ஹரன்பிரசன்னா ஆயிரத்தில் ஒருவன் பற்றி எழுதியிருக்கும் விமர்சனம்.
இதை எழுத செல்வராகவனைவிட நிறைய உழைத்திருக்கிறார்...
அந்த மந்திரவாதியின் உயிர் கிளிக்குள்ளே இருக்கிறது. அக்கிளி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி ஒரு தீவில் உள்ளது. அக்கிளியை அடைவது சுலபமல்ல. ஏழு கண்டங்களைத் தாண்டவேண்டும் விக்கிரமன். விக்கிரமந்தான் கார்த்தி. கிளிதான் சோழமன்னன் என்று சொன்னால் செல்வராகவனும், மிகக் கடுமையாக உழைத்த அவரது ஒட்டுமொத்த யூனிட்டும் கடும் விரக்தி அடையக்கூடும். ஆனால் அப்படித்தான் இருக்கிறது இப்படம்.
அனகோண்டா திரைப்படம் போல ஒவ்வொருவராகச் சாகிறார்கள். ஏற்கெனவே இதுபோன்ற எவ்வித உப்புச்சப்புமில்லாத பல ஆங்கிலப் படங்களைப் பார்த்து பழகிவிட்ட நமக்கு இத்திரைப்படம் தருவது வெறும் பொறுமையின்மையை மட்டுமே. சோழ மன்னன், பாண்டிய வம்சப் பகை என்றெல்லாம் கொஞ்சம் மசாலா சேர்த்துப் பார்த்திருக்கிறார்கள்.
எனது ரசனையில் மிகச் சமீபத்தில் வந்த மிகச்சிறந்த தமிழ்த்திரைப்படங்களில் ஒன்று புதுப்பேட்டை. தற்போதைய இயக்குநர்களில் எனக்குப் பிடித்த இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இதனால் இத்திரைப்படமும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இப்படி எதையோ எடுப்பார் என எதிர்பார்க்கவில்லை. படம் வருவதற்கு முன்பு அடிபட்ட பேச்சுக்கள் என்னை மிகவும் பரவசப்படுத்தின. சோழ வம்சம் என்றார்கள், அவரைத் தேடுதல் என்றார்கள். அவை எல்லாம் இப்படி வெறும் கற்பனைக்குள் அடங்கிப் போகும் என எதிர்பார்க்கவில்லை.
சோழ மன்னனும் சோழ வம்சமும் இப்படி ஏன் சித்தரிக்கப்பட்டார்கள் என்பதும் தெரியவில்லை. ஆயிரம் ஆண்டுகளாக வெளி உலகைப் பார்க்காதவர்கள் என்பதெல்லாம் சரி. சோழ மன்னன் நடந்து வரும்போது, சிலரின் தலை கொய்யப்பட்டு ஏன் ரத்த நடைபாதையில் அவன் நடந்து வரவேண்டும் என்பதெல்லாம் புரியவே இல்லை. அதிலும் ஒரு பெண் தன் மார்பைப் பிழிந்து ரத்தத்தைக் காண்பித்து உணவு வாங்கிப் போகிறாள். கிளாடியேட்டர் திரைப்படம் போல ஒரு சதுக்கத்தில் அனைத்து அடிமைகளும், பிறநாட்டுப் பிரஜைகளும் கல்லால் பந்தாடப் படுகிறார்கள். இதையெல்லாம் செல்வராகவன் பெரும் கவனத்தோடும், அதிகபட்ச உழைப்போடும் எடுத்திருக்கிறார். ஆனால் ஏன் என்றுதான் தெரியவில்லை. பழங்கால மக்கள் எல்லாருமே சூனியக்காரர்கள்தான் என்று நினைக்கத் தோன்றுவதுபோல, சோழ மண்ணை மிதித்ததும் எல்லாமே மாயமாக நிகழத் தொடங்குகிறது. செல்வராகவன் பாலகுமாரன் ஆனதெல்லாம் கொஞ்சம் அதிகம்.இதில் முதல் பாதியில் கார்த்தி அடிக்கும் ஜோக்குகள் எல்லாம் படத்தோடு ஒட்டாமல் தனித்தே நிற்கின்றன. என்னென்னமோ பேசுகிறார். இதில் ரீமா சென்னும் இன்னொரு நாயகியும் ஆங்கிலத்தில் எல்லாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். எல்லாம் fucking சண்டை. அனகோண்டா, ப்ரீடேட்டர் போன்ற படங்களைப் போல் ஆகிவிட்டன இக்காட்சிகள். எனக்கென்னவோ இப்படமே அப்படிப்பட்ட ஒரு பாதிப்பில் எடுக்கப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.
