பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 24, 2010

ராக்கெட் சிங் - சினிமா விமர்சனம்

ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"

நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.

"இந்த படத்தில் கதை தான் ஹீரோ. அப்போ ஹீரோயின்? அது திரைக்கதை. தமிழில் ஏன் இப்படி படங்கள் வருவதில்லை? opening song , குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோ என்று சாவடிக்கிறார்கள். Rocket Singh மிஸ் பண்ண கூடாத படம். கண்டிப்பா அதும் தியேட்டரில் போய் பாருங்க. " என்று (இட்லிவடை போன்ற) தமிழ் திரைப்பட ஆர்வலர்களை எல்லாம் புலம்ப வைக்கும் படம் அல்ல இது. மற்றபடி குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையில் பிசியா இருக்க, குழந்தையும் தூங்கி விட, உலக தொலைக்காட்சிகள் எதிலும் ஏதும் உருப்படியா தேறாத நிலையில், நீங்கள் என்ன செய்வது என்று திரு திருன்னு முழித்து கொண்டு இருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தை கண்டிப்பாக சுவாரஸ்யம் ஆக்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.

ஹர்ப்ரீத் சிங் பேடி. 38 % மார்க் வாங்கி Bcom பாஸ் செய்து விட்டு "AYS " என்ற கம்ப்யூட்டர் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மானாக சேர்கிறார். பொதுவாக சேல்ஸ்மென்களுக்கு இருக்க வேண்டியதாக நம்பப்படும் எந்த நாசுக்குகளும் தெரியாததால், கம்பெனியில் ஜோக்கராக ஆக்க படுகிறார். நொந்து போன நிலையில் இருப்பவருக்கு சில உதவிகளோடு, சில புள்ளிவிவரங்களும் கிடைக்கவே சுதாரித்துக்கொள்கிறார். AYS உள்ளேயே இருந்து கொண்டு, "Rocket Sales corporation" என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் தொடங்குகிறது இவரது computer sales தனி(உள்)குடித்தனம்.அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. Rocket sales க்கு சில ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவருக்கு உதவி தேவைப்படுகிறது. இப்போ நம்ம இட்லிவடை "செய்தி விமர்சனத்துக்கு இன்பா", "திரை விமர்சனத்துக்கு ஜெய் ஹனுமான்", "மொழிபெயர்ப்புக்கு யதிராஜ்" என்று அவரவர் திறமைக்கு ஏற்ற பதிவுகளை வழங்கி கடை நடத்துவதை மாதிரி, இவரும், AYS இல் பணி புரிபவர்களில் நால்வரை அவர்களின் நிறை, குறை, தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களை அணுகி தன் Rocket குடித்தனத்தில் சேர்த்து கொள்கிறார்.சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண/சர்வீஸ் பண்ண - சர்வீஸ் மேனேஜர் கிரி, கம்ப்யூட்டர் assemble பண்ண - பியூன் மிஸ்ரா, customer calls answer/transfer பண்ண - டெலிபோன் ஆப்பரேட்டர் Koyna, மார்க்கெட்டிங் பண்ண - சேல்ஸ் மேனேஜர் நிதின்.
Strategic ஆக சில வேலைகளை செய்து ராப்பகலாக உழைத்து காசு பார்க்கிறார்கள்.சேல்சோடு சேல்சாக ஹர்ப்ரீத்துக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைக்கிறாள். ஒரு நாள் AYS இன் MD "Mr .Puri"யிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.

ஹர்ப்ரீத்தாக ரன்பீர் கபூர். "Ranbir Kapoor dating Katrina Kaif", "Deepika Padukone and Ranbir Kapoor - Chal Kya raha hai?" என்று ஸ்கூப்கள் படித்து இருக்கிறேனே தவிர இவருடைய படம் நான் பார்ப்பது இதான் முதல் முறை. சர்தார் வேடம் நன்றாக பொருந்துகிறது. சில முக பாவனைகள் பரவாயில்லை. இவரை தவிர படத்தில் நடித்த யாருடைய பெயரும் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாருமே அவரவர் பாத்திரத்தை தெளிவாக செய்கிறார்கள்.

