நக்சல்களை ஒடுக்குவதில் மாநில அரசுகளுக்கு உதவி செய்ய துணை ராணுவம் அனுப்பப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு நாள் கூறுகிறார். ஆனால் மறுநாள் அவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்கிறார். ஆனால் சிதம்பரம் பேச பேச ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. நக்சல்களை அழிக்க முப்படை எல்லாம் தேவையில்லை. நக்சல்கள் கொஞ்சம் பேர் தான் அவர்களை அழிக்க வேண்டும் என்ற நினைப்பு தேவை. இல்லை நாம் சந்தன கட்டை வீரப்பனை எவ்வளவு நாள் தேடிக்கொண்டு இருந்தோம் ? அதே போல தான் இதுவும் ஆகும்.
இன்னும் இரண்டு வருடங்களில் நக்ஸல்களை அடியோடு வேரறுப்போம் என்று, திருமாவளவன் தமிழக காங்கிரஸைப் பார்த்து முழங்கியது போல், உள்துறையமைச்சர் சிதம்பரம், நக்ஸல்களைப் பாராமலேயே முழங்கினார். கடைசியில் ஒரே மாதத்தில் 120 ஜவான்கள் மற்றும் 20 சிவிலியன்களைக் தண்டேவாடாவில் இரண்டு தவணைகளில் காவு கொடுத்ததுதான் மிச்சம். Enough is Enough என்று முழங்கியவர்கள் இன்று 72 மணிநேர போர் நிறுத்தம் வேண்டி நக்சல்கள் முன்பு மண்டியிடாக் குறையாக மன்றாடுகின்றனர். ஆயுதங்களைக் கைவிட மாட்டோம் என்று நக்ஸல்கள் முழங்குகின்றனர். இங்கு யார் அதிகாரம் பெற்றவர்கள் என்ற சந்தேகமே வலுக்கிறது.
விமானப்படையை கொண்டு ஒடுக்குவோம் என்று முன்னால் வீரமாக பேசிய சிதம்பரம், இப்போது மாநில அரசுகள்தான் நக்ஸல்களை ஒடுக்க வேண்டும்; மத்திய அரசு வேண்டுமானால் உதவுவோம் என்ற ரீதியில் பேசியிருக்கிறார். அப்படியாயின், இதற்கு முன்னால் நடைபெற்ற தாக்குதலுக்கு நானே முழுப்பொறுப்பேற்று ராஜினாமா செய்கிறேன் என்று எதற்காகக் கூற வேண்டும்? யாரை ஏமாற்ற இந்த நாடகம்? எதற்காக முன்னோரு பேச்சு, பின்னொரு பேச்சு? வெளிப்படையாகவே நக்ஸல்களை ஒடுக்குவது அரசாங்கத்தின் சக்தியை மீறிய செயல்; எங்களால் எதுவும் ஆகாது என்று கூறிவிடலாமே? எல்லாவற்றையும் மறந்துவிடும் மக்களுக்கு, இதனை ஏற்பது ஒன்றும் பெரிய விஷயமல்லவே!!
உள்நாட்டு தீவிரவாதிகளை ஒடுக்க இவ்வளவு கூத்து என்றால் பாக் தீவிரவாதிகளை எப்படி ஒடுக்கப்போகிறார்கள் ?
பாருக்குள்ளே நல்ல நாடாம் பாரதநாடு இதுவரை பார்த்திராத முதுகெலும்பற்ற அரசாங்கம் இந்த மத்திய சர்க்கார்தான் என்பதை ராமதாஸ் பாணியில் பத்திரம் வேண்டுமானாலும் எழுதித் தரலாம். அவ்வாறான ஒரு மெத்தனம். அது விலைவாசி உயர்வாகட்டும், அல்லது அந்நிய ஊடுருவல், ஆக்ரமிப்பாகட்டும் அல்லது உள்நாட்டு பாதுகாப்பில் மெத்தனமாகட்டும். எல்லாவற்றிற்கும் கண்டனம் ஒன்றே நடவடிக்கை என்ற அளவில் மத்திய அரசாங்கம் செயல்படுகிறது. அடுத்து சிதம்பரம் என்ன செய்வார்? இறந்த ஜவான்கள் மற்றும் சிவிலியன்களுக்கு அஞ்சலி செலுத்துவார்; பிறகு வருஷ திவசம் ஆண்டுதோறும் அதே நாளில் ஒரு நிமிட அஞ்சலியாக செலுத்தப்படும். இது கேவலமல்லவா? இவ்வளவு நடந்த பிறகு அவர்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கெஞ்சுவது என்னவொரு முதுகெலும்பற்றதனம்? காங்கிரஸ் தலைமையிலான அரசு எப்பொழுதுமே ஏன் தீவிரவாதிகள் தொடர்பான விஷயத்தில் மிகவும் மெத்தனமாகச் செயலாற்றுகிறது?
