பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 24, 2010

மண்டேனா ஒன்று - 24/5/2010

சுஜாதாவினுடைய ஸ்ரீரங்கத்து தேவதைகளில் “பெனின்ஸுலர் கஃபே” என்ற பெயர் அடிபடுவதைப் பார்த்திருக்கலாம். அங்கு அவர் இரண்டணாவிற்கு தோசையும், காபியும் சாப்பிட்டிருப்பதை எழுதியிருப்பார். இப்பொழுது இரண்டணா என்ற வார்த்தையே வழக்கொழிந்து மாமாங்கங்கள் ஆகின்றன. மொரார்ஜி தேஸாயின் ஜனதா அரசு, அனைத்து ஹோட்டல்களிலும் ஒரு ரூபாய்க்கு “ஜனதா மீல்ஸ்” என்ற அளவு சாப்பாடு போடப்பட வேண்டுமென்று கட்டாயமாக்கியது. அரசு கவிழ்ந்த கையோடு அந்த திட்டமும் கவிழ்ந்தது. இன்றைய தேதியில் சென்னையில் ஒரு சுமாரான ஹோட்டலில் டிபன் சாப்பிட வேண்டுமென்றால் கூட குறைந்தபட்சம் ஐம்பது ரூபாய் வேண்டும். இட்லிவடையே இருபது ரூபாய் விற்கிறது. தமிழக அரசு கூட தோசை இட்லி விலையைக் குறைக்க வேண்டும் என்று ஏதோ ஒரு உத்தரவிட்டு, ஐம்பது பைசா குறைக்கப்பட்டு, சில தினங்களிலேயே இரண்டு ரூபாய் மறுபடியும் ஏற்றப்பட்டது.


சமீபத்தில், தில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 10.30 மணி விமானத்திற்காக, 9 மணிக்கே லவுஞ்சில் காத்திருக்கையில் பசி வயிற்றைக் கிள்ளியது. எப்படியும் விமானத்தில் வலுவாக எதாவது தருவார்கள் என்ற போதிலும், வயிற்றை நிரப்பி வைப்போமென்று விமான நிலைய கேண்டீனுக்குள் நுழைந்தேன். மெனு கார்டைப் புரட்டிய எனக்கு மாரடைப்பு வராத குறைதான். இரண்டு இட்லி ரூபாய் 125, வடை ஒன்று ரூபாய் 60, இரண்டு பரோட்டாக்கள் ரூபாய் 220, வரிகள் தனி. மாரடைப்பு வராமல் என்ன செய்யும்? இந்த விலைப்பட்டியலைப் பார்த்த பிறகு, பசியாவது ஒன்றாவது!! பத்தும் பறந்து விட்டது. ஆயினும், மெனு கார்டை ஆற அமரப் புரட்டிவிட்டு, வெறுமனே எழுந்து வருவதற்கு பாழாய்ப் போன வறட்டு கெளரவம் இடம் கொடுக்காததால், இட்லியை விழுங்கிவிட்டு பில்லை அழுது தொலைத்து விட்டு வந்தேன்.

இந்த ஒரு அனுபவத்திலேயே பாடம் கற்றிருந்தால் விஷயம் அதோடு போயிருக்கும். மிக சமீபத்தில், நமது சென்னை மீனம்பாக்கத்தில் நண்பர்களோடு விமானத்திற்காகக் காத்திருக்கையில், “அரைவல்” பகுதிக்கு நேர் எதிர்ப்புறமிருந்த பழச்சாறு கடை சபலத்தைக் கிளப்பியது. தில்லி அனுபவம் நினைவிலிருந்தாலும், 150 மில்லி சாத்துக்குடி ஜீஸ் என்ன பெரிதாக விலை இருந்துவிடப் போகிறதென்றெண்ணி, மூன்று சாத்துக்குடி ஜூஸ்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு, பணம் எவ்வளவு என்று கேட்கையில் பகீர் என்றது. மூன்று பேப்பர் கப் ஜூஸ் ரூபாய் 225 (அது ஃப்ரெஷ் ஜூஸ் வேறு. சர்க்கரை இல்லாமல் கசந்தது.). குடித்த பிறகு என்ன செய்வது? இந்த பாடம் வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.

கிட்டத்தட்ட எல்லா விமான நிலையங்களிலுமே இதே கதைதான். வெளியே பெட்டிக் கடைகளில் ரூபாய் 10 ற்கும், 20 ற்கும் சீப்படும் லேஸ், குர்குரே போன்ற ஸ்நாக்ஸ் வகைகள் விமான நிலையத்திற்க்குள் 60 ரூபாய். பெப்ஸி, கோலாக்களும் அதே விலைதான். ஆனால் அதிகபட்ச விலை என்று முத்திரையிட்டிருப்பதென்னவோ அதே விலைதான். MRP ஐ விட ஓரிரண்டு ரூபாய்கள் அதிகம் வைத்து விற்பதே குற்றம் என்ற நிலையில், பலமடங்கு விலையை உயர்த்தி விற்பது மகா குற்றம். விமான நிலையத்திற்குள் விற்பனை செய்யப்படுபனவற்றிற்கு சிறப்பு விலை என்று எதும் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் இது நடந்து கொண்டுதானிருக்கிறது. இதெல்லாம் அரசாங்கத்திற்குத் தெரியாமலா நடக்கும்? விமான நிலைய கேண்டீன் காண்ட்ராக்டை பல கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்தால் அதனை திரும்ப மீட்பது எப்படி? இதையெல்லாம் விட அதிர்ச்சி தரக்கூடிய ஒரு விஷயம், இம்மாதிரியான கேண்டீன்களில் விற்பனை அதிகரிக்க வேண்டுமென்பதற்காகவே, வேண்டுமென்றே விமானத்தைத் தாமதப் படுத்தக்கூடிய அவலங்களும் நடக்கின்றன. யாருக்கு நஷ்டம்? இவ்விஷயம் உலகிலேயே அதிக விற்பனையாகும் ஒரு ஆங்கில மாதாந்திரியில் வெளிவந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தது.

மிகப்பெரிய அளவிலான மெகா ஊழல்களும், முறைகேடுகளும் புரையோடிப் போய்விட்ட நமது அரசாங்கத்திற்கு, இப்பிரச்சனை ஒன்றும் பெரிதாகத் தெரியாதது வியப்பில்லைதான். இனி மறந்தும், விமான நிலையத்தில் எதுவும் வாங்கிவிடாதீர்கள் என்பதுதான் இவ்விடுகையின் நோக்கம்.

- யதிராஜ்

19 Comments:

mak said...

it is not only in india, same as an usa also, if you buy coke outside, it is for $1, but in airport like 2$ or more.

Anonymous said...

In most airports in US, you cant get plain water for free, only bottled water, coke/pepsi etc.Most domestic flights there don't serve food too. A sandwich in airports cost $9-20.

-Mahesh

Gaana Kabali said...

எதிராஜ் அவர்களே,
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.

விமான நிலையங்களில் மட்டும் இல்லை. மல்டிப்ளெக்ஸ் திரைப்பட அரங்குகளில் கூட இந்த அநியாயம் தான். அதையும் வரிசையில் கூட நிற்காமல் அடித்து பிடித்து வாங்கி சாப்பிட ஒரு மந்தையே இருக்கிறது.

இதில் உள்ளே செல்வோரின் உடைமைகளை முழுவதுமாக சோதித்து பார்த்துவிட்டுத் தான் உள்ளே அனுப்புகிறார்கள். வெளியிலிருந்து நாம் சாப்பிடும் பொருள் எதையும் எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

அது சரி அவ்ளோ பெரிய பாப்கார்ன் பாக்கட்டை ஒரு ஆளே சாப்பிட்டால் என்னத்துக்கு ஆகிறது?

rkajendran2 said...

கேவலம் இருபது ரூபாய்க்கு விலைபோன உம்மை வன்மையாக கண்டிக்கிறேன். ஏதோ இரண்டு கோடிக்கு விலை போனாலாவது பரவாயில்லை.....
/////கஜேந்திரன், சிவகாசி

Cinema Virumbi said...

அன்புள்ள இ.வ. ,

ஒரு ரூபாய்க்கு 'ஜனதா மீல்ஸ் ', குறைந்த விலையில் ஹிந்துஸ்தான் லீவரின் 'சரள் ' மற்றும் டாடாவின் 'ஜன்டாடா ' சோப்புகள் போன்றவை இந்திரா காந்தியால் எமர்ஜென்சியின் போது அறிமுகப் படுத்தப் பட்டன. எமர்ஜென்சி முடிந்ததும் சொல்லி வைத்தாற்போல் எல்லாமே காணாமல் போயின. மொரார்ஜியின் காலத்தில் 'டபுள் செவன் ' (77) என்ற கோல்ட் ட்ரின்க் மாடர்ன் ப்ரெட் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப் பட்டது. 'தம்ஸ் அப்'புடன் போட்டி போட முடியாமல் கொஞ்ச நாளிலேயே காணாமல் போனது!

நன்றி!
சினிமா விரும்பி

Unknown said...

HI

what can we do... rather than restraining oneself from eating at these places.. for your info Beer was cheaper in my place for a long period of time 1 Beer Tin 3P and 1 Coke Tin 4P only now they have put levy and all it has gone up...

Kamesh
Botswana

Anonymous said...

இட்லிவடையில் சரக்கு இல்லை என்பதால் கடையை சில வாரங்களுக்கு மூடிவிடலாம்.

பெசொவி said...

//இனி மறந்தும், விமான நிலையத்தில் எதுவும் வாங்கிவிடாதீர்கள் என்பதுதான் இவ்விடுகையின் நோக்கம்//

I even think of buying flight tickets after seeing the flight crash!

Yes, It is true that in the places where the crowd is likely to be big, it is always advisable not to buy any edibles (and even toys etc.). Not only the price will be higher but also the quality will be very low.

Y Blood, same blood!

SAN said...

iv,
ur comments on mm singh's press meet today?

He has given a clean chit to our spectrum raja?

Is it due to MK's pressure or coalition dharma?

Anonymous said...

its nothing wrong or strange that prices are higher. the contractor has to pay millions to take a stall in airport. the airport inturns has to equip it with international standards (atleast they try to do it) with aircondition, 24hr security guards / police(airport has to pay to the police and the guards) and all these expenses will be ultimately transferred to the end user only.
though the price inside the airport is extremely high, there are enough reasons to justify the high price also.

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் said...

ஏர்போர்ட்களிலும் தனியார் திரை அரங்குகளிலும் எல்லாமே விலை அதிகமாக விற்கப்படுவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். மீனம்பாக்கம் டிபார்ச்சர் லௌஞ்சில் அநேகமாக எல்லா தமிழ்ப் புத்தகங்களின் ஒரிஜினல் விலைகளையும் அழித்து விட்டு, இஷ்டத்துக்கும் ஒரு ஸ்டிக்கரை ஒட்டி விலை ஏற்றித்தான் விற்கிறார்கள். கிழக்கு, கலைஞன் போன்ற பல பதிப்பகங்களிலும் நான் இது பற்றிப் புகார் செய்தும் பயனில்லை.

அடிக்கடி இந்தியா வருவதால், சென்னையில் மட்டும் ஹோட்டல் ஐட்டங்களின் விலை ஒவ்வொரு முறையும் ஏற்றப்பட்டிருப்பது கண்டு எனக்கு எரிச்சல்தான் வருகிறது. பெங்களூர், மும்பையில் இந்த அளவு அநியாயம் இல்லை என்பதே உண்மை. ஒவ்வொரு முறையும் நான் அங்கெல்லாம் சுற்றி வரும்போது இதை நிதரிசனமாகக் காண்கிறேன்.

சென்னை ஹோட்டல்களுக்குப் போகாமல் ஜனங்கள் தொடர்ந்து ‘பாய்காட்’ பண்ணினால் ஒரு வேளை விலை குறைப்பார்களோ? உடம்பாவது வீணாகாமல் இருக்கும்!

சரவணன் said...

சென்னை விமான நிலையத்தில் சங்கீதா இருந்ததே! வெளியில் விற்கிற விலைதான்...

ராஜசுப்ரமணியன் said...

மயிலாப்பூரில் பிச்சு பிள்ளை தெருவிற்கு வரவும் (கோயில் அருகில் உள்ளது). சுடச்சுட இட்லி ஒன்று 4.00க்கும், சாதா தோசை 10.00க்கும், மசாலா தோசை 15.00 க்கும் கிடைக்கும்.

kvk pragdhees said...

