பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, May 23, 2010

செம்மொழி பாடல்

”நான் தூங்கவில்லை. காரணம், நீங்கள் இங்கு கேட்டு ரசித்தீர்களே, அந்த பாடலை பலமுறை கேட்டுக்கொண்டே பார்த்தேன். அதே நினைவோடு தூங்காமல் விடியற்காலை வரை இருந்து இங்கே வந்துள்ளேன்” என்று முதல்வர் கலைஞர் செம்மொழி பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் பேசினார். முழு பேச்சு கூகிளில் கிடைக்கும்.

அந்த பாடலை பலர் கேட்டிருக்கலாம்.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அமைத்த இந்த பாடலை கேட்ட போது, வந்தே மாதரம் போல இருக்கிறது. ஜெயா டிவியில் மாலை 6 மணிக்கு வரும் பாரதியாரின் “செந்தமிழ் நாடெனும் போதினிலே..” பாடலை கேட்கும் போது ஏற்படும் ஒரு கிக் இதில் இல்லை.

செம்மொழி பாடலை கேட்கவில்லை என்றால் இங்கே கிடைக்கும்.

சும்மா கெட்க வேண்டும் என்று நினைப்பாவர்கள் இங்கே செல்லவும்

ஏன் இந்த பாடலை வாலி எழுதி, இளையராஜா இசையமைக்க வில்லை ?

58 Comments:

Asir said...

ஆட்டோ வரும்...

Anonymous said...

யார் எழுதி யார் இசை அமைத்தால் என்ன?? எல்லாப்புகழும் எனக்கே எனக்கே!(எனக்கு மட்டுமே!) இந்த கேள்விக்கு என்ன பதில்?? அரசின் பழைய இலச்சினை(ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரம்) மாற்றும் எண்ணம உள்ள கலைஞர் ஏன் அய்யன் டிவி என்று பெயரிடாமல் தன பெயரை வைத்திருக்கிறார்?? விளம்பரம் என்பது தவிர வேறு பதில்கள் மட்டுமே வேண்டும்!!

தேடுதல் said...

உப்பு சப்பு இல்லாத பாட்டு

sathish (bengaluru) said...

Idhu kalaignarin "Tamil" semmozhi manadu. Adhanal commercial touch thevvai.

Adhanal vaali matrum illayaraja idamperavillai. mellum avargal indha reality showvirku select agavillai.

ஆதி மனிதன் said...

அப்படி ஒன்றும் எழுச்சியாகவோ, கிக்காகவோ எனக்கு தெரியவில்லை.

ஒரு வேலை சண் டி வி, கலைஞர் டி வியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் ஹிட் ஆகுமோ தெரியவில்லை.

Gaana Kabali said...

எல்லா விருப்பு வெறுப்புகளையும் தள்ளி வைத்து விட்டு இசை மற்றும் தமிழ் என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள். கேட்க கேட்க மனதிற்கு பிடித்து போய்விடும்.

A .R. ரகுமான் நம் மனதிற்கு பரிச்சயமில்லாத புதியபரிமாணத்தில் புதுமாதிரியாக இசை அமைப்பதால் அந்த ராகத்தை மனசு உள்வாங்கி பழக்கப் படுத்திக் கொள்ள சிறிது அவகாசம் தேவைப் படுகிறது.

இளைய ராஜா இசை அமைத்திருந்தால் ஐம்பதுகளில் பிறந்தவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம் . எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை. திருவாசகம் இசையமைப்பு போல் தான் அதுவும் வழக்கொழிந்து போயிருக்கும்.

இன்னும் சில நாள் பொறுத்துப் பாருங்கள். இந்த பாடல் தமிழ் நாட்டில் உள்ள பலபேருக்கு பிடித்து விடும்.

வந்தே மாதிரம் பாடல் நன்றாக இல்லை என்று பாடகர் ஜேசுதாஸ் உட்பட பலபேர் சொன்னார்கள்.

கடைசியில் அது எல்லோருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது தான் நடக்கப் போகிறது இப்போதும்.

