பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 08, 2010

பவர் புரோக்கர் நீரா ராடியா - ஜூவி ரிப்போர்ட்

''முதல்வரின் டெல்லி விசிட் ரொம்ப சூப்பரா போச்சு. தலைவர் சொன்னது எல்லாத்தையும் சோனியாம்மா ஏத்துக்கிட்டாங்க. இனி கனிதான் டெல்லிக்கு ராணி...'' - இப்படியெல்லாம் உற்சாக பலத்துடன் இருந்த தி.மு.க. மேலிட தலைவர்கள், கடந்த புதன் இரவு வெளியாகத் தொடங்கிய தொலைபேசி டேப் செய்திகளைக் கண்டு ஆடித்தான் போனார்கள்.. நீரா ராடியா என்கிற பலம்

வாய்ந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி அடுத்தடுத்து சில பிரபலங்களுடன் பேசிய தொலைபேசிப் பேச்சின் சில பகுதிகள் என்று சொல்லி, அந்த டேப் விவரங்கள் செய்தியாகப் படிக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி முடிந்த கையோடு... தி.மு.க. தரப்பிலிருந்து யாருக்கு என்ன பதவி என்று மத்திய அரசோடு பேரங்கள் தொடங்கிய சமயத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் தொலைபேசி உரையாடல்கள் அவை.

மறுபடி தொலைதொடர்புத் துறை கிடைக்குமா?' என்று ஆ.ராசாவுடனும்... 'அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகிய மூன்று குடும்பங்களுக்கும் மந்திரி பதவி வாங்கித் தருவதில் கருணாநிதி படும் சிரமங்கள்' குறித்து கனிமொழியுடனும் நீரா ராடியா பேசியதாக விவரங்கள் அந்த டேப் தொகுப்பில் இருந்தன.

ஆ.ராசாவுக்கு தொலை தொடர்புத் துறை கிடைத்தால் தயாநிதி மாறன் எப்படி எடுத்துக் கொள்வார் என்பது பற்றியும், டி.ஆர்.பாலுவின் மன ஓட்டங்கள் பற்றியும் இந்த நீரா ராடியாவுடன் ஆ.ராசாவும், கனிமொழியும் எதற்காக இத்தனை நம்பிக்கை வைத்து பேசவேண்டும் என்ற கேள்வியும் குழப்பமும் இயல்பாகவே இதனால் எழத்தான் செய்தது. மத்திய அமைச்சரவையின் முக்கிய இலாகாக்களை ஒதுக்கும் விஷயங்கள் குறித்து அப்படியரு அதிகாரத் தொனி மிக்க வார்த்தைகளில் அந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி பேசுவதாகச் சொன்னது டேப் தொகுப்பு!

விவகாரம் அதுமட்டுமல்ல.... தொலைதொடர்புத் துறையின் சார்பாக அதற்கு முன்பும் அமைச்சராக இருந்த ஆ.ராசாவும் இந்த நீரா ராடியாவும் பல மணி நேரங்கள் பேசிய தொலைபேசி உரையாடல்களின் தொகுப்பு, வருமான வரித்துறைக்கென்றே உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவின் வசம் இருப்பதாகவும் அடுத்தடுத்து வெளியாகத் தொடங்கிவிட்டன தகவல்கள். வருமான வரித் துறை டேப் செய்திருந்த இந்த உரையாடல்களை, சி.பி.ஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு அளித்து உதவும்படி டெபுடி ஐ.ஜி-யான வினித் அகர்வால் வைத்த வேண்டுகோள் கடிதம் என்று ஒரு நகலும்.... 'ஆமாம்... நிறைய விவகாரங்களை இது தொடர்பாக டேப் செய்திருக்கிறோம். உரியமுறையில் கேட்டு எங்களிடம் பெற்றுக் கொள்ளுங்கள். அதோடு, இந்த விவகாரம் தொடர்பாக உங்கள் வசம் ஏதேனும் தகவல் வைத்திருந்தால், அதை எங்கள் விசாரணைக்கு நீங்களும் கொடுத்து உதவுங்கள்' என்று வருமான வரித்துறையின் இணை இயக்குநர் ஆஷிஷ் அப்ரால் என்பவர் பதில் எழுதியாக ஒரு நகலும் இப்போது டெல்லியில் கசிந்து... பெரும் புயலைக் கிளப்பத் தொடங்கியிருக்கிறது.

இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் 2009 வருடம் நவம்பர் மாதத்தில் நடந்ததாக அந்த நகல்களில் உள்ள தேதி குறிப்பிடுகிறது.

அதாவது, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புயலடிக்கத் தொடங்கிய சமயத்திலிருந்தே, அது தொடர்பான ரகசிய விசாரணைகளில் வருமான வரித் துறைக்கென்று உள்ள இன்டெலிஜென்ஸ் பிரிவு இறங்கிவிட்டதாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வருமான வரி அதிகாரி அளித்த பதில் கடிதத்திலேயே இந்த 'லாபியிஸ்ட்' பெண்மணி நீரா நாடியா பற்றி அதிர்ச்சியும் பிரமிப்பும் கலந்த தகவல்கள் அடுக்கப்பட்டுள்ளன.

வைஷ்ணவி கார்ப்பரேட் கன்ஸல்டன்ட், நோயஸிஸ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் சர்வீஸ், விட்காம் மற்றும் நியூகாம் கன்சல்டன்ஸி என்று பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அச்சாணியாக இயங்கும் இந்த பெண்மணியின் தொலைபேசி உரையாடல்களை, மத்திய உள்துறை செயலாளரின் அனுமதி பெற்றே டேப் செய்து வந்ததாகக் கூறுகிறது வருமானவரி கடித நகல். விமானப் போக்குவரத்து மற்றும் பல துறைகளில் உள்ள பிரமாண்ட நிறுவனங்களுக்கு 'ஆலோசகராக' செயல்படும் நீரா ராடியாவின் நிறுவனங்கள், தொலை தொடர்புத் துறை தொடர்பான நிறுவனங்களுடன் இறுக்கமான நட்பில் இருப்பதையும் கடித நகல் கூறுகிறது. 'தொலைதொடர்புத் துறை தொடர்பான லைசென்ஸ்கள் பெற்றுக் கொடுப்பதில் இந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் சந்தேகப்படுகிறோம். கூடவே, முக்கிய மீடியாக்களையும் தன் கட்டுப்பாட்டில் இவர் வைத்திருக்கிறார். தொலைபேசி லைசென்ஸ் தொடர்பான சில நிறுவனங்களின் முதலீட்டை இந்தியாவுக்குள் படிப்படியாகக் கொண்டு வரும்படி இவர் அறிவுறுத்தும் சில தொலைபேசி உரையாடல்களும் எங்களிடம் உள்ளது. இல்லையென்றால், லைசென்ஸ் பெற்றதன் மூலம் கொள்ளை லாபம் பெற்றது தெரிந்துவிடும் என்றும் இவர் அறிவுரை கூறுகிறார்' என்று சொல்லும் அந்த வருமான வரி கடிதம்...

'தொலைதொடர்பு அமைச்சருடன் நேரடியாகவே இவர் பேசிய உரையாடல்களை நாங்கள் வைத்துள்ளோம். டெலிகாம் லைசென்ஸை குறிப்பிட்ட நிறுவனங்களுக்குப் பெற்றுத் தருவதில் தனக்குள்ள முக்கியப் பங்கு குறித்து இந்த நீரா ராடியா பெருமையோடு மத்திய அமைச்சரிடம் பகிர்ந்துகொள்கிறார்' என்று கூறுகிறது. இது விவகாரமாக நீரா ராடியா தொடர்புகொண்டிருந்த மற்ற முக்கிய நபர் பற்றிய தகவல்களும் தங்களிடம் உள்ளதாகக் கூறுகிறது அந்தக் கடித நகல்.

