பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 21, 2010

வெள்ளி வழக்காடு - இன்பா

வணக்கம் அன்பு நண்பர்களே. ஒரு சிறிய இடைவேளைக்கு பின் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மீண்டும் "சன்டேனா இரண்டு " தொடங்க மேலும் சில வாரங்கள் பிடிக்கும் என்பதால் இந்த 'வழக்காடு மன்றத்திற்கு' ஏற்ப்பாடு செய்து இருக்கிறேன்.

வழக்காடு மன்றத்தின் இந்த முதல் பகுதியில் கடந்த சில வாரங்களில் நடந்த சில வழக்குகள்,அதன் தீர்ப்புகள் பற்றி விவாதிப்போம்.

மும்பை வெடிகுண்டு வழக்கில், 35 கோடி ரூபாய் செலவு செய்து பாதுகாக்கபட்ட(!) தீவிரவாதி அஜ்மல் கசாப் அவர்களுக்கு ஒரு வழியாக மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்க, இதற்காக நீதிபதிகளின் குழுவே கலந்து விவாதித்தது. "அவனை பிடித்தபோதே,சுட்டு இருந்தால் எவ்வளவு செலவுகள் அரசுக்கு மிச்சம் " என்றார் ஒரு நண்பர் என்னிடம்.

இதனை நாள், மட்டன் பிரியாணி சகிதம் கசாபை வைத்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள், அதன் மீதான நடவடிக்கைகள், இனி இப்படி நடைபெறாமல் இருப்பதற்க்கான செயல்திட்டங்கள்...ஒன்றுமே நமக்கு தெரியவில்லை

என் நண்பர் சொன்னது சரிதான் என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு???

போதாகுறைக்கு, குற்றவாளிகளின் மனதை ஆழ் நிலைக்கு மூழ்க வைக்கும் உண்மை அறியும் சோதனையை சட்டவிரோதம் என்று கோர்ட் அறிவித்துவிட்டது. இனி, தீவிரவாதிகள் யாராவது பிடிபட்டால், பிரியாணி,டாஸ்மாக் சகிதம் அவர்கள் காலில் விழுந்துதான், காவல் துறை அதிகாரிகள் உண்மையை வரவழைக்க வேண்டும் போலிருக்கிறது.

பரமஹம்ச நித்தியானந்தா மீது புதுவை நீதி மன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அவர் காவி உடை அணிந்து, ஆன்மிகத்தின் பெயரால் மக்களை மோசடி செய்து விட்டார் என்பது அந்த வழக்கு.

இதன் தீர்ப்பை நான் மிக ஆவலுடன் எதிர் பார்க்கறேன். காரணம்,ஒரு வேளை நித்திக்கு எதிராக முடிவு வந்தால், இதன்படி, வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, அரசியலின் பெயரால் காலம் காலமாக நம்மை மோசடி செய்து வரும் அரசியல்வாதிகளை எல்லாம் தண்டிக்கலாம் அல்லவா!??

ரொம்ப நாளைக்கு பின், சுப்ரமணிய சுவாமியின் பெயர் செய்திகளில் அடிபடுகிறது.ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், அமைச்சர் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு நோட்டீஸ் தரக்கோரி டெல்லி உயர் நீதி மன்றத்தை அணுகி இருக்கிறார் நம்ம சு.சுவாமி.


நமது வழக்காடு மன்றத்தின் முக்கிய வழக்காக நான் முன்னிறுத்துவது "வாடிய பயிரை கண்டபோதல்லாம் வாடினேன்" என்று மிகவும் எளிய வரிகளில் அதே சமயம் அழுத்தமான மனித நேய கருத்துக்களால் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து இருக்கும் வடலூர் இராமலிங்க அடிகளாரை பற்றியது.

