பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 18, 2010

ராவணன் - FIR

ராமாயணம் காவியத்தில் ராமர் தான் ஹீரோ. ராவணன் படத்தில் ராவணன் தான் ஹீரோ(விக்ரம்).
ராவணனை ஹீரோவாகக் காண்பித்தால் ராமரை வில்லனாகக் காண்பிக்க வேண்டும். காண்பித்துவிட்டார்கள். ராமாயணத்தில் சீதை பத்தினி, ராமர் சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதால் உடனே அக்னியில் குளித்து தான் ஒரு பதிவிரதை என்று நிருபித்தாள்.( இதனால் சாலமனுக்கும், லியோனிக்கும் இன்றும் பிழைப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது. )


இது ஜீன்ஸ், டி.சர்ட் யுகம், இதில் ராமர் சந்தேகப்பட்டால் சீதை உடனே டிரயின் செயினை பிடித்து இழுத்து ராவணனே மேல் என்று அங்கே சென்றுவிடுகிறாள். இந்த ஷாக்கை கொஞ்சம் கதையுடன் கொடுத்திருக்கிறார் மணிரத்தனம். நிச்சயம் இந்த படம் ஹிந்து சைட்டில் நல்ல ‘ஹிட்’ வாங்கும். சந்தேகம் இல்லை.

படம் ஆரம்பிக்கும் போது சில காட்சிகளை காண்பித்து நம்மை கதைக்குள் அசால்டாக இழுக்கிறார். அந்த காட்சிகளை போகிற போக்கில் கதையில் காண்பித்துவிட்டு நம்மை பிரமிக்க வைக்கிறார்.

ராவணனின் தங்கையாக வரும் சூர்பனகை (ப்ரியாமணி) குரல் நிஜ சூர்பனகைக்கு டப்பிங்கொடுக்கலாம். சில காட்சிகளில் வந்தாலும் நன்றாகச் செய்துள்ளார். ராமாயணத்தில் லக்‌ஷ்மணன் சூர்பனகையின் மூக்கை அறுப்பார். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக போலீஸ்காரர்கள் கூட்டு சேர்ந்து அவளைச் சூறையாடுகிறார்கள். ராவணன் தான் செய்யும் அட்டுழியங்களுக்கு ஒரு பலமான ஃபிளாஷ்பேக் வேண்டமா? அதுதான் இது.

ஐஸ்வரியா ராய் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் வருவது போல வருகிறார். முதல் காட்சியில் ஏதோ செம்மொழி வசனம் பேசும் போது தியேட்டரில் சிலர் விசில் அடிக்கிறார்கள். வசனம் சுஹாசினி. கோவைக்கு ஒரு டிக்கெட் பார்சேல்!.

மற்றபடி ஐஸ் வழக்கமாக வரும் மணிரத்தனம் ஹீரோயின். (தமிழ் போலீஸுக்கு வாக்கப்படும் ஹீரோயின் எல்லாம் ஒன்று பரதநாட்டியம்/பாடல் கிளாஸ் எடுப்பார்கள், இல்லை ஸ்கூல் டீச்சராக இருப்பார்கள்). ஐஸுக்கு வயதாகிவிட்டது. இருந்தாலும், விக்ரம், பிரிதிவிராஜ் போன்றவர்களுடன் நடிப்பதால் இளமையாகவே இருக்கிறார்.

பல காட்சிகளில் அந்தப் பூனை கண்களே நடித்துவிடுகிறது. விக்ரம் மீது காதல் (அல்லது Crush?) கொள்ளும் காட்சிகள் கவிதை. (தமிழ் நாட்டுப் பெண்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்).

பிரிதிவிராஜ் ராமர் வேஷம் போட்டதாலோ என்னவோ மீசை இல்லாத போலீஸ் எஸ்.பி.யாக வருகிறார். ஏனோ மீசை இல்லாதால் வீரம் கொஞ்சம் கம்மியாக இருக்கிறது. சில சமயம் முகம் மொழுக்கு என்று ஐஸுக்கு போட்டியாக கூட இருக்கிறது.

