பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 31, 2010

மண்டேனா ஒன்று 31/5/2010

ஒரு அரசாங்கம் எவ்வளவு தூரம் பொறுப்பற்ற தன்மைக்கு உதாரணமாக இருக்க முடியும் என்பதை மத்திய காங்கிரஸ் கூட்டணி சர்க்கார் மற்றொரு முறை நிரூபித்துக் காட்டியிருக்கிறது. மும்பையிலிருந்து கல்கத்தா செல்லும் ஞானேஷ்வரி எக்ஸ்பிரஸ் மேற்கு மித்னாபூர் அருகே நக்ஸல்களின் கொடூரமான வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி, எதிரே வந்த சரக்கு ரயிலுடனும் மோதி தடம் புரண்டுள்ளது, இரட்டை கோரம். இதில் இந்த நிமிடம் வரை 100 பேர் பலியாகியுள்ளனர். அதிக சேதமடைந்த F5, மற்றும் F6, பெட்டிகளை இன்னும் அகற்றும் பணியே துவங்கவில்லையாதலால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என தோன்றுகிறது. இறந்த 100 பேர்களுள் இதுவரை 11 பேர்களது சடலங்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளன.




இந்நிலையில் அரசாங்க பிரதிநிதிகளான மந்திரிகள் இவ்விபத்து குறித்து மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். 100 பேர் இறந்த துக்கத்தை விட இவர்களின் பொறுப்பற்ற பேச்சுக்களும், இவர்களையெல்லாம் மந்திரிகளாகக் கொண்ட இந்தியாவின் எதிர்காலமும் மிகுந்த கவலையளிக்கிறது.

முதலில் விபத்து ஸ்தலத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி, இது திட்டமிடப்பட்ட வெடிகுண்டு தாக்குதல் என்றும், விபத்து ஸ்தலத்தில் ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பிறகு பேசிய உள்துறையமைச்சர் சிதம்பரம், இது சதிச்செயலாக இருக்கலாமென்றும், ஆனால் வெடிகுண்டு தாக்குதலா என தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

பிறகு மேலும் பேசிய மம்தா பானர்ஜி, மாநில அரசின் சட்ட ஒழுங்கு சரியில்லை என்றும், இதனால் இவ்விபத்திற்கு முழுக்க முழுக்க மாநில அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும், ரயில்வே அமைச்சகம் இவ்விபத்திற்கு பொறுப்பேற்க முடியாதென்றும் தெரிவித்தார். இவருடைய இந்த பொறுப்பற்ற பேச்சு, ரயில்வே துறைக்கும், இவருக்குமே எள்ளளவும் சம்பந்தமில்லை என்பது போலிருந்தது. முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பேரில், மாநில கம்யூனிஸ்ட் அரசை பலிகடா ஆக்க முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது. எந்த முகூர்த்தத்தில் இவர் ரயில்வே அமைச்சராகப் பொறுப்பேற்றாரோ தெரியவில்லை, விபத்துக்களும், மரணங்களும் தொடர்கதையாகிக் கொண்டிருக்கின்றன.

அடுத்ததாகக் கருத்து தெரிவித்த ப்ரணாப் முகர்ஜி, முன்னவர் இருவரையுமே தூக்கி சாப்பிட்டுவிட்டார். அவர்களது இருவரது கருத்துக்களையுமே மறுத்து, இது சதிச்செயலாகவோ, அல்லது குண்டுவெடிப்பாகவோ இருந்திருப்பதற்குண்டான ஆதாரங்கள் எதுவுமில்லை என்று ஒரு போடு போட்டிருக்கிறார். என்னவாக இருக்குமென்பது அவருக்கு மட்டுமே வெளிச்சம்.

