பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 28, 2010

வெள்ளி வழக்காடு

தி.மு.கவில் குஷ்பூ :

நடிகை குஷ்பூ திமுகவில் இணைந்தார் என்பது விவாதிக்கும் அளவுக்கு பெரிய விஷயம் இல்லைதான்.நான் இங்கே விவாதிக்க விரும்புவது, குஷ்பூ கட்சியில் இணைந்த போது, சமத்துவ பெரியார் கலைஞர் அவர்கள் விட்ட அறிக்கையை பற்றி.

"பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன் "

போபாலில் பிறந்த, கவர்ச்சி வேடங்களில் நடித்த குஷ்பூவுக்கும், திராவிடத்துக்கும் என்ன சம்பந்தம்???

குஷ்பூ மணியம்மையாக நடித்ததை விட, ஷங்கரின் 'முதல்வன்' படத்தில், அர்ஜுன் தமிழக முதல்வராக சிறப்பாக நடித்து இருந்தார். தமிழர்களுக்கு நிறைய நல்லது செய்தார். அதற்காக, அர்ஜுன்தான் இனி வருங்கால தமிழக முதல்வர் என்று அறிவிப்பாரா கலைஞர்???

அபத்தமாக பேசுவதற்கு ஒரு அளவு இல்லாமல் போய்விட்டது.

ஒரு குறிப்பிட்ட நடிகரோ, இல்லை நடிகையோ திமுகவில் சேர்ந்தால், அப்போது கலைஞரின் அறிக்கை எப்படி இருக்கும். இட்லிவடை வாசகர்கள் தங்கள் கற்பனை திறனை பின்னூட்டத்தில்காட்டலாம்.

திருமணதிற்கு முன் உடலுறவு குறித்த குஷ்பூவின் கருத்துக்கும், அதற்க்கு சாதகமாக வந்த தீர்ப்புக்கும் ஞானி தனது 'ஒ' பக்கங்களில் புகழ்ந்து தள்ளி, குஷ்பூவை ஒரு முஸ்லிமாக தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தினர் ஏற்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அதற்க்கு பதில் அளித்த, த.மு.மு.வினர், "பாதுக்காப்பாக திருடலாம் என்று சொலவதற்க்கும், குஷ்பூவின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. யார் யார் முஸ்லிம் என்று அறிவிப்பதும் எங்கள் வேலை இல்லை" என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில், ஞானி பற்றி பேராசிரியர் அ. மார்க்ஸ் இப்படி தெரிவித்து இருக்கிறார்.

"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்"


ஈழ விடுதலை ஓங்குக :

"தமிழ் ஈழ மக்களுக்காக எனது அரசியல் வாழ்க்கையையே தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்"

இவ்வாறு ம.தி.மு.க நடத்திய ஒரு கூட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு அறிவித்து இருக்கிறார் வைகோ.

ஏற்கனவே மிக மோசமாக இருக்கும் கட்சி, இது போன்ற பேச்சுக்களால் மேலும் பலவீனம் அடையும், ஈழ தமிழர்களுக்கு எதற்காக இங்கு கட்சி நடத்துகிறார் என்றல்லாம் மதிமுக நிர்வாகிகளிடம் இருந்த வெளிப்படையான பேச்சுக்கள் வர தொடங்கி விட்டன.

வரும் சட்டமன்ற தேர்தலில், சிவகாசி தொகுதி மட்டும் போனால் போகிறது என்று வைகோவுக்கு அம்மா தருவார் என்று தோன்றுகிறது.

இவரை போன்று, ஈழ விடுதலையை தன் கையில் எடுத்து இருக்கிறார் சீமான்.

பிரபாகரனின் அன்பு தம்பி சீமான் அழைக்கிறார் என்று எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள். "இது ஒரு மற்றும் ஒரு அரசியல் கட்சி இல்லை. மாற்று அரசியல் புரட்சி " என்று தனது நாம் தமிழர் இயக்க கொள்கைகளை முழங்குகிறார் சீமான்.

முதலில், தமிழர் அமைப்புகள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?
காவேரி நீர் , முல்லை பெரியார், மீனவர்கள் மீதான தொடரும் தாக்குதல்கள், விலைவாசி உயர்வு.... என இங்கு இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இவர்களால் என்ன செய்ய முடிந்தது??

அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி.இலங்கையில், சிறு பான்மை இனமான தமிழ் மக்களிடையே ஒற்றுமை என்பது அறவே இல்லை.அவர்களுக்குள்ளாக வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம், டெலோ என்றல்லாம் ஆயிரத்தெட்டு பிரிவுகள்..பிளவுகள்.

இங்கு அரசியல் நடத்தும் தமிழர் அமைப்புகளால், வைகோ போன்ற அரசியல்வாதிகளால் என்ன சாதித்து விட முடியும்? ??

ஒரு 'வருங்கால முதல்வர்' அறிமுகம் :

"தேசத்தின் திருப்புமுனை...மாற்றத்தின் ஏவுகணை ".

என்ன இது என்கிறீர்களா? டாக்டர் பாரிவேந்தர் என்பவர் "இந்திய ஜனநாயக கட்சி " என்று ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். அவர் கட்சியின் விளம்பர வாசகம் தான் மேலே உள்ளது.

எந்த டிவியை திருப்பினாலும். IJK,IJK. என்கிறார்கள். கோட்,சூட் சகிதம் பேனர்களில் நவீன அரசியல்வாதியாக அடையாளம் கண்பித்து கொள்கிறார் அண்ணன் பரிவேந்தர். திருச்சியில் கட்சியின் முதல் மாநாடு நடத்த போகிறார்கள்.

தமிழ்நாட்டை விஜய்தான் காப்பாத்தனும்.

நான் ஒரு தடவை சொன்னா... :

ஒரு லைட்டான மேட்டர் பேசுவோம்.

ஒரு பழைய புத்தகத்தில் படித்தது.

கேள்வி : நீங்கள் எழுதிய "நான் ஒரு தடவை சொன்னா.. நூறு தடவை சொன்னா மாதரி" இவ்வளவு புகழ் பெரும் என்று எதிர் பார்த்தீர்களா?

திரு.பாலகுமாரன் : அந்த வசனத்தை நான்னெல்லாம் சொன்னால் யார் மதிப்பார்கள்.அந்த வசனம் பேசிய நபரால், பேசிய விதத்தால் மட்டுமே புகழ் பெற்றது.

சில படங்களை பார்த்து நான் மிகவும் வியந்து இருக்கிறேன். எத்தனை முறை பார்த்தாலும் புதுசு போல இருக்கும். சும்மா அளவு எடுத்து தைத்த சட்டை போல படத்தின் கதை, கெட்டப், வசனம் எல்லாம் படத்தின் நாயகர்களுக்கு மிக பொருத்தமாக இருக்கும்.

அப்படி ஒரு பட்டியல்..

ரஜினிகாந்த் - பாட்ஷா
கமல்ஹாசன் - நாயகன்
விஜயகாந்த் - கேப்டன் பிரபாகரன்
சத்யராஜ் - நடிகன்
கார்த்திக் - உள்ளதை அள்ளித்தா
அஜீத் - தீனா
விஜய் - கில்லி
விக்ரம் - சேது.

உங்களிடம் இதை போன்ற பட்டியல் இருந்தால் சொல்லவும்.

(நன்றி...மீண்டும் அடுத்த வாரம்)

- இன்பா

இன்பா இதில் எங்கே வழக்குகள் இருக்கிறது ?



/span>

39 Comments:

Prathap Kumar S. said...

ரஜினிக்கு பில்லாவும், கமலுக்கு சலங்கை ஒலியும் கூட சொல்லலாம்

ஆயில்யன் said...

பாண்டியராஜன் - ஆண் பாவம்

வடிவேலு - வின்னர்

சிவாஜி - முதல் மரியாதை

சத்யராஜ் - கடலோர கவிதைகள்

தியாகராஜன் - மலையூர் மம்பட்டியான்

:) அம்புட்டுத்தான்

Unknown said...

'முதல்வன்' பற்றிய கருத்து அருமை.

யாருக்குத் தெரியும்? நாளை விஜய் கூட தி.மு.க.வில் சேரலாம்.

அப்போது "இவர் ரௌடிகளை ஒழித்துக்கட்டும் பாத்திரத்தில் தொடர்ந்து நடித்து சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போராடிய குணம் நாடறியும்" என்று அறிக்கை வாசிக்கப்படலாம்.

யதிராஜ சம்பத் குமார் said...

தன்மான, இனமானத் தமிழ் பற்றாளர் சீமானுக்கு சினிமாவில் நடிக்க வைப்பதற்கு கூட சிங்கள நடிகைதான் தேவைப்படுகிறார். சிவகங்கை, ராமநாதபுரம் கரிசல் பூமி சகோதரிகளை நடிக்க வைத்தால் கல்லா நிரம்பாது என்பதை சீமான் உணர்ந்திருக்கிறார் போலும். ஆக கல்லாவிற்கு ஒரு கொள்கை, கட்சிக்கு ஒரு கொள்கை.

smart said...

ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்தலில் இருந்தே முதல்வருக்கும் எங்களுக்கும் உள்ள தொடர்பை நாங்கள் கண்டுவிட்டோம்
-இப்படிக்கு மொள்ளமாரி திருடர்கள் சங்கம்

smart said...

நடிகர் பிரசன்னா, மாற்றுக் கட்சியில் சேர்ந்தால் தலைவரது அறிக்கை இப்படி,
"நாணயம் படத்தில் மிகவும் நாணயமாக நடந்ததால் அவர் நமது கொள்கையில் பிடிப்பில்லை என்று அன்றே கவிதை எழுதியிருந்ததை இங்கு சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்."

smart said...

தலைவர் கீ. வீரமணி படத்தில் நடித்தால் நம்ம முதல்வரோட அறிக்கை இப்படி,
"ஆரம்ப காலத்திலிருந்தே நாங்கள் இருவரும் அரசியலில் நடித்து மக்களை நம்பவைத்துள்ளோம். அத்தகைய நடிப்பு சிகாமணி தமிழ் திரையுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய சொத்து."

Anonymous said...

Sivaji - Veerapandiya Kattabomman (till now everybody gets the image of sivaji when discussing about kattabomman)
Vijayashanthi - Vaijayanthi IPS
Surya - Kaka Kaka
and also Kamal - Vettaiyadu Vilayadu

Anonymous said...

சில நடிகர், நடிகைகள் கழகத்தில் இணைகின்றனர். உடனே கலைஞரின் அறிக்கை:

ரஞ்சிதா
ரஞ்சிதாவைப் பற்றி நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஜெய்ஹிந்த் படத்திலும், சின்னத்திரையிலும் அவரது சுறுசுறுப்பான நடிப்பைப் பார்த்து வியந்தவன் நான். போலிச் சாமியார்களின் முகமூடிகள் கிழியக் காரணமாக இருந்த அவரை கழகம் மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளும் என்பதை இங்கே பலர் அறியச் சொல்லி, மிகுந்த அன்போடு அவரை வரவேற்கிறேன்.


கமல்
நண்பர் கமலைப் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் ஒரு அக்ரஹாரத்து வீரமணி என்பது அவரைப் பார்த்தாலே விளங்கும். தன் படத்தில் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பும் அவருக்கு கழகம் மிகுந்த கடமைப்பட்டிருக்கிறது. அவரை கழகத்தின் ஆஸ்தான வித்வானாக நியமித்து கழகம் பெருமை கொள்கிறது.


ரஜினி
ரஜினி என்மீது பேரன்பு கொண்டவர். பாபா படத்தில் மிக அருமையாக நடித்தவர். எப்படி நான் மக்கள் நலத்திற்காக என் கொள்கைகளைத் துறந்து செயல்பட்டேனோ அதே போன்று நாட்டையும், தன்னை நம்பிய மக்களையும் காப்பதற்காக பாபா படத்தில் தன் கொள்கையைத் துறந்தவர். அவரை கழகம் அன்போடு வரவேற்கிறது.


நயன்தாரா
தேவர்களே விரும்பி ஏற்கக் கூடிய அளவிற்கு அழகாகப் பட்டம் விடக் கூடியவர் நயன்தாரா. எப்படி கண்ணகி என்றால் மாதவி நினைவுக்கு வருகிறாரோ அப்படி நம் நினைவுக்கு வருபவர் நயன். மற்றவர்களது விமர்சனத்தைப் பற்றித் துளிக்கூடக் கவலைப்படாமல் எப்படி தன் கொள்கை மட்டுமே முக்கியம் என்று செயல்படும் சகோதரர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ. ராசாவைப் போல் கண்ணியமாகச் செயல்படும் நயன்தாராவைப் போன்றவர்கள்தான் கழகத்திற்குத் தேவை. அவருக்கு எல்லாவிதங்களிலும், எல்லாக் காலங்களிலும் கழகம் மிகுந்த உறுதுணையாக இருக்கும் என்பதை இங்கே அனைவருக்கும் தெரிவித்து அவரை வரவேற்கிறேன்.

ஜெயலலிதா
நாங்கள் இருவரும் எலியும், பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தாலும் கூட அவர் என் மீது ரகசியமாக மிகுந்த மரியாதை வைத்திருந்தார். நல்ல பல படங்களில் கண்ணியமாக நடித்து மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவர். அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட நண்பர் நடராஜன் மூலம் பலமுறை என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசித்திருக்கிறார். நான் வேறு அவர் வேறு அல்ல என்பதை இங்கே உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு அவரை மனமார வரவேற்கிறேன்.

- அம்பி

தேடுதல் said...

அ. மார்க்ஸ் இப்படி தெரிவித்து இருக்கிறார்.

"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்"

---ஹும்....தானும் படுக்க மாட்டாங்க தள்ளியும் படுக்க மாட்டாங்க.

Unknown said...

ஜெய்சங்கர் ஜெகநாதன் (big boss,enter the dragon)

Shankar said...

I didn't expected Basha in this list .It was one of the most illogical film which evryone (including me) enjoyed to the core only becuz of rajini at that time. Now i don't think anyone would love to see it repeatedly

Anonymous said...

Surya - kaka Kaka
Arjun - Muthalvan
Sarath - Nattammai

பெசொவி said...

//இன்பா இதில் எங்கே வழக்குகள் இருக்கிறது ? //

இதில் வழக்கு இருக்கிறதா இல்லையா என்று ஒரு வழக்காடு மன்றம் நடத்தலாமே?

கௌதமன் said...

குஷ்பூ அவர்கள் தி மு க வில் சேர்ந்ததால் ஒரு நன்மை உண்டு.
அ இ அ தி மு க தலைவியை இனிமேல் சினிமா கவர்ச்சி அரசியல் நடத்துபவர் என்று சினிமாவை, கவர்ச்சியை எல்லாம் சம்பந்தப் படுத்தி பேசும் முன் கொஞ்சம் யோசனை செய்ய வேண்டியது இருக்கும்.

கௌதமன் said...

நடிகை ஐஸ்வர்யா ராய் தி மு க வில் இணைந்தால், இப்படிக் கூறலாம்:
"உலக செம்மொழி மாநாடு நடக்கின்ற இந்த வேளையிலே - உலக அழகியும் (உலக அரக்கி உருவம் கொண்டவர்கள் அல்ல !! - சிரிப்பு) நம் கட்சியில் இணைவது மிகவும் பொருத்தம். அவர்கள் ஜீன்ஸ் படத்தில் 'ஹைர ஹைர ஹாரப்பா' என்னும் தமிழ்ப் பாட்டில், பிப்டி கே ஜி தாஜ்மஹால் என்னும் தமிழ்ப் பதத்திற்கு அற்புதமாக அபிநயம் பிடித்து ஆடும்போழுதே அவருடைய தமிழ்ப் பற்று என்னைக் கவர்ந்தது."

Gaana Kabali said...

கருணாநிதி அபத்தமான பேச்சுக்கும் , போலித்தனமாக தானே எழுதி தயாரித்துக் கொள்ளும் பேட்டிக்கும் பெயர் போனவர் தானே.
இதற்கெல்லாம் போய் ஒரு இடுகையை வீணடித்து விட்டீர்களே!

Anonymous said...

போகட்டும்.. புத்திசாலி வாசகர்களுக்கு ஒரு போட்டி: ஜெயலலிதா தி.மு.க.வில் இணந்தால் அப்போது கலஞர் என்ன ’நச்’அறிக்கை விடுவார் என்று எழுதுங்கள். (சபாஷ், சரியான போட்டி என்று பாராட்டாதீர்கள்.விழா நடத்தினால் ஓ.கே!)

-- மாம்பலம் மஸ்கிட்டோ

Kannan said...

செய்தி: நடிகை லதா தி.மு.க.வில் சேர்ந்தார்.
க.அறிக்கை: தமிழர்களின் காதல், கற்பு மற்றும் பண்பாடு இவற்றை அம்மையார் 'பல்லாண்டு வாழ்க' வில் 'என்ன சுகம்' என்ற ஒரு பாடலில் வெளிப்படுத்தி தமிழர்களை ஒருமுக படுத்தியதை நான் கூற வேண்டிய அவசியம் இல்லை....

pichaikaaran said...

தனுஷ் _ பழம் எனக்கு , கொட்டை உனக்கு என்று பாடி, கழகத்தினர் ஒற்றுமையாக பதவிகளை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை ஒரு படத்தில் பாடியது போர்ரவேண்டியது

விஜய்: எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற அண்ணாவின் கொள்கைக்கு எடுத்துகாட்டாய் விளங்குகிறார் ( வரிசையாக 6 பிளாப்.ஆனாலும் அடுத்த முதல்வர் போல வீராப்பு )

சத்யராஜ் ; உடன்பிறப்பு என்ற படத்தில் நடித்து , கட்சி ஈடுபாட்டை அன்றே காட்டியுள்ளார்

ராமராஜன் : அண்ணன் காட்டிய வழி என்ற படத்தில் நடித்தபோதே, என் நெஞ்சில் இடம் பிடித்து விட்டார்

விசு : குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தை இயக்கி, கழகம் ஒரு குடும்பம் என்ற கட்சியின் தத்துவத்தின் மீதான பிடிப்பை காட்டி இருக்கிறார்.

ஷகீலா - மக்களை , குறிப்பாக ஏழைகளை மகிழ வைத்தவர். கழகத்துக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்ற போதிலும், கடவுளை ஏழைகளின் சிரிப்பில் பார்ப்பது என்று நேற்றல்ல, எப்போதும் இருக்கும் பழக்கம்.. அந்த வகையில் இவர் கட்சிக்கு நெருக்கமானவர்

விஜ்யகாந்த் ; எதிராக கட்சி நடத்தினாலும், எங்களுக்குள் கள்ள தொடர்பு இருந்து வந்தது ..அதனால்தான், மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும் என்ற பிளாப் படத்தில் முன்பு நடித்தார் ..

ரஜினிகாந்த் : என் குடும்பத்தின் மீது தீராத அன்பு கொண்டவர் என்பதை, என் மூத்த மகனை கவுரவிக்கும் வகையில் "முத்து" படம் எடுத்தபோதே உணர்ந்து கொண்டேன்

Unknown said...

கமெண்ட் பப்ளீஷ் பண்ண இவ்வள்வு நேரமா. என்ன தான் நடக்குது

Arun B said...

Super boss...:)

During Kushboo issue, this old fox Karuna condemned only Suhasini - not Kanimozhi or Kushboo...!

Arun B said...

Super boss...:)

During Kushboo issue, this old fox Karuna condemned only Suhasini - not Kanimozhi or Kushboo...!

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

இன்னும் வைகாசி மாத ஆன்மீகக் குறிப்புகளை அப்டேட் செய்யவில்லை.

Aappu said...

//முதலில், தமிழர் அமைப்புகள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு என்ன செய்து விட்டார்கள்?
காவேரி நீர் , முல்லை பெரியார், மீனவர்கள் மீதான தொடரும் தாக்குதல்கள், விலைவாசி உயர்வு.... என இங்கு இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இவர்களால் என்ன செய்ய முடிந்தது?

//இங்கு அரசியல் நடத்தும் தமிழர் அமைப்புகளால், வைகோ போன்ற அரசியல்வாதிகளால் என்ன சாதித்து விட முடியும்? ???


////
கோவை & செங்கோட்டை: நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டன

Unknown said...

// எங்களுக்குள் கள்ள தொடர்பு இருந்து வந்தது ///
பார்வையாளர் . இது சரியா. எப்படி இது மாதிரி நீங்க எழுதலாம்

ஜீயார் said...

///jaisankar jaganathan said...

// எங்களுக்குள் கள்ள தொடர்பு இருந்து வந்தது ///
பார்வையாளர் . இது சரியா. எப்படி இது மாதிரி நீங்க எழுதலாம்///

பாஜகவுடன் கூட்டணியை முறித்துவிட்டு மீண்டும் கம்யுனிஸ்ட்டுகளுடன் கலைஞர் கூட்டணி சேர்ந்த போது அவர் கூறிய வார்த்தைதான்(நான் மாற்று அணியிலே இருந்தாலும் காமரேடுகளுடனான என் ...உறவு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது, என நீண்டு போகும் கலைஞரின் அறிக்கை. எனவே இந்த வார்த்தையில் பிழையிருப்பதாக நான் எண்ண வில்லை.

Anonymous said...

it is not fair against vaiko. why not you tell this comments before dinamalar publish . don't you know the reason for dinamalar news. i think, you guys are just taking news from other source and write what ever you want. don't you think ,yourself.

Vivek said...

Idly vadai did u read gnani's o pakkangal in kumudam? after kumudam publisher arrest, gnani's focus has shifted from politicis, public affairs to medicine...two weeks b4 he wrote something abt heart, this week its abt headache...Is he a doctor? do u know y this change happened suddenly to him?

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Forward thinking Brahmins are not dangerous but fools.

They spoil themselves and the community as a whole. Their only agenda is to be in the limelight, whatever reason it may be.

பா. ரெங்கதுரை said...

//"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்" - அ. மார்க்ஸ்//

”காரல் மார்க்ஸ் போன்ற யூதர்களைவிட, அந்தோணிசாமி மார்க்ஸ் போன்ற நாடார்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்” என்று ஞாநி பதில் சொல்ல வேண்டியதுதானே?

Anonymous said...

jaisankar jaganathan said...
// எங்களுக்குள் கள்ள தொடர்பு இருந்து வந்தது ///
பார்வையாளர் . இது சரியா. எப்படி இது மாதிரி நீங்க எழுதலாம்

மலைக்கோட்டை படம் ஏன் சரியா ஓடலைன்னு இப்ப புரியுது சாமி

Anonymous said...

வினவு பதிவில் TVS என்பவர்:
\\நடிகர் சிவாஜி தனிக் கட்சி ஆரம்பித்த உடன், தஞ்சை ஞானம் தியேட்டரில் இவரது கட்சி (?) பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, நடிகர் மேஜர் சுந்தரராஜன் அவர்களை போலீஸ் துறை அமைச்சராக்க வேண்டும். அவர்தான் பல படங்களில் போலீஸ் வேடத்தில் நடித்தார் என்று தீர்மானம் போட்டார்கள்//

மேலே உள்ளதற்கும், மனா துனா சொன்ன

\\பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன்//

உள்ள ஆறு வித்தியாசங்கள் என்னென்ன?

Unknown said...

//உள்ள ஆறு வித்தியாசங்கள் என்னென்ன?//

சுந்தர்ராஜனுக்கு மீசை இருக்கும். குஷ்புக்கு இருக்காது.

மீதி 5 வித்தியாசமும் நீங்க தான் கண்டுபிடிக்கனும்

Anonymous said...

"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்"

"This statement suits to DR.KAMAL HASSAN"

and BRAHMINS LIKE US.

Murali

Anonymous said...

//"வைதிக பார்ப்பனர்களை விட, முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்"//


இதிலேர்ந்து என்ன சொல்லவரீங்கோ.
" வைதிக பார்ப்பனர்கள் கொஞ்சம் டேஞ்சரானவர்கள் , முற்போக்கு பார்ப்பனர்கள் மிகவும் டேஞ்சரானவர்கள்". அதானே சார்?
ஆகமொத்தம் பார்பனர்கள் டேஞ்சரானவர்கள். சரிதானே?

அ.கி.கி.அனானி

Aravind [Am a non brahmin] said...

vimarsanam'la naalla than panreenga...

ana ipo jaathi'a pathi tharakuraiva pesa avasiyame ilaye.. vaithega parpanargalo.. ila murpoku parpanargalo... yenda saatheiya irundal ena.. neenga evlo than buthisalithanama vimarsanam pannalum.. neengalum oru sarasari arasiyal vathi mathiri jaathi'a pathi kurai sollreengale...

jaathi'ya thaandi yosikamaatengala..
ithu ena nyayam...

Manoj Kumar said...

நடிகை குஷ்பூவை விட சமுக ஆர்வம் உள்ளவர்கள் எத்தனையோ பேர் இருகிறார்கள்...அவர்களை எல்லாம் தி.மு.கவிற்கு தெரியாது..குஷ்பூ கதாநாயகியாய நடித்தப்ப எப்படி இருந்தார் என்று மக்களுக்கு தெரியும்...இதே குஷ்பூவின் பேச்சை கேட்டு வெறுத்து போனவர் கருணாநிதி...அரசியல்வாதி ஆகும் தகுதி குஷ்பூவிடம் தூளி கூட இல்லை.தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் மிக கேவலமாக மாற தி.மு.க இன்று வழிவகுத்து கொண்டு இருக்கிறது...

Gaana Kabali said...

//அரசியல்வாதி ஆகும் தகுதி குஷ்பூவிடம் தூளி கூட இல்லை.//Shanmuganathan

நீங்கள் சொல்வது மிகவும் சரியானது. இந்த கட்சி தலைவர்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்த்தையே கிடையாது.
நடிகன் அல்லது நடிகை என்ற ஒரே காரணத்துக்காக பதவி கொடுத்துவிடுவார்கள் . இப்படித்தான் ஜெயலலிதா கூட ராமராஜனுக்கும் , எஸ்.எஸ்.சந்திரனுக்கும் பதவி கொடுத்தார்.