இவ்வளவு பெரிய அரசாங்க இயந்திரம், ராணுவம், உளவுத்துறை இவையெல்லாம் இருந்தென்ன? 36 ஜவான்கள், 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டுவிட்டனர். பிரதமருடைய வருத்தமோ, சிதம்பரத்தினுடைய கண்டனமோ இறந்தவர்களை மறுபடியும் உயிர்பித்துவிடவா போகிறது? பாஜக என்னவோ பெருந்தன்மையாக நக்ஸல் விவகாரத்தில் அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று கூறுகிறது. ஆனால் இது வேறு விதமான பெருந்தன்மை!! நடப்பது ராமன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி. மாநில அரசின் உளவுத்துறையின் மோசமான படுதோல்வி, கடந்த தண்டேவாடா தாக்குதலிலேயே வெட்ட வெளிச்சமாகியது. அதன் வடு மறைவதற்குள்ளாகவே அடுத்த தாக்குதல். மாநில உளவுத்துறையும், போலீசாரும் என்னதான் செய்து கொண்டிருக்கின்றனர்? பாஜகவிற்கு இந்நிலையில் மத்திய அரசைச் சாடினால், மாநில அரசும் விமர்சனத்திற்குள்ளாகும் என்று பெருந்தன்மை வேஷம் கட்டுகிறது. ஆக மக்கள் உயிர் என்பது இவ்விரு கட்சிகளுக்கிடையே பகடைக் காய் போலாகிவிட்டது.
ஆக மத்திய மற்றும் தொடர்புடைய மாநிலம் ஆகியவற்றில் நடப்பது மக்களாட்சி அல்ல. வெறும் துக்ளக் தர்பார்தான். ஸ்பெக்ட்ரம் ராசா, மாயாவதி, முலாயம், லாலு போன்ற ஊழல் பெருச்சாளிகளைக் காப்பதில் காட்டும் முனைப்பில், எள் முனையில் ஊசி முனையளவு முனைப்பைத் தீவிரவாதத்தை ஒடுக்குவதில் காங்கிரஸ் காட்டினால் கூட பாரதம் உருப்பட்டுவிடும். காங்கிரஸை துக்ளக்குடன் ஒப்பிட்டதற்காக, துக்ளக் என்னை மன்னிப்பாராக!!நக்சல்வாதம் என்பது தீவிரவாதம் அல்ல என்றும், அது அரசின் தோல்வி என்றும் பிரபல இந்துத்வ சித்தாந்தவாதியும், பா.ஜனதா முன்னாள் தலைவருமான கே.என். கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார். அருண் ஜெட்லி சிதம்பரம் அடிப்பட்டவர் என்று கூறியிருக்கிறார். இதை எல்லாம் சொல்ல பா.ஜனதாவிற்கு எந்த யோக்கிதையும் கிடையாது என்று பக்கத்தில் இருக்கும் படம் கதை சொல்லும்.
- -யதிராஜ சம்பத் குமார் + இட்லிவடை
சிதம்பரத்தில் மாம்பழங்கள் விலை உயர்ந்துவிட்டதாம். அட்லீஸ்ட் இதுக்காவது நாம் கவலை படலாம்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, May 19, 2010
மாம்பழம் விலை உயர்வு - மக்கள் கவலை !
Posted by IdlyVadai at 5/19/2010 02:42:00 PM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
இப்டி எல்லாம் எழுதறதுனால நாடு உருப்படும்னு இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க? போயி புள்ள குட்டியப் படிக்க வையுங்க சார்.
