பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 01, 2010

விஜய் அரசியலுக்கு வர வேண்டும் - சுறா விமர்சனம்



முன்குறிப்பு: எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்த சுறா படம் பார்த்தேன். அடுத்த தமிழக அரசியல் தலைவர் படம் பார்க்கவில்லை என்றால் எப்படி ?

உங்கிட்ட பணம் இருக்கலாம், பதவி இருக்கலாம், ஆள் இருக்கலாம், அதிகாரம் இருக்கலாம். ஆனா எங்கிட்ட நேர்மை இருக்கு, உண்மை இருக்கு. அதுக்கு மேல என்னை உயிருக்கும் மேலா நினைக்கிற உள்ளங்கள் இருக்கு"

"இவன் தன்னை தலைவனா சொல்லிக்கிறது இல்லை; இவனதான் இந்த மக்கள் தலைவனா நினைச்சுகிட்டு இருக்காங்க"

போன்ற வசனங்கள் மூலம் இவர் நிச்சயம் அரசியலுக்கு வர போகிறார் என்பதை உணர்த்துகிறது. வீட்டுக்கு வந்து யோசித்து பார்த்ததில் எல்லா காட்சிகளிலும் அவர் அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று உணர்த்தியது. முடிந்தவரை நினைவில் இருப்பதை எழுதியிருக்கிறேன். சுய நினைவோடு இருந்து, இந்தப் பதிவைப் போட முடிந்ததற்கு ஆண்டவனுக்கு நன்றி கூறி இந்த பதிவை ஆரம்பிக்கிறேன்...

1. மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் திரும்பி வர, படத்தோட ஹீரோ மட்டும் மிஸ்ஸிங், அதாவது சுறா மிஸ்ஸிங். ஊரே அமைதியாகக் காத்துக்கொண்டு இருக்க, டால்ஃபின் மீன் போல துள்ளிக் குதித்து வர்றாரு. சொட்டச் சொட்ட ஈர டிரஸோடு மணலில் நடந்து வரும் போதே டிரஸ் கலர் மாறுகிறது. உடனே பாட்டுப் பாடுகிறார். அரசியலுக்கு சமயம் தகுந்தாற் போல கலர் மாத்தத் தெரியணும். இந்த ஒரே காரணத்துக்காகவே விஜய் அரசியலுக்கு வர வேண்டும்!

2. மீடியாவைக் காண்பிக்கும் போது சன் டிவி, கலைஞர் டிவி மைக் மட்டும் தான் இருக்கிறது. தயாநிதி, கலைஞர் சப்போர்ட் இருப்பதால் இவருடைய அரசியல் வாழ்வு சூரியனை போல பிரகாசமாக இருக்கும்.

3. அமைதியாக இருக்கும் கூட்டத்தைப் பார்த்து கலெக்டர் "எல்லோரும் கொஞ்சம் அமைதியாக இருங்கள்" என்கிறார். விஜயுடைய படத்திலேயே கலெக்டர் இவ்வளவு கடமை உணர்ச்சியாக இருந்தால், இவர் அரசியலுக்கு வந்து, ஆட்சிக்கும் வந்தால் அதிகாரிகள் எப்படி இருப்பார்கள் என்று யோசித்துப்பாருங்கள்!

4. இவர் இருக்கும் மீனவ குப்பத்துக்குப் பெயர் "யாழ் நகர்". "தமிழர்களுக்கு நிச்சயம் விடிவு காலம் வரும்" என்று நம்மைப் பார்த்து பட்டப் பகலில் ஒரு வசனம் பேசுகிறார். இவர் அரசியலுக்கு வந்தால் தமிழர்களின் பிரச்சனைகளை எல்லாம் தீர்த்துவிடுவார் என்ற நம்பிக்கை துளிர்கிறது. அதனால் இவர் அரசியலுக்கு வர வேண்டும்.

5. கந்து வட்டி தாதாக்களிடம் "ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்று அண்ணா வசனத்தை பேசிவிட்டு தானும் தன் பங்கிற்கு ஒரு பஞ்ச் டையலாக் பேசிவிட்டு இது "இந்த அண்ணா" சொல்லும் வசனம் என்று ஒரு பிட்டைப் போடுகிறார். அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் விஜய் அரசியலுக்கு வர தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் அடிக்கடி என்னங்கண்ணா என்று இவர் அண்ணாவை நினைவுப்படுத்துவது ஓவருங்கண்ணா!