விபீஷணன் கதாப்பாதிரம் கூட வருகிறது. ராவணனின் தம்பியாக. சமாதானம் பேச வரும் இவரை ராமர் போட்டுத்தள்ளுகிறார். ராமரை வில்லனாகக் காண்பிக்கும் இன்னொரு இடம் இது.

கார்த்திக் அனுமான் கதாப்பாதிரத்தில் ஜோக்கராக வருகிறார். சாரி குதிக்கிறார். ஹனுமான் என்ற காரணத்துக்காக ஆரம்பக் காட்சிகளில் தாவித்தாவிக் குதிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். பிரபு சில காட்சிகளில் கண்களுக்கு மை தடவிக்கொண்டும் சில காட்சிகளில் தடவாமலும் முதல் முறையாக நடித்திருக்கிறார். அவருக்குப் பாராட்டுக்கள்.

வழக்கமான மணிரத்தின பாடல் காட்சிகள். சில காட்சிகளில் ஐஸ்ஸின் தலை மயிர் காற்றில் ஆடுவது கூட ஏதோ படத்தில் பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்ல வைக்கிறது.

விக்ரம் சில காட்சிகளில் கந்தசாமி+பிதாமகன் மிக்ஸ் சேஷ்டை செய்வது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. காட்டுவாசிகள் எல்லாம் அப்படி தான் இருப்பார்களோ. யார் கண்டது!!

பாடல் கேட்பதைக் காட்டிலும் படத்துடன் பார்ப்பது நன்றாக இருக்கிறது. சில இடங்களில் ரஹ்மான் தெரிகிறார், பல இடங்களில் மணிரத்னம் தெரிகிறார்.

மலைமீது இருந்து விக்ரம் குதிப்பது, ஐஸ் விழுவது, இரண்டு மலைகளுக்கு இடையில் இணைந்த கைகள் படத்தில் வரும் கிளிப் ஹாங்கர் காட்சி சாகசங்கள் எல்லாம் முன்பே நான் பார்த்ததால் ’அட’ என்று சொல்ல வைக்காவிட்டாலும் எடுத்த விதத்துக்கு சபாஷ் சொல்ல வைக்கிறது.

படம் முழுக்க ’ராம்போ’ படம் பார்ப்பது போல இருப்பதாலோ என்னவோ சில ஃபிளாஷ் பேக் காட்சிகள் காண்பிக்கும் போது அப்பாடா என்று ரிலாக்சாக இருக்கிறது. காடுகளில் எப்போதும் மழைக்கொட்டிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ தியேட்டரில் குளிருக்கு அடிக்கடி டாய்லெட் போகிறார்கள். இன்னொரு தமிழ் டைரக்டராக இருந்தால் இந்த மழையில் ஐஸை முழுவது நனைத்து பிழிந்து காயபோட்டிருப்பார்கள். நல்ல வேளை மணிரத்னம் அதை செய்யவில்லை.

உடைந்து போன ரங்கநாதர் சிலைக்கு முன் வரும் வசனங்கள் ரங்கநாதரைப் போல கவர்ச்சியாகவும், கமல் படத்தில் வரும் இண்டலிஜெண்ட் வசனம் போலவும் இருக்கிறது. ஒரு புதுமையான காட்சியும் இருக்கிறது. ஒரு கையை வெட்டி அதை இன்னொரு கையால் பிடுத்துக்கொள்ள வைக்கும் ரத்த காட்சி. பார்க்கும் போது மனம் பதறுகிறது, எப்படி இந்த காட்சிக்கு ’U' சான்றிதழ் தந்தார்கள் என்று.

இட்லிவடை மார்க் 6.5/10

படத்தில் அடிக்கடி கைத்தட்டல் வாங்குவது ரஞ்சிதா தான்! தமிழ் நாட்டு மக்களுக்கு தான் என்ன ஒரு ஞானம்! என்ன ஒரு ஞாபகசக்தி !

மஹாபாரதம், ராமாயணம் முடிந்துவிட்டது அடுத்து என்ன கதை மணி சார் ?

43 Comments:

AkashSankar said...

ரஞ்சிதா மேட்டர் தான் Highlight பதிவுல ...

கானகம் said...