செலவப் பாக்காம மாம்பழம் வாங்கி சாப்டுங்க. அப்டியே மறக்காம மாம்பழத்துக்கு வர தேர்தல்ல ஓட்டும் போட்டுடுங்க.
Intha Naadum.....Makkalum Nasamai Pogattum - Itha Thavira vera ennatha solla
//இவ்வளவு பெரிய அரசாங்க இயந்திரம், ராணுவம், உளவுத்துறை இவையெல்லாம் இருந்தென்ன? 36 ஜவான்கள், 15 சிவிலியன்கள் கொல்லப்பட்டுவிட்டனர்.//
பலகாலமாக பண்ணை முதலாளிகளால் ஒடுக்கப்பட்ட, அரசியல்வாதிகளால் ஒதுக்கப்பட்ட ஏழை எளிய மக்களை நக்சல்கள் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்டார்கள். நக்சல்கள் பொதுமக்களோடு பொதுமக்களாக ஊடுறுவிவிட்டார்கள். நக்சல்களுக்கு சில கிராமங்களில் உள்ள பொதுமக்களே ஆதரவு கொடுக்கிறார்கள், மறைவிடமும் புகலிடமும் கொடுக்கிறார்கள்.
நக்சல்களைத்தாக்கும்போது, பொதுமக்களுக்கும் இழப்பு ஏற்படும் என்று ராணுவத்தினருக்கோ காவல்துறைக்கோ முழுமையான சுதந்திரம் தரப்படவில்லை.
வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் எண்ணிக்கையைவிட நக்சல்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.
சிங்கள அரசு விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என்று பொதுமக்களையும் சேர்த்து சரமாரியாக கொன்று குவித்ததைப் போல் நாம் இங்கு நடந்துக் கொள்ள முடியாது.
நக்சல்களின் தீவிரவாத அணுகுமுறை சரியில்லையே தவிர அவர்களின் கோரிக்கைகளில் நியாயம் இருப்பதை அரசு இப்பொழுது தான் உணர்ந்திருக்கிறது.
இவ்வளவு நாள் மக்களையும் அவர்கள் கோரிக்கைகளையும் கண்டுக்கொள்ளாமல் இருந்துவிட்ட அரசு இப்பொழுதாவது அவர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டும்.
அரசு தரப்பிலும் பல குளறுபடிகள் இருப்பதை ஒத்துக்கொண்டுத் தான் ஆகவேண்டும்.
இனிமேலாவது அரசு இந்த விஷயத்தில் மிக கவனமாகவும், திறமையாகவு, சமயோசித புத்தியோடும் செயல்படவேண்டும்.
//சிதம்பரத்தில் மாம்பழங்கள் விலை உயர்ந்துவிட்டதாம். அட்லீஸ்ட் இதுக்காவது நாம் கவலை படலாம். //
ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலையிலேயே அதிகமாத்தான் விக்குது
//...மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம்...//
அப்படியா...?
HI IV,
Punch Article all you can do is write one more that's all. What is the difference its going to make.. CRPF has different meaning for Centre its not the first time its happenning may be at large scale.
These people has no backbone.. chettiarku ennikkume irunthathillai appuram thanjavur thalayitti bommai ennaikku mattennu sollum its all in our system..
Rasa / (he is not Raaja) Mayavathi and all sabakkedu..
