பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 18, 2010

அஜித் - ரஜினி - கலைஞருடன் சந்திப்பு

கலைஞரை இன்று காலை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். மாலை அஜித்.
ஏன் இந்த சந்திப்பு ?

இன்று காலை ரஜினி முதல்வரை சந்தித்துப் பேசியதைடுத்து, மாலை அஜீத் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திம் பெரும் பரபரபப்பு என்று செய்திகள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.


இன்று காலை முதல்வர் கருணாநிதியை ரஜினி திடீரென்று சந்தித்துப் பேசினார். முதல்வரைச் சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை சந்தித்து பேசினேன்.

அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி,


அது அவருடைய உரிமை. அவர் உண்மையை பேசினார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

இன்று மாலை நடிகர் அஜீத் திடீரென்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு, அஜீத் சால்வை அணிவித்தார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜீத், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாக கூறினார்.

மரியாதை நிமித்தம் என்றால் என்ன ? கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?

கடைசி செய்தி: நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.49 Comments:

Guru said...

ஹி ஹி ஹி ஹி சினிமா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

உண்மையான இஸ்லாமியன் said...

மேடையில பேசுனது நான் இல்லைனு அஜித்தும், நான் அன்னிக்கு எந்திரிச்சி நிக்கவே இல்லை, யார் அஜித்துனு எனக்குத் தெரியாதுன்னும் நம்ம சூப்பரும் சொல்லியிருப்பாங்களோ?

Kannan said...

'எதுக்கு தல வம்பு, பேசாம போய் ஒரு சால்வைய போட்டு ஒரு படம் பிடிச்சிட்டு வந்துருங்க, இல்லேனா உங்கள ஹீரோவா போட்டு 'உளியின் ஓசை' மாதிரி எதாவது படத்தை எடுத்துர போறாரு' ன்னு யாராவது சொல்லியிருப்பங்களோ?

Kannan said...

மு.க.: இங்க பாருங்க ரஜினி, நான் முடிவு எடுத்தா எடுத்ததுதான். உளியின் ஓசை-2 அஜித்க்குதான்
ரஜினி: ஐயா, பாவம் விட்டுடுங்க, சின்ன பையன். சினிமாவ நம்பி போழச்சுகிட்டு இருக்காரு. இப்போதான் பார்த்து பேசிட்டு வந்தேன். இன்னைக்கு சாயந்தரத்துக்குள்ள உங்கள வந்து பாக்க சொல்லியிருக்கேன். வரலேன்னா உங்க முடிவை செயல்படுத்துங்க.

J. Ramki said...

Z தமிழ் மற்றும் விகடனில் வெளியான செய்திக்குறிப்பு இதோ..

..பின்னர், இந்தச் சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் நிருபர்களிடம் கூறுகையில், "என்னுடைய மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்துக்கு முதல்வர் தனது குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவே அவரை நேரில் சந்தித்து பேசினேன்," என்றார்.

அண்மையில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது குறித்து கருத்து கேட்டதற்கு, "அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன்.

விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர், நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தககூடாது. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை," என்றார் ரஜினிகாந்த்....

Anonymous said...

வேற எதுக்கு? வீட்டுக்கு ஆட்டோ போயிருக்கும்.உட்னே சரணாகதிதான்!தமிழ் நாட்ல 'தலயயோ' இல்ல உடன்பிற்ப்பையோ உண்மை பேசி மொறச்சா பொழ்ப்பு காலியாயிடுமே!

கடவுளே !தமிழ் நாட்டிற்க்கு இந்த கழகங்களிட்மிருந்து எப்பதான் விடிவு காலமோ!!

Baski said...

What a democracy?

anyway, More they disturb Ajith, He is going to be more popular.
It is always politicians who make all stars as super/ultimate stars.

Anonymous said...

//அவர் உண்மையை பேசினார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்//
// நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை.//

எது உண்மை? நிர்பந்தம் செய்கிறார்களா அல்லது இல்லையா?

வீரராகவன் said...

நிச்சய தார்த்தம் என்பதன் பொருள் உறுதி படுத்தி கொள்வது. எனவே அவர் உறுதிபடுத்திக் கொண்டார்.
நிமித்தம் என்றால் நல்ல சகுனம் என்றும் பொருள். மரியாதை நிமித்தம் என்பதன் பொருள் மரியாதை(?!) கிட்டியதை நல்ல சகுனமாக ஏற்றுக் கொள்ளுதல்.
வாழ்க நன்றி தெரிவிக்கும் பாங்கு !
வளர்க மரியாதை நிமித்த சந்திப்புகள் !
எப்போது நிகழும் ஜெ - க மரியாதை நிமித்த சந்திப்பு?

santa said...