"அருட்பெரும் ஜோதி..தனிப்பெரும் கருணை" என்று ஜோதி வழிப்பாட்டை பரப்பிய இராமலிங்க அடிகள் அவர்களுக்கு, சிவலிங்கத்தை வழிபடும் சைவர்கள் ஆறுமுக நாவலர் தலைமையில் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். "தேவாரம்,திருவாசகம் ஆகியவையே அருட்பாக்கள். மற்றது எல்லாம் வெறும் மருட்பாக்கள் " என்ற அவர்களின் பிரச்சாரத்திற்கு, "தன்னை உணர்ந்தோர் பாட்டு எல்லாம் அருட்பா. மற்றது எல்லாம் மருட்பா " என்று பதில் தந்தார் வள்ளலார். அப்போதே,கடலூர் நீதி மன்றத்தில், அடிகளாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதில் ஆஜராக வள்ளலார் நீதிமன்றம் வந்த போது, வழக்கு தொடர்ந்த ஆறுமுக நாவலரே அவரை பார்த்து எழுந்து வணங்கி நிற்க, அதை பார்த்த நீதிபதி,"எதிரிகளே வணங்கும் வள்ளலார்,தவறாக பேசி இருக்க மாட்டார்" என வழக்கை தள்ளுபடி செய்ததாக படித்தேன்.

அதை போன்ற ஒரு சம்பவம்..வடலூர் கருவறையில் லிங்க உருவத்தை சமிபத்தில் பிரிதிஷ்டை செய்தார் சபானந்த சிவாச்சாரியார் என்பவர். இதை ஏற்காமல் இந்து சமய அறநிலைய துறை தொடர்ந்த வழக்கில் ஒரு அழகான தீர்ப்பை தந்து இருக்கிறார் உயர் நீதி மன்ற நீதிபதி சந்துரு அவர்கள்.

அதன் சாரம் இதோ..

" அவரது ஆன்மிக எண்ணங்கள் யாவும் ஜோதியை அடிப்படையாய் வைத்தே இருக்கின்றன. 'ஆதியும்,நடுவும், அந்தமும் இல்லா அருட்பெரும் சோதி என் உளத்தே' என்கிற ஜோதி வழிபாட்டை முன் எடுக்கும் நோக்கத்துடன்தான் சத்திய ஞானசபை தொடங்கப்பட்டு, 1872 இல் ஜோதி வழிபாட்டு முறைகள் பின் வருமாறு வகுக்கப்பட்டு உள்ளன.

'தகர பெட்டியில் வைத்து, ஜோதியை ஏற்ற வேண்டும்.அது கண்ணாடியில் பிரதி பலிக்க வேண்டும்.எண்ணெய் பயன்படுத்தி ஜோதியை ஏற்ற வேண்டும். ஜோதி எரியும் போது, அனைவரும் மௌனமாக இருக்க வேண்டும்' என்கிறது அவை. மேலும், இதில் பங்கேர்ப்பவர்களுக்கு, இதிகாசங்கள், புராணங்கள்,வேதங்கள், சைவம்,வைணவம்,வேதாந்தம்,சித்தாந்தம் போன்ற நம்பிக்கைகள் கூடாது என்றும் விதி முறை கூறுகிறது. எனவே, லிங்க பிரதிஷ்டை செய்வது வள்ளலாருக்கு எதிரானது" என்று தீர்ப்பு வெளி வந்து இருக்கிறது.

இதை போன்று, முஸ்லிம் மக்களிடையே சமிப காலமாக "தர்கா வழிபாடு" காரணமாக கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன. தர்கா என்பது இஸ்லாமிய பெரியவர்களின் சமாதி. ஒரு பிரிவு அங்கு சென்று வழிபடுவதுதான் சர்ச்சைக்கு காரணம்.

"தர்கா வழிபாடு இஸ்லாத்துக்கு விரோதமானது. ஆண்டவனுக்கு மத்தியில் மனிதர்களுக்கு இடம் இல்லை " என்று ஜைனுல் ஆபிதீன் தலைமையிலான தவ்ஹீத் ஜமாஅத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர்.

