
அதற்கு ஒரே பதில். (அல்லது கேள்வி)
"பணம் சம்பாதிப்பது எப்படி?" என்ற புத்தகத்தை பணம் சம்பாதிக்கத் தெரிந்தவன் எழுதுவானா?
- கடுகு
( சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் எழுதியது )
கதையில் வரும் டெக்னிக், பெயர்கள் அனைத்தும் கற்பனையே.. கடந்த கால, சமகால, வருங்கால எழுத்தாளர்கள் யாரையும் குறிப்பிடுவன அல்ல.
பிகு: அறிவியல் கதை, இலக்கிய கதை, தொடர்கதைகள் ... என்று நீங்கள் கமெண்டில் டிரை பண்ணலாம் :-)
Posted by IdlyVadai at 7/12/2010 06:15:00 PM 13 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், கடுகு, கட்டுரை, நகைச்சுவை