மத்திய அமைச்சர் பதவியில் ஆ.ராசாவை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்காக முதல்வர் கருணாநிதி காய்களை நகர்த்தி வரும் நிலையில், அடுத்தடுத்து ராசாவின் பதவிக்கு வெடி வைக்கும் விதமாகவே கடித நகல், டேப் விவகாரம் என்று பரவுவது எப்படி என்பதுதான் இப்போது டெல்லியில் மிக சுவாரஸ்யமான விவாதம். அந்தக் கட்சிக்குள்ளேயே இருக்கும் ஒரு சிலரை நோக்கி கைகள் நீள்வதையும் காண முடிகிறது.

''தொலைதொடர்பு தொடர்பான ரகசிய புலனாய்வு ஆவணங்கள் பகிரங்கமாக வெளியானது மத்திய அரசுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்!'' என்று ஒரு தரப்பினர் சொல்லிக் கொண்டிருக்க... ''தொடர்ந்து பிரஷர் கொடுத்து வரும் தி.மு.க-வை பின்வாங்கச் செய்வதற்கு இந்த விவகாரமெல்லாம் உதவும். அந்த வகையில் காங்கிரஸ் அரசுக்கு இதில் நிம்மதிதான்!'' என்று சொல்லி கண் சிமிட்டுபவர்களும் இருக்கிறார்கள்.

நமக்கும் அந்த ஆவண நகல்களில் சில கிடைத்தன. 'டாப் சீக்ரெட்', 'கான்ஃபிடன்ஷியல்' என குறியிடப்பட்ட அவையெல்லாம் யாரோ ஒரு உயர் அதிகாரிக்கு விசாரணை டீம் கொடுத்த தகவல் சுருக்கம் போலவே இருக்கிறது. அவை ஒரிஜினலான ஆவணங்கள்தானா... அதை வைத்து சி.பி.ஐ. தனது விசாரணையை மேற்கொண்டு எப்படி கொண்டு செல்லும் என்பதெல்லாம் ஒருபுறம் இருக்க... 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தோடு இன்னும் ஏராளமான பல பகீர் விவரங்களையும் அதில் காண முடிகிறது.

நீரா ராடியாவை மையம் கொண்டு மொரீஷியஸ், ஆப்பிரிக்கா, கினியா என்று எல்லை தாண்டி நடந்திருக்கும் பரிவர்த்தனைகள் குறித்து ஒட்டுக் கேட்டதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.

''இந்தியாவின் மிகப் புகழ்பெற்ற, மரியாதைக்குரிய ஒரு வடநாட்டுத் தொழிலதிபர், எக்காரணம் கொண்டும் தொலைதொடர்புத் துறைக்கு தயாநிதி மாறன் மீண்டும் அமைச்சராகிவிடக் கூடாது என்று நீரா ராடியாவிடம் கேட்டுக் கொள்ளும் உரையாடல் கிடைத்துள்ளது. அதையும் மீறி தயாநிதி மாறன் வந்துவிட்டால், தொலைதொடர்புத் துறையில் தான் செய்து வரும் பிசினஸ்களிலிருந்து வெளியேறிவிடப் போவதாகவும் தொழிலதிபர், நீரா ராடியாவிடம் கூறுகிறார்.

ஆ.ராசாவுக்கு குறிப்பிட்ட பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் பெருந்தலைகளை பிரெயின்வாஷ் செய்யும் வேலையில் இந்தியாவின் பிரபல சேனல் முகங்கள் இருவர் செயல்பட்டனர். நீரா ராடியா மற்றும் அரசியல் பெண் வி.ஐ.பி. ஒருவருக்காகவே இவர்கள் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை நடத்தினர். தமிழகத்தைச் சேர்ந்த பவர்ஃபுல் பெண்மணி ஒருவருக்கு நீரா ராடியா மிக நெருக்கமானவர் போலவே போன் பேச்சுகளில் தொனிக்கிறது!'' என்று கூறும் இந்த ஆவணங்கள், 'ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் சர்ச்சைப் புயலில் சிக்கிய ஸ்வான் டெலிகாமையும் இதில் தொடர்புபடுத்துகின்றன.