இராணுவ வீரர்களும், அரசு அதிகாரிகளும் எள்ளளவு கூட கருணை அற்றவர்கள் என்ற முடிவுக்கே வந்துவிட்டார் போல இயக்குநர். அதுவும் கடைசிக்காட்சிகளில் அவர்கள் செய்வதாகக் காட்டப்படும் வன்கொடுமைகளெல்லாம் அதிகபட்ச கற்பனை. காணாமல் போல ஓர் அதிகாரியைத் தேடிப் போகும் அரசு ஏன் இப்படி கண்ணில் தென்படும் எல்லா ஆதிவாசிகளையும் கொன்று குவிக்கவேண்டும்? என்னதான் கதை லாஜிக் இல்லாததாக இருந்தாலும், இப்படி எல்லாக் காட்சிகளுமா லாஜிக் இல்லாமல் இருக்கும்?
போதாக்குறைக்குப் பாடல்கள். முக்கியமான காட்சிகளில் எல்லாம் பாடல்கள். தமிழின் மாயா தலையெழுத்து. மணிரத்னம், கமல் உள்ளிட்ட பெரும் சாதனையாளர்களே இதிலிருந்து வெளியேற முடியாத நிலையில், செல்வராகவன் மட்டும் என்ன செய்துவிடமுடியும். சோழ தேசத்தைக் கண்டுபிடித்ததும் ‘உன் மேல ஆசைதான்’ என்று ஆடுகிறார்கள். தமிழர்களாகிய நம்மை நினைத்து நாமே பரிதாபப்பட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
செல்வராகவன் மிக அதிகமாக யோசித்து, உயிரை விட்டுப் படம் எடுத்திருக்கிறார் என்பதெல்லாம் உண்மைதான். அவரது உழைப்பிலோ, நோக்கத்திலோ பிழையில்லை. ஆனால் எதை எப்படி எடுக்கவேண்டும், இத்தனை உழைப்பும் சரியான இடத்துக்குப் போகிறதா என்பதை அறிந்துகொள்வதில் அவர் போகவேண்டிய தூரம் அதிகம் உள்ளது என்பதையே இப்படம் முகத்தில் அறைந்தாற் போலக் காட்டுகிறது. இத்தனை சீரியஸாகப் படம் எடுக்கும்போது, தேவையற்ற நகைச்சுவைக் காட்சிகளை வைப்பதும், பார்த்திபன் போன்ற அதிஉன்னதம் கூட்டப்பட்ட ஓர் அரசன் கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு நவீன வில்லன் போல அதைச் சுட்டுப் பார்ப்பதுமாகிய காட்சிகள், சில நொடிகள்தான் வருகின்றன என்றாலும், இவை படத்தின் சீரியஸ் தன்மையைக் கடுமையாகச் சிதறடிக்கின்றன.
ஜி.வி. பிரகாஷ் இசை. பாடல்களிலெல்லாம் கொஞ்சம் தேறிவிட்டாலும், பின்னணி இசையில் அவரது வயதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார்.
ரீமா சென்னின் நடிப்பு, கார்த்தியின் நடிப்பு என எதிலும் பிரச்சினையில்லை. பார்த்திபனின் வாழ்க்கையில் அவரைப் பொருத்தவரை இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். பழங்கால சோழர்கள் காலத்தில் பேசும் தமிழை அப்படியே கொண்டுவரப் பாடுபட்டதில் (வசனத்துக்கு உதவியர் கல்வெட்டாய்வாளர் ராமசந்திரன். எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ‘மறையும் மறையவர்கள் முதலிய ஆய்வுக்கட்டுரைகள்’ என்ற நூலின் ஆசிரியர்) மிகக் கடுமையான உழைப்புத் தெரிகிறது. படத்தைப் பார்க்கும்போது இவையெல்லாம் பரிதாபமான விஷயங்களாகிவிட்டன.