அட போங்கப்பா ஸ்பெக்ட்ரம் பிரச்சினையே ஒன்னும் இல்லாம போச்சு 60 ஆயரம் கோடி இதல்லாம் ஒரு மேட்டர் இல்ல

Chakra said...

சுமார் 8 வருடங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையம் வழியே நான் பயணிக்க நேர்ந்த போது, மத்திய அரசுக்கு சொந்தமான கைவினைப் பொருட்கள் விற்கும் கடைக்கு (கடை பெயர் நினைவிலில்லை) சென்று நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அங்கு செல்வதற்கு இரண்டு நாட்கள் முன்னர் தான் சென்னையில் உள்ள பூம்புகாருக்கு சென்று வந்ததால், எல்லா பொருட்களின் விலையும் (விமான நிலையத்திற்கு வெளியே விற்கும் விலை) நன்றாக நினைவிலிருந்தது. விமான நிலையக் கடையில் சாதாரண சாவிக் கொத்து சுமார் 300 ருபாய் விலை. இது போல ஒவ்வொரு பொருட்களின் விலையும், வெளி விலையோடு ஒப்பிடவே முடியாத அளவுக்கு இருந்தது.

கடை மேலாளர் ஒரு தமிழர். அவரிடம் இந்த யானை-குதிரை விலையைப் பற்றி பேச்சுக் கொடுத்தேன். அந்த 200 சதுரடி கடைக்கு மாத வாடகை நான்கு லட்ச ரூபாயாம். அதனால் தான் அவ்வளவு விலை என்று சொன்னார். அது சரி.. மாசத்துக்கு நாலு லட்ச ரூபாய்க்கு இந்தக் கடையிலிருந்து லாபம் வருகிறதா என்று கேட்டேன். ''இந்த வேலை வித்த யாரு சார் வாங்குவாங்க... இந்திய வந்துட்டு எதுவும் வாங்கலயே-னு நினைக்கிற வெளி நாட்டுக் காரங்க தான் எதாவது வாங்குவாங்க.. 50,000 ரூபாய்க்கு கூட வியாபாரம் ஆகறதில்ல.. அப்புறம் எங்க லாபம்? கவருமென்ட் கடை... அதுனால நஷ்டத்துல ஓடினாலும், கடை இருக்கும்" என்று சிரித்தார்.

Anonymous said...

hahah....

Yatiraj,

If you are in chennai - I suggest you go to a hotel like Malgudi in the ECR one of the weekends. Have some normal Idly/Dosai and have a bottle of Mineral water (just costs you INR.39 only).

This is not airport or even inside any theatre. Just becos you had to be there and wanted to take some food - the charges are 3 times that of normal rate!


I happened to experience that! Pity - it has to be like that.

Anony1

Gopal said...

Luckily use of rest room is free of cost in air ports. I shudder to think what will happen if they are pay and use types.Everbody can not afford to use them and most will be do likeVadivelu does in most of his film by just seeing the cost of usiing the rst room.Of course the contractor may beat Raja in enriching himself if it is used by all by paying the cosy of pissing.

Siva Sutty - m of n said...

நான் வாரமொருமுறை அமெரிக்க விமானங்களில் பிரயாணம் செய்கிறேன். செக்யூரிட்டிக்கு அப்பால் இருக்கும் ரெஸ்ட்டாரண்டுகளில் வெளியில் இருக்கும் அதேவிலை தான், அதே தரம் தாம். சற்றும் மாற்றம் இல்லை.

சரக்கு மட்டும் டியூட்டி ப்ரீ சாப்பில் வெளியே இருப்பதை விட 1 அல்லது 2 டாலர் அதிகம் :)

எல்லாவற்றையும் அமெரிக்காவைப் பார்த்து காபியடிக்கும் இந்தியாவில் இதில் அமெரிக்காவிற்கு வழி காட்டாமல் இருந்தால் சரி

mani said...

http://www.changiairport.com/at-changi/events-and-promotions/you-shop-we-absorb

here, changi airport welcome everyone to visit airport and spend. they maintain normal rate.

When will our people will get this benefit in Chenai?