பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 07, 2010

சண்டேனா இரண்டு (7-2-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்...ஆண்கள் படிக்க வேண்டிய பெண்கள் ஸ்பெஷல்.

செய்தி # 1

இது என் நண்பரின் சகோதரிக்கு நேர்ந்த ஒரு உண்மை சம்பவம்...

கல்லூரி முடித்து வீட்டில் இருந்த அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருந்தார்கள்.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள், நள்ளிரவு 11 : 30 மணிக்கு, அந்த பெண்ணின் மொபைலுக்கு ஒரு 'மர்ம' நபரிடம் இருந்து கால் வந்தது. அப்பெண்ணின் பெயர் மற்றும் விவரங்களை விசாரிக்க தொடங்கினான் அவன். மிகவும் பயந்து போன அவர் அந்த காலை உடனே கட் செய்து இருக்கிறார்.

அதன் பின், தொடர்ந்து நாள் தோறும் 'மிஸ்' கால்கள் தர தொடங்கினான் அவன். இந்த பெண் பேச தொடங்கினால், ஆபாசமான பேச்சுக்களை அவிழ்த்து விட ஆரம்பித்தான் அவன். பயந்த, கூச்ச சுபாவம் காரணமாக வீட்டிற்க்கு தெரியாமல் மறைத்து விட்டார் அந்த பெண்.

இந்த தருணத்தில், அப்பெண்ணிற்கு மாப்பிள்ளை முடிவாகி, நிச்சியதார்த்தம் செய்தார்கள் வீட்டோர். அந்த 'மர்ம' நபருக்கு போன் செய்து, தனக்கு மாப்பிள்ளை முடிவான விஷயத்தை சொல்லி இனிமேல் தனக்கு மிஸ்டு கால் செய்வதையும், போன் செய்வதையும் நிறுத்தி விடுமாறு கெஞ்சினர் அவர். ஆனால், அந்த நபரோ திருமணம் ஆனாலும், தனது 'நட்பு (?)' தொடரும் என்று கூறி இருக்கிறான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், கடும் காய்ச்சலாலும், மன உளைச்சலாலும் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டார். அங்குதான், தனது தந்தை மற்றும் என் நண்பனிடம் நடந்த சம்பவங்களை கூறி, அந்த மர்ம நபரின் எண்ணையும் தந்தார்.

பிறகு, தெரிந்த ஒரு காவல் துறை அதிகாரி மூலமாக அந்த எண்ணை ட்ரெஸ் செய்தனர்.

அப்போது கிடைத்த விஷயங்கள்.... அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வருகிறார். அந்த பெண்ணுக்கு வரன் தேடி கொண்டு இருந்த போது, வந்த ஒரு தொடர்புதான் அது. அந்த சமயத்தில், ஒரு புரிதல் வர வேண்டும் என்பதுக்காக பெண்ணின் எண்ணை கொடுத்து பேச சொல்லி இருக்கிறார்கள்.

பின்னர், சில காரணங்களுக்காக அந்த சம்பந்தம் முறிந்து விட, ஆனால் அந்த எண்ணை வைத்து கொண்டு தனது விளையாட்டை தொடர்ந்து இருக்கிறான் அவன்.

இதை போல ஒரு சம்பவத்தில் போலிசால் பிடிக்கபட்ட ஒருவன்...பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன்.

மொபைல் இல்லாத மனிதன் அரை மனிதன் என ஆகி விட்ட இந்த கால கட்டத்தில், இந்த சம்பவங்கள் மூலம் நமக்கு கிடைக்கும் படிப்பினைகள்..

1 . தங்கள் மொபைலுக்கு புதிதாக, அறிமுகம் இல்லாத கால் வந்தால், அதை வீட்டில் உள்ள பெண்கள் தங்கள் வீட்டில் உள்ள ஆண்களிடம் கொடுத்து அட்டென்ட் செய்ய சொல்ல வேண்டும்.