அட்டகாச்சமான சரியான விமர்சனம். மணிரதானம் போன்ற அறிவுஜிவிகள் தங்கள் மீதே எச்சில் துப்பிக்கொள்வதை பெருமையாக கருதுவார்கள் போல. அதனால்தான் ராமகாவியத்தைக் கூட அவரால் இழிவு செய்யும்விதமாய் எடுக்க முடிந்துள்ளது.

மற்றபடி உங்கள் விமர்சனம் அருமை. குறிப்பாய் ரஞ்சிதா மேட்டர். இங்கையும் அப்படித்தான் :-)

குழலி / Kuzhali said...

என்னாது FIR -ஆ? FIRனா First Information Report தானே, அது நக்கீரன்ல வந்து 2 நாள் ஆகுது, ப்லாக்ல வந்து 24மணி நேரத்துக்கும் மேல ஆகுது, இது ஒரு 50வது பதிவா இருக்கும்... சுடசுடா இருந்தா தான் இட்லிவடை இல்லின்னா அது க்கு பேரு இட்லி உப்புமா & வடைகறி :-)

IdlyVadai said...

//என்னாது FIR -ஆ? FIRனா First Information Report தானே//

யார் சொன்னது ? அது Film Information Report :-)

வால்பையன் said...

அப்படி ஒன்னும் சிறப்பில்லைன்னு மக்கள் சொன்னாங்களே!, கவரு வாங்கிட்டிங்களா!?

Shankar said...

Kewl, U know It's true that people were rejoicing each and every scene which had Ranjitha :)))))))))

Thomas Ruban said...

அருமையான நடுநிலையான விமர்சனம்.

ரஞ்சிதாவை கதாநாயகியாக வைத்து வேலு பிரபாகரன் போன்றவர்கள் இந்த நேரத்தில் படம் எடுத்தால் பாக்கெட்டை
நிரப்பலாம்.

நன்றி.

pragdhees said...

//சில சமயம் முகம் மொழுக்கு என்று ஐஸுக்கு போட்டியாக கூட இருக்கிறது.//

super

விக்ரம் said...

>> விக்ரம் மீது காதல் (அல்லது Crush?) கொள்ளும் காட்சிகள் கவிதை. தமிழ் நாட்டுப் பெண்கள் பொதுவில் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்

idiotic statement.
Appdina, aambalainga sari nu solluvaangala? (i mean, when husbands think about their wives flirting with others, not otherway round)

vimarsanam panravan ivlo thooram pesina, avlo effort eduthu film direct panravan eppdi venalum eduppan.

>> ராமகாவியத்தைக் கூட அவரால் இழிவு செய்யும்விதமாய் எடுக்க முடிந்துள்ளது

appdiya? enna izhivu pannaar? keep in mind, Ramayanam is nott written by God! Ungalukellam Sura, Ranjitha kurumbadam(?!) thaan pidikkum.

blog elutha kidaicha, thitta vendiyathu thaan vela?

Anonymous said...

>> விக்ரம் மீது காதல் (அல்லது Crush?) கொள்ளும் காட்சிகள் கவிதை. தமிழ் நாட்டுப் பெண்கள் பொதுவில் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது வேறு விஷயம்

idiotic statement.
Appdina, aambalainga sari nu solluvaangala? (i mean, when husbands think about their wives flirting with others, not otherway round)

vimarsanam panravan ivlo thooram pesina, avlo effort eduthu film direct panravan eppdi venalum eduppan.

>> ராமகாவியத்தைக் கூட அவரால் இழிவு செய்யும்விதமாய் எடுக்க முடிந்துள்ளது

appdiya? enna izhivu pannaar? keep in mind, Ramayanam is nott written by God! Ungalukellam Sura, Ranjitha kurumbadam(?!) thaan pidikkum.

blog elutha kidaicha, thitta vendiyathu thaan vela?

Anonymous said...

/*****அட்டகாச்சமான சரியான விமர்சனம். மணிரதானம் போன்ற அறிவுஜிவிகள் தங்கள் மீதே எச்சில் துப்பிக்கொள்வதை பெருமையாக கருதுவார்கள் போல. அதனால்தான் ராமகாவியத்தைக் கூட அவரால் இழிவு செய்யும்விதமாய் எடுக்க முடிந்துள்ளது.****/

Repeatu!!!!!!

