படம் ஆரம்பித்தவுடன் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்று தடபுடலாக ஆரம்பித்தவுடன். வேட்டைக்காரன், சுறா எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போனது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் சூர்யாவின் 25 படம் என்று போட்டார்கள். கடவுளை வேண்டிக்கொண்டு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.
”சென்னை” என்று காண்பித்துவிட்டு நல்ல வேளை கண்ணகி சிலையும், சென்டரல் ஸ்டேஷனும் காண்பிக்கவில்லை. அதற்காக இயக்குனருக்கு சபாஷ்.
வில்லன் பிரகாஷ்ராஜ் அதே கெட்டப், அதே மேனரிஸம், அதே குங்குமப் பொட்டு. கூட பங் தலையும், ஒத்த டோலாக்கு போட்ட அடியாட்கள். சென்னையை அறிமுகம் செய்து வைக்க சென்டரல் ஸ்டேஷன் பயன் படுத்தாமல் வில்லனை அறிமுகம் செய்து இவை எல்லாம் உபயோகப்படுத்திவிட்டார்.
ஊரில் இருக்கும் தாதாக்கள் எல்லாம் இவர் கட்டுப்பாட்டில் தான் என்று காண்பிக்க முதல் சீன், கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு தாதாவை போட்டு தள்ளி தான் ரொம்ப முரட்டு குணம் படைத்தவன் என்று நமக்கு சொல்ல முதல் சீன். பல சினிமாவில் நாம் பார்த்து பழகிப் போன டாட்டா சூமோ வில்லன் படம் என்று டைரக்டர் நமக்கு முதல் சீனிலேயே உணர வைக்கிறார்.
நல்லூரில் ஆரம்பிக்கிற கதை. நல்லூர் என்று தூத்துக்குடியில் இருக்கும் ஒரு பசுமையான கிராமம். வீடுகள், மரங்கள், விவசாயம், ஆடு, மாடுகள், பெரிய ஓட்டை போட்ட காதுகளை உடைய கிழவிகள் என்று எதையும் காண்பிக்காமல் ஒரு வீடு, ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று காண்பித்த இயக்குனருக்கு அடுத்த சபாஷ்.சூர்யா - அந்த ஓட்டு வீடு போலீஸ் ஸ்டேஷனில் தான் ‘பாரத் சிமிண்ட்ஸ்’ விளம்பரத்தில் தேவர் மகன் மீசையுடன் வரும் அதே சூர்யா எஸ்.ஐயாக வேலை பார்க்கிறார். கோயில் உண்டியலைத் திருடிக்கொண்டு போகும் சில்லரைத் திருடர்களை ஏதோ பெரிய ரவுடி கும்பல் போல துரத்தி துரத்தி துவம்ஸம் செய்கிறார். பெரிய ஹீரோ என்று எப்படி காண்பிக்க வேண்டாமா ? சரி கடைசியில் இதே மாதிரி காட்சிகள் பிரகாஷ் ராஜுடன் இருக்க போகிறது என்று நமக்கு தெரிந்தாலும், நம்மை உட்கார வைத்திருப்பது திரைக்கதையும் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்.
விவேக் - சூர்யா இருக்கும் அதே ஸ்டேஷனில் ஒரு கண்ணைச் சிமிட்டிக்கொண்டு அசட்டு ஜோக் அடித்துக்கொண்டு ஏட்டாக இருக்கிறார். சிவாஜி படத்தில் ரஜினிக்கு பின்னாடி வருகிறார், இங்கே சூர்யாவிற்கு பின்னாடி. “எரிமலை எப்படிப் பொறுக்கும்?” என்ற பொங்கி எழுந்து ஜட்டிக்குள் இருக்கும் பல்பையும், பின்னாடி இருக்கும் எதையோ ஒன்றையும் அடிக்கடி ஃபூஸ் செய்துக்கொள்கிறார். நடிகர் சிவாஜி போல இதுலயும் இமிடேட் செய்தாலும் இந்த முறை சிரிப்பு வரவில்லை. சிவாஜி போலவே அவருக்கு வயசானது காரணமாக இருக்கலாம். இல்லை, பத்மஸ்ரீ வாங்கியதால் வயசாகிவிட்டதா என்று தெரியலை. பெட்டர் லக் நெக்ஸ் டைம்.