இதற்கிடையே இத்தாக்குதல் குறித்து பேசிய மேற்கு வங்க காவல்துறை உயரதிகாரி ஒருவர், மாவோயிஸ்டுகளின் கிளை அமைப்பு ஒன்று இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாகவும், அவர்களின் துண்டு பிரசுரங்கள் ஸ்தலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சொல்லி வைத்தாற்போல் அனைவருமே குழம்பியுள்ள குட்டையில் மீன் பிடிக்க முயற்சிக்கின்றனர். அநேகமாக நக்ஸல் பிரச்சனையால் மத்திய அரசிற்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இந்த லட்சணத்தில் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டேயிருந்தால், என்று விபத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, விசாரணை நடத்தி, என்று, என்ன நடவடிக்கை (??!!) எடுக்கப் போகிறார்களோ? கடந்த ஒன்றரை மாதங்களில் இது மாவோயிஸ்டுகளின் ஐந்தாவது மிகப்பெரிய தாக்குதல் என்பது கவனிக்கத்தக்க அம்சம். இதுவரை இந்த ஐந்து தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இன்னமும் மாவோயிஸ்டுகள் தொடர்பாக மத்திய சர்க்கார் ஒரு ஸ்திரமான முடிவெடுக்காமல் தவிப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. சக்திமிக்க அரசாங்க யந்திரத்தை விட ஒரு பிரிவினைவாத, தீவிரவாத அமைப்பு பலம்பெறுவது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ஆனால் முதுகெலும்பற்ற மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக் கொள்வதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர். இது ஜனநாயகத்திற்கு சற்றும் நல்லதல்ல. இதே நிலை தொடர்ந்தால், இந்தியாவும் வெகு விரைவில், ஒரு பாகிஸ்தான் போலவோ அல்லது ஆப்கனிஸ்தான் போலவோ ஆவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. அதனை இனிமேலாவது அரசு உணர்வது அவர்களது ஓட்டிற்கு நல்லது.

கடைசியாக ஒரு குறிப்பு: இன்று இத்தாக்குதல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழக முதல்வர் கலைஞர், மாவோயிஸ நக்ஸல்களின் அடிப்படைக் கொள்கைகளில் தமக்கு உடன்பாடு உள்ளதாகவும், ஆனால் அதை அடைவதற்கான வழிமுறைகள் சரியில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கடைசியாக இரண்டாவது குறிப்பு: விபத்து (தாக்குதல்) நிகழ்ந்தவுடன் பிரதமர் உயிரிழந்தவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு தனது கடும் கண்டனத்தையும் தெரிவித்து தனது கடமையை செவ்வனே முடித்துக் கொண்டார் (அவரென்ன செய்வார் பாவம்!!).

கடைசியாக மூன்றாவது குறிப்பு: இத்தாக்குதல் தொடர்பாக ரயில்வே துறை பதிந்துள்ள முதல் தகவல் அறிக்கையில் மாவோயிஸ்டுகளின் பெயரே இடம்பெறவில்லை. அரசாங்கம் ஊழல்வாதிகளைத்தான் காப்பாற்ற முனைகிறது என்றால் மாவோயிஸ்டுகளையும் காப்பாற்ற முனைகிறது போலும். நக்ஸல் தாக்குதல் என மேற்கு வங்காள காவல்துறை ஐஜியே உறுதிப் படுத்திய பிறகும், மீடியாக்கள் கதறிய பிறகும் கூட இப்படியொரு முதல் தகவலறிக்கை. இந்த அரசிற்கு இன்னும் 4 ஆண்டு காலம் பதவி பாக்கியிருக்கிறது. இந்தியாவை ஆண்டவன் காப்பாற்றட்டும்.



31 Comments:

Vinoth Thiyagarajan said...

//முதுகெலும்பற்ற மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும்//
முற்றிலும் உண்மை!!
இந்திய எங்க போவுதுன்னு??

ரிஷபன்Meena said...

பயணிகள் பொறுப்பில்லாமல் படுத்து தூங்கிக் கொண்டு பயணம் செய்து தான் விபத்துக்கு காரணம்.

டிஸ்போஸபிள் காபிக் கப்புகளை தண்டவாளத்தில் வீசியது தான் தடம் புரளக் காரணம்.

ஏன்றெல்லாம் சொல்லாமல் விட்டார்களே அது வரை பரவாயில்லை. கொஞ்சம் கட்டுபாடுடன் தான் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

பேய் ஆட்சிசெய்தால்............

Perungulam Ramakrishnan Josiyar said...

இன்னும் தாங்கள் அப்டேட் செய்யவில்லையே!!!!

