உலக சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.
போட்டியின் ஒரு பாதி முடிந்துள்ள நிலையில் ஆனந்த் 3.5-2.5 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
ஐந்தாவது ஆட்டத்தில் டொபலோவ் வெள்ளைக் காய்களுடன் விளையாடினார். மூன்றாவது ஆட்டத்தைப் போலவே Slav Defence-யே ஐந்தாவது ஆட்டத்தின் Opening-ஆக தேர்வு செய்தார் ஆனந்த். மூன்றாவது ஆட்டத்தின் முடிவில், “ஒரு கட்டத்தில் வெள்ளைக் காய்கள் நல்ல நிலையில் இருந்தன, அதன் பின் சில நகர்த்தல்கள் துல்லியமாக அமையாததால், கருப்புக் காய்கள் சமநிலையை அடைந்துவிட்டன.”, என்றார். டொபலோவ் கிடைத்த ஓய்வு நாளில் விட்டதைப் பிடிக்கும் நகர்த்தலகளைக் கண்டுபிடித்திருப்பாரா என்ற எதிர்பார்ப்பு மேலெழுந்தது. ஆட்டத்தின் முதல் 14 நகர்த்தல்கள் மூன்றாவது ஆட்டத்தின் நகர்த்தல்களாகவே அமைந்தன.
15-ஆவது நகர்த்தலில் ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலிருந்து மாறுபட்டார். இந்த மேட்சிலும் சரி, கிராம்னிக்குக்கு எதிராக விளையாடிய மேட்சிலும் சரி, பெரும்பான்மையான ஆட்டங்களில் புதிய நகர்த்தலை ஆனந்தே முதலில் நகர்த்தியுள்ளார். அதன் மூலம், எதிராளியின் Preparation-க்குள் தான் சிக்காமல், எதிராளியை தனக்குப் பரிச்சியமான சூழலுக்குள் இழுத்துவிடுகிறார். இதுவே இவரது வெற்றியின் முக்கிய காரணங்களுள் ஒன்று.
17-ஆவது நகர்த்தலின் போது அரங்கில் மின்வெட்டு (அங்குமா?). ஆட்டம் தொடருமா? இது டேனைலோவின் சதியா? இருட்டிலும் ஆனந்தின் clock ஓடிக் கொண்டிருக்குமா?, என்ற கேள்விகள் இணையம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருந்தன. ஆர்பிடர் வந்து ஆனந்தின் clock-ஐ நிறுத்தி வைத்திருந்தார். மின்சாரம் மீண்டதும் ஆட்டம் தொடர்ந்தது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்ததால் இதைப் பற்றி இரு ஆட்டக்காரர்களும் கண்டுகொள்ளவில்லை. யாரேனும் ஒருவருக்கு வெற்றி என்ற நிலை ஏற்பட்டிருப்பின், இந்த மின்வெட்டை இவ்வளவு சுளுவாக ஏற்றுக் கொண்டிருப்பரா என்பது சந்தேகமே. ஆட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் இந்தத் தடைக்கு மன்னிப்பு கோரி, இனிமேல் நடக்காதிருக்க ஆவன செய்துவிட்டதாகவும் உறுதியளித்துள்ளனர்.
மின்வெட்டின் போது, "Nice tactic. Would be even more effective against a computer", என்றார் மிக் கிரீன்கார்ட்
ஆட்டத்தின் 22-வது நகர்த்தலில் தனது f-pawn-ஐ ஆனந்த் f6 என்ற கட்டத்துக்கு நகர்த்தினார். ஆட்டத்தை நேரிடையாக ஆராய்ந்த பல கிராண்ட்மாஸ்டர்கள் இந்த நகர்த்தலை வெகுவாக சிலாகித்தனர். இந்த நகர்த்தலைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்றும் கூறினர். இந்த நகர்த்தல் மூலம் தனது பிஷப் நகர வழி செய்து கொண்டார் ஆனந்த் என்பது புரிந்தாலும், இது ஏன் அவ்வளவு கஷ்டமான நகர்த்தல் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. (ஓநாயா இருந்தாத்தான் அதோட நியாயம் புரியும் என்பது போல, கிராண்ட்மாஸ்டராக இருந்தால்தான் அந்தக் கஷ்டம் புரியும் என்று நினைக்கிறேன்.) அடுத்த சில நகர்த்தல்களிலேயே, டொபலோவ் ஏதேனும் தவறு செய்தாலன்றி ஆட்டத்தில் ஒருவர் வெற்றி பெறுவது நடக்காது, என்ற நிலை ஏற்பட்டது.