இன்னொரு பரிதாபப்பட வேண்டிய விஷயமும் இருக்கிறது. சாரு நிவேதிதா குறித்து. அவர் ஒரு திரைப்படத்தையும் அத்திரைப்படத்தின் இயக்குநரையும் பாராட்டினால், அடுத்த படத்திலேயே அந்த இயக்குநர் அவர் வாயில் விழவேண்டியிருக்கிறது. அப்படி செய்துவிடுகிறார்கள் இயக்குநர்கள். சுப்ரமணியபுரம் திரைப்படத்தைப் பாராட்டினார் சாரு. அடுத்த படத்தைப் பார்த்த சாரு பொங்கி எழுந்துவிட்டார். நாடோடிகள் படத்தைப் பார்த்தபோது சாருவின் கோபம் எத்தனை சரியானது என்பது புரிந்தது. செல்வராகவனைப் பாராட்டிய சாரு இப்போது என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து கொஞ்சம் ஆவலாகத்தான் (பயமாகவும்) இருக்கிறது.
இது சீரியஸ் படம்தான் என்றாலும், குழந்தைகள் பார்க்கவேண்டிய திரைப்படம் என்று மார்க்கெட்டிங் செய்தால், படம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. :-)
- ஹரன்பிரசன்னா
"நீங்க சொன்னதால தான் நான் இந்த படம் போனேன், உங்களால் எனக்கு 300/= வேஸ்ட்" என்றார். செல்வாவிடம் சொல்லியிருக்கேன், பிரசன்னாவிற்கு 300 ரூபாய் அல்லது அடுத்த படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் தருவதாக சொல்லியிருக்கார். எது வேண்டும் பிரசன்னா ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, January 22, 2010
அம்புலிமாமா என்னும் ஆயிரத்தில் ஒருவன் - ஹரன்பிரசன்னா
Posted by IdlyVadai at 1/22/2010 12:52:00 PM
Labels: சினிமா, விமர்சனம், விருந்தினர், ஹரன்பிரசன்னா
Subscribe to:
Post Comments (Atom)
50 Comments:
இ.வ,
இந்த பதிவு, பிராயசித்தம் போல? அடுத்த திருமா ஆகிட்டீங்க ;)
//"நீங்க சொன்னதால தான் நான் இந்த படம் போனேன், உங்களால் எனக்கு 300/= வேஸ்ட்" என்றார். செல்வாவிடம் சொல்லியிருக்கேன், பிரசன்னாவிற்கு 300 ரூபாய் அல்லது அடுத்த படத்தில் நடிக்க ஒரு சான்ஸ் தருவதாக சொல்லியிருக்கார். எது வேண்டும் பிரசன்னா ? //
பிரசன்ன. நாம வேணுமின்னா இன்னொரு 300/- கொடுத்திடலாமா?
//சோழ தேசத்தைக் கண்டுபிடித்ததும் ‘உன் மேல ஆசைதான்’ என்று ஆடுகிறார்கள்.//
சோழர்கள் வாழ்ந்த இடத்தை காட்டியதும், ஒரு கணம் சிலிர்த்தது எனக்கு. ஆனா, அங்கே அவர்கள் மூவரும் அந்த இடத்தில் குடித்துவிட்டு குத்தாட்டம் தான் போட்டார்கள்.
//இது சீரியஸ் படம்தான் என்றாலும், குழந்தைகள் பார்க்கவேண்டிய திரைப்படம் என்று மார்க்கெட்டிங் செய்தால், படம் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. :-)//
குழந்தைகளெல்லாம் அந்த தலைகள் கொய்யப்படும், ரீமா உச்சாபோகும் காட்சிகளையல்லாம் பார்க்க வேண்டும் என்கிறீர்களா?
ஆனா, செல்வாவின் இந்த முயற்சியையும், உழைப்பையும் பாராட்டியே ஆகவேண்டும்.