"மார்க்க முறைகள் வழி வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் சமாதிக்கும், ஆண்டவனுக்கும் இடையே சூட்சும தொடர்பு உள்ளது. அதனால், தர்காவுக்கு சென்று வழிபடுவதும், தொழுகை செய்வதும் தவறு இல்லை " என்கிறது இன்னொரு தரப்பு. (எல்லா மதத்தினரும் செல்லும் நாகூரில் உள்ளது தர்கா).

இதை பற்றி நன்கு அறிந்த இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நமக்கு இவ்விவகாரம் பற்றி மேலும் புரிந்து கொள்ள இயலும்.

ஜோதி வழிபாடு, தர்கா வழிபாடு போன்று 'சிலைகள்' பற்றி நீண்ட நாட்களாக ஒரு கேள்வி என்னை உறுத்தி வருகிறது. திராவிட கழக அபிமானிகளிடம் இருந்து, தர்க்க ரீதியான பதிலை நான் இந்த கேள்விக்கு எதிர்பார்க்கிறேன்.

ஊருக்கு ஊர், தந்தை பெரியாருக்கு சிலைகள் திறப்பது ஏன்? முற்போக்கு கோணத்தில் பார்த்தால் அது வெறும் 'கல்' தானே? அதில் எப்படி 'பெரியார்' தெரிகிறார்??

உடனே பார்ப்பன பதிவு என்று எழுதாமல், கொள்கைப்பூர்வமாக இந்த கேள்விக்கு பதிலை வரவேற்கிறோம்.

இன்னொரு வழக்கு..13 வருடங்களாக நடந்து வரும் வழக்கு..இதில் 7 முறை நீதிபதிகள் மாற்றம் நடந்து இருக்கிறது. அது.. தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவனர் குணங்குடி ஹனிபா மீதான வழக்கு.

பாபர் மசூதி இடிப்புக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு தேதி திருச்சி,ஈரோடு,திருச்சூர் ரயில் நிலையங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் அவர்.

" வன்முறையை ஒரு போதும் இஸ்லாம் போதிக்கவில்லை. யாருடைய உயிரையும் பறிக்க, யாருக்கும் மதத்தில் அனுமதி இல்லை. நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்பட்டு வருவதற்கு 13 வருடங்களாக சிறையில் இருக்கும் நானே உதாரணம். என் மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் , எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் நிரபராதி " என்கிறார் திரு, ஹனிபா.

அவர், சொன்னது போலவே, ஒரு முக்கிய வழக்கை தவிர, அவர் மீது போடப்பட்ட ஏனைய வழக்குகள் யாவும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. விரைவில், அவர் நிரபராதி என விடுதலை ஆவார் என தெரிகிறது. அவரது வழக்கறிஞரின் பெயர் என்ன தெரியுமா? சிவபெருமாள்.

10 வருடங்கள் சிறைக்கு பின் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட அல் உம்மா மதானி, நிரபராதி என விடுதலை செய்யப்பட்டது உங்களுக்கு தெரிந்ததே.

எதாவது குண்டு வெடித்தால், முஸ்லிம் தலைவர்கள் உடனே கைது செய்யப்படுவதும், பல வருடங்களுக்கு பின் நிரபராதி என விடுதலை செய்யப்படுவதும் எப்படி என்றே புரியவில்லை.
அவர் நிரபராதி என்றால், இத்தனை வருடங்களை அவர் சிறையில் இழந்ததருக்கு யார் பொறுப்பு? எதன் அடிப்படையில் கைது நடந்தது? எதாவது 'உள் விவகாரம்' இருக்கிறதா? ஒன்றுமே புரியவில்லை.

ஒன்று மட்டும் நமக்கு நன்றாக புரிகிறது.

அல் உம்மா மதானியோ, சங்கர மட ஜெயேந்திரரோ யாராக இருந்தாலும், சாட்சிகளை மாற்றவோ , சட்டத்தை வளைக்கவோ உடைக்கவோ முடிகிறது. அதனால்தான், பின்வரும் வரிகளை அடிக்கடி நாம் கூறி வருகிறோம்.

"சட்டத்தின் முன் அனைவரும் சமம்".


(நன்றி..மீண்டும் ச(சி)ந்திப்போம்).


-இன்பா

இந்த கருத்துக்கள் இன்பாவின் கருத்து, இட்லிவடையின் கருத்துக்கள் அல்ல :-)

16 Comments:

யதிராஜ சம்பத் குமார் said...

இன்பாவை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. இப்படி மொத்தமாக எழுதுவதை விட, தனித் தனி வழக்குகளாக எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். தற்போது துக்ளக் வார இதழில் ராண்டார் கை எழுதுவது போல்.

Anonymous said...

" (நன்றி..மீண்டும் ச(சி)ந்திப்போம்). " சந்திசிரிப்போம்னு தான இருக்கனும் spelling mistakeஆ?

Bala
Texas

Venkat said...

Hi Idlyvadaiare...

Could you please post the World Classical Tamil Conference Theme Song in your website. I understand Tamil Nadu Government is trying very hard to promote the song. Your website will be one of best place to start.

http://beta.thehindu.com/news/states/tamil-nadu/article434181.ece - Article

http://beta.thehindu.com/multimedia/archive/00117/WCTC_Theme_117421a.mp3 - Download Song

Venkat, Melbourne

Unknown said...

2012 ல உலகம் அழிய போகுதாம் அப்போ சரியாகிடும் எல்லாமே

Unknown said...

//மும்பை வெடிகுண்டு வழக்கில், 35 கோடி ரூபாய் செலவு செய்து பாதுகாக்கபட்ட(!) தீவிரவாதி அஜ்மல் கசாப் அவர்களுக்கு ஒரு வழியாக மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்//
தெண்ட செலவு. அவன அங்கியே சுட்டிருக்கனும்

Sitrodai said...

//தீவிரவாதி அஜ்மல் கசாப் அவர்களுக்கு ஒரு வழியாக மரண தண்டனை நிறைவேற்றி இருக்கிறார்கள்.//

'மரண தண்டனை வழங்கி இருக்கிறார்கள்' என்று இருக்க வேண்டும்.இன்னும் நிறைவேற்ற படவில்லை. அதற்கு பல காலம் ஆகலாம்

Gaana Kabali said...

//ஊருக்கு ஊர், தந்தை பெரியாருக்கு சிலைகள் திறப்பது ஏன்? முற்போக்கு கோணத்தில் பார்த்தால் அது வெறும் 'கல்' தானே? அதில் எப்படி 'பெரியார்' தெரிகிறார்??//


சின்ன வயசுலேர்ந்து நமக்கெல்லாம் பள்ளியில் சொல்லிக் கொடுப்பது, "இந்தியாவின் பெருமையே வேற்றுமையில் ஒற்றுமை" என்பதே!

அக்கண்ணோட்டத்தில் பார்த்தால், பெரியார் சிலையை வைத்தது பொருத்தமே!

இருவிதக் கருத்துகளும் இந்நாட்டில் இருக்கின்றன எனபதை உலகிற்கு எடுத்துக் காட்டும் ஒரு அபூர்வ சின்னம் இது!

கடவுளை மறுத்த பெரியார், அரங்கன் கோவில் முன் நின்று, அறிவுரை வழங்குவதாக கழகக் கண்மணிகளும்,
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார், இன்று சிலையாக கால் கடுக்க அரங்கன் முன் நின்று பிராயச்சித்தம் தேடிக் கொள்வதாக ஆத்திக அன்பர்களும் எண்ணிக்கொண்டு அவரவர் வழியில் செல்லலாம்.!!

சண்டையை நிறுத்துங்கப்பா!

போய், பொழைக்கற வழியைப் பாருங்க!

சிலையை உடைக்கவும் வேண்டாம்!
பூணுலை அறுக்கவும் வேண்டாம்!

இந்த கருத்து, எனக்கு முன்பே சிந்தித்த ஒரு வலை நண்பர் கருத்தும் கூட!