Anonymous said...

Mani can stop his film making and he can go to take rest for his heart problems, he becomes saturated already but he still wwants to torture people, bore movie, i would suggest people not to waste 4 hrs in a day and your valuable money.

Anonymous said...

/***appdiya? enna izhivu pannaar? keep in mind, Ramayanam is nott written by God!***/

Mr Arivulla jeevi vikram,
Ramayanam was not written by god, but it was written not to go in a wrong direction. You are thinking that People here are criticising a good movie (in your view), but we are thinking that you are trying to criticise a good ithikaasam. What you are talking is what you are.

Kannan said...

நானும் பிர்மின்காமில் படம் பார்த்தேன். கைத்தட்டுகள் எல்லாமே ரஞ்சிதாவிற்கு தான். location அருமையாக இருந்தது, ஆனால் படத்தோடு ஒன்ற முடியவில்லை.

விக்ரம் said...

>> criticise a good ithikaasam

IdlyVadai style la sollanum na 'தமிழ் நாட்டு மக்களுக்கு தான் என்ன ஒரு ஞானம்!'

Ramayanam la vara, Raman doubting Sita part tamilnaatla pala varushama criticize pannitu irukaanga. athellam ungalukku maranthu pochu, aana Mani rathnam sonna thappu? I didnt mean to say the movie is good. but etha criticize pannanumo atha vitrunga, atha vittutu cinema va, Ranjitha matter a maanchi maanchi blame pannunga.

3 times Marriage pannavangala thaan tamilnadu CM a select pannirukkom. appdina, namma ellarum Tamil culture kaapathurom. cinema la kooda accept pannikkuvom. but same, oru ponnu vera oruthan kooda pona, cinema la pona kooda namma aalunga ithu thappu, director worst nu kuthippaanga....

alright...ithellam ethukku. Poi Manada Mayilada paarunga, Shankar eppdi Enthiran edukka koodathu, adutha flash news/ video suntv. namakku vimarsanam panrathukku ithu thaana intersting a irukkum.

ரிஷபன்Meena said...

படம் எப்படி இருக்கிறோதோ என்னவோ, விமர்சனம் அமர்களமாக இருக்கிறது.

ராமயாணத்தின் அவுட் லைன் -ஐ எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லுங்கள், ஆனால் ராமகாவியத்தை இழிவு படுத்தியதாக நினைக்கவேண்டியதில்லை.

இது ஒரு சினிமா அதற்கு மேல் ராமகாவியம் என்றெல்லாம் பேசுவது கொஞ்சம் ஓவர்.

Baaski said...

உங்க விமர்சனம் மேல் நம்பிக்கை இல்லை.....
டிக்கெட் ரிசேர்வ் பண்ணியாச்சு... படம் பார்த்துட்டு வந்து சொல்லறேன்.
நம்பிக்கையோடு போறேன்.

Anonymous said...

ஐஸுக்கு வயது ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். விக்ரம் மட்டும் spring chicken ஆ?

இராவணன் said...

ஆஹா...! இட்லி வடைக்கு கோபம் வந்தால்தான், மணிரத்னம் ராமாயணத்த சரியா சொல்லி இருக்கிறார் என்று அர்த்தம். அப்பாடா...! இப்போதான் நிம்மதியா இருக்கிறது. 'மணிரத்னம் நம்ம ஆளு' என்று நினைக்காமல் விமர்சனத்தை நேர்மையாக கொடுத்ததுக்கு மிக்க நன்றி.

Gaana Kabali said...

//ராமரை வில்லனாகக் காண்பிக்க வேண்டும். காண்பித்துவிட்டார்கள்.// இட்லி வடை

//மணிரதானம் போன்ற அறிவுஜிவிகள் தங்கள் மீதே எச்சில் துப்பிக்கொள்வதை பெருமையாக கருதுவார்கள் போல. அதனால்தான் ராமகாவியத்தைக் கூட அவரால் இழிவு செய்யும்விதமாய் எடுக்க முடிந்துள்ளது.//ஜெயக்குமார்

ராமர் வேடத்தில் நடிப்பவன் எல்லாம் ராமபிரான் ஆகிவிட முடியாது.

