பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 05, 2010

இன்று வந்த மெயில்

இட்லிவடை !!
இந்துவாகிய நீங்கள் மற்றும் உங்கள் இந்து நண்பர்கள் அவ்வப்பொழுது முஸ்லிம் மதத்தை பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அவதூறாக எழுதி வருகீறீர்கள். சில சமயம் சில நல்ல அறிவுறைகளையும் கூறி வருகீறீர்கள்!! நன்றி!! ஆனால் முஸ்லிம்களை மட்டுமே குறை சொல்ல நீங்கள் சிரத்தை எடுப்பதாகவே தெரிகிறது..சில மாதங்களுக்கு முன்னால் ஒரு இரானிய திரைபடத்தில் ஒரு பெண் (விபச்சாரம் செய்தவள்) கல்லால் அடித்து கொள்வதை போல் எல்லா முஸ்லிம் நாடுகளிலும் செய்வது போலவும், முஸ்லிம்கள் எல்லாம் இப்படிதான் எனவும், முஸ்லிகள் எல்லாம் இதை ஆதரிப்பதை போலவும் எழுதி இருந்தீர்கள். ஆனால் கெளரவக் கொலைகள் இந்துகளிடமும் நடைமுறையில் உள்ளது, இதற்கு தற்போது நடந்த நிருபமா கொலை ஒரு உதாரணம்! இதை பற்றி நீங்கள் எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இல்லை, இதுதான் அடுத்த மதத்தின் மேல் உள்ள காழ்புணர்ச்சி, ஒரு தவறை தானோ தன் குடும்பத்தினரோ தன் மதத்தை சார்ந்தவரோ செய்யும் பொது அது தவறாக உங்களுக்கு தெரிவதில்லை!! வாழ்க உங்கள் சேவை!!

விகடனில் வந்திருக்கும் ஒரு கட்டுரை உங்களின் கவனத்திற்கு!!