6. உடம்பு சரியில்லாத அம்மாவுக்கு மீன் குழம்பு வைத்துச் சாப்பாடு போடுகிறார். நெருப்பு குச்சி இல்லாமல் சொடக்கு போட்டு அடுப்பை ரஜினி மாதிரி பத்த வைக்கிறார். "அம்மா" பாசம், ரஜினி ஸ்டைல், அரசியலுக்கு இது போறதா?

7. குப்பத்தில் பெண்கள் பவர் கட் போது மெழுகுவத்தி வைத்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் சொல்லுகிறார். இவ்வளவு அக்கறை உள்ள இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பவர் கட் பிரச்சனை இருக்காது என்று நிச்சயம் நம்பலாம்.

8. சீரியல் பார்க்கும் பெண்களை "சீரியல் பார்த்து மேம்பாலம் தூண் மாதிரி ஆகிவிட்டீர்கள்" என்று செல்லமாகச் சொல்கிறார். பெண்கள் மீது இவருக்கு இருக்கும் இந்த மரியாதைக்கு நிச்சயம் ஒட்டுமொத்த தாய்குலமும் ஓட்டுப் போடும்.

9. தம்மன்னா தண்ணீரில் குதித்து, சாரி நடந்து சென்று தற்கொலை செய்ய முயலும் போது காப்பாத்துகிறார். சினிமா நடிகை தண்ணீரில் தற்கொலை செய்துக்கொண்டால் அவர் தொப்புள் தெரிய வயித்தில் தண்ணீரீல் இல்லை என்றாலும் அமுக்கி எடுக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. கூட்டம் இருந்தாலும் அதற்கு தகுதியானவர் ஹீரோதான். விஜய் ஏதோ ஆப்பரேஷன் செய்வது மாதிரி அமுக்க போகிற சமயத்தில் வடிவேலு நானும் கொஞ்சம் அமுக்கிறேன் என்று கெஞ்சலாகக் கேட்க, விஜய் ரொம்ப பெரிய மனசுடன், சரி நான் ரைட் சைடு அமுக்கிறேன், நீ லெப்ட் எடுத்துக்கோ என்று தம்மன்னாவின் வயிற்றைப் பங்கு போடுகிறார். காங்கிரஸ் இதை கவனிக்க வேண்டும், நாளைக்கு விஜய் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸுக்கு கவலை இல்லை. இப்போ இருக்கற நிலைமை மாறி, மந்திரி சபையில் நிச்சயம் பங்கு உண்டு.

10. சர்ச்சுக்குச் சென்று கோவிலில் விழுந்து சேவிப்பது போல சேவிக்கிறார். ரொம்ப நாளா இவர் இப்படி செய்துக்கொண்டு இருக்க அங்கே இருக்கும் பாதிரியார், "ஏம்பா அய்யனார் கோவில விழுந்து கும்பிடறாப்பல சர்ச்சில் கும்புடற" என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கேள்வி கேட்க அதற்கு விஜய் எனக்கு "அய்யனார்", "ஏசு" , "அல்லா"ரும் ஒன்று தான் என்று டையலாக் பேசுகிறார். ஆக செக்யூலர் பார்ட்டையும் கச்சிதமாக் கவர் செய்துவிட்டார். இதுக்கு மேல அரசியலுக்கு வர வேற தகுதியும் வேணுமோ?

11 குப்பத்தில் இருக்கும் எல்லோருக்கும் வீடு கட்டிக் கொடுத்துவிட்டு தான் கல்யாணம் என்று முடிவோடு இருக்கிறார். "இந்த மாதிரி கோடியில் ஒருவர் தான் பிறப்பார்" என்ற வசனம் வேற . இப்படி ஒரு லட்சிய வீரர் ஏன் நமக்கு முதலமைச்சர் ஆக கூடாது? இவர் முதலமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் வீடு கட்டி கொடுத்துவிட்டு தான் கல்யாணம் செய்துக்கொள்வார்.