நம்ம ஊரு படங்கள் மாதிரி குப்பத்து ஹீரோ, குப்பை தொட்டியில் போடப்பட்ட ஹீரோ, ரவுடி ஹீரோ என்று இல்லாமல் பெரும்பாலான ஹிந்தி படங்களில் ஹீரோ ரொம்ப attitude, positive thinking என்று சற்று extreme ஆக இருப்பார். இங்கயும் அப்படியே. AYS கம்பெனி பிரிண்டர், கரன்ட், டெலிபோன் எல்லாவற்றையும் உபயோக்கித்து கொள்வதற்கு, கணக்கு வைத்துக்கொள்கிறான் ஹர்ப்ரீத். என்றாவது ஒரு நாள் AYS க்கு அதை எல்லாம் செட்டில் பண்ணி விட வேண்டும் என்று சொல்கிறான். "Noone is an employee, all are partners" என்று சொல்லி ஐவருக்கும் லாபத்தை பகிர்ந்து தருகிறான். எல்லாரையும் பேசி பேசியே கரெக்ட் பண்றான்.Optimism overdosed.

தனி காமெடி ட்ராக் எல்லாம் கிடையாது. வசனங்களை பேஸ் பண்ணி அங்கங்கே மெல்லிய புன்னகைய வரவழைக்கும் அளவான காமெடி தான். சில வசனங்களும் நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ஹர்ப்ரீத்தின் தாத்தா, "உன்னை நான் எந்த திருட்டு தனமும் சொல்லி கொடுத்து வளர்க்கலையே? ஆனா நீ இப்படி திருடனா வந்து நிக்கறியே?" என்று சொல்லவும், அதற்கு ஹர்ப்ரீத் "அன்றைக்கே திருட்டுத்தனம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தால் நான் இப்படி திருடனாகும் நிலைமை வந்துருக்காது" என்பதும்.

பாடல்கள், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் என்றெல்லாம் எழுத படத்தில் இவை எதுவும் கிடையாது. அதனால் படம் பார்க்கும் போது ஒரு நாவல் படிப்பதை போன்ற உணர்வு தான் எழும். ஆனால் ஓரளவுக்கு விறுவிறுப்பான நாவல். அதிலும் இந்த ஐவரும் என்றோ ஒரு நாள் எப்படியோ மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று படம் பார்ப்பவர்கள் யூகித்து விடுவார்கள். அது எப்போ, எப்படி என்று நம்மை சற்று பதற்ற படுத்தும் வகையில் காட்சி அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.

இப்படிப்பட்ட படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுதல் நலம். ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதால், பாதி படம் பார்த்து கொண்டிருக்கும் போது "அம்மா" என்று முழித்து அழும் குழந்தையின் சத்தம், "அடடா, முக்கியமா சீன் பிரேக் ஆகுதே" என்ற உணர்வுக்கு பதிலாக, "Ok,let me have a break and come back" என்று தோன்ற வைக்கிறது.

நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிய ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனி தான் infosys என்ற விஸ்வரூபம் எடுத்தது என்பதை நினைக்கையில், இட்லிவடை பார்க்க சொல்லி ரெகமன்ட் செய்த இந்த படத்தில், நடக்க முடியாத எதையும் சொல்லி விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

My verdict: Watchable, Once.

- ப்ரியா கதிரவன் ( பழைய எண்: http://synapse-junctionofthoughts.blogspot.com/ புதிய எண்: http://priyakathiravan.blogspot.com/ )

செய்தி விமர்சனத்துக்கு இன்பா", "திரை விமர்சனத்துக்கு ஜெய் ஹனுமான்", "மொழிபெயர்ப்புக்கு யதிராஜ்" என்று அவரவர் திறமைக்கு ஏற்ற பதிவுகளை வழங்கி கடை நடத்துவதை மாதிரி.... நல்ல வேளை என்னை இட்லிசிங் என்று சொல்லவில்லை. அது சரி, நீங்க தான் கொ.ப.செ அதை ஏன் விட்டு விட்டீர்கள் ?