காவல்துறை அதிகாரியாக நடிப்பவன் எல்லாம் கடவுளாகிவிட முடியாது.

ராமாயணம் என்பது உன்னதமான காவியம் . இது வெறும் சினிமா. இவனோடெல்லாம் ராமபிரானை ஒப்பிட்டு நம் கடவுளை நாமே அசிங்கப் படுத்தக் கூடாது.

உணர்ச்சி வசப்பட்டு எதையாவது இப்படி தயவு செய்து எழுதி விடாதீர்கள்.

அது அவர்கள் செய்யும் தப்பை, நாமும் செய்வது போலாகிவிடும்.

Ashwin-WIN said...

//ராமர் சந்தேகப்பட்டால் சீதை உடனே டிரயின் செயினை பிடித்து இழுத்து ராவணனே மேல் என்று அங்கே சென்றுவிடுகிறாள்//
இது நவீன சீதை. ராமன் சந்தேகப்பட்டவுடன் அந்த சந்தேகத்தை கிளப்பிவிட்டதாய் ராமனால் சொல்லப்பட ராவணனிடம் நீ சொன்னது சரிதானா என போராடுவதற்கே நம்ம சீதை அங்க போறதா மணி சார் காட்டுறார். ஆனாலும் சீதையும் கடைசியா "பக் பக் பக்" என்று ராவணன் பாத்து சொல்லுறது எனக்கெண்டா எதோ சரியாபடல. பேட்டுகோழிதான் அங்க இங்க எண்டு சேவல கண்டவுடன "பக் பக் பக்" எண்டு பம்மும்.
***********************************
இந்த 'ராவணன் ' விமர்சனத்தையும் கொஞ்சம் படிங்க.
http://ashwin-win.blogspot.com/
***********************************

சீதை said...

மணிரத்னம் ஏமாத்திடார்...
தன் கற்பின் மேல் சந்தேகப்பட்ட ப்ரிதிவியை விட, விரல் நகம் கூட படாமல் தன் கற்பைகாத்த ராவணனே மேல் என்று பிருத்விய விட்டுவிட்டு ஒரேயடியாய் விக்ரமுடன் செட்டிலாகி இருந்து இருக்கணும் ஐஸ்... ...இருந்திருந்தால், சீதாவை ஒரு நவீன புரட்சி பெண்ணுரிமை பாத்திரமாய் காட்டியிருக்க முடிந்த நல்ல வாய்ப்பை கோட்டைவிட்டு ஆணாதிக்க குட்டையில் விழுந்து விட்டார் மணிரத்னம். அந்த அளவுக்கெல்லாம் உண்மையை உடைத்து சொல்ல மணிரத்னம் தைரியமானவர் கிடையாது என்பதையும் பிரச்சினைகளில் எப்போதுமே நுனிப்புல் மேய்பவர் என்பதையும் ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால், குரு என்று வரிசையாய் பார்த்து வருகிறோமே...

Anonymous said...

/ராவணனே மேல் என்று அங்கே சென்றுவிடுகிறாள்/ இது என்ன புதுக்கதை?! ஐஸ் சும்மா விளக்கம் கேட்க மட்டும்தான் போவார் ("சொக்கத்தங்கம் - எச்சதங்கம்"). கதை முழுக்க அவர் ராமனுடைய சீதைதான்....
நீங்களே திரியைக் கொளுத்தி விட்டுடுவீங்க போலிருக்கு!!

Anonymous said...

மணிரத்னம் பயங்கரமான ஒரு புத்திசாலியான ஆள். தமிழ்நாட்டில், இராமனுக்கு குறைந்த பக்தர்களும், இராவணனுக்கு அமோக ஆதரவாளர்களும், இராமாயனத்துக்கு அந்த அளவுக்கு மவுசு இல்லாமல் இருப்பதால், தைரியமாக பாத்திரங்களை தம் இஷ்டத்துக்கு தேர்வு செய்தார்...

