ராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.
‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவையும்.
* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்! அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.
* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.
* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்!)
* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.
* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.
* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.
* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.
* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ மறைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.
* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வைத்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.
* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.
* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.
* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவரது உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்!
* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.
* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்!
இனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.
* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அதைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.
* அடுத்து நான் கேட்டது - ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால் வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் - என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.
* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.
* நான் கேட்ட இன்னொரு கேள்வி - சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு! அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.
இப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது!
- ஹரன் பிரசன்னா
தொடர்புடைய பதிவு
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, February 28, 2010
ரகோத்தமனுடன் ஒருநாள் - ஹரன்பிரசன்னா
Posted by IdlyVadai at 2/28/2010 06:00:00 PM 15 comments
Labels: அரசியல், பதிப்பகம், புத்தகம், பேட்டி, ஹரன்பிரசன்னா
சன்டேனா இரண்டு (28-2-10) செய்திவிமர்சனம்
இந்த வாரம் கொஞ்சம் ஆன்மிகம் பேசுவோம்.
செய்தி # 1
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது எவ்வளவு உண்மை. சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறை. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் ஆகியோர் சமய குரவர்கள் என்று அழைக்க படுகிறார்கள். திருவாசகம் தந்த மாணிக்கவாசகர் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்கிறது மாணிக்கவாசகர் அகவல்.சமய குரவர்களின் காலமும் இதில் குறிப்பிடபட்டு உள்ளது.
"சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாதவுரார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே".
என்கிறது அகவல். வாதவுரார் என்பது மாணிக்கவாசகரின் இயற்பெயர்.
ஓதுவார்கள் திருவாசகம் ஒலிக்க, மனதை தியான நிலைக்கு அழைத்து செல்லும் மணியோசைகள் முழங்க, சிதம்பரம் நடராஜர் சன்னதி முன் நின்று இருந்தேன். நீண்ட நாட்கள் ஆகிவிட்டது கோவிலுக்கு வந்து.
பல நூற்றாண்டுகளாக தீட்சிதர்கள் எனப்படும் தில்லைவாழ் அந்தணர்களிடம் இருந்து நடராஜர் கோவிலின் நிர்வாக உரிமை அரசு வசம் போய்விட்டதாக சொன்னாலும், பூஜை மற்றும் பள்ளியறையின் கட்டுப்பாடு இன்னும் தீட்சிதர்களிடமே இருக்கிறது. நடராஜர் கோவில் என்பது அவர்களின் வாழ்க்கை. உயிர்மூச்சு. இந்த நடராஜர் கோவில் காரியங்களை அவர்களை தவிர வேறு யாராலும் முறையாக செய்ய இயலாது என்பது என் கருத்து.
நிற்க. யாதும் ஊரே, யாவரும் கேளிர், இறைவன் எங்கும் இருக்கிறான் என்றெல்லாம் பேசினாலும், ஒரு சிறிய இடைவேளைக்கு பின் சொந்த ஊரில் காலடி எடுத்து வைக்கும் போது, ஒரு இனம் புரியாத சந்தோஷம் வருவதாக உணருகிறேன். நாடுகள், பல கோவில்கள் போனாலும், இந்த கோவிலில், நடராஜர் சன்னதியில் எனக்கு கிடைக்கும் நிம்மதியும், பரவசமும் வேறு எங்கும் கிடைக்கவில்லை என்பது அனுபவத்தில் நான் கண்ட உண்மை.
இதற்க்கான காரணத்தை, மிக அற்புதமாக விளக்கி இருக்கிறார் மறைந்த எழுத்தாளர் திரு. சுஜாதா அவர்கள்.
அவரது சொந்த ஊரான ஸ்ரீரங்கத்தில் ரங்கநாத பெருமாளை ஒவ்வொரு முறை சேவிக்கும் போதும், இத்தைகைய உணர்வு வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
யாதும் ஊரே என்றாலும், சொந்த ஊர் ஏன் நம்மை நெகிழ வைக்கிறது? பிறப்பனுவிலையே சொந்த ஊர், மொழி உணர்வு வந்து விடுகிறதா? போன்ற கேள்விகளுக்கு சுஜாதா தந்த விளக்கம்,
"இந்த பெருமாளை சேவிக்கும்போது, நாம் தாய், தந்தை, பாட்டனார்,முப்பாட்டனர்களை இந்த பெருமாள் மூலம் நாம் பார்க்கிறோம்.
அவர்கள் பலப்பல வருடங்களாக இந்த பெருமாளின் முக விலாசத்தை பார்த்து பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.இவன் பாதங்களை சென்று அடைந்து இருக்கிறார்கள். நம் வாழ்வுக்கு இடைவெளி அற்ற தொடர்பை இவனே ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறான்".
ஸ்ரீரங்கம் பெருமாளை சேவிக்கும் போது, அந்த திவ்விய ரூபத்தில் தன் தாய் - தந்தையரை உணர்வதாக சுஜாதா கூறுகிறார்.
எத்தனை அழகான, நுட்பமான விளக்கம். நானும் பிறந்து,வளர்ந்த ஊரில், ஸ்ரீ நடராஜ பெருமான் சந்நிதியில், சூட்சுமமாக என் முன்னோர்களை தரிசிப்பதாக உணருகிறேன். செய்தி # 2
"கல்யாணத்துக்கு பெண் தேடறிங்களா, இன்பா. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு போங்கோ. சுவாமி முன்னாடி அமர்ந்து, இதில் இருக்கும் சுலோகங்களை படிங்கோ. சீக்கிரம் நல்ல பெண் கிடைப்பா " என்று எனக்கு நன்கு தெரிந்த ஒரு பெண்மணி சொன்னார். அவர் ஒரு வழக்கறிஞரும் கூட.
அவ்வாறு சொல்லி, அவர் எனக்கு தந்த புத்தகம் "ஹனுமான் சாலிசா".
"ஸ்ரீ குரு சரந ஸரோஜ ரஜ நிஜ மனு முகுரு ஸுதாரி
பரநஉ ரகுபர பிமல ஜஸு ஜோ தாயகு பல சாரி
புத்திஹீந தநு ஜாநிகே. ஸுமிரௌம் பவந குமார
பல புதி பித்யா தேஹு மோஹி ஹரஹீ கலேஸ பிகார "
என தொடங்குகிறது ஹனுமான் சாலிசா. இந்த வரிகளின் அர்த்தம், ஸ்ரீ குருவின் பாதாரவிந்தத்தில் இருக்கும் மகரந்த பொடிகளால் என் மனம் என்ற கண்ணாடியை தூய்மை ஆக்கி தர்ம அர்த்த காம மோக்ஷ புருஷார்த்தங்களைக் கொடுக்கும் என்பதாக படித்தேன். (பார்க்க :http://meerambika.blogspot.com/2007/03/intuition-2-1-2.html).
இதை இயற்றியவர் ஸ்ரீ துளசி தாசர் என்னும் ஆஞ்சநேய ஸ்வாமியின் உபாஸகர். இது ஒரு ஆஞ்சிநேயர் ஸ்துதி என்று கூறாமல் 'ஸித்த க்ரந்தம்' என்று அழைக்கிறார்கள் சமஸ்கிரதத்தில்.
ஹனுமான் சாலிசாவை காலையும், மாலையும் முழு நம்பிக்கையுடன் அனுமார் சந்நிதியில் அல்லது அவரது திருவுருவ படத்திற்கு முன்னால் சொன்னால் எல்லாவித காரியங்களும் நல்லவிதமாக நடக்கும், தடைகள் நீங்கும் என்று நான் கண்டு இருக்கிறேன் என்று சொன்னார் அவர்.
ஆனால், அந்த புத்தகத்தை,சுலோகங்களை நான் முழுமையாக படிக்கவில்லை. சிறிது நேரம் புரட்டிவிட்டு, மூடிவிட்டேன். அதன் பின், ஒரு சனிக்கிழமையில் என்னை சந்தித்த அந்த பெண்மணி, "நீங்க ஹனுமான் சாலிசாவை திறந்து கூட பார்க்கலைன்னு நினைக்கிறேன் " என்றார் பளிச்சென்று. நான் ஆம் என்று தலை ஆட்டியபோது, உடனே நங்கநல்லூர் கோவிலுக்கு அழைத்து சென்று, ஸ்ரீ அனுமார் சன்னதி முன்னர், ஹனுமான் சாலிசாவை படிக்க வைத்தார். அது நடந்த சில மாதங்களுக்கு பின், தற்போது, எனக்கு பெண் கிடைத்து விட்டார். ஹனுமான் சாலிசா படித்த பின், இப்படி எனக்கு நேர்ந்து இருக்கிறது.
நமக்கும் மேல ஒரு சக்தி இருக்கிறது என்பதை பல சமயங்களில், நம் அன்றாட வாழ்க்கை உணர்த்தி வருவதை, நீங்கள் உணர்ந்து இருக்கிறிர்களா நண்பர்களே?
(நன்றி, இனி அடுத்த வாரம்).
-இன்பா
Posted by IdlyVadai at 2/28/2010 07:00:00 AM 18 comments
Labels: ஆன்மிகம், இன்பா, செய்திவிமர்சனம்
Saturday, February 27, 2010
விண்ணைத் தாண்டி வருவாயா - FIR
முன்குறிப்பு: இட்லிவடை, 'முப்பது நாட்களில்' புத்தகம் எதுவும் படிக்க வேண்டிய அவசியம் இல்லாததால், உடனே எழுதி அனுப்புகிறேன். (எவ்வளவு அடிச்சாலும்...நான் ரொம்ப நல்லவ!!!)
Jsri, நான் இட்லிவடை மாதிரி எல்லாம் இல்லை, உண்மையில் படம் பார்த்து விட்டு தான் எழுதுகிறேன். அப்புறம் இந்த படத்தில் டப்பிங் மிக அருமை.
முக்கிய குறிப்பு:
"காதல், கவிதை போன்ற வாத்தைகளை கேட்ட மாத்திரத்தில் "...ஐயோ சாமி ஆள விடுங்க" என்று ஓடுபவர்கள், இந்த படத்தை வெறுக்க கூடும்.
அதையும் விட முக்கியமாக வயசானவர்களுக்கும் இந்த படம் பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.
கதை: 'விண்ணை தாண்டி வருவாயா' என்ற தலைப்பையும், "ஒரு நாள் சிரித்தேன், மறு நாள் வெறுத்தேன், மன்னிப்பாயா?" என்ற பாடல் வரிகளையும் கோர்த்து, நீங்கள் ஒரு கதையை ஊகம் பண்ணி வைத்து இருந்தீர்கள் என்றால்,your guess is intact.
தமிழில் எல்லாரும் "வித்தியாசமாக படம் எடுக்கிறோம்" என்று கிளம்பி விட்டதில், 'முழு நீள காதல் கதை' என்பது ஒரு மறக்கப்பட்ட விஷயம் ஆகிவிட்ட, இன்றைய தமிழ் பட டிரெண்டில் படம் முழுக்க, லவ், ரொமான்ஸ், இளமை என்று கலர்புல்லாக பொங்கி வழிவதால் இது ஒரு வித்தியாசமான படம் என்று சொல்லலாம்.
பொதுவாக கவுதம் மேனனின் கதாநாயர்கள் என்ன செய்வார்கள்? ஒரு பெண்ணை பார்த்ததும் "what a woman ?" என்று காதலில் விழுந்து துள்ளி குதிப்பார்கள். பக்கத்தில் இருக்கும் சுவர், கதவு எதிலாவது சாய்ந்து கொள்வார்கள். நெஞ்சில் குத்தி கொள்வார்கள். கவிதையாய் காதலை சொல்வார்கள். 'காதலிக்காக சாகலாம்' என்பார்கள். காதலி நினைவில் கண்ணீர் விட்டு கரைவார்கள். Foul language பேசுவார்கள்.கதாநாயகி, தன்னிம்பிக்கையும் தெளிவுமாய் இருப்பாள். தனக்கு என்ன வேண்டும், எது பிடிக்கும் என்பதில் உறுதியாக இருப்பாள். இதிலும் அச்சு அசலாக தன்னுடைய hero/heroin பார்முலாவை மாற்ற வில்லை அவர். சொந்த கதை, சொந்த கதை என்று ஒரே மாதிரி பீலிங் விடுவதை கொஞ்சம் குறைங்க கவுதம்!
மின்னலே படத்தில், ரீமா சென் மாதவனை பார்த்து, "நீ அமெரிக்காவில் இருந்து அடுத்த வாரம் தானே வருவதாக சொன்னாய்? இப்போ எப்டி வந்த?" என்பார். அதற்கு மாதவன், "flight காலியா இருந்துச்சு, அதன் ஏறி வந்துட்டேன்" என்று சொல்வார். இந்த படத்திலும் இந்த மாதிரி மெல்லிய நகைச்சுவை வசனங்கள் உண்டு.
அதிலும் தன்னை தானே கலாசிக்கொள்ளுவது தான் எவ்வளவு சுகமான விஷயம்?
-"நான் கவுதம்மேனன் கிட்ட தான் அசிஸ்டன்ட் ஆக சேர வேண்டும்" என்று சிம்பு சொல்லவும், "என்ன, தமிழ்ல இங்கிலீஷ் பேசி படம் எடுக்க போறியா?" என்று ஒருத்தர் கேட்கிறார்.-"அவனவன் காதலுக்காக America போறான்...நான் ஆலப்புழா போக மாட்டேனா??" என்று சிம்பு சொல்றார்.
-"நம்ம friends ஆக இருக்கலாம்" என்று த்ரிஷா சொன்னதும், பின்னணியில் ரஹ்மான் 'முஸ்தபா முஸ்தபா' ட்யூன் போடறார்.
சீராக போகும் கதை,வழக்கமான பாதையில் தான் பயணிக்கிறது என்றாலும் படத்தின் முடிவு சற்று அதிர்வை ஏற்படுத்தும் twisty யான முடிவு தான். சில இடங்களில் காட்சியமைப்புகள் விறுவிறுப்பாக இல்லாததால் நமக்கு சற்று தளர்வாக இருக்கிறது.
சிம்பு: இப்போது இருக்கிற வளரும் தலைமுறை ஹீரோக்களில், பாட்டு, நடனம் என்ற நிறைய திறமைகள் இருக்கிற ஒரு promising ஹீரோ ஆனாலும் விரல் வித்தை, நயன்தாரா என்று தடுமாறிக்கொண்டு இருந்த career இல் ஒரு நல்ல பிரேக் கிடைத்து இருக்கிறது இவருக்கு. நீங்களா இது? இவ்வளோ நல்லா நடிக்க வருமா உங்களுக்கு?
நான் ரவுடி, நான் மாஸ் ஹீரோ, நான் Don, நான் வித்தியாசமான படங்கள் பண்ண போறேன் என்று தமிழ் ஹீரோக்கள் ஆளாளுக்கு ஒரு ரூட்டை எடுத்ததில், மவுன ராகம் கார்த்திக், அலைபாயுதே மாதவன் இந்த மாதிரி இடங்கள் காலியாக இருக்கின்றன.சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது இந்த ரோல்.இதை maintain பண்ணவும்.
த்ரிஷ்: என்ன கலர்? என்ன ஒசரம்? என்ன ஸ்லிம்? இவங்க தலைமுடிய இறுக்கமா பின்னல் போட்டு, தாவணி பாவாடை கட்டி விட்டு, குத்து பாட்டுக்கு ஆட விட்டுடுவாங்க நம்ம ஊருல. இவங்க composition க்கு தகுந்த மாதிரி இவங்களுக்கு அமைந்த ஒரே ரோல் இது வரைக்கும் ஆயுத எழுத்து மீரா. அடுத்து இப்போ Jessie...Perming / கலரிங் பண்ண தலைமுடி, ஸ்டைலான காஸ்ட்யூம்கள் என்று கலக்கலாக இருக்கிறார். தன்னுடைய வேலையை ரொம்ப நல்லா பண்றார்.ஆனால், close -up ஷாட்களில் சற்று வயதான மாதிரி இருக்கிறது...அல்லது வயது தெரிகிறது என்று சொல்ல வேண்டுமா?
