பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 05, 2010

சிறுவனுக்கு உதவுங்கள்

இட்லிவடை நண்பர்களுக்கு

சில சம்பவங்கள் நடந்து முடிந்தவுடன் அய்யோ இது ஏன் இப்படி ஆனது காலம் திரும்பவம் ஐந்து நொடிகள் பின்னோக்கி நகர்ந்து முன்னோக்கி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினப்பதுண்டு. சிலமாதங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட ஐந்து நொடிகளில் ஒரு சோகமான சம்பவம் நடந்து முடிந்திருந்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே ஒரு சிறுவனின் கைகளும் கால்களும் சில நொடிகளில் கருகி தூக்கி எறியப்பட்டான். பதறச்செய்த நொடிகள் அவை எப்பாடுபட்டாவது அந்த ஐந்து நொடிகள் மட்டும் பின்னோக்கி பயணப்பட எந்தவிதமான செயலையும் செய்யும் நிலையிலிருந்தேன்.எனது வீட்டிற்கு அருகில் சமீபத்தில் குடிவந்திருந்த ஒரு குடும்பம். அவர் வீட்டில் அந்தப்பையனையும் சேர்த்து மூன்று பேர் ஒரு அக்கா ஒரு தங்கை அவனுக்கு. எந்த நேரமும் எதாவதொரு குறும்பு செய்துகொண்டே இருப்பான். ஒரு நொடி கூட சும்மா உட்கார்ந்திருந்ததில்லை. ஆனால் இப்போது அவன் எழுந்து நடந்து நான்கு மாதங்களாகி விட்டன. காரணம் விபத்து ஒன்று. ஒரு விடுமுறை நாளின் காலையின் வீட்டின் மாடியில் குச்சி வைத்து விளையாடிக்கொண்டிருந்தபோது சக நண்பர்கள் உற்சாகப்படுத்த சுவர் அருகே ஆறடி தூரத்தில் அதிக மின்சக்திகளை தாங்கிச்செல்லும் மின் கம்பிகளை அந்த குச்சியால் தொட்டுவிட்டான். பார்த்துக்கொண்டிருக்கும்போதே அந்த பிஞ்சின் கை கால்கள் கருகத்தொடங்கிவிட்டன சுதாரிப்பதற்குள் முடிந்துவிட்டன. இப்போது அவனுக்கு தோல்பட்டை வரை ஒரு கையும் தொடை வரை ஒரு காலும் கருகிவிட்டன. மற்றொரு காலில் ஒரு விரல்கூட மிஞ்சவில்லை. மற்றொரு கையில் இரண்டு விரல்களில் மட்டுமே செயல்பாடு உள்ளது. ஆனால் அவனது முகத்தில் இருக்கும் பிரகாசம் மட்டும் குறையவே இல்லை. தனக்கு இப்படி ஆகிவிட்டது குறித்த கவலைகூட அவனுக்கு கிடையாது. மிகுந்த தன்னம்பிக்கை உடைய சிறுவன்.கடந்த நான்கு மாதங்களில் தங்களது சக்திக்கும் மீறியே செலவு செய்து விட்டனர். தற்போது செயற்கைக் கை கால்கள் பொருத்த நிதி தேவைப்படுகிறது. இட்லிவடை பகுதியில் இதைப்போன்ற செய்திகள் முன்பே படித்திருக்கிறேன், உதவியும் இருக்கிறேன். இந்த செய்தியை தங்களது தளத்தின் வெளியிட்டு அந்த எளிய குடும்பத்திற்கு நிதி உதவி கிடைத்தால் மிகுந்த சந்தோஷமடைவேன். நண்பர்களே உங்களால் முடிந்த உதவியை செய்து அந்தக்குடும்பத்தில் ஒளியேற்றுங்கள்.

விபத்திற்கு முன்பும் விபத்திற்கு பின்பான அந்த சிறுவனின் புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.

முதல் படம் தனது இரு சகோதரிகளுடன். சுமன் என்கிற சுரேந்தர் இரண்டாவது படம் விபத்திற்குப் பின்

அன்புடன்
கதிர்
www.umakathir.blogspot.com
கதிர்,
இட்லிவடையில் கருத்து வேறுபாடு இருக்கும், ஆனால் இது போல பதிவுக்கு எல்லோரும் ஒற்றுமையாக உதவி செய்வார்கள். அவர்களுக்கு என் அட்வான்ஸ் நன்றி.
வங்கி அக்கவுண்ட், அட்ரஸ் போன்ற விவரங்கள் தேவை. அதை பின்னூட்டத்தில் தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
அன்புடன்,
இட்லிவடைஅப்டேட் :

Bank name: Indian Bank
Acc num : 745331967
Account name : P.Madhavan
Branch : Kachirapalayam Kacharapalayan
city : Kallakurichi Taluk

முகவரி :

P.Madhavan
s/o pichamuthu
vedhakara theru
kachirapalayam post
kallakurichi tk
villuppuram dt


விவரங்கள், சந்தேகங்கள், தகவல்களுக்கு - கதிரின் தொலைப்பேசி: 9791460680
15 Comments:

Anonymous said...

