படம் இரண்டு, செய்தி மூன்று :-) நேயர் விருப்பம்.
தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் - குஷ்பு
கொள்கை பிடித்ததால் தி.மு.க.,வில் இணைந்தேன்: குஷ்பு
ஜெயா டிவியின் ஜாக்பாட் நிகழ்ச்சியில் இருந்து குஷ்பு நீக்கி, அதற்கு நல்ல தமிழ் நடிகையாக போடுவார்கள் என்று நம்புவோம் !
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, May 18, 2010
படம் இரண்டு, செய்தி மூன்று !
Posted by IdlyVadai at 5/18/2010 03:06:00 PM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
16 Comments:
நீர் அடங்கவே மாட்டீரா?
//"கொள்கை பிடித்ததால் தி.மு.க.,வில் இணைந்தேன்:... "//
கொ-ள்கை(ள்ளை) பி(அ)-டி-த்த(ப்ப)-தால்
இப்ப இருந்து தமிழ் நாட்டு எலெக்ஷன் முடியற வரை மார்கெட் இழந்த நடிகர் நடிகைகள் அரசியலில் ஐக்கியாமாவர்கள், நமக்கும் நல்லா பொழுது போகும்
//தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் - குஷ்பு//
1988 க்கு முன்னரே யாரும் இத சொல்லலியே.... அட ராமா..
குஷ்புவுக்கு சொந்த ஊரு மன்னார்குடின்னு கேள்விப்பட்டேன்
இரண்டாவது படத்தில் குஷ்பூ முதுகில் இரட்டை இலை பச்சை குத்தி இருப்பது போல இருக்கிறதே?
//தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் - குஷ்பு//
இனி யாராவது குஷ்பூவிற்கு அரசியல் தெரியலைன்னு சொல்வாங்களா! ;-)
IV,
Yellow comment super 'O' Super
//Madhavan said...
//தமிழ் படத்தில் நடிக்க வைப்பதற்காக கதாநாயகிகளை தேடி மும்பைக்கும் கேரளாவுக்கு போவதை நிறுத்துங்கள். தமிழ் பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள் - குஷ்பு//
1988 க்கு முன்னரே யாரும் இத சொல்லலியே.... அட ராமா..
//
அப்பவே குஷ்பூ இதைச் சொன்னாங்கப்பு.... ஆனா பாருங்க சொல்றதை இந்தில சொன்னதால இங்க யாருக்கும் புரியலை.
//கொள்கை பிடித்ததால் தி.மு.க.,வில் இணைந்தேன்: குஷ்பு
//
மானாட.....மயிலாட நிகழ்ச்சியில கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரின்னு சொல்வாங்களே, அது இதுதானோ!
செய்தி நாலு:
அப்சல் குரு வெளிய வந்துருவான் போல இருக்கே? ஒரு வேளை அந்த பார்லிமென்ட் அட்டாக்ல நாலு எம்.பி கள் போய் சேர்ந்திருதாங்கனா இவனை இந்த நேரம் தண்டித்திருபான்களோ?
மானஸ்தன் said...
நீர் அடங்கவே மாட்டீரா?
repeat..
Kandipa auto than
/*
தமிழ் பேச தெரிந்தவர்களை தமிழ் படங்களில் நடிக்க வையுங்கள்.
*/
நல்ல தமி(ல்(ள்)) நடிகையா தேடுங்கப்பா.
ரிஷபன், நீங்க இந்த செய்தியைப் படிக்கலியா? சுப்ரீம் கோர்ட்ல குஷ்பூ மேல வந்த வழக்குகளை எல்லாம் தள்ளுபடி செஞ்சப்போ, "இந்த விஷயமா என் மேல வழக்குகள் வந்தபோது தி மு க எனக்கு உதவியா இருந்தாங்க"ன்னு குஷ்பூ மேடம் சொன்னதா Times of India ல செய்தி வந்துச்சு. அந்த நன்றி விஸ்வாசம் தான். கருணாநிதி வேற "குஷ்பூ பெரியாரோட கொள்கைகளை ஏற்றுக்கொண்டவர். முற்போக்கு சிந்தனை உள்ளவர்"ன்னெல்லாம் certificate குடுத்துருக்கார். அதனால அடுத்த தேர்தலுக்கு அப்புறமும் இந்த 'அரசியல்' தொடரும்ன்னு தோணுது. அது சரி, குஷ்பூவை எதிர்த்து போராட்டம் பண்ணுன திருமா வகையறாக்கள் இப்போ என்ன சொல்லுறாங்கன்னு தெரியலை! அடுத்த தேர்தல்ல தி மு க பிரசாரக் கூட்டத்துல குஷ்பூவும், திருமாவளவனும் ஒரே மேடையில நிக்கற கண்கொள்ளா கட்சியை கற்பனை செஞ்சு பாருங்க. ம்ம்... காலம்தான் எல்லாவற்றையும் எப்படியெல்லாம் மாற்றுகிறது!
ஜாக்பாட்டுக்கு வேறு நல்ல ஜாக்கெட் கிடைக்குமா?! - ஜகன்னாதன்
யார் அந்த 57
ரிஷபன் என்ற பெயரில் நான் 2008-லிருந்து வலைத்தளம் வைத்துள்ள நிலையில் எனக்கு பிறகு ரிஷபன்57 -2009ல் என்ற பெயரில் வலைப்பூ உருவாக்கிய ஒரு நண்பர், நான் அவர் பெயரில் உலவுவதாக என் தளத்திலும் அவர் தளத்திலும் அங்கலாய்த்திருக்கிறார்
மிகப் பெரிய எழுத்தாளர் பெயர் சொன்னால் தெரியக்கூடியவர் என்றால், குழப்பம் வேண்டாம் என என் பெயரைத் தவிர்த்து வேறு பெயரில் வலைப்பூ பதிவு செய்திருப்பேன். என் பெயரில் வலைப்பூ தொடங்க நான் யார் அனுமதியும் கேட்கத் தேவையில்லை,அதுவும் அந்தப் பெயர் யாராலும் எடுக்கப்படாத போது.
அட நம்ம பேரில் ஒருத்தர் இருக்கார் போல என்ற என்னத்துடன், நேர்மையுடன் என்னை அணுகி இருந்தால் என்னுடைய ஆளில்லாத டீக்கடையை ஓரம் கட்ட ரொம்ப நேரமாகி இருந்திருக்காது.
அதை விடுத்து நான் ரொம்ப பெரிய்ய்ய்ய பிரபலம்னு அவரா அவரை நினைத்துக் கொண்டு ஏதோ அவர் பெயரை நான் impersonate செய்வது போல தோற்றத்தை கொண்டு வந்திருந்தார்.
கசப்பான அனுகுமுறை கசப்பான பலன் தரும்.
அதனால் நான் என் பெயரில் தொடர இருக்கிறேன்.
ஆமா இது எதுக்கு இங்கே
1) நான் தினசரி பின்னூட்டம் இடக்கூடிய தளங்களில் ஒன்று இட்லி வடை
2)பிரபலப் பதிவருக்குத் தான் என்றில்லை சாதாப் பதிவருக்கு கூட போலி பிரச்சனை வரும் என்று சொல்ல.
இட்லி வடை -வெளியிட முடியுமென்றால் எனது மு்ந்தைய பின்னூட்டத்தை வெளியிடவும்.
Post a Comment