'கெளரவக் கொலை என்பது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.' - அண்மையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்த கருத்து இது.
இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு ஓர் இளம் பெண் பத்திரிகையாளரே பலியாகியிருப்பதாக வெளியாகியுள்ள செய்தி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.தாலிபான் பாணி கொடூரச் செயலாலகக் கருதப்படும் கெளரவக் கொலைகள் (Honour Killings) என்பது இஸ்லாமிய நாடுகளில்தான் மிகுதியாக இருக்கிறது என்பது பொதுவான புரிதலாக இருக்கிறது. ஆனால், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் மிகுந்திருக்கிறது என்பதை ஐக்கிய நாடுகளின் ஆய்வறிக்கையைக் கண்டால் உணர முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் கெளரவக் கொலைகள் என்ற பெயரில் ஏறத்தாழ 5 ஆயிரம் இளைஞர், இளைஞிகள் தங்களது குடும்பத்தினரால் கொல்லப்படுகின்றனர் என்கிறது, ஐக்கிய நாடுகள் அமைப்பின் புள்ளிவிவரம்.
குடும்ப கெளரவத்தைக் கெடுத்துவிட்டதாகக் கூறி, குடும்ப உறுப்பினர் ஒருவரை அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஏனைய உறுப்பினர்கள்கள் கொலை செய்யும் கொடூரச் செயலே கெளரவக் கொலைகள் எனப்படுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் ஹரியானா, பீகார் போன்ற மாநிலங்களில் தான் அதிக எண்ணிக்கையிலான கெளரவக் கொலைகள் நடந்திருக்கின்றன. வீட்டின் கட்டுப்பாடுகளை மீறி சாதி, மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்கள், இளைஞிகளே இத்தகைய பாதக நிலைக்கு ஆளாகின்றனர்.
இத்தகையதொரு வழக்கில், ஹரியானா நீதிமன்றம் கடந்த மார்ச் 30 ஆம் தேதி அளித்த தீர்ப்பு, நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது இங்கே நினைவுகூரத்தக்கது.
ஹரியானா மாநிலம் கர்னல் என்ற இடத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரும், பாப்லி என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் உயிருக்கு உயிராக காதலித்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இவர்களது காதல் திருமணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாப்லியின் உறவினர்கள், பஞ்சாயத்தைக் கூட்டினர். பஞ்சாயத்திலும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனையும் மீறி மனோஜ் - பாப்லி ஜோடி திருமணம் செய்து கொண்டது. இதனால் ஆத்திரமடைந்த பாப்லியின் உறவினர்கள், 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம், அவர்கள் இருவரையும் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்தனர்.
இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பாப்லியின் சகோதரர் சுரேஷ், மாமா ராஜேந்தர் மற்றும் பரு ராம், ஒன்றுவிட்ட சகோதரர்கள் குர்தேவ் மற்றும் சதீஷ் ஆகிய 5 பேருக்கும் கொலைக் குற்றத்தின் கீழ் மரண தண்டனை விதித்தும், காரில் கடத்த உதவிய கிராம பஞ்சாயத்து தலைவர் கங்கா ராஜ் என்பவருக்கு கடத்தல் மற்றும் சதி திட்டக் குற்றச்சாற்றின் கீழ் ஆயுள் தண்டனையும் வழங்கி, ஹரியானா கர்னல் செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பொதுவாக, கல்வி அறிவு குறைந்த கிராமப்புற பகுதிகளிலேயே இந்தக் கெளரவக் கொலைகள் நிகழ்த்தப்படுகின்றன என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், இந்த விஷயத்தில் கல்வி என்பது ஒரு பொருட்டே அல்ல என்பதையே ஜார்கண்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் நிருபமா பதக் கொல்லப்பட்ட சம்பவம் கோடிட்டுக் காட்டுகிறது.
நிருபமா பதக் கொலை...
டெல்லியில் உள்ள ஒரு வணிக பத்திரிகை ஒன்றில் நிருபராக பணியாற்றியவர் நிருபமா பதக் (வயது 22). இவர் கடந்த 29 ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அவரது உடல் பிரேதச பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில், அவர் தற்கொலை செய்யவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய வயிற்றில் 3 மாத கரு இருந்தது. நிருபமாவின் கழுத்துப் பகுதியில் கயிறு மூலம் இறுக்கப்பட்டு, அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். நிருபமாவின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மின்சாரம் தாக்கியதில், நிருபமா இறந்ததாக தெரிவித்தனர். இதனால், சந்தேகம் அடைந்த காவல்துறையினர், நிருபமாவின் தாய் மற்றும் தந்தையிடம் விசாரணை நடத்தினர். இதில் நிருபமா உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பிரகான்சு ரஞ்சன் என்ற வாலிபரை காதலித்து வந்ததும் தெரியவந்தது.
இந்த காதல் விவகாரம் நிருபமாவின் பெற்றோர்களுக்கு தெரிந்ததால் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பிரகான்சுவையும் மிரட்டியுள்ளனர்.
இந்தநிலையில், காதலை கைவிட மறுத்ததால் தாய் மற்றும் தந்தையால் நிருபமா கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. இதைத்தொடர்ந்து அவருடைய தாய் சுபாவை காவல்துறையினர் கைது செய்து செய்து விசாரித்து வருகின்றனர். நிருபமாவின் தந்தை தர்மேசிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையின் முடிவில், நிருபமா கெளரவக் கொலைக்குதான் இரையானாரா என்பது உறுதி செய்யப்படும்.
கெளரவக் கொலைகளைப் பொறுத்தவரை வெளியுலகுக்கு தெரியவரமால், வீட்டிலேயே மூடி மறைத்துவிடுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் உண்மை நிலையை வெளிக்கொணர்வது கடினம் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நீங்க இப்போது எழுதியிருப்பது மாதிரி ஜெய் ஹனுமான் எழுதிய விமர்சனம் அது. யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. புரிதலுக்கு நன்றி.

17 Comments:

பெசொவி said...

I appreciate the author for having written frankly to a so-called Muslim Hater.

I also appreciate Idlyvadai for having published the post.

At the same time, will the author have the same courage to write similar letters to the other Islam Fanatics?

One thing is sure, tolerance in Hinduism is much more and more larger than tolerance in any other religions.

பொடிப்பையன் said...

ஒரு படத்தின் விமர்சனம்,.. ஒரு உண்மை சம்பவம்...,
இரண்டும் காட்டுமிராண்டித்தனம் பற்றியது.....இதில் மதம், இனம் எங்கே?
இட்லிவடைக்கு ஏது மதம்? இனம்?... பசிச்சா சாப்பிடவேண்டியது தானே..!
அட போங்கப்பா .......