12. சிங் மாதிரி வேஷம் போட்டு கடத்தல்காரர்களைத் துரத்துகிறார். ஆட்சிக்கு வந்த பின் இவர் டில்லி செல்ல வேண்டியிருந்தால், சிங் வேஷம் போட்ட இவருக்கு நிச்சயம் ஹிந்தி பேச தெரியும். மன்மோகன் சிங்கிற்கு ஜுரம் வந்தால் அவருக்கு பதில இவர் ஒபாமாவையோ பாகிஸ்தான் பிரதமரையோ கூட சந்திக்கலாம். என்ன, யார் சந்தித்தாலும் பெரிய வித்தியாசம் இருக்க போவதில்லை.

13. ரோட்டில் பேனா விற்கும் குருடர்களிடம் எல்லா பேனாக்களையும் வாங்கி அவர்களுக்கு ஹெல்ப் செய்கிறார். இவர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் பேனாத் தட்டுப்பாடே வராமல் எல்லோரும் எழுத படிக்க கற்றுக்கொள்ளுவார்கள். தமிழகம் கல்வியில் சிறந்து விளங்கும்.

14. குப்பத்தைக் காலி செய்ய வேண்டும் என்று சொல்லும் கலெக்டரிடமும், கஞ்சா கேஸில் கைதாகி நீதிபதி முன்பு கோர்ட்டிலும் வசனம் பேசி கைத்தட்டல் வாங்குகிறார். இதில் விஜய டி. ராஜேந்தரை மாதிரி பேசி வேற பேசிகாண்பிக்கிறார். இதே போல புதிய சட்டசபையிலும் இவர் பேசி கைத்தட்டு வாங்குவார் என்று நிச்சியமா நம்பலாம்.

15. "எத்தனை கோடி கொடுத்தாலும் சரி என்னை விலைக்கு வாங்கமுடியாது", "பணத்துக்காக உங்க சுயமரியாதையை இப்படி இழக்கலாமா?" என்று வசனம் பேசிவிட்டு "சுயமரியாதைக்கு அர்த்தம் பேசுவதும் தமிழ்நாட்டில் தான், அசிங்கப்படுத்துவதும் தமிநாட்டில் தான்" என்று ஆவேசமாக நம்மை பார்த்து சொல்லுகிறார். பெரியாருக்குப் பிறகு சுயமரியாதை பற்றி இப்படி யாரும் பேசி கேட்டதில்லை. அண்ணா, பெரியார் அரசியலுக்கு எவ்வளாவு முக்கியம்? இப்ப வீரமணி சப்போர்ட்டும் இவருக்கு கிடைத்துவிட்டது. இதுக்கு மேல வேற என்ன வேண்டும் ?

16. குப்பமே எரிந்து சாம்பலாக கிடக்க, இவரும் அடிப்பட்டு கிடக்க இவர் அம்மா "சுறா..." என்று கத்த எங்கிருந்தோ சிகப்பு துணியை தலையில் அடிப்பட்ட இடத்தில் கட்டிக்கொண்டு வருகிறார். இதப் பாத்தா இப்போ என்ன செய்கிறோம், எங்க இருக்கோம் என்று புரியாமல் தவிக்கும் "தோழர்களும்" இவருக்கு நிச்சயமாத் தோழர்கள் ஆவது நிச்சயம்.

17. வடிவேலு விஜய்க்கு ஃபிரண்டாக வருகிறார். படத்தில் வடிவேலுவிற்கு 'Umberlla என்று பெயர். இவருக்கு குடை பிடிக்க போகும் எல்லோருக்கும் கொடை வள்ளலாக இருப்பார் என்று நம்பலாம். கொடை வள்ளலுக்கு குடை பிடிப்பவர்கள் அரசியலுக்கு முக முக்கியம்.

18. கடத்தல் சரக்கை மும்பைக்குக் கொண்டு சென்று விற்கிறார். சரக்கு = லேப்டாப். வாங்குபவர் எல்லா லேப்டாப்பையும் ஆன் செய்து வெப் கேமராவை விஜய் பக்கம் திருப்புகிறார். அதாவது டெஸ்ட் செய்கிறாராம். உடனே எல்லா லெப்டாப்பிலும் இவர் முகம் தெரிகிறது. இவர் அரசியலுக்கு வந்தால் வால் போஸ்டருக்கு பதில் எல்லாரோட லேப்டாப்பிலும் வால் பேப்பரில் இவர் முகம் இருக்கும் படி செய்து விடுவார். He is enviromental friendly you see! அடுத்தவன் சொத்தை அடித்து ஏப்பம் விடும் அரசியல் வியாதிகள் மத்தியில், என்னை பார்த்து ஏப்பம் விடலாம் என்று பாடும் இவர் நிச்சயமா friendly -தான்.