ரஹ்மான்: ரஹ்மான் இசையை பற்றி சொல்லுவது 'இட்லி வடைக்கே சட்னி சாம்பார் அனுப்பற' மாதிரி. அதோடு இந்த படத்தின் பாடல்களை பற்றி இணையத்தில் ஏற்கனவே எல்லாரும் எழுதி தள்ளி விட்டார்கள். அதனால் 'படத்துக்கு ஏற்ற வருடும் பின்னணி இசை'என்ற ஒரு வரியோடு முடித்து கொள்கிறேன்.
பாடல்கள் படம் ஆக்கப்பட்ட விதம் ரம்மியமான "feel good ", என்றாலும் எல்லா பாடல்களிலும் த்ரிஷாவும் சிம்புவும் அழகான காஸ்ட்யூம்களில் ஒரே மாதிரி ஆடிக்கொண்டே இருக்கிறார்கள். Hosannaa பாடல் கேட்க கேட்க திகட்டாத மாதிரி பார்க்க பார்க்க அலுக்காது.காமிரா: படத்தின் நிறைய காட்சிகள் கோவாவிலும் கேரளாவிலும் எடுக்க பட்டு இருப்பதால், குளிர்ச்சியாக இருக்கிறது.
சின்மயியின் குரல் Jessie ரோலுக்கு நன்றாக பொருந்துகிறது.
காக்க காக்க ஜோ, வாரணம் ஆயிரம் சமீரா, வேட்டையாடு ஜோ(?) என்று தன்னுடைய ஹீரோயின்களை பெரும்பாலும் போட்டு தள்ளி விடுவார் கவுதம். ஒரு காட்சியில், "Why does this hug feel so special" என்று சிம்பு கேட்கவும், "ஒரு வேளை இது தான் கடைசியாக இருக்கலாம்" என்று த்ரிஷா சொல்ல, நான் "சரி இவங்களும் காலி" என்று யூகித்தேன். அது சரியா தவறா என்று நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
My Verdict: Visual/Musical treat, served with lots of love.
- ப்ரியா கதிரவன்
சபாஷ் சரியான போட்டி ( ஜெய் ஹனுமானுக்கு!)
Posted by IdlyVadai at 2/27/2010 09:54:00 PM 11 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, ப்ரியா கதிரவன், விமர்சனம்
பட்ஜெட் !
Posted by IdlyVadai at 2/27/2010 07:57:00 AM 6 comments
Labels: செய்திவிமர்சனம்
Friday, February 26, 2010
வி ஃபார் வெண்டட்டா - விமர்சனம்
குறள் 563:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
கலைஞர் உரை:
குடிமக்கள் அஞ்சும்படியாகக் கொடுங்கோல் நடத்தும் அரசு நிச்சயமாக விரைவில் அழியும்
”மக்களுக்காகவே அரசாங்கம்.. அரசாங்கத்திற்காக அல்ல மக்கள்” இதுதான் ஒன்லைன், ஸாரி. டூ லைன்.
ஒற்றுமை, ஒற்றுமை என மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் உரிமைகளைப் பறித்து, அரசாங்கத்தின் கைப்பாவைகளாக வைத்திருக்கும் ஒரு சர்வாதிகார அரசாங்கத்தை எதிர்த்து சுதந்திரத்திற்காகப் போராடும் ”வி”என்பவர் மக்களின் கண்களைத் திறந்து அவர்களை உண்மையான சுதந்திரத்திற்கு அழைப்பு விடுவதும், அவர்கள் மூலம் சர்வாதிகாரத்தை ஒழிக்க “வி” மேற்கொள்ளும் முயற்சிகளுமே இந்தப்படம்.
சான்ஸலர் ஆடம் என்ற அடக்குமுறையாளனின் கீழ் பிரிட்டன் வாழ்கிறது. அநியாயமான தண்டனைகளும், கொடூரமான அடக்குமுறைகளும்,சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளும், துவரம்பருப்பின் விலையைப் போல அதிகரித்த வண்ணமிருக்கின்றன.
அப்படிப்பட்ட ஆட்சியை ”வி” முக்கியமான அரசு கட்டிடங்களைத் தகர்ப்பதன் மூலம் அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் ஒருசேரக் கவர்கிறார். அதில் எவி ஹெம்மாண்ட் என்கிற பெண்ணும் சூழ்நிலை வசத்தால் இதில் சம்பந்தப்பட, அவளை அரசு உளவுப் பிரிவு பின்தொடர்கிறது- எமியின் மூலமாக “வி”யைக் கண்டுபிடிக்க.
அரசு உளவு அதிகாரிகளின் கையில் சிக்க இருக்கும் ஒரு தருணத்தில் வாழ்வா, சாவா சூழ்நிலையில் “வி” யால் காப்பாற்றப்படும் எவி ஹம்மோண்ட்,வி யின் கதையை கேட்கிறாள், அப்போது, தான் யார் என்கிற உண்மை தெரியவர , காலப்போக்கில் வி யுடன் இணைந்து பிரிட்டனின் கொடூரமும்,அடக்குமுறையும் கொண்ட ஆட்சியாளர்களை ஆட்சியில் இருந்து இறக்க உதவுகிறாள்.
அடக்குமுறையை ஒழிக்க “வி” தேர்ந்தெடுப்பது வன்முறையின் பாதை. அது பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த கை ஃபாக்ஸ் என்பவரின் வழிமுறை. கை ஃபாக்ஸ் பிரிட்டிஷ் பார்லிமெண்ட்டை குண்டுவைத்துத் தகர்க்க முயன்றார்- அதேபோன்ற ஒரு நவம்பர் ஐந்தாம் தேதியில்.
படத்தின் ஆரம்பத்தில், ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்தும் முன்னர் வரும் ஒரு அருமையான இசையும், அதைத் தொடர்ந்து அந்தக் கட்டிடம் உடைந்து நொறுங்குவதையும் காட்டுவதும் அருமை. அப்போதே வி யின் ஆளுமையும் ஒருசேரக் காட்டப்பட்டு விடுகிறது.இந்தப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான “வி” யின் உண்மையான முகம் காண்பிக்கப்படுவதேயில்லை. ஒரு சிரித்த முகமூடிதான் “வி”
ஒரு நிமிடத்திற்கு ஒன்பதுமுறை டைட்குளோசப்பில் காண்பித்தாலும் ஒட்டிவைத்த மைதா மாவாய் ஒரு உணர்ச்சியும் காட்டத்தெரியாத கதாநாயகர்கள் இருக்கும் இந்தக்காலத்தில்,படம் முழுக்க முகமூடியுடன் வந்தாலும், தனது அசாத்திய உடல்மொழியால், வசன வெளிப்பாடால், எல்லா உணர்ச்சிகளையும் அருமையாக வெளிப்படுத்துகிறார் வி.
அரசு அதிகாரிகளை வேறு ஒரு முகமூடி போட்டு ஏமாற்றும் ஒரு கட்டத்திலும், நமது மனதைக் கொள்ளை கொள்கிறார்.
எப்படி, தொடர்ந்து பொய்களைச் சொல்லிச் சொல்லி மக்களை மந்தைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் காணும்போது நமது இன்றைய நிலைதான் ஞாபகம் வருகிறது.
முழு விழிப்புணர்வு அடைந்த, சுதந்திரமான நிலையில் நாம் வாழ்வது போல ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டு நாம் சுதந்திரமாக வாழ்வது போன்ற ஒரு மாயையில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
நமது தேவைகள் எதுவும் நிறைவேற்றப்படுவதில்லை. நமது கோரிக்கைகள் எதுவும் செவிசாய்க்கப் படுவதில்லை.
நம்மை ஒரு பொருட்டாகவே ஆளும் வர்க்கம் நினைப்பதில்லை. ஆனாலும் நமது அரசியல்வாதிகள் நம்மிடம் தொடர்ந்து சொல்வது, “மக்களுக்காகவே அரசாங்கம், உங்களுக்காகவே நாங்கள் உழைக்கிறோம்”.
ஆள்பவர்கள் செய்யும் அடக்குமுறைகள் அனைத்தும் நமது நலனுக்காகவே என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்பவனை துரோகியாகவும், அமைதியைக் குலைப்பவனாகவும் சித்தரித்து என்ன வேண்டுமானாலும் செய்துவிட முடிகிறது.
அப்படிப்பட்ட ஒரு மயக்கமான நிலையில் நம்மை வைத்திருந்து, அவர்கள் விரும்பும் காரியங்களை எந்தவித எதிர்ப்புமின்றி, தொடர்ந்து செய்துவிடமுடிகிறது.
இதன்மூலம் ஒரு மந்தை மனப்பான்மை உருவாக்கப்பட்டு அரசு, மக்களுக்கு எதிராகவும், அரசின் அநியாயங்களை எதிர்ப்பவர்களை ஒடுக்குவதையும்,அதை,மக்கள் ஒத்துழைப்புடனே செய்துவிடுவதுடன், அதை எதிர்க்கும் யாரையும் தேசவிரோதிகளாக சித்தரிக்கவும் முடிகிறது.
மக்களின் மற்றும் அரசின் கவனத்தை ஒருசேரப் பெற பிரிட்டனின் முக்கிய இடங்களை தகர்க்கிறார் வி..
தேசிய தொலைக்காட்சி அலைவரிசையைக் கைப்பற்றி மக்களிடம் பேசுகிறார். மக்கள் அவர் பக்கம் சாய்வதும் அதை அரசு தடுக்க இயலாமலும் போகிறது.”வி” யைப்பிடிக்க ஒரு அரசு ஏஜெண்ட் முயல்கிறார். அந்த விசாரணையின் முடிவில் அவருக்கு, “தான் உண்மையின் பக்கம் இருக்கிறோமா?” என்கிற கேள்வி எழுகிறது.
டேவிட் லாயிட் எழுதிய “வி ஃபார் வெண்டட்டா’ என்ற ஆங்கில நாவலின் திரைவடிவம்தான் இந்தப் படம்.
இசை இந்தப் படத்தில் மிகப் பெரிய பலம். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல வருத்தம், துள்ளல், வெற்றிப் பெருமிதம், சோகம், திகில் என எல்லா சூழலையும் இசை மிக அழகாய் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.
ஹீரோ ”வி” யின் உடையும், நடக்கும் நளினமும் கிட்டத்தட்ட ராபின்ஹுட் கதையில் வரும் ஹீரோ போலிருக்கிறது. ஆனால் வி க்கு நிகர் வி யேதான்.
வி யின் ஆங்கில உச்சரிப்பு இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம். அட்டகாசமான ஆங்கில உச்சரிப்பும், அதை உச்சரிக்கும் விதமும் நம்மைப் புன்முறுவலுடன் பார்க்க வைக்கின்றன.
வில்லனாக வரும் சான்சலர் ஆடம், வி யின் முன்பு சரியான வில்லனாக எடுபடவே இல்லை.
தொலைக்காட்சியில் வி தோன்றி நாட்டுமக்களுக்கு ஆற்றும் எழுச்சிமிக்க அந்த உரை மிகவும் அருமை.அதை தடுக்க இயலாமல் ஆள்பவர்கள் திணறுவதும், அரசு,அந்த ஒளிபரப்பை நிறுத்த முயல்வதும், அதற்குள் அந்த நிகழ்ச்சியே முடிவடைந்து விடுவதையும் நன்கு ரசிக்கலாம்.இந்தப் படத்தின் ஹைலைட்டான விஷயமே இந்த்த் தொலைக்காட்சி உரைதான். ஒரு விதத்தில் நமது நாட்டு நிகழ்வுகளை ஆங்கிலத்தில் பார்ப்பது போல இருந்தது படத்தை இன்னும் நமக்கு நெருக்கமாக்கியது.
ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாகவும்,நாமறியா சில விஷயங்களை நமக்கு முகத்திலறையும் வண்ணம் சொல்லும் நிஜமாகவும் அருமையான அரசியல் த்ரில்லராகவும் உள்ளது வி ஃபார் வெண்டட்டா
ஜெய் ஹனுமான்
இவ்வளவு முகமுடிகளா ?
Posted by IdlyVadai at 2/26/2010 03:15:00 PM 9 comments
Labels: சினிமா, விமர்சனம், ஜெய் ஹனுமான்
Thursday, February 25, 2010
முனி மலர் - 25-2-2010
Posted by IdlyVadai at 2/25/2010 11:30:00 PM 15 comments
Labels: முனி மலர்
படித்துறையில் ஒருநாள் - ஹரன்பிரசன்னா
படித்துறையில் ஒருநாள்
எல்லாமே வித்தியாசமாக இருந்தது. ஒரு வசனத்தைப் பேச நூறு தடவை முயன்றார்கள். எப்படி சலிக்காமல் இதே வசனத்தைப் பேசுகிறார்கள் என்று முதலில் ஆச்சரியத்தோடும், பிறகு சலிப்போடும், அதன் பிறகு எரிச்சலோடும் பார்த்துக்கொண்டிருந்தேன். ஓர் இயக்குநர் ஒரு படம் எடுத்தவுடன் எப்படி பைத்தியம் ஆகாமல் இருக்கிறார் என்கிற ஆதாரமான சந்தேகம் வந்தது. பக்கம் பக்கமாக வசனம் பேசித் தள்ளிய சிவாஜியை நினைத்து வியப்பாக இருந்தது. சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு பின்னணி பேசியவருக்கு இதுவரை நான் கோவில் கட்டாததை நினைத்துக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது.
இயக்குநர் சுகாவின் படித்துறை படத்தின் டப்பிங்குக்குச் சென்றிருந்தேன். ‘பதறண்டாம் கேட்டேளா, நீங்களும் டப்பிங் பேசணும்’ - திடீரென்று சொன்னார் சுகா. இது என்ன ஒரு மேட்டரா என நினைத்துக்கொண்டு சென்றபின்புதான் தெரிந்து, வேண்டாத வேலையில் இறங்கிவிட்டோமோ என்று. அங்கே ஹீரோ ஒவ்வொரு வசனமாக மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டிருந்தார். அடுத்து என்னை பேசச் சொன்னார்கள். ஐந்து வார்த்தை உள்ள ஒரு வசனம். மீண்டும் மீண்டும் பேசினேன். படிக்கிற காலத்துல இப்படி படிச்சிருந்தா இன்னும் பத்து மார்க் கூட கிடைச்சிருக்கும் என்று என் அப்பா சொல்வது போல எங்கோ கேட்டது. எனக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. வார்த்தை க்ளியரா இல்லை என்றார் சுகா. இப்ப க்ளியரா இருக்கு, ஆனா எமோஷனலா இல்லை. எமோஷனலா இருக்கு, ஆனா நம்ம ஊர் பாஷ இல்லயே. இப்ப எல்லாம் சரியாத்தான் இருக்கு, ஆனா வசனத்த நீங்களே எழுதிட்டீங்க, நான் எழுதினத பேசினா நல்லாயிருக்கும். இப்படி பல. வசனம் ரொம்ப நீளமா இருக்கு என்று சொல்லலாமா என்று நினைத்தேன்! அடுத்த தடவை முதலில் டப்பிங் வைத்துவிட்டு, அப்புறம் படம் எடுக்கச் சொன்னால் ஈஸியாக இருக்குமே என்றெல்லாம் தோன்றியது. ஒரு வழியாக ஐந்து வார்த்தை வசனத்தைப் பேசி முடித்தேன். (என்ன பேசினேன் என்பது எனக்கு நினைவில்லை. அந்த வசனம் படத்தில் வந்தால் அதை மீண்டும் மனப்பாடம் செய்துகொள்ளவேண்டும்! வரலாறு நமக்கு மிகவும் முக்கியம்.) அடுத்து கொஞ்சம் நீண்ட வசனம். ஆமாம், 7 வார்த்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அப்படி இப்படி என்று என்னவெல்லாமோ எப்படியெல்லாமோ சொல்லிப் பார்த்தேன். உண்மையில் கதை எழுதுவதும், கட்டுரை எழுதுவதும், கவிதை எழுதுவதும், முக்கியமாக படத்தை விமர்சனம் செய்வதும் அதுவும் அதனைக் கிழிப்பதும்தான் எவ்வளவு எளிமையானது.
வாய்விட்டே சொன்னேன், ஒரு படத்தை எடுத்த பின்னால டைரக்டருக்கு கோட்டி பிடிக்காததே சாதனதாங்கேன். ஒருவர் சொன்னார், பத்து படத்தையும் பாத்தவன் கதய யோசிச்சேளா என்று. சரிதான் என நினைத்துக்கொண்டேன். இன்னொரு காட்சியில் ஒரு நோயாளி முனகும் சத்தத்தைக் கொடுக்கவேண்டும். இவ்வளவு சத்தமா பேச முடிஞ்சா அவன் ஏன் ஆஸ்பத்திரிக்கு வராங்கிய. சரி என்று கொஞ்சம் குரலைக் குறைத்தேன். இவ்வளவு மெதுவா பேசினா ஒண்ணும் கேக்காது. மீடியமாகப் பேசினேன். இதுல பேச்சே வரக்கூடாது, வெறும் எக்ஸ்பிரஸந்தான். இது படத்தில் 20 செகண்டு வந்தால் அதிகம். அதற்கு ஒரு முப்பது தடவை முயற்சித்தார்கள். நீங்க மூச்சு விடும்போது ஆளு உள்ள இழுக்கான், நீங்க இழுக்கும்போது ஆளு வெளிய விடுதான். சின்க் ஆல பாருங்க. ஒரு வழியாக சின்க் ஆனது. பெருமூச்சு ஒன்றை விட்டேன். இப்ப நா எப்படி வேணா மூச்சு விடலாம் கேட்டியளா. வேறொரு கதாபாத்திரம் பேசிக்கொண்டிருக்கும்போது, டி டி எஸ்ஸில் கேட்கும் சின்ன எக்ஸ்பிரஸனுக்கு இவ்வளவு உழைப்பு.
உண்மையில் சினிமா உழைப்பின் மொழி. எந்த ஒரு மோசமான படத்தின் பின்னாலும் நிச்சயம் உன்னதமான உழைப்பு இருந்தே தீரும், ஏதோ ஒரு வடிவில். அதோடு சேர்ந்து படமும் சிறப்பாக அமையும்போது எல்லாமே உன்னதமாகிவிடுகிறது. தவறும்போது எல்லாமே உதாசினப்படுத்தப்பட்டுவிடுகிறது.
ஓர் உதவி இயக்குநர் சொன்னார். (எனது விமர்சனங்களை படித்திருக்கிறார் போல) இனிமே எழுதும்போது இதெல்லாம் மனசுல இருக்கும்ல என்று. விமர்சகர்கள் மோசமான ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிந்துகொள்வார். உண்மையில் இரு தரப்புமே நியாயங்களைக் கொண்டுள்ளது. உழைப்பின் உன்னதத்தோடு வரும் திரைப்படம் ஒன்று மிகவும் விமர்சிக்கப்படும்போது திரைப்படத்துடன் நேரடியாகப் பங்குகொண்டவர்கள் அடையும் நிம்மதியின்மை நிச்சயம் உண்மையானது. ஆனால் விமர்சனம் என்பது இதையெல்லாம் என்றுமே பொருட்படுத்தாமல் இயங்கிவருகிறது. ஏனென்றால் விமர்சனம் என்பது ஓர் ஒப்பீடு மட்டுமே. ஒப்பீடாலேயே தொடர்ந்து மாதிரிகள் கட்டமைக்கப்படுவதால் விமர்சனம் உழைப்பை மெல்லப் புறந்தள்ளுகிறது. ஆனால் விமர்சகன் ஒருவன் படம் எடுக்கும் விதத்தை முழுக்க முழுக்க கூடவே இருந்து பார்த்தானால் அவனது பார்வை இன்னும் கூர்மையடைவதோடு, எதை ஏன் எப்படி சொல்கிறோம் எனபதைவிட எதை எப்படிச் சொல்லக்கூடாது என்பது நிச்சயமாகப் புலப்படத் தொடங்கும் என்று தோன்றியது. பாலுமகேந்திரா சுகாவுக்கு முன்பு எழுதிய கடிதத்தில் ‘என்ன பலன் என்று தெரியாமலேயே கடும் உழைப்பைக் கோரும் ஊடகம் திரைப்படம்’ என்ற பொருள்பட எழுதியிருந்தாராம். கடும் உழைப்பைக் கோரும் ஒரு திரைப்பட அனுபவத்தை இன்று நேரில் பார்த்தேன். நான் இன்று பார்த்தது நூறில் ஒரு பங்கு கூட இல்லை என்பதுதான் இதில் முக்கியமானது. இன்றைக்குப் பார்த்ததாவது மூளையை அழுங்கடிக்கும் விஷயம்தான். டப்பிங்குக்கு முன்னதாக படத்தின் வேலைகள் கோரும் க்ரியேட்டிவிட்டி உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் தேவையான உழைப்பை நாம் இதிலிருந்தே புரிந்துகொள்ள முடியும்.
இன்னும் சில முக்கல் முனகல்களைச் சொன்னேன். டப்பிங் முடிந்தது எனக்கு. கிட்டத்தட்ட 2 மணி நேரத்தில் நான் பேசியது மொத்தம் 2 நிமிடங்கள் இருக்கலாம்! சரி போகலாம் என்றார் சுகா. விருது எப்போ தருவாங்க என்று கேட்டேன். பை கொண்டாந்திருக்கேளா என்றார். இல்லை, கொடுத்த உடனே வேண்டாம்னு மறுக்கணும், கவிஞம்லா என்றேன்.
சுகா இப்படத்தை இயக்குகிறார் என்பது ஓர் ஆர்வம். இன்னொரு ஆர்வம் இளையராஜாவின் இசை குறித்தானது. சுகா இசை என்றால் என்ன என்று தெரிந்தவர். அதாவது இசையோடு தொடர்புடைய விஷயங்கள் தெரிந்தவர் என்றல்ல நான் சொல்வது. நேரடியாகவே இசை என்றால் என்ன என்பதை பற்றிய நல்ல அறிவு உள்ளவர். ஆர்மோனியம் வாசிக்கத் தெரிந்தவர். கர்நாடக ராகங்களில் தேர்ச்சி உள்ளவர். அதனால் அவர் இளையராஜாவோடு பணிபுரிந்து வரும் திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அதீத ஆர்வம் எனக்கிருந்தது. மூன்றாவதான ஆர்வம் இத்திரைப்படம் நெல்லையோடு தொடர்புடையதென்பது. நான்காவதான ஆர்வம் இப்படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனும் நாஞ்சில் நாடனும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள் என்பது.
தேரோடும் என்னும் ராமகிருஷ்ணன் எழுதிய பாடலைக் கேட்டேன். முதல் முறை கேட்டபோது இசையின் ஆழம் என்னை அசர வைத்தது. (எனக்கு இசை என்றாலே என்னவென்று தெரியாது. எனது கருத்து எனது ரசனை சார்ந்தது மட்டுமே.) பாம்பே ஜெயஸ்ரீயும் சுதா ரகுநாதனும் பாடியிருக்கும் இப்பாடல் இளையராஜாவின் முக்கியமான பாடல்களில் ஒன்றாக அமையும். எஸ்ராவின் தமிழ் அழகாக வெளிப்பட்டுள்ளது. அதேபோல் நா. முத்துக்குமார் எழுதியிருக்கும் நீரோடும் எனத் தொடங்கும் (என நினைக்கிறேன்!) பாடல் இன்னொரு அசத்தலான பாடலாக இருக்கும். இந்த இரு பாடல்களைக் கேட்டபோது, குணா, மகாநதி, தேவர் மகன் காலத்தில் இளையராஜா இசை அமைத்த மிகச் சிறந்த பாடல்களின் நினைவு வந்தது. இசையில் தொடங்குதம்மா (ஹே ராம்), உனைத் தேடும் ராகமிது (பொன்மலை), கண்ணில் பார்வை (நான் கடவுள்) வரிசையில் இப்பாடல்கள் இரண்டும் அமையும் எனபதில் ஐயமே இல்லை.
படத்தை அங்கங்கே பார்த்த வகையில், எல்லாருமே புதிய முகங்கள் என்பது தெரிந்தது. மற்றபடி என்ன கதை என்பதெல்லாம் விளங்கவில்லை. ஆனால் ஆர்வம் மட்டும் விண்ணோங்கி வளர்ந்துவிட்டது. படத்தின் ஹீரோ டப்பிங் தியேட்டரில் ஓரத்தில் கீழே உட்கார்ந்திருந்தார். இன்னும் பெயர் வைக்கப்படாத பையன். அடுத்த படத்துல எங்களையே பாத்து நீங்க யாருன்னு கேப்பான் என்றார் நண்பரொருவர். இப்படம் பெரும் வெற்றிபெற்று அக்கேள்வியை அவர் நிஜமாகவே கேட்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.
ஆர்யா தயாரிக்கும் படம் இது. ஆர்யா இன்று டப்பிங் தியேட்டருக்கு வந்திருந்தார். படம் தொடங்கிய தினத்தில் இருந்து இன்றுதான் இரண்டாவது முறையாக வந்திருக்கிறார் என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். முதல் படம் இயக்கும் இயக்குநருக்குத் தேவையான சுதந்திரம் சுகாவுக்குக் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு நல்ல படம் வர நினைக்கும் ஆர்யாவை நினைத்தும் சந்தோஷமாக இருந்தது.
சரி சுகா பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். வானத்தில் சரியும் சூரியன் ரம்மியமாக இருந்தது. இனி ஆட்சியைப் பிடிக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.
சிவாஜி வசனம் பேசி நடித்த காட்சியை திரையில் பார்த்தபோது கருணாநிதி தேம்பி தேம்பி அழுதார். இப்ப ஹபி பேசிய வசனத்தை பார்த்து எவ்வளவு பேர் கண்ணீர் சிந்த போகிறார்களோ !!
Posted by IdlyVadai at 2/25/2010 07:58:00 PM 23 comments
Labels: அனுபவம், சினிமா, ஹரன்பிரசன்னா
உண்மை சம்பவம்
இட்லிவடை நண்பர்களுக்கு,
வாகனம் ஓட்டும் போது தலைகவசம் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதைக் குறித்தும், செல்போனை வாகனம் ஓட்டும் போது பயன்படுத்தக்கூடாது என்பதைக்குறித்தும் உதாசீனப்படுத்தும் நண்பர்களுக்காக என் வாழ்க்கையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு துயர சம்பத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (இதைப் படித்து சிலரேனும் இதை பின்பற்றக்கூடும் என்ற நம்பிக்கையில்)
நான் கேரளா மாநிலம் திருச்சுர் மாவட்டத்தில் உள்ள கொப்பரக்குளம் எனும் ஒரு இடத்தை சார்ந்தவன். பல வருடங்களாக சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். ஊரில் எனது சித்தப்பா, சித்தி மற்றும் அவர்களது மகன்கள் ஆகியோர் உள்ளனர். இதில் இரு தம்பிகள் துபாயில் பணிபுரிந்து வந்தனர்.
இதில் மூத்த தம்பிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு இடைவெளியில் ஊருக்கு வந்தான். ( பெயர் Jijeesh வயது 29.) பிப்ரவரி 21 தேதி திருமணம் என்று நிச்சயிக்கப்பட்டது. இதனிடையில் 18.02.2010 அன்று மாலை 6 மணியளவில் இருசக்கரவாகத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள டைலர்கடைக்கு சென்றுவருவதற்காக தலைகவசம் அணியாமல் காதில் செல்போனை வைத்துக்கொண்டு வண்டியை அதிவேகத்தில் ஓட்டிச்சென்றுள்ளான் எதிரே எதிர்பராத பாலத்தின் திருப்பத்தில் மிகமெதுவாக வந்துகொண்டிருந்த ஆட்டோவின் மேல் அதிவேகத்தில் மேதி வண்டி பாலத்தின் சிமென்ட் சுவரில் சரிந்து தலை சுவரில் இடித்தது. மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவுவின் காரணமாக, ஒரு இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 19.02.2010 அன்று காலை உயிர் பிரிந்தது. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவனது வாழ்க்கை கனவு அவனது அப்பா, அம்மா மற்றும் அவனை மணம்முடிக்க இருந்த அந்த பெண் ஆகியோரின் கனவு அனைத்தையும் தகர்த்தெறிந்து அவன் எங்களை மீளாத்துயரில் விட்டுச்சென்றான்.
இதை ஏன் குறிப்பிட விரும்புகிறேன் என்றால். தலைவசம் அணிந்தும், வாகனம் ஓட்டும் போது செல்போனை பயன்படுத்தமாலும், அதிவேகத்துடன் வண்டியை ஓட்டாமலும் இருப்பது. நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதால்.
அவனது புகைப்படத்தை இத்துடன் அனுப்பியுள்ளேன். முடிந்தால் வெளியிடவும்.
Posted by IdlyVadai at 2/25/2010 10:04:00 AM 16 comments
Wednesday, February 24, 2010
வாழ்த்துகள் சச்சின்
Posted by IdlyVadai at 2/24/2010 10:24:00 PM 27 comments
Labels: வாழ்த்து, விளையாட்டு
பாபுவிற்கு உதவுங்கள் - Follow up
Posted by IdlyVadai at 2/24/2010 03:33:00 PM 1 comments
ராக்கெட் சிங் - சினிமா விமர்சனம்
ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"
நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.
"இந்த படத்தில் கதை தான் ஹீரோ. அப்போ ஹீரோயின்? அது திரைக்கதை. தமிழில் ஏன் இப்படி படங்கள் வருவதில்லை? opening song , குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோ என்று சாவடிக்கிறார்கள். Rocket Singh மிஸ் பண்ண கூடாத படம். கண்டிப்பா அதும் தியேட்டரில் போய் பாருங்க. " என்று (இட்லிவடை போன்ற) தமிழ் திரைப்பட ஆர்வலர்களை எல்லாம் புலம்ப வைக்கும் படம் அல்ல இது. மற்றபடி குடும்பத்தினர் அனைவரும் அவரவர் வேலையில் பிசியா இருக்க, குழந்தையும் தூங்கி விட, உலக தொலைக்காட்சிகள் எதிலும் ஏதும் உருப்படியா தேறாத நிலையில், நீங்கள் என்ன செய்வது என்று திரு திருன்னு முழித்து கொண்டு இருக்கும் ஒரு ஞாயிறு மதியத்தை கண்டிப்பாக சுவாரஸ்யம் ஆக்கும் அளவுக்கு இந்த படத்தில் விஷயம் இருக்கிறது.
ஹர்ப்ரீத் சிங் பேடி. 38 % மார்க் வாங்கி Bcom பாஸ் செய்து விட்டு "AYS " என்ற கம்ப்யூட்டர் விற்கும் கம்பெனியில் சேல்ஸ்மானாக சேர்கிறார். பொதுவாக சேல்ஸ்மென்களுக்கு இருக்க வேண்டியதாக நம்பப்படும் எந்த நாசுக்குகளும் தெரியாததால், கம்பெனியில் ஜோக்கராக ஆக்க படுகிறார். நொந்து போன நிலையில் இருப்பவருக்கு சில உதவிகளோடு, சில புள்ளிவிவரங்களும் கிடைக்கவே சுதாரித்துக்கொள்கிறார். AYS உள்ளேயே இருந்து கொண்டு, "Rocket Sales corporation" என்ற பெயரில் யாருக்கும் தெரியாமல் தொடங்குகிறது இவரது computer sales தனி(உள்)குடித்தனம்.அவர் தொட்டதெல்லாம் துலங்குகிறது. Rocket sales க்கு சில ஆர்டர்கள் கிடைக்கின்றன. இவருக்கு உதவி தேவைப்படுகிறது. இப்போ நம்ம இட்லிவடை "செய்தி விமர்சனத்துக்கு இன்பா", "திரை விமர்சனத்துக்கு ஜெய் ஹனுமான்", "மொழிபெயர்ப்புக்கு யதிராஜ்" என்று அவரவர் திறமைக்கு ஏற்ற பதிவுகளை வழங்கி கடை நடத்துவதை மாதிரி, இவரும், AYS இல் பணி புரிபவர்களில் நால்வரை அவர்களின் நிறை, குறை, தேவைகளை புரிந்து கொண்டு, அவர்களை அணுகி தன் Rocket குடித்தனத்தில் சேர்த்து கொள்கிறார்.சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ண/சர்வீஸ் பண்ண - சர்வீஸ் மேனேஜர் கிரி, கம்ப்யூட்டர் assemble பண்ண - பியூன் மிஸ்ரா, customer calls answer/transfer பண்ண - டெலிபோன் ஆப்பரேட்டர் Koyna, மார்க்கெட்டிங் பண்ண - சேல்ஸ் மேனேஜர் நிதின்.
Strategic ஆக சில வேலைகளை செய்து ராப்பகலாக உழைத்து காசு பார்க்கிறார்கள்.சேல்சோடு சேல்சாக ஹர்ப்ரீத்துக்கு ஒரு கேர்ள் பிரெண்ட் கிடைக்கிறாள். ஒரு நாள் AYS இன் MD "Mr .Puri"யிடம் மாட்டிக்கொள்கிறார்கள். அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பதை நீங்களே பார்த்து கொள்ளுங்கள்.
ஹர்ப்ரீத்தாக ரன்பீர் கபூர். "Ranbir Kapoor dating Katrina Kaif", "Deepika Padukone and Ranbir Kapoor - Chal Kya raha hai?" என்று ஸ்கூப்கள் படித்து இருக்கிறேனே தவிர இவருடைய படம் நான் பார்ப்பது இதான் முதல் முறை. சர்தார் வேடம் நன்றாக பொருந்துகிறது. சில முக பாவனைகள் பரவாயில்லை. இவரை தவிர படத்தில் நடித்த யாருடைய பெயரும் எனக்கு தெரியாது. ஆனால் எல்லாருமே அவரவர் பாத்திரத்தை தெளிவாக செய்கிறார்கள்.நம்ம ஊரு படங்கள் மாதிரி குப்பத்து ஹீரோ, குப்பை தொட்டியில் போடப்பட்ட ஹீரோ, ரவுடி ஹீரோ என்று இல்லாமல் பெரும்பாலான ஹிந்தி படங்களில் ஹீரோ ரொம்ப attitude, positive thinking என்று சற்று extreme ஆக இருப்பார். இங்கயும் அப்படியே. AYS கம்பெனி பிரிண்டர், கரன்ட், டெலிபோன் எல்லாவற்றையும் உபயோக்கித்து கொள்வதற்கு, கணக்கு வைத்துக்கொள்கிறான் ஹர்ப்ரீத். என்றாவது ஒரு நாள் AYS க்கு அதை எல்லாம் செட்டில் பண்ணி விட வேண்டும் என்று சொல்கிறான். "Noone is an employee, all are partners" என்று சொல்லி ஐவருக்கும் லாபத்தை பகிர்ந்து தருகிறான். எல்லாரையும் பேசி பேசியே கரெக்ட் பண்றான்.Optimism overdosed.
தனி காமெடி ட்ராக் எல்லாம் கிடையாது. வசனங்களை பேஸ் பண்ணி அங்கங்கே மெல்லிய புன்னகைய வரவழைக்கும் அளவான காமெடி தான். சில வசனங்களும் நன்றாக இருந்தன. உதாரணத்துக்கு ஹர்ப்ரீத்தின் தாத்தா, "உன்னை நான் எந்த திருட்டு தனமும் சொல்லி கொடுத்து வளர்க்கலையே? ஆனா நீ இப்படி திருடனா வந்து நிக்கறியே?" என்று சொல்லவும், அதற்கு ஹர்ப்ரீத் "அன்றைக்கே திருட்டுத்தனம் எல்லாம் சொல்லி கொடுத்து வளர்த்து இருந்தால் நான் இப்படி திருடனாகும் நிலைமை வந்துருக்காது" என்பதும்.
பாடல்கள், ஒளிப்பதிவு, ஸ்பெஷல் எபக்ட்ஸ், கிராபிக்ஸ் என்றெல்லாம் எழுத படத்தில் இவை எதுவும் கிடையாது. அதனால் படம் பார்க்கும் போது ஒரு நாவல் படிப்பதை போன்ற உணர்வு தான் எழும். ஆனால் ஓரளவுக்கு விறுவிறுப்பான நாவல். அதிலும் இந்த ஐவரும் என்றோ ஒரு நாள் எப்படியோ மாட்டிக்கொள்ள போகிறார்கள் என்று படம் பார்ப்பவர்கள் யூகித்து விடுவார்கள். அது எப்போ, எப்படி என்று நம்மை சற்று பதற்ற படுத்தும் வகையில் காட்சி அமைத்து இருப்பது நன்றாக இருக்கிறது.
இப்படிப்பட்ட படங்கள் ஒன்றரை மணி நேரத்தில் முடிந்து விடுதல் நலம். ஆனால் இந்த படம் இரண்டரை மணி நேரம் ஓடுவதால், பாதி படம் பார்த்து கொண்டிருக்கும் போது "அம்மா" என்று முழித்து அழும் குழந்தையின் சத்தம், "அடடா, முக்கியமா சீன் பிரேக் ஆகுதே" என்ற உணர்வுக்கு பதிலாக, "Ok,let me have a break and come back" என்று தோன்ற வைக்கிறது.
நான்கு பேர் சேர்ந்து உருவாக்கிய ஒரு சின்ன சாப்ட்வேர் கம்பெனி தான் infosys என்ற விஸ்வரூபம் எடுத்தது என்பதை நினைக்கையில், இட்லிவடை பார்க்க சொல்லி ரெகமன்ட் செய்த இந்த படத்தில், நடக்க முடியாத எதையும் சொல்லி விடவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
My verdict: Watchable, Once.
- ப்ரியா கதிரவன் ( பழைய எண்: http://synapse-junctionofthoughts.blogspot.com/ புதிய எண்: http://priyakathiravan.blogspot.com/ )
செய்தி விமர்சனத்துக்கு இன்பா", "திரை விமர்சனத்துக்கு ஜெய் ஹனுமான்", "மொழிபெயர்ப்புக்கு யதிராஜ்" என்று அவரவர் திறமைக்கு ஏற்ற பதிவுகளை வழங்கி கடை நடத்துவதை மாதிரி.... நல்ல வேளை என்னை இட்லிசிங் என்று சொல்லவில்லை. அது சரி, நீங்க தான் கொ.ப.செ அதை ஏன் விட்டு விட்டீர்கள் ?
இட்லிவடை மார்க் : 6.1/10
அடுத்து விமர்சனம்: v for vendetta :-)
Posted by IdlyVadai at 2/24/2010 01:11:00 AM 27 comments
Labels: சினிமா, ப்ரியா கதிரவன், விமர்சனம்
Monday, February 22, 2010
நான் தப்பாக எதுவும் சொல்லவில்லை - அஜீத் பேட்டி
அஜீத் பேட்டி ஒன்றை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் நேற்று வெளியிட்டது. வழக்கம் போல சில கேள்விகளை மட்டும் தமிழ் நாளிதழ் செய்தியாக பிரசுரித்தது. சிலர் நாளிதழ்கள் முக்கியமான வார்த்தைகளை முழுங்கிவிட்டது. அதனால் முழு பேட்டி ஆங்கிலத்திலேயே கீழே...
‘I HAVE NOT SAID ANYTHING WRONG’
He’s in the thick of a controversy that is threatening to split the Tamil film industry. The police and security guards have formed a cordon around his house and film unions are demanding apologies from him, but actor Ajith Kumar maintains that he only spoke his mind. On February 6, he asked chief minister M Karunanidhi to put an end to stars being forced to appear in public to show support for political agitations. The actor opens up in an interview with Bhama Devi Ravi
QWhen you spoke out, was it because you had been manipulated? Was it the result of personal suffering?
It was not a prepared speech, but a spur-of-the-moment thing. It came from the bottom of my heart. I have not said anything wrong. I have only expressed the truth and whatever is happening now validates my speech that the industry is being held to ransom by a handful of people.
QWhen actors and sports icons are created by society. Don’t you think they owe it to society to take a stand on social and political issues?
It is debatable that only celebrities owe society. Every citizen owes society. But when there is a sensitive political issue, we always have a classic case of too many cooks spoiling the broth. When there is a political issue, we owe it to the government and the agencies concerned to sort it out. I have a great regard for our political system, and I only hope that the political leaders empathise with the film fraternity.
QWhy can’t a star freely express an opinion on an issue?
There is one group that feels there is a need for stars to come out and endorse issues, but there is another group that says it is not a star’s business. We are caught in the crossfire. When an actor wants to take a bigger step and enter politics actively, he is prevented, even ridiculed. If you think stars should not enter politics or territories not familiar to them, you should not expect them to endorse social issues.Why is his nativity and loyalty to the land questioned? If you have a million people following a star and if he has a voice that is heard, and he wants to take a bigger step, why stop him?
QDo you think nativity is an issue here?
It is becoming so everywhere. When a fan buys a ticket for a movie or a cricket match, he does not question who is sitting next to him, his colour, creed or religion. That is the power of the arts. It binds people of an entire nation. So bringing in a communal flavour is appalling. Look at the fan base of any actor or sportsman. Fans are from different regions, strata and language groups but they are united by the sport or the cinema.
QSpeaking of cinema, would you play the role of a suicide bomber or a Naxal?
After what has happened in the past few days, I do not feel like facing the camera again. There is not much creative freedom for artistes. If you say an actor should not smoke on screen because he can influence a generation, agreed. But if that same actor wants to enter politics and influence a generation, people ask, ‘What is your business here?’
QBut you have signed your 50th film...
Yes. I have given a commitment to producer Dayanidhi Alagiri, which I will honour. But the one thing I want to do after my nativity became an issue is to get back to motor sports and do India proud. My entry for F2 has been accepted and I will be participating in the eight-country European circuit from April to October. The state should be proud that eight of the 10 top motorsports persons are from Tamil Nadu. Apart from Narain Karthikeyan and Karun Chandhok — both of whom will hopefully make it to F1, we also have Armaan Ebrahim, Parthiva Sureshwaren, myself, Aditya Patel and Ashwin Sundar in various categories. Among the bikers, we have V Naren Kumar, Preetam Dev Moses and Dileep Rogers. I hope the sport gets more sponsorship. I also wish Chennai would have a street motorsport rally, like the ones abroad.
( நன்றி: TOI )
விழாவுக்கு வாருங்கள் என்று அழைப்பது எப்படி மிரட்டலாக இருக்க முடியும்? என்று திருமா போன்றவர்கள் அறிக்கை விடுகிறார்கள். பேச்சு சுதந்திரம் என்பது என்ன என்று திருமாவுக்கு தெரியாது. உங்களுக்கு ரஜினியே எழுந்து நின்று கைத்தட்டினார் அதனால் திருமா, சீமான் போன்றவர்களிடம் பயப்பட தேவையில்லை.
Posted by IdlyVadai at 2/22/2010 11:00:00 AM 41 comments
Sunday, February 21, 2010
சன்டேனா இரண்டு (21-02-10) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள்...அரசியல்.
செய்தி # 1கம்யுனிசம் என்பது ஒரு வாழ்க்கை முறை. போராட்டம் என்பது அதன் வழிமுறை என்று அடிக்கடி கூறுவார்கள். கடந்த சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்ட கம்யுனிஸ்ட் கட்சி வேட்பாளர்களில் பெரும்பாலோர் தங்களது சொத்துகணக்கை ஆயிரங்களில் காட்டி இருந்தார்கள். நான் சந்தித்த, மார்க்சிஸ்ட் கட்சியின் விவசாய சங்க தலைவரும், கடந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டவரும் ஆனா திரு. பாலகிருஷ்ணன் மிக எளிமையானவர். சைக்கிளில் செல்லும் மனிதர்.
நல்லகண்ணு உட்பட நாம் இப்படி பல உதாரணங்களை சொல்லலாம். அக்கட்சியின் மிகவும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர் திரு. டபிள்யு. ஆர். வரதராஜன் ஒரு கடிதம் எழுதிவிட்டு, காணமல் போய் விட்டார்.
"நான் கட்சிக்காக பல போரட்டங்களை நடத்தி இருக்கிறேன். பல போராட்டங்களில் பங்கு எடுத்து இருக்கிறேன். ஆனால்,வாழ்க்கை என்னும் போராட்டத்தில், நான் நிலைகுலைந்து விட்டேன். எனது இல்லம் உட்பட எங்கும் எனக்கு பட திறப்புகளோ, இதர நிகழ்ச்சிகளோ நடத்த பட கூடாது. தனது வங்கி கணக்கில் உள்ள பணத்தை முடக்கி அதை கட்சிக்கு கொடுத்து விட வேண்டும். இறந்த பிறகு எனது உடல் மருத்துவ ஆய்வு பணிக்காக ஒரு மருத்துவ கல்லூரியில் ஒப்படைக்கபட வேண்டும் " என்று அக்கடிதத்தில் எழுதி இருக்கிறார் அவர்.
அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாகவும், அதனாலையே அவர் மனமுடைந்து சென்று விட்டார் என்றும், ஒழுங்கின நடவடிக்கை எடுத்து அவரை பொறுப்பில் இருந்து கட்சி மேலிடம் நீக்கி விட்டது. அதுவே நிஜ காரணம் என்றும் பேசப்படுகிறது.
வாழ்க்கையே ஒரு போர்க்களம் என்பது தோழர்களுக்குதான் என்று படித்து இருக்கிறேன். கட்சி பிரச்சினையோ இல்லை வாழ்க்கை பிரச்சினையோ ஒரு அனுபவம் வாய்ந்த முதிர்ந்த கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் வாழ்க்கையை எதிர்கொள்ள இயலாமல், இப்படி ஒரு கடிதம் எழுதிவிட்டு ஒதுங்கி சென்று விட்டது எதை காட்டுகிறது?
செய்தி # 2அயோத்தி பாபர் மசூதி பற்றி ஒரு முறை கவிஞர். மு. மேத்தா அவர்கள் ஒரு கவிதை சொன்னார்.
"பாபர் மசூதியும்
பஸ்ஸில் பயணம் போகும் பெண்ணும் ஒன்றுதான்
இடிப்பதற்கு என்றால் வருவார்கள்.
யாரும்
கட்ட வரமாட்டார்கள்"
பாஜகவுக்கு செல்வாக்கு சரிவு ஏற்ப்படும் போதெல்லாம் எழுப்பபடும் விவகாரம் ராமர் கோவில். சமிபத்தில் இந்தூரில் நடந்த பாஜக கட்சியின் செயற்குழு கூட்டத்தில், அதன் தலைவர் நிதின் கட்க்காரி ஆற்றிஇருக்கும் ஒரு உரையின் சாராம்சம்,
"அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதில் பாஜக உறுதியாக இருக்கிறது. அயோத்தி பிரச்சினைக்கு கோர்ட் மூலம் தீர்ப்பு காண இயலாது. ஏனெனில், கோர்ட் தீர்ப்பு என்பது ஒரு சாராருக்கு சாதகமாகவும், இன்னொரு சாராருக்கு பாதகமாகவும் இருக்கும். எனவே, இந்துக்களின் உணர்வுகளை மதித்து, அயோத்தியில் கோவில் கட்ட முஸ்லிம்கள் ஆதரவு அளிக்க முன் வர வேண்டும். அவ்வாறு, அவர்கள் செய்தால், மத நல்லிணக்கத்துக்கு உதாரணமாக அது அமையும். ராமர் கோவில் கட்டிய பிறகு, போதுமான நிலம் அங்கு இருந்தால், அவர்கள் மசூதி கட்டி கொள்ளலாம் " .
"நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் என்றால், எங்கள் ஆட்சியில் அப்துல் கலாம் எப்படி ஜனாதிபதி ஆகியிருக்க முடியும் " என்று ஒரு கேள்வியும் எழுப்பி இருக்கிறார் அவர்.
அயோத்தி வழக்கு விசாரணை முடிந்தாலும், கோர்ட் தீர்ப்பை இன்னும் நூற்றாண்டுகளுக்கு வெளியிட மாட்டார்கள் என்று தோன்றுகிறது.
ஒரு கூடுதல் செய்தி:தல அஜித்துக்கும், அவருக்கு ஆதரவு தந்த தலைவர் ரஜினிக்கும் சினிமா துறைக்குள் ஏகப்பட்ட எதிர்ப்புகளும், உள்குத்தல்களும் துவங்கி விட்டன.
பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி. குகநாதன் வெளியிட்டு இருக்கும் ஒரு அறிக்கையை பாருங்கள்.
"சினிமாவுக்காக நமது முதல்வர் கருணாநிதி எவ்வளவோ செய்து விட்டார். அவருக்கு முறையாக விழா எடுக்கிறோம். அதில் பங்கேற்பதில் என்ன கஷ்டம். சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் சிலர் ஆதரவு தருகிறார்கள். வற்புறுத்தலுக்கும், மிரட்டலுக்கும் வித்தியாசம் தெரியாதா? நாங்கள் மிரட்டவில்லை; வற்புறுத்தினோம்.
ஊரோடு ஒத்துப் போகணும் என்று ஒரு பழமொழி உண்டு. அதனை உணர்ந்து அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும் எதிர்த்துதான் நிற்போம் என்றால், இவர்களை எப்படி மேலோ கொண்டு வந்தோமோ... அதே போல் இருக்கும் இடம் தெரியாமலும் செய்து விடுவோம். நாங்கள் பண்பாகவும் கேட்போம். பணிவாகவும் கேட்போம். வற்புறுத்தி அல்லது மிரட்டியும் கேட்போம். என்ன செய்துவிட முடியும் இவர்களால்? அப்படியும் கேட்காவிட்டால் அவர்களை எப்படி ஓரம் கட்ட முடியும் என்ற வழிமுறையும் எங்களுக்கு தெரியும் " என்றார்.
மிக வெளிப்படையாக ஒரு மிரட்டல் விடுத்தது இருக்கிறார் குகநாதன். கட்ட பஞ்சாயத்தும், ரவுடியிசமும் செய்வோம் என்று ஒரு பொது மேடையில் பேசப்படும் அளவுக்கு இருக்கிறது நம் சினிமா துறை.
ஆமை புகுந்த வீடு என்று சொல்வார்கள். அதுபோல அரசியல் புகுந்த எல்லா துறைகளும் இப்படித்தான் இருக்கும்.
(நன்றி இனி அடுத்த வாரம்).
-இன்பா
Posted by IdlyVadai at 2/21/2010 02:10:00 PM 25 comments
Labels: இன்பா, செய்திவிமர்சனம்
Thursday, February 18, 2010
அஜித் - ரஜினி - கலைஞருடன் சந்திப்பு
கலைஞரை இன்று காலை ரஜினி சந்தித்து பேசியுள்ளார். மாலை அஜித்.
ஏன் இந்த சந்திப்பு ?இன்று காலை ரஜினி முதல்வரை சந்தித்துப் பேசியதைடுத்து, மாலை அஜீத் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திம் பெரும் பரபரபப்பு என்று செய்திகள் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
இன்று காலை முதல்வர் கருணாநிதியை ரஜினி திடீரென்று சந்தித்துப் பேசினார். முதல்வரைச் சந்தித்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மகள் சௌந்தர்யா நிச்சயதார்த்தத்திற்கு முதல்வர் குடும்பத்தோடு வந்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவிப்பதற்காக இன்று காலை சந்தித்து பேசினேன்.
அண்மையில் நடந்த திரைப்படத்துறை பாராட்டு விழாவில் நடிகர் அஜீத் பேசியது பற்றி உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ரஜினி,அது அவருடைய உரிமை. அவர் உண்மையை பேசினார். அதற்காக அவரை நான் பாராட்டுகிறேன். நடிகர், நடிகைகளை விழாவுக்கு வரும்படி அழைக்கப்படுகிறார்கள். ஆனால் வர வேண்டும் என்று யாரும் நிர்ப்பந்தம் செய்வதில்லை. அவர்களாகவே விரும்பித்தான் போராட்டங்கள், உண்ணாவிரதம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். முதல்வர் கருணாநிதி பல்வேறு போராட்டங்களை சந்தித்தவர். அவர் யாரையும் நிர்ப்பந்தம் செய்து அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
இன்று மாலை நடிகர் அஜீத் திடீரென்று முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்தார். அப்போது முதல்வர் கருணாநிதிக்கு, அஜீத் சால்வை அணிவித்தார். இந்தச் சந்திப்பு அரை மணி நேரம் நீடித்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜீத், மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாக கூறினார்.
மரியாதை நிமித்தம் என்றால் என்ன ? கலைஞர் டிவியில் 'அந்த' நிகழ்ச்சியின் விளம்பரங்களில் அஜித் பெயர் இனி வருமா ?
கடைசி செய்தி: நடிகர் அஜீத் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
Posted by IdlyVadai at 2/18/2010 11:00:00 PM 49 comments
ரா ரா ரஜினி !
வழக்கமாக ஆவி, பேய், பிசாசு, பூதங்களை வைத்து நம் ஆட்கள் படம் செய்வார்கள். மொழிக்கு தகுந்தார் போல அந்த பேய் தமிழ், தெலுங்கு, கன்னடம் இல்லை மலையாளம் பேசும். எந்த மொழி பேசினாலும் படத்தில் காதலனைக் கொன்ற கொடூரனை காதலி நொங்கெடுக்கும்.
விஷயம் இது தான். இப்படி சினிமாவில் வந்த பேய் அதில் நடித்தவர்களை பதம் பார்க்க ஆரம்பித்திருக்கிறது. கன்னடமொழியில் தனது வேலையை காட்டியிருப்பதால், தமிழ் நடிகர் ஒருவர் அதன் தீங்கிலிரிந்து தப்பிக்க பரிகாரம் செய்து வருகிறார். அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி தான்.
கடைசியாக ஆப்த மித்ரா-2” (கன்னட சந்திரமுகி-2) நடித்து படம் வெளிவருவதற்கு முன்பே விஷ்ணுவர்த்தனை கொன்றது படத்தில் வந்த 'நாகவல்லி' தான் என்று நம்புகிறார்கள்.
இதற்கு முன்பு ஆப்த மித்ரா-1ல் நடித்த சவுந்தர்யாவையும் கொன்றது இதே 'நாகவல்லி' என்கிறார்கள் அதற்கு காரணம் - 2004ல் சவுந்தரியா ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார், படம் ரிலீசுக்கு ஒருமாதம் முன்னர்!
அதன் தமிழ் ரீமேக்கில் நடித்தால் உங்களுக்கு ஏதேனும் கெடுதல் வரலாம் என யாரோ கொளுத்திப்போட, ரஜினி சந்திரமுகி-2 வேண்டாம் என்று முடிவு செய்துவிட்டார்.
இந்த நாகவல்லியிடம் தப்பிக்க தற்போது ரஜினியின் குடும்பமே பரிகாரம் செய்ய மைசூர்ப்பக்கம் உள்ள கோவில்களுக்கு சென்று வந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்னர் சென்று சில யாகங்கள் செய்து முடித்துள்ளார்கள்.
பயப்பட அளவே இல்லைபோல...சரி, அப்படியே நாகவல்லி பழிவாங்க ஆரம்பித்தாலும் மோகன்லாலிடமிருந்தல்லவா அது தொடங்க வேண்டும்? அவர்தான் நாகவல்லியின் காதலனை முதன்முதலில் மலையாளத்திரையில் கொன்றவர். அங்கே ஜெயராம் மாதிரி ஆட்கள் இருப்பதால் பேய்களுக்கு பயம் போல.
படம் பார்த்த நமக்கும் ஏதேனும் ஆகாமல் இருக்க நாகவல்லியை பிரார்த்தனை செய்யுங்கள். நமக்கெல்லாம் யாகம் செஞ்சு கட்டுபடி ஆகாது.
பின்னூட்டம் போடும் அன்பர்கள் ஜாக்கிரதையாக போடுங்க. ஒன்னு கிடக்க ஒன்னு ஆகப் போகிறது!
( Source: TOI )
Posted by IdlyVadai at 2/18/2010 06:10:00 PM 22 comments
Wednesday, February 17, 2010
பாபுவிற்கு உதவுங்கள் !
இந்த மின்னஞ்சலுடன் இரண்டு இணைப்புகள் உள்ளன. இது எனது நண்பர் திரு.சங்கர் அவர்கள் மூலமாக என்னிடம் உதவிக்காக அனுப்பப்பட்டது. இட்லிவடையில் வெளியாகும் இதுபோன்ற செய்திகளுக்கு பலரிடம் இருந்தும் உதவிகள் கிடைக்கும் என்ற செய்தியினை நான் இட்லிவடையில் பலதடவை படித்துள்ளேன். ஆகவே இந்த செய்தியை விசாரித்துவிட்டு தயவு கூர்ந்து தங்களது இட்லிவடையில் வெளியீட்டால் ஒருவருக்கு உதவியதில் பெருமகிழ்ச்சியடைவேன். (விவரங்கள் கீழே)
அப்டேட்
இட்லிவடை நான் அனுப்பியதை இணையதளத்தில் உடனே வெளியிட்டமைக்கு எனது மனமார்ந்த நன்றி. பல வாசகர்கள் வங்கி கணக்கு எண்ணை கேட்டிருந்தார்கள் அதை கீழேக் குறிப்பிட்டுள்ளேன். மேலும் விவரங்கள் அறிய அவரது தொலைபேசி எண்ணையும் கொடுத்துள்ளேன்.
B. Suresh Babu
A/c No.423770366
Indian Bank, Saidapet Branch
Chennai, Tamilnadu, India
Pin-600015.
Cell:9626065801
மேல் விவரங்கள் இங்கே
900 வாசகர்கள் ஆளுக்கு 50/= தந்தால், நாம் இவரை தூக்கி நிறுத்த முடியும்!
Posted by IdlyVadai at 2/17/2010 10:51:00 AM 30 comments
Labels: உதவி
Tuesday, February 16, 2010
படித்ததும்-கிழித்ததும் கவிதை விமர்சனத்துக்கு விமர்சனம்
வெட்டியாய் வீட்டில் உட்கார்ந்த போது
வெயில்நாளில் குட்டிச்சுவர் ஒதுங்கிய அந்த பட்டம்
சின்ன பசங்களை விரட்டியடித்து நானதைக்
கையிலெடுத்த நொடியிலிருந்து படிக்காத எனக்கு பட்டம் வந்து சேர்ந்தது.
இந்த மாதிரி அறிவுபூர்வமா எழுதினா அது கவிதை. எல்லாரும் கவிதை எழுத முடியாது. எழுதவும் கூடாது. கவிதைய விட சமையல் கஷ்டம். அந்த சமையல் பண்ணிண்டே கவிதை விமர்சம் எம்புட்டு கஷ்டம்? இல்லையோ ?
மேல படிங்க.....
இந்த மாசம் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. அவரும் எவ்வளவு நாள் தான் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஊற்றுவார். அதுவும் வெய்யகாலம் வர போகுது (இல்லை வந்துவிட்டதா?) யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல ஒன்றுமே இல்லாத கிணற்றில் எவ்வளவு தான் தண்ணீர் இறைத்து ஊற்றுவார்?
ஜெயமோகன் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் அதை ஹரன்பிரசன்னாவுக்குத்தான் சொல்ல வேண்டும். ஏதோ பஸ்ஸில் பு என்று இவர் கவிதை ஏதோ ஒன்றை எடுத்து போட இவர் ஸ்கூல் படித்த காலத்தில் எழுதிய கவிதைகளை ஒரு கை சாரி இரண்டு கை பார்த்துவிட்டார் மாமி. என்ன இருந்தாலும் அவங்க கை பக்குவம் மாதிரி வராது.
இளைய தலைமுறையை நினைத்தால் பாவமாக இருக்கு. மாமியிடமிருந்து அவர்களை காப்பாத்துவது நம் கடமை இல்லையா ?
இதோ டாப் 10 டிப்ஸ்.
1. மராத்தியில் கவிதை எழுதுவது. மராத்தி தெரியவில்லை என்றால் கமல் பற்றி ஏதாவது கவிதை எழுதுவது. எப்படி இருந்தாலும் இரண்டுமே புரியாது.
2. காய்கறிகளை கொண்டு சமையல் குறிப்பை கவிதையாக எழுதுவது. (கவிதை எழுதுவது கஷ்டம், அதைவிட கஷ்டம் சமையல் குறிப்பு எழுதுவது).
3.சுஜாதாவை பத்தி கவிதை எழுதலாம்
4. இட்லிவடையைத் திட்டி கவிதை எழுதலாம் (பாராட்டி எழுதினால் உங்களுக்கு திட்டு விழும்).
5. ஏதாவது எழுத்தாளர் கிணற்றிலிருந்து தண்ணி எடுத்து ஊற்றும் படம், அல்லது பாரில் தண்ணீர் ஊற்றும் படத்தை ஒரு வருடம் போட கான்ட்டிரக்ட் போடலாம்.
6. கவிதை புத்தகம் ரிலீஸ் செய்யும் போது அவருடைய, மாமியாரை மும்பைக்கு அனுப்பலாம். "as i am suffering from" என்று எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.
7. கவிதை புத்தகம் ரிலீஸ் ஆகும்போது தனியாக கிரிக்கெட்டில் 'மேட்ச் ஃபிக்சிங்' மாதிரி ஏதாவது ஏற்பாடு செய்யாலாம். இதற்கு பெயர் "மேட்ச் ஃபிக்சிங் கார்னர்".
8. நம் சொந்த செலவில் அவங்க வீட்டை மறுபடி மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பித்து முடிக்கவே கூடாது.
9. கவிதை புத்தகத்தில் முதல் பக்கத்தில் இவருக்கு சமர்பணம் ( விமர்சனம் எழுதாமல் இருக்க ) என்று போடலாம்.
10. sify காரர்களிடம் சொல்லி அவங்க வீட்டு இண்டர்நெட்டை பிடுங்கி விடலாம்.
இது எதுவும் முடியவில்லை என்றால் கடவுளிடம் சொல்லி திரும்பவும் அவங்க கடவுச்சொல்லை மறக்கடிக்க வேண்டிக்கொள்ளலாம். நாம் வேற என்ன செய்ய முடியும் ?
Posted by IdlyVadai at 2/16/2010 10:38:00 PM 7 comments
Labels: நகைச்சுவை
எஸ் ராஜம் - பாடும் சித்திரங்கள் - கல்கி கட்டுரை
Posted by IdlyVadai at 2/16/2010 10:25:00 AM 11 comments
Monday, February 15, 2010
மை நேம் இஸ் கான் - விமர்சனம்
படப்பெயரைக் கேட்டவுடன் ஷாருக் கானின் வெற்றிக்கதையைச் சொல்வார்கள் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் படம் பார்த்தபின்புதான் கானின் கதைக்கும், இந்தப்படம் சொல்லும் கதைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.
ஒரு குரூர ஜோக் ஒன்று பல ஆண்டுகளாக உலவுகிறது.. அதாவது எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகளல்ல, ஆனால் எல்லாத்தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே என்று.