See this:

http://www.dnaindia.com/mumbai/report_spitting-man-shocked-to-death_1367464

SAN said...

IV,
Pl. publish the bank details.
I would like to help this boy.

Unknown said...

IV,
Pl. publish the bank details.
I would like to help this boy.

சைவகொத்துப்பரோட்டா said...

வங்கி கணக்கு எண், வங்கி முகவரி,
முடிந்தால் அந்த குடும்பத்தின் தொலைபேசி எண்
கொடுக்கவும், சிறு தொகை ஒன்றை கொடுக்க
விரும்புகிறேன், நன்றி.

Saravana said...

idlyvadai ,
Thanks for posting this... I can do my part, if you can publish the bank details.

Please do so as part of the blog itself as it is more authentic as well it is visible as part of the blog itself in RSS readers (like google reader)

Karthik said...

Please let us more ; where is he residing, what does he needs to be impendent and what can be done for these kind innocent victims. Let us plan to build his future than we merely send the money.

Thanks to IdlyVadai team. Keep up good work

IdlyVadai said...

முகவரி, வங்கி தகவல் அப்டேட் செய்திருக்கிறேன்.
நன்றி
இட்லிவடை

Perumal said...

Could you please confirm the branch name? In HDFC net banking, I could not find Indian Bank, Kachirapalayam branch? There is a one as Kallakuruchi branch, Is that the same? Please confirm. Thanks, Perumal.N.K.

கதிர் said...

நண்பர்களே மன்னிக்க வேண்டும். ஒரு சின்ன எழுத்துப்பிழை. இந்தியன் வங்கி மட்டும் எங்கள் ஊரை ”கச்சி” என்று குறிப்பிடுவதற்கு பதில் ”கச்ச”

Branh name kacharapalayan

கதிர் said...

@karthik

he living in kacharapalayalam village, villupuram District. studying third standard at vivekanandha school kacharapalayam.
but now past four months didt't go to school. small wounds and one leg have to check with physiotherapy doctor. physiotherapy doctor comes everyday to his home (friend of mine) as he said he must be in the hospital for at least one month to straitening his leg. it's only possible to fix the artificial leg after his leg has been straitened.

the same thing in the left hand. he cant fold and strait that three fingers.

Some challenges he have face after all the problems over.

He have to start practice to write English and Tamil from the beginning.

i don't thing he can go to school with this. might be better residing school.

Thanks
kathir

கௌதமன் said...

kacharapalayan என்பது தவறு; kacharapalayam என்பதே சரி என்று தோன்றுகிறது. என் அளிப்பு, ஆயிரம் அனுப்பி இருக்கிறேன். சுமன் என்கிற சுரேந்தர் விரைவில் உதவி பெற்று, படிப்பைத் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

கானகம் said...

மொத்தம் எவ்வவு பட்ஜெட்? அதைத் தெரிந்தால் உதவி கேட்பவர்களுக்கு கேட்க வசதியாய் இருக்கும். இல்லையெனில் ஏதேனும் ஒரு தொகையைக் கொடுப்பார்கள்.

கதிர் said...

இட்லிவடை,

kacharapalayam என்பதுதான் சரி

இந்தியன் வங்கி தளத்திலிருந்து எடுத்த விவரங்கள் கீழே

Name : KACHARAPALAYAM
IFSC - CODE : IDIB000K001
MICR - CODE : 606019007
CIRCLE : CUDDALORE
Address : 10 - F, Gomuhi Dam Road
Kacharapalayam
Vadakkanandal Post

PIN : 606207
District : VILLUPURAM
State : TAMIL NADU
Phone : 4151234234

Email : kacharapalayam@indianbank.co.in
Holiday : SUNDAY
Half day : SATURDAY
Business Hours : 10.00AM To 04.00PM
Office Hours : 10.00AM To 05.00PM

Anonymous said...

enna mudindha siru thogaiyai annupi vitten....
Wishing all the best for Suman....

Vikram..

நாகு (Nagu) said...

அமெரிக்காவில் இருப்பவர்கள் வரிச்சலுகையுடன் நன்கொடை அனுப்பலாம். உங்கள் காசோலையை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்:

Channels of Glory
404 E Laurelwood Dr
Bloomington, IN 47401

காசோலையை 'Channels of Glory' பெயருக்கு அனுப்பவும். காசோலையில் குறிப்பு எழுதுமிடத்தில் 'Towards Suman, Kacharapalayam, India" என்று எழுத மறக்காதீர்கள். பிறகு கதிருக்கு Channels of Glory க்கு அனுப்பிய தொகை என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பிவிடுங்கள். அவருடைய எண்: +91-9791460680