பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, February 14, 2010

சன்டேனா இரண்டு (14-2-10) செய்திவிமர்சனம்

இந்த வார செய்திகள்...காதலர் தின ஸ்பெஷல்


செய்தி # 1


'இந்த உலகில் காதலிக்காதவர்கள் எல்லாம் ஒரு கண்ணால் மட்டுமே உலகத்தை பார்த்தவர்கள்' என்கிறார் வைரமுத்து. காதல் போயின் சாதல் - இது பாரதியாரின் வரிகள்.

காதல் கடந்து போகாத கவிஞனும் இல்லை...மனிதர்களும் இல்லை. அவ்வாறு கடந்து போன காதல் மேகங்களில் ஒன்றின் கதை இது.

அது கடற்கரைக்கு மிக அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் கல்லூரி. அங்கு் நான் முதுகலை படிப்பு படித்து கொண்டு இருந்த சமயம். எந்நேரமும் கடல் காற்று தலை கோதும் கல்லூரி. அனுமதி இல்லாமல் வகுப்பு அறைகளுக்குள் நுழைந்து, புத்தகங்களின் பக்கங்களை பட படவென புரட்டும் காற்று,படிக்கும் பெண்களின் கூந்தலில் இருந்து பூக்களையும், சில காதல்களையும் மாணவர்கள் மீது வீசும் கல்லூரி.

'அவள்' என்னுடன் ஒரு வகுப்பில் படித்தாள். முதுகலை என்பதால் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக புடவை அணியவேண்டும் என்பது எங்கள் கல்லூரின் விதி. வசதியான வீட்டு பெண்ணானஅவள் தினம் ஒரு புடவை...அதற்க்கு ஏற்றது போல ஒரு அழகான குடையும் பிடித்த படி.அவள் வரும் அழகே தனி. தோழிகள் புடை சூழ வந்தாலும், அவள் நிலவு போல தனித்து தெரிவாள்.

என்னை போலவே பல மாணவர்கள் 'பாதிக்க' பட்டு இருப்பது, கல்லூரியில் சேர்ந்த சில நாட்களில் தெரிந்து விட்டது. என் நண்பன் ஒருவன் அவளின் காலடி தடங்களில் தனது வாழ்வின் சுவடுகளை தேடினான்.


'அவள்' பற்றி நான் எழுதிய கவிதை ஒன்று.

அவள் கூந்தலுக்கு
மட்டும்...
இரண்டு பக்கமும்
பூக்கள்

ஒரு நாள் அவளிடம் தனியே பேசிய ஒரு சந்தர்ப்பத்தில், 'சில பேரை பார்த்த உடனே பிடித்து போகும். உன்னையும் எனக்கு அப்படித்தான் முதல் தடவை பார்த்த போதே பிடிச்சி போச்சி' என்று நானும் ஒரு 'பிட்டை' போட்டேன்.

'பொய்யி' என்றாள். பொய் என்ற வார்த்தையே அழகானது. உலகத்திலயே மிக சிறிய அழகான கவிதை, பெண்கள் வெட்கப்பட்டு சொல்லும் 'ச்சீ' என்ற வார்த்தைதான் என்றான் ஒரு கவிஞன். அதுபோலவே இந்த பொய் என்றவார்த்தையும்.

நாட்கள் உருண்டோடின. ஒரு நண்பனாக மட்டுமே நான் பழகினேன். அவ்வாறே நேர்ந்தது. படிப்பின் இறுதி ஆண்டு வந்தது.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அவளிடம் கேட்டேன். ' அப்புறம் என்ன...மேரேஜ் தானே ' என்றேன். 'ஆமாம்..வீட்டுல அமெரிக்காவுல இருக்கிற மாப்பிள்ளையா பாக்குறாங்க. எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு. அங்கேயே செட்டில் ஆனா, எங்க நெக்ஸ்ட் ஜெனரேஷன் நல்லா(?) இருக்கும்ன்னு நினைக்கிறேன்.தவிர, அங்கே நிறையே சொந்தகாரங்க இருக்காங்க' என்றாள் தீர்மானமாக. 'வாழ்த்துக்கள்' கூறி விடை பெற்றேன்.

பிறகு பணி நிமித்தமாக அரபு நாடு ஒன்றுக்கு நான் வந்து விட, நான்கைந்து வருடங்கள் கடந்து விட்டன. அவளின் தொடர்பு முற்றாக நீங்கி விட்டது. சமிபத்தில் எனக்கும், அவளுக்கு்மான என் இன்னொரு வகுப்பு தோழியை சந்தித்தபோது 'அவள்' பற்றி நான் விசாரித்த போது, அந்த தோழி சொன்னது இது.

