பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 07, 2010

ராசா சென்னை பயணம் !

கலைஞர் ராசா விவகாரத்தில் டெல்லி சென்று அசிங்கமாக தலித் அஸ்தரம் விட்டு பார்த்தார். தமிழ் நாட்டுப் பெருமையை வடக்கே சொல்ல வேண்டாமா? ஆனால் பாவம் அந்த அஸ்தரம் அவருக்கு எதிராகத் திரும்பிவிட்டது!

இன்று மத்திய அமைச்சர் ஸ்பெக்ட்ரம் ராஜாவை உடனடியாகத் தன்னை வந்து சந்திக்குமாறு தமிழக முதல்வர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்கள் அழைத்துள்ளார். ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்டுள்ள தொலைபேசி உரையாடல்களே இதற்குக் காரணமாக இருக்கும் என்று எல்லாருக்கும் தெரிந்ததே.

சற்று முன்பு இந்தச் சானலில் திரும்பத் திரும்ப விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ராஜா எரிந்து விழுவதைக் காண்பித்து அவர் வயத்தெரிச்சலைக் கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

முத்தாய்ப்பாக, ஹெட்லைன்ஸ் டுடே வெளியிட்ட தொலைபேசி உரையாடல்களைப் பற்றி எதுவும் தெரியாது, பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் இன்று எல்லாவற்றையும் பார்த்தேன். ராடியாவிடம் அமைச்சர் பதவியைக் கேட்க நான் என்ன முட்டாளா? என்றும், எல்லாவற்றையும் ராடியாவிடமே கேட்டுக் கொள்ளுமாறும் நிருபர்களிடம் கூறியுள்ளார்.


சில கேள்விகள்:

1. ராசா பேசிய உரையாடகள் கலைஞருக்கு தெரியுமா? "கலைஞர் குடும்பத்துக்கு மூன்று மந்திரி பதவியா?" என்று ராடியா கேள்வி கேட்க அதற்கு ராஜா சிரித்துவிட்டு "அது தெரிந்தது தானே?" என்கிறார். இதை கலைஞர் நியூஸை பார்க்கும் போது அவரது மனநிலை எப்படி இருக்கும்.


2. இந்தத் தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட விஷயம் முன்கூட்டியே உள்துறைச் செயலாளரிடம் அனுமதி பெற்றே செய்யப்பட்டிருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது. ஏன் இவ்வளவு வருஷம் கழித்து இது லீக் செய்யப்படிருக்கிறது? ராஜாவை எப்படியாவது வெளியே அனுப்ப காங்கிரஸ் செய்யும் சதியா?

3. ராடியாவிடம் மந்திரி பதவி பற்றிக் கேட்க நான் என்ன முட்டாளா என்று ராஜா பார்லிமெண்ட் முன்னாடி ஆவேசமாகக் கேட்கிறார். அப்படி என்றால் ஏன் ராடியாவின் இந்த தொலைப்பேசி உரையாடல்கள் மீடியாவில் ஒலிபரப்ப கூடாது என்று தடை கேட்டு கோர்ட்டுக்கு போனார். (கோர்ட் நிராகரித்துள்ளது என்பது வேறு விஷயம் )

4. இந்த விவகாரத்தில் - தயாநிதி மாறன் ஊடகங்களுக்கு செய்தியை சப்ளை செய்கிறார் என்றும், பாவம் பாலு என்றும் உரையாடல்கள் வருகிறது. இதை தயா, பாலு கேட்டால் என்ன நினைப்பார்கள் ?

5. இவ்விவகாரத்தில் அதிகம் அடிபடும் ராடியா என்ற பெண்மணி, சில டெலிகாம் நிறுவனங்களுக்கு லைசன்ஸ் பெறுவதற்கு பெருமளவில் உதவியுள்ளார் என்பது வருமானவரித் துறையினரால் கண்டறியப்பட்டுள்ளது. சிபிஐ, வருமானவரி துறை ஆகியவை இவ்வளவு கண்டுபிடித்த பின்பும் அரசு ஏன் சும்மா இருக்கிறது? இத்தனைக்கும் சிபிஐ, மற்றும் வருமானவரி துறை எல்லாம் தற்போது இயங்கும் அரசுகளின் கீழ் இருக்கிறது. ராஜாவைப் பாதுகாப்பதன் மூலம் வேறு ஏதாவது பெரிய தலைகளைப் பாதுகாக்க முனைகிறதோ?