சினு,
இட்லிவடையில் மாற்று கருத்துக்கு எப்போது தனி இடம் உண்டு. என் கருத்தை நான் சொன்னேன், அவர் கருத்தை அவர் சொன்னார். பெண்களுக்கு இந்த படம் பிடித்திருக்கு. அடுத்த ஜென்மத்தில் பிரசன்னா பெண்ணாக பிறந்து இந்த படத்தை ரசிப்பார். யார் கண்டது !
இவ
// சாரு நிவேதிதா குறித்து. அவர் ஒரு திரைப்படத்தையும் அத்திரைப்படத்தின் இயக்குநரையும் பாராட்டினால், அடுத்த படத்திலேயே அந்த இயக்குநர் அவர் வாயில் விழவேண்டியிருக்கிறது. அப்படி செய்துவிடுகிறார்கள் இயக்குநர்கள். சுப்ரமணியபுரம் திரைப்படத்தைப் பாராட்டினார் சாரு. அடுத்த படத்தைப் பார்த்த சாரு பொங்கி எழுந்துவிட்டார். நாடோடிகள் படத்தைப் பார்த்தபோது சாருவின் கோபம் எத்தனை சரியானது என்பது புரிந்தது. செல்வராகவனைப் பாராட்டிய சாரு இப்போது என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து கொஞ்சம் ஆவலாகத்தான் (பயமாகவும்) இருக்கிறது.//
சாரு ஒரு பர்வர்ட், அவன் பாராட்டோ திட்டோ ஒரு விழியமாவே கருத கூடாது.. ஹரன், உங்கள மாதிரி ஆளுங்களாலதான், அந்த பயபுல்லைக்கி கொம்பு மொளைக்கிது!!!
இ.வ. யருன்னு தெரியாததுனால, எனக்கென்னவோ இது MPD-யோனு தோணுது. ;)
//அடுத்த ஜென்மத்தில் பிரசன்னா பெண்ணாக பிறந்து இந்த படத்தை ரசிப்பார்.//
1. இதுக்கு பேரு சாபம் விடுதல்...
2. பட்ட காலிலே படும் ...
konjam kooda logice illa - padathula illa unnoda pathivula
முதல் விமர்ச்சனம்
கவரை பார்த்து எழுதுனது
இரண்டாவது விமர்ச்சனம்
படத்தை பார்த்து எழுதுனது ;-)
அரசியல்ல இதுலாம் சகஜம்மப்பா...
ஆனா
///சாரு நிவேதிதா குறித்து. அவர் ஒரு திரைப்படத்தையும் அத்திரைப்படத்தின் இயக்குநரையும் பாராட்டினால், அடுத்த படத்திலேயே அந்த இயக்குநர் அவர் வாயில் விழவேண்டியிருக்கிறது. அப்படி செய்துவிடுகிறார்கள் இயக்குநர்கள். சுப்ரமணியபுரம் திரைப்படத்தைப் பாராட்டினார் சாரு. அடுத்த படத்தைப் பார்த்த சாரு பொங்கி எழுந்துவிட்டார். நாடோடிகள் படத்தைப் பார்த்தபோது சாருவின் கோபம் எத்தனை சரியானது என்பது புரிந்தது. செல்வராகவனைப் பாராட்டிய சாரு இப்போது என்ன சொல்லப் போகிறார் என்பது குறித்து கொஞ்சம் ஆவலாகத்தான் (பயமாகவும்) இருக்கிறது.////
ரொம்ப பரிதாபமா இருக்கு...
அந்த ஆள எல்லாம்......
ம் வேண்டாம் விடுங்க...
என்னாச்சு இ.வ. க்கு
மாவு மிஸ்டேக்கா
கிரைண்டர் மிஸ்டேக்கா
இல்ல
மாஸ்டர் மிஸ்டேக்கா
????????????????????????
நான் படம் எதுவும் பார்ப்பதில்லை. டி வி இல ஓசியில் வந்து, அந்த நேரத்தில் எனக்கு வேறு முக்கியமான வேலை இல்லாம இருந்தாதான் - பார்ப்பேன். ஆனா இங்கே நீங்க போட்டிருக்கும் அம்புலிமாமா படம் பார்த்து, ஜோக்கை மிகவும் ரசித்தேன்.