''ஜார்கண்ட் மாநிலத்தில் டாடாவின் சுரங்க உரிமத்தை நீட்டிக்க நீரா ராடியா அப்போதைய ஜார்கண்ட் முதல்வர் மதுகோடாவுடன் பேசிய உரையாடலில் மதுகோடா 180 கோடி ரூபாய் கேட்டது தெரிய வந்துள்ளது. அதே உரிமத்தை ஜார்கண்ட் ஆளுநரிடம் நீட்டித்து வாங்கியுள்ளார் இந்த 'சேவைக்காக' ஒரு கோடி ரூபாய் நீராவுக்கு வழங்கப்பட்டுள்ளது!'' என்று வேறு மாநில விவகாரங்களையும் இந்த 'டாப் சீக்ரெட்' ஆவண நகல்களில் காண முடிகிறது. மதுகோடா தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த 'டாப் சீக்ரெட்' ஆவணமும் ஒரு காரணமா என்பது தெரியவில்லை!

தொலைதொடர்புத் துறையின் 'கிங்'களில் ஒருவரான சுனில் மிட்டல்கூட நீராவின் 'சேவை'யை நாடினார் என்று தொலைபேசி மூலம் ஒட்டுக் கேட்டுச் சொல்கிறது இந்த ஆவணம். இந்த ரேஞ்சில் படிக்கப் படிக்க தலை சுற்ற செய்யும் தகவல்கள் கொண்ட ஆவணங்களில் தொழில் அதிபர்களுக்கும், மிகப் பெரிய அதிகாரிகளும், அரசியலின் உச்ச பதவிகளில் இருப்பவர்களுக்கும் இடையே எத்தனை 'சாலிட்'டான பேரங்களும், புரிந்துகொள்ளல்களும் இருக்க முடியும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. இந்த மூன்று புள்ளிகளையும் இணைத்து வைக்கும் வேலையில் நீரா ராடியா போன்ற இன்னும் எத்தனை மெகா 'லாபியிஸ்ட்'கள் தரகு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்று யோசிக்கும்போது பயங்கரமாகத் தலை சுற்றுகிறது.

''குறிப்பிட்ட அந்த டேப் உரையாடல்களில் இருப்பது மத்திய அமைச்சர் ஆ.ராசா அல்லது ராஜ்யசபா எம்.பி-யான கனிமொழி ஆகியோரின் குரல்தானா என்பதற்கு என்ன ஆதாரம்? தி.மு.க-வை ஒழித்துக் கட்டுவதற்கு டெல்லியில் நடக்கும் பயங்கரமான சதிவலையின் அங்கம்தான் இதெல்லாம்!'' என்று மறுக்கும் தி.மு.க. தலைவர்கள்,

''அரசியல் ரீதியாக மட்டுமில்லாமல்... தலைவரின் குடும்பத்துக்குள் பதவிப் போட்டி ஏற்பட்டதாகச் சொல்லி, அதை வைத்து ஒருத்தர் இன்னொருத்தரைப் பற்றி பேசிக்கொண்டதாக விவகாரத்தை நாடறியப் பரப்பினால், அதை வைத்து குடும்பத்துக்குள் மறுபடி குழப்பம் வரும் என்பதும் எங்கள் எதிரிகளின் திட்டம்!'' என்று கூறுகிறார்கள் இந்த தி.மு.க. தலைகள்.( நன்றி: ஜூவி )

24 Comments:

Anonymous said...

ithu allava news!. A single telephone recording can create trouble in DMK. Wow.it should have been released during next election.

சரவணன், திருப்பூர். said...

// ஜூவி முன்பு ராஜா பற்றி படம் போட்டதற்கே கோர்ட்டுக்கு போன பயமா? //

கேள்வியின் நாயகனே இந்த கேள்விக்கு பதில் சொல்லியது எப்படி ?