"அவ விரும்பின மாதரியே அமெரிக்காவுல இருக்கிற சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருத்தரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா, அவனுக்கு அவள் அழகா இருக்கறதுனாலே அவ மேல பயங்கர சந்தேகம்.மாமனார், மாமியார் கூட தான் அவ தனியா இருக்கா. ஒரு பெண் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் அவள இங்க விட்டுட்டு அமெரிக்கா திரும்ப போய்ட்டான். வீட்டுக்கு நாங்க போன் பேசினாலே, அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு பிடிக்காது. கிட்டத்தட்ட ஹவுஸ் அர்ரஸ்ட் என்று சொல்லலாம். அப்படித்தான் இருக்கா. கொஞ்சம் கூட நிம்மதி இல்லாத லைப்." என்றாள்.

என்ன செய்வது. சந்தேகம் என்ற வியாதி எத்தனை படித்து இருந்தாலும், எங்கு வேலை பார்த்தாலும் மனிதனை விட்டு விலகுவதை இல்லை என்று தோன்றுகிறது.

இப்போது எல்லாம் திருமண விஷயத்தில் படிப்பு, வேலை,வசதி வாய்ப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் 'கேரக்டருக்கு' தரப்படுவதில்லை.அவள் கல்லூரியில் படித்த போது, தன்னை காதலித்த பலரில், யாரையாவது ஒருவரை தெரிவு செய்து இருந்தால், அவள் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும் என்றும் தோன்றுகிறது.

கல்லூரி வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளின் வண்ணங்கள், அதற்க்கு பின்வரும் நிஜ வாழ்க்கையில் சாயம் போவது எல்லாருக்கும் பொதுவான சோகம்தானே?

செய்தி # 2

எதை கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்.

இதை எழுதியவர் தபு சங்கர்.காதல் கவிதைகள் எழுதுவதற்கு என்றே பிறந்தவர். காதல்...காதல்..காதல்..காதல் போயின் சாதல் என்ற பாரதியின் வார்த்தைகளை வாழ்க்கையாகவே வைத்து இருக்கிறார்போலும்.

'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்' - காதலிப்பவர்கள் அல்லது காதலிக்க போகிறவர்கள் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு.

அவரின் காதல் கவிதைகளில் சில காதலர் தின ஸ்பெஷலாய் .உங்கள் பார்வைக்கு...


எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.

நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.

ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.



தபு சங்கர் ஒரு படம் இயக்குவதாக ஒரு செய்தி படித்தேன். படத்தின் தலைப்பு 'லைலா மஜ்னு விளையாட்டு' என்று தொடங்கி, பின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று மாற்றியிருப்பதாக தெரிகிறது. வேறு என்ன காதல்கதைதான்.டி, இமான் இசை அமைக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.தமிழ் சினிமாவுக்கு மீண்டும் காதலுக்கு மரியாதையை தரும் இன்னொரு இயக்குனர் கிடைப்பார் என தெரிகிறது.

உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.

(நன்றி..இனி அடுத்த வாரம்).

-இன்பா

21 Comments:

கானகம் said...

இன்பா, கொன்னுட்டீங்க போங்க..

Asir said...

:(

DR said...

மனதை லேசாக்கும் கவிதைகள்... வாழ்த்துக்கள் இன்பா...

Guru Prasath said...

கடைசி கவிதையில் பொருட்குற்றம் இருக்கிறது.

Anonymous said...

Bullshit !! "kadhal" - Waste of Time

Anonymous said...

\\ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது\\

சூப்பர் சார்.......

ஸ்ரீகுமார்......

Anonymous said...

\\ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது\\

சூப்பர் சார்.......

ஸ்ரீகுமார்......

பெசொவி said...

லேட்டா வந்தாலும், ஸ்பெஷலா தந்துட்டீங்க, வாழ்த்துகள், இன்பா!

//அவள் கல்லூரியில் படித்த போது, தன்னை காதலித்த பலரில், யாரையாவது ஒருவரை தெரிவு செய்து இருந்தால், அவள் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும் என்றும் தோன்றுகிறது.//

இதில் நான் முரண்படுகிறேன். ஒருவேளை, நீங்கள் சொல்வதுபோல் நடந்திருந்தாலும், "காலேஜிலேயே எத்தனையோ பேர் உன்னை காதலிச்சிருக்காங்க, அது எனக்கும் தெரியும். அதுல, எத்தனை பேர் லவ்வை நீ ஏத்துக்கிட்டியோ, யார் யாரோட நீ என்ஜாய் பண்ணினியோ, ....."இன்னும் எத்தனையோ "யோ"க்களைக் கேட்டு அவளைக் கொடுமைபடுத்தியிருப்பான்.

