பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, February 11, 2010

மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-2-2010

முனிக்கு இவ எழுதும் கடிதம்...

அன்புள்ள முனி,

நேற்று ஜெ சோனியா சந்திப்பிற்கு பிறகு ஜெயின் பேட்டியை போட்டுவிட்டு,
மாலையில் காங்கிரஸ் "எங்களுக்கும் திமுகவிற்கு" சுமூக உறவு இருக்கு என்று அறிக்கை விடுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதே மாதிரி அறிக்கை வந்தது.

அது அரசியல், ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சால்வா "சோனியா-ஜெயலலிதா சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்யவில்லை" என்றுஅறிக்கைவிடுவதைப் பார்த்தால் தேர்தல் கமிஷன் சுப்பிரமணிய சாமி மாதிரி ஆகிவிடுவாரோ என்று பயமாக இருக்கு. இவர் எதற்கு முந்திரிகொட்டை மாதிரி இந்த அறிக்கை விடுகிறார் ? இவரை பற்றி பழைய தேர்தல் கமிஷனர் எழுதிய 70+ பக்க கடிதம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதில் இவருக்கு இருந்த காங்கிரஸ் பக்தி பற்றி கேட்கவே வேண்டாம்.



தமிழ் ஹிந்துவில் தேசிகன் எழுதும் பக்தி தொடரில் பக்தி என்றால் அன்பு, காதல் என்று சொல்லியிருக்கார். அதை சிலர் படித்ததின் விளைவு இப்ப வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் யாதவபுரியில் வேலண்டைன்ஸ் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் வந்துவிட்டது. இது வழக்கமாக கோயிலாக இல்லாமல், காதல் கோயிலாக இருக்குமாம். கிருஷ்ணர் மாதிரி பலரை காதலிக்காமல் இருக்கும் வரை ஓ.கே. இனிமே வருடா வருடம் வரும் காதலர் தினத்துக்கு இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தி என்றால் காதல் தானே ! இனிமேல் சினிமா காதல் பாடல்களில் ஹீரோ ஹீரோயின் இங்கே டான்ஸ் ஆட ஆரம்பிப்பார்கள்.

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக லோக்கல் சிவசேனா மாதிரி கட்சிகாரர்கள், இந்த மாதிரி காதல் கோயிலுக்கு என்ன செய்யவார்கள் ? எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது, ஆதரவும் தெவிக்க முடியாது. இவர்கள் கலைஞரிடம் தான் டியூஷன் எடுக்க வேண்டும்.



நேற்று கலைஞருக்கு ஒரு விழா. என்ன விழாவா இருக்கும் ? அதே தான் விருது விழா! "திருக்குறள் பேரொளி' விருது வழங்கப்பட்டது அந்த விழாவில் கலைஞர் "நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை,​ ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை" என்று சொல்லியிருக்கார். எப்படி பேசுவது என்று இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ சொல்லுகிறார் ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை.



விளையாடு வீரர்கள் செய்வதும் பல சமயம் புரிவதில்லை. இங்கிலாந்து மற்றும் செல்சி அணிகளின் கேப்டனான 29 வயது ஜான் டெர்ரி இங்கிலாந்த இளைஞர்களின் ரோல்மாடல். ஆனால் இவர், சக வீரரின் காதலியுடன் தொடர்பு வைத்த விவகாரம் தொடர்பாக இவர் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. டைகர் உட்ஸை தொடர்ந்து மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டாக இது இருக்கிறது.



கொஞ்சம் சீரியஸான டைகர் பற்றி பேசலாம். இந்தியாவின் தேசிய விலங்கினம் புலி. ஸ்கூல் பசங்க அப்படி தான் படிக்கிறார்கள். உலகிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட, ஆபத்தான விலங்கினம் புலி. நான் சொல்லுவது பெங்கால் டைகர் பற்றி. புலியின் உயரம், நீளம் யாருக்காவது தெரியுமா ? 4 அடி உயரம், 10 அடி நீளம். புலிகள் அழிந்துவிட்டதாக தற்போது பல பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி போட்டார்கள், நிஜ புலிகளுக்கும் அதே கதி தான். இந்தியாவில் 1970 களில் சுமார் 40,000 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் இன்றைய தொகை வெறும் 3642 தான். அதை விட குறைவாக கூட இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். யார் காரணம் ? நாம் தான்.