IdlyVadai said...

//இன்னும் தாங்கள் அப்டேட் செய்யவில்லையே!!!!//

அப்டேட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் எதற்கு அந்த லிங்கை ஒரு முறை அழுத்தி பாருங்கள் !!!

ஜோதிஜி said...

பயணிகள் பொறுப்பில்லாமல் படுத்து தூங்கிக் கொண்டு பயணம் செய்து தான் விபத்துக்கு காரணம்.

டிஸ்போஸபிள் காபிக் கப்புகளை தண்டவாளத்தில் வீசியது தான் தடம் புரளக் காரணம்.

ஏன்றெல்லாம் சொல்லாமல் விட்டார்களே அது வரை பரவாயில்லை. கொஞ்சம் கட்டுபாடுடன் தான் உளறிக் கொண்டிருக்கிறார்கள்.

Super...

Anonymous said...

sssssshhhh ippave kanna kattudey...

கானகம் said...

காங்கிரஸ் ஆண்ட மிக மோசமான காலம் இது. இந்தியாவை விற்க தனக்குக் கிடைத்த வாய்ப்புகள் போல காங்கிரஸும் அதன் கூட்டனிக் கட்சிகளும் நடந்துகொண்டுள்ளன/ கொண்டிருக்கின்றன. மக்கள் என்பவர்கள் குண்டுவெடித்துச் சாவதற்கும், ரயிலிலும், விமானத்திலும் விபத்தில் சாவதற்கும் விதிக்கப்பட்டவர்கள் போல கொத்துக் கொத்தாய் மடிந்துகொண்டிருக்க, யாரும் எங்கும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியாத / வாழமுடியாத நிலைமையில் இருக்க இவர்கள் இந்தியாவை ஆட்சி செய்வதாக கூறிக்கொள்வதுதான் பரிதாபம். இப்படி நடப்பதற்குப் பெயர் ஆட்சியல்ல, நாடு அவர்கள் கையைவிட்டுப் போய்விட்டது, சீக்கிரம் ஆட்சியை கலைத்துவிட்டு ராணுவத்திடம் ஆட்சியைக் கொடுங்கள் என யாராவது காங்கிரஸ்காரர்களிடமும், இத்தாலி அம்மையாரிடமும் சொன்னால் நன்றாய் இருக்கும்.

balaa said...

முதுகெலும்பற்ற மத்திய அரசும், கையாலாகாத மாநில அரசும்//
முற்றிலும் உண்மை!! Correct god have to save us from them.

Gaana Kabali said...

//இன்னமும் மாவோயிஸ்டுகள் தொடர்பாக மத்திய சர்க்கார் ஒரு ஸ்திரமான முடிவெடுக்காமல் தவிப்பதற்கு அல்லது தவிர்ப்பதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை.//

காரணம் 1 : சுயமாக சிந்தித்து செயல்படும் உரிமையில்லாத ஒரு பிரதமர்.

காரணம் 2 : அவரை பின்னாலிருந்து ஆட்டிப்படைக்கும் முதுகெலும்பில்லாத வெளிநாட்டுக்காரர்.

காரணம் 3 : ஓட்டுக்காக மட்டும் வாய்ச்சவடால் பேசும் போலி அரசியல்வாதிகள்.

காரணம் 4 : மக்களின் ஞாபக மறதி

காரணம் 5 :வலுவில்லாத எதிர்க் கட்சிகள்.

Perungulam Ramakrishnan Josiyar said...

//
அப்டேட் செய்து பல நாட்கள் ஆகிவிட்டது. நீங்கள் எதற்கு அந்த லிங்கை ஒரு முறை அழுத்தி பாருங்கள் !!!
//
ஆனால் அதில் சித்திரை மாதம் என்றுதான் காட்டுகிறது.

Don said...