Anonymous said...

Absolutely it is a noise.

பெசொவி said...

மஞ்சள் கமென்ட் : என்று முடியும் இட்லி வடையின் சிண்டு முடியும் வேலை ?

அ. நம்பி said...

`பாட்டு' (பாட்டா அது?) சகிக்கவில்லை.

`இசை'யும் (இசையா அது?) சகிக்கவில்லை.

Santhappanசாந்தப்பன் said...

இளையாராஜாவின் பாடல்கள் இளைஞர்களுக்குப் பிடிக்காதாம்... நல்ல ஜோக்!

Santhappanசாந்தப்பன் said...

கலாசார இசை என்று ஒன்று இருக்கிறது. நமது பாரம்பரிய இசைவடிவம் சில நொடிகளே வருகிறது.

தமிழ் மொழிக்கான பாடலில், மேலைநாட்டு ராப் முறை ஏனோ, சகிக்கலை!

Santhappanசாந்தப்பன் said...

"தமிழ் மொழி.. தமிழ் மொழி.. தமிழ் மொழி.. " என்று உச்சஸ்தாயில் கத்துகிறார்கள்.. அது போதாதென்று, ஆரோமலே மெட்டில், யாரோ ஒருவர் கதறுகிறார்...

என்ன கொடுமை சார் இது

கௌதமன் said...

நடுவில் மோகன ராகத்தில் வருகின்ற இடம் மட்டும் நன்றாக இருக்கிறது.

வலைஞன் said...

நான் என்ன எழுதறேனோ அதுதான் கதை!
நான் என்ன எடுக்கறேனோ அதுதான் படம்!!
அதைப்பார்த்தே ஆகவேண்டும்;இது மக்களின் தலைவிதி!!!
......ஐயையோ... இது காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பேசும் வசனமுங்கோ!!யாரும் தப்பா புரிஞ்சுகாதீங்கோ!

sathish (bengaluru) said...

Gaana Kabali,

Illayaraja's music was loved and supported by youngsters of that time. even ARR has worked with illayaraja during his young age, who can match illayaraja's tamil. we are not expecting..."Indiya thollai --katchigalil muthal muraiyaga isaiamaitha sila nodigalileya " I am not against ARR (am a great fan of both musicians) as they are pillars of tamil. The message here is the works of Illayaraja and Vaali should be valued at this tamil conference.

Anonymous said...

நாராசமா இருக்கு.
இதுக்கு பதிலா பா விஜய் எழுதி அதை விஜய் அந்தோனி குத்து மியூசிக் போட்டு, கூடவே இளைய தளபதி விஜய் ஆடி இருந்தா நல்லா இருந்து இருக்குமோ?

ரிஷபன்Meena said...

தமிழ் தாய் வாழ்த்து மாதிரி இதை அதிகாரப்பூர்வ பாட்டாக அறிவித்து அதை எல்லா விழாக்களிலும் பாடனும்னு கட்டாயமாகாத வரை....

இதனால் ஒரு தொந்தரவும் இல்லை.

Krish said...

நல்லா இருக்கு.

Epitome of Negativity said...

"எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை"
Dont write rubbish pls... u mean to say that 25yrs old ppl like me dont like Ilayaraja's music?! grow up boss...come out of your small circle...

(-!-) said...

// Krish said...
நல்லா இருக்கு.//

செம்மொழிப் பாட்டா? இட்லிவடைபோஸ்டா?

tamilan, said...

""""""எல்லா விருப்பு வெறுப்புகளையும் தள்ளி வைத்து விட்டு இசை மற்றும் தமிழ் என்பதற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுப் பாருங்கள்!!!""""".

Rare music!. Try to listen ,if need 3 times.

Tamilan
Qatar

ஸ்ரீனி said...

சகிக்கலை!!