அது மட்டும் இல்லை, இன்று உலகிலுள்ள மொத்தம் 16 புலிவகைகளில் இன்று எஞ்சியிருப்பது வெறும் 3 தான். ஜாவா, மற்றும் பாலி தீவுகளின் புலிகள் இனம் 1972 லேயே முற்றிலுமாக அழிந்து விட்ட்து. தெற்கு சீனாவின் புலிகள் இனத்தின் தற்போதைய எண்ணிக்கை வெறும் 26. சீனாவில் மொத்தமே 50 புலிகளுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற சைபீரிய வெள்ளைப் புலிகள் இனமும் அநேகமாக அழிந்தே போய்விட்டது. மீதமிருப்பது ஒன்றோ இரண்டோதான்.



ஏன் இந்த மாதிரி ஆகிறது என்று பார்த்தால் அயல்நாட்டு சந்தைகளில் புலிகளின் தோல், எலும்பிற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இப்படியே போய்கொண்டு இருந்தால் புலி என்றால் கூகிள் இமேஜில் தேடி பார்க்க வேண்டிய நிலமை வரும்.

சென்ற வாரம் துக்ளகில் வந்த தலையங்கத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது ஆனால் பலரின் மனதில் உள்ளதை தைரியமாக எழுதியிருக்கார் சோ. சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுவாகத் தமிழகப் பத்திரிகைகளிடம் ஒரு மாதிரியான விரக்தியைத் தோற்றுவித்திருக்கிறது. ராஜபக்ஷவைத் தோற்கடிக்க, எதிர்க் கட்சிகள் (தமிழ்க் கட்சியும், தீவிர சிங்களக் கட்சியும் உட்பட) இணைந்து, முன்னாள் ராணுவ தளபதியை பொது வேட்பாளராக நிறுத்திய நேரத்திலிருந்து – தமிழகப் பத்திரிகைகளிடையே ஒரு பரபரப்பு உண்டானது. இதுவரை இலங்கைத் தேர்தலைப் பற்றி, இங்கு காணப்படாத உற்சாகம் இப்போது தோன்றியது.

விடுதலைப் புலிகளை வீழ்த்தி, அவர்களுடைய தலைவரின் வாழ்வையும் முடித்துவைத்த ஆட்சியின் தலைவர் என்பதால், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களுக்கும், ஈழப் பிரச்சாரகர்களுக்கும், தமிழ் ‘இன’ உணர்வாளர்களுக்கும், ராஜபக்ஷ மீது ஒரு விசேஷ வெறுப்பு உண்டாகி விட்டது.

இவர்களில் பலர் தமிழ்ப் பத்திரிகை உலகத் தொடர்புகள் மிக்கவர்கள்; இதனால் இவர்களுடைய வெறுப்பு, பத்திரிகை உலகிற்கும் பரவியது. தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு, இருவகைப் பட்டது.

ஒன்று – உண்மையிலேயே, ராஜபக்ஷ தமிழர் விரோதி என்று நம்பிய வகை; மற்றொன்று ராஜபக்ஷவை மிக மோசமாகச் சித்திரிப்பது பத்திரிகை வியாபாரத்திற்கு உதவும் என்று நம்பிய வகை. இப்படி தமிழ்ப் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஷ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும்,அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும்(‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது.


சோவின் insight வழக்கம் போல வியக்கவைக்கிறது. விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கை கூட வாரம் தவராமல் இந்த கூத்தை செய்துவந்ததை நாம் அட்டைபட கட்டுரைகளில் பார்த்தோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதைவிட வேற ஒரு insight இருக்கிறது அது டாக்டர் ராமதாஸ் சொன்ன வசனம் "வன்னியர்களிடம் போதுமான ஒற்றுமையிலாததால் தான் கேவலம் திமுகவுடனும், ஆதிமுகவுடனும் வலியச் சென்று கூட்டணி வைக்க வேண்டியிருக்கிறது" என்கிறார். நமக்கு ஒரு தவறான எண்ணம் இருக்கிறது, டாக்டருக்கு வியாதி வராது என்ற நினைப்பு தப்பு. வரும் சில சமயம் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு நல்ல டாக்டராக பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

டாக்டரிடம் போக முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கு நித்ய தியானம். இது சுவாமி நித்யானந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒன்று. வேலை இல்லாதவர்கள் இதை பற்றிய விவரங்களை தேடிப்பார்கலாம் கிடைத்தாலும் கிடைக்கும்.

தமிழ் சினிமாக்களில் வேலைக்காரிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? தமிழ் சினிமாக்களில் வரும் டீக்கடைக் காட்சிகளில் நடிக்கும் மலையாள சேச்சிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் ? இதற்காக மலையாள இனமானவர்கள் தினம் ஒரு போராட்டமா நட்த்தி வருகின்றனர் ? ஈழ இனமானப் புயல் சீமான் ஒருமுறை, இந்திய இலங்கை கிரிக்கெட் போட்ட பார்ப்பவர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை எனக் கூறினாரே ? தமிழகத்தில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் அனைவரும் அப்படியென்றால், தமிழக மக்கள் தொகையில் அநேகரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை என்று தானே அர்த்தம் ? இது தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா ? இனமானத் தமிழர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?

தற்போது இலங்கை விஷயங்கள் முடிந்துவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. அக்குறையை சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயராம் நிவர்த்தி செய்து சோம்பிக் கிடந்த இனமானப் பற்றாளர்களுக்கு பெரிய வேலை கொடுத்தார். என்ன வேலை ? ஜெயராமுக்குக் கண்டனம், போஸ்டர் கிழித்தல் என்று வழக்கம் போல் துவங்கி அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை எறிந்துள்ளார்கள். தமிழ் பற்றை எப்படி பற்ற வைப்பது ? இப்படி தான்.

ஜெயராம் சொன்னது தப்பு தான், ஆனால் அதே சமயம் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டார், அதை முதலவரும் ஏற்றுக்கொண்டு விட்டார். தீர்ந்தது பிரச்சனை! ஆனால் இவர்களுக்கு பிழைப்பு நடத்த வேண்டுமே அதனால் அதை ஊதி ஊதி பெரிது படுத்துகிறார்கள்.. வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைத்தால் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்று சொல்ல மூச்சு இருக்காது. இது இரண்டு பேருக்கும் பொருந்தும்!



சரி கொஞ்சம் அரசியல் பேசலாம். அடுத்த பிரதமர் யார் என்று ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டு இருக்கு. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு மன்மோகன் சிங் ரிடையர் ஆக போகிறதாக பேச்சு. அதற்கு பிறகு அந்த பொறுப்புக்கு ப.சிதம்பரம் வர போகிறாராம். அதன் பிறகு வேற யார் ராகுல் காந்தி தான். அப்படி வந்தால் தமிழகத்திலிருந்து முதல் பிரதமர் இவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

அது என்னவோ தெரியவில்லை ராகுல் காந்தி என்றாலே வட இந்திய மீடியாக்கள் கொண்டாடுகின்றன. சென்ற வாரம் ராகுல் காந்தி மும்பைக்கு திடீர் விஜயம் செய்தார். NDTV அவரது விஜயத்தை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்தது. வந்து என்ன சாதித்தார் என்று தெரியவில்லை. எலெக்ட்ரிக் ரயிலில் சென்று ஸ்டண்ட் அடித்ததுதான் மிச்சம். மும்பை யாருக்கு சொந்தம் என்று சேனாக்கள் அடிதடி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்றும், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாதுகாப்பளிக்கும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இதை பாஜகவும் வழி மொழிந்தது. ஆனால் மீடியாக்கள் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், பாஜக இப்படி சொல்வதால் சிவசேனாவுடனான உறவு என்னாகும் என்று பேச ஆரம்பித்தது. பாஜக ஒரு நல்ல விஷயத்தைப் பேசிய பிறகு காங்கிரஸ் சும்மா இருந்தால் என்னாவது?? ராகுலும் தன் பங்கிற்கு மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று சொன்னார். இனிமே தமிழ் நாடு எல்லோருக்கும் சொந்தம் என்றால் ரயில் போகலாம். ரொம்ப நேரம் போனால் அடுத்த மாநிலத்துக்கு சென்றுவிடுவோம்.

யார் எங்கே போனால் என்ன ? சோ எங்கே போயிருக்கார் தெரியுமா ? நேற்று ஜெயலலிதாவை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியிருக்கார் சோ. எதற்கு இந்த சந்திப்பு என்று பலர் பல காரணம் சொல்லுகிறார்கள். சோ சந்தித்தால் கூட்டணி உருவாகலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள், எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் சோவிடம் கேட்டதற்கு "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்கிறார். ஏன் ஜெயலலிதாவிற்கு சோ திடீர் என்று மரியாதை கொடுக்க வேண்டும் ? இது தான் மற்றவர்களை டென்ஷாக்கும்.

ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று என்று சொல்கிறவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். "கட்சிக்காக உழைத்ததால் பழுதாகி அகற்றப்பட்ட என் சிறுநீரகத்தை நல்ல நிலையில் முலாயம் சிங் யாதவ் திரும்பிக் கொடுத்தால் நான் ராஜினாமா செய்யத் தயார்" என்று கூறியிருக்கார்.

Politics is a different 'Ball' game altogether என்று சும்மாவா சொன்னார்கள்

ஓவியர் எஸ்.ராஜம் பற்றி எந்த பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை, கல்கி்யில் மட்டும் இவரை பற்றி நான்கு பக்கத்துக்கு கட்டுரை போட்டிருக்கார்கள். வாழ்க!

இப்படிக்கு,

இவ

அசல் பார்த்துவீட்டீர்களா என்று ஒருவர் என்னை சாட்டில் கேட்டார். அசல் தங்கம்தானான்னு தங்கத்தை உரசி பார்க்கலாம்; அசல் சிங்கம்தானான்னு சிங்கத்தை உரசிப் பார்க்கமுடியுமா ? இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் அஜித் ரசிகர் :-)

28 Comments:

sreeja said...

மறுபடியும் ஒரு கலக்கல் கடிதம்.

Ram said...

இவ,

ஹிந்துவில் போன வெள்ளிக்கிழமை ஐந்து கட்டுரைகள் ராஜத்தைப் பற்றி வந்தன.

வரும் அமுதசுரபி இதழில் ஒரு அஞ்சலி கட்டுரையும், அமிர்தாவில் அவர் பாடியிருக்கும் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகள் ஆல்பத்தைப் பற்றிய கட்டுரையும் வரவிருக்கின்றன.

லலிதா ராம்
http://carnaticmusicreview.wordpress.com/

ரிஷபன்Meena said...

எல்லாத்தையும் விட நகைச்சுவை பண்றது தான் ரொம்பக் கஷ்டம் கஷ்டம் -னு சொல்வாங்களே , அது நிஜம் தான் இப்ப ஜெயராம் விஷயத்திலருந்து தெரியுது

Anonymous said...

குன்றக்குடி மடாதிபதி பொன்னம்பல அடிகளாரின் திருக்கரத்திலிருந்து முதல்வர் விருது பெற்றிருக்கிறார். வாழ்த்துவோமாக!
இந்தக் குன்றக்குடித் திருவண்ணாமலை ஆதினத்துக்கு அன்றைய குன்றக்குடி அடிகளார் மடாதிபதியாக இருந்த காலம். பலருக்கு மறந்திருக்கும். அந்த மடாலயம் தமிழ்நாட்டுச் சட்டசபை விவாதத்தில் அடிபட்டதும் பலருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் எம்.எல்.ஏ ஆக இருந்தபோது ஒரு கேள்வி கேட்டார்:
“குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்திற்குள் கஞ்சாசெடி பயிரிடப்படுவதாகச் செய்தி வருகிறது. இது அரசாங்கத்துக்குத் தெரியுமா?”
-நல்ல பாரம்பரியம். திருவள்ளுவர் உள்ளம் உவகைபொங்க முதல்வரை ஆசீர்வதித்திருப்பார்.
அ. நாமதேயன்

Anonymous said...

//கலைஞர் "நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை,​ ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை" என்று சொல்லியிருக்கார்//

அதெல்லாம் சும்மா. வள்ளுவர் ஒரு கருத்தில் குறிப்பிட, இவர்கள் இஷ்டத்திற்கு அதில் என்ன என்னமோ ஏற்றிக் கூறியிருக்கிறார்கள்.

உதாரணம் - குழந்தை உரையிலிருந்து...

”‘தெய்வம்’ என்பது கடவுளைக் குறிக்கவில்லை. அது ‘தேய்’ என்ற வேர்ச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். அது போலவே ‘வானவர்’ என்பதும். அது உயர்ந்த இடத்தில் உள்ளோர், அதாவது இமயம் போன்ற பகுதியில் உள்ளோரைக் குறிக்கின்றது. வெளிநாட்டில் உள்ளவரை நாம் மேல் நாட்டினர் என்று குறிப்பது போல்.”

எவ்வளவு அற்புதமான பொருள் இல்லையா?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்தக் குறளுக்குக் கலைஞரின் உரை -

”வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்”

யார் அந்தத் தலையானவன் என்பது எனக்குப் புரியவில்லை.

இந்தக் குறளுக்கு மு.வ. கூறும் பொருள் -

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

சாலமன் பாப்பையா உரை -

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

இப்போது புரிகிறதா, யார் எதை திணித்திருக்கிறார்கள் என்பது.

இப்படி குழந்தை உரை, கலைஞர் உரை என்றெல்லாம் படித்ததில் எனக்கு திருக்குறளே மறந்து போய் விட்டது.

- குறள் பித்தன், கும்பகோணம்

பெசொவி said...

//எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது, ஆதரவும் தெவிக்க முடியாது. இவர்கள் கலைஞரிடம் தான் டியூஷன் எடுக்க வேண்டும்.//

//இனிமேல் சினிமா காதல் பாடல்களில் ஹீரோ ஹீரோயின் இங்கே டான்ஸ் ஆட ஆரம்பிப்பார்கள்.
//
//இனிமே தமிழ் நாடு எல்லோருக்கும் சொந்தம் என்றால் ரயில் போகலாம். ரொம்ப நேரம் போனால் அடுத்த மாநிலத்துக்கு சென்றுவிடுவோம்//

இட்லிவடையின் வழக்கமான ஸ்டைல். வாழ்த்துகள்!

//சோவின் insight வழக்கம் போல வியக்கவைக்கிறது.//

அவருடைய insight மட்டுமல்ல.... foresight கூட அருமைதான்.

//இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் அஜித் ரசிகன்//

திரைப்பட விழாவில் அவருடைய பேச்சைப் படித்தபின் நானும்கூட அவருடைய தைரியத்துக்கு ரசிகன்தான்.

Avinash Srinivasan said...

படிச்சி முடிக்கவே டைம் பத்தவில்லை... நீர் எப்படி ஐயா எழுதுகிறீர்?

R.Gopi said...

//நேற்று கலைஞருக்கு ஒரு விழா. என்ன விழாவா இருக்கும் ? அதே தான் விருது விழா! "திருக்குறள் பேரொளி' விருது வழங்கப்பட்டது அந்த விழாவில் கலைஞர் "நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை,​ ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை" என்று சொல்லியிருக்கார். எப்படி பேசுவது என்று இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ சொல்லுகிறார் ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை.//

*********

நிருபர் : சாய்பாபா உங்களை வந்து பார்த்தாரே... என்ன பேசினீர்கள்..

கலைஞர் : அவர் அரசியல் பேசவில்லை... நான் ஆன்மீகம் பேசவில்லை...

//ஈழ இனமானப் புயல் சீமான் ஒருமுறை, இந்திய இலங்கை கிரிக்கெட் போட்ட பார்ப்பவர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை எனக் கூறினாரே ? //

அவன் பொழப்பு ஓடணுமே... இப்படி எதையாவது சொன்னா தானே ஓடும்.. நாம இதை பத்தி ஏதாவது சொன்னா, நாம எல்லாம் தமிழின துரோகின்னு “முத்திரை” குத்தப்படுவோம்...சொத்தைராஜ் ரஜினிய பத்தி எப்போவும் சொல்வது போல்தான் இதுவும்...

கானகம் said...

//
Avinash Srinivasan said...
படிச்சி முடிக்கவே டைம் பத்தவில்லை... நீர் எப்படி ஐயா எழுதுகிறீர்?//

Please visit www.jeyamohan.in

for next one week..