The problem in Congress is the lack of leadership. Sonia has to learn a few lessons from Jayalalitha and Mayawati about leadership. Unfortunately, Sonia instead of leading from the front has put herself behind. This is the reason for every minister speaking his own opinion about the matter as the party lacks a common opinion and didn't find it necessary to come to a common opinion on such issues. Every minister in Congress has his own way eg:Shashi Tharoor, Chidambaram, Jairam Ramesh.
It's really silly of Mamata to use this grave incident as an opportunity to blame the govt. Even for Rasa, Congress said he can't be punished as he doesn't belong to their party.
MMS can't be a leader, because he doesn't care about his party. He thinks the party is just the path to position. And Sonia thinks leadership of the party has been forcefully thrusted into her. Though Rahul feels for the party, he's afraid of the age factor in taking up a more powerful role(at par with Jayalalitha to AIADMK) in the party. Moreover Congress is fortunate to have a weakling like BJP as it's opposition.
Waiting for the day, India will have opposition as strong and vibrant as Tories, UK.
http://www.youtube.com/watch?v=5xUy2inkGHQ&feature=related

NO said...

மாவோவிஸ்டுகள் அக்கௌண்டில் பரிதாப வோட்டுகள் இன்னும் பல இருப்பதாக காங்கிரஸ் நம்புகிறது! அடித்தால் அது எங்கே போய் விடுமோ என்ற பயம்
அவர்களுக்கு! அப்படியே விடுவோம், கேட்டதை கொடுப்போம் அடங்குவார்களா பார்ப்போம் என்ற எண்ணம் காங்கிரஸ்சின் ஒரு சாராருக்கு உள்ளதால் அவர்கள் இன்னும் சிறிது நாட்களுக்கு ஒன்றும் செய்யமாட்டார்கள்! செய்யக்கூடியவர்களையும் செய்ய விட மாட்டார்கள்!

கிராமம்கிராமமாக போவதாக சொல்லப்படுகின்ற ராகுல் காந்தி இந்த பக்கங்களில் இருக்கும் கிராமங்களுக்கு போனால் என்ன என்று கேட்க்க தோன்றுகிறது!
மாயாவதி ஆளும் ஊரில் போகலாம், ஒரு நிதிஷ் குமார் ஆளும் ஊரில் போகலாம், ஆனால் மாவொவிஸ்து ஆளும் இடங்களுக்கு போக முடியவே
முடியாது, மேலும் அவருக்கு அதில் விருப்பமும் இருப்பதாக தெரியவில்லை! இன்றைய அரசியல் வாதிகளில் மிக நல்ல மனிதராக தோன்றும் அவர் மாவோவிஸ்டுகளின் அராஜங்கங்களை பற்றி என்ன கூறுகிறார் என்பது என்பது இன்னும் தெளிவாக இல்லை!

இந்த விடயத்தில் இவரது தெளிவின்மை மற்றும் திடமான கொள்கையின்மை சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ்சின் நிலைமைக்கு ஒரு பதம்! காங்கிரஸ் இதில் குளிர் காய நினைக்கிறது அல்லது குறைந்த பட்ச்சம், ஆம் ஆத்மி எனும் கிரீடத்தை வேறு யாராவது எடுத்துக்கொள்வார்களோ என்ற பயத்துடன் செயல் படுகிறது!

ஆனால் நிலைமை முத்துகிறது! பிந்திரன்வாலே எனும் பூதத்தை கண்டு கொள்ளாமல் வளர்த்துவிட்டு, அந்த பூதம் வெறித்தாண்டவம் ஆடி ரத்தமாக ஓடி கடைசியில் ஒரு பிரதமரையே காவு வாங்கிய சரித்திரம் கண் முன்னே இருக்கையில், இந்த சிவப்பு கட்டேரிகளை, கயவர்களை வழிக்கு வருவார்கள் ஏனென்றால் ஏழைப்பங்காளர்கள் இவர்கள் என்று நம்புவது அபாயத்திலும் அபாயம்!

இந்த அயோக்கியர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்! என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் நடக்கப்போகும்
தாக்குதல் படுபயங்கரமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்! இதில் பல அழித்தல் இருக்கும் என்பது என் ஆருடம்! அநேகமாக ஒரு சில specific டார்கெட்டுகளை இவர்கள் தேர்ந்தெடுத்து கடத்துவார்கள் இல்லையேல் கொல்லுவார்கள்!!