//டி வி இல ஓசியில் வந்து, அந்த நேரத்தில் எனக்கு வேறு முக்கியமான வேலை இல்லாம இருந்தாதான் - பார்ப்பேன்//
நீரோ ரிடையர் ஆய்டீர் இனி உமக்கு வேற என்ன முக்கியமான வேல இருக்கபோறது ஸ்வாமின்? பேசாம ரீமாசென்னையோ ஆண்ட்ரியாவையோ ரசியும்..
/பெண்களுக்கு இந்த படம் பிடித்திருக்கு.// Appo, IV oru peN endru therinthu kondom!
// செல்வராகவனைப் பாராட்டிய சாரு இப்போது என்ன சொல்லப் போகிறார் // Avarukku oru chance tharaen enraal, Selvavin kaalil vizhuvaar! - R. J.
// நீரோ ரிடையர் ஆய்டீர் இனி உமக்கு வேற என்ன முக்கியமான வேல இருக்கபோறது ஸ்வாமின்? பேசாம ரீமாசென்னையோ ஆண்ட்ரியாவையோ ரசியும்..//
இதுதானே வேண்டாங்கிறது! அனானியா வந்து சொன்னா எனக்குத் தெரியாதா - எத்தனைமுறை - இந்த பாஷை பேசறவரோட சாட் பண்ணியிருக்கேன்!
(எனக்கு நீங்க சொல்லியிருக்கிற ரெண்டு பேரையுமே பிடிக்காது!)
Selva raghavan is one of directors I hate. The problem with him is his "vakara" budhi which puts him in a category that is far low for ordinary humans. Characters in his films have unusually high sex drive and never fail to remind the audience that they're sex starved. I do appreciate the fact that each time he comes up with something different, though that becomes unwatchable for many. May be the would-be-prostitutes could feel stimulated watching his films. The matter of concern is many good stories get spoiled by his evil influence. Compare "Ayirathil oruvan" with olden films like 'Parthiban kanavu' etc which makes us all proud of being a Tamil. The movie tries to show excesses of violence as being part of Tamil culture, which is absurd. People like Selvaraghavan are the ones who make me think about the abuse of freedom of expression. No surprise, He too has a following.
//ஹரன்பிரசன்னா ஆயிரத்தில் ஒருவன் பற்றி எழுதியிருக்கும் விமர்சனம்.
இதை எழுத செல்வராகவனைவிட நிறைய உழைத்திருக்கிறார்...//
அக்மார்க் இட்லிவடை நக்கல்.
SUBBU said... ????
//"நீங்க சொன்னதால தான் நான் இந்த படம் போனேன், உங்களால் எனக்கு 300/= வேஸ்ட்" என்றார்.//
But you have saved Rs.300/= for many more like me! Thanks!
iv said,
//இட்லிவடையில் மாற்று கருத்துக்கு எப்போது தனி இடம் உண்டு. என் கருத்தை நான் சொன்னேன், அவர் கருத்தை அவர் சொன்னார். பெண்களுக்கு இந்த படம் பிடித்திருக்கு. அடுத்த ஜென்மத்தில் பிரசன்னா பெண்ணாக பிறந்து இந்த படத்தை ரசிப்பார். யார் கண்டது !//
Prasannajee may consult Chojee to give a fitting reply for the cusrse-like comment by iv.(This is because Chojee does not like praising women.(Nor do I).
தயாரிப்பாளர் ரவி பாவம். ஆ.ஒ பாக்ஸ் ஆபிஸில் திணறுகிறது என்றே ரிப்போர்ட்.
ஆயிரத்தில் ஒருவன் ஓஹோ ஆகாத காரணம் !
