பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 10, 2010

மண்டேனா ஒன்று - 10/5/2010

இந்திய சிவில் சர்வீஸ் தேர்வு வரலாற்றில் முதன் முறையாக இவ்வருடம் காஷ்மீரத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியாவிலேயே முதலாவதாகத் தேறியுள்ளார். ஷா ஃபைசல் என்ற இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒரு டாக்டர். பள்ளி ஆசிரியரான இவருடைய தந்தை சில ஆண்டுகளுக்கு முன்பு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது தாயார் முபீனாவுடன் வசித்து வருகிறார். கடந்த வியாழனன்று அறிவிக்கப்பட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இவர் இந்தியாவிலேயே முதலாவதாகத் தேறியுள்ளார். காஷ்மீரிலிருந்து ஒருவர் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் முதலாவதாக வருவது இதுவே முதன்முறை.


”என்னுடைய இம்மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை”, என்று கூறும் ஃபைசல் கடந்த ஆண்டுதான் எம்பிபிஎஸ் தேறியுள்ளார். தவிர, இதுதான் இவருடைய முதல் சிவில் சர்வீஸ் தேர்வு முயற்சி. “என்னுடைய இச்சாதனை எங்கள் காஷ்மீர் சமூகத்தைப் பற்றிய ஒருவிதமான மாறாத எண்ணத்தை மாற்ற உதவும்” என ஃபைசல் தெரிவிக்கிறார். இவருடைய இவ்வெற்றி காஷ்மீரிலுள்ள மற்றவர்களுக்க்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர், காஷ்மீரிலுள்ள ஒரு தினசரிப் பத்திரிக்கையில் கட்டுரையாளர், மருத்துவர் என பன்முகத் தன்மை கொண்ட ஃபைசல், மிகப்பெரிதாக ஏதாவது சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர் என்று அவருடைய தாயார் முபீனா கூறுகிறார்.

”இது மிகவும் மரியாதைக்குரிய தருணம்” என்று கூறும் கண்ணீர் மல்கக் கூறும் முபீனாவும் ஒரு ஆசிரியை. இம்மகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொள்ள தனது கணவர் குலாம் முகமது ஷா இல்லையே என்று துக்கம் மேலிடக் கூறுகிறார். அவர் கடந்த 2002 ஆம் ஆண்டு தீவிரவாதிகளால் கொல்லப்ப்பட்டார்.

தனது தந்தை இத்தருணத்தில் இல்லையே என்று ஃபைசலும் வருத்தப்படுகிறார்.

ஃபைசலின் குடும்பத்தில் அவரது தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட இரண்டாவது நபர். முதலில் ஃபைசலின் மாமாவும், முபீனாவின் சகோதரருமான இர்ஷாத் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானார். இப்போது ஃபைசலின் ஒரே எண்ணம், காஷ்மீர மக்களுக்கும், மத்திய அரசிற்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டுமென்பதே.

கடந்த 2009 இல் சிவில் சர்வீஸ் தேர்வெழுதிய 875 பேர்களில், 680 ஆண்களும், 195 பெண்களும் அடங்குவர். தில்லி ஐஐடியிலிருந்து பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிரகாஷ் ராஜ்ப்ரோஹித் என்பவர் இரண்டாவதாகத் தேறியுள்ளார். ஜவஹர்லால் நேரு பல்கலையைச் சேர்ந்த இவா சஹாய் என்ற பெண் மூன்றாவதாவும், பெண்களில் முதலாவதாகவும் தேறியுள்ளார்.



பாகிஸ்தானின் ஃபைஸல், தீவிரவாதியாகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க முயல்கிறான்; இந்தியாவின் ஃபைஸல் தீவிரவாதத்திற்கு தனது தந்தையையும், மாமனையும் பலியாகக் கொடுத்து விட்டு, தனது கடின முயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மை பெறுகிறான். இதுதான் இரு தேசங்களுக்கிடையேயுள்ள வித்யாசம்.

- யதிராஜ்

20 Comments:

ப.கந்தசாமி said...

நீங்க எங்கேயும் கமென்ட் போடமாட்டீங்க. அப்பறம் உங்க பதிவுல மட்டும் எதுக்கு கமென்ட் பாக்ஸ்?

Anonymous said...

உங்க நாட்டு வெறிக்கு ஒரு அளவே இல்லாமல் பொய்கிடு இருக்கு.
சிவில் சர்வீஸ் பாஸாகி சுவீஸ் பேங்கில் நம்ம வரி பணத்தை சேமித்து வைப்பார்.அவ்வளவு தான்...

பாகிஸ்தானியையும் மனிதனாக பாருங்க...

அமுதப்ரியன் said...

/*

இதுதான் இரு தேசங்களுக்கிடையேயுள்ள வித்யாசம்.

*/

இதை விட நெற்றியடி வேறு என்ன இருக்க முடியும்.

Anonymous said...