ஆனால், ஹிந்தியில் அந்த பாச்சா பலிக்காது என்று பயந்து அல்லது நன்கு தெரிந்து, ஆதர்ஸ பாப்புலர் பச்சன் தம்பதிகளை 'ராவண்-சீதா' வேடத்துக்கு போட்டார். அதுமட்டுமா? ஹிந்திகாரர்களுக்கு, யோரோ முகம் அறியாத பரிச்சயமற்ற விக்ரமை-தமிழ்நாட்டு விக்ரமை போட்டார்... அப்படியாவது இந்த ஹீரோ பாத்திரத்திலிருந்து படம்பார்க்கும் ஹிந்திக்காரர்கள் அந்நியப்படட்டுமே என்று..!

ரொம்ப ஆர்வமாய் சில ஹிந்தி படத்தின் விமர்சன்களை படித்தால்... ஒருமாதிரியாக பட்டும்படாமல் ஒரே புலம்பல்ஸ். மறுமொழி போடுபவர்கள் உண்மையை உரக்க கூற யாருக்கு பயப்படுவார்கள்? இந்த 'ராவண ஆதரவு படத்திற்கு' தொண்ணூறு பின்னூட்டம் திட்டித்தான் வந்துள்ளது.

'ராமபிரானா-பச்சன் தம்பதியா' என்ற ஹிந்தி பரிட்சையில்-, கடவுள் ராமபிரான் வேற்றி பெற்றுவிட்டார்... சினிமா'ராவண்' தோற்றுப்போய் விட்டார்.

மனிரத்தினத்தின் இந்த 'பச்சன் தம்பதி' என்ற ஒரே நம்பிக்கை அஸ்திரமும் 'டமால்'.

R.Gopi said...

விமர்சனத்தில் நான் ரசித்த வரிகள்..

//ராவணனின் தங்கையாக வரும் சூர்பனகை (ப்ரியாமணி) குரல் நிஜ சூர்பனகைக்கு டப்பிங்கொடுக்கலாம்//

//பிரிதிவிராஜ் ராமர் வேஷம் போட்டதாலோ என்னவோ மீசை இல்லாத போலீஸ் எஸ்.பி.யாக வருகிறார்//

//கார்த்திக் அனுமான் கதாப்பாதிரத்தில் ஜோக்கராக வருகிறார். சாரி குதிக்கிறார். ஹனுமான் என்ற காரணத்துக்காக ஆரம்பக் காட்சிகளில் தாவித்தாவிக் குதிப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர்.//

//விக்ரம் சில காட்சிகளில் கந்தசாமி+பிதாமகன் மிக்ஸ் சேஷ்டை செய்வது கொஞ்சம் எரிச்சலாக இருக்கிறது. காட்டுவாசிகள் எல்லாம் அப்படி தான் இருப்பார்களோ. யார் கண்டது!!//

இதெல்லாம் விட படத்தின் பெரிய டெர்ரர் சுஹாசினியின் வசனங்களா என்று சொல்லவில்லையே!!

Unknown said...

idlyvadai blogspot is excellent.i am wellinformed on reading this blogspot.reviews of RAVANA are fabulous and hilarious.kudos to the writers....well-done..

Gaana Kabali said...

//பிரிதிவிராஜ் ராமர் வேஷம் போட்டதாலோ என்னவோ மீசை இல்லாத போலீஸ் எஸ்.பி.யாக வருகிறார்//

இதே இந்தி ராவணனில் ராமர் வேஷத்தில் விக்ரம் பெரிய மீசையோடு நடித்திருக்கிறார் என்பதை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதற்கு உங்கள் பதில் என்ன?

விமர்சனம் எழுதுகிறேன் என்று சகட்டு மேனிக்கு எதையாவது எழுதுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்,

kk samy said...

கோயிந்தா.. கோ..யிந்தா..

IdlyVadai said...

//இதே இந்தி ராவணனில் ராமர் வேஷத்தில் விக்ரம் பெரிய மீசையோடு நடித்திருக்கிறார் என்பதை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இதற்கு உங்கள் பதில் என்ன?