6. எதிர்க்கட்சிகளில் பாஜகவும், மீடியாக்களில் ஹெட்லைன்ஸ் டுடேவும் மட்டுமே இதனை பிரதானமாகப் பேசி வருகின்றனர். மற்ற மீடியாக்கள் அவையடக்கம் கருதி அடக்கியே வாசிக்கின்றன. ஜூவி முன்பு ராஜா பற்றி படம் போட்டதற்கே கோர்ட்டுக்கு போன பயமா?


இப்பொழுது திமுக எதற்காக ராஜாவை அவசரமாக அழைத்துள்ளது என்பது போகப் போகத்தான் தெரியும். தெரியாமலும் போகலாம்.

முழு விடியோ இங்கே இருக்கு ஐந்து பாகமாக.

டெல்லிக்கு சென்று, கலைஞர் ஒட்டு மொத்த தலித்துக்கும் நல்ல பேர் வாங்கி தந்துவிட்டார். செம்மொழி மாநாட்டில் இதற்கு ஒரு விருது தந்துவிடலாம்.

20 Comments:

Anonymous said...

interesting news--vimalavidya@gmail.com

கால்கரி சிவா said...

மற்ற “உண்மை”களை சூடாக கொடுக்கும் மற்றப் பத்திரிகைகள் எங்கே?

நித்தியும் ரஞ்சியும் கொஞ்சியதை படம் கோட்டுக் காட்டிய நக்கீரனும் சன்னும் எங்கே?

பணம் பாதளம் வரைக்கும் பாய்ஞ்சிருக்கு.

ஊழலின் உச்சம் இது

Krish said...

/////எதிர்க்கட்சிகளில் பாஜகவும், மீடியாக்களில் ஹெட்லைன்ஸ் டுடேவும் மட்டுமே இதனை பிரதானமாகப் பேசி வருகின்றனர். மற்ற மீடியாக்கள் அவையடக்கம் கருதி அடக்கியே வாசிக்கின்றன. ஜூவி முன்பு ராஜா பற்றி படம் போட்டதற்கே கோர்ட்டுக்கு போன பயமா?/////

எங்கே இந்த பிரணாப் ராய்!!! எல்லா மீடியாக்களும் காங்கிரசின் கிளைகளாக உள்ளது. சிவப்பு சட்டை காரர்களும் இதைப் பற்றி பேசவில்லை...அட! அம்மா கூட ஒன்னும் அறிக்கை விடலை...

இந்தியாவை அழிக்க கசாப், அல் கொய்த தேவை இல்லை....இந்த அரசியல் வாதிகளே போதும்...கருணாதி குடும்பம், மாயாவதி, லாலு, சோரன், முண்டா, ..இவனுக சுருட்டுனத மீட்டாலே போதும்...இந்திய பணக்கார நாடு ஆயிடும்.

இந்த பரதேசி களெல்லாம் நரேந்திர மோடிய திட்டுரன்னுங்க....போய் பாருங்கட குஜராத்தை!

thaiman said...

தமிழக தமிழன் அரசு தரும் இலவசங்களை வாங்கி.. வாங்கி.. சுடு சுரனை இல்லாத சுயநலவாதி ஆகிவிட்டான்.

எப்பொழுது வரும் மாற்றம்?

சுழியம் said...

கிடைத்த தகவல்:

மன்மோகன் சிங்கை அவமானப் படுத்த சோனியா-ராகுல் வகையறாக்கள், மாறனோடு சேர்ந்து நடத்திய நாடகம் இது என்று அரசியல் வல்லுனர்கள் அவதானிக்கிறார்கள்.

தங்களைப் போட்டுப் பாடாய் படுத்தும் கருநாநிதிக்கும் ஆப்பு வைத்தாற்போல ஆயிற்று. அத்தோடு, ராகுல் காந்தியைத் தவிர சிறந்த தலைவர் வேறு யாரும் காங்கிரஸில் இல்லை என்று நிரூபித்தாற் போலவும் ஆயிற்று.