------
எல்லொருமே திருடங்கதான் சொல்லபோனா (மக்கள்) குருடங்கதான்..எங்கோ ஒரு இடத்தில் பாடல் கேட்கிறது.

Asir said...

நல்ல பதிவு நன்றி அழகிரி !!!

வலைஞன் said...

இது(ஜூ.வி) பார்ப்பன ஏடு;அப்படித்தான் கூறும்!
ஆமா,நம்ம Mr.Clean மன்மோகன் சிங் என்னய்யா செய்யறாரு?
ஒரு கெட்டவன் ஆட்சிக்கு வந்தா தன்னால் முடிஞ்சா மட்டும் கொள்ளை அடிக்கிறான்!
ஒரு நல்லவன் ஆட்சிக்கு வந்தால் மெளனமாக அதை வேடிக்கைப்பார்க்கிறான்!!
யார் தானய்யா நமக்கு நல்லது செய்வாங்க?

Anonymous said...

மர்மக் கதையை விட திரில்லாக இருக்கு. ஆனால் ஒன்று - இப்பொழுது தொடங்கி எவ்வளவு நாட்கள் இராசா பதவியில் இருக்கிறாரோ - அல்லது இருப்பதற்காக முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறாரோ - அவ்வளவுக்கவ்வளவு மத்திய, மாநில அரசுகளுக்கு தலைவலி உருவாகும். காங்கிரசின் நம்பகத் தன்மையும் பங்கமாகும்.

M Arunachalam said...

What Jr.V published now is nothing but the Tamil dubbed version of what The Daily Pioneer has been publishing for the last couple of weeks. They have added some local masala gossip to it, in their own style.

Anonymous said...

J released the letters last week.Hindu put it in its website.
IV does not read Hindu but gives what JV has written.JV's original input to this is big zero.

வஜ்ரா said...

யார் அந்த வடநாட்டுத் தொழில் அதிபர் ?

SAN said...

Hi IV,
here is a link why Ba(k)rkha Dutt and Vir singhvi are involved with Nira Radia.It seems NDTV has become a mouth piece for Mukesh ambani group.Its b'cas of the ugly fight between anil and mukesh all the trash are coming out of the bin.

Since i am working in a big corporate company in the PR dept. i feel more cats will come out of the bag in the days to come or will be wrapped up as if nothing has happened!

http://blog.outlookindia.com/posts.aspx?ddm=8&kid=110&kname=Telecom

R. jagannathan said...

மாசக் கணக்கில் டெலிபோன் பேச்சுக்களை பதிவு செய்து என்ன ஆக்‌ஷன் எடுத்தார்கள் இதுவரை? இதில் காஙகிரசும் மாட்டிக் கொள்ளும் அபாயம் இருப்பதால் ஒன்றும் நடக்காது. வகையாக மாட்டிக் கொண்ட கேதன் மேதாவையே பதவியிலிருந்து நீக்க முடியாது என்று அமைச்சர் சொல்கிறார். ராஜாவையோ கலைஞரையோ ஒன்றும் தொட மாட்டார்கள். இந்த இந்தியாவில் பிறக்க மாதவம் செய்திருக்கிறோம். ஹ்ம்ம்ம். - ஜகன்னாதன்

SAN said...

HI IV,
On a lighter side - a good one

http://www.outlookindia.com/article.aspx?265336

கால்கரி சிவா said...

லஞ்சம் வாங்கினவர்கள் களித் தின்ன வேண்டும். அதே நேரம் கொடுத்தவர்களையும் வெளியே விட்டு வைக்கக் கூடாது. அவர்களும் உள்ளே போனால்தான் சரியாக இருக்கும்.

திருட்டுதனம் தொடங்குவது இந்த தொழிலதிபர்களிடம். இது புரோக்கர்கள், மெத்தப் படித்த ஐஏஎஸ் அதிகாரிகள், அறிவுஜிவீ பத்திரிக்கையாள்ர்கள் ஆகியோருடமும் பரவியுள்ளது.


ஒரு முறை ஒரே ஒரு முறை மொத்த கும்பலையும் உள்ளே போட்டால் சிறிது பயமாவது வரும். அதிகாலையில் கனவுகாண்கிறனா? :)

அமுதப்ரியன் said...

/* இந்த இந்தியாவில் பிறக்க மாதவம் செய்திருக்கிறோம். */

நாம் செய்த பூர்வ ஜென்ம கர்மா ஜெகன்னாதன்.

அமுதப்ரியன்

ConverZ stupidity said...

அடுத்த தேர்தல்ல எவ்வளவு ஒரு ஓட்டுக்கு கேட்கலாம்.

கௌதமன் said...

கேதன் தேசாய் ராஜினாமா செய்து விட்டார்.

கௌதமன் said...
This comment has been removed by the author.
Anonymous said...

Pioneer has been steadfastly covering Raja's 2G scam with all documented proofs on his sudden wealth for more than 2 years even before the Parliament elections.

Nothing can be expected from the rest of the Congressi media like NDTV/IBN etc

Anonymous said...

அண்ணன் அழகிரி அந்த 100000 கோடியில் சுமார் 60000 கோடியை மட்டும் அடுத்த தேர்தலில் தமிழக மக்களுக்கு வழங்குவார். 6 கோடி தமிழர்களுக்கு ஆளுக்கு 10000 தந்தாலும் 60000 கோடிதான் ஆகும் மீதி இருக்கும் 40000 கோடிகூட பெரியதொகை தான் அதை வைத்துக் கொண்டு திமுக ஏழைகள் வாழ மாட்டார்களா?

கௌதமன் said...

யார் அந்த வட நாட்டுத் தொழில் அதிபர்?
முன்னொரு காலத்தில் தயா வால் மிரட்டப் பட்டவர்.
அதனால் தயா பதவிக்கு டாட்டா காட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டது.
சரிதானா?

Gaana Kabali said...

கீழே உள்ள முதல் மரியாதை படப்பாடலை கருணாநிதி பாடுவதாக நினைத்து பாடிப் பாருங்கள்.
இந்த காலத்துக்கும், இந்த சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது!

"ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
அது உசுரவந்து உருக்குதுங்க
முன்பு சொல்லாத உறவ நான் நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல
தண்ணீரின் எழுத்தா

பழச மறக்கலியே
பாவி என் நெஞ்சு துடிக்குது
உன்னையும் எனையும் வச்சி
ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கோரஞ்சீக
தரும மகாராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலா'னு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு

ராசாவே..."

Anonymous said...

KGG Anna... Kusumbu :)

Anonymous said...

முழு விபரங்களையும் இங்கு தமிழில் படிக்கலாம்

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/

சனீஸ்வரர் said...

இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலை இந்தியா எதிர் கொண்டிருக்கும் விதம் இந்தியாவின் எதிர்காலம் குறித்த பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. நாட்டின் பிரதமரிடம் தொடங்கி கடைத்தட்டு குடிமகன் வரை குடிகொண்டுள்ள அலட்சியமும், நேர்மையின்மையும், பொறுப்பற்ற தன்மையும், பேராசையும் இந்தியாவின் ஒட்டு மொத்த எதிர்காலம் குறித்து பெரும் அச்சத்தையே தோற்றுவிக்கிறது………இதை வாசிக்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்தது எப்படி?

<a href="http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/”> தொடரும் ஊழல்கள் குறித்து நீங்கள் என்ன செய்யலாம் ? </a>

சனீஸ்வரர் said...

//...... யார் அந்த வட நாட்டுத் தொழில் அதிபர்?.....//

தமிழ் ஹிந்து தளத்தில்தான் படம் வரைந்து பாகங்கள் குறித்து ஆதியோடந்தமாக அத்தனையையும் சொல்லி இருக்கிறார்களே.