2. அதையும் மீறி, 'மர்ம' நபர்கள் பேசினால், அதை மறைக்காமல் உடனடியாக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் சொல்லி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் கிள்ளி ஏறிய வேண்டிய முள் செடி என்பதை உணர வேண்டும்.

3. மாப்பிளை தேடும் பெற்றோர்கள், தொடர்புகளுக்கு தங்கள் எண்ணையே தர வேண்டும். குறைந்த பட்சம் நிச்சியதார்த்தம் நடக்கும் வரை.

பேருந்தில் பயணம் செய்யும் பெண்களுக்கு இடி மன்னர்கள் போல, வீட்டில் உள்ள பெண்களுக்கு 'மிஸ்டு கால்' மன்னர்கள் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன என்பதை உணர்வோம்.


செய்தி # 2

சென்னை துறைமுகம் மற்றும் மதுரவாயில் அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தால் சுமார் 12 ஆயிரம் குடிசைகள், சரியான மற்று ஏற்பாடு இன்றி தரை மட்டம் ஆக்க படுவதாக மக்கள் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

அதிகம் பாதிக்கபட்டு இருப்பது அங்கு வசிக்கும் குழந்தைகளின் கல்வியும், எதிர்காலமும் என்று கூறுகிறார்கள் குடிசை வாழ் பெண்கள்.

ஆர். விஜயா, துப்புரவு பணியாளர் : " விடிய விடிய கண் விழித்து சென்னையை சுத்தபடுத்துவது நாங்கள் தான். ஆனால் சிங்கார சென்னை என்ற பெயரில் பல ஆண்டுகளாக நாங்கள் வாழ்ந்த வீடுகளை இடித்து விட்டு ஊருக்கு வெளியே குப்பைகளை போல எங்களை கொட்டுகிறார்கள்".

எஸ். மணிமேகலை, வீட்டு வேலை செய்பவர் : "ஒரே இரவில் எங்கள் வீடுகளை இடித்து விட்டு, செம்மஞ்சேரியில் எங்களை குடி அமர்த்தினார்கள். இதனால் சூளை மேட்டில் படித்து வரும் எங்கள் மகளின் படிப்பை தொடர முடியவில்லை".

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்றார் அண்ணா.

பகுத்தறிவு கொள்கைகளை கடை பிடிக்கும் தமிழக அரசு, இறைவனை ஏற்று கொள்ளாததால் ஏழைகளை சிரிக்க விடுவதில்லை போலும் .

அங்கயற்கண்ணி -

இவர் தமிழகத்தின் முதல் பெண் ஓதுவார். அதுவும் தலித் சமுகத்தை சேர்ந்தவர். திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தமிழிசை பாடும் இவர். தமிழகக் கோயில்களில் தேவாரம் இசைக்கிறார்.

"திருச்சியின் ஒதுக்குப்புறமான செம்பட்டுதான் என் சொந்த ஊர். அப்பாவுக்குத் தோல் பதனிடுகிற தொழிற்சாலையில் கூலி வேலை. கிடைக்கிற வருமானத்தில் அண்ணன், தம்பி, அக்காள் என எங்கள் ஆறு பேரையும் வளர்ப்பது சிரமமா இருந்ததால, அம்மாவும் கூலி வேலைக்குப் போனாங்க. அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எங்களை நல்லாப் படிக்க வைக்கணும்னு ஆசை. ஆனா, வருகிற வருமானம் வீட்டுச் செலவுக்கே போதுமானதா இல்லை. பத்தாம் வகுப்பு முடிச்ச கையோட நாமளும் வேலைக்குப் போனா என்னன்னு தோணுச்சு. அப்பா, வேணாம்மா! நீ மேல படி நாங்க கஷ்டப்பட்டாவது உன்னைப் படிக்க வைக்கிறோம்னாரு. நான் படிச்ச ஸ்கூலில் பாட்டுப் போட்டி நடத்துவாங்க. எனக்கு இயல்பாவே நல்லா பாட வரும்கிறதால, நான் பேர் கொடுத்துப் பாடுவேன். ஒரு வழியா தத்தித் தத்தி ப்ளஸ் டூ முடிச்சேன். மேலே படிக்க வைக்க அப்பாவால முடியலை.