19. கலர்த் தலை அடியாள், காதில் கடுக்கன் போட்டவன் என்று பலரையும் அடிக்கிறார். ஜேம்ஸ் பாண்ட் கம்ப்யூட்டரை மற்றி ப்ரோகிராம் செய்து வெடி குண்டை செயல் இழக்க செய்வார் ஆனால் விஜய்க்கு அதற்கு எல்லாம் நேரம் இல்லை எல்லா வயர்களையும் பிடு ங்கிவிட்டுச் செயல் இழக்க செய்கிறார். இவர் அரசியலுக்கு வந்தால் ரவுடி கலாச்சாரம் ஒழிந்து, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக மாறிவிடும்.

20. பெட்டியில் சவுரி முடியை வைத்து வில்லனை ஏமாற்றுகிறார். இப்படிப் பல மோடி வித்தை பண்ணறதால பெண்களுக்கு ரொம்பப் பிடிக்கும் ஐ.பி.எல்.லுகோ அல்லது அரசியல் பவருல பவார் மாத்ரி பிசிசிஐ-கோ இவர் ஏன் கவுரவ தலைவராக ஆகக்கூடாது? ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் அம்பாசிடர் வேலை பண்ண முன் அனுபவம் இவருக்கு பக்காபலம்.

21. தன் குப்பத்து மக்களை எல்லாம் பார்த்து "முட்டாப்பசங்களா.. என்று திட்டுவதும் பிறகு கொஞ்சமாவது யோசிங்க" என்றும் காய்ச்சி எடுக்கிறார். முட்டாப்பசங்க எப்படி யோசிக்க முடியும்? "தமிழன் மரமண்டை, சோற்றாலடித்த பிண்டம்" என்றெல்லாம் திட்டியவரை முதலமைச்சராக ஏற்றுக்கொண்ட நாம் இவரையும் நம் தலைவராக ஏற்றுக்கொள்வதில் என்ன தயக்கம் இருக்க போகிறது?

22. லூஸுப் பெண்ணாக வந்தாலும் பெண் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார் என்று லவ் செய்து, அதன் மூலம். தமிழ் இளைஞர்களின் இன்றய Face Valueவை எடுத்துக் காண்பித்துள்ளார். வெயில்லையும் பொருட்படுத்தாது லெதர் கோட், தொப்பி, டை என்று கலக்குகிறார் விஜய். கடமை என்று வந்துவிட்டால் வேர்வையை வர வைத்துக்கொண்டு உழைக்கும் இவர் மாதிரி ஆட்கள் தான் தமிழக அரசியலுக்கு கண்டிப்பாத் தேவை.



23. மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே." என்ற வசனத்தில் இவரை ராகுல் காந்தி சந்தித்த பிறகு திமுக இவருக்கு கொடுத்த டென்ஷனை பற்றி பேசுகிறோ என்று சந்தேகமாக இருக்கிறது.


24. இது போல படம் முழுக்க பல காரணங்கள் இருக்கு ஆனால் இவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் பட உலகிற்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு. இந்த ஒரு காரணத்துக்காகவே இவர் அரசியலுக்கு வரலாம். வரவேண்டும்!





பிகு: அடுத்த படைப்பு, காத்திருக்கவும் :-)


32 Comments:

(-!-) said...

இன்று உமக்கு நல்ல தூக்கம் வரும்.

Guru said...

/// இது போல படம் முழுக்க பல காரணங்கள் இருக்கு ஆனால் இவர் அரசியலுக்கு வந்தால் தமிழ் பட உலகிற்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு. இந்த ஒரு காரணத்துக்காகவே இவர் அரசியலுக்கு வரலாம். வரவேண்டும்!///

முக்கியமாக இனிமேல் இந்த மாதிரி மொக்கை படங்கள் நடிக்காமல் இருப்பதற்காகவாவது விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.