இட்லிவடை மார்க் : 6.1/10

அடுத்து விமர்சனம்: v for vendetta :-)

27 Comments:

சீனு said...

என்னோட ஹைதராபாத் (Any time தெலுங்கானா) colleague இந்த படத்த கண்டிப்பா பாருன்னு ரெகமன்ட் செய்தான். இன்னும் பார்க்கல. இனிமேல் பார்க்கனும்.

சர்தார்ஜிய பத்தி ஜோக் அடிக்கிறோம். ஒரு முறை டாக்சியில் போகும்போது டிரைவர் ஒரு சர்தார்ஜி. அவரை வெறுப்பேத்த பயணிகள் சர்தார்ஜி ஜோக்குகளாக சொல்லி சிரிக்க, இறங்கும் போது சர்தார்ஜி அவர்களிடம் ஒரு ஒரு ரூபாய் கொடுத்து, நீங்கள் எதிர்படும் முதல் "சர்தார்ஜி" பிச்சைக்காரரிடம் இந்த ஒரு ரூபாயை கொடுங்க என்று கொடுத்தாராம். ஆனால், இன்னும் அவர்களிடம் அந்த ஒரு ரூபாய் உள்ளதாக ஒருவர் எழுதியிருந்தார். கொஞ்ச நாள் முன் படித்தது.

சீனு said...

Me the first...

என்னோட ஹைதராபாத் (Any time தெலுங்கானா) colleague இந்த படத்த கண்டிப்பா பாருன்னு ரெகமன்ட் செய்தான். இன்னும் பார்க்கல. இனிமேல் பார்க்கனும்.

சர்தார்ஜிய பத்தி ஜோக் அடிக்கிறோம். ஒரு முறை டாக்சியில் போகும்போது டிரைவர் ஒரு சர்தார்ஜி. அவரை வெறுப்பேத்த பயணிகள் சர்தார்ஜி ஜோக்குகளாக சொல்லி சிரிக்க, இறங்கும் போது சர்தார்ஜி அவர்களிடம் ஒரு ஒரு ரூபாய் கொடுத்து, நீங்கள் எதிர்படும் முதல் "சர்தார்ஜி" பிச்சைக்காரரிடம் இந்த ஒரு ரூபாயை கொடுங்க என்று கொடுத்தாராம். ஆனால், இன்னும் அவர்களிடம் அந்த ஒரு ரூபாய் உள்ளதாக ஒருவர் எழுதியிருந்தார். கொஞ்ச நாள் முன் படித்தது.

Anonymous said...

I am reading Priya's article for the second time, after her review on "2 States" novel..
Seems there is nothing special in the movie ;)

Anonymous said...

you have enumerated the plus points of Sardars. One more:they dont smoke. Smoking is against Sikhism. (Hint for Anbumani!)

Anonymous said...

Priya's article for the second time, after her review

Raadhai,

Priya is a HE

IdlyVadai said...

//Priya's article for the second time, after her review

Raadhai,

Priya is a HE//

He He :-)

IdlyVadai said...

//Seems there is nothing special in the movie ;)//

பெண்கள் விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும். ஹரண்பிரசன்னா மாதிரி ஆட்கள் எழுதினால் தான் நல்லா இருக்கும் :-)

ரிஷபன்Meena said...

விமர்சனம் நல்ல இருக்கு

மஞ்சள் கமெண்டுகளில் "இட்லிசிங்" எப்போதும் போல எழுந்து நிற்கிறார்

gumi said...

சர்தாஜிகிட்ட இவ்வளவு நல்ல குணம் இருக்கா? அவ்வளோ ஒத்துமையா இருக்காங்களா? ம்ம்ம் இது செரிவராது, தலிவரு கிட்ட சொல்ல வேண்டியதுதான். உடன்பிறப்பே.......

vedhanarayanan said...

T V P vimarsanam eppo?

Rakesh said...

//உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். //

Too much of exaggeration. Check the history of how the Punjabi's prospered. Read about khalistan movement. Their prosperity is mainly because of corruption. The punjabi politicians are the most corrupt in the nation. Still, there are many more good characters in Punjabis which is because of their rich third generation.

Regarding the movie, it's nothing more but a complete crap. Having no intro songs, heroism is no excuse.

There are many good movies in Hindi. Please don't promote movies like Rocket Singh.

Anonymous said...

// Priya's article for the second time, after her review

Raadhai,

Priya is a HE //

OHHH I SEE...!
Thanks for the info:) let me visit her......sorry his blogspot :)

But then,

IV,,,

Wats this???

// பெண்கள் விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும். ஹரண்பிரசன்னா மாதிரி ஆட்கள் எழுதினால் தான் நல்லா இருக்கும் :-) //

I am new to Blogs and Blogging :) thats why I am not aware....and my first blogspot and the best one is IDLYVADAI ! :)

கௌதமன் said...

சீனு said
//.... ஆனால், இன்னும் அவர்களிடம் அந்த ஒரு ரூபாய் உள்ளதாக ஒருவர் எழுதியிருந்தார். கொஞ்ச நாள் முன் படித்தது.//
படித்தது இல்லை; 'அபியும் நானும்' படத்தில் பார்த்தது.

Anonymous said...

ithu romba oludunnu ninaikiren

யோசிப்பவர் said...

//படித்தது இல்லை; 'அபியும் நானும்' படத்தில் பார்த்தது.//
கௌதமன் சார்,
படித்தில் இருந்துதான் படத்தில் வந்தது!!!;-)

யதிராஜ சம்பத் குமார் said...

இட்லி ரெண்டு He சொல்லிட்டு அடுத்து ஹரன் பிரசன்னாவ வேற இழுக்கறார்......என்ன உள்குத்தோ??


நல்ல விமர்சனம்.

khaleel said...

Cheenu,
I have also read this. really very impressive.
but i guess this movie was released almost three months back. critique after such a long time?

உண்மையான இஸ்லாமியன் said...

அபியும், நானும் மட்டுமே நான் பார்த்த படங்களில் உலகத் திரைப்படம்..

கானகம் said...

எனது அனுபவத்தில் ( ஒன்றரை ஆண்டுகள் இரண்டு சர்தார்கள் ரூம்மேட், மஸ்கட்டில்)சர்தார்களின் கடவுள் பக்தி அபாரமானது.. காலையில் ஏழு மணிக்கு வேலை எங்களுக்கு. ஐந்து மணீக்கே குளித்து ஆறரை வரை முனுமுனுத்த நிலையில் இறை வழிபாடு. 8 மணீக்கு சமப்ந்தமே இல்லாமல் வாயைத்திறந்தால், தாயை, உடன்பிறந்தவளை திட்டும் மகா கேவலமான வசவுகள் கீழே வேலை பார்ப்பவர்களுக்கு.. அதில் பாதி சம்பந்தப் பட்டவருக்கும், மீதி அவரைப் பற்றி இன்னொரு சர்தாரிடமும்..

நல்ல பழகும் திறன்.

நாட்டுப் பற்று

வாரம் தவறாமல் கோவிலுக்குச் செல்வது ( இங்கு வெள்ளிக்கிழமைதான் போக முடியும்)

எத்தனையோ பன்னிட்டோம், இதைச் செஞ்சுற மாட்டமா என்ற தெனாவட்டு எதைச் செய்தாலும்..

நான் பார்த்த மைனஸ்கள்,

குடும்பம் குறித்து கொஞ்சமும் அக்கறையின்றி இருப்பது..

சரியான குடிகாரர்கள்..

கெட்ட வார்த்தை..

பக்கத்துல ஆள் இருக்கானே அவனுக்கு கஷ்டமா இருக்குமா இல்லையா என்ற அக்கறையின்றி பாங்ரா இசையை ஓடவிட்டுக்கொண்டே இருப்பது, ரூமில் இருந்தால் சிடி பர், வண்டியில் சென்றால் டேப் மற்றும் சிடியில்..

நாம் சித்தரிக்கும் அளவு முட்டாள்களெல்லாம் கிடையாது..

சிறந்த தோட்டக்கலை வல்லுனர்கள் சர்தார்கள்.