நான் போய் தமிழக அரசு நடத்தும் இசைப் பள்ளியில் சேர்ந்து தமிழிசை படிக்க ஆரம்பிச்சேன். அப்போ, திருச்சி ஊர்க்காவல் படைக்கு ஆள் எடுத்தாங்க. அதில் போய்ச் சேர்ந்தேன். அதில் கொஞ்சம் பணம் கிடைச்சது. அதை வீட்டுச் செலவுக்குக் கொடுத்தேன். மூணு வருஷம் ஊர்க்காவல் படையில் வேலை பார்த்துக்கிட்டே இசைப் பள்ளியில் படிச்சேன். ஊர்க்காவல் படைங்கிறது முழு நேர போலீஸ் வேலை அல்ல. சமூக சேவையில் ஆர்வம் உள்ளவங்கள்ல தகுதியானவங்களைத் தேர்ந்தெடுத்து ஊக்கத்தொகை கொடுத்துப் பொதுச் சேவைக்குப் பயன்படுத்திக்கவாங்க. அது எனக்கு வசதியாகவும் திருப்தியாகவும் இருந்தது.

இசைப் பள்ளியல் எனக்கு ஆசிரியராக வந்தவர் சரவண மாணிக்கம். இசையோடு தமிழுணர்வையும் சேர்த்தே போதித்தார் அவர். இசையை, அதன் லாகவத்தை குறிப்பா தமிழிசையின் நுணுக்கங்களை எனக்கு அவர்தான் கத்துக் கொடுத்தார். தேவாரம், திருவாசகம் இவற்றில் எனக்கு ரசனையை ஏற்படுத்தி மூன்று ஆண்டுகளில் என்னை தமிழிசையின் பால் ஈர்ப்பும் ஆர்வமும் உள்ளவனாக மாற்றினார். அதன்பின் என் கையில் பலமாகப் பற்றிப் பிடிக்க இசையும், பாடகிதான் ஆக வேண்டும் என்கிற ஆர்வமும் தெளிவும் இருந்தது. ஊர்க்காவல் படை வேலையை விட்டேன். இதோ தமிழக அரசு என்னை தமிழிசை ஓதுவாராக நியமித்திருக்கிறது. திருச்சி பஞ்சவர்ண சுவாமி கோயிலில் தேவாரம் பாடிக்கொண்டு இருக்கிறேன்.

எந்த இசையுமே சாமான்ய மக்களிடம் இருந்துதான் உருவாகுது. வயல்வெளிகளில் உடலுழைப்பில் ஈடுபடும் மக்களிடம் அழகான இசை இருக்கு. அவர்கள் எந்த இசைப் பள்ளியில் போய்ப் படித்தவர்கள்? தங்கள் குழந்தையை தொட்டிலில் போட்டுத் தாலாட்டுப் பாடுகிற ஒவ்வொரு கிராமத்துத் தாயும் ஒரு பாடகிதானே! என்னைப் போல தமிழகம் முழுக்கப் பல நூறு பேர் தமிழிசை கற்க முன்வர வேண்டும் என்பது என் ஆசை. சாதியாலும் பொருளாதாரத்தாலும் ஒடுக்கப்பட்ட என்னாலேயே இந்த இடத்துக்கு வர முடிஞ்சுதுன்னா, ஆரோக்கியமான சூழலில் வளரும் பெண்கள் சிகரமே தொடலாம் "

என்று தன் கதையை கூறுகிறார் .