அது சரி, ஆரம்பத்தில ‘யாதும் ஊரே, யாவரும் கேளீர்’ என்று வருகிறதே, அது ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தானே!! இதெல்லாம் சரியா விழுந்திருக்காதுன்னு நினைக்கிறேன்!! அது சரி கபாலி சொன்ன மாதிரி எல்லாருக்கும் புடிச்சுப் போயிடிச்சுன்னா அப்புறமாப் போயி ஒரு சின்ன மசோதா பாஸ் பண்ணி, நாங்க தமிழறிஞ்சர்களெல்லாம் செய்த ஆராய்ச்சியில ’கேளீர்’ என்பது தான் சரின்னு சட்டமாக்கிட்டப் போச்சு இல்லை...

பம்மல் சம்பந்தம் கமல் சொல்ற மாதிரி, பாட்டு என்ற பேர்ல ரகுமான் கத்தினாக்கா கேட்டுக்கணும், ஆராய்ச்சி எல்லாம் பண்ணக்கூடாது...

Krish said...

/////
செம்மொழிப் பாட்டா? இட்லிவடைபோஸ்டா
////

ரெண்டுமே

Nanban said...

Personally, I liked this song very much. When I heard it for the first time, I didn't like it and I commented that this song is a mixture of many of AR's old songs. Later, I started listening to the song again and I started to like the song more and more as I heard it again and again.

ங்கொப்பன் said...

இங்கு தான் ரஹமானின் இசை தோற்கிறது. ராஜாவை இசை அமைக்கச்சொன்னால் அவர் சங்க கால இசைக்கருவிகள் (யாழ், உறுமி, ...) கொண்டு ஒரு கலக்குகலக்கியிருப்பார்.

Gaana Kabali said...

என்னுடைய பின்னூட்டம் படித்துவிட்டு பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி.

இப்பொழுது நான் எதுவும் சொல்ல விரும்பவில்ல.

பொறுத்திருந்து பாருங்கள்.

இசைப்பித்தன் said...

நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர். இளையராஜா ஏற்கனவே மார்க்கெட் இல்லாத ஆள். அவர் போடும் வயிற்றுவலிப் பாடல்களிலிருந்து தமிழகத்துக்கு விடுதலை கிடைத்ததே ரஹ்மானால்தான்.

அது மட்டும் இல்லை. அவர் ஒரு மனிதாபிமானம் இல்லாத மனிதர் என்பது சாரு, ஷாஜி போன்ற இசை விமர்சகர்கள் வழியாக நிரூபணமும் ஆகியிருக்கிறது.

வேண்டுமானால் ஷாஜி எழுதிய அருமையான இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

இளையராஜாவின் இசை காபி அடிக்கப்பட்டது, (”இதே பாடல் கேனடாவின் பாப் இசைக்குழுவான The Four Lads 1953ல் வெளியிட்ட Istanbul, Not Constantinople எனும் பாடலின் நகல் என்றதொரு விமர்சனம் இப்போது இணையப்பக்கங்களில் வலம்வருகிறது”), இளையராஜாவின் ஆன்மிகம் கேவலமான ஒன்று (”லட்சக்கணக்கான நசுக்கப்பட்ட ஏழை மக்கள் ஒருவேளை உணவுக்காக போராடிக்கொண்டிருக்கையில், ஐம்பது லட்சம் மதிப்புள்ள தங்கப் பாதத்தை கோவில் பிரதிஷ்டைகளுக்கு அணிவிப்பதால் நீங்கள் சிறந்த மனிதர் ஆகிவிடுவீர்களா? லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு 12 கோபுரங்கள் இருக்கும் ஒரு கோவிலுக்கு 13ஆவது கோபுரம் ஒன்றை கட்டுவதன் மூலம் நம் சமூகத்தைப் பீடித்திருக்கும் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா? அல்லது திருவாசகம், ரமணமாலை போன்ற பக்திப்பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பது பசியும், வறுமையும் தீர உதவுமா?”)என்பவற்றையும் இசை விமர்சகர் ஷாஜி ஆதரபூர்வமாக நிருபித்திருக்கிறார்.