டொபலோவ் டிரா செய்ய மறுப்பதால், செஸ் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆட்டமும் End Game பாடங்களாக அமைகின்றன. 23-ஆவது ஆட்டத்திலேயே டிரா என்று தேர்ந்தவர்களுக்கு வேண்டுமானாலும் தெரியலாம். அதிக பயிற்சி இல்லாதவர்களுக்கு இந்த ஆட்டங்கள் சிறந்த பாடங்கள். அதற்காகவே டொபலோவுக்கு நன்றி சொல்லலாம். டொபலோவின் பிடிவாதத்தால், ஆட்டம் 41-ஆவது நகர்த்தல் வரை தொடர்ந்து repetition மூலம் டிராவில் முடிந்தது. ஆனந்த், ஆட்டம் முழுவது எவ்வித சிக்கலிலும் மாட்டிக் கொள்ளாமல், சுலபமாக டிராவைப் பெற்றார்.
அடுத்த நாள் நடந்த ஆறாவது ஆட்டத்தில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அதற்கு முன் ஆனந்த் வெள்ளைக் காய்களுடன் ஆடியிருந்த இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தார். இரண்டிலுமே catalan opening-ஐ தேர்வு செய்திருந்தார்.
ஆனந்த் மூன்றாவது ஆட்டத்திலும் அதே ஓபனிங்கை தேர்வு செய்வாரா? உலகின் தலை சிறந்த ஆட்டக்காரர்களுள் ஒருவரை ஒரே விதமாய் விளையாடி மூன்று முறை வெல்ல முடியுமா? Catalan-ஐ விளையாட டொபலோவும் அனுமதிக்க வேண்டுமே? டொபலொவ் தோற்ற இரண்டு ஆட்டங்களைப் பார்க்கின், அவர் தோற்றது ஓபனிங்கால் அல்ல என்பது தெளிவாகும். Middle Game-ல் செய்த தவறால்தான் இரண்டு ஆட்டங்களிலும் தோல்வியுற்றார். இருப்பினும், இரு முறை சூடு பட்ட பின்னும் அதே ஓபனிங்கை விளையாட டொபலோவ் அனுமதிப்பாரா?
இப்படிப் பல கேள்விகள்.
ஆட்டம் தொடங்கிய போது, மீண்டும் ஒரு முறை Catalan-ஏ அரங்கேறியது.
இந்த ஆட்டத்திலும் ஆனந்தே முதலில் Novelty-ஐ அறிமுகப்படுத்தினார். முதல் இருபது நகர்த்தல்களுக்குப் பின் ஆனந்திடம் இரு குதிரைகளும், டொபலோவிடம் இரு பிஷப்களும் இருந்தன. End Game-ல் இரண்டு பிஷப்களும் இருப்பதென்பது சாதகமான விஷயம் என்ற போதும், டொபலோவின் காய்கள் ஒருங்கிணைப்புடன் அமையவில்லை. 22-ஆவது நகர்த்தலில் தொடங்கி 34-ஆவது நகர்த்தல் வரை ஆனந்த் தனது குதிரைகளையே மீண்டும் மீண்டும் நகர்த்தி, டொபலோவின் காய்கள் போதிய அளவு coordination-ஐப் பெற முடியாத படி பார்த்துக் கொண்டார். இறுதியில் தன் குதிரையைக் கொடுத்து டொபலோவின் கருப்பு பிஷப்பை வென்றார். ஆனந்தின் doubled rooks (அதாவது ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் யானைகள்), c-file-ஐ வியாபித்திருந்த போதும், ஆனந்தின் King Pawn (அதாவது e-file-ல் இருக்கும் pawn), எப்போது வேண்டுமானால் வீழ்ந்து ஆனந்தின் ராஜாவை expose செய்யும் அபாயமும் இருந்து வந்தது. இரு ஆட்டக்காரர்களும் தங்கள் நிலையை பலப்படுத்த கடுமையாக முயன்றனர். இறுதியில், 58-ஆவது நகர்த்தலுக்குப் பின் ஆட்டம் டிராவில் முடிந்தது. இம் முறையும் டொபலோவ் ஆர்பிடரை அழைத்து வந்தார்.