அங்கயற்கண்ணி - போராடும் பெண்களுக்கு தன்னம்பிக்கை தரும் ஒரு முன்னுதாரணம்.
திருக்கோயில்களில் தேவார, திருமுறைகளைப் பாடி தமிழை பரப்பி, ஆன்மிக பணி செய்து வரும் ஒதுவர்களின் இன்றைய நிலை தெரியுமா ?

அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.

சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை என்கிறது ஒரு அறிக்கை.

வாழ்க உலக தமிழ் மாநாடு.....வளர்க செம்மொழி தமிழ்..


(நன்றி ...இனி அடுத்த வாரம் ).

- இன்பா
சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலை திடீர் என்று அரசு எடுத்துக்கொண்டு விட்டது. நல்ல வசூல் தான் காரணம்!

16 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

//அவர் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிந்து வருகிறார்.//

இதுதான் ஆளை பார்த்து எடை போட கூடாது என்பதோ. அனாவசிய கால்களை தவிர்த்து விடுதல் நலம்.

பெசொவி said...

முதல் செய்தி பெண்ணைப் பெற்ற அனைவருக்கும் ஒரு படிப்பினை..........நன்றி!

இரண்டாவது செய்தி: புறம்போக்கு பகுதிகளில் குடிசை போட்டுக் கொண்டு விடுவது.......பிறகு அரசு எங்கள் வீடுகளைக் காலி செய்கிறார்கள் என்று புலம்புவது, இதுவே நாட்டு நடப்பு (என்னை இரக்கம் இல்லாதவன் என்று ஏசினாலும் சரி, என் நிலைப்பாடு இதுதான்)

மூன்றாவது செய்தி : தமிழின் சிறப்பை மிளிரச் செய்வது தேவாரம், திருவாசகம் மற்றும் நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்றவைதான்........பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் இவற்றுக்கு வேலையே இல்லை. என்ன செய்ய........."ஆயிரத்துக்கு வோட்டு - நல்லாட்சிக்கு வேட்டு"

கௌதமன் said...

அது சரி, முதல் படம் எங்கள் கிட்டே சுட்டதா அல்லது நாங்க எங்கே சுட்டோமா அங்கேயிருந்து சுட்டதா? எப்படியும் செய்திகள் புதியன, புரிந்துகொள்ள வேண்டியன.

R.Gopi said...

//ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன் என்றார் அண்ணா.//

எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் (எல்லாருக்கும் “இதயத்தில் இடம் தருபவர்”) டெய்லி 10 பிச்சைக்காரர்களை தன் வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டி விடுவார்... அவர்கள் சிரிப்பார்கள்... அப்புறம் அவங்கள அடிச்சு விரட்டிட்டு, இவர் உள்ளே போய் சாப்பிடுவார்...

அப்படின்னா, அவங்களுக்கு சாப்பாடு போட மாட்டாரா? அந்த ஏழையின் சிரிப்பில் இறைவன் மேட்டர் எல்லாம்?

நீ வேற... அவரு பகுத்தறிவு பகலவன்... இறை நம்பிக்கை எல்லாம் கிடையாது...

(தகவல் : எஸ்.வி.சேகர் - ஏதோ ஒரு நாடகத்தில் சொன்னது....)

gumi said...

//சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலை திடீர் என்று அரசு எடுத்துக்கொண்டு விட்டது. நல்ல வசூல் தான் காரணம்!////
ஏன் மேல்மருவத்தூர் கோவிலை அரசாங்கம் எடுக்க கூடாது ?
தமிழ் நாட்டிலேயே மிக அதிக வருமானம் தரும் கோவில் அல்லவா அது ?

Madhavan Srinivasagopalan said...

