காமாக்ஷியம்மாள்
ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ், தொழிலாளர் தினத்தை முன்னிட்டு உழைக்கும் வர்க்கத்தினரைச் சேர்ந்த மூவரைப் பற்றி கட்டுரைகள் எழுதித் தருமாறு சில எழுத்தாளர்களைக் கேட்டுக் கொண்டது. மூன்று கட்டுரையாளர்கள் முறையே, பூ விற்பனை செய்பவர், சமையற்கலை நிபுணர் மற்றும் தினசரி பத்திரிக்கை டெலிவரி செய்பவர் என மூவரைப் பேட்டி கண்டு தன்னம்பிக்கைக் கட்டுரைகளாக அனுப்பியிருந்தவற்றை ரீடர்ஸ் டைஜஸ்ட் பிரசுரித்திருக்கிறது. இதில் முதலாவதாக பூ விற்பனை செய்பவரைப் பற்றிய கட்டுரையின் மொழியாக்கம். இதன் மூலத்தை எழுதியவர் திருமதி. கமலா தியாகராஜன்.
நான் ஒவ்வொரு முறை சந்தடி நிறைந்த தியாகராய நகரில் அமைந்துள்ள வெங்கட் நாராயணா கோவிலுக்குச் செல்லும் போதும், காமாக்ஷி அம்மாளைச் சந்திக்கத் தவறுவதே இல்லை. அவர் அக்கோவில் முகப்பில் பூ விற்கும் ஒரு மூதாட்டி.
எனக்கு சமீபத்தில் குழந்தை பிறந்திருந்ததால், காமாக்ஷி அம்மாளை சிறிது காலமாகச் சந்திக்க நேரவில்லை. இன்றைய தினம், கோவிலுக்குச் சென்ற போது, வாரிய தலையும், சுருங்கிய புடவையும், வெயிலில் வாடிய முகமுமாக காமாக்ஷியம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. அதே நேரத்தில், டாடா சஃபாரியிலிருந்து இறங்கிய ஒருவர் அவரிடம் தனது திருமண அழைப்பிதழை கொடுத்துக் கொண்டிருந்தார். அதைப் பெற்றபடியே அவரிடம், " ரொம்ப சந்தோஷம்பா!" என்று மலர்ந்த முகத்தோடு கூறிக் கொண்டிருந்தார் காமாக்ஷியம்மாள். அடுத்ததாக, சில மகளிர் காவல்துறையினர் அவரிடம் வந்து அளவளாவிவிட்டு வீட்டிற்கு பூக்களை வாங்கிச் சென்றனர். இவர்களெல்லாம் அவருடைய வாடிக்கையாளர்கள். அடுத்ததாக அவர் என்னைப் பார்த்ததும், கையை அசைத்து, "குழந்தை பிறந்தாயிற்றா?" என்று மகிழ்ச்சியாகக் கூவினார்.
காமாக்ஷியம்மாளை எனக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தெரியும். அவருடைய வாழ்க்கையானது, நம்பிக்கை, உதார குணம், கடின உழைப்பு மற்றும் மிகப்பெரிய வெற்றி ஆகியவற்றிற்கு மிகச் சிறந்த உதாரணம். நீங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவராக இருந்து இதைப் படித்துக் கொண்டிருந்தால், நீங்கள் காமாக்ஷியம்மாளோடு தோளோடு தோள் சேர்ந்து பழகுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு; ஆனால் உங்களுடைய பேரக் குழந்தைகளுக்கு, காமாக்ஷியம்மாளின் பேரக் குழந்தைகளோடு பழகுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
"என்னுடைய ஒன்பதாவது வயதில் நான் அநாதரவாக்கப்பட்டேன்", என்று என்னிடம் கூறுகிறார் காமாக்ஷியம்மாள். " அதனால் நான் ஒரு வருட காலம் தெருக்களில் பிச்சையெடுத்து, பட்டினி கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது". சென்னையிலுள்ள ஏதாவது ஒரு நல்ல நிலையிலுள்ள குடும்பம் அவரைத் தத்தெடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்தவர் ஷண்முகம், தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு வயது முதிர்ந்த பிச்சைக்காரர். " அப்பா தன்னுடைய குடிசைக்கு என்னை எடுத்துச் சென்று என்னைப் பார்த்துக் கொண்டார்" என நினைவு கூர்கிறார் காமாக்ஷியம்மாள். " அவருடைய நிலையைக் கூட பொருட்படுத்தாமல், உண்மையான அன்பு, பாசம் ஆகியவற்றின் அர்த்தம் என்னவென்பதை அவர் எனக்கு உணர்த்தினார்".
சில ஆண்டுகள் கழித்து, ஷண்முகம் தனக்கு அறிமுகமான இளவயதுடைய ஒரு நபரை காமாக்ஷியம்மாளுக்கு மணாளனாகத் தேர்ந்தெடுத்தார். அவரும் தனது வாழ்வாதாரத்திற்காக பிச்சையெடுப்பவர். மிகவும் மரியாதையான, அன்பான நபர். வெகு சீக்கிரமே காமாக்ஷியம்மாளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. பிறந்த வேகத்திலேயே இறந்தும் விட்டன. பிறகு ஒரு ஆண் குழந்தை, அதேபோல் இறந்து விட்டது.
இதற்கிடையே , இத்தம்பதியருக்கு சென்னைக்கு ஒதுக்குப்புறமாக சிற்தளவு அரசாங்க நிலம் ஒதுக்கப்பட்டது. அதே வேளையில், பிரசவத்தின் போது இறந்து விட்ட ஒரு பிச்சையெடுக்கும் பெண்மணியின் இளம் பெண் குழந்தையைப் பற்றிக் கேள்வியுற்ற காமாக்ஷியம்மாள், அதனைத் தத்தெடுத்துக் கொண்டார்.
"அதுதான் என்னுடைய வாழ்க்கையின் திருப்புமுனை" என்று கூறுகிறார் காமாக்ஷியம்மாள். " இந்திராணியை என்னுடைய கையில் ஏந்தியபோது, என்னுடைய கரடு முரடான வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது" என்பதை உணர்ந்து கொண்டேன். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திராணிக்கு ஒரு சகோதரி வந்து சேர்ந்தாள். காமாக்ஷியம்மாளுக்கு பரிச்சயமான மற்றொரு பெண்மணி பிரசவத்தின் போது சோகமான முறையில் உயிரிழந்தார். அவருடைய குழந்தையையும் காமாக்ஷியம்மாள் ஸ்வீகரித்துக் கொண்டார், அக்குழந்தையின் பெயர் மல்லிகா. " நான் குழந்தைகளைப் பற்றி சிந்திக்க வேண்டியிருந்தது; அவர்களுக்கு ஒரு மரியாதைக்குரிய ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டுமெனில், அதற்கு பிச்சையெடுப்பது ஒரு தீர்வல்ல என்று உணர்ந்து கொண்டேன், பிறகு இக்கோவிலில் பூ விற்கத் துவங்கினேன். இது கடவுளுக்கு சேவை செய்வதற்கு ஒப்பானது.
இப்போது 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டன.
அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து விடும் காமாக்ஷியம்மாள், பேருந்தில் கோயம்பேடு சந்தைக்குச் சென்று, பூக்களைக் கொள்முதல் செய்துகொண்டு 5 மணிக்கெல்லாம் கோவில் வாசலுக்கு வந்து விடுவார். இரவு ஒன்பது மணி வரை ஓயாத உழைப்பு. " வாடிக்கையாளர்களுடன் நான் பிடிவாதமாக பேரம் பேசுவதில்லை". வழக்கத்தை விட அதிகமாகவே பூக்களைக் கொடுத்துவிடுவேன். அப்போதுதான் திரும்பவும் வருவர், என்று கூறுகிறார்.