இப்படத்தில் ”கான்” என்ற தனதுப் பெயரை ஒட்டுமொத்த முஸ்லிம்களின் பிரதிநிதியாக ஆக்கி மற்றவர்கள் அனைவருக்கும் ஒரு சிலர் செய்யும் செய்கைக்கு எப்படி எல்லா இஸ்லாமியர்களையும் பொறுப்பாக்க முடியும் எனக் கேட்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் அமெரிக்காவின் ஒரு விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனை செய்கின்றனர். மனவளர்ச்சி குறைந்த ( ஆட்டிஸம்) ஷாருக்கானின் கையில் பழக்க தோஷத்தால் சிறு, சிறு கற்களை வைத்து அதை உருட்டிக்கொண்டே இருக்க சோதனை செய்பவர்கள் உஷாராகி அவரை தீவிரவாதி என்ற கோணத்தில் சோதனையிடுகின்றனர். சோதனையில் அவர் ஆட்டிஸம் குறைபாடால் பாதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாள அட்டையும் கிடைக்கிறது. அவரை போகலாம் எனச் சொல்லும்போது ”நான் அமெரிக்க ஜனாதிபதியைப் பார்ப்பேன், அவரிடம் என் பெயர் கான், நான் தீவிரவாதி இல்லை” என்று சொல்வேன் எனச் சொல்லிச் செல்கிறார். அதை அமெரிக்க அதிபரிடம் சொல்வதும், அதற்காக அவர் முயல்வதும், அதன்மூலம் ஏற்படும் சோதனைகளும், இறுதியில் அமெரிக்க அதிபரிடம் அவர் சொல்ல நினைத்ததைச் சொல்வதும்தான் கதை.
2001ல் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. ஆனால் 2010ல் இந்தப் படம் வெளியாகி இருக்கிறது. ஏன் இப்போது இப்படம் வெளியாக வேண்டும் என்பதற்குக் காரணம் ஷாருக் இப்போதுதான் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர் இஸ்லாமியப் என்ற பெயர்கொண்டதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். செய்தியும் சூடாக இருப்பதால் உடனே படமாக்கி விட்டார்கள். அதில் உலகிற்கு ஒரு செய்தியாக “ நல்லவர் மற்ற்றும் கெட்ட்டவர் மட்டுமே உலகில் உண்டு” மதத்தை மட்டுமே காரணம் காட்டி ஒரு இனத்தையே தீவிரவாதிகளாக சித்தரிக்காதீர்கள் என தான் சார்ந்துள்ள இஸ்லாமிய மதத்திற்கு ஆதரவான செய்தியைச் சொல்லி அதைக் காசாக்கவும் செய்திருக்கிறார்.
ரிஸ்வான் கான் (ஷாருக்கான்) மற்றும் அவனது தம்பியும் அன்பான தாயால் வளர்க்கப்படுகின்றனர். ஷாருக்கின் அம்மா மனவளர்ச்சி குறைந்த தனது மகனுக்கு, உலகில் இரண்டுவிதமான மக்களே உள்ளனர். ஒன்று நல்லவர்கள், மற்றவர்கள் கெட்டவர்கள் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதையே தனது வாழ்க்கையின் அளவுகோலாகக் கொண்டு வாழ்கிறார்.
காலப்போக்கில் அண்ணன் வளர்ந்து அமெரிக்கா சென்றுவிட சிறிது காலத்தில் அம்மா மறைகிறார். எனவே தம்பியையும் உடனழைத்துச் செல்கிறார். அண்ணன் அமெரிக்காவில் அழகுசாதனப் ;பொருட்களை தயாரித்துவிற்கும் கம்பெனி வைத்திருக்கிறார். அங்கு ஷாருக்குக்கு விற்பனைப்பிரிவில் வேலை. எனவே அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பார்லர்களுக்கு விறபனைக்குச் செல்கிறார்.
கண்டு பிடித்திருப்பீர்களே, ஆமாம் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உண்டான பின்பு கனவனைப் பிரிந்த கஜோல் ஒரு அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். சிறிது நாள் பழக்கத்திலேயே இருவரும் திருமணம் செய்துகொள்வோம் எனத் தீர்மானிக்கும் அளவு நட்பு வளர்கிறது. கஜோலுக்கு ஏற்கனவே சொன்ன ஒரு கசப்பான பிளாஷ்பேக்கும் உண்டு. நல்லவேளையாக அதை படமாக்காமல், ஷாருக்கே கண்டுபிடித்து பார்வையாளர்களுக்குச் சொல்லிவிடுகிறார். அதெப்படிய்யா இப்படிக் கலியாணம் செஞ்சுப்பாங்க என்பவர்களுக்கு, கஜோலும், ஷாருக்கும் நடித்தால் அவர்கள்தான் திருமணம் செய்துகொள்வார்கள் என்பதும் அது இயல்புதான் என்பதும் தெரிந்திருக்கும். மற்றவர்களுக்குத்தான் இந்த சந்தேகமெலாம் எழும்.
கஜோலை திருமணம் செய்ய ஷாருக் முடிவெடுப்பதை மதத்தைக் காரணம் காட்டி எதிர்க்கிறார் சகோதரர்.. ஷாருக்கைப் பொருத்தவரை உலகில் நல்லவர் மற்றும் கெட்டவர் மட்டுமே இருப்பதால், கஜோலை நல்லவர் என்ற அடிப்படையில் மணம்புரிகிறார். .
வாழ்க்கை கஜோலுடனும், கஜோல் மகனுடனும் இன்பமாய்க் கழிகிறது. கஜோலும் மந்திராகான் ஆகிறார். மகனும் சமீர்கான் ஆகிறான்.
இந்த நிலையில் செப்டம்பர் 11 நடக்கிறது. இரட்டைக் கோபுரத்தின்மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்கி அந்தக் கட்டிடம் அழிந்தபின்பு அமெரிக்காவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கிறது. இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு, அவநம்பிக்கைகள் எப்படி இருந்தது என்பதை அங்கு இஸ்லாமியர்கள் கடையில் அமெரிக்கர்கள் வந்து கிண்டல் செய்வதன் மூலமும், ஷாருக்கின் அண்ணி வேலை செய்யும் கல்லூரியில் செப்டம்பர் 11க்குப் பிறகு அவரது மாணவர்களின் பார்வை மாறும் விதத்தை வைத்தும், கஜோலின் மகனை சக மானவர்கள் ஒதுக்கி வைப்பதன் மூலமும், அவர்கள் அவனை இஸ்லாமியன் என்பதற்காக ஒசாமா பிலேடன் படத்தை அவனது பள்ளி லாக்கரில் வைப்பதன்மூலமும் அழகாக காண்பிக்கின்றனர். அந்த வெறுப்பின் நீட்சியாக கால்பந்து மைதானத்தில் வைத்து இஸ்லாமியன் என்பதற்காக அமெரிக்கச் சிறுவர்கள் அடித்துத் துவைக்கின்றனர், குற்றுயிரும் குலைஉயிருமாய் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் இறக்கிறான்,அந்த 13 வயதுச் சிறுவன்.
அவனது வெள்ளைக்கார நண்பன் இதனைப் பற்றி தெரிந்திருந்தும் கொலை செய்தவர்களால் மிரட்டப்படுவதால் சொல்லாமல் இருக்கிறான். இதனால் அச்சிறுவனைக் கொன்றவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைப்பதில்லை. மத துவேஷத்தால்தான் அமெரிக்கர்களை காவல்துறை கைது செய்வதில்லை என நினைக்க நேரிடுகிறது கஜோலுக்கு. கஜோல் காவல் அதிகாரிகளிடம் எனது மகனைக் கொன்றவர்களை நானே கண்டுபிடிப்பேன் எனக் கூறிச் செல்கிறார்,
மகன் இறந்த ஆத்திரத்தில் கஜோல் ஷாருக்கிடம், உன்னைத் திருமணம் செய்து கொண்டதாலும், எனது மகனுக்கும் “கான்” என்ற அடைமொழியை அவனுக்கு வைத்ததாலும் அதுவே அவனுக்கு எமனாக அமைந்தது. எனவே என்னைவிட்டுப்போய்விடு என ஒரு பலவீனமான தருணத்தில் சொல்லிவிடுகிறார். எனவே அப்படியே அமெரிக்கா முழுக்க சுற்றி வருகிறார் ஷாருக். ஓரிடத்தில் அமெரிக்க அதிபர் ( புஷ்) வருகைக்கு ஏற்பாடாகி இருக்கிறது. அங்கு சென்று "Mr.President, My Name Is Khan and I am not a terrorist" எனக் கத்துகிறார். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்றிருப்பதுபோல அவர் கூறிய டெர்ரரிஸ்ட் என்ற வார்த்தையை மட்டும் கவனிக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்துவிட, அப்போது அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி சேனலுக்காக படம்பிடிக்கும் குழு ஷாருக் பேசியதையும் பதிவு செய்கிறது. அதை வைத்து ஒரு நிகழ்ச்சி தயாரிக்கவும், ஷாருக்குக்கு உதவவும் முயல்கின்றனர்.
முதலில் தயங்கும் நிகழ்ச்சி இயக்குனர் பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். நிகழ்ச்சி ஒலிபரப்பான பின்பு ஷாருக்கின் வழக்கை விசாரிக்கும் நீதிபதி அவர் கைது செய்யப்படும் முன் எஃப்.பி.ஐக்கு பேசிய தொலைபேசி உரையாடலைப் போட்டுக் கேட்கிறார். அங்கு மசூதியில் நடக்கும் வெறுப்பியல் பிரச்சாரத்தைக் கூறி அதற்கு ஒரு டாக்டர் பட்டம் பெற்றவர்தான் காரணம் என்பதையும் ஷாருக் எஃப்,பி.ஐக்கு சொல்லி இருப்பது தெரியவர ஷாருக் விடுதலையாகிறார்.
ஷாருக் விடுதலைக்குப் பின்னர், காட்டிக்கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த தீவிரவாதக்குழு உறுப்பினன் ஒருவன் ஷாருக்கைக் கத்தியால் குத்த சாக கிடந்து பின்னர் பிழைக்கிறார். ஷாருக்கைப் பற்றி முழு உண்மையும், நல்ல மனத்தையும் அறியும் கஜோல் ஷாருக்கிடம் சேர்கிறார். அட்லாண்டாவுக்கு வரும் அமெரிக்க அதிபரைப் பார்க்கச் செல்கிறார் ஷாருக், நான் தீவிரவாதி இல்லை எனச் சொல்வதற்காக. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஷாருக் செய்த உதவியைப் பற்றி தெரிந்த அதிபரே ஷாருக்கைப் பார்க்க விரும்ப அவரைச் சந்திக்கிறார் கான். அவரிடம் “ My Name is Khan and I am not a Terrorist" என்கிறார். தெரியும் என்கிறார் அதிபர். கான் என்ற பெயர் வைத்ததாலேயே என மகனை இழந்தேன் எனக்கூறும் ஷாருக்கிடம் வருத்தம் தெரிவிக்கிறார் அதிபர்.
படம் முழுக்க இஸ்லாமியர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதுபோலவும், இரட்டைக் கோபுரத்தில் உயிரிழந்தவர்களைப் பற்றியும் அதிகம் அலட்டிக்கொள்ளவே இல்லை. அங்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபடும் ஷாருக்கை மற்றவர்கள் விரோதமாகப் பார்ப்பதுபோல சித்தரித்தரிப்பது சினிமாத்தனமாக இருக்கிறது.
மசூதிகளில் நடக்கும் வெறுப்பியல் பிரச்சாரம் குறித்து காட்டிக் கொடுக்கிறார். முழு கண்கானிப்பு இருக்கும் அமெரிக்க மசூதிகளிலேயே இப்படி நடக்கிறதெனில், சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக கொலைபாதகத்தில் நேரடியாக ஈடுபட்டவனையே இன்னும் விசாரனை என்ற பெயரில் போஷித்து வரும் இந்தியாவின் மசூதிகளில் எவ்வளவு வெறுப்பியல் பிரச்ச்சாரம் நடைபெறும் எனபதை நினைக்கவே பயமாய் இருக்கிறது.
ஷாருக்கான் இந்தப் படத்தின் வெற்றிக்கு யாருக்கேனும் நன்றி சொல்வதாய் இருந்தால் அது பால்தாக்கரேவுக்கு மட்டுமே. ஒரு சராசரிப் படத்தை, இஸ்லாமிய தீவிரவாதத்தை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும் வெறுப்பை மட்டும் கண்டிக்கும் இந்தப்படம் சாதாரனமாக வந்து போயிருக்கும்,. அதை இந்த அளவு பி.ஆர்.ஓ வேலை பார்த்துக் கொடுத்த பால்தாக்கரேவுக்கு நன்றி சொல்ல வேண்டும் ஷாருக்.
காஜோல் - ஷாருக் கெமிஸ்ட்ரி வழக்கம்போல, நன்று.
நல்லவேளை, ஷாருக்குக்கு அமெரிக்க விமான நிலையத்தைல் ஒரு அவமதிப்பு நடந்ததால் இப்படி ஊருக்கு உபதேசம் செய்ய புறப்பட்டு விட்டார் ஷாருக். இதுவரை வேறு யாருக்கோ நடந்ததால், இதெல்லாம் ஒரு மேட்டராகவே கண்டுகொள்ளப்படாமலிருந்தது.
ஒருமுறை விரும்பினால் பார்க்கலாம். பார்த்தே ஆகவேண்டிய படமல்ல.
- ஜெய் ஹனுமான்
இந்த படத்தை அமெரிக்க மக்களுக்கும், அமெரிக்க அதிபருக்கும் கோபமே வரகூடாது என்று கான் அறிவுரை சொல்லுவதாக இருக்கும் போல!.
Posted by IdlyVadai at 2/15/2010 02:24:00 PM 51 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம், ஜெய் ஹனுமான்
Sunday, February 14, 2010
என் வீட்டில் நட்சத்திரம் - ரா.கி.ரங்கராஜன்
Posted by IdlyVadai at 2/14/2010 08:30:00 PM 14 comments
சன்டேனா இரண்டு (14-2-10) செய்திவிமர்சனம்
இந்த வார செய்திகள்...காதலர் தின ஸ்பெஷல்
செய்தி # 1
'இந்த உலகில் காதலிக்காதவர்கள் எல்லாம் ஒரு கண்ணால் மட்டுமே உலகத்தை பார்த்தவர்கள்' என்கிறார் வைரமுத்து. காதல் போயின் சாதல் - இது பாரதியாரின் வரிகள்.
காதல் கடந்து போகாத கவிஞனும் இல்லை...மனிதர்களும் இல்லை. அவ்வாறு கடந்து போன காதல் மேகங்களில் ஒன்றின் கதை இது.
அது கடற்கரைக்கு மிக அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் இருக்கும் கல்லூரி. அங்கு் நான் முதுகலை படிப்பு படித்து கொண்டு இருந்த சமயம். எந்நேரமும் கடல் காற்று தலை கோதும் கல்லூரி. அனுமதி இல்லாமல் வகுப்பு அறைகளுக்குள் நுழைந்து, புத்தகங்களின் பக்கங்களை பட படவென புரட்டும் காற்று,படிக்கும் பெண்களின் கூந்தலில் இருந்து பூக்களையும், சில காதல்களையும் மாணவர்கள் மீது வீசும் கல்லூரி.
'அவள்' என்னுடன் ஒரு வகுப்பில் படித்தாள். முதுகலை என்பதால் பெண்கள் அனைவரும் கண்டிப்பாக புடவை அணியவேண்டும் என்பது எங்கள் கல்லூரின் விதி. வசதியான வீட்டு பெண்ணானஅவள் தினம் ஒரு புடவை...அதற்க்கு ஏற்றது போல ஒரு அழகான குடையும் பிடித்த படி.அவள் வரும் அழகே தனி. தோழிகள் புடை சூழ வந்தாலும், அவள் நிலவு போல தனித்து தெரிவாள்.
என்னை போலவே பல மாணவர்கள் 'பாதிக்க' பட்டு இருப்பது, கல்லூரியில் சேர்ந்த சில நாட்களில் தெரிந்து விட்டது. என் நண்பன் ஒருவன் அவளின் காலடி தடங்களில் தனது வாழ்வின் சுவடுகளை தேடினான்.
'அவள்' பற்றி நான் எழுதிய கவிதை ஒன்று.
அவள் கூந்தலுக்கு
மட்டும்...
இரண்டு பக்கமும்
பூக்கள்
ஒரு நாள் அவளிடம் தனியே பேசிய ஒரு சந்தர்ப்பத்தில், 'சில பேரை பார்த்த உடனே பிடித்து போகும். உன்னையும் எனக்கு அப்படித்தான் முதல் தடவை பார்த்த போதே பிடிச்சி போச்சி' என்று நானும் ஒரு 'பிட்டை' போட்டேன்.