//அது சரி, முதல் படம் எங்கள் கிட்டே சுட்டதா அல்லது நாங்க எங்கே சுட்டோமா அங்கேயிருந்து சுட்டதா? எப்படியும் செய்திகள் புதியன, புரிந்துகொள்ள வேண்டியன.//

முருகப்பிரான் இன்னைக்கு வந்தா 'சுட்ட படம் வேண்டுமா, சுடாத படம் வேண்டுமா' ன்னு கேப்பாரோ?

//.பகுத்தறிவாளர்களின் ஆட்சியில் இவற்றுக்கு வேலையே இல்லை. என்ன செய்ய........."ஆயிரத்துக்கு வோட்டு - நல்லாட்சிக்கு வேட்டு"//

Well said..

//எஸ்.வி.சேகர் - ஏதோ ஒரு நாடகத்தில் சொன்னது.//

இப்ப அவரைக்கூட பகுத்தறிவு பகலவன் ஈர்க்குது பாத்தீங்களா?

//ஏன் மேல்மருவத்தூர் கோவிலை அரசாங்கம் எடுக்க கூடாது ?
தமிழ் நாட்டிலேயே மிக அதிக வருமானம் தரும் கோவில் அல்லவா அது ?//

அங்கதான் பூணுல் இல்லையே.. இவங்களுக்குத் தேவை 'பணம்' அல்லது 'பூணுல் எதிர்ப்பு'

R.Gopi said...

லேட்டஸ்ட் அதிரடி கிச்சு கிச்சு :

சுமார் 20-25 வருடங்களுக்கு முன்னால் அமிதாப் பச்சன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது அவருக்கு ஒரு பெரிய தந்தி அனுப்பினேன்... அப்போது அவருக்கு வந்திருக்கும் ஆயிரக்கணக்கான தந்தியில் அதை தேடினாலும் கிடைக்காது...

Anonymous said...

Kalaignar is best comparing to Arignar Anna and Manmohan Singh.

Anna Promised 3 padi rice for 1 Rupee, Manmohan singh promised 1 Kg Wheat for 3 Rupees. But they have failed in their commitment and cheated the public. This clearly proves Kalignar who is giving 1KG rice for 1 rupee is the best.

Anonymous said...

Good News!!!

I think Government is planning to lift Article 370 in Jammu and Kashmir. See the below news

இந்தியர் அனைவருக்கும் இந்தியா சொந்தம். யார் வேண்டுமானாலும், நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு உரிமை உள்ளது. கேரள மாநிலத்தவராக இருந்தாலும் சரி, தமிழராக இருந்தாலும் சரி. இவையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை.இவ்வாறு ராகுல் பேசினார்.

Unknown said...

//சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலை திடீர் என்று அரசு எடுத்துக்கொண்டு விட்டது. நல்ல வசூல் தான் காரணம்//

வசூல்ராஜா MBBS.

R. Jagannathan said...

Dear IV,
I don't think you read your gmails (I sent one asking you to remove the Madhi's cartoon as the cine people had organized a function for CM on 6.2.10) and this is another comment on the new IV symbol at the top of the site. The flower in the Indian tricolour is attractive but I request you to revert to the Thalai vaazhai ilai and idly with vadai! - R. Jagannathan

SUBBU said...

//ஆரம்பத்தில் கிள்ளி ஏறிய வேண்டிய முள் செடி என்பதை உணர வேண்டும்.

//

கண்டிப்பாக உனர வேண்டும் !!

R. Jagannathan said...

Thanks to IV for acting on my comments but no thanks for not acknowledging my comment! - R. Jagannathan

Erode Nagaraj... said...

people should use screening for avaoiding calls or call recording from strange guys...

Anonymous said...

// Thanks to IV for acting on my comments but no thanks for not acknowledging my comment! - R. Jagannathan// - wats ur problem sir, my 2 cents, if ur next mail is to shut down idlyvadai, should he do it?

Anonymous said...

// I sent one asking you to remove the Madhi's cartoon as the cine people had organized a function for CM on 6.2.10)//

My 2 cents, please create your own blog and keep adding/deleting stuffs...