ஆயிரத்தில் ஒருவன் அப்படி - இப்படி ஆனதற்கு காரணம் என்ன என்று கோலிவுட்டில் மினி பட்டிமன்றமே நடந்து வருகிறது. அந்த பட்டிமன்ற தீர்ப்புகளிலெல்லாம் முக்கியமாக கூறப்படுவது ஒரேயொரு விஷயம்தான். இரண்டு - மூன்று ஆண்டுகள் கஷ்டப்பட்டு எடுத்த படத்தை எடிட்டிங்கில் உட்கார்ந்து கவனிக்காமல், எடிட்டர் கோலா பாஸ்கரையே பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு, டைரக்டர் செல்வராகவன் விக்ரம் நடிக்க அடுத்து தான் இயக்கும் மெகா பட்ஜெட் படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டதுதானாம் காரணம். இப்போது கோலிவுட்டில் குறையாக கிசுகிசுக்கப்பட்டு வரும் ஆ.ஓ. ஹைலைட் இதுதான். முதல் பிள்ளை பிரசவத்துக்குள்ளே... மூன்றாம் பிள்ளைக்கு ஆசைப்பட்ட கதையாகி விட்டது செல்வராகவனின் நிலைமை!
http://cinema.dinamalar.com/tamil-news/1633/cinema/Kollywood/Reason-of-AO-flop.htm
அப்படியே இதையும் பாருங்க :
http://thenaali.com/thenaali.aspx?A=1606
இந்த படத்துக்கு எடுத்துக்கொண்ட கால இடைவெளி கூடினபடியாலோ என்னவோ.....
முதலில் அவர் என்ன எடுக்க நினைத்தாரோ அதிலிருந்து சற்று நகர்ந்து வேறொரு திசையில் பயணிக்கிறார்....
இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் செல்வா ,ஷங்கர் ரேஞ்சுக்கு இறங்கி இருப்பது தான்.
ஷங்கர் பொருட்செலவில் பிரமாண்டம் காட்டுவார். அனால் செல்வாவோ இதில் திரைகதை பிரமாண்டம் ,கற்பனயில் பிரமாண்டம் ,இசையில் பிரமாண்டம் பட்ஜெட்டில் பிரமாண்டம்,கவர்ச்சியில் பிரமாண்டம்,தூய தமிழில் பிரமாண்டம் ,ஆங்கிலத்தில் சண்டை போட்டு தூசனம் பேசுவதிலும் பிரமாண்டம்... என்று தமிழ் மக்களுக்கு ஒரு பிரமாண்ட திரை விருந்தை தருவதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்... அனால் என்ன பயன் ? எத்துணையோ பேருடைய உழைப்பும்,பொருட்செலவும்,காலமும்.... பிரமாண்டம் என்ற வார்த்தை மாயைக்குள் சிக்குன்று ,...தமிழ் சினிமாவின் மைல்கல்லாக இருக்க வேண்டிய படைப்பு, பாதி செய்து முடித்த மன்பானயாக காட்சியளிக்கிறது.
ஒரு unique creationகாக உழைக்காமல் நான எவ்வளவு பெரிய டைரக்டர் என்று காட்டுவதற்காகவே சம்மந்தமே இல்லாமல் பல காட்சிகள் கோர்த்து,அந்த ஒவ்வொரு காட்சிளையும் பிரமாண்டம் காட்டுவதற்காக என்னென்னமோ செய்கிறார். என்னை பொறுத்தவரையில் படத்தின் இரண்டாவது பாதி "குட்டி குட்டி பிரமாண்ட குறும்படங்களின் தொகுப்பே" அன்றி ஒரு பிரமாண்ட திரைப்படம் என்று சொல்ல முடியாது.
மொத்தத்தில் தமிழ் சினிமாவின் ஆயிரத்தில் ஒருவனாக இருக்கவேண்டியவன் ,,,பத்தோடு பதினொன்றாக வீதியில் நிற்கிறான் .
மன்னிப்பு:::: தமிழில் டைப் செய்ய தெரியாமல் செய்து,, விட்டிருக்கும் எக்கச்சக்கமான எழுத்து பிழைகளுக்கு .
harran ,
where you buy a NIZHAL VEERARGAL book pls mailme ,mailmesankar2009@gmail.com
// இதுதானே வேண்டாங்கிறது! அனானியா வந்து சொன்னா எனக்குத் தெரியாதா - எத்தனைமுறை - இந்த பாஷை பேசறவரோட சாட் பண்ணியிருக்கேன்!//
கௌதமன், நீர் நினைக்கற ஆள் நான் இல்லை, நான் வேற, உம்ம ரசிகன். ஜஸ்ட் உங்கள கலாய்க்கலாம்னு தோணித்து, மத்தபடி உம்ம பதிவுகளையும் பின்னூடங்களையும் ரசித்து படிக்கும் ஒருவன். திரும்பவும் சொல்லறேன் நான் அவன் இல்ல, வேற ஆள். வேற பேரு.
//(எனக்கு நீங்க சொல்லியிருக்கிற ரெண்டு பேரையுமே பிடிக்காது!)//
@ கௌதமன் - புரியறது ஸ்வாமின்.. உமக்கு வசயாடுதுன்னு... சொன்னா லேசுல ஒத்துக்க மாட்டீரே!!
idlyvadai ,
i am regular visitor of your blog
your review of the AYIRATHIL ORUVAN is very good and i will not agree with prasana !!! this is new trend of tamizh cinema
vadaiyarae,
would you Know about NIZHAL VEERARGAL book ?where it available pls mailme!! mailmesankar2009@gmail.com
Haranprasanna your comment is correct and right one. What happened to Idly vadai?
// கௌதமன், நீர் நினைக்கற ஆள் நான் இல்லை, நான் வேற, உம்ம ரசிகன்.//
நான் யாரை நினைச்சேன்னு உங்களுக்குத் தெரியும் என்றால், அப்போ அது நீங்கதான் என்பது உறுதியாகிறது. ஏனென்றால் - நம்ம விஷயம் - வேற யாருக்கும் தெரியாது. >----<-O
// புரியறது ஸ்வாமின்.. உமக்கு வசயாடுதுன்னு... //
வசை யாடுதோ, இசை பாடுதோ -- அது எனக்குத் தெரியாது. ஆனா சில வார்த்தைப் பிரயோகங்களை வைத்துக் கொண்டு, எழுதுபவரை சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இது இ வ வுக்கும் தெரியும். ( இ வ வையும் இழுத்துவிடலாம்...!!)
\\சோழ மன்னன் நடந்து வரும்போது, சிலரின் தலை கொய்யப்பட்டு ஏன் ரத்த நடைபாதையில் அவன் நடந்து வரவேண்டும் என்பதெல்லாம் புரியவே இல்லை.\\
IV,
idha thaane naanum ennoda commentla sonnen
\\சோழ தேசத்தைக் கண்டுபிடித்ததும் ‘உன் மேல ஆசைதான்’ என்று ஆடுகிறார்கள்.\\
i feel this song was "inserted" at the right place - when the mood was set light - the scene that followed was the opposite and it did really fit in well.
anyway,this review seems to be "more balanced" ;-)
Something I found in a different blog, Monohar seems to answer some comments you guys are saying..
Manoharan says:
படம் ரிலீசான முதல் நாளில் சில வலைதளங்களில் விமர்சனம் என்ற பெயரில் சில அரைவேக்காடுகள் படத்தை பற்றி எதுவுமே தெரியாமல் கண்டபடி பதிவு போட்டதை என்னவென்பது ? இந்தப்படம் நாலு நாள் தான் ஓடும் என்பது விமர்சனமா? அவர்கள் படம் சரியில்லை என்று சொன்ன அத்தனை காரணத்துக்கும் படத்திலேயே பதில் உள்ளது.அவற்றில் சில:
1.)இரண்டாவது பாதியில் வரும் தமிழ் புரியவில்லை என்று கிண்டல் செய்திருக்கிறார்கள்..
பதில் : 800 வருடங்களுக்கு முன் சோழர்கள் என்ன சென்னை தமிழா பேசிக்கொண்டிருந்தார்கள் ?இப்போது இலங்கையில் பேசுகிற தமிழை ஒத்துதான் அந்த தமிழ் இருந்திருக்கிறது. இதை பாலகுமாரன் எழுதிய பல நாவல்களில் காணலாம். உதாரணத்திற்க்கு படத்தில் ஒருவர் பேசும் வசனம் : ராசாவே, நிங்கள் தஞ்சை எட்டியவுடன் அடியேனை நின்னு நினையுங்கோள்… இந்த வசனம் புரியவில்லை என்று சொல்பவனுக்கு தமிழே தெரியாது என்று அர்த்தம்.
2.) போன் அடித்தால் ஹெலிகாப்டர் வந்து இறங்கும் போது, இவர்கள் எதற்க்கு இத்தனை ஆபத்துகளை சந்தித்து போவது போல் பில்டப் கொடுக்கிறார்கள்.
பதில் :வீரப்பன் சத்தியமங்கலம் காட்டுக்குளேதான் இருக்கிறான் என்று உறுதியாக தெரிந்த பின்னும் பல வருடங்கள் அவனை ஏன் பிடிக்க முடியவில்லை ?இதற்க்கும் அதுதான் பதில்.அதுவுமில்லாமல் அழகம் பெருமாள் உபயோகிப்பது செல்போன் அல்ல. அது GPS வசதி செய்யப்பட்ட சேட்டிலைட் போன். இதை செல்வராகவன் தெளிவாக காண்பிப்பார். பூமியிலிருந்து சிக்னல் செயற்க்கைக்கோலுக்கு போவது படத்தில் இருக்கும்.
3.)படத்தில் ஆபாசம் அதிகமாம்.
பதில் : டைட்டானிக் படத்தில் ஹீரோ ஹீரோயினை நிர்வாணமாக படுக்க வைத்து படம் வரைவார். அதை வாயை பிளந்துகொண்டு பார்த்துவிட்டு இதில் மட்டும் குறை சொன்னால் கோபப்படாமல் கொஞ்சவா முடியும்.
4.) லாஜிக் இல்லையாம்.
பதில் : அட முட்டாள்களா ஒரு பேன்டசி படத்தில் லாஜிக் எங்கே வருகிறது ? என்னமோ மம்மி,அவதார்,2012,கிளேடியேட்டர் போன்ற படங்களை இவர்கள் லாஜிக்கோடு பார்த்த மாதிரியும், இதில் மட்டும் லாஜிக் இல்லை என்பது போலவும் விமர்சிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது ?
இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியாவது வேறு இந்தியப் படங்களில் பார்த்தது போல் இருக்கிறதா ?
செல்வராகவனாலும் அவதாரை விட பெரிய படம் எடுக்க முடியும். ஆனால் அவரிடம் அவ்வளவு பட்ஜெட் இல்லை,அவதார்,எந்திரன் போல கிராபிக்ஸ் செய்ய ஒரு ஸ்டான் வின்ட்ஸன் ஸ்டுடியோ இல்லை,
மிகப்பயங்கர காடுகளை காட்ட இங்கு அமேசான் காடுகள் இல்லை, உலக தரத்தில் இசையமைத்து கொடுக்க ஒரு ஏ.ஆர்.ரகுமான் இல்லை,ஆக்ஷனில் தூள் கிளப்ப ஒரு ஏஞ்சலினா ஜோலி இல்லை…இருந்தும், இருப்பதை வைத்துக்கொண்டு ஒரு உலக சினிமாவை கொடுத்திருக்கிறார் செல்வராகவன். இந்தப்படத்தை டைம்லைனின் காப்பி என்கிறார்கள்,அட அரைவேக்காடுகளா,டைம்லைன் படத்தை எவனாவது பார்த்தீர்களா ? அதுக்கும் இதற்க்கும் துருவ வேருபாடு இருக்கிறது. அதென்ன ஒரு தமிழன் படமெடுத்தால் உடனே அது ஆங்கிலப் படங்களின் காப்பியாகத்தான் இருக்க வேண்டுமா ?திருப்பாச்சியை காப்பியடித்து வேட்டைக்காரன் எடுக்கத்தெரிந்த கூட்டம் பின்னே எப்படி யோசிக்கும். சுயமாக யோசித்த ஒரு விஷயத்தை ஆதாரமே இல்லாமல் காப்பியடித்தான் என்று சொன்னால் எந்த படைப்பாளிக்கும் கோபம் வரும். அத்தனை கோபத்திலும் செல்வராகவன் ஒரு வார்த்தை கூட மரியாதை இல்லாமல் பேசவில்லை.
above posts continuation...
தமிழ் சினிமாவில் அரிச்சுவடியே தெரியாத அரைவேக்காடுக் கூட்டம் தான் அதிகம். