இட்லிவடைக்கு ஒருவர் அனுப்பிய செய்தி இது.... கொஞ்சம் எடிட் செய்துள்ளேன்.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடங்கனேரி என்ற கிராம மக்கள் பெருந்தலைவர் காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்டவர்கள். அவருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று பல வருடங்களாக முயற்சி மேற்கொண்டனர். தற்போதைய அமைச்சர் ஒருவர், கடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது பெருந்தலைவருக்கு வெண்கலச் சிலை நிறுவித் தருகிறேன் என வாக்குறுதி தந்தார். தேர்தல் முடிந்து அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் பலமுறை அவரிடம் வெண்கலசிலை நிறுவக்கோரி கடங்கனேரி மக்கள் சோர்ந்து போயினர்....
இனி அமைச்சரை நம்பிப் பயன் இல்லை. நாமே பணம் திரட்டி பெருந்தலைவருக்குச் சிலை மற்றும் மணிமண்டபம் அமைப்போம் என்ற முடிவுக்கு வந்தனர் ஊர் மக்கள். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை என்ற பழமொழிக்கு ஏற்றார் போல, தங்களால் முடிந்த அளவு சிறு சிறு தொகையாக சேர்த்து சிமெண்ட் சிலையை அமைத்தனர். இதற்காக தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை விற்று பணம் கொடுத்தவர்களும் அவ்வூரில் உள்ளனர். இதைக் கேள்விப்பட்ட அமைச்சர் சிலை திறக்கப்பட்டால் கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிய அமைச்சர் என தன் மதிப்பு கெடும் என அஞ்சினார். சிலை அமைக்கும் பணி முழுவதும் முடிவடைந்த பின்னரும் கடங்கனேரி மக்களிடம் சென்று இச்சிலையைத் திறக்க வேண்டாம். நான் உங்களுக்காக வெண்கலச் சிலையை நிறுவித் தருகிறேன் என்றார்.
மீண்டும் ஒருமுறை ஏமாற விரும்பாத மக்கள் அமைச்சரின் வார்த்தைகளைப் புறக்கணித்தனர். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் சமுதாயப் பெரியோர்கள் முன்னிலையில் சிலை திறக்கவும் அன்னதானம், மேளதாளம் என திருவிழாவாக நடத்த விழைந்தனர். அன்றைய தினத்தில் சிலைவைக்க முறையாக அனுமதி பெறவில்லை என வருவாய்துறை, காவல்துறையினரால் விழா தடுக்கப்பட்டது. சிலை சீல் வைக்கப்பட்டது. இதற்கு பின்னணி யார் என்பதை சொல்லத் தேவை இல்லை என நினைக்கிறேன்.
ஐந்து லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சிலை அமைச்சரின் கெட்ட எண்ணத்தால் தடைபட வேண்டாம் என நினைத்த ஊர் மக்கள் தங்களுக்கு அமைச்சர் செய்த துரோகத்தை எல்லாம் பொருத்துக் கொண்டு சிலையை திறக்க உதவுமாறு அமைச்சரை வேண்டினர். அதன்பின் அமைச்சர் தலைமையில் பிப்ரவரி 7ல் விழா நடத்த ஊர் மக்கள் ஏற்பாடுகளை செய்தனர். ஆனால் இம்முறையும் மக்கள் ஏமாற்றப்பட்டனர். வெண்கல சிலைக்கு மட்டுமே அனுமதி உண்டு. சிமெண்ட் சிலைக்கு சட்டப்படி அனுமதி கிடையாது என இம்முறை வருவாய் துறையினரால் விழா தடுக்கப்பட்டது.
இப்படி ஒரு சட்டம் இருக்கிறதா? அல்லது இது முன்னாள் சட்ட அமைச்சரின் மகள் போட்ட சட்டமா? என்பதை சட்ட மேதைகள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். தானும் செய்யமாட்டேன், செய்யுறவனையும் விடமாட்டேன் எனும் அமைச்சரின் போக்கை சரிசெய்வது யார்?
காமராஜரே இருந்தால் கூட சிம்பிளாக சிமெண்டே போறும் என்று சொல்லியிருப்பார்.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Tuesday, February 09, 2010
காமராஜர் ஆட்சி !
Posted by IdlyVadai at 2/09/2010 05:55:00 PM
Labels: அரசியல், செய்தி விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
இந்த சிலை விவகாரத்தை சிக்கலாக்குவதால் சிறுமை கழகத்திற்குத்தானேயொழிய காமராஜருக்கு அல்ல.
I beg to differ from the learned "iv"(in Re:Cement Statue") in as much as if Karmaveerar kamaraj is approached for his views, he would ask the followers to use the money meant for his Statue in meeting the expenditure of poor feeding or in meeting the expenditure for the education of poor village students.
இது ஆறடியின் மகள் வேலையோ?
where are the congress guys????
காமராஜர் ஆட்சி அமைப்பவர்கள் எங்கே சென்றார்கள்..
அன்புள்ள இ.வ.,
காமராஜர் இருந்தால் எதுக்கு சிலையெல்லாம் வைக்குறீங்க? சிலையே வேண்டாம் என்று சொல்லி இருப்பார். அந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க சொல்லியிருப்பார்.தனக்கு தானே சிலை,பாராட்டு விழா, இன்ன பிற நடத்தி க் கொல்ல அவர் அரசியல்வாதி இல்லை. ஒருமுறை தன்னை விழாவுக்கு அழைத்த ஏற்பாட்டாளர்களிடம் தடபுடல் ஏதும் இருக்க கூடாது என்ற நிபந்தனையுடன் வருவதாக சம்மதித்து, பின் ஊர் அருகில் வந்தவுடன் மேள,தாள மற்றும் ஆடம்பர ஏற்பாடுகள் கண்டு கோபமாக வண்டியை திருப்ப சொன்னவர் காமராஜர்.இது ஊரறிந்த நிகழ்சி.
சிலை சிலை சிலை சிமிண்டு சிலை
இல்லை, அதற்கு போட்டோம் தடை.
இல்லை இல்லை இல்லை வெண்கல சிலை.
அதுக்கும் இன்று போட்டோம் தடை.
அப்போ என்னதான் இதற்கு விடை?
அதைச் சொல்லுங்க இட்லி வடை!
KGG யாரே உம்மை கருணாநிதி காத்து அடிச்சுதா? சிலேடை கவிதை எல்லாம் எழுதரீரே?
நடுல நடுல மானே தேனே பொன்மானே இதெல்லாம் போட்டு பாரும் :)
கண்மணி... அன்போட... நான் ஒனக்கு வைக்கும் வெங்கல சிலை..
வேணாம் சிமெண்ட் சிலைன்னே இருக்கட்டும்...
பொன்மணி.. உன் வீட்டுல என்ன சிலை? நான் இங்க வைக்க போறது வெங்கல சிலை...
அபிராமி..... அபிராமி.........
//அபிராமி..... அபிராமி.........//
சிவகாமி மைந்தனுக்கு சிலை வைக்க அபிராமிய வேண்டுவோம்...
அனானி - அடுத்த கமெண்ட் பாருங்க - குகைக்குள் கரடி என்ன சூப்பரா பாட்டு எழுதியிருக்காருன்னு!
The peoples belive The lord saraswathi is the god of Education, and she give knowledge. In real life the real god Kalvithantha(i) Kamaraj is our god. So we build a temple for god kamaraj. In this news, build a statue is not a matter. Only indicate the character of minister. In my knowledge this character is not good for a social worker. I have no words to write more...
Post a Comment