முனி கடிதம் ரொம்ப நல்லா இருந்தது.. பல வாரங்களுக்குப் பிறகு.

வலைஞன் said...

திரு கருணாநிதி கூறுவது பச்சை புளுகு
திருக்குறளுக்கு அவர் இயற்றிய உரையில் நாத்திகத்தை திணித்துள்ளார்.
கடவுள் என்ற பொருள் வரும் வார்த்தைக்கு எல்லாம் இவர் மனம் போனபடி அ(ன)ர்த்தம் எழுதியுள்ளார்.
இருப்பினும் இதை பற்றி கவலைப்பட தேவையில்லை.இவர் காலத்திற்கு பிறகு இந்த நூலை ஒரு புழு பூச்சி கூட தொடாது!

கேரளமக்கள் கொதித்து எழுந்தால் விவேக்கும் அழுது அவர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டியிருக்கும்.
ஒரு படத்தில் அவர் ஷகிலா மற்றும் வெ.மூர்த்தி படுத்தும் பாடு எருமை விவகாரத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடும்

சீனு said...

//நேற்று கலைஞருக்கு ஒரு விழா.//

பிழை திருத்தம். "நேற்றும்" என்று வர வேண்டும்.

//இப்படி தமிழ்ப் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஷ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும்,அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும்(‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது.//

அதில் விகடனும் ஒன்று. இருந்தாலும், இங்குள்ள பத்திரிகைகளில் ஈழம் பற்றி தெரியவைத்து அவர்களுக்கு ஆதரவு தர வைத்ததில் விகடனுக்கு பங்கு உண்டு. அதற்கே ஒரு சல்யூட் அடிக்கலாம்.

ஹிந்து பற்றி தெரியும். அது நேரடியாக ராஜ'ஃபக்'சேவை தூக்கி வைக்கும் பத்திரிகை. மானங்கெட்டவங்க.

//இது தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா ? இனமானத் தமிழர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?//

அப்படி யாராவது இருக்கிறார்களா என்ன? தேடினாலும் கிடைக்காது.

//இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் அஜித் ரசிகர் :-)//

நானும் தான்...

//பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இந்தக் குறளுக்குக் கலைஞரின் உரை -

”வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்”

யார் அந்தத் தலையானவன் என்பது எனக்குப் புரியவில்லை.//

என்னங்க இது கூட புரியவில்லையா? அவர் தன்னை தான் சொல்லியிருக்கார். அவர் அந்த உரையை எழுதினது உடன்பிறப்புகளுக்கு. நீங்க அந்த உரை உங்களுக்கு என்று நினைத்தால் அதுக்கு அவரா பொறுப்பு?

கானகம் said...

http://thatstamil.oneindia.in/movies/news/2010/02/yet-nother-felicitation-karunanidhi.html

கலைஞருக்கு பாராட்டுன்னாலே பிடிக்கிறதில்லைன்னு சொன்னா யார் நம்புறாங்க.. ஒரு வாரத்திலே மூணே மூணு பாராட்டு விழாதான்.. நாலு நாள் ஒன்னும் கிடையாது.. இதைவிட எப்படி எளிமையா இருக்குறது?

டன்மானடமிழன் said...

ஜெயராம் என்பதால்
தப்பித்தார் சைமன் (சீமான்)

இதுவே ஒரு காங்கிரஸ்
எம்.எல்.ஏ வீட்டை தாங்கியிருந்தால்

கலைஞரே
காய் அடித்திருப்பார் இவருக்கு

கௌதமன் said...

இ வ கடிதத்தில் எல்லா சமீபத்திய செய்திகளும் உள்ளன. தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தைத் திரும்பப் பெற்ற ஏழை விவசாயி பற்றி ஏதேனும் வந்திருக்கும் என்று நினைத்தேன். காணோமே! ஏன்?

சைவகொத்துப்பரோட்டா said...

//யாதவபுரியில் வேலண்டைன்ஸ் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் வந்துவிட்டது.//

இன்னைக்கு நான் லீவு :))

ஆசிர் said...

இவர்கள் கலைஞரிடம் தான் டியூஷன் எடுக்க வேண்டும்.


சில சமயம் உம்மிடமும் டியூஷன் எடுக்க வேண்டியது இருக்கிறது

Saikrishna said...