காமாக்ஷியம்மாள் தினமும் ரூபாய் 250 வரை வருமானம் ஈட்டுகிறார். விழாக் காலங்களில் ரூபாய் 450 வரை ஈட்டுகிறார். எப்போதாவது ஒரு சமயம், வட்டிக்கும் கடன் வாங்குகிறார். ஆனால் வட்டி தனது வருமானம் முழுவதையும் விழுங்கி விடுவதாகக் கூறும் காமாக்ஷியம்மாளுக்கு சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு பிரச்சனைகள் இருக்கின்றன. "மாத்திரை மருந்துகள் மிகவும் விலை அதிகம், ஆனால் எனக்கு வேறு வழியில்லை". நான் ஆரோக்யத்துடன் இருந்தால்தான் எனது பேரக் குழந்தைகளுக்குச் செய்ய முடியும், என்று கூறுகிறார். இவர் தனது கணவரையும் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இழந்து விட்டார்.
இந்திராணியின் கணவர் இந்திராணியையும், அவரது மூன்று குழந்தைகளையும் கைவிடும் வரை இந்நிலையில்லை. அதன் பிறகுதான் காமாக்ஷி கல்வியின் மேன்மையை உணர்ந்து கொண்டார். " இந்திராணி ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே பயின்றார், அதற்கு மேல் படிக்க நான் அப்பொழுதே வற்புறுத்தியிருக்க வேண்டும்". கணவன் எவ்வளவுதான் உதவாக்கரையாகவும், குடிகாரனாகவும் இருந்தாலும், ஒரு பெண்ணுக்கு கல்வியறிவு இருந்துவிட்டால் கவலையில்லை. அவள் தனது சொந்தக் காலிலேயே நிற்கலாம். அதனால்தான் எனது பேரக் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமாக உழைக்கிறேன்.
காமாக்ஷியம்மாள் மிகவும் கடினமாக உழைக்கிறார். இந்திராணியின் மகள், ஜான்ஸி வெகு விரைவில் பி.காம் பட்டதாரியாகப் போகிறார். அவருடைய இரண்டாவது மகள் ரோஸி நர்ஸிங் பயில்கிறார், கடைசி மகன் சாலமோன், பிஏ பயில்கிறார். மல்லிகாவினுடைய ஐந்து குழந்தைகளும் பள்ளி செல்கின்றனர்.
2005 இல், காமாக்ஷியம்மாளின் கணவர் இறந்த போது, காமாக்ஷியம்மாள் சுமார் 10 தினங்களுக்கு கோவில் முகப்பில் தென்படவில்லை. திரும்பவும் வரத் தொடங்கிய போது, அவருடைய மிகப்பெரிய நெற்றிப் பொட்டு அந்தர்தனமாகியிருந்தது. ஆனால் சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் பொட்டு வைத்துக் கொள்ளத் துவங்கினார். " ஒரு விதவையிடமிருந்து மக்கள் பூ வாங்க விரும்ப மாட்டார்கள்" என்று நடைமுறை உண்மையை காமாக்ஷியம்மாள் கூறினார். கணவரின் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக விதவையாகத்தானிருக்க விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமே!! பசியோடும், உயிரோடும் இருப்பது நாங்கள்தானே என்று யதார்த்தமாகக் கூறுகிறார்.
காமாக்ஷியம்மாளை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு அவருடைய மகள்கள் வற்புறுத்துகின்றனர். ஆனால் வெறுமனே வீட்டிலிருக்கும் ஒரு வாழ்க்கையை அவர் விரும்பவில்லை. " இப்பொழுது என்னால் இதை விட முடியாது, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது". கடவுள் கிருபையிருந்தால், என்னுடைய கொள்ளுப் பேரன்களையும் கல்லூரியில் படிக்க வைப்பேன் என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறுகிறார் காமாக்ஷியம்மாள்.
- யதிராஜ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, May 17, 2010
மண்டேனா ஒன்று - 17/5/2010
Posted by IdlyVadai at 5/17/2010 07:44:00 AM
Labels: சிறந்த கட்டுரை, யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
18 Comments:
காமாக்ஷியம்மா அவர்களின் தன்னம்பிக்கை பாரட்டத்தக்கது!! வாழ்த்துக்கள்.