Anonymous said...

அஜ்மல் கசாப் குழுவினருக்கு உதவி செய்தவர்களை ( மும்பைலிருந்து )கண்டு பிடிக்க கசாபை உபயோகபடுதியிருக்க வேண்டும்.
அவனை உயிரோடு பிடித்ததன் காரணம் அதை கண்டு பிடிப்பதே
மீண்டும் அது போல சம்பவம் மீண்டும் நிகழ யாரும் உதவி செய்யாமல் இருக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று தெரியவில்லை. அவர்களுக்கு உதவிய மும்பை சமுக விரோதிகளை களை எடுக்க வேண்டும்.

Lenin P said...

நல்ல கட்டுரை. உங்களால் மட்டுமே இப்படி எல்லாம் எழுத முடியும்!!

நறுமுகை.
உங்கள் கருத்துக்களை பகிர, கொண்டாட ஓரிடம் www.narumugai.com

Anonymous said...

"அவனை பிடித்தபோதே,சுட்டு இருந்தால் எவ்வளவு செலவுகள் அரசுக்கு மிச்சம் " என்றார் ஒரு நண்பர் என்னிடம்.

---------

Grossly Wrong.
If not for his arrest, Pakistan would never have accepted that the attack originated in Pak. We were able to apply atleast some Diplomatic pressure on Pak because of this.

சுந்தரராஜன் said...

//பாபர் மசூதி இடிப்புக்கு பதிலாக 1997 ஆம் ஆண்டு தேதி திருச்சி,ஈரோடு,திருச்சூர் ரயில் நிலையங்...//

சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிப்புக்கு பதிலாக ....
என்றிருத்தல் சரியெனப்படுகிறது

Anonymous said...

பல செய்தி ஊடகங்கள் பாபர் மசூதி என்று தொடர்ந்து ஒரு தவறான தகவலை திட்டமிட்டு பரப்பிவருகின்றன. பாபர் மசூதி ஆப்கானிஸ்தானில் இருக்கின்றது. தற்போது அந்த மசூதியயை யுனெஸ்கோ அமைப்பு புனரமைப்பு செய்து வருகின்றனர். அயோத்தியில் தபால் நிலையம் காவல் நிலையம் உள்பட அனைத்தும் ஜன்மஸ்தான் போஸ்ட் ஆபீஸ் ஜன்மஸ்தான் தானா என்று அழைக்கப்படுகிறது. அது யாருடைய ஜன்மஸ்தான் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. எனவே இனிமேல் அயோத்தி பற்றி குறிப்பிடும் பொது பாபர் மஸ்ஜித் என்று குறிப்பிட வேண்டாம்.

வித்யா நிதி

கால்கரி சிவா said...

//பரமஹம்ச நித்தியானந்தா மீது புதுவை நீதி மன்றத்தில் ஒரு வழக்கு பதிவு செய்து இருக்கிறார்கள். அவர் காவி உடை அணிந்து, ஆன்மிகத்தின் பெயரால் மக்களை மோசடி செய்து விட்டார் என்பது அந்த வழக்கு.

இதன் தீர்ப்பை நான் மிக ஆவலுடன் எதிர் பார்க்கறேன். காரணம்,ஒரு வேளை நித்திக்கு எதிராக முடிவு வந்தால், இதன்படி, வெள்ளை வேட்டி சட்டை அணிந்து, அரசியலின் பெயரால் காலம் காலமாக நம்மை மோசடி செய்து வரும் அரசியல்வாதிகளை எல்லாம் தண்டிக்கலாம் அல்லவா!??
//

அப்போ காவி உடை அணிய ஒரு சர்டிபிகேட் போலீஸ் கிளியரேன்ஸ், அஃபிடவிட் போன்றவை வாங்க வேண்டுமா?

இது டெம்பரரி சாமிகளுக்கும் (உ.ம். ஐயப்ப சாமிகள், ஓம் சக்தி சாமிகள்) பொருந்துமா?