“எதிராளியுடன் பேச மாட்டேன். எதுவாகினும் ஆர்பிடர் மூலமாகவே தெரியப்படுத்துவேன்”, என்று டொபலோவ் பிடிவாதமாக இருப்பது சின்னப்புள்ளத்தனமாக இருக்கிறது.
போட்டியில் முதல் முறையாக, டொபலோவ் சற்றே நிறைவுடன் ஓய்வு நாளுக்குள் செல்வார்.
போட்டி தொடங்கு முன்னரே ஆனந்தின் வயதும் இப்போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் என்று பலர் கருதினர். அதிலும், டொபலோவ் ஒவ்வொரு ஆட்டத்தையும் கடைசி வரை கொண்டு செல்கிறார். ஆனந்தின் வயது அவரை தளர்த்தக் கூடும் எனில், டொபலோவின் இந்த யுக்தி அவருக்கு சாதகமாய் அமையக் கூடும். முதல் ஆறு போட்டிகளில், ஆனந்த் தளராமல் ஈடுகொடுத்து வருகிறார். அடுத்த பாதியிலும் ஆனந்தின் துல்லியம் தொடருமா என்பதும் முக்கியமான கேள்வி.
ஏழாவது ஆட்டம் மிக முக்கியமான ஒன்று. அதில் ஆனந்துக்கு வெள்ளைக் காய்கள். அந்த ஆட்டத்தை அவர் ஜெயிப்பின், கிட்டத்தட்ட போட்டியை வென்ற மாதிரிதான். ஆனால், டொபலோவ் டிராவைப் பெற்றால் கூட அவருக்கு அது நல்ல முடிவுதான். ஏனெனில், எஞ்சியுள்ள ஐந்து ஆட்டங்களில் அவருக்கு மூன்று ஆட்டங்கள் வெள்ளைக் காய்களுடன் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்றை ஜெயித்து சமன் செய்தால் கூட momentum அவர் பக்கம் திரும்பிவிடும். சில ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், ஆனந்தால் விட்டதைத் திரும்பிப் பெற முடியுமா என்பது பெரும் கேள்விக் குறி.
ஆனந்தின் நிலை தர்ம சங்கடானது.
பொதுவாக போட்டியில் ஒரு புள்ளி லீட் என்பது almost non-existent lead-தான். எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போய்விடும்.
லீட் இருக்கிறதே என்று தற்காத்து ஆடவும் முடியாது, இருக்கின்ற லீடை விட்டுவிடாமல் இருக்க வேண்டும் என்பதால் அதிரடியாகவும் ஆட முடியாது. கிட்டத்தட்ட இரண்டுங்கெட்டான் நிலை.
டொபலோவுக்கு அதிரடியாய் ஆடுவதற்கான Motivation நிறையவே உள்ளது. ஆக்ரோஷமாய் களமிறங்குவார். இம் முறையில் வெற்றியும் பெறக் கூடும் என்ற போதும், அதீதமாய் தன் அதிரடியைக் காட்டி, தன்னையே மாய்த்துக் கொள்ளும் அபாயமும் இருக்கிறது.
இதெல்லாம் நமக்கே புரியும் போது, பழம் தின்று கொட்டைப் போட்ட ஆனந்துக்கா தெரியாமல் இருக்கும்? வெற்றிகள், தோல்விகள் இரண்டையுமே கணிசமான அளவு பார்த்தவர் ஆனந்த். இது போன்ற தர்ம சங்கடங்களை எப்படி அணுக வேண்டும் என்று அவரை விட வேறு யாருக்குத் தெரிந்திருக்க முடியும்?
Game 6 படங்கள்: http://photo.chessdom.com/thumbnails.php?album=248&page=5
- லலிதா ராம்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 03, 2010
ஆனந்த் டொப்டலோவ் - Game 5 & 6
Posted by IdlyVadai at 5/03/2010 12:30:00 PM
Labels: லலிதா ராம், விமர்சனம், விருந்தினர், விளையாட்டு
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
All the best. நான் இட்லி வடை இதற்காகவே தினமும் படிக்க துண்டுகிறது உங்கள் பதிவு. தமிழில் படிப்பது மிக சுவாரசியமாக உள்ளது. Such a unique field to get updated. Please continue.
Good to see the use of our National flag as backdrop!
http://mahapolice.gov.in/mahapolice/jsp/temp/html/flag_code_of_india.pdf
victor
FYI - The 13 consecutive knight moves by Anand is the highest ever in a world championship game
அட்டகாசமான விவரணை ராம். ஆறாவது ஆட்டம் நான் live ஆகப் பார்த்துக் கொண்டிருந்தேன். உங்கள் "doubled rooks (அதாவது ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும் யானைகள்), c-file-ஐ வியாபித்திருந்த போதும், " என்ற விவரிப்பில் 'வியாபித்திருந்த' என்ற பதம் அபாரம். அந்த விளையாட்டை, அதுவும் live ஆகப் பார்த்திருந்தால் இந்த பிரயோகம் எல்லோருக்கும் புலப்படும். Kudos!
மற்றபடி எனக்கும் ஏழாவது ஆட்டம் ரொம்ப முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வேளை நாம் எல்லோரும் ஆனந்த் கோணத்திலேயே சிந்தித்து அளவுக்கு அதிகமாக கவலைப் படுகிறோமோ என்று தோன்றுகிறது :)
"ஓநாயாக இருத்தாத்தான்...' - நீங்கள் செஸ் தாண்டியும் நிறைய ஹாஸ்யக் கட்டுரைகள் எழுதலாம் ராம். முன்பெல்லாம் விம்பிள்டன் போட்டியின் சுவாரஸ்யத்துடன் அடுத்த நாள் ஹிந்துவில் நிர்மல் சேகர் எழுதுவதைப் படிக்கவும் ஒரு பொதுக்கூட்டம் காப்பியுடன் காத்து நிற்கும். உங்கள் செஸ் பற்றிய இடுகைகள் கிட்டத்தட்ட அந்த எதிர்பார்ப்பைத் தருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.
எதுக்கும் இ.வ.க்கும் ஒரு நன்றி சொல்லிக்குறேம்பா.
அனுஜன்யா
I am checking idly vadai regularly for getting info about Chess Championship. Its really interesting to read about the game in Tamil.
Nice narration by Lalitha Ram.
All the Best to Anand.
அன்புள்ள ராம், தொடக்கத்தில் மிகவும் அசுவாரசியமாகத்தான் இப்பகுதியைப் படிக்கத் தொடங்கினேன். செஸ் குறித்து விவரிக்க என்ன இருக்கிறது என்றே நினைத்தேன். ஆனால் நீ வென்றுவிட்டாய். என்னைப்போன்ற இண்டெஃபனெட் மூட் ஆசாமியைக் கூட அடுத்த கட்டுரைக்காகக் காத்திருக்கும்படி செய்திருக்கிறது இப்பகுதி. வாழ்த்துகள். உன்னுடைய இசை விமரிசனக் கட்டுரைகளையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறது இது. தமிழில் இது ஒரு முதல் என்று நினைக்கிறேன். மீண்டும் வாழ்த்து.
எனக்கு அனுஜன்யா அளவுக்கு அழகாக எழுதத் தெரியாது என்பதால்,
ஒரு ரிப்பீட்டு போட்டுக்கறேன்.
Kudos to Lalitha Ram and IV for bringing out an interesting review on Chess World Championship.
The way u have described Was simply awesome,,,,
பகிர்வுக்கு நன்றிங்க.
இட்லிவடைக்கு ஒரு பெரிய நன்றி!!
அருமையான பதிவு. செஸ் போட்டிகளை பற்றி இவ்வுளவு அழகா தமிழில் படிப்பது ரெம்ப சந்தோசமா இருக்கு..
நாம எல்லாரும் ஆனந்த் ஜெயிக்கணும்னு ரெம்ப யோசிக்றோம்னு தோணுது..
தலைவருக்கு ஜெய்க்க தெரியும். தைரியமா இருங்க...
வெற்றி நமதே..
கேம் 7 ஆட்டம் draw செய்யப்பட்டுள்ளது......இன்றைக்கு இரவு கேம் 8 விளையாடுகிறார்கள்......ஆட்டம் விறுவிறுப்பாக செல்கிறது...
exciting and thrilling....
thank you....
I want anand to win championship and give exclusive interview to idly vadai .....
Post a Comment