இந்த கரை வேட்டிகளும் சினிமா பிரபலங்களும் சேர்ந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை !!

Anonymous said...

ஹ..ஹ.ஹா.. தலையைச் சந்தித்த தல... நல்ல தைரியம். நல்ல காமெடி.இனி ஏதும் பிரச்சனை வராது. அப்படியே ஜாக்குவார் தங்கத்தையும் தல சந்தித்தால் எல்லாம் சரியாகி விடும். சுபம்.

Anonymous said...

ரஜினியும் அஜீத்தும் தமிழ்நாட்டின் அதிமுக்கிய்மான நடப்பு குறித்து ஆலோசனை செய்திருக்கிறார்கள்.
உரவிலை ஏறப்போகுது!
பெட்ரோல், காஸ் விலையும் ஏறலாம்!
ஆட்டோ ரிக்‌ஷா, டாக்சி வண்டிகளின் கட்டணங்களும் உயரலாம்!
பட்ஜட்டில் சினிமாக்காரர்களுக்கும், கதை வசனகர்த்தாக்களுக்கும் வரிச்சலுகை (முதல்வர் பரிந்துரையால்) அளிக்கப்படலாம்!
மாநில சுயாட்சி பெறுவதற்கு, சினிமாக்கலைஞர்களின் ஆதரவு!
தமிழ்நாடு பாண்டிய மண்டலம், சேர மண்டலம், தொண்டைமண்டலம் என்று பகுக்கப்பட்டு அதற்கான மண்டலாதிபதிகள் நியமனம்!
-இந்த முக்கியமான விஷயங்கள் அலசப்பட்டிருக்கலாம்.

Anonymous said...

Look at it this way. Rajini, having been in a similar situation so many times before, would have seen the likely backlash (against Ajith). So, being the good samaritan he is, he has quickly arranged for a meeting between Kalaignar and Thala to douse the likely fire. But that said, I don't think Sarathkumar, V.C. Guhanathan and Rama Narayanan & Co will forgive Ajith any time soon.

vedhanarayanan said...

yelloe highlighting : I also noticed that "that" program advt does not have Ajith's name. They will not cover Ajith...

Ajith needs to understand that they are too big...

கௌதமன் said...

திரைப்படத் துறை என்பது பணம் மற்றும் புகழ் கறக்கும் பசு. அதை தன கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, சரச சாம தான பேத தண்ட வழிகளைத் தெரிந்து, பயன்படுத்திக் கொள்பவர் தலைவர். வேறு யாருக்கும் இந்த சாமர்த்தியம் வராது.

மஞ்சள் ஜட்டி said...

இ.வ... அதான் அஜித் பேரு "அந்த" நிகழ்ச்சி விளம்பரத்தில இப்ப வருதே?? ஊ.....பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணி பாருங்க...

vv said...

என்ன தல மேல எப்.ஐ.ஆர் ஆ மவனே ஜக்குவார் ஜாக்கிரதை...

SUBBU said...

//நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
//

அடப்பாவிகளா இனிமே இந்த மனுஷன நிம்மதியா இருக்க விடாதீங்கடா :((

SAN said...

IV,
Did you read the cover story of Junior Vikatan about azhagiri's son durai daya.
Why is vikatan publishing unwanted stories?

Unknown said...

நடிகர் வடிவேல் கலைஞரருடன் சந்திப்பு. (விரைவில்)

Anonymous said...

http://thatstamil.oneindia.in/movies/specials/2010/02/19-ajith-thanked-rajini-supporting-him.html

இந்த சந்திப்பு முடிந்து வெளியே வந்த நடிகர் அஜீத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:

முதல்வர் கருணாநிதியை நீங்கள் திடீரென்று சந்தித்து பேசியிருக்கிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

இது மரியாதை நிமிர்த்த சந்திப்பு அவ்வளவுதான்.

முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி ஆதரவை தெரிவித்திருக்கிறாரே?

இதற்காக அவருக்கு (ரஜினிகாந்த்) நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

விழாவில் நீங்கள் பரபரப்பாக பேசியதற்கு யாராவது தூண்டினார்களா?

அப்படியெல்லாம் கிடையாது.

நீங்கள் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ்...

"ராஜா" said...

//கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?

yes they shows ajith's name now... great politics....

"ராஜா" said...

//கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?
yes they show his name now... great politics

ஆதி மனிதன் said...

//அது அவருடைய உரிமை. அவர் உண்மையை பேசினார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.//

//ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். //

கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு எங்கோ இடிக்குதே?

ஆதி மனிதன் said...

//அது அவருடைய உரிமை. அவர் உண்மையை பேசினார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன்.//

//ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். //

கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு எங்கோ இடிக்குதே?

பஹ்ரைன் பாபா said...

ajith mudhalvar kaalula vilundha seidhiya edit pannitteengalaa.. illa matha thalathula wrong news poduraangalaa.. anyway avasarappattu ajith a aambalainu solli mathavangala mattam thattaadheenga.. everybody is human being inspite of their power and popularity. please understand,

Balu said...

That is what vetti kattina aanbillai, semma thamaasu.... ithukku vayai mootittu irukkalaam, pesivittu pin kaalil viazhuvatharku....


Thala puraanam paadiavarkal ellam mukathai enge vaithuk kolla pokireerkal??????????

VELAN said...

மிரட்டலுக்கு பயப்படாத தல.

கிரி said...

"அஜீத் தைரியமாக தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். அவரை பாராட்டுகிறேன்.
விழாக்களுக்கோ, போராட்டங்களுக்கோ நடிகர் - நடிகைகள் வர வேண்டும் என சங்கங்களோ, அரசியல் கட்சிகளோ வற்புறுத்தக்கூடாது. கலந்து கொள்வதும், கலந்து கொள்ளாததும் அவரவர் விருப்பம். நிர்ப்பந்தப்படுத்தி அழைக்க வேண்டிய அவசியம் இல்லை"இட்லிவடை இது தான் ரஜினி கூறியது! தினத்தந்தியிலும் இதுவே வந்துள்ளது. அது ஏனோ ரஜினி என்றால் மட்டும் சொல்லாததையும் கூறியதாக கூறி விடுகிறார்கள். தட்ஸ்தமிழ் தளத்திலும் தவறாக இருந்தது தற்போது அந்த லின்க்கையே காணோம்! சன் செய்தியிலும் கட் செய்து விட்டார்கள்.

Go this Link http://www.youtube.com/watch?v=Iig5qduwYFk

கிரி said...

Thatstamil Link http://thatstamil.oneindia.in/movies/heroes/2010/02/nobody-has-compelled-us-attend-functions.html

Unknown said...

//மரியாதை நிமித்தம் என்றால் என்ன ? கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?//

நாட்டுக்கு தேவையான சந்திப்பு.?

‘அந்த’ அப்படின்னா குடும்ப கட்டுப்பாடு விளம்பரமா?

Unknown said...

இட்லி தூங்கிட்டீங்களா. என் comment காணம்.

ரிஷபன்Meena said...

சந்திக்கச் சொல்லியும் யாராவது கட்டாயப் படுத்தி இருப்பாங்களோ ?

rajamelaiyur said...

தல ய எந்த தருதலயலும் ஒன்னும் பன்ன முடியாது

Anonymous said...

ennamo nadakkuthu - marrmama irukkuthu

Baski said...

மரியாதை நிமித்தம் என்றால் என்ன ? கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?

Yes, His name "is Back" in that advt. :-)

youtubeuser said...

idlyvadai sir,
Neenga neramaiyana vimarsagar nu naan romba namburen. thayavu senchu Giri sir roda comment - "February 19, 2010 2:20 PM" ku konjum reply pannunga...

IdlyVadai said...

//idlyvadai sir,
Neenga neramaiyana vimarsagar nu naan romba namburen. thayavu senchu Giri sir roda comment - "February 19, 2010 2:20 PM" ku konjum reply pannunga...//

நேற்று பேப்பரில் வந்ததை தான் நான் எடுத்துப்போட்டேன். கிரி அவர்கள் ரஜினி என்ன பேசினார் என்று சரியாக போட்டிருக்கார். அவருக்கு நன்றி.

SJ Amalan said...

athu athu

atheppadinga veerama pesumpothu vetti kattina ambala kalil vilumpothu coat suit potta ???????? agittar

சீனு said...