Anonymous said...

கெளரவக் கொலைகளை இந்தியாவில் சட்டம் ஏற்பதில்லை.இஸ்லாமியர்கள் தங்கள் சட்டமே மத அடிப்படையில் இருக்க வேண்டும் என்பவர்கள். இங்கு தனிநபர்கள் செய்யும் வன்முறைக்கு தண்டனை உண்டு.ஈரான் தன்னை இஸ்லாமிய குடியரசு என்றுதான் கூறிக்கொள்கிறது.கல்லால் அடித்துக் கொல்வதை தீர்ப்பாகவும்,அதற்கு இடம் தரும் சட்டத்தையும் வைத்திருப்பது எந்த சமூகம்.
அதை எந்த அடிப்படையில் செய்கிறார்கள்- இவைதான் கேள்வி.
இட்லி வடைக்கு இது கூட தெரியவில்லையா.எதற்கு இந்த போலி செக்யுலரிஸ்ட் பதில்.

ரிஷபன்Meena said...

பெயர் சொல்லாட்டியுங்கூட பதில் நல்லா சொல்லியிருக்கீங்க சார்

உண்மையான இஸ்லாமியன் said...

அனானி,

//இட்லி வடைக்கு இது கூட தெரியவில்லையா.எதற்கு இந்த போலி செக்யுலரிஸ்ட் பதில்.//

அடப்போங்கப்பா, போலி மதச்சார்பின்மைவாதியா இருந்தாத்தான் வலையுகில் காலம் தள்ள முடியும்..இஸ்லாமியர்கள் செஞ்ச அல்லது செய்கிற தவறை எடுத்துச் சொன்னா அது சிறுபான்மையினர் மீதான வண்முறை. இந்துமதத்தை இழிவு செஞ்சு ( காசுக்காகவோ அல்லதுபோலி மதச்சார்பின்மைவாதி பட்டத்துக்கோ) செஞ்சா நீங்க நியாய்வாதி..

இதுகூடத் தெரியாத சின்னப்புள்ளையா இருக்கீங்களே!!!!

Anonymous said...

//இங்கு தனிநபர்கள் செய்யும் வன்முறைக்கு தண்டனை உண்டு.ஈரான் தன்னை இஸ்லாமிய குடியரசு என்றுதான் கூறிக்கொள்கிறது.கல்லால் அடித்துக் கொல்வதை தீர்ப்பாகவும்,அதற்கு இடம் தரும் சட்டத்தையும் வைத்திருப்பது எந்த சமூகம்.
அதை எந்த அடிப்படையில் செய்கிறார்கள்- இவைதான் கேள்வி.//

நல்ல கேள்வி

Pughal said...

அதெப்படி இவர்களால் மட்டும் எல்லாவற்றிற்கும் மத சாயம் பூச முடிகிறது?!
இப்படி வாதம் செய்வதை விட தங்கள் பிற்போக்குதனத்தை கைவிடுவதற்கு யோசனை செய்யலாம்!!

Balu said...

/*** Anonymous said...
கெளரவக் கொலைகளை இந்தியாவில் சட்டம் ஏற்பதில்லை.இஸ்லாமியர்கள் தங்கள் சட்டமே மத அடிப்படையில் இருக்க வேண்டும் என்பவர்கள். இங்கு தனிநபர்கள் செய்யும் வன்முறைக்கு தண்டனை உண்டு.ஈரான் தன்னை இஸ்லாமிய குடியரசு என்றுதான் கூறிக்கொள்கிறது.கல்லால் அடித்துக் கொல்வதை தீர்ப்பாகவும்,அதற்கு இடம் தரும் சட்டத்தையும் வைத்திருப்பது எந்த சமூகம்.
அதை எந்த அடிப்படையில் செய்கிறார்கள்- இவைதான் கேள்வி.
இட்லி வடைக்கு இது கூட தெரியவில்லையா.எதற்கு இந்த போலி செக்யுலரிஸ்ட் பதில்.
****/


Repeatu...

Anonymous said...

Sreedharan from Sharjah said,

Dear Idly vadai (Secularist),

You need not publish these type of emails to prove your secularist colours. There are a lot of bloggers who safeguard secularism and muslims. Very few write /do not insult Hinduism like you.

A crime is a crime whoever does it. But there is definitely a distinction between legalising it and punishing it.Islam is harsh on punishments and many muslim countries devise their laws in lines with their religion which supports these barbaric acts.

But Other countries view it as a crime only and punishes the individual according to Law of Justice.

To cut the long story short, the published blog post loses its relevance and value.

Anonymous said...

இட்லி வடைக்கு மற்ற மதத்தினர் மீது காழ்புணர்ச்சி என்பதில் சற்றே உண்மை உள்ளது. எனினும் அந்த பதிவை பொருத்தமட்டில் முஸ்லிம்கள் கோவித்து கொள்வது சரியில்லை. நிருபமா பதக் தாய் மற்றும் தந்தை கொலை செய்து இருந்தால் அவர்கள் தண்டிக்க பட வேண்டிய குற்றவாளிகள் தான். இங்கு எத்தனயோ கலப்பு திருமணங்கள் நல்லபடியாக நடந்து உள்ளன. பெற்றோர் ஏற்று கொண்டு உள்ளனர். ஆனால் பெண்ணை கல்லால் அடித்து கொல்வது சரி இல்லை என்பதை முஸ்லிம்கள் துணிச்சலாக உலகிற்கு சொல்லத் தயாரா? தங்கள் மதத்தில் உள்ள குறைகளை ஒத்து கொண்டு அதை சீர்படுத்த முன்வருவார்களா?

Anonymous said...

Here comes the muslim apologists, according to whom if you dont proclaim muslim as a peace-loving religion you must be a hindu fanatic.

bharath said...

I justarted reading your blog in last few days..quite impressive stuff you have..but i really dont understand why they are trying to paint you with secularism or hinduism..while no doubt that you have right to express your views others should respect the same...if you dont like some blog some carry on and mind your business ...i seriously feel as country if we put our brain together in developing it rather just fighting like pigs on a mud for the want to religion..

idhuvum kandhdu pogum...but it has made idli vadai blog into hotttttttttt sambaridly(on the lighter side..)

Anonymous said...

The post is an absolute Non-sense. didn't expect this from IV.

My only question to the author of the letter is. Why's Shariah Law and Islam as a whole approve such crimes and violence in Islamic societies?

Mukkodan said...

Nirupama's Parents will be punished by the laws of the land, but the Muslim Women under Shariah never will.

Tamilblogger.com said...

இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com

mak said...

Woman beaten to death India
http://www.youtube.com/watch?v=C61c_Wq0N84&feature=player_embedded

Indian women beaten by indian animals
http://www.youtube.com/watch?v=TPqX4KlW_P4&feature=related

Girls assaulted in Mangalore pub by Sri Ram Sena and Bajrang Dal activists

http://www.youtube.com/watch?v=6AzLAGdiNFQ&feature=related

Sati is a funeral practice among some hindu communities in which a recently widowed woman would either voluntarily or by use of force and coercion immolate herself on her husband’s funeral pyre.

Does Sati is indian law or hindu law? Does sati will applicable for husband?

i can give more...

சுழியம் said...

நிருபமா விவகாரத்தை எல்லா மீடியாக்களும் வாரத்திற்கு ஒரு முறை போட்டு கிழித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிருபமா விவகாரம் என்ற ஒன்றை வைத்துக் கொண்டு ஊர் பூராவும் இதுதான் நடக்கிறது என்று சொல்ல வேண்டுமாம்.

ஆனால், பல நாடுகளே இப்படிக் கல்லால் அடிக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டு அதைப் பற்றிப் பெருமைப்படுவதைப் பற்றி எதுவும் சொல்லக் கூடாதாம்.

ஐயா, முசுலீம் அவர்களே. ஒரு கேள்வி.

நிருபமாவைக் கொலை செய்தவனைத் தூக்கில் போடு என்று இந்துக்கள் எல்லாருமே சொல்கிறோம்.

அதே போல ஷரியா சட்டத்தை வைத்துப் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் முல்லாக்களைத் தூக்கில் போட வேண்டும் எனச் சொல்ல நீங்கள் தயாரா ?

இந்த லட்சணத்தில், இந்திய முசுலீம்களுக்கு (சிவில் பிரச்சினைகளில் மட்டும்) ஷரியா சட்டப்படிதான் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கவும் தயங்கவில்லை நீங்கள்.

இதற்குப் பெயர்தான் ரெட்டை வேடம். ஊரை ஏமாற்றுவது.