அதுவுமில்லாமல் அவர் நவீன இசையை அறியாதவர் என்பதையும், ஷாஜி, சாரு இருவரும் தங்கள் பல கட்டுரைகள் மூலம் நிரூபித்திருக்கிறார்கள்.

நல்லவேளையாக அப்படிப்பட்ட ஒருவர் நம் தமிழ்நாட்டின் கீதத்தை இசைக்குமாறு நம் அரசு நினைக்கவில்லை.

வந்தே மாதரம், ஜெய் ஹோ போன்ற நவீன இசைகளைத் தந்த ரஹ்மான்தான் அதற்கு சரியான ஆள்.

Balu said...

/**** Gaana Kabali said...
இளைய ராஜா இசை அமைத்திருந்தால் ஐம்பதுகளில் பிறந்தவர்களுக்கு வேண்டுமானால் பிடிக்கலாம் . எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு பிடிக்க வாய்ப்பில்லை. திருவாசகம் இசையமைப்பு போல் தான் அதுவும் வழக்கொழிந்து போயிருக்கும்.***/

Your argument is obsolutely idiotic!
அப்படியென்றால் 1800 களில் வாழ்ந்தவர்கள் தான் (Bach, Mozart, Beethoven) தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், ஷியாமளா சாஸ்திரி அவர்களின் பாடல்களை ரசிக்க வேண்டுமா?? பாரதியின் கவிதையை ரசிக்க பாரதி காலத்தில் நான் வாழ்ந்திருக்க வேண்டுமா???

Balu said...

Dear Gana Kabali,
I am able to judge you after seeing your favorite music, no wonder in your comments. please go ahead with your thoughts.

sathish (bengaluru) said...

Hello isai pithan,

We should listen and comment only on their songs.not into their personal life(contributions). If ARR was same like Illayaraja the same Saji and charu will write ARR copies illayaraja's style of music. whoever it is their achievements will stand for lifetime and not the saji's and charu's.
we are looking way beyond the songs. both are pillars of tamilnadu. We should refrain from comparing each other and just comment on their songs.

Balu said...

Dear Isaipithan,
Will charu and Shaji find scale or raaga if you sing a song? if so then i accept their criticism, if not their comments are meaningless.
I love songs composed by Ilayaraja and not Ilayaraja.

Anonymous said...

நீங்கள் இசைபித்தன் அல்ல இரைச்சல்பித்தன்.....

Gaana Kabali said...

//Both (Ilayaraja and ARR) are pillars of tamilnadu. We should refrain from comparing each other and just comment on their songs.//
-Black

நாங்க ஒழுங்கா தான் இருக்கிறோம் Black சார்!. இந்த "இட்லி வடை " தான் சிண்டு முடிஞ்சி விட்டுட்டு வேடிக்கை பார்க்கறாங்க.

Gaana Kabali said...

பாலு அவர்களே !

நகைச்சுவையாக சென்னைத் தமிழில் எழுத ஒரு வலைத்தளம் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எழுதப்பட்ட என்னுடைய முகப்பு அது.

அதில் நகைச்சுவைக்காக அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன். அதை உண்மை என்று எண்ணி என்னை எடை போட்டுவிட்டீர் போலும்.

இளைய ராஜா உலகப் புகழ் பெற்ற மிகச் சிறந்த இசையமைப்பாளர்.

A .R .ரகுமான் தலைக்கனம் இல்லாத இசையமைப்பாளர்.
ஒப்புக்கொள்கிறேன்.

தங்கள் மனதைப் புண் படுத்தியதற்கு வருந்துகிறேன்.

Balu said...

/** Gaana Kabali said...
பாலு அவர்களே !
A .R .ரகுமான் தலைக்கனம் இல்லாத இசையமைப்பாளர்.
ஒப்புக்கொள்கிறேன்.***/

No body wants the weight of the composer's head, we want the music from them which should touch our soul.

இசைப்பித்தன் said...

அடப்போங்கப்பா.. இட்லிவடையே இளையராஜா ஏன் இசையமைக்கவில்லை என்பதை நக்கலாகத்தான் கேட்டிருக்கிறார் என்பது சதா கருணாநிதியைப் புகழ்ந்து கொண்டிருக்கும் வாலியோடு சேர்த்துக் கேட்டபோதே தெரியவில்லையா? வாலி, இளையராஜா இருவரையும் இட்லிவடை க.நாவின் ஆட்களாக நினைப்பதால் அவர்கள்தான் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நேச்சுரலாக நினைக்கிறார்.

//Will charu and Shaji find scale or raaga if you sing a song? if so then i accept their criticism, if not their comments are meaningless.//

ஷாஜிக்கும், சாருவுக்கும் கர்நாடக சங்கீதமும், மேற்கத்திய க்ளாஸிக்கலும் இலக்கணபூர்வமாகத் தெரியாது என்பது எனக்கும் தெரியும். அதை அவர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உலக இசை அறிந்தவர்கள். இருவரும் பல உலக இசைக்கலைஞர்களைப் பற்றி, அவர்கள் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். பல இணையதளங்களில் தேடி, பல மணி நேரம் செலவழித்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கடுமையான உழைப்பு அது. அந்த வகையில் ஷாஜிக்கும், சாருவுக்கும் இளையராஜாவை இசைப்பூர்வமாக அணுகத் தெரியாவிட்டாலும், அவருடைய வாழ்க்கையை, இசைப்போக்கை அவர்களால் எளிதாகக் கண்டுகொள்ள முடியும்.

மொஸார்ட்டையும், பீத்தோவனையும் தெளிவாகவே மேற்கோள் காட்டிதான் ஷாஜி பேசுகிறார். இளையராஜாவின் கற்பனை வறட்சி திடீரென்று குறைந்ததற்குக் காரணம் அவருடைய மனிதத்தன்மையற்ற செயல்களான கோயில்களுக்குப் பணத்தைச் செலவழித்துதான் காரணம் என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார். பீதோவனும், மொஸார்ட்டும் அப்படிக் கோயிலில் செலவழித்தவர்கள் இல்லை.

எம்மெஸ்வியும், கே.வி.மகாதேவனும் திரையுலகில் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விலகியதற்குக் காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதால். ரஹ்மானின் இசை வி.தா.வருவாயாவில் நன்றாக இல்லை என ஷாஜி, சாரு இருவரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்குக் காரணம் திடீரென்ற கவனக்குறைவுதான். ஆனால் இளையராஜாவின் படைப்பூக்கம் குறைந்ததற்குக் காரணம் அவர் மனிதத்தன்மையில்லாமல் போனதுதான். கோயில்களையும், சாமியார்களையும் கட்டிக்கொண்டு அழுவதால்.

இங்கே பின்னூட்டமிட்டுக் குமுறும் பலரும் பரந்த உலக இசை அறியாதவர்கள். பிராமணியத்தால் கட்டமைக்கப்பட்ட கர்நாடக சங்கீதம் மட்டுமே இசை என நினைப்பவர்கள். ஷாஜியின் ஒரு கட்டுரையைக் கூடப் பொருட்படுத்திப் படிக்காதவர்கள்.

Gaana Kabali said...

//No body wants the weight of the composer's head, we want the music from them which should touch our soul.//-Balu

இளையராஜாவின் குணத்தை பற்றி தாங்கள் ஒத்துக் கொண்டதற்கு நன்றி.!

அவருடைய இசை சிறந்த இசை தான், நானும் அவருடைய இசைக்கு ரசிகன் தான் .

இப்போது என்னவோ அதையும் தாண்டி இன்னும் சிறந்த இசை இருப்பதை என் மனம் அடையாளம் கண்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

Anonymous said...

/*** இசைப்பித்தன் said...
நல்ல சென்ஸ் ஆஃப் ஹ்யூமர். இளையராஜா ஏற்கனவே மார்க்கெட் இல்லாத ஆள். அவர் போடும் வயிற்றுவலிப் பாடல்களிலிருந்து தமிழகத்துக்கு விடுதலை கிடைத்ததே ரஹ்மானால்தான். ****/

Your joke is very nice. I was laughing for an hour after reading your comment, hahahahahaha.

Balu said...

/***ஷாஜிக்கும், சாருவுக்கும் கர்நாடக சங்கீதமும், மேற்கத்திய க்ளாஸிக்கலும் இலக்கணபூர்வமாகத் தெரியாது என்பது எனக்கும் தெரியும். அதை அவர்களே எழுதியும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உலக இசை அறிந்தவர்கள். இருவரும் பல உலக இசைக்கலைஞர்களைப் பற்றி, அவர்கள் வாழ்க்கை வரலாற்றைக் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்கள். பல இணையதளங்களில் தேடி, பல மணி நேரம் செலவழித்து பல விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். கடுமையான உழைப்பு அது. அந்த வகையில் ஷாஜிக்கும், சாருவுக்கும் இளையராஜாவை இசைப்பூர்வமாக அணுகத் தெரியாவிட்டாலும்,***/

Then they are doing the critic about Ilayaraja in person and not about his music. They do not know about music grammer but they know about world music, funny!! What you are trying to say?then what they will do critic about music?

Don't you know about Mozart personal life fully?? i am sure you do not.you are quoting mozart's name here because of his music not because of his personal life.

Again I am saying and i am very sure that you bloody cheap you do not know a single word about any type of music.It is too waste to argue with you further.
Bye.

Balu said...

/***அவருடைய இசை சிறந்த இசை தான், நானும் அவருடைய இசைக்கு ரசிகன் தான் .**/

No wonder in admiring on Raja's music.

/***இப்போது என்னவோ அதையும் தாண்டி இன்னும் சிறந்த இசை இருப்பதை என் மனம் அடையாளம் கண்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.****/

Who cares??? It is your perception, no body is perfect in the world and there is no baseline to define the perfect.

Balu said...

/****இங்கே பின்னூட்டமிட்டுக் குமுறும் பலரும் பரந்த உலக இசை அறியாதவர்கள்.***/

பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது, I completed Diploma in Music, from Trinity college of music, London in clasiical Guitar. I am sure that you will not know about classical guitar, after learning western classical i admired on Raja's composition, to explore and to comment on others on particular area you should learn something you comment:)
I also learnt carnatic music and i am not a brahmin. So i can say proudly that Raja is one of the best composer in my perception.

Anonymous said...

/*****ரஹ்மானின் இசை வி.தா.வருவாயாவில் நன்றாக இல்லை என ஷாஜி, சாரு இருவரும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்குக் காரணம் திடீரென்ற கவனக்குறைவுதான். ஆனால் இளையராஜாவின் படைப்பூக்கம் குறைந்ததற்குக் காரணம் அவர் மனிதத்தன்மையில்லாமல் போனதுதான். கோயில்களையும், சாமியார்களையும் கட்டிக்கொண்டு அழுவதால்.****/


What happened to you? Because of summer? or are you like this by nature? Rahman also has very strong beleif in Islamic, he is giving so much of money for his relegious belives.

இசைப்பித்தன் said...

//Then they are doing the critic about Ilayaraja in person and not about his music. They do not know about music grammer but they know about world music, funny!! What you are trying to say?then what they will do critic about music?//

அன்புள்ள பாலு,

கர்நாடக சங்கீதம், மேற்கத்திய க்ளாஸிக்கல், ஜாஸ் போன்ற இசை வடிவங்களைக் குறித்து நல்லதாகவோ, கெட்டதாகவோ சொல்வதற்குத்தான் இசையறிவு வேண்டும். ஆனால், பாப், ராக், ஹிப்-ஹாப், ராய், லத்தீன் அமெரிக்க இசை போன்ற இசை வகைகளின் இசைக்கலைஞர்களைக் குறித்து உணர்ச்சிபூர்வமாகக் கட்டுரை எழுத எந்த இசையறிவும் தேவையில்லை. வேண்டுமானால் ஷாஜியின் ‘சொல்லில் அடங்காத இசை’, சாருவின் ‘கலகம், இசை, காதல்’ இரண்டையும் படித்துப் பாருங்கள். இசைக்கலைஞர்கள் பலரின் வாழ்க்கையையும், சமூகச்சூழலையும் எவ்வளவு உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்கள் என்று தெரியும். பின் எதற்காக நம் இலக்கிய உலகமும், பல எழுத்தாளர்களும் ஷாஜியை சிறந்த இசைவிமர்சகர் என்று சொல்கிறார்கள்?

இசையை விமர்சிக்க இசையறிவு வேண்டும் என்று சொல்வதே ஒரு மேட்டுக்குடி, நிலபிரபுத்துவ மனநிலைதான்.

//Don't you know about Mozart personal life fully?? i am sure you do not.you are quoting mozart's name here because of his music not because of his personal life.//

மொஸார்ட்டைக் குறித்து ”அவர் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதர் அதனால் அவர் இசை உலகின் மிகச்சிறந்த இசையில் ஒன்று” எனச்சொல்வது நானில்லை. இசை விமர்சகர் ஷாஜி. அவருக்கு நிச்சயம் மொஸார்ட்டின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்துத் தெரிந்தே இருக்கும். இசையின் இலக்கணங்கள் தெரியாவிட்டாலும், இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைக் குறித்து அவருக்கு நன்றாகவே தெரியும். அவருடைய இசை பேஸ்மெண்ட் வேண்டுமானால் வீக்காக இருக்கலாம், ஆனால் தனிப்பட்ட வாழ்க்கை என்ற விஷயத்தில் அவர் பில்டிங் ஸ்ட்ராங்க்தான்.

//What happened to you? Because of summer? or are you like this by nature? Rahman also has very strong beleif in Islamic, he is giving so much of money for his relegious belives.//

ரஹ்மான் ஒரு சூஃபி முனிவருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தர்கா கட்டித் தந்திருக்கிறார் என்பதை அவரே ஒரு விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால், சூஃபி பரம்பரையிலும், மன நெகிழ்ச்சியிலும் இருக்கும் ஆன்மிகம் ரஹ்மானிடம் இருக்கிறது. ஆகவே அது உண்மையானது. ஆனால் இளையராஜாவோ பெரிய கோயில்களையும், சாமியார்களையும் பாராட்டி சனாதன வழி செல்கிறார். அது உண்மையில்லாதது. இதைக் குறித்து விளக்கமாகவே சாரு எழுதியிருக்கிறார். நீங்கள் அதைப் படித்ததில்லை எனத் தெரிகிறது.

Anonymous said...

பித்தன் என்ற தமிழ் சொல்லுக்கு நிகரான ஆங்கில சொல் என்ன ?

லூசு என்பது அதற்கு பொருந்துமா.

அடைக்கலசாமி.

Anonymous said...

/***ரஹ்மான் ஒரு சூஃபி முனிவருக்கு கோடிக்கணக்கில் செலவு செய்து தர்கா கட்டித் தந்திருக்கிறார் என்பதை அவரே ஒரு விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். ஆனால், சூஃபி பரம்பரையிலும், மன நெகிழ்ச்சியிலும் இருக்கும் ஆன்மிகம் ரஹ்மானிடம் இருக்கிறது. ஆகவே அது உண்மையானது. ஆனால் இளையராஜாவோ பெரிய கோயில்களையும், சாமியார்களையும் பாராட்டி சனாதன வழி செல்கிறார். அது உண்மையில்லாதது.****/


நீங்கள் யாரென்று என்னால் ஊகிக்க முடிகிறது....அதே சூஃபிக்கு இளையராஜா ஏதாவது தர்கா கட்டி கொடுத்தால் இளையராஜாவுக்கும் ஆன்மீகம் வந்து விடும் அப்படித் தானே பித்தரே!!!!

Anonymous said...

Horrible!!!!

Anonymous said...

/****இசையை விமர்சிக்க இசையறிவு வேண்டும் என்று சொல்வதே ஒரு மேட்டுக்குடி, நிலபிரபுத்துவ மனநிலைதான்.***/

Are you really a mad????

Baski

sathish (bengaluru) said...

Imsaipithan saji matrum charupithanaga irrukum podhu illayaraja kadavul pithanaga irukka kodatha ??

sariyana imsaipithanaya neer.

NO said...

நண்பர் இட்லி வடை அவர்களின் தளத்திற்கு வரும் அன்பர்களுக்கு,

இங்கே திரு இசைபித்தன் என்ற ஒரு அரைகுறை அசட்டுத்தனமாக புழுதி வாரி கொட்டிக்கொண்டு இருக்கின்றது! தான் தூக்கி எரியும் புழுதி தன் மேலேயே வந்து விழுகிறது என்ற சிறு கவலையும் இல்லாமல் அல்பத்தனமாக ஆர்பட்டாம் செய்கிறார்!! இவரை தயவுசெய்து யாரும் நெருங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது!

(Intelligent ones speak for they have something to say. Fools speak as they have to say something. This deaf man, named ironically as Mr Isai Pithan belongs to the second category and vommits nothing but nonsense. To add more colour and odour to his puke our friend quotes a couple of names as if they matter and as if they their words mean anything. The way he has written about Ilayaraja he surely is either deaf or dead. But since dead men dont talk I assume this ogre is a deaf nut and that too a stupid, ill fitting and corroded one).

நண்பர் திரு இட்லி வடை, என்னுடைய பின்னூட்டத்தை தடை செய்யாமல் வெளி இட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!

நன்றி

Anonymous said...

Why Gowtham Menon is here??

Venkat R said...

Somebody said like thiruvasagam is out dated. Man its tamil and true tamil it never gets out dated. Even if today your so called poets try to create a poem in tamil they cannot. Its a unique master piece. No one can replace it. Long live tamil.. Long live Thiruvasagam..

Anonymous said...

இசைப்பித்தரே, நீங்கள் வெறும் பித்தர் என்று பெயர் வைத்துக்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறன். இசையைப் பற்றி சாருவும், ஷாஜியும் எழுதியதை மேற்கோள் காட்டுவதில் இருந்தே உங்கள் இசை அறிவு புரிகிறது. இதற்கு மேல் இசையைப் பற்றி உங்களிடம் பேசுவதில் அர்த்தம் இல்லை.

Anonymous said...

ithellaam oru paatu, ithukku oru group support vera panraanga, pongappa poi vera velaia paarunga.

pachhamilaka said...

இசை சாரி............ பித்தன் இதுதான் சரி உங்க பின்னுடம் கண்டிப்பா வரணும் என்பதற்காக ஒரு நல்ல இசையை வசைபடாதிங்க

pachhamilaka said...

பித்தன் அப்புறம் இதோட போச்சுன்னு நினைக்காதிங்க எனக்கு தெரிந்த எல்லா கெட்டவார்த்தையாழும் உங்களை திட்டிவிட்டேன்

sathish (bengaluru) said...

Pachhamilaka romba karam.

Anonymous said...

சாறு, ஷாஜி என்ற இரண்டு அரைகுறைகளை மேற்கோள் காட்டிப் பேசிய இன்னொரு அரைகுறை இம்சைபித்தன் படிக்க வேண்டிய முக்கியமான கட்டுரை இது. யார் இந்த மணிரங்கு? அட்டகாசமாக எழுதியிருக்கிறார். அதிலும் முதல் பாரா அரைகுறைகளை செருப்பால் அடிக்கும் ஒன்று.

காற்றில் கரைந்த கரஹரப்ரிய

Anonymous said...

/**இளையராஜாவின் கற்பனை வறட்சி திடீரென்று குறைந்ததற்குக் காரணம் அவருடைய மனிதத்தன்மையற்ற செயல்களான கோயில்களுக்குப் பணத்தைச் செலவழித்துதான் காரணம் என்பதைத் தெளிவாகவே குறிப்பிடுகிறார். **/

eppa seekaram ivaruku yaravathu kilpakam address kodunga