பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, February 03, 2010

ஸ்ரீரங்கம் கோயிலில் மு.க.ஸ்டாலின் சாம்பார் சாதம் சாப்பிட்டார் !

இன்று மாலை புதுக்கோட்டையில் ஏதோ சமத்துவபுரம் திறப்பு விழா அதை திறந்து வைக்க இன்று காலை சென்னையிலிரிந்து திருச்சிக்கு வந்திருக்கிறார் ஸ்டாலின். விமான நிலையத்திலிருந்து இறங்கியவுடன் திடீரென்று ஸ்ரீங்கம் கோயிலுக்கு சென்றார்.

அங்கு நடைபெற்றுக்கொண்டு இருந்த சமபந்தி விருந்து கலந்துக்கொண்டு சாம்பார் சாதம் சாப்பிட்டார்.

செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு இப்படி பதில் சொல்லியிருக்கார் "ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் சமபந்தி விருந்தில் கலந்துகொள்வது பெருமையாக இருக்கிறது. புகழ்பெற்ற சரித்திரம் வாய்ந்த கோவிலுக்கு வந்தது பெருமையாக இருக்கிறது"

ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபத்துக்கு பக்கத்தில் தெற்கு குடியரசு சுற்றுலாப் பயணிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

கோயில் இருக்கிறது என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் சென்றவர்கள் கோயிலுக்கு வெளியே இருக்கும் பெரியார் சிலையையும் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்!

27 Comments:

கௌதமன் said...

இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீ ரங்கவிலாஸ் மண்டபத்தில், கூரத்தாழ்வார் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா என்றும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் நிகழ்ச்சி உண்டு என்றும் காலையில் பொதிகைத் தொலைக்காட்சியில் சொன்னார்கள். ஸ்டாலின் அவர்கள் சென்றது அந்த நிகழ்ச்சிக்கோ?

கானகம் said...

அண்ணா என்பவர் வேஷ்டி மாதிரி, பெரியார் என்பவர் துண்டு மாதிரி, துண்டை விடலாம், ஆனால் வேஷ்டியைத்தான் விட முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா?

கடவுளே இல்லை - பெரியார்

ஒன்றே கடவுள், ஒருவனே தேவன் - அண்ணா

தி.மு.க மற்றும் அவர்தம் குடும்பத்தைப் பற்றிச் சொல்லத்தேவையில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்த எம்.ஜி.ஆர். மூகாம்பிகை பக்தர்

ஜெயமோகன் எழுதியுள்ள திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? என்ற கட்டுரையைப் படித்துப்பாருங்கள்.

SUBBU said...

#%##@^*(()&&^&^##^&*&**&^

Anonymous said...

manjal comment sooperappu

Anonymous said...

// ஸ்ரீ ரங்கவிலாஸ் மண்டபத்தில், கூரத்தாழ்வார் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி விழா என்றும் வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் நிகழ்ச்சி உண்டு என்றும் காலையில் பொதிகைத் தொலைக்காட்சியில் சொன்னார்கள். //
இட்லிவடைய படிக்கறதோட தாக்கமோ, வர வர உமக்கு நையான்டி வார்த்தைகள் அட்டகாசமா வர்றது!!

சீனு said...

விடுங்க பாஸு. இவங்க இப்படி பன்னுறது சகஜம் தானே. இவங்க எப்பவும் இப்படி தான்.

True Indian Citizen said...

2 வருடம் முன்பு கணிமொழி குடும்பத்துடன் ஸ்ரீ ரங்கம் வந்து இருந்தார்.

Baski said...

நல்ல விஷயம் தானே.? ஒருவேளை இட்லி, வடை, கட்டி சட்னி சாப்பிடிலைன்னு கோவமா? ;-)

ஆனாலும் வெறும் சாம்பார் சாதம் சாப்பிட்டுவிட்டு போவது தப்பு. கொஞ்சம் தயிர் சாதமும் சாப்பிட்டு முடித்திருக்கலாம்.

ஸ்ரீராம். said...

மஞ்சள் கமெண்ட் சூப்பர்.

SathyaRam said...

one of the best 'Manjal comment' in recent times. May be they would have covered the statue to avoid it seeing the minister go to the temple and the minister would have missed it.

R. Jagannathan said...

I think the comment is unwarranted. Stalin is much more secular and decent than his father. If he is a non-believer, so be it as long as he doen't hurt believers. It is really nice of him to visit the temple - though not to worship - and take part in the 'sama pandhi bhojanam' despite the fact the scheme was Jayalalitha's brain-child. Let us not make fun of him and arouse his followers unnecessarily. I do hope TN will be better off under his rule - and the only expectation is that he does away with all the freebees like free computer, free watches, free cars (!) etc. and concentrate on the general improvement of the state and bring down the debt commitments. - R. Jagannathan

பெசொவி said...

I amire your writings and your manjal comments. Keep it up!

(Koil soththaiye saappidugiravargalukku koilil saatham saappidarathu kashtamillaiye?)

டவுசர் பாண்டி... said...

ஸ்டாலின் தி.மு.க காரராய் அங்கே போகவில்லை, துனைமுதல்வர் என்கிற வகையில்தான் போயிருப்பார் என்பது தெரிந்திருந்தும் விஷமத் தனமாய் பதிவிட்டிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

ஒருவேளை கருவறை நுழைவு போராட்டம் நடத்த போக வேண்டும் என எதிர்பார்த்தீர்களோ என்னவோ....

திராவிட இயக்கங்கள் நீர்த்துப் போனது ஒன்றும் சிதம்பர ரகசியமோ அல்லது சபரிமலை ஜோதி மர்மமோ இல்லை.

என்னவோ போங்க !

கமெண்டு பப்ளிஷ் பண்ணுவீங்கதானே !

ஹா..ஹா....

Anonymous said...

//Stalin is much more secular and decent than his father.//

Give me a break, may be he has changed compared to 70s.

வீரராகவன் said...

கோயில்களை பொருத்தவரை, ஸ்ரீ ரங்கம் கோவில், குருவாயூர் கோவில் போன்ற கோவில்களைப் பற்றி எனக்கு ஒரு வருத்தமும் வெறுப்பும் உண்டு. அது சிலரை கோவிலுக்குள் செல்ல தடை விதித்திருப்பதுதான். இறைவனும் கோவிலும் அனைவருக்கும் பொது என்பதை மறந்து வேற்று மதத்தினரோ, அயலாரோ வரக் கூடாது என்று தடை விதித்து இறைவனுக்கு இவர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது சரியில்லை. இப்படிபட்ட கோவில்களுக்கு சென்று சமபந்தி போஜனம் செய்த துணை முதல்வர் செயல் மிகவும் சரியானது. நல்லதும் கூட.
ஆனால் அவசரப்பட்டு அவருடைய தந்தை முரசொலியில் கவிதையோ அல்லது கேள்வி பதிலில் இ.வடையின் மஞ்சள் கமெண்ட்டையோ எழுதாமல் இருக்க வேண்டும்.

R.Gopi said...

//கோயில் இருக்கிறது என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் சென்றவர்கள் கோயிலுக்கு வெளியே இருக்கும் பெரியார் சிலையையும் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்!//

**********

பார்க்க போயிருந்தா, கி.வீரமணி வந்து ஸ்டாலினுக்கு “பிரியாணி” கொடுத்திருப்பாரா??

கோயிலுக்கு போனதால் “சாம்பார் சாதம்” கிடைத்தது...

அப்படியே பகுத்தறிந்து ஆராய்ந்து பார்த்தாலும், கோயில் சொத்து, கோயிலில் கொடுக்கப்படும் சாம்பார் சாதம் எல்லாம் அவர்களுக்கு ஓகே...

வழிப்போக்கன் said...

நான் கேள்விப்பட்ட வரையில், அழகிரி அண்ணன் மத/கடவுள் விஷயங்களில் தந்தை, சகோதரர், சகோதரியை விட மிகவும் ”டீசண்ட்” ஆனவர் என்பதே. இதுவரை, எந்த மதத்துக்காரரும் அவரால் புண்பட்டதாகத் தகவல் இல்லை.
சமீப காலமாகக் கனிமொழி அக்கா தந்தைவழி நடக்கப் பயின்று வருகிறார் போலத் தோன்றுகிறது.

அறிவிலி said...

//R. Jagannathan said...
I think the comment is unwarranted. Stalin is much more secular and decent than his father. If he is a non-believer, so be it as long as he doen't hurt believers. It is really nice of him to visit the temple - though not to worship - and take part in the 'sama pandhi bhojanam' despite the fact the scheme was Jayalalitha's brain-child. Let us not make fun of him and arouse his followers unnecessarily. I do hope TN will be better off under his rule - and the only expectation is that he does away with all the freebees like free computer, free watches, free cars (!) etc. and concentrate on the general improvement of the state and bring down the debt commitments. - R. Jagannathan//

I think the scheme started by Jayalalitha was Annathanams in temples. It is not samabandhi bojanam. :))))

Loganathan - Web developer said...

நல்ல விஷயம் தானே.? I like this. but MK won't do like this.

Unknown said...