நாகு (Nagu) said...

இப்படி அநியாயமாக சுறாவிற்கும் திமிங்கிலங்களுக்கும் முடிச்சு போடுகிறீர்களே?

Krish said...

உண்மையாலுமே நாமெல்லாம் முட்டா பசங்கதான்

snkm said...

ஆஹா! கிளம்பிட்டாங்கப்பா! கிளப்பி விட்டாச்சா! சரிதான்!

தனி காட்டு ராஜா said...

//மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே." //

//மேல கை வைக்கிறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு வை. வச்சிட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே." //

சுறா படம் பார்க்க போறதுக்கு முன்னால ஒரு தடவைக்கு ரெண்டுதடவை யோசிச்சு போ ...போய்ட்டா அப்புறம் யோசிக்க நீ இருக்க மாட்டே...பாடை தான் ...........

SAN said...

IV Anna,
ennanganna konnu teenga!!!!!!!

Unknown said...

.//குப்பத்தில் பெண்கள் பவர் கட் போது மெழுகுவத்தி வைத்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் சொல்லுகிறார்//

பவர்கட்ல எப்படி டிவி பாக்க முடியும்.

Anonymous said...

haiyo.. pullarikkudhey.. tharkola pannikkalaamnu mudivu panni appuram paatha madras-la konjam kooda thanniya kaanomey

Don said...

When other heroes are aiming to become Superstars, our hero is aiming for MP/MLA seat, b'coz he's already a superstar. Valga Vijay, Valarka avar pugal. I appreciate Vijay for the fact that people at his age will be reluctant even to think about politics. I'm quite confident (though not for reasons in the post) it's good for tamilnadu if Vijay comes to politics. If your intent is to make fun of Vijay, then you should justify your impartiality by making fun of the likes of Vijay like Maheshbabu etc too.

nellai அண்ணாச்சி said...

எல்லாம் கலிகாலம் வேற என்ன சொல்ல

Anonymous said...

19 வது பாயிண்ட்ல ரெண்டாவது வரியில மாற்றிக்கு பதிலா மற்றி ன்னு இருக்கு.
:\

கௌதமன் said...

எறா எல்லாம் சுறா வேஷம் போட்டா சுறா எல்லாம் என்ன செய்யும்?

தேடுதல் said...

எல்லாம் சரி. விஜய் வர்ராரு என்ன என்ன செய்யிறாருன்னு வரிசையா சொல்லிட்டீங்க......கடைசிவரைக்கும் கதை என்னன்னு சொல்லவே இல்லை?

Athiban said...

அரசியலுக்கு வர்ரார்னு சொல்லறதுக்கு 24 பாயிண்ட்ஸா எழுதணும்ம்ம்ம்ம்

Mani said...

அது எல்லாம் சரி....விஜய் AND ரஜினி படத்துல லாஜிக் எல்லாம் பாக்கப்படாது JUST என்ஜாய் பண்ணுங்கோ....படம் பாத்து.

மற்ற படங்களுக்கு விஜய் படம் எவ்வளவோ தேவலை.....நமக்கு தேவை குடுக்கிற காசுக்கு சொல்லிய ENTERTAIN கிடைக்கணும்....அம்புட்டுதான்....

VENG said...

அப்போ சுறா புட்டுதானா....!

சீனு said...

9 வது பாயின்ட்...சூப்பரப்பு...

Shankari said...

good memory power!!! n each point is linked to politics nicely.. but didn't tell anything about d story.. so.. can we conclude there is no story?!

Anonymous said...

தயாநிதி, கலைஞர் சப்போர்ட் இருப்பதால் இவருடைய அரசியல் வாழ்வு சூரியனை போல பிரகாசமாக இருக்கும்.


---------------------------------

வெளங்கிரும்.

பிரசாத் said...

விஜய் என்றாவது ஒரு நாள் திருந்துவார் என்ற நம்பிக்கை இருந்தது. இந்தப் படத்தை பார்த்த பிறகு அந்த நம்பிக்கையும் போய் விட்டது.

கிரி said...