ஏனெனில், ஒரு லவர் கணவனாகும்போது, மனிதத் தன்மை குறைய நிறைய வாய்ப்பிருக்கிறது.

சைவகொத்துப்பரோட்டா said...

அந்த வண்ணத்துபூச்சி
என் நெஞ்சு கூட்டுக்குள்
சரணடைந்து விட்டது.

கவிதை...கவிதை.... :))

யதிராஜ சம்பத் குமார் said...

நேற்றைய மாலை நாளிதழ் ஒன்றில் காதலர் தின மெரினா பீச் புகைப்படங்களைப் பார்த்த பிறகு, ப்ரமோத் முத்தலிக் செய்வது முற்றிலும் சரியென்றே தோன்றுகிறது.

காதல் என்ற பெயரில் இனக்கவர்ச்சியின்பால் ஏற்பட்ட வக்கிரங்களை அரங்கேற்றும் திறந்த வெளி விபச்சார விடுதியாக மெரினா, எலியட்ஸ் பீச் போன்றவை ஏற்படுத்தப்பட்டுவிட்டன. வெட்கக் கேடு!! தமிழ் பண்பாட்டைக் காப்பதாக தம்பட்டம் அடிக்கும் அமைப்புகள் இதனை ஏன் கண்டு கொள்வதில்லை?

R.Gopi said...

பலே இன்பா.......

சூப்பர் ஜில் ஜில் போஸ்ட்... கூடவே ரசிக்க தக்க கவிதைகள்.......

இன்பாவுக்கு இன்னும் கல்யாணம் ஆகலியோ!!!...

Anonymous said...

IT IS VERY SAD THAT EVEN IDLY VADAI MUST FALL PREY TO THIS MASS HYSTERIA.IS IT NOT A CULTURAL DEVALUATION FOR A SOCIETY WHICH ABHORED EXHIBITIONISM. DO OUR COUNTRYMEN REMEMBER THE DAY OF 14 TH FEB 1931.WE ARE SO MUCH MARKET DRIVEN WE REMEMBER VALENTINES DAY AND CELEBRATE.ALL CHANNELS INCLUDING IDLY VADAI ARE DISCUSSING AN EVENT ALIEN TO OUR CULTURE. BUT ON THIS DATE IN 1931 IN THE MORNING TIME LEGENDARY BHAGAT SINGH, RAJGURU AND SUKHDEV WERE HANGED TO DEATH BUT TODAY WE DON'T REMEMBER THEIR NAMES. WE ONLY CELEBERATE VALENTINE DAY. THANK GOD THAT VALENTINE DAY DID NOT FALL ON OCTOBER 2ND OR ELSE MAHATAMA GANDHI WOULD HAVE MET THE SAME FATE. WHERE ARE OUR PATRIOTIC BHARATI MANIS WHO BRANDED THEMSELVES AS PATRIOTS JUST BECAUSE THEY COULD SING THE NATIONAL ANTHEM.
IDLI VADAI CAN DO ATLEAST THIS MUCH. PLEASE SALUTE THE SACRIFICE OF THESE GREAT HEROES,
JAI HIND.

Anonymous said...

nice one inba

ppage said...

காதலர் தின ஸ்பெஷல் பதிவு மிக அருமை. காதலின் மென்மையும் மேன்மையும் பிரதிபலித்து, தமிழை உயர்த்திய பதிவு.

நீண்ட நாட்களுக்கு பிறகு ரசித்து படித்தது. வாழ்த்துக்கள் இன்பா மற்றும் இட்லிவடை.

காதலை சிலாகித்து கவிதை எழுதுகிறவர்களிடம் ஒரே ஒரு பிரச்சனை உண்டு.

ஐய்யய்யோ... !!!!
இந்த பூ மட்டும் நகர்கிறதே
என
வண்ணத்துப்பூச்சி வருத்தப்பட்டது.

நல்ல தமிழ், உவமையை சொல்லி ஓங்கி நிற்கிறது ஹைக்கு!!!!.

என்றாலும் பெண்ணை மனுஷியாயும் பார்க்க வேண்டும்.

எழுத்துச் சித்தர் அதிரடியாய் ஒன்று சொல்லுவார். பிரசவ ஆஸ்பத்திரி போங்கள், அங்கே தெரிவது பெண் எனும் தெய்வம் ; தாய் வடிவில் என்பார். அங்கு சென்று பார்க்க எத்தனை நெஞ்சுரம் கொண்ட ஆணும் திணறிப் போவான்.

என்னைப் போல், அவளும் ஒரு சராசரி பெண் என பார்க்கும் தெளிவும் திடமும் இல்லையெனில் வாழ்க்கை நரகமாகும்.


காதலையும் மனித இயல்பையும் சரிவிகிதத்தில் கலக்கும் புத்திசாலித்தனம் வேண்டும்.

செய்தால் வாழ்வு சிறக்கும். எங்காவது ஒரு பக்கம் மட்டும் நின்று விட்டால் வாழ்வு போரடிக்கும்.

படுக்காளி

சீனு said...

//
அவள் கூந்தலுக்கு
மட்டும்...
இரண்டு பக்கமும்
பூக்கள்
//

எனக்கு புரிஞ்சிடுச்சு. கூந்தலை முன் பக்கம் போட்டுட்டாங்களாக்கும்.

அஞ்சா நஞ்சன் said...

//எனக்கு புரிஞ்சிடுச்சு. கூந்தலை முன் பக்கம் போட்டுட்டாங்களாக்கும்//

அப்பா தாங்க முடியலேடா சாமி

Anonymous said...

காதலாவது, கத்திரிக்காயாவது வெங்காயம்....

ஆர்வா said...

//அவள் கூந்தலுக்கு
மட்டும்...
இரண்டு பக்கமும்
பூக்கள்//
அட.. அட.. அட... அட்டகாசம் தல

Anonymous said...

நீங்கள் சொல்வது பாதி சரி. வாழ்க்கை துணையை அமெரிக்கா/படிப்பு/வேலை/அந்தஸ்து மட்டும் தீர்மானிக்க கூடாது.
அதே சமயம் கண்டதும் காதல் எல்லாம் கதைக்கு ஆகாது.

மேல் சொன்னவையுடன் குணம், குடும்ப பின்னணி எல்லாம் தெரிந்த பின் துணையை தேர்ந்து எடுக்க வேண்டும்.
உண்மையாக இருத்தல் வேண்டும். துணை உண்மையானவர் என்று நம்ப வேண்டும்.
ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.

அப்புறம், என்ன தான் காதல் கல்யாணம் பண்ணிகிட்டலும் வாழ்க்கை வெற்றியின் பிரதான ரகசியமே சகிப்பு தன்மை.
சில விசயங்களில் சகித்து தான் ஆக வேண்டும்.
நூறு சதம் உங்கள் மனதிற்கேற்ப துணை கிடைப்பது அரிது.

Anonymous said...

மெரினாவில் காதல் களியாட்டங்கள் பற்றி பலர் முகம் சுளித்து எழுதியுள்ளார்கள்.
கல்யாணம்தான் கட்டிக்காமல் இழுத்துக்கிட்டுப் (இசுத்துக்கிட்டு?)போவதை நமது பழந்தமிழர்கள் உடன்போக்கு என்று அழைத்தனர். சங்ககாலத்தில் இந்த உடன்போக்கு சர்வ சாதாரணமாக இருந்தது என்பதைக் சங்ககாலக் கவிஞர்கள் கண்டு களித்திருக்கிறார்கள்.
சங்ககாலப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் என்று கருதும் சிலபல உடன்போக்குகள் காதலர் தினம் கொண்டாடுவது எவ்வளவு பொருத்தம்!

DagiL said...

இ.வ.

தேடிப்பிடித்து இதை வெளியிட்டதற்கு நன்றி. ரா.கி.ரா ஒரு சகாப்தம். அவரது எழுத்தை நீண்ட நாள் கழித்து படித்ததில் மகிழ்ச்சி. கமலை எப்போதும் குறை சொல்வதே சிலருக்கு வேலை. இவ்வளவு புகழ் உச்சிக்கு போனபோதும், மற்றவர்களை போல மாலை வேளையில் பாட்டில் திறந்து மூச்சு முட்ட குடித்து சாய்ந்து போகும் கலைஞர்கள் நடுவில் ‘multi faceted talent’களோடு தானே ஒரு எழுத்தாளராகவும், எழுத்தாளர்களின் ரஸிகனாகவும் உருப்படியாக ஏதாவது செய்து கொண்டு வரும் கமலை இவர்கள் பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை. தூற்றாமல் இருந்தால் நல்லது.