மஸ்கட்டின் ஆகச் சிறந்த அரசினர் தோட்டங்கள் அனைத்தும் ஒரே ஒரு சர்தாரின் மேற்பார்வையிலேயே இருந்தன, எனக்குத் தெரிந்து 2004 வரை.

முட்டாளும் கிடையாது, பயங்கர புத்திசாலிகளும் கிடையாது. இன்னொரு இந்தியன் அவ்வளவே..

IdlyVadai said...

//I have also read this. really very impressive.
but i guess this movie was released almost three months back. critique after such a long time?//

முப்பது நாளில் ஹிந்து கற்றுக்கொண்டு பிறகு பார்த்ததால் இவ்வளவு அம்மணி இவ்வளவு லேட்டாக எழுதியிருப்பார்.

ப்ரியா கதிரவன் said...

//முப்பது நாளில் ஹிந்து கற்றுக்கொண்டு பிறகு பார்த்ததால் இவ்வளவு அம்மணி இவ்வளவு லேட்டாக எழுதியிருப்பார்.//

எனக்கு இது தேவை தான் இட்லி!
ரொம்ப தேங்க்ஸ்.

Anonymous said...

// பெண்கள் விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும். ஹரண்பிரசன்னா மாதிரி ஆட்கள் எழுதினால் தான் நல்லா இருக்கும் :-) //

Aiyo ketukonga pa..Naa venum na, "padam rom...mba nalla irukum pola theriyudhu" appadinu oru comment ezhudhiduren...adhukaaga 'HP'va ulla izhuthu,,, AO ku ezhudhina maadhiri 2 review ezhudhiraatheenga!! Idhu podhum ;)

Sari dhaana YS sir :P

Anonymous said...

// Priya's article for the second time, after her review

Raadhai,

Priya is a HE //

Dear Anony,,

Pls visit Priya Kathiravan MAM's blogsite....avanga SHE dhaan...!

"ARJUN'ODA AMMA"

Irundhaalum indha article ku enna ivalo comments ezhudha vitutaangale....!! ;'-(

கால்கரி சிவா said...

சில நல்ல படங்கள் ஹிந்தியில் வந்து காணாமல் போய்விடுகின்றன. அதில் நான் பார்த்த இரண்டு பேஜா ஃப்ரை மற்றும் 99.

Anonymous said...

=====//முப்பது நாளில் ஹிந்து கற்றுக்கொண்டு பிறகு பார்த்ததால் இவ்வளவு அம்மணி இவ்வளவு லேட்டாக எழுதியிருப்பார்.//

எனக்கு இது தேவை தான் இட்லி!
ரொம்ப தேங்க்ஸ்.=======

ப்ரியா,
ஏற்கனவே தாளிப்பு கவிதாயிணி(?)பின் நவீனத்துவ விமர்சனம் பாணியில் " நிழல் "கவிதைகளை தோண்டி தோரணம் கட்டியதற்கு இட்லி வடையிடம் வாங்கி கட்டிக்கொண்டார்!இப்போது நீங்களா?
ஒருவேளை இது "கூப்பிட்டு வைச்சு கேவலப்படுத்திட்டீங்களே...." ரகமோ?:-)

Anonymous said...

// பெண்கள் விமர்சனம் எழுதினால் இப்படி தான் இருக்கும். ஹரண்பிரசன்னா மாதிரி ஆட்கள் எழுதினால் தான் நல்லா இருக்கும் :-) //
இட்லிவடை,
ஹரண்பிரசன்னவுள்ளிருக்கும் "அந்நியன்" நீங்களா? அல்லது உங்களுக்குள்ளிருக்கும் "அந்நியன்" ஹரண் பிரஸ்ன்னாவா?

மஞ்சள் ஜட்டி said...

ராக்கெட் சிங் உடைய தாத்தா பழைய ஹிந்தி பட வில்லன் பிரேம் சோப்ரா தான்...:) ..
மேலும் ஒரு தவறு, திருத்தி விடுங்கள்..படிப்பது பி.காம் அல்ல .. பி.பி.எஸ்.