வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்த போது
வெயில்நாளில் குட்டிச்சுவர் ஒதுங்கிய அந்த பட்டம்
சின்ன பசங்களை விரட்டியடித்து நானதைக்
கையிலெடுத்த நொடியிலிருந்து படிக்காத எனக்கு பட்டம் வந்து சேர்ந்தது.
இந்த மாதிரி அறிவுபூர்வமா எழுதினா அது கவிதை. எல்லாரும் கவிதை எழுத முடியாது. எழுதவும் கூடாது. கவிதைய விட சமையல் கஷ்டம். அந்த சமையல் பண்ணிண்டே கவிதை விமர்சம் எம்புட்டு கஷ்டம்? இல்லையோ ?
மேல படிங்க.....
இந்த மாசம் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அவரும் எவ்வளவு நாள் தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவார். அதுவும் வெய்யகாலம் வர போகுது (இல்லை வந்துவிட்டதா?) யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஒன்றுமே இல்லாத கிணற்றில் எவ்வளவு தான் தண்ணீர் இறைத்து ஊற்றுவார்?
ஜெயமோகன் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் அதை ஹரன்பிரசன்னாவுக்குத்தான் சொல்ல வேண்டும். ஏதோ பஸ்ஸில் பு என்று இவர் கவிதை ஏதோ ஒன்றை எடுத்து போட இவர் ஸ்கூல் படித்த காலத்தில் எழுதிய கவிதைகளை ஒரு கை சாரி இரண்டு கை பார்த்துவிட்டார் மாமி. என்ன இருந்தாலும் அவங்க கை பக்குவம் மாதிரி வராது.
இளைய தலைமுறையை நினைத்தால் பாவமாக இருக்கு. மாமியிடமிருந்து அவர்களை காப்பாத்துவது நம் கடமை இல்லையா ?
இதோ டாப் 10 டிப்ஸ்.
1. மராத்தியில் கவிதை எழுதுவது. மராத்தி தெரியவில்லை என்றால் கமல் பற்றி ஏதாவது கவிதை எழுதுவது. எப்படி இருந்தாலும் இரண்டுமே புரியாது.
2. காய்கறிகளை கொண்டு சமையல் குறிப்பை கவிதையாக எழுதுவது. (கவிதை எழுதுவது கஷ்டம், அதைவிட கஷ்டம் சமையல் குறிப்பு எழுதுவது).
3.சுஜாதாவை பத்தி கவிதை எழுதலாம்
4. இட்லிவடையைத் திட்டி கவிதை எழுதலாம் (பாராட்டி எழுதினால் உங்களுக்கு திட்டு விழும்).
5. ஏதாவது எழுத்தாளர் கிணற்றிலிருந்து தண்ணி எடுத்து ஊற்றும் படம், அல்லது பாரில் தண்ணீர் ஊற்றும் படத்தை ஒரு வருடம் போட கான்ட்டிரக்ட் போடலாம்.
6. கவிதை புத்தகம் ரிலீஸ் செய்யும் போது அவருடைய, மாமியாரை மும்பைக்கு அனுப்பலாம். "as i am suffering from" என்று எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
7. கவிதை புத்தகம் ரிலீஸ் ஆகும்போது தனியாக கிரிக்கெட்டில் 'மேட்ச் ஃபிக்சிங்' மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யாலாம். இதற்கு பெயர் "மேட்ச் ஃபிக்சிங் கார்னர்".
8. நம் சொந்த செலவில் அவங்க வீட்டை மறுபடி மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பித்து முடிக்கவே கூடாது.
9. கவிதை புத்தகத்தில் முதல் பக்கத்தில் இவருக்கு சமர்பணம் ( விமர்சனம் எழுதாமல் இருக்க ) என்று போடலாம்.
10. sify காரர்களிடம் சொல்லி அவங்க வீட்டு இண்டர்நெட்டை பிடுங்கி விடலாம்.
இது எதுவும் முடியவில்லை என்றால் கடவுளிடம் சொல்லி திரும்பவும் அவங்க கடவுச்சொல்லை மறக்கடிக்க வேண்டிக்கொள்ளலாம். நாம் வேற என்ன செய்ய முடியும் ?
7 Comments:
11.தூங்கி,சோம்பல் விட்டுக்கொண்டிருக்கும் சிங்கத்தை ஜோ ஜோவுக்கு அனுப்ப, Men of Mathematics, The Black Swan, Leadership the challenge இதெல்லாம் படிக்கக் கொடுக்கலாம்.சீக்கிரம் கண்ணக் கட்ட ஆரம்பிச்சுரும்.
12.பாரதியார் கீதை மட்டுமா? எழுதுறதுக்கு ராமாயணம் தொடங்கி ஐம்பெரும்காப்பியங்கள்,பூனை விடுதூது வரை எல்லாமே உங்களோட கைவண்ணம் காட்டக் காத்துக்கிட்டு இருக்கு என இன்னொரு ரவுண்டு வரச்சொல்லி பிசிபேளாபாத் சாரி பிசியாக்கலாம்.
//நகைச்சுவை //
நல்லவேளை tag போட்டீங்க. இல்லன்னா என்னாவறது?
’நகைச்சுவை’ சூப்பருங்க.
நானும் களத்தில் குதிச்சுட்டேன்.பிரபல பதிவராவதற்கு வழி கண்டபிடித்து விட்டேன். கவிதை எழுதப்போறேன்
// அதுவும் வெய்யகாலம் வர போகுது (இல்லை வந்துவிட்டதா?)//
வந்துடுச்சு -- இந்தப் பதிவைப் படிக்கும் பொழுதே நிதரிசனமாகத் தெரிகிறது.
உலக கவிதை ரசிகர்கள் சங்கம் உங்களை மனதாரப் பாராட்டுகிறது. ஆனால் ஹரன்பிர்சன்னாவுக்கு பைந்து இப்படி எழுதுவது, அவர்தன் இட்லிவடையோ என்ற சந்தேகத்தை வலுவாக்குகிறது.. இந்த அடி வாங்கிய பின்னும் மனிதன் சத்தமில்லாமல் இருக்கிறாரே என்று நினைத்தேன். அவருடைய இன்னொரு பிளாக்கில் (அதான் இட்லிவடை) இதற்கு பதில் தயார் செய்துகொண்டிருந்திருக்கிறார்...
இனிமேல் பிரசன்னா கவிதை எழுதும் முன் சில ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பார்.. சரி மாமியின் வலைப்பதிவுக்கு லின்க் கொடுக்க வேண்டாமா? அதுதானே நியாயம்..
மாமிக்கு விளம்பரம் தர வேண்டுமானால் அதை நேரடியாக செய்யலாமே.யார் மாமி என்று எனக்கும் தெரியாது.’தாளிக்கும் ஒசையில் பின் தொடரும் நினைவு நிழல்கள் உலோகமாக உருகி இட்லி வடையாக உரு மாறுமா’ என்று முனகியபடி பாரா முகத்துடன் ஒருவர் கிழக்கு திசையில் சென்று கொண்டிருப்பதாக ஆந்தை சொன்னது.
தமிழ் இந்துவில் எழுதும் மாமியும், இந்த மாமியும் வேறு வேறு ஆட்கள்.
//மராத்தியில் கவிதை எழுதுவது. மராத்தி தெரியவில்லை என்றால் கமல் பற்றி ஏதாவது கவிதை எழுதுவது. எப்படி இருந்தாலும் இரண்டுமே புரியாது.
//
Instead of writing kavithai on Kamal, better write what Kamal has said in any particular function. It will be more confusing that a kavithai on him.
By the way, yet another post with Kamal as a subject.
Post a Comment