அனுஷ்கா - வழக்கமாக தமிழ் சினிமாவில் வரும் சுட்டி ஹீரோயின். இந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெண் இருந்தால் நிச்சயம் அடிவாங்குவார். ஆனால் சினிமாவில் இவர் ஹீரோவை லவ் செய்ய வேண்டும், அல்லது ஹீரோ இவளை லைவ் செய்ய வேண்டும். தேவர் மகன் மீசை வைத்திருந்தாலும், சூர்யாவிற்கு இவர் அக்காவாகத் தெரிகிறார். சன் பிக்சர்ஸுக்கு ஒரு படத்தில் நடித்தால் அடுத்த படம் ஃபிரியா நடித்துக்கொடுக்க வேண்டும் என்று ஏதாவது காண்டரக்ட் இருக்கிறதா என்று தெரியவில்லை. அம்மணி ‘தாராளமா’கவே நடித்து கொடுத்திருக்கிறார். ஒரே ஆச்சரியம் இவர் வரும் சில காட்சிகள் கதை ஓட்டத்துக்கு ஒத்து போகிறது.
வசனம் : பஞ்சை நூலாக்கி, நூலை பெட்ஷீட்டாக்கிவிட்டார். பஞ்ச் மிஸ்ஸிங். இருந்தாலும் சில இடங்களில் நன்றாகவே இருக்கிறது. மசாலாப் படத்துக்கு ஏற்ற வசனங்கள்.
பாடல்கள்: சன் டிவியில் விளம்பரத்தில் வரும் பாடல்கள் மாதிரியே படத்திலும் வருகிறது. சரியான நேரத்துக்கு பாடல்கள் வருவதால் பிழைத்தது. அனுக்ஷா அப்பா கல்யாணத்துக்கு சம்மதித்தவுடன் ”பாட்டை போடுயா சீக்கிரம்” என்று பின் சீட்டிலிருந்து ஒருவர் கத்தினார். தமிழர்களுக்கு தான் எத்தனை ஐ.க்யூ ! கடைசி பாடல் நீல நிறத்தில் வேட்டைக்காரன் செட்டை நினைவு படுத்துகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களை பிழைத்துக் கொண்டார். பின்னனி இசை சிங்கம் போல உறுமுகிறது.
ஒளிப்பதிவு: மற்ற ஒளிப்பதிவாளர்களை போல தானும் சிலவற்றை செய்து பார்க்கலாம் என்று சில காட்சிகளில் முயன்று இருக்கிறார். பாடல் காட்சிகளில் பரவாயில்லை.திரைக்கதை: இடைவேளியின் போதே க்ளைமேக்ஸ் ஆரம்பித்துவிடுகிறது ஒரு பிளஸ். பிரகாஷ் ராஜ் காய்களை நகர்த்த அதே காய்களை கொண்டு இவர் வில்லனுக்கு ஆப்பு வைக்க பல படங்களில் பார்த்தது தான் என்றாலும் போர் அடிக்காமல் போகிறது. தூத்துக்குடியிலிருந்து சென்னை வரும் சூர்யா சென்னை போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழையும் போது அங்கே காணும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. இப்படி பல காட்சிகள் இருப்பதால் படம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கிறது. ஹரி எந்த சாமியை வேண்டிக்கொண்டு படம் எடுத்தார் என்று தெரியவில்லை ஆனால் பல காட்சிகளில் ‘சாமி’ பாதிப்பு இருக்கிறது.
மற்றவை: மனோரமா, நாசர், ராதாரவி, யுவராணி, போஸ், தியாகு என்று நமக்கு தெரிந்தவர்களையும், அருவாள், கப்படா, பைக், கார், ஹெலிகாப்டர், ரயில், கப்பல்னு மசாலா படத்துக்கு தேவையானவற்றை உபயோகப்படுத்தி கதையை நல்லூரில் ஆரம்பித்து நெல்லூரில் முடித்துவிட்டார் ஹரி.
சிங்கம்: ‘புலி’த்த மாவு தோசை
இட்லிவடை மார்க் : 5.5/10
பிகு: ஹரிக்கு ‘சிங்கம்’ பத்தாவது படமாக வெளிவருகிறது. அடுத்த படமும் இதே மாதிரி எடுத்தால் பத்தோடு பதினொன்று என்று சொல்லிவிடுவார்கள் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, May 28, 2010
சிங்கம் - FIR
Posted by IdlyVadai at 5/28/2010 03:05:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
40 Comments:
One of the worst movie in 2010 is Singam.
// அனுக்ஷா அப்பா கல்யாணத்துக்கு சம்மத்தவுடன் ”பாட்டை போடுயா சீக்கிரம்” என்று பின் சீட்டிலிருந்து ஒருவர் கத்தினார். தமிழர்களுக்கு தான் எத்தனை ஐ.க்யூ ! //
:P superb!
I'm the first
indha padathukkellam ivlo seekiram vimarsanam poda vendiya avasiyam illai. Vera soliya paathirukkalaam.
சிங்கம் படம் பார்த்தேன் .பத்ரி அவர்கள் இட்லிவடையில் நல்ல படம் என்று விமர்சனம் செய்த "கனகவேல் காக்க " படத்தைவிட பத்து மடங்கு மேல் . "சுறா" படத்தை விட நூறு மடங்கு மேல். மசாலாவை எதிர்பார்த்துச் செல்பவர்களுக்கு ஏமாற்றமில்லை.
இதிலெல்லாமா நேரத்தை வீண்பண்ணுவது??? பாவம்ங்க நீங்க!:P
விமரிசனம் நல்லா இருக்கு, நன்றி. ஒரு சிங்கத்துக்கு மட்டும் இப்படி மாய்ந்து மாய்ந்து விமரிசனம் எழுதியிருக்கீங்க, இரும்புக் கோட்டை முரட்டுச் சிங்கம் படம் பற்றி ஏன் ஒன்றும் எழுதவில்லை?
singam kalam irankiduchu
singam kalam irankiduchu
பசிச்சாலும் சிங்கம் இட்லி வடை சாப்டாதுன்னு தெரியும்... ஆனா இட்லி வடை இங்க சிங்கத்த தூக்கி சாப்டுடிச்சு...
singam cheewingum
வரலாற்றுல, அதாங்க உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக இடம் பிடிச்ச பின்னால பார்த்துக்கலாமா இல்ல இப்பொவே குடும்பத்த கூட்டிகிட்டு போயி தியேட்டர்ல பார்த்துக்கலாமா ?
இதுக்கு கண்டிப்பா "அது உங்க இஷ்ட்டம்"னு சொல்லி புலி மாதிரி பதுங்கிடாதீங்க. சிங்கம் கணக்கா சொல்லுங்க.
//தூத்துக்குடியில் இவ்வளவு அழகான அக்கா இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்//
Too much. Chennai is not the only place in Tamil Nadu.
//இதே மாதிரி காட்சிகள் பிரகாஷ் ராஜுடன் இருக்க போகிறது என்று நமக்கு தெரிந்தாலும், நம்மை உட்கார வைத்திருப்பது திரைக்கதையும் பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்.//
"பணம் கொடுத்து வாங்கிய டிக்கெட்டும்." HA.. Ha.. HAAA..
கலைப்புலி தானு எவ்வளவு செலவு செய்து எடுத்தாலும் அந்தப் படம் ஊத்திக்கும் அது போல இவர்களுக் லாஸ் காட்டுவதற்கென்றே சொல்லி சொல்லி எடுப்பார்களோ என்னவோ.
கிழக்குல டூட்டி நேரத்துல இவ்ளோ ப்ரியா சினிமாவுக்கெல்லாம் விடுவாங்களா..?
தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே டிரை செஞ்சிருப்பனே..!!!
//கிழக்குல டூட்டி நேரத்துல இவ்ளோ ப்ரியா சினிமாவுக்கெல்லாம் விடுவாங்களா..?
தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே டிரை செஞ்சிருப்பனே..!!!//
நான் இன்னிக்கு லீவு. கிழக்குல யாரை வேண்டும் என்றாலும் கேட்டுப்பாருங்க.
[[[IdlyVadai said...
//கிழக்குல டூட்டி நேரத்துல இவ்ளோ ப்ரியா சினிமாவுக்கெல்லாம் விடுவாங்களா..?
தெரிஞ்சிருந்தா நான் முன்னாடியே டிரை செஞ்சிருப்பனே..!!!//
நான் இன்னிக்கு லீவு. கிழக்குல யாரை வேண்டும் என்றாலும் கேட்டுப்பாருங்க.]]]
ஓ.. அப்படீன்னா ஒரு தமிழ்ச் சினிமாவைப் பார்க்க சம்பளத்தோட லீவே கொடுக்குறாங்களா கிழக்குல..!?
எனக்குத் தெரியாமப் போச்சே..?
//ஓ.. அப்படீன்னா ஒரு தமிழ்ச் சினிமாவைப் பார்க்க சம்பளத்தோட லீவே கொடுக்குறாங்களா கிழக்குல..!?//
ஏங்க எனக்கு ஜுரம் வராதா ?
[[[IdlyVadai said...
//ஓ.. அப்படீன்னா ஒரு தமிழ்ச் சினிமாவைப் பார்க்க சம்பளத்தோட லீவே கொடுக்குறாங்களா கிழக்குல..!?//
ஏங்க எனக்கு ஜுரம் வராதா?]]]
ஜூரம் வந்தா ரெண்டு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சிட்டு குப்புறப் படுத்துத் தூங்காம.. இதென்ன கெட்டப் பழக்கம்? இந்தக் காய்ச்சல்லேயும் அனுஷ்காவை பார்க்கப் போறது..?
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
[[[IdlyVadai said...
//ஓ.. அப்படீன்னா ஒரு தமிழ்ச் சினிமாவைப் பார்க்க சம்பளத்தோட லீவே கொடுக்குறாங்களா கிழக்குல..!?//
ஏங்க எனக்கு ஜுரம் வராதா?]]]
ஜூரம் வந்தா ரெண்டு குவார்ட்டரை வாங்கி ராவா அடிச்சிட்டு குப்புறப் படுத்துத் தூங்காம.. இதென்ன கெட்டப் பழக்கம்? இந்தக் காய்ச்சல்லேயும் அனுஷ்காவை பார்க்கப் போறது..?
//
ஒரு வேளை அனுஷ்காவைப் பார்த்ததால் தான் காய்ச்சலோ?
இட்லிவடை பொய் சொல்லுது. அதுக்கு மெட்ராஸ் ஐ. அதுனால இன்னிக்கு லீவு. லீவுல சும்மா இருக்க வேணாமேன்னு அனுஷ்கா பாக்கப் போயிடுச்சு.
கிழக்கே போயி யாரக் கேட்டாலும் சொல்லுவாங்க. விசாரிச்சுப் பாருங்க.
//ஏங்க எனக்கு ஜுரம் வராதா ?//
காக்க காக்க "கனகவேல் காக்க"
நோக்க நோக்க "இட்லிவடைய நோக்க"
How unfortunate for Surya for Singam being in 25th movie. I walked of during the interval. All I could see what bits and pieces of Hari's old movies. Nothing new in the movie.
Appa idly vadai Gajaka Dosta
Kamesh
Botswana
Eppa surya fan eh maarineenga idlyvadai??? Ithe Mass formula vijay follow panraar.. avara vittu kaichittinga sura la!!!
Enna than singam sura va kattilum better nalum 1st day Vimarsanam remba avasiyama intha padathukku???
//கதையை நல்லூரில் ஆரம்பித்து நெல்லூரில் முடித்துவிட்டார் ஹரி// nice punch idly vadai sir!...;)
Hey the review seems like the one that comes in kumudham, ananda vikadan...I mean to say u have excellent movie review skills da. Don mistake my words here.Surya=The next Vijay. Well Surya will be lost if he continues to act in stupid stories. The trailer was itself a clear indication to everyone not to come to the theatre and risk watching this crap. Hats off to your strength da....
//கூட பங் தலையும், ஒத்த டோலாக்கு போட்ட அடியாட்கள். //
எவ்ளோ பெரிய..... காது!
//தூத்துக்குடியில் இவ்வளவு அழகான அக்கா இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்//
This is not in good taste. you mean to say there are no good- looking girls in Thoothukudi area?Too generalised, trivial and shows the mentality of Chennaites towards other regions of the state.I am from the Thoothukudi district and i didn't expect it from you!
சென்னை தான் வாழ்கையா..?
மதுரைக்கு அப்பால் பிறந்து, வளர்ந்து, படித்து வந்தவனை,
இந்த சென்னை செலவாளி ஆக்கி பாடாய் படுத்துகிறது...
சுருக்கமா சொல்றேன்:
டைபாய்ட் காய்ச்சலுக்கு இங்க பெட்ல சேர்ந்து 3000 ரூபாய் தண்டம்..
அப்புறம் மற்றுமொரு முறை, எங்க ஊர்ல டாக்டர்ட பெட்ல சேர்ந்து 1200 ரூபாய் தான்..
என்று தணியும் இந்த அடிமையின் மோகம்..??
I thought the Lane Yard Color for an Inspector is kakhi and for AC is blue...!!
எல்லோரும் சேர்ந்து சூர்யாவின் பாதையை மாற்றுகிறார்கள்.. சுதாரித்துக் கொள்ள வேண்டும்... இல்லையேல் நஷ்ட ஈடு கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் போராடும் நிலை அவருக்கும் வரலாம்..
ஒரு நல்ல நடிகனை நாறடித்துப் பார்த்ததில் ஹரிக்கு ஒரு ஆத்ம திருப்தி.. கலாநிதி மாறனுக்கு இப்படிச் செய்ய வில்லை என்றால் தூக்கமே வராது..
என்ன கொடும சார்..
நன்றி..
nalla thaanae irukku 'singam' pisture///ithu sooriyavin aduttha ayan \\\\
//தூத்துக்குடியில் இவ்வளவு அழகான அக்கா இருக்கிறார்கள் என்று தூத்துக்குடி மக்களே ஒத்துக்கொள்ள மாட்டார்கள்//
please remove this comment ... it is not good to tell about a area girl... and it is not written in right sprirt.....
What is this boss...?
All the pictures bought/released by Sun Pictures were utter flop...!
I'm afraid about Super *'s Endiran!
Let's hope it rocks!!
ஜட்டியில் இருந்து பல்ப் எடுக்கத்தான் பத்மஸ்ரீ பட்டமா?
நாட்டையும் நம்மையும் கேவலப் படுத்துகிறார்கள்.
- சனீஸ்வரன்
ஆக மொத்தத்துல சிங்கம் = அசிங்கம் ன்னு சொல்லுறீங்க??
சமீப நாட்களைச் சுழலும் குறுஞ்செய்தி:
சூர்யா: ஓங்கி அடிச்ச ஒன்டர டன் வெய்ட்டுடா!
பின்னாலிருந்து அனுஷ்கா: ஸ்லிப்பர் போடாமையே, ஒன்ன விட ஹைட்டுடா!!
Post a Comment