தங்கள் நாட்டில் எத்துனை கொலை விழுந்தாலும் அதை தடுக்காமல், இந்தியாவை அழிப்பதே நோக்கமாக கொண்டிருக்கும் பாகிஸ்தானிய உளவுத்துறையான ஐ எஸ் ஐ, அநேகமாக இந்த மாவோ கும்பல்களுடன் ஐக்கியமாகி விட்டிருப்பார்கள்! அவர்களின் அட்டவணைப்படி, இந்தியாவில், அதுவும் மையப்பகுதியில் / முக்கியப்பகுதியில் ஏதாவது நடக்கவேண்டும்! இதை இந்த மாவோ கும்பல்கள் மூலம் நடத்தினால் அமேரிக்கா ஒன்றும் திட்டமுடியாது என்று எண்ணம் கொண்டு அழித்தலை துரிதப்படுத்த சொல்லுவார்கள்!

இந்த கடும் நிலைமையில், மத்திய அரசு தூங்கிக்கொண்டிருந்தால், மம்தா பனேர்ஜி போன்ற ரெண்டான் கெட்டான்கள் உளறிக்கொண்டிருந்தால், போராட வேண்டிய நமது காவலர்கள் நமக்கேன் வம்பு என்று கைகட்டி கொண்டிருந்தால், இந்த வெறி பிடித்த கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் தானே!!!

The clock has already started!!! Either its operation time now or a funeral!

நன்றி

Anonymous said...

Sivanesachelvan Writes,

It is high time Man Mohan resigns and let Rahul take over. People must give a mandate such that Rahul does not depend on people like Karuna (Who is bent upon indulging in corruption and corruption only apart from family rule, Sibhu Chor an who is bent upon only in loot, and Mamtha baanerji who is bent on making her presence / position strong and very strong atleast in W B.We must get rid of these people . The future of my country is very bleak. Who is going to come? This Sonia also proved she is not capable of doing anything solidly. ! People have high hopes on Rahul and what is reqd. a VERY GOOD MANDATE. Let him come and save the Naion. My nation .
P.C has proved equally he is unequal to the task just like ManMohan. A.Vallabhai must come.

Anonymous said...

நமது அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஒரு வியாதி பிடித்திருக்கிறது. எந்த ஒரு செய்தியைப் பற்றியும் தனக்கு ஏதும் தெரியாதென்றால்கூட ஏதாவது உளறி வைப்பார்கள். நமது மீடியாவும் சம்பந்தப் படாதவர்களைக் கூட விடாமல் வாயைக் கிளறுவார்கள். டீவீயில் வரவேண்டுமே!
---கிரி

Anonymous said...

Sreedharan from Sharjah said,

It is difficult to digest that the hands of a performer like P. Chidambaram are tied.

Given a free hand,he can definitely destroy not only maoists but their roots as well.

This shows that Sonia, being an Italian does not care for indian lives.

People get the government they deserve.The same people who voted for this corrupt and coward congress now die in the same hands.

Anonymous said...

பேப்பரில் பேர் வரணும் என்றால் வாய்க்கு வந்ததை சொல்லவேண்டும்.மீதியை பிறகு பார்த்து கொள்ளலாம்.‌

Krish said...

There should be some qualification for ministers. Mr. Alagu cannot speak in Hindi/English and he is the minister.

There are many useless, unqualified minister in the govt.,

யதிராஜ சம்பத் குமார் said...

People get the government they deserve//

If this is true, what have the poor & innocent people of bengal done to have to choose between commies and mamata?

And what have the innocent civilians who lost their precious lives done? I think this is how we conpramise things blaming others and especially the incompetency of our politicians. Their hands are not definetly tied for sure. They dont have the courage and conviction to act against terrorism simply b'coz of having the fear of losing their own lives.

ரிஷபன்Meena said...

//It is difficult to digest that the hands of a performer like P. Chidambaram are tied.//

அவர் மேல ஏங்க அபாண்டமா இப்படி ஒரு பழிய போடுறீங்க!

சூடோ செக்யூலரிஸ்ட் மாதிரி இவர் ஒரு சூடோ இண்டலெக்சுவல், சூடோ பெர்மார்மர் எல்லாம்.

சுருக்கமா வாய்சொல்லில் வீரர்கள் தான் நம்ம விதியை நிர்ணயிப்பவர்களாக இருக்கிறார்கள்.

nerkuppai thumbi said...

சிதம்பரம் வல்லாபாய் படேல் இல்லை தான்; ஆனாலும், சுதந்திரம் கொடுத்து மாவோயிஸ்டுகளை எதிர் கொள்ள செய்ய வேண்டும்.
பழங்குடியினருக்கு நீதி வழங்கப் படவில்லை என மாவோயிஸ்டுகள் கூறுவது பெரும்பாலும் உண்மையாகவே இருக்கலாம். ஆனால், இவ்வாறு பொதுமக்களை நூற்றுக் கணக்கில் கொன்று, பொது சொத்தை அழித்துக் கொண்டு இருந்தால், அரசு என்ன செய்ய முடியும்? ரயில்கள், இரவில் அந்த பகுதியில் செல்லாமல் நிறுத்தி வைக்கப் படும் என்பது நடை முறையில் எவ்வளவு சிரமம் விளைக்கும் ? சரக்கு வண்டிகள் நிறுத்தி வைக்கப் பட்டால் மிகவும் இன்றியமையாத வாழ்க்கை பொருட்கள் தேவையான இடத்தை அடைய முடியாமல் போகுமல்லவா?
ஆனால் ஒன்று: யாரோ சொன்னது போல, சக்தி கொண்டே, அதாவது, ஆயுதங்கள் கொண்டே, இந்த பிரச்னைக்கு தீர்வு என்றால், அது, இலங்கையில் எல் டி டி ஈக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர் போலத்தான் ஆகும். நம்மவர் இதை இதுவரை ஜீரணிக்க முடியவில்லை.

Anonymous said...

Ippadiym Sila Manidhargal!!!!

1998-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி வியாழக்கிழமை நான்கு மணியளவில் குல்சாரிலால் நந்தாவின் உயிர் பிரிந்தது.​ 100 வயது பூர்த்தியாக இன்னும் ஐந்தரை மாதங்களே இருந்தன.​ இரண்டு முறை பிரதமராக இருந்தவரின் பெயரில் வங்கிக் கணக்கு என்று எதுவுமில்லை.​ பிள்ளைகளுக்கென்று பணம்,​​ சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை.​

Please read the entire article in

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Kadhir&artid=241953&SectionID=146&MainSectionID=146&SEO=&Title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-17:%20%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%20%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%20%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE!

A request for Idlyvadai - If possible please publish the entire article from above link.

Anonymous said...

இன்று பேப்பரைப் பாருங்கள். பெங்களூரில் நடந்த ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சம்பந்தப் பட்ட ஒரு சாதாரண விஷயத்திற்கு இந்திய உள்துறை அமைச்சர் திரு. சிதம்பரம் அந்த இடத்திற்கு செல்லாமலே அல்லது ஏதும் விசாரணை செய்யாமலே (இது உள்ளூர் போலீஸ் செய்ய வேண்டிய வேலை)ஒரு கமென்ட் கொடுத்திருக்கிறார். தேவைதானா? ஏன்தான் இப்படி வாயைக் கொடுக்கிறார்களோ!
---கிரி

ரிஷபன்Meena said...

//ஆனால் ஒன்று: யாரோ சொன்னது போல, சக்தி கொண்டே, அதாவது, ஆயுதங்கள் கொண்டே, இந்த பிரச்னைக்கு தீர்வு என்றால், அது, இலங்கையில் எல் டி டி ஈக்கு எதிராக இலங்கை அரசு நடத்திய போர் போலத்தான் ஆகும்//

இந்த மாதிரி நல்லவர்கள் தான் தீவிரவாதிகள் வளரக் காரணமே.

Anonymous said...

Vikatan mentioned that the Money issues between Alagiri and Maran brothers were settled in USA last month. Is that the reason for Alagiri's USA visit ? Can the Idlyvadai representative in USA investigate and report the facts soon as to
- how much money was allocated
- How the money got transferred from accounts

Anonymous said...

"Sonia has to learn a few lessons from Jayalalitha and Mayawati about leadership"

sariyana comedy. please this is not the time to joke.

VENG said...

சாருவின் குமறல்....!!!!!
http://charuonline.com/blog/?p=594

Anonymous said...

ada ivanga eppavume ippade thaan boss

Harish said...

விகடன் எழுதிய செய்தியை பற்றி சொல்லியிருகிறார், எந்த தமிழ் பத்திரிகை(துக்ளக் தவிர) ஸ்பெக்ட்-ரம் உழல் பற்றி எழுதியது? ஒரு தினசரியாவது சிறு செய்தியாவது வெளியிட்டதா? பரபரப்பாய் நித்தியானதா படுக்கை அறைக்காட்சியை பத்திரிகைகளில் சிறப்பு மலர் வெளியிட்டது பத்தாது என்று நெட்டில் விடியோவாய் வியாபாரம் செய்த கேவலமான பத்திரிகை ஒரு சிறு செய்தியாவது வெளியிட்டதா? ஆயிரமாயிரம் கோடிகளை குடும்பமாய் வெளிப்படையாய், ஏன் என்று கேட்டுப்பாருங்கடா நாதியிலா நாய்களா என்று அறைகூவல் விட்டு கொள்ளை அடிக்கிறார்கள். வாயை திறக்க நினைக்கும், திறக்கும் ஜென்மங்களை, பணத்தால் ஜடமாக்குகிறார்கள்...ஏதெனும் செய்ய நாம்மால் செய்ய முடிகிறதா...இந்தமாதிரி புலம்பல் தவிர....முன்பெல்லாம் எலக்சனில் பாத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது...இப்பொழுது நான் அவ்வாறு நினைத்தால் என்னைப்போல் பைத்தியம் உலகில் எவனும் கிடையாது. மக்கள், நாடு நாசமாய் போகிறதே என்ற கவலை ஒரு பக்கம், அய்யோ...இந்த மனிதர்களைப்போல் காலம்,மனிதர்களுக்கு ஏற்றாற்ப்போல் நம்மை மாற்றிக்கொண்டு நடைமுறை வாழ்கையை வளப்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற எரிச்சல் ஒரு பக்கம்....தர்மம் இது அதர்மம் இது என்று விவரம் தெரிந்த காலம் முதல் விஷத்தை மனத்தில் மனதில் ஏற்றி விட்டார்களே என்ற ஆதங்கம் ஒரு பக்கம்....பலரும் மாவோயிஸ்ட் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை.....

யதிராஜ சம்பத் குமார் said...

பலரும் மாவோயிஸ்ட் ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை//

இதெல்லாம் நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சமாதானங்கள். அடிப்படை கட்டமைப்பு வசதிகளும், கல்வியும் இன்னபிற வசதிகளும் இல்லாமல் மாவோயிஸ்டாக மாறுபவர்களின் இலக்கு இவற்றையெல்லாம் வழங்க மறுத்த அரசியல்வாதிகளாகத்தானே இருக்க வேண்டும்? அப்பாவி மக்கள் என்ன செய்தனர்? அவர்கள்தானே இவர்களின் கொலைவெறிக்கு பலியாகிக் கொண்டிருக்கின்றனர்?

அரசின் கோழைத்தனம் இவர்களின் வெறிச் செயல்களுக்கு இன்னமும் ஊக்கம் கொடுக்கிறது. கூலிக்கு ஓட்டுப் போடும் நிலைக்கு மக்கள் வந்துவிட்ட பிறகு, ஓட்டு போட்டு அரசாங்கத்தை மாற்றலாம் என்ற ஜனநாயகத்தின் அடிப்படை நம்பிக்கை கூட மாய்ந்து விட்டது.

Anonymous said...

Mondayna Ondru yes Idlyvadai la varam pora oru posting than. Mess leave a ??!!!!

ஜீயார் said...

ப.சிதம்பரத்தை, புத்தேவ் பட்டாச்சார்யாவை, மம்தா பானர்ஜீயை இவர்களில் யாராவது ஒருவரை தாக்கி மாவோயிஸ்டுகள் தங்கள் பலத்தை காட்டுவார்களானால், அவர்கள் போராளிகள் இல்லையேல் பேடிகள் விரைவில் ஆதரவளிக்கும் மக்களாலே விரட்டப்படுவார்கள்.