//இ வ கடிதத்தில் எல்லா சமீபத்திய செய்திகளும் உள்ளன. தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தைத் திரும்பப் பெற்ற ஏழை விவசாயி பற்றி ஏதேனும் வந்திருக்கும் என்று நினைத்தேன். காணோமே! ஏன்?//

May be IV is planning for a seperate letter to Muni for this issue. :-)

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

"தன்னுடைய இரண்டு ஏக்கர் நிலத்தைத் திரும்பப் பெற்ற ஏழை விவசாயி பற்றி ஏதேனும் வந்திருக்கும் என்று நினைத்தேன். காணோமே! ஏன்"

அதெல்லம் பொழப்புக்கு ஆகுமா ஸ்வாமின்?
ஏதாவது கலைஞ்ரை கிண்லடலடித்தோ இல்ல சினிமா நியுஸோ போட்டாத்தானே கல்லா கட்டமுடியும்?

Anonymous said...

Hi Friends

If you know anyone who has met with a fire accident or people who are born with problems / disabilities such as jointed ear, nose and mouth, please note they can avail free plastic surgery at Pasam Hospital, KODAIKANAL from March 23rd to 4th April 2010 by German Doctors.

Every thing is free. Contact Nos. 04542 - 240668, 245732



Heart Surgery Free Of Cost for Children (0-10) – Shri Satya Sai Institute, Banglore – Ph : 080 28411500


No harm in forwarding.. Some person will be benefitted somewhere..

Anonymous said...

கஞ்சாசெடி ok, காஞ்சிநெடி not ok.

சாதாரண கிராமத்தான் said...

Flash News: இன்று கலைஞருக்கு எந்த பாராட்டு விழாவும் இல்லை.
பாராட்டு விழா இல்லாத சமயத்தில் 100 பாராட்டு விழா நடந்ததற்கு பாராட்டு விழா நடத்த திட்டம்.

sakthivenkat said...

//Flash News: இன்று கலைஞருக்கு எந்த பாராட்டு விழாவும் இல்லை.
பாராட்டு விழா இல்லாத சமயத்தில் 100 பாராட்டு விழா நடந்ததற்கு பாராட்டு விழா//

’’பாராட்டு விழாக்களின் பேரரசு’’
‘’ விருதுகளின் வித்தகர்’’
இது போன்ற பட்டங்களை வழங்கி அதுக்காக ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணுங்க.
அதோட கிரிக்கெட் மேட்ச்-ல கொடுக்கற -மேன் அப் த மேட்ச்..ஒன்னுதான் இதுவரை கலைஞர் வாங்காதது. அதை ஏன் இன்னும் அவருக்கு கொடுக்க்லை என்று கிரிக்கெட் வாரியத்துக்கு ஒரு கடுதாசி எழுதி கேட்டுடுங்க.

Anonymous said...

IV
WHY YOU REMOVED THE COMMENT WHCH WAS THERE YESTERDAY?
NO KARTHU SUTHATHIRAM?

Don said...

The post leaves me wondering what was Cho's 'insight' and what did Jayaram say? . Coming to Rahul's mumbai visit, for your question "What did he achieve?", my answer would be, "He has in a silent manner confronted Shiv Sena". He has in a peaceful way reminded Sena, who the boss is. A large part of mumbai and media, called Rahul as a hero for confronting Shiv Sena. Only he can! if not for him who else can?. Earlier he was ignored as a dumb guy ,but his recent speeches are frank and appealing. It's just a matter of time, he becomes a crowd puller. He's learning it and mumbai visit was as good as a intro scene of a hero using his gandhigiri to tease/bully the villian seeking to divide the country. Is Rahul India's Obama?

Don said...

"கிருஷ்ணர் மாதிரி பலரை காதலிக்காமல் இருக்கும் வரை ஓ.கே."

I strongly condemn this. I'm not going to educate you on the holiness of Krishna but humbly request you to exclude God from the commentary. Our tiny brains cannot comprehend his reality.

Anonymous said...

what did jayaram say? what is this controversy?

Anonymous said...

In Karuananidhi T.V. advertisement on the above function, they tell all the actors names - Rajini,Kamal, Vijay, Vikram, Soorya. They purposefully avoided Ajith.

Did you noticed that?

- Mayavarathaan....