The comments on yellow are really good. 53 people from Saidai Duraiswamy's academy have come out successfully in this year's IAS and other services exam. He is doing the service free of cost for the poor and deserving. Please do some write up so that some good things atleast will come out from Tamil Nadu where otherwise nothing good happens. This will also act as a motivating factor for others to emulate. Hats off to Saidai Duraiswamy.

மஞ்சள் ஜட்டி said...

இப்படி மஞ்சள் பெயிண்ட் ல அடிச்சி, ஆணி பிடுங்கியதா சந்தோஷமா? ஒரு இஸ்லாமியர் ஐ.எ.எஸ் பாஸ் பண்ணியது நல்ல விஷயமே..இதுல மதம் எங்கே இருந்து வந்தது?? இந்த பதிவோட நோக்கம என்ன?

Unknown said...

//பாகிஸ்தானின் ஃபைஸல், தீவிரவாதியாகப் பயிற்சி பெற்று அமெரிக்காவில் வெடிகுண்டு வைக்க முயல்கிறான்; இந்தியாவின் ஃபைஸல் தீவிரவாதத்திற்கு தனது தந்தையையும், மாமனையும் பலியாகக் கொடுத்து விட்டு, தனது கடின முயற்சியால் சிவில் சர்வீஸ் தேர்வில் முதன்மை பெறுகிறான். இதுதான் இரு தேசங்களுக்கிடையேயுள்ள வித்யாசம்//
யதிராஜ் பஞ்ச்

ரிஷபன்Meena said...

கடினமான முயற்சிக்கு பிறகு வெற்ரி பெரும் ஐ.ஏ.எஸ் ஆசாமிகள் உறுதியாக நேர்மையானவர்களாக இருந்தால் அரசியல் வாதிகளால் இந்த அளவுக்கு கொள்ளை அடிக்க முடியாது இல்லையா. (அதாவது ஸ்பெக்ட்ரம் போல பகல் கொள்ளைகள்)

ConverZ stupidity said...

யதி மஞ்ச கமெண்டு பஞ்ச் கமெண்டு...

ConverZ stupidity said...

//மஞ்சள் ஜட்டி said...
இப்படி மஞ்சள் பெயிண்ட் ல அடிச்சி, ஆணி பிடுங்கியதா சந்தோஷமா? ஒரு இஸ்லாமியர் ஐ.எ.எஸ் பாஸ் பண்ணியது நல்ல விஷயமே..இதுல மதம் எங்கே இருந்து வந்தது?? இந்த பதிவோட நோக்கம என்ன?

dear மஞ்சள் ஜட்டி,

read the yellow comments carefully. no words about religion has been mentioned. it was just a comparison of standards seend in India with its rogue neighbhor.

ConverZ stupidity said...

//Anonymous said...
உங்க நாட்டு வெறிக்கு ஒரு அளவே இல்லாமல் பொய்கிடு இருக்கு.
சிவில் சர்வீஸ் பாஸாகி சுவீஸ் பேங்கில் நம்ம வரி பணத்தை சேமித்து வைப்பார்.அவ்வளவு தான்...

பாகிஸ்தானியையும் மனிதனாக பாருங்க...

பக்கத்து நாட்டுக்காரன்(பாக்) தேசபற்றுங்ரா பேர்ல நம்ம ஏரியா-ல குண்டு வைக்கிரதவிடவா அதிகமா போய்டிச்சு. sounds like a modified version of stockholm syndrome.

ஐயப்பன் said...

/*இரு தேசங்களுக்கிடையேயுள்ள வித்யாசம்.*/

தகவல் அற்புதம், வித்தாயசம் இன்னும் அற்புதம்.

ரெண்டு பேரும் எடுத்த காரியத்தில் காட்டிய தீவிரம் அவர்களின் ஒரு ஒற்றுமை.

நல்ல வெற்றிய பாராட்டவே எனது பதிவு

Muthu said...

yathiraj!!

unka 'koraippal' theriyuthu!!

R. Jagannathan said...

I am sure Dr. Shah Faisal of Kashmir will one day reach the highest office in India and bring laurels to the country. It is remarkable to note his great success in his first attempt and also to note his other interests. Wish him all the best.

Also it is good to note that a sizable number of successful candidates of civil services exams are from TN and no word of praise is adequate for the yeomen service being done by Saidai Duraisamy, Sankar and others who train the candidates with full dedication and with only National interest in their minds.
-R. Jagannathan

கௌதமன் said...

வாழ்த்துகள் ஃபைசலுக்கு மட்டும் இல்லை, தேடித் பிடித்து இந்த மாதிரி செய்திகளை வெளியிடும் ய.ரா. + இ வ கூட்டணிக்கும்.

ஆதி மனிதன் said...

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கேயும் இருக்கிறார்கள். சில இடங்களில் அதிகமாக... அதற்கு மக்கள் மட்டுமே காரணமல்ல. மக்களால் தேர்ந்து எடுக்கப்படும் மோசமான அரசாங்கமும் அரசியல்வாதிகளின் சுயநலமுமே முக்கிய காரணம்.

சதாம் உசேனை தீவிரவாதியாக உலகம் சித்தரித்தது. ஆனால் இராக் நாட்டில்தான் இசுலாமிய நாடுகளிலேயே அதிகமாக பெண்கள் படிப்பறிவும், சர்ச்சுகளும் கோவில்களும் இருந்தது.

Gaana Kabali said...

"யதா ராஜா...ததா ப்ரஜா" என்பது சமஸ்க்ருத பழமொழி.

இதைத்தான் தமிழ் இலக்கியத்தில் மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்றும் ‘மன்னன் உயிர்த்தே மலர்தனை உலகம்’ என்றும் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

பாகிஸ்தானை அரசாள்வோருக்கு எப்பொழுதெல்லாம் தங்களுக்கு நெருக்கடி வருகிறதோ அப்பொழுதெல்லாம், மக்களின் கவனத்தை திசை திருப்ப, இந்தியா மீது படையெடுப்பதை வழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்கள். இதை சரித்திரம் சொல்லும்.

மற்ற சமயங்களில் தங்கள் நாட்டு மக்கள் மனதில் இந்தியர்கள் மீது பகைமை உணர்ச்சியை வளர்க்க பாடு படுவார்கள்.
இந்தியா மீது பயங்கரவாத தாக்குதலை செய்ய பாகிஸ்தான் அரசாங்கமே துணை போகும்.

பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களுக்கு பாதுகாப்பு உத்திரவாதமில்லை .
ஆனால் இந்தியாவில் உள்ள அத்தனை இஸ்லாமியர்களும் மிக பாதுகாப்பாக உள்ளார்கள். சுதந்திரமாக உள்ளார்கள் நிம்மதியாக உள்ளார்கள்.

இந்தியாவில் இருக்கும் என்னுடைய இஸ்லாமிய நண்பன் ஒருவன் இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடக்கும்போது பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என்று தான் கூப்பாடு போட்டு க்கொண்டிருப்பான். என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

பாகிஸ்தான் இவர்களுக்கு சோறு போடவில்லை. பாகிஸ்தான் எந்த விதத்திலும் இவர்களுக்கு உதவி செய்ய வில்லை.
ஆனால் சில விஷயங்களில் பாகிஸ்தானுக்கு சார்பாகவும் இந்தியாவுக்கு எதிராகவுமே இவர்கள் நடந்துக் கொள்கிறார்கள்? ஏன் இப்படி?

டிராகன் said...

NICE DIFFERENTIATION BETWEEN TWO COUNTRIES YATHIRAJ

டிராகன் said...

///நீங்க எங்கேயும் கமென்ட் போடமாட்டீங்க. அப்பறம் உங்க பதிவுல மட்டும் எதுக்கு கமென்ட் பாக்ஸ்?///

Dr.sir i saw some comments of IDLY VADAI in LUCKY LOOK blog I think ANGADI THERU REVEIW NACHHHHHHH COMMENT ....,

ConverZ stupidity said...

//Gaana Kabali said...
இந்தியாவில் இருக்கும் என்னுடைய இஸ்லாமிய நண்பன் ஒருவன் இந்தியா - பாகிஸ்தான் கிரிகெட் போட்டி நடக்கும்போது பாகிஸ்தான் ஜெயிக்கவேண்டும் என்று தான் கூப்பாடு போட்டு க்கொண்டிருப்பான். என்னுடைய இஸ்லாமிய நண்பர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

பாகிஸ்தான் இவர்களுக்கு சோறு போடவில்லை. பாகிஸ்தான் எந்த விதத்திலும் இவர்களுக்கு உதவி செய்ய வில்லை.
ஆனால் சில விஷயங்களில் பாகிஸ்தானுக்கு சார்பாகவும் இந்தியாவுக்கு எதிராகவுமே இவர்கள் நடந்துக் கொள்கிறார்கள்? ஏன் இப்படி?

Hope the below excerpts from Dr.Ambedkar may help you comprehend your above statements.
"Islam is said to bind people together. But this is only a half-truth. For Islam divides as inexorably as it binds. Islam is a close corporation and the distinction that it makes between Muslims and non-Muslims is a very real, very positive and very alienating distinction. The brotherhood of Islam is not the universal brotherhood of man. It is the brotherhood of Muslims for Muslims only. There is a fraternity but its benefit is confined to those within that corporation. For those who are outside the corporation there is nothing but contempt and enemity."
-Dr BR Ambedkar, Thoughts on Pakistan, published in 1940

To read more

Anonymous said...

//நீங்க எங்கேயும் கமென்ட் போடமாட்டீங்க. அப்பறம் உங்க பதிவுல மட்டும் எதுக்கு கமென்ட் பாக்ஸ்?//

manda ganam pudicha idlyvadai matra blogla commet podamattanga nama commet pottalum delete panniduva