இதுதான் இந்த நாடகத்தின் பின்னணி.

Vivek said...

Even I twitted to Barkha(NDTV) //@BDUTT Barkha....We need to know the reason why you've stopped airing news about Spectrum scandal? about 11 hours ago from web in reply to BDUTT //

But I did not receive any reply yet...I think they hav decided something not even to utter a word against raja...why r V like this...whom we hav selected....

வலைஞன் said...

>>>இந்தியாவை அழிக்க கசாப், அல் கொய்த தேவை இல்லை....இந்த அரசியல் வாதிகளே போதும்...கருணாதி குடும்பம், மாயாவதி, லாலு, சோரன், முண்டா, ..இவனுக சுருட்டுனத மீட்டாலே போதும்...இந்திய பணக்கார நாடு ஆயிடும்.>>>

மிகவும் முக்கியம்ம்மானவங்கள விட்டுட்டீங்களே Krish ! !

வலைஞன் said...

>>>மற்ற “உண்மை”களை சூடாக கொடுக்கும் மற்றப் பத்திரிகைகள் எங்கே?<<<
ஜனநாயகத்தில்,

ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு high voltage மின்சார சாதனம் என வைத்துக்கொள்ளுங்கள்.

ஊடகங்கள் மின்சாரப் பொறியாளர்கள்.

அந்த மின்சார சாதனத்தின் switch ஒரு பைத்தியத்தின் வசம் உள்ளது.அதன் பெயர் வாக்காளர்

இப்பொழுது அந்த மின்சார சாதனம் சரியாக வேலை செய்யாவிட்டால்
மின்சாரப் பொறியாளர்கள்,அதை பரிசோதிக்கவேண்டும்.ஆனால் அந்த நேரத்தில் பைத்தியம் switch on செய்துவிட்டால் அந்த பொறியாளர் கதி அதோ கதி தான்!

எனவே பைத்தியத்தின் வசம control இருக்கும்வரை எந்த பொறியாளரும் மின்சார சாதனத்தின் பக்கமே போக மாட்டார்கள்

என்ன புரிகிறதா?

Anonymous said...

the majority of the media houses are playing safe by keeping mum because they suspect/know that the ruling party (read Sonia & family) has received its cut from the deal.

அமுதப்ரியன் said...

/* இந்தியாவை அழிக்க கசாப், அல் கொய்த தேவை இல்லை....இந்த அரசியல் வாதிகளே போதும்...கருணாதி குடும்பம், மாயாவதி, லாலு, சோரன், முண்டா, ..இவனுக சுருட்டுனத மீட்டாலே போதும்...இந்திய பணக்கார நாடு ஆயிடும். */

இதில் கருநா(நி)தி குடும்பம் மட்டுமே போதும். இந்தியா முழு பணக்கார நாடாகி விடும். கணக்கு போட்டு பாருங்கள்.
அமுதப்ரியன்.

Anonymous said...

why talk of the lack of courage of other media.even IdlyVadai can be accused of the same. people talk of even Sankaracharya Swarnamalya,Premanandha,Nityandha etc but all keep a studied silence regarding Kanimozhi.Others are made big only by their followers and the disappointment only affects them.Here it is public money and affects every Inian.
Alagiri never attends Parliament but is prompt on foregin tours.He comes three times every week to Chennai at Govt. cost.Why no media tables it?Many of cases pertaining to unpaid bank loans are handled by Nalini Chidambaram.Crores worth of money is owed by SPIC to govt. and Indian oil.A.C.MUTHIAH is running free.if it is a small man banks will publish his photo and will make him commit suicide.Where is our media.Why to go to politicians. If all dues to our banks from all big industrilists are recovered the country will prosper. All those who loot bank money parade as educationists and industrialists.IdlyVadai can take up atleast one bank say INDIAN BANK and do service to the nation.None of the media has pulished A.G. S COMMENT REGARDING FINANCIAL INDISPLINE of Govt. of Tamilnadu.He says at this rate TN will go bankrupt.Our great financialwizard P.CHIDAMBARAM will not utter a word fearing his alliance.We think all those who made money are only corrupt.All of us who keep quiet are also equally guilty.Let IdlyVadai start a crusade against all this. with its reader base some thing can be achieved.

Unknown said...

//இதில் கருநா(நி)தி குடும்பம் மட்டுமே போதும். இந்தியா முழு பணக்கார நாடாகி விடும். கணக்கு போட்டு பாருங்கள்.
அமுதப்ரியன்.
//

அமுது, ஜெயலலிதாவ வூட்டுடியே. ஏன் பாசமா

கௌதமன் said...

இந்தியாவைத் திருத்த ஒரு ராடியாவும் ஒரு ரஞ்சிதாவும் போதும் போல இருக்கே!

Gaana Kabali said...

முதல் மரியாதை படப் பாடலை கலைஞர் பாடுகிறார்:

"ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பு இருகுதுங்க
ஒரு வார்த்தை சொல்லிட்டிங்க
அது உசுரவந்து உருக்குத்துங்க
முன்பு சொல்லாத உறவ நான் நெஞ்சோட வளத்தா
அது தப்பான கருத்தா இல்ல
தண்ணீரின் எழுத்தா

பழச மறக்கலியே
பாவி என் நெஞ்சு துடிக்குது
உன்னையும் எனையும் வச்சி
ஊரு ஜனம் கும்மி அடிக்குது
அடடா எனக்காக அருமை கோரஞ்சீக
தரும மகாராசா தலைய கவுந்தீக
களங்கம் வந்தால் என்ன பாரு
அதுக்கும் நிலா'னு தான் பேரு
அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு !"

முதல் மரியாதை படத்தில் ராதா பாடும் இந்த பாடல் கலைஞர் பாடினாலும் பொருத்தமாகத் தான் இருக்கிறது!

Anonymous said...

கலைஞர் ராசா விவகாரத்தில் டெல்லி சென்று அசிங்கமாக தலித் அஸ்தரம் விட்டு பார்த்தார். தமிழ் நாட்டுப் பெருமையை வடக்கே சொல்ல வேண்டாமா?

இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி தலித் பார்பனன் சொல்லிக்கிட்டு ஊரையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றி சம்பாதிக்க போறீங்க நீங்க நல்லவங்கன்ன உங்களோட எல்லா சொத்துகளையும் தமிழ் நாட்டு ஏழைகளுக்கு கொடுங்க

Anonymous said...

//இந்தியாவைத் திருத்த ஒரு ராடியாவும் ஒரு ரஞ்சிதாவும் போதும் போல இருக்கே..//

KGG அண்ணா , உம்ம ட்ரேட் மார்க் இது தான்... hilarious.. i was expecting ur comment!!

Unknown said...

India has seen many such scandals.
Idhuvum kadandhu pome

Anonymous said...

போபார்ஸ் ஊழல் செய்த ராஜீவ் காந்தி புனித பிம்பம்.
ராஜா மட்டும் என்ன தப்பா செய்துவிட்டார். அரசியலுக்கு வருவதே கொள்ளையடிக்க தானே. இதில் ராஜாவை மட்டும் குறை சொன்னா என்ன?

Anonymous said...

கூட்டாக கொள்ளை அடிக்க கும்பல் கும்பலாக வந்து ஒட்டு வேட்டை ஆடுவதும் முடிவு தெரிந்த பின்னர் கொள்ளை கூட்டணி அமைத்துககொண்டு
நாட்டை சுரண்டுவதும் இன்னும் எத்தனை நாள் நடக்குமோ? அதிலும் இந்த நாசகாரர்கள் ஒருவருக்கு ஒருவர் என் தப்பை நீ கண்டுக்காதே, உன்னை விட்டுடறேன் என்று அடிக்கும் கூத்துகளை காண நெஞ்சு பொறுக்குதில்லையே! நாம் கட்டும் வரிப்பணத்தை தானே இந்த spectrum ஊழல மூலம் கொள்ளை அடித்திருக்கிறார்கள்? ஏன் நாம் வரி கட்டி ஏமாற வேண்டும் இன்னும??

Anonymous said...

http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-0/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-02/
http://www.tamilhindu.com/2010/05/our_invisible_dictators-03/