கல்வியின் பெருமையை உணர்ந்த
காமாட்சியம்மாளின்
தன்னம்பிக்கையும்
தளராத மனமும் கண்டு
கண்கள் பனித்தன !
நல்ல மனம் கொண்ட அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமும் பெருக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
கல்வியின் பெருமையை உணர்ந்த
காமாட்சியம்மாளின்
தன்னம்பிக்கையும்
தளராத மனமும் கண்டு
கண்கள் பனித்தன !
நல்ல மனம் கொண்ட அவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல் நலமும் பெருக இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.
சிறப்பான பதிவு,வாழ்த்துக்கள்
அட!
உள்ளத்தை நெகிழ வைக்கிறது காமாக்ஷி அம்மாள் அவர்களின் வாழ்க்கை.அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்ந்துள்ள அவருக்கு இறைவன் அருள் என்றென்றும் கிடைக்கட்டும்.
வித்யா நிதி
Sivanesa chelvan from Pune Writes,
Thank You , Smy. Kamala Thiagarajan ! (and Yathi ) for givibg this wonderful heart rendering true story. I must praise you and your observation skills and pray for well being of Kaamaashiyammal and her future.
17th may'10 11.32 Hrs
//கணவரின் மீது வைத்திருக்கும் மரியாதைக்காக விதவையாகத்தானிருக்க விரும்புகிறேன். ஆனால் வாழ்க்கைச் சக்கரம் சுழல வேண்டுமே!! பசியோடும், உயிரோடும் இருப்பது நாங்கள்தானே என்று யதார்த்தமாகக் கூறுகிறார்.//
இதில் மட்டும்தான் யதார்த்தமா என்ன......இந்தப் பதிவில் வரும் ஒவ்வொரு வரியும் யதார்த்தமாகத் தான் இருக்கிறது.
Hats off, Kamatchiammal!
Hats off, Yathiraj Sir!
Hats off, Idlyvadai!
இம்மாதிரி கட்டுரைகளை எஸ். ஏ. பி. அவர்கள் குமுதத்தில் நிறைய போட்டிருக்கிறார், மனிதன் என்ற தலைப்பில்.
இப்போது பத்திரிகைகளில்‘போக்கிரி’ களுக்குத்தான் முன்னுரிமை. 75 சத விகிதம் சினிமா். நாலு இதழ்களுக்கு ஒரு தரம் ‘சினிமா ஸ்பெஷல்” வேறு!
யதிக்கு நன்றி - டில்லி பல்லி
பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறுகின்ற, நல்ல பதிவு.
காமாக்ஷி அம்மாளின் தன்னம்பிக்கையும் உழைப்பும் நம் எல்லோருக்குமே பாடம்.
நன்றி யதிராஜசம்பத்குமார்,
நன்றி இட்லிவடை.
அருமை!
வெங்கட்நாராயணா சாலையில் இப்படி இரண்டாவது கோவில் இருப்பது எனக்கு இப்போதான் தெரியும்.
கட்டுரைக்கு நன்றி.
உழைப்புக்கு இவர் ஒரு மிக சிறந்த உதாரணம்...
சிறப்பான பதிவு....
உழைப்பைப போற்றும் மிக நல்ல பதிவு. இந்த மாதிரி மனிதர்களைப் பார்த்து மற்றவர்களும் இனியாவது திருந்தட்டும்.
நல்ல கட்டுரை
நம்பிக்கையின் நட்சத்திரமே வாழ்க
Vijay's Kavalkaran opening song
The lyrics of the song starts as "Mannai Kaappavan Oruvan; Vinnai Kappavan Oruvan; Ennai Unnai Kaakkum Avanae Iraivan".
ithuvum uruptaplathan
Hi
Nice Article, hats off to Kamakshi Ammal, very touching Life has its meaning and we come to know through this type of articles too..
Let god give her health and strength in her life.
Kamesh
மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கை, அவரது தன்னம்பிக்கை பாராட்டுக்குடையது.
Post a Comment