'பொய்யி' என்றாள். பொய் என்ற வார்த்தையே அழகானது. உலகத்திலயே மிக சிறிய அழகான கவிதை, பெண்கள் வெட்கப்பட்டு சொல்லும் 'ச்சீ' என்ற வார்த்தைதான் என்றான் ஒரு கவிஞன். அதுபோலவே இந்த பொய் என்றவார்த்தையும்.
நாட்கள் உருண்டோடின. ஒரு நண்பனாக மட்டுமே நான் பழகினேன். அவ்வாறே நேர்ந்தது. படிப்பின் இறுதி ஆண்டு வந்தது.
மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் அவளிடம் கேட்டேன். ' அப்புறம் என்ன...மேரேஜ் தானே ' என்றேன். 'ஆமாம்..வீட்டுல அமெரிக்காவுல இருக்கிற மாப்பிள்ளையா பாக்குறாங்க. எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு. அங்கேயே செட்டில் ஆனா, எங்க நெக்ஸ்ட் ஜெனரேஷன் நல்லா(?) இருக்கும்ன்னு நினைக்கிறேன்.தவிர, அங்கே நிறையே சொந்தகாரங்க இருக்காங்க' என்றாள் தீர்மானமாக. 'வாழ்த்துக்கள்' கூறி விடை பெற்றேன்.
பிறகு பணி நிமித்தமாக அரபு நாடு ஒன்றுக்கு நான் வந்து விட, நான்கைந்து வருடங்கள் கடந்து விட்டன. அவளின் தொடர்பு முற்றாக நீங்கி விட்டது. சமிபத்தில் எனக்கும், அவளுக்கு்மான என் இன்னொரு வகுப்பு தோழியை சந்தித்தபோது 'அவள்' பற்றி நான் விசாரித்த போது, அந்த தோழி சொன்னது இது.
"அவ விரும்பின மாதரியே அமெரிக்காவுல இருக்கிற சாப்ட்வேர் எஞ்சினியர் ஒருத்தரைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டா. ஆனா, அவனுக்கு அவள் அழகா இருக்கறதுனாலே அவ மேல பயங்கர சந்தேகம்.மாமனார், மாமியார் கூட தான் அவ தனியா இருக்கா. ஒரு பெண் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் அவள இங்க விட்டுட்டு அமெரிக்கா திரும்ப போய்ட்டான். வீட்டுக்கு நாங்க போன் பேசினாலே, அவங்க வீட்ல இருக்கறவங்களுக்கு பிடிக்காது. கிட்டத்தட்ட ஹவுஸ் அர்ரஸ்ட் என்று சொல்லலாம். அப்படித்தான் இருக்கா. கொஞ்சம் கூட நிம்மதி இல்லாத லைப்." என்றாள்.
என்ன செய்வது. சந்தேகம் என்ற வியாதி எத்தனை படித்து இருந்தாலும், எங்கு வேலை பார்த்தாலும் மனிதனை விட்டு விலகுவதை இல்லை என்று தோன்றுகிறது.
இப்போது எல்லாம் திருமண விஷயத்தில் படிப்பு, வேலை,வசதி வாய்ப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் 'கேரக்டருக்கு' தரப்படுவதில்லை.அவள் கல்லூரியில் படித்த போது, தன்னை காதலித்த பலரில், யாரையாவது ஒருவரை தெரிவு செய்து இருந்தால், அவள் வாழ்க்கை நன்றாக இருந்து இருக்கும் என்றும் தோன்றுகிறது.
கல்லூரி வாழ்க்கையில் நாம் காணும் கனவுகளின் வண்ணங்கள், அதற்க்கு பின்வரும் நிஜ வாழ்க்கையில் சாயம் போவது எல்லாருக்கும் பொதுவான சோகம்தானே?
செய்தி # 2
எதை கேட்டாலும்
வெட்கத்தை தருகிறாய்
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்.
இதை எழுதியவர் தபு சங்கர்.காதல் கவிதைகள் எழுதுவதற்கு என்றே பிறந்தவர். காதல்...காதல்..காதல்..காதல் போயின் சாதல் என்ற பாரதியின் வார்த்தைகளை வாழ்க்கையாகவே வைத்து இருக்கிறார்போலும்.
'வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்' - காதலிப்பவர்கள் அல்லது காதலிக்க போகிறவர்கள் படிக்க வேண்டிய கவிதை தொகுப்பு.
அவரின் காதல் கவிதைகளில் சில காதலர் தின ஸ்பெஷலாய் .உங்கள் பார்வைக்கு...
எனக்கு
லீப் வருடங்களைத்தான்
ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது.
அந்த வருடங்களில்தான்
இன்னும் ஒரு நாள்
அதிகமாக வாழலாம் உன்னோடு.
நீ எந்த உடையிலும்
கவிதையாகத்தான் இருக்கிறாய்
சேலை கட்டியிருக்கும் போதுதான்
தலைப்புடன் கூடிய கவிதையாகிறாய்.
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது....
"ஏன் இந்த பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது?" என்று.
தபு சங்கர் ஒரு படம் இயக்குவதாக ஒரு செய்தி படித்தேன். படத்தின் தலைப்பு 'லைலா மஜ்னு விளையாட்டு' என்று தொடங்கி, பின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்று மாற்றியிருப்பதாக தெரிகிறது. வேறு என்ன காதல்கதைதான்.டி, இமான் இசை அமைக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.தமிழ் சினிமாவுக்கு மீண்டும் காதலுக்கு மரியாதையை தரும் இன்னொரு இயக்குனர் கிடைப்பார் என தெரிகிறது.
உன்னைக் காதலித்துக்
கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா
என்பது தெரியாது.
ஆனால்
நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்
கொண்டிருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
(நன்றி..இனி அடுத்த வாரம்).
-இன்பா
Posted by IdlyVadai at 2/14/2010 06:16:00 PM 21 comments
Labels: இன்பா
Friday, February 12, 2010
அவதார் - விமர்சனம் ( புதிய காப்பி )
பழைய படம் புதிய காப்பி என்று விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். அதே போல தான் இந்த விமர்சனமும்..
இந்திப் பெயர் கொண்டு அவதாரம் என்ற பொருள்படும்படி அமெரிக்க தயாரிப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ்கேமரூன் எடுத்த இந்தத் திரைப்படத்தை, வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தபோது ஐமாக்ஸில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இந்தப் படத்தை 3டியில் பார்க்காதவர்கள் ஒரு அருமையான அனுபவத்தை இழப்பார்கள். நல்ல இருக்கையில், இதமான குளிர்பதனத்தில், சுத்தமான 3டி கண் கண்ணாடி அணிந்து இந்தப் படத்தை ரசித்தேன். தியேட்டரில் பார்ப்பதைப் போலில்லாமல் பாண்டோரா உலகத்திற்கே சென்று வந்த அனுபவத்தை அது வழங்கியது.
ஒரு மனிதனின் கற்பனா சக்திக்கு அளவேயில்லை எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். பல திரைப்படங்களிலும் சே, கலக்கிட்டான்யா, இனிமே இப்படி ஒரு படம் வரப்போறதில்லை என எத்தனையோ படத்தைப் பார்த்துப் பேசி இருப்போம். ஆனால் இந்தப்படத்தை பார்த்தபின்பு நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம், நமக்குக் கிடைத்திருக்கும் திரைப்படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் எப்படிப் பட்ட கற்பனாசக்தி / வறட்சி கொண்டவர்கள் என்ற எண்ணம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை.
ஒரு பேட்டியில் ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்திற்கான கரு டைட்டானிக் திரைப்படம் தயாரிபதற்கு முன்பே உதித்ததாகவும், ஆனால் அவர் மனதில் நினைப்பதை நிஜத்தில் எதிர்பார்க்கும் அளவு தொழில்நுட்பம் வளராதபடியினால் அவர் நினைத்தபடி எடுக்க இயலாதென்பதால் தொழில்நுட்பம் வளரும்வரை காத்திருந்ததாகவும் சொல்லியிருந்தார்.
கேமரூனின் மனவிசாலத்திற்கு இதைவிடச் சிறந்த உதாரனம் வேண்டாம்.
சரி, படமாவது ஏதாவது கொலை, கொள்ளைகளை நியாயப்படுத்தும் படமா, இல்லை ஏசுதான் சாமி மற்றதெல்லாம் ஒன்றுமில்லை எனும் படமா, இல்லை உலகம் முழுக்க அமெரிக்கா செய்யும் அட்டூழியங்களைச் சொல்லும் டாக்குமெண்டரியா, எதுவும் இல்லை.. பின்னர் ஏன் இப்படி உலகம் முழுதும் மக்கள் சாரிசாரியாக இந்தப்படத்தைக்காண குவிகிறார்கள்?
எப்படி அமெரிக்காவில் இருக்கும் ஒரு இயக்குனரால் உலகம் முழுக்க இருக்கும் மக்களின் மனம் கவரும்படி படமெடுக்க முடிகிறது.?
அதை கனவில் நினைக்கவும், நினைவில் உருவாக்கவும் சாத்தியமும் பட்டிருக்கிறது?
ஏனெனில், படம் சொல்வது இன்றைய உலக நடப்பை. நமது மனதிற்கு தெரிந்த உண்மைகளான, நமது வசதிகளுக்காக காலில் போட்டு மிதித்துவிட்ட மனிதாபிமானம், சக உயிர்களைப் பேணும் குணம், இயற்கையை வணங்கும் நமது ஆதி குணம், இவையெல்லாம்தான் இப்படி இந்தப் படத்தின் பால் வசீகரிக்கிறது என்பதுதான் உண்மையாய் இருக்க முடியும்.
நம்மிடம் இருந்த ஒரு குணத்தை இன்னொருவனிடம் காணும்போது ஏற்படும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியே / அன்பே அல்லது ஒத்த அலைவரிசை உள்ள ஒருவனைக் காணும்போது ஏற்படும் ஆனந்தமே இப்படத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது.
இயற்கையுடன் இசைந்து வாழ்வது நமது மரபு. மரங்களை வணங்கினோம், வணங்குகிறோம், நதியை வணங்கினோம், வணங்குகிறோம், மலையை வணங்கினோம், விலங்குகளை நமது கடவுளுடன் இனைத்து நாம் நேசித்தோம். அதை நமது அடுத்த தலைமுறைக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்தோம்.
ஆனால் நாகரீகத்தின் பெயராலும், உலகமயமாக்கல், வணிகமயமாக்கலின் பெயராலும், அரிசியும், கோதுமையும் எப்படி விளைகிறது, மண்புழு எப்படி இருக்கும், காட்டு விலங்குகள் என்றால் என்ன, எப்படி மழை பொழிகிறது, அதற்கான ஆதார வளங்கள் என்ன, மரங்கள், சுத்தமான காற்று என்று எதைப்பற்றியும் கொஞ்சம்கூட தெரியாத, அல்லது புத்தகத்தில் மட்டுமே பார்த்து வளரும் ஒரு பொறுப்பற்ற தலைமுறையை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம். அந்த பொறுப்பற்ற தலைமுறையை உருவாக்கிய, அந்த இயற்கையை வணங்கிய பெரியவர்களான நாமும், இயற்கையை சுரண்டலுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க, ஐரோப்பியர்களும் சேர்ந்து தங்களை இந்தப் படத்தில் மீட்டெடுக்கின்றனர்.
படம்பார்க்கும் ஒவ்வொருவரும் ஆரம்பம் முதல் இறுதிவரை அந்த உலகத்திலேயே கிட்டத்தட்ட வாழ்கின்றனர். அப்படி வாழும் உணர்வை நமக்குக் கொடுப்பதுதான் ஜேம்ஸ் காம்ரூனின் சாதனை...
ஒரு அபூர்வ தனிமத்தைக் கைப்பற்ற பாண்டோரா என்ற கிரகத்திற்கு மனிதக் குழு ஒன்று செல்கிறது. அவர்களைப் பற்றிய தகவல்களை முழுதும் பெற்று அந்தக் கிரகத்தில் வாழும் மனிதர்களைப் போன்ற மனிதர்களை செயற்கையாக உருவாக்கி அங்கே உலவவிட்டு அதைக் கைப்பற்ற நினைக்கிறது மனிதர் குழு.
அதில் அவர்கள் வெற்றி பெற்றார்களா இல்லையா என்பதுதான் கதை.
ஆனால் அந்த உலகத்தைச் சிருஷ்டித்து, உயரமான, நீலநிறம்கொண்ட, ஒருவருக்கொருவர் நேசித்து வாழும் ஒரு மனிதகுலத்தை பாண்டோரா கிரக வாசிகலாக கான்பித்து, வில்லன்களாக மனிதகுலத்தைக் காண்பித்தாலும் பேராசை கொண்டு உலகையே தனது காலனியாக்கி சுரண்டலுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய மக்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் போல இந்தத் திரைப்படம் அமைந்துள்ளது.
அதில் பாண்டோரா கிரக மக்களின் வாழ்க்கை முறை, சக உயிர்களுடனான அவர்களது தொடர்பு முறைகள், இயற்கையை வணங்கி வாழும் முறை, ஒரு பெரிய மரத்தைச் சுற்றி அந்த கிரகத்தின் வாழ்க்கையின் அச்சானி இருப்பது என ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார் இயக்குனர்.
மனிதர்கள் உள்ளே நுழைந்ததும் அந்த கிரகத்தின் சமநிலை கெடுகிறது. மனிதர்கள் உருவாக்கும் அழிவுகளை கண்டு படம்பார்க்கும் நமது மனம் பதைக்கிறது, கொஞ்சம்கூட இரக்கமின்றி இன்னொருவரது சொத்தை அபகரிக்கத் துடிக்கும் நமது வல்லரசுகளின் நிஜமுகம் அங்கு தெரிகிறது. தனக்குப் போக மீதமுள்ளதுதான் பிற உயிர்கள் மற்றும் மனிதன் வாழ்வதற்கு என எண்ணும் அவர்களது அகங்காரம் அதில் தெரிகிறது. அவர்கள் பாண்டோரா கிரக வாசிகளால் வீழ்த்தப்படுவது நமக்கு உவகை அளிக்கிறது. இதைக் கானும் ஒவ்வொரு குழந்தைகளும் மனம் மாறினால் உலகம் எப்படி அமைதியாய் இருக்கும்? நிச்சயம் ஒரு சிறு சலனமாவது ஏற்பட்டிருக்கும் இந்த உலகத்தில். அதை ஏற்படுத்தியிருந்தால் நமது மனதில் இன்னும் ஈரமிருக்கிறது என்பது மீண்டும் நிரூபனம் ஆகும். ஜேம்ஸ் கேமரூனின் உழைப்பிற்கு நாம் கொடுக்கும் சிறந்த மரியாதையாகவும் இருக்கும்.
புத்தாயிரம் ஆண்டு ஆரம்பித்து வந்த திரைப்படங்களில் இதைவிட சிறந்த படம் வந்ததில்லை என்பேன் நான்.
- ஜெய் ஹனுமான்
Posted by IdlyVadai at 2/12/2010 09:43:00 AM 15 comments
Labels: சினிமா, விமர்சனம், ஜெய் ஹனுமான்
Thursday, February 11, 2010
மைடியர் பாடிகாட் முனீஸ்வரனே! - 11-2-2010
முனிக்கு இவ எழுதும் கடிதம்...
அன்புள்ள முனி,
நேற்று ஜெ சோனியா சந்திப்பிற்கு பிறகு ஜெயின் பேட்டியை போட்டுவிட்டு,
மாலையில் காங்கிரஸ் "எங்களுக்கும் திமுகவிற்கு" சுமூக உறவு இருக்கு என்று அறிக்கை விடுவார்கள் என்று எழுதியிருந்தேன். அதே மாதிரி அறிக்கை வந்தது.