கட்டம் கட்டிடாய்ங்களா? இருந்தாலும் நான் தல பக்கம்.

youtubeuser said...

"நேற்று பேப்பரில் வந்ததை தான் நான் எடுத்துப்போட்டேன். கிரி அவர்கள் ரஜினி என்ன பேசினார் என்று சரியாக போட்டிருக்கார். அவருக்கு நன்றி.
"
- nandri idlyvadai sir

Anonymous said...

old rowdy ruling tamil nadu. better we should get some bad disaster.

Anonymous said...

திருமாவளவன் தலைமையில் கருணாநிதிக்கு பாராட்டு விழா


சென்னை: தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களைத் நடைமுறைப்படுத்தியதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கப்படுகிறது. இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தொல். திருமாவளன் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து பேசினார்

http://thatstamil.oneindia.in/news/2010/02/20/one-more-felicitation-karunanidhi.html

Anonymous said...

// Look at it this way. Rajini, having been in a similar situation so many times before, would have seen the likely backlash (against Ajith). So, being the good samaritan he is, he has quickly arranged for a meeting between Kalaignar and Thala to douse the likely fire.//

I too feel the same!!

rajamelaiyur said...

“தமிழ் படத்தில் தமிலேர்கள் மட்டும் தான் நடிகனும் ...” என்ற

ஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் ..

1. நீங்கள் தயாரித்த “சூர்யா “ படத்தில் நடித்த அனைவரும் தமிழரா ?
2. அந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில் நுட்ப கலைகர்களும் தமிழரா ?
3. நீங்கள் தமிழ் தவிர வேறு மொழி படத்தில் பணிபுரியவில்லியா ?
4. இத்தனை நாள் இல்லாத தமிழ் பற்று , உங்கள் வீடு அடிபட்டதும் எப்படி வந்தது ?
5. கோபம் யாரு மேல ? உண்மைய சொன்ன அஜித் மேலயா ? அல்லது உங்கள் SUPER HIT படம் சூர்யாவ பாக்காத தமிழ் மக்கள் மேலா ?
6. தமிழ்நாட்டை தமிழன் மட்டும் தான் . இந்தியாவை இந்தியன் மட்டும் தான் ஆளனும் னு சொல்ல தைரியம் இருக்கா ?
7. நான் STUND MASTER னு சொல்லாம சண்டை பயிற்சியாளன் னு சொன்னதுண்டா ?
8. உங்கள் மகனுக்கு தமிழ்நாட்டு சண்டை கலைகளை மட்டும் தான் கற்று கொடுதுல்லிர்களா ?

முதலில் மனிதராக இருப்போம் , பின் இந்தியன் அடுத்துதான் தமிழன் ...

Madhavan Srinivasagopalan said...

//கூட்டி கழிச்சு பாத்தா கணக்கு எங்கோ இடிக்குதே?//

you might have done "a+b-c' .. what if instead of 'b' & 'c' they are '-b' &/or '-c'.

Just add as it is.. don't subtract, their sign will take care of 'addition' and/or subtraction.

//கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?//

எந்த நிகழ்ச்சி ?

R.Gopi said...

//நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் //

இந்த டகால்டி டங்குவார் பித்தளை மேல ஒரு பொம்பள விஷயத்துக்கான கேஸ் இருக்கு... இவன எல்லாம் பெரிய ஆளா ஆக்கி விட்டுடாதீங்க....

பெசொவி said...

மரியாதை நிமித்தம் என்றால் என்ன?

"மரியாதை"யா பேசினதுக்கு மன்னிப்பு கேளு, அல்லது, "மரியாதை"யா முதல்வரை வீட்டில் சந்தித்து விடு என்று "அறிவுரை" கூறப்பட்டு அதன் நிமித்தம் சந்திப்பதே மரியாதை நிமித்தம் என்பது (பொழிப்புரைக்கு உதவி: தமிழக அரசியல்)

Anonymous said...

அஜித் குமார் முதலில் அசல் போன்ற கதைக்கு முக்கியத்துவம் தராத படங்களை தவிர்க்க வேண்டும்.
தமிழ் படம் என்ற படத்தில் வருவது போன்றே அசலில் காட்சிகள் அமைந்துள்ளன. கமலைப் போல
நடிக்க கமலே போதும் அதற்கு அஜீத் தேவை இல்லை. அடிதடி படங்களை விட மென்மையான குணசித்திர வேடங்களில் நடிக்க அவர் முன்வரவேண்டும்.