இல்லை கோடி கணக்கில் பணம் வைத்திருகுக்கும் சாமிகளுக்கு மட்டும்தானா.

காவி கட்டிக் கொண்டு திருப்பதிக்கு போறோம், பழனிக்கு போறம், அம்மனுக்கு கூழ் ஊத்துறோம் என ரசீது புக்/உண்டியல் ஆசாமிகள் மேல் சட்டம் பாயுமா?

இஸ்லாமிய வேடத்தில் தாடி, வழித்த மீசை, குல்லா போட்டுக் கொண்டு அவர்க்ள் கொள்கைக்குஇ விரோதமாக தண்ணியடித்தல், டாவட்டித்தல், நாளைக்கு ஐந்துமுறை தொழாமல் இருத்தல் போன்ற குற்றங்களை செய்தவர்களை போலீஸ் பிடிக்குமா?

சண்டே அன்னிக்கு சர்ச்சுக்கு போகாமல் சாட்டர்டே இரவில் தண்ணியடித்தால் ஹாங்க் ஓவர் ஆன கிறித்தவர்களை, பலவருடங்களாக் பாவ மன்னிப்பு கேட்கதாவர்களை போலீஸ் பிடிக்குமா?

இன்னும் கேள்விகள் வரும்

Anonymous said...

Kunnangudi Haniba should have applied for bail at the Supreme Court.I dont know why that was not done.

ஜீயார் said...

சிலையை பற்றிய என் கருத்து, அந்த காலத்தில் தன் எதிர்கால சந்ததிகளுக்கு தங்களைபற்றி செய்திகள், வாழ்க்கைமுறைகளை எடுத்துச்செல்லவே சிற்பங்களும், சிலைகளும், ஓவியங்களும் தேவைப்பட்டன. இன்றையகாலத்தில் இவையேதும் தேவையில்லை. கோவிலில் இருக்கும் சிலையையும் தலைவர்களின் சிலைகளையும் நீங்கள் ஒன்றாக பார்ப்பது தவறு. நீங்கள் கோவிலில் இருப்பதை கல்லாகவோ சிலையாகவோ பார்க்கவில்லை. கடவுளாக பார்க்கின்றீர்கள். ஆனால் தலைவர்கள் சிலைகள் ஒரு நினைவுச்சின்னம், நம் எதிர்கால சந்ததிகளுக்கு அந்த உருவம் ஒரு எடுத்துக்காட்டாக அமையலாம். பீச், பார்க் களில் திருவள்ளுவர் சிலைகளை வைத்திருப்பதை பார்த்திருக்கலாம். திருவள்ளுவரைப்பற்றி நமக்கு தெரிந்திருக்கலாம்(இன்னும் அவர் மைலாப்பூர் ஐயரா, கன்யாகுமரி நாடாரா என்ற ஐயம் இருப்பது வேறு). ஆனால் எத்தனையோ சிறு குழந்தைகள் இது யார் அப்பா என தன் தந்தையிடம் கேட்க, அவர் திருவள்ளுவரைப் பற்றி சில வார்த்தைகள் பேசலாம். இதைத் தவிற வேறு எந்த உபயோகமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

ஜடாயு said...

// அல் உம்மா மதானியோ, சங்கர மட ஜெயேந்திரரோ யாராக இருந்தாலும், சாட்சிகளை மாற்றவோ , சட்டத்தை வளைக்கவோ உடைக்கவோ முடிகிறது.//

ஜிகாதி பயங்கரவாதி குற்றவாளி தேசத்துரோகி மதானி தண்டனையில் இருந்து இரு மாநில அரசுகளின் உதவியுடன் தப்பித்ததையும், நிரபராதியான ஜெயேந்திரர் மீது போடப் பட்ட வழக்குகள் எதுவும் நிரூபிக்கப் பட முடியாமல் போய் வழக்கு உறைந்து விட்டதையும் ஒரே தட்டில் வைத்து எழுதியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விவஸ்தை கெட்ட ஒப்பீடு.