//jaisankar jaganathan said...
.//குப்பத்தில் பெண்கள் பவர் கட் போது மெழுகுவத்தி வைத்துக்கொண்டு சீரியல் பார்க்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் சொல்லுகிறார்//

பவர்கட்ல எப்படி டிவி பாக்க முடியும்.//

:-)))

கிரி said...

Idlivadai Excellent linking! ;-)

Anonymous said...

Boycott this masala king Vijay and save Tamil Movie industry.

Kannukkul nilavu was the last Vijay movie I watched. After that I wont watch even if I get a free DVD.

Gaana Kabali said...

"மீடியாவைக் காண்பிக்கும் போது சன் டிவி, கலைஞர் டிவி மைக் மட்டும் தான் இருக்கிறது. தயாநிதி, கலைஞர் சப்போர்ட் இருப்பதால் இவருடைய அரசியல் வாழ்வு சூரியனை போல பிரகாசமாக இருக்கும்."

ஒன்றை நீங்கள் மறந்து விட்டீர்கள்.
கருணாநிதி தன் குடும்பத்தினரைத் தவிர யாரையும் கட்சியில் தலைத் தூக்க விடுவதில்லை.
தேர்தலின் போது கூட்டம் சேர்க்க மட்டும் தன் கட்சியில் உள்ள நடிகர்களை பயன் படுத்திக் கொண்டு , மற்ற சமயத்தில் அவர்களை கண்டுக்கொள்ளாமல், பின்பு தூக்கி எரிந்து விடுவார்.
எடுத்துக் காட்டாக MGR , T . ராஜேந்தர் , ராதிகா , சரத் குமார் ஆகியோரை சொல்லலாம்.
ஆகவே விஜய் அரசியலில் அதுவும் தி.மு. க வில் தலைத் தூக்குவதை கருணாநிதி விரும்ப மாட்டார்.
விஜய் தனிக் கட்சி வேண்டுமானால் ஆரம்பிக்கலாம்.
அப்படியே ஆரம்பித்தாலும் போணியாகாது.
சினிமாவில் செய்வது போல் நிஜ வாழ்க்கையில் செய்ய முடியாது.

எது எப்படியோ விஜய் சினிமாவில் நடிக்காமல் இருந்தால் சரி.

Anonymous said...

எல்லாம் சரி. விஜய் வர்ராரு என்ன என்ன செய்யிறாருன்னு வரிசையா சொல்லிட்டீங்க......கடைசிவரைக்கும் கதை என்னன்னு சொல்லவே இல்லை?

என்ன கேள்வி கேட்டுட்டீங்க தேடுதல், விஜய் படத்துல கதை இருக்குமா?

CS. Mohan Kumar said...

அரசியலுக்கு வந்தா சினிமாவில் நடிக்க மாட்டாரா என்ன? சிவாஜி முதல் விஜய் காந்த வரை பலர் அரசியலுக்கு வந்த பின்னும் நடிக்க தானே செய்தனர்?

Erode Nagaraj... said...

my FB status msg:

suRA ticket prizes slashed... one ticket - one rupee.. statutary warning: 200 Rs. to exit!! - sema collection..

NSR said...

ennadhu..Suraa padam release aayiducha?

Anbu said...

நானும் அந்த கொடுமைய் அனுபிவித்தேன் .. வேட்டைக்காரன் படம் நன்றாக இருக்கிறதென்றால் இந்த படம் எவ்வளவு கொடுமை என்று யுகிதுகொல்லுங்கள் .. விஜய் இப்போ சொல்கிறார் தான் நிம்மதியாய் இருக்கிறார் என்று.. ஏன் இருக்கமாட்டார் .. எத்தனை நாளுக்குத்தான் ஒரு மட்டமான படத்தில் நடித்துக்கொண்டே இருப்பார்..

Mahesh said...

தமிழ் நாட்டில் சுறா படம் பார்த்து பலியானோர் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்வு...பிரதமர் உட்பட பல கட்சி தலைவர்கள் கண்டனம் !! விஜய் இனி படங்களில் நடிக்க தடை ....குழந்தைகள் வாந்தி மயக்கம்.....

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

முக்கியமாக இனிமேல் இந்த மாதிரி மொக்கை படங்கள் நடிக்காமல் இருப்பதற்காகவாவது விஜய் அரசியலுக்கு வர வேண்டும்.

அதேதான்