//கோயில் இருக்கிறது என்று நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு தூரம் சென்றவர்கள் கோயிலுக்கு வெளியே இருக்கும் பெரியார் சிலையையும் பார்த்துவிட்டு வந்திருக்கலாம்//

நாட்டில் ஒரு நல்ல காரியம் நடந்தால் உங்களுக்கு ஏன் பிடிக்கவில்லை.

வீரராகவனுக்கு ரிப்பீட்டு

யதிராஜ சம்பத் குமார் said...

வீரராகவன்::

ஸ்ரீரங்கம் கோவிலில் ஹிந்துக்கள் தவிர வேறு யாரும் கோவிலுக்கு வர அனுமதியில்லை என்று பெயருக்கு ஒரு அறிவிப்புப் பலகை இருப்பதென்னவோ வாஸ்தவம்தான். ஆனால் அது கடைபிடிக்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் போகலாம். நீங்கள் குறிப்பிடும் ”சிலர்” யாரென்று தெளிவுபடுத்தினால் இன்னும் நலம்.

R. Jagannathan said...

To 'Arivili': Annadhaanam is not discriminating and hence it is Sama pandhi bhojanam. If there was no Anna dhaanam programme in the temples, there will be no Sama pandhi bhojanam in the temples. It would have been arranged elsewhere. Hope you agree.

To 'Yathiraja Sampathkumar': I think the entry for Non-Hindus (if they can be identified) is still not allowed into the Sanctum Sanctorium. Tourists from all over do enter the temple premises but I don't think they enter the Moolasthaanam.

// ஸ்டாலின் தி.மு.க காரராய் அங்கே போகவில்லை, துனைமுதல்வர் என்கிற வகையில்தான் போயிருப்பார் // I agree.

// Give me a break, may be he has changed compared to 70s.// Is it not sufficient and appreciable?
- R. Jagannathan

கௌதமன் said...

நான் நவம்பர் இரண்டாயிரத்தெட்டில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஒரு பகல் பொழுதில் சென்ற பொழுது ஆந்திராவில் இருந்து வந்திருந்த ஒரு கோஷ்டியில், லுங்கி கட்டியவரை மட்டும் உள்ளே அனுப்ப முடியாது என்று வெளிப் பிரகாரத்தில் நிறுத்திவிட்டனர். மீதி எல்லோரும் தரிசனம் செய்துவிட்டு வந்தனர். லுங்கி கட்டியவர் சற்று விவாதம் செய்துவிட்டு பிறகு - ஒதுங்கி நின்றுவிட்டார்.

Anonymous said...

I.V
WHERE IS MY COMMENT? DELETED?

Erode Nagaraj... said...

ஸ்டாலின் வந்தது நல்லது தான். கோயில் வெறும் சொத்தை என்று கூறியவாறே, சொத்தை சாப்பிடுபவர்கள் ஆட்சியாளர்களுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்று தெரிந்தால் சற்று அடங்குவார்கள்.

Anonymous said...

கோவில் விசிட் என்பது கலைஞர் குடும்பத்துக்கு சர்வ சாதாரணம். தளபதியின் ஸ்ரீரங்கம் விசிட்டில் அடித்த ஓபன் கமெண்ட்-தான் ஹை லைட்.

மற்றபடி கலைஞர் வீட்டுப் பெண்டுகளைத் தரிசிக்க பாப்புலர் கோவில்களுக்குச் சென்றாலே போதும்.
அவரது ஸ்ரீரங்கம் விசிட்டின் போது, துணைவியார் கும்பகோணம் பகுதி நவ கிரக கோவில் ஒன்றில் பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி கும்பிட்டுக் கொண்டிருந்தார்.
அதற்கு முன், கலைஞரின் மற்றொரு மருமகள், திருநெல்வெலி பகுதி கிரகப் பிரீதிக்குப் பெயர் போன கோவில்களில் தென் பட்டார்.
நவகிரஹ தெய்வங்களைப் போல, ராமானுஜரும் இவர் குடும்பப் பெண்களை ஈர்க்கிறார்.
ஸ்ரீபெரும்பூதூர் ராமானுஜர் அபிஷேகத்தின் போது, திருமணத்திற்குக் காத்துக் கொண்டிருக்கும் இவர் குடும்பத்துப் பெண் யாரையாவது பார்த்து விடலாம். கனிமொழியும் ஸ்ரீபெரும்புதூர் கோவிலுக்கு வந்துள்ளார்.

எல்லாம் ஊருக்கு உபதேசம்.
வெளியில புலி, வீட்டில எலி போலிருக்கு.

Selva Muthusamy said...

When an emerging leader shows some sort of flexibility in his activities, you people are started teasing him. Stalin's
visit to the temple was not to worship but to participate in a tradition which is considered as a secular one. If you people talk like this, this kind of changes will not again happen.