விமர்சனம் எழுதுகிறேன் என்று சகட்டு மேனிக்கு எதையாவது எழுதுவதை தவிர்த்தால் நன்றாக இருக்கும்,//

ஏங்க தமிழ் படத்தை பார்த்துவிட்டு எழுதினேன். ஹிந்தி பார்த்திருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன். மேனியை பற்றி எழுதியதால் சகட்டு ‘மேனி’ என்று சொன்னீர்களா ?

Balaji said...

6.5 marku koduthuttu ippadi Pinni eduthiteenga?? enna oru muranbaadu!!!

Anonymous said...

Idlyvadai review is like the reviews from rediff(rajasen) where they first write a bad review about movie just for the sake of getting more clicks and comments. Then they write a completely different review after few days.

I havent seen the movie yet but many of the points in the FIR are childish.

Anonymous said...

kadaisila ippo enna solla vareenga? naangalam padam pakaratha vendama????!!!

Indherjith said...

ஹரன் பிரசன்னா விமர்சனம் படிக்கும் போது அந்த படம் பக்கமே போகவேணாம்னு தோணுது ,உங்களோட விமர்சனம் படிக்கும் போது படம் பார்த்தே ஆவனும்முனு தோணுது.இப்பிடி தலைய பிச்சிக்க வெட்சிடிங்களே நியாயமா.



எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி "படம் பார்க்கலாமா வேண்டாமா" ?!

Indherjith said...

தலைவரே அதெல்லாம் இருக்கட்டும் உங்க கிட்ட ரொம்ப நாளா கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்,தப்ப நெனைக்க மாட்டிங்கன்னு நம்புரேன்.




"ஆமா நீங்க சாத இட்லி-ஆ இல்லலலல........

.

.

.

.

.

.

.

.

குஷ்பூ இட்லி- ஆ..................."

Baaski said...

மணிரத்தினம் போன்ற இயக்குனர் பண்ண வேண்டிய படம் அல்ல. மற்ற படி கேமரா அருமை. கதை??? வசனம்???

We can feel the absence of Sujatha... the great dialogue writer.

King said...

பயாஸ்கோப் பலராமன்
பையா 4.5/10
அங்காடி தெரு 6/10
ஈரம் 6/10
3 இடியட்ஸ் /10
திரு திரு துறு துறு 5.5/10
Avatar 7/10
The Escapist 5.5/10
The Kingdom 6.0/10
வேட்டைக்காரன் 4.5/10
கண்டேன் காதலை (3.5/10)

Anonymous said...

மற்ற அரைவேக்காட்டு பதிவர்களை போல மொத்தமாக போட்டு தள்ளாமல். பாராட்ட வேண்டியவைகளை பாராட்டி குறைகளை நாசூக்காக சொல்லி . அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் மிக்க நன்றி.

Gaana Kabali said...

//மேனியை பற்றி எழுதியதால் சகட்டு ‘மேனி’ என்று சொன்னீர்களா ?//

இந்த நகைச்சுவையை மிகவும் ரசித்தேன். இந்த நகைச்சுவை உணர்வைத் தான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

jai said...

one of the worst movie by mani sir,,, no logic nothing its a 2hours of Headache ,,,Ravana nu peru vekkama,,, padam edhuthu irundhal ,,,might be konjam wrk out ayirukum

Umesh said...

nice review !

Read mine here!
Expecting ur feedback!

Raavanan-Ten heads but no brain!

http://theumeshblog.blogspot.com/2010/06/raavanan.html

Anonymous said...

//சில காட்சிகளில் ஐஸ்ஸின் தலை மயிர் காற்றில் ஆடுவது கூட ஏதோ படத்தில் பார்த்த மாதிரி இருக்கே என்று சொல்ல வைக்கிறது//

இது ஒரு விமர்சனம். இதுக்கு இவ்வளவு பாரட்டா??

மொக்க‌த்த‌ன‌மா எழுதாம‌ கொஞ்ச‌ம் விம‌ர்சிக்கும் திற‌னை வ‌ள‌ர்த்துக்குங்க‌...

Anonymous said...

i am confused after reading your review... r u reviewing the movie or wanting to show your intelligence(??)..

Srividhya R said...

what you are trying to say?