அது அரசியல், ஆனால் தலைமை தேர்தல் கமிஷனர் நவீன்சால்வா "சோனியா-ஜெயலலிதா சந்திப்புக்கு நான் ஏற்பாடு செய்யவில்லை" என்றுஅறிக்கைவிடுவதைப் பார்த்தால் தேர்தல் கமிஷன் சுப்பிரமணிய சாமி மாதிரி ஆகிவிடுவாரோ என்று பயமாக இருக்கு. இவர் எதற்கு முந்திரிகொட்டை மாதிரி இந்த அறிக்கை விடுகிறார் ? இவரை பற்றி பழைய தேர்தல் கமிஷனர் எழுதிய 70+ பக்க கடிதம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அதில் இவருக்கு இருந்த காங்கிரஸ் பக்தி பற்றி கேட்கவே வேண்டாம்.
தமிழ் ஹிந்துவில் தேசிகன் எழுதும் பக்தி தொடரில் பக்தி என்றால் அன்பு, காதல் என்று சொல்லியிருக்கார். அதை சிலர் படித்ததின் விளைவு இப்ப வேலூர் மாவட்டத்தில் சோளிங்கர் யாதவபுரியில் வேலண்டைன்ஸ் ஸ்ரீகிருஷ்ணர் கோயில் வந்துவிட்டது. இது வழக்கமாக கோயிலாக இல்லாமல், காதல் கோயிலாக இருக்குமாம். கிருஷ்ணர் மாதிரி பலரை காதலிக்காமல் இருக்கும் வரை ஓ.கே. இனிமே வருடா வருடம் வரும் காதலர் தினத்துக்கு இந்த கோயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். பக்தி என்றால் காதல் தானே ! இனிமேல் சினிமா காதல் பாடல்களில் ஹீரோ ஹீரோயின் இங்கே டான்ஸ் ஆட ஆரம்பிப்பார்கள்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக லோக்கல் சிவசேனா மாதிரி கட்சிகாரர்கள், இந்த மாதிரி காதல் கோயிலுக்கு என்ன செய்யவார்கள் ? எதிர்ப்பும் தெரிவிக்க முடியாது, ஆதரவும் தெவிக்க முடியாது. இவர்கள் கலைஞரிடம் தான் டியூஷன் எடுக்க வேண்டும்.நேற்று கலைஞருக்கு ஒரு விழா. என்ன விழாவா இருக்கும் ? அதே தான் விருது விழா! "திருக்குறள் பேரொளி' விருது வழங்கப்பட்டது அந்த விழாவில் கலைஞர் "நான் எழுதிய திருக்குறள் உரையில் நாத்திகத்தை திணிக்கவும் இல்லை, ஆன்மிகத்தை புறக்கணிக்கவும் இல்லை" என்று சொல்லியிருக்கார். எப்படி பேசுவது என்று இவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். ஏதோ சொல்லுகிறார் ஆனால் என்ன என்றுதான் புரியவில்லை.
விளையாடு வீரர்கள் செய்வதும் பல சமயம் புரிவதில்லை. இங்கிலாந்து மற்றும் செல்சி அணிகளின் கேப்டனான 29 வயது ஜான் டெர்ரி இங்கிலாந்த இளைஞர்களின் ரோல்மாடல். ஆனால் இவர், சக வீரரின் காதலியுடன் தொடர்பு வைத்த விவகாரம் தொடர்பாக இவர் கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. டைகர் உட்ஸை தொடர்ந்து மக்கள் விரும்பி பார்க்கும் விளையாட்டாக இது இருக்கிறது.கொஞ்சம் சீரியஸான டைகர் பற்றி பேசலாம். இந்தியாவின் தேசிய விலங்கினம் புலி. ஸ்கூல் பசங்க அப்படி தான் படிக்கிறார்கள். உலகிலேயே மிகவும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட, ஆபத்தான விலங்கினம் புலி. நான் சொல்லுவது பெங்கால் டைகர் பற்றி. புலியின் உயரம், நீளம் யாருக்காவது தெரியுமா ? 4 அடி உயரம், 10 அடி நீளம். புலிகள் அழிந்துவிட்டதாக தற்போது பல பத்திரிக்கைகள் கவர் ஸ்டோரி போட்டார்கள், நிஜ புலிகளுக்கும் அதே கதி தான். இந்தியாவில் 1970 களில் சுமார் 40,000 என்ற எண்ணிக்கையில் இருந்த புலிகளின் இன்றைய தொகை வெறும் 3642 தான். அதை விட குறைவாக கூட இருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். யார் காரணம் ? நாம் தான்.
அது மட்டும் இல்லை, இன்று உலகிலுள்ள மொத்தம் 16 புலிவகைகளில் இன்று எஞ்சியிருப்பது வெறும் 3 தான். ஜாவா, மற்றும் பாலி தீவுகளின் புலிகள் இனம் 1972 லேயே முற்றிலுமாக அழிந்து விட்ட்து. தெற்கு சீனாவின் புலிகள் இனத்தின் தற்போதைய எண்ணிக்கை வெறும் 26. சீனாவில் மொத்தமே 50 புலிகளுக்கும் குறைவாகத்தான் இருக்கிறது. மிகவும் புகழ்பெற்ற சைபீரிய வெள்ளைப் புலிகள் இனமும் அநேகமாக அழிந்தே போய்விட்டது. மீதமிருப்பது ஒன்றோ இரண்டோதான்.
ஏன் இந்த மாதிரி ஆகிறது என்று பார்த்தால் அயல்நாட்டு சந்தைகளில் புலிகளின் தோல், எலும்பிற்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. இப்படியே போய்கொண்டு இருந்தால் புலி என்றால் கூகிள் இமேஜில் தேடி பார்க்க வேண்டிய நிலமை வரும்.
சென்ற வாரம் துக்ளகில் வந்த தலையங்கத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது ஆனால் பலரின் மனதில் உள்ளதை தைரியமாக எழுதியிருக்கார் சோ. சில பகுதிகளை இங்கே தருகிறேன்.இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல், பொதுவாகத் தமிழகப் பத்திரிகைகளிடம் ஒரு மாதிரியான விரக்தியைத் தோற்றுவித்திருக்கிறது. ராஜபக்ஷவைத் தோற்கடிக்க, எதிர்க் கட்சிகள் (தமிழ்க் கட்சியும், தீவிர சிங்களக் கட்சியும் உட்பட) இணைந்து, முன்னாள் ராணுவ தளபதியை பொது வேட்பாளராக நிறுத்திய நேரத்திலிருந்து – தமிழகப் பத்திரிகைகளிடையே ஒரு பரபரப்பு உண்டானது. இதுவரை இலங்கைத் தேர்தலைப் பற்றி, இங்கு காணப்படாத உற்சாகம் இப்போது தோன்றியது.
விடுதலைப் புலிகளை வீழ்த்தி, அவர்களுடைய தலைவரின் வாழ்வையும் முடித்துவைத்த ஆட்சியின் தலைவர் என்பதால், தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களுக்கும், ஈழப் பிரச்சாரகர்களுக்கும், தமிழ் ‘இன’ உணர்வாளர்களுக்கும், ராஜபக்ஷ மீது ஒரு விசேஷ வெறுப்பு உண்டாகி விட்டது.
இவர்களில் பலர் தமிழ்ப் பத்திரிகை உலகத் தொடர்புகள் மிக்கவர்கள்; இதனால் இவர்களுடைய வெறுப்பு, பத்திரிகை உலகிற்கும் பரவியது. தமிழ்ப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு, இருவகைப் பட்டது.
ஒன்று – உண்மையிலேயே, ராஜபக்ஷ தமிழர் விரோதி என்று நம்பிய வகை; மற்றொன்று ராஜபக்ஷவை மிக மோசமாகச் சித்திரிப்பது பத்திரிகை வியாபாரத்திற்கு உதவும் என்று நம்பிய வகை. இப்படி தமிழ்ப் பத்திரிகைகள் பல, ‘ராஜபக்ஷ வீழ்ந்தால், தமிழர்கள் வாழ்வார்கள்’ என்ற கருத்துக்களையும்,அதற்கேற்ப செய்திகளையும் வெளியிட, இது சில ஆங்கிலப் பத்திரிகைகளையும்(‘ஹிந்து’ பத்திரிகை அல்ல) பாதித்தது.
சோவின் insight வழக்கம் போல வியக்கவைக்கிறது. விகடன், குமுதம் போன்ற பத்திரிக்கை கூட வாரம் தவராமல் இந்த கூத்தை செய்துவந்ததை நாம் அட்டைபட கட்டுரைகளில் பார்த்தோம், பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.இதைவிட வேற ஒரு insight இருக்கிறது அது டாக்டர் ராமதாஸ் சொன்ன வசனம் "வன்னியர்களிடம் போதுமான ஒற்றுமையிலாததால் தான் கேவலம் திமுகவுடனும், ஆதிமுகவுடனும் வலியச் சென்று கூட்டணி வைக்க வேண்டியிருக்கிறது" என்கிறார். நமக்கு ஒரு தவறான எண்ணம் இருக்கிறது, டாக்டருக்கு வியாதி வராது என்ற நினைப்பு தப்பு. வரும் சில சமயம் அதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். ஒரு நல்ல டாக்டராக பார்த்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டரிடம் போக முடியாதவர்களுக்கு இருக்கவே இருக்கு நித்ய தியானம். இது சுவாமி நித்யானந்தரின் கண்டுபிடிப்புகளில் ஒன்று. வேலை இல்லாதவர்கள் இதை பற்றிய விவரங்களை தேடிப்பார்கலாம் கிடைத்தாலும் கிடைக்கும்.
தமிழ் சினிமாக்களில் வேலைக்காரிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர்? தமிழ் சினிமாக்களில் வரும் டீக்கடைக் காட்சிகளில் நடிக்கும் மலையாள சேச்சிகள் எவ்வாறு சித்தரிக்கப்படுகின்றனர் ? இதற்காக மலையாள இனமானவர்கள் தினம் ஒரு போராட்டமா நட்த்தி வருகின்றனர் ? ஈழ இனமானப் புயல் சீமான் ஒருமுறை, இந்திய இலங்கை கிரிக்கெட் போட்ட பார்ப்பவர்கள் அனைவரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை எனக் கூறினாரே ? தமிழகத்தில் கிரிக்கெட் பார்ப்பவர்கள் அனைவரும் அப்படியென்றால், தமிழக மக்கள் தொகையில் அநேகரும் நல்ல அப்பனுக்குப் பிறந்தவர்கள் இல்லை என்று தானே அர்த்தம் ? இது தமிழகத் தாய்மார்களைக் கொச்சைப்படுத்துவதாகாதா ? இனமானத் தமிழர்கள் என்ன சொல்லப் போகிறார்கள்?
தற்போது இலங்கை விஷயங்கள் முடிந்துவிட்டது என்ன செய்வது என்று தெரியவில்லை. அக்குறையை சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெயராம் நிவர்த்தி செய்து சோம்பிக் கிடந்த இனமானப் பற்றாளர்களுக்கு பெரிய வேலை கொடுத்தார். என்ன வேலை ? ஜெயராமுக்குக் கண்டனம், போஸ்டர் கிழித்தல் என்று வழக்கம் போல் துவங்கி அவரது வீட்டிற்குள் பெட்ரோல் குண்டை எறிந்துள்ளார்கள். தமிழ் பற்றை எப்படி பற்ற வைப்பது ? இப்படி தான்.ஜெயராம் சொன்னது தப்பு தான், ஆனால் அதே சமயம் அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்டுவிட்டார், அதை முதலவரும் ஏற்றுக்கொண்டு விட்டார். தீர்ந்தது பிரச்சனை! ஆனால் இவர்களுக்கு பிழைப்பு நடத்த வேண்டுமே அதனால் அதை ஊதி ஊதி பெரிது படுத்துகிறார்கள்.. வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைத்தால் "தமிழ் பேச்சு எங்கள் மூச்சு" என்று சொல்ல மூச்சு இருக்காது. இது இரண்டு பேருக்கும் பொருந்தும்!
சரி கொஞ்சம் அரசியல் பேசலாம். அடுத்த பிரதமர் யார் என்று ஒரு கிசுகிசு ஓடிக்கொண்டு இருக்கு. பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு மன்மோகன் சிங் ரிடையர் ஆக போகிறதாக பேச்சு. அதற்கு பிறகு அந்த பொறுப்புக்கு ப.சிதம்பரம் வர போகிறாராம். அதன் பிறகு வேற யார் ராகுல் காந்தி தான். அப்படி வந்தால் தமிழகத்திலிருந்து முதல் பிரதமர் இவராக இருப்பார் என்று நினைக்கிறேன்.
அது என்னவோ தெரியவில்லை ராகுல் காந்தி என்றாலே வட இந்திய மீடியாக்கள் கொண்டாடுகின்றன. சென்ற வாரம் ராகுல் காந்தி மும்பைக்கு திடீர் விஜயம் செய்தார். NDTV அவரது விஜயத்தை முழுவதுமாக நேரடி ஒளிபரப்பு செய்தது. வந்து என்ன சாதித்தார் என்று தெரியவில்லை. எலெக்ட்ரிக் ரயிலில் சென்று ஸ்டண்ட் அடித்ததுதான் மிச்சம். மும்பை யாருக்கு சொந்தம் என்று சேனாக்கள் அடிதடி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், மும்பை அனைத்து இந்தியருக்கும் சொந்தம் என்றும், மும்பையில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டால் அவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பாதுகாப்பளிக்கும் என்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். இதை பாஜகவும் வழி மொழிந்தது. ஆனால் மீடியாக்கள் இதனைக் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், பாஜக இப்படி சொல்வதால் சிவசேனாவுடனான உறவு என்னாகும் என்று பேச ஆரம்பித்தது. பாஜக ஒரு நல்ல விஷயத்தைப் பேசிய பிறகு காங்கிரஸ் சும்மா இருந்தால் என்னாவது?? ராகுலும் தன் பங்கிற்கு மும்பை அனைவருக்கும் சொந்தம் என்று சொன்னார். இனிமே தமிழ் நாடு எல்லோருக்கும் சொந்தம் என்றால் ரயில் போகலாம். ரொம்ப நேரம் போனால் அடுத்த மாநிலத்துக்கு சென்றுவிடுவோம்.
யார் எங்கே போனால் என்ன ? சோ எங்கே போயிருக்கார் தெரியுமா ? நேற்று ஜெயலலிதாவை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசியிருக்கார் சோ. எதற்கு இந்த சந்திப்பு என்று பலர் பல காரணம் சொல்லுகிறார்கள். சோ சந்தித்தால் கூட்டணி உருவாகலாம் என்று சிலர் சொல்லுகிறார்கள், எனக்கு அதில் சுத்தமாக நம்பிக்கை இல்லை. ஆனால் சோவிடம் கேட்டதற்கு "இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு" என்கிறார். ஏன் ஜெயலலிதாவிற்கு சோ திடீர் என்று மரியாதை கொடுக்க வேண்டும் ? இது தான் மற்றவர்களை டென்ஷாக்கும்.ராஜ்ய சபா எம்பி பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று என்று சொல்கிறவர்களுக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். "கட்சிக்காக உழைத்ததால் பழுதாகி அகற்றப்பட்ட என் சிறுநீரகத்தை நல்ல நிலையில் முலாயம் சிங் யாதவ் திரும்பிக் கொடுத்தால் நான் ராஜினாமா செய்யத் தயார்" என்று கூறியிருக்கார்.
Politics is a different 'Ball' game altogether என்று சும்மாவா சொன்னார்கள்
ஓவியர் எஸ்.ராஜம் பற்றி எந்த பத்திரிக்கையும் கண்டுகொள்ளவில்லை, கல்கி்யில் மட்டும் இவரை பற்றி நான்கு பக்கத்துக்கு கட்டுரை போட்டிருக்கார்கள். வாழ்க!
இப்படிக்கு,
இவ
அசல் பார்த்துவீட்டீர்களா என்று ஒருவர் என்னை சாட்டில் கேட்டார். அசல் தங்கம்தானான்னு தங்கத்தை உரசி பார்க்கலாம்; அசல் சிங்கம்தானான்னு சிங்கத்தை உரசிப் பார்க்கமுடியுமா ? இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் அஜித் ரசிகர் :-)
Posted by IdlyVadai at 2/11/2010 03:59:00 PM 28 comments
Labels: பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம்