பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 25, 2010

பாவம் ...தமிழ் மொழி - கி.அ.அ.அனானி

பெரிய பெரிய புகைவண்டி சந்திப்புக்களுக்குள் தொடர் வண்டி நுழையும் போது ஏற்படும் வெவ்வேரு விதமான இரைச்சல்களை அனுபவித்துணர்ந்திருக்கின்றீர்களா ?

அதுவும் குறிப்பாக ப்ளாட்பாரத்தில் இருந்து எழும் கலவையான ஓசைகள்..

காப்பி காப்பி..சூடான காப்பி என்று ஒருவர்,

டீ..சாயா..டீ...சாயா என்று மற்றொருவர்,

இட்லி,வடை... இட்லி வடை(பதிவரைத் தேடிக் கொண்டல்ல) என்று விற்றுக் கொண்டு ஒருவர்,

தோசே...சூடான மசால் தோசே...
ப்ரெட் ஆம்லேட்..
நைட் சாப்பாடு..பிரியாணி ,பரோட்டா
பால்..சூடான மசாலா பால்...
பிஸ்கேட் ..சாக்லேட்..வேஃபர், சிப்ஸ்...
ஐஸ்க்ரீம்..ஐஸ்க்ரீம்..

இதற்கு நடுவில்..அம்மா பசிம்மா..சார் தர்மம் பண்ணுங்க சார்....என்று இன்னும் பலப் பல குரல்கள்..

பலப்பல சுருதிகளில்..கேட்டிருக்கிறீர்களா?

இல்லை என்றால் தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக திரு.கருணாநிதி எழுதி, திரு.ரகுமான் இசை அமைத்திருக்கும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்..அதே எஃபெக்ட் கிடைக்கும்.
திரு.ரகுமான் பெரிய இசை அமைப்பாளர்தான்..நல்ல இசையமைப்பாளர்தான்..ஆனால் தமிழ் செம்மொழி மாநாட்டிற்குக் கூட ஒரு பாடலை ..ஒரே ஒரு பாடலைக் கூட..மேற்கத்திய வாத்தியங்களுடனும்..மேற்கத்திய இசையமைப்பிலும் தான் வடிவமைக்க முடிகிறது என்றால் தமிழ் பாரம்பரிய இசைக் கருவிகளுக்கும்,இசைக்கும் இதை விட வேரென்ன கேவலம் ஏற்பட்டு விடப் போகிறது.

திரு.கருணாநிதி திறமையான அரசியல்வாதிதான்..அந்நாட்களில் சினிமாவிலும் இந்நாட்களில் பொதுமக்களுக்கும் நன்றாகக் கதை சொல்லக் கூடியவர்தான்..அடிக்கடி கவிதை என்ற பெயரில் எழுதுவார்தான் ..ஆனால் செம்மொழி மாநாட்டிற்காக ஒரு கவிதை..ஒரே ஒரு கவிதை ????!!! தமிழில்....எழுத இவரை விட்டால் வேறு தகுதியான ஆள் இல்லை என்று சொன்னால் இதை விட தமிழுக்கு வேரென்ன அவமானம் நேர்ந்து விட முடியும்? இவருக்கு நிரந்தரமாக சொம்பு தூக்கும் வைரமுத்துக்களும், வாலிகளும்,ப.விஜய்களும் நாண்டு கொள்ளலாம்.இல்லை இதை விட சிறப்பாக எங்களால் கூட எழுத முடியாது என்று பலமாக செம்படிக்கலாம்.

இந்த ரேஞ்சில் போனால் " வீழ்வது தமிழாக இருந்தாலும் வாழ்வது நானாக (என் குடும்பமாக) இருக்கட்டும் "-

என்பது தான் இந்தச் செம்மொழி மாநாட்டின் முக்கிய தீர்மானமாக இருக்குமோ?

பின் குறிப்பு : தமிழ் பதிவு போடும் நல்லுலகத்தில் உள்ள தமிழ் மொழி காக்கும் நல்லோர்கள் " பாட மறுக்கும் பாப்பாத்திகள் " "ஓட மறுக்கும் பீர் பாட்டில்கள் " என்று டிசம்பர் சீசனில் பதிவு போட்டு தன்னுடைய தமிழ்ப்பற்றை நிலை நாட்டும் அதே வேளையில் இந்த மாதிரி விடயங்களிலும் பொன்னான கருத்தைப் பதியலாம். இல்லை தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் என்று சொம்பாவது அடிங்கய்யா.

--- கி.அ.அ.அனானிசரியான கிராமத்து ஆள் ஐயா நீர் நீங்கள் சொல்லும் இசை கருவிகள் எல்லாம் சங்கமம் நடத்த தான் உபயோகப்படும்.40 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

சொம்படிப்பது! சிறு குறிப்பு வரைக.

சீனு said...

நல்ல வேளை. இன்னும் நான் அந்த பாட்டை கேக்கல...

Anonymous said...

What is mean by கி.அ.அ.அனானி?

Anonymous said...

/****அதே நினைவோடு தூங்காமல் விடியற்காலை வரை இருந்து இங்கே வந்துள்ளேன்” என்று முதல்வர் கலைஞர் செம்மொழி பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பேசினார்****/


இது தான் கலைஞரின் தூங்கா இரவுக்கு காரணமா????

பொன் மாலை பொழுது said...

// தமிழ் செம்மொழி மாநாட்டிற்காக திரு.கருணாநிதி எழுதி, திரு.ரகுமான் இசை அமைத்திருக்கும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்..அதே எஃபெக்ட் கிடைக்கும். //

இட்லி வடை


சிரிக்காமல் இருக்க முடியவில்ல. ரஹ்மானின் இசை அமைப்பில் தமிழும் இல்லை, தமிழ் இசையும் இல்லை.
ஆஹா ...ஓஹ்ஹோ .. என்று கொண்டாட முடியவில்லை.

வீண் ஜம்பம் தான் தலை தூக்கி நிற்கிறது.

sathish (bengaluru) said...

Ini muthamil alla, Naangu

Iyal
Isai
Nadagam
Kalaignar Tamil

அ. நம்பி said...

//பின் குறிப்பு : தமிழ் பதிவு போடும் நல்லுலகத்தில் உள்ள தமிழ் மொழி காக்கும் நல்லோர்கள்..... இந்த மாதிரி விடயங்களிலும் பொன்னான கருத்தைப் பதியலாம். இல்லை தமிழுக்குக் கிடைத்த மற்றுமொரு அரிய பொக்கிஷம் என்று சொம்பாவது அடிங்கய்யா.//

இதனையும் (நான்கு திங்களுக்கு முன்னரே எழுதியது) படித்துப் பார்க்கலாமே!

சில மயில்களும் ஒரு வான்கோழியும்…!

http://nanavuhal.wordpress.com/2010/01/30/mayilhalum/

- அ. நம்பி

அலர்ட் ஆறுமுகம் said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

MSV,TKR,Ilayaraja ivangalam irukkum bodhu..?

Idhil kodumai ennavendral Hip Hop style singer Blaze padi irukkirar.

Avar vayil tamizh.. ini mella saagum enbadhu unmai.

Hosanna Songoda revised version madhiriye irukku.

nagan said...

ஏன்யா தமிழுக்கு சேவை செய்யும் எங்க தாத்தாவையா பாட்டு எழுத தகுதி கேட்குது நாடு.
இவர் செய்த சேவைக்கு கிடைத்த பரிசு தான் ஆட்சி,அதிகாரம்,பணம்,புகழ்,பட்ட்ட்ட்ட்டங்கள்,டீவி,
இலங்கைதமிழர்இன்னல்கள் என இவரின் பெருமைகளை ஆ...கண்ணை கட்டுதே..

Unknown said...

இட்லி ஏதோ பொறாமையில இந்த பதிவ பொடலியே . எல்லாம் உணமைதானே

Anonymous said...

இட்லிவடைக்கு வயசாகி விட்டால் வாரத்துக்கு ஒரு போஸ்ட் போட்டால் போதும். மட்டமான காண்ட்ராக்டர்களிடம் சீப் ரேட்டுக்காக தளத்தை குத்தகைக்கு கொடுத்துவிட வேண்டாம்.

இதுபோன்ற மரணமொக்கை போஸ்ட்டுகள் இட்லிவடையில் வேண்டாமே?

ஆரம்பகால இட்லிவடை ரசிகன்

Anonymous said...

இட்லிவடைக்கு வயசாகி விட்டால் வாரத்துக்கு ஒரு போஸ்ட் போட்டால் போதும். மட்டமான காண்ட்ராக்டர்களிடம் சீப் ரேட்டுக்காக தளத்தை குத்தகைக்கு கொடுத்துவிட வேண்டாம்.

இதுபோன்ற மரணமொக்கை போஸ்ட்டுகள் இட்லிவடையில் வேண்டாமே?

ஆரம்பகால இட்லிவடை ரசிகன்

குரங்குபெடல் said...

ஏதோ ஒரு படத்துல ஒதுக்கப்பட்ட ஒரு மெட்டை
வச்சி ஒப்பேத்திட்டாரு ரஹ்மான் . . .
அதை போய் ஆராய்ச்சி பண்ணுறீங்களே . . .?

Umesh said...

super post.


read this too.My take on Tamil anthem.

http://theumeshblog.blogspot.com/2010/05/why-rahman-why.html

Anonymous said...

//umesh said...
super post.


read this too.My take on Tamil anthem.

http://theumeshblog.blogspot.com/2010/05/why-rahman-why.html///

Read your post ..but you do not have an option for people like me to comment :))

ki a a anaani

Anonymous said...

Thanks Idli Vadai for publishing this post.

As some one suggested , please deposit my Contract fee in my account :)) or should I send the Kuththakai amount to you :))

ki a a anaani

Anonymous said...

/*** umesh said...
super post.


read this too.My take on Tamil anthem.***/

I read your article, My appreciation to you umesh.

கௌதமன் said...

செம்மொழி மாநாடு அமெரிக்காவில் நடந்தால் இந்தப் பாடல் சரியாக இருந்திருக்கும். கோவையில் நடப்பதால் எடுபடவில்லை.

SUBBU said...

:)

Anonymous said...

Idly vadai you prove again! This is what I exactly expected from you! Same monotonous post! Your articles are always predictable!

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
மணிகண்டன் said...

ஏன் ? பாட்டு நல்லா தான இருக்கு. ஏன் இவ்வளவு பேருக்கு பிடிக்காம போச்சு ?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

//சில மயில்களும் ஒரு வான்கோழியும்…!

http://nanavuhal.wordpress.com/2010/01/30/mayilhalum///

அ நம்பி,
ஏற்கனவே படித்து விட்டேன்.என்னை மாதிரி பதிவுலக அனாதை(னி)களுக்கு உங்கள் பதிவின் வாசல் மூடப்பட்டிருப்பதால் பின்னூட்டமிடவில்லை :)

Anonymous said...

என் பதிவுக்குக் கமெண்ட்..

முன்னால இப்படி

///லக்கிலுக் said...
இது ஒரு மொக்கை பதிவு என்பதில் எனக்கு சந்தேகம் ஏதுமில்லை.///


இப்போ இப்படி

///இதுபோன்ற மரணமொக்கை போஸ்ட்டுகள் இட்லிவடையில் வேண்டாமே?

ஆரம்பகால இட்லிவடை ரசிகன்////

என்ன ஆத்திரப் படாமல் ஆளப்பிறந்தவரே செளக்கியமா ??:)

கி அ அ அனானி

நவீன் said...

நானும் அந்த பாட்டை கேட்டேன்.. ரொம்ப கேவலமா தான் இருக்கு...
ஆனா இந்த பதிவுல ஏன் எழுத்து பிழைகள் இவ்ளோ இருக்கு...

குற்றம் சொல்லும் போது நாமளும் கொஞ்சம் கரெக்டா இருக்கணும் இல்லை..
////இதை விட தமிழுக்கு வேரென்ன அவமானம் நேர்ந்து விட முடியும்?///

வேறன்ன.... இது தான்... முதல்லி நீங்க திருந்துங்க.. பிறகு அடுத்தவங்களை திருத்தலாம்..
குற்றம் சொல்லும் போது தெய்ரியமா நெஞ்சை நிமிர்த்தி சொல்லணும்...
பேரை சொல்லவே தைரியம் இல்லாத அனானி.... இது வேண்டாம்பா......

Anonymous said...

தமிழ் இனி வேகமாய்ச் சாகும்.

Nanban said...

Hi

I am reading lot of negative comments about the song. But, personally I am listening to this song many times a day and am not tired of it. I liked it very much. I agree it is out of box, but unique, different and designed for wider reach and the song does it very well.

Thanks

ConverZ stupidity said...
This comment has been removed by a blog administrator.
ராமகிருஷ்ணன் said...

கட்டுரை முடிவில் மக்கள் டிவியின் `வாழ்க தமிழ்மொழி` பாடலும் அதன் லோகொவுக்கான `அடையாள பாடலும்~ இந்த கண்ற்றாவிக்கு முன் நூறு சதம் பரவாயில்லை என மனம் திறந்து இட்லிவடை பாராட்டி அதன் டவுன் லோட்லிங்கயும் கொடுத்திருக்கலாம்.

Umesh said...

//Anonymous said...
//umesh said...
super post.


read this too.My take on Tamil anthem.

http://theumeshblog.blogspot.com/2010/05/why-rahman-why.html///

Read your post ..but you do not have an option for people like me to comment :))

ki a a anaani//

Now I have enabled comments by anonymous persons too.You can comment in my blog.

அ. நம்பி said...

//அ நம்பி,
ஏற்கனவே படித்து விட்டேன்.என்னை மாதிரி பதிவுலக அனாதை(னி)களுக்கு உங்கள் பதிவின் வாசல் மூடப்பட்டிருப்பதால் பின்னூட்டமிடவில்லை :)//

ஏற்கெனவே படித்துவிட்டீர்கள் என்பது அறிந்து மகிழ்ச்சி ஐயா.

வாசல் மூடப்படவில்லை ஐயா. `வொர்ட்பிரஸ்' வலைப்பக்கங்களில் மறுமொழி எழுதப் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடவேண்டும். உண்மைப் பெயராகத்தான் இருக்கவேன்டும் என்பதில்லை; புனைபெயராகவும் இருக்கலாம்.

(இந்த என் மறுமொழி `வொர்ட்பிரஸ்' வலைப்பக்கங்களுக்கு விளம்பரம் தேடுவதுபோல் அமைந்திருக்கிறது; இட்லிவடை அன்புகூர்ந்து என்னை மன்னிக்கவேண்டும்.)

Anonymous said...

///மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடவேண்டும்.///

:)))

ITHUTHAN EN PIRACHINAI

அ. நம்பி said...

//:)))ITHUTHAN EN PIRACHINAI//

மறுமொழிகளுக்காகத் தனியாக ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்கிப் பயன்படுத்தலாமே ஐயா.

Anonymous said...

நம்ம "தட்டிபார்தன் கொட்டங்குச்சி..."
பாடல் எழுதி டண்டனாக்க இசை அமைத்திருந்தாலே நல்லாருக்கும்போலே

Sreenivasan said...

T.R. would have composed a better tune more importantly better poems. what happened to his jalra team dia'mandu' kavi, vaali, abdul rahman.

Anonymous said...

Now they have decided to play the song n theatres..Stupidity.."Semmozi maanadu theme song" in western style with Blaze..Sure KK has proved again hes crazy.

Citizen

அலர்ட் ஆறுமுகம் said...
This comment has been removed by a blog administrator.
Gaana Kabali said...

"This post has been removed by a blog administrator " என்ற குறிப்போடு தரங்கெட்ட பின்னூட்டங்களை பிரசுரிக்க மறுக்கும் அதே கண்ணியத்தோடு கி.அ.அ.அனானி எழுதிய இந்த தரமில்லாத இடுகையையும் நீங்கள் தவிர்த்திருந்தால் இட்லிவடையின் மீதுள்ள மதிப்பு இன்னும் குறையாது இருந்திருக்கும்.

பின் குறிப்பு: என்னுடைய பின்னூட்டம் நீக்கப்பட்டதால் இதை நான் எழுதவில்லை.
இதுவரை என்னுடைய பின்னூட்டம் எதுவும் இட்லிவடையால் நீக்கப்பட்டதில்லை.