Kameswara Rao
தமிழ்நாட்டில் இருந்து சென்று இந்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் சுத்த வேஸ்ட். எல்லாவற்றிலும் வாய் சவாடல் மட்டும் விடுகிறாரேத் தவிர தெளிவான சிந்தனையில்லாதவர். விலைவாசி உயர்வு பற்றி விவரம் கேட்டால் அமெரிக்காவில் இதைவிட குறைவு என்பார். மருத்துவர்கள் ஆலோசனைக் கட்டணம் அமெரிக்காவில் 1000 ரூபாய். ஆனால் இந்தியாவில் வெறும் 100 ரூபாய் என்று வாய்கிழியப் புள்ளிவிவரம் தருவார். அமெரிக்காவில் 1000 ரூபாய் என்பது வெறும் 20 டாலர் (அவர்களுக்கு அது 20 ரூபாய் மாதிரி!). யாராவது எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்ளக்கூடிய மனநிலையில் அவர் இல்லை. நக்ஸல்களின் இந்த அதிவேக தாக்குதல்களுக்கு ப.சிதம்பரத்தின் அறிக்கைகளும் ஒரு காரணம். அவர்களை ஒன்று கூப்பிட்டுப் பேசவேண்டும். இல்லையேல் இராணுவம் கொண்டு ஒடுக்கும் வேலையை முழுதாகச் செய்யவேண்டும். அதை விடுத்து மீடியாக்களில் மட்டும் பேசிக்கொண்டிருந்தால் உயிரிழப்புகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். மற்றவர்கள் உயிர்களையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்களுக்கும் குடும்பம் உண்டு. உயிரை மதிக்கத்தெரிந்தவன் மட்டுமே மனிதனாவான். மற்றவர்கள் மனிதனின் ம...ரை விடக் கேவலமானவனே!
இந்தியாவில் அரசாங்கம் செயல் படுகிறதா என்ன! அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப கொள்ளை அடிக்கும் கும்பல் அல்லவா நாட்டை துண்டு போட்டுக் கொண்டு இருக்கிறது! பாரதிய ஜனதாவும் விதி விலக்கா என்ன! நாட்டை காக்க நல்லவர்கள் வெளிப் பட வேண்டும் மக்கள் ஒற்றுமையாய் இருந்து வெள்ளையர்களை வெளியேற்றியது போல செயல் பட்டால் தான் உருப்படும்! இல்லையெனில் வரும் சந்ததிக்கு உருப்படியாக ஒன்றுமே இல்லாமல் ஆகி விடும்!
/**அமெரிக்காவில் 1000 ரூபாய் என்பது வெறும் 20 டாலர் (அவர்களுக்கு அது 20 ரூபாய் மாதிரி!). யாராவது எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்ளக்கூடிய மனநிலையில் அவர் இல்லை**/
Yeah in America if you earn $10000 you are considered high income group. So would it be enough if we pay Rs.10000/month as salary for the regular jobs of arm-chair analysts like you? Look at the ratio and not the numbers.
//அமெரிக்காவில் 1000 ரூபாய். ஆனால் இந்தியாவில் வெறும் 100 ரூபாய் என்று வாய்கிழியப் //
அமெரிக்காவில் டாக்டர் ஃபீஸ் $85 முதல் $100 வரை. நாம் $20 தரவேண்டும் இன்சூரன்ஸ் மீதி தரும். ஆனால் மாதாமாதம் இன்சூரன்ஸ் லம்ப்பாக கட்டவேண்டும்
சிறப்பான கட்டுரை ... வாழ்த்துகள்
Good article. I agree with the fact that Chidambaram is inefficient. But it's quite easy to blame someone due to such incidents. I don't think, there is anymore Chidambaram could do on this matter. It's quite difficult for any govt to deal with LTTE type of guerilla warfare. Those who blame the Centre are under-estimating the intelligence and agility of naxals.
The only option to eliminate naxals is to adopt the Srilanka-LTTE type of operation without caring for lives of people. Is this what you want?. Naxals are not much different from LTTE. A bureaucratic govt can never tackle such a intelligent opponent. We are at the mercy of the CRPF commanders/strategists.
Chidambaram can leave the matter to the CRPF giving them full freedom and resource. I think he's already extended such a support. Any failures beyond this is a failure of CRPF. What more can a politician do in such matters? It's still not clear why his statements are confusing. All that is needed is an analogy to LTTE to indicate the complexity of issue.
நக்சல் பிரச்சனை ஒன்றும் அவ்வளவு எளிதில் தீர்க்க்கூடியதன்று. இந்தியா தன் இறையாண்மைக்கு குந்தகம் வராவண்ணம் எதிர்பக்கம் இருக்கும் நியாங்களையும் ஆராந்து பார்த்து பின் இப்பிரச்சனையில் தீர்வுகாண விளைவது ஒன்றே இப்பிரச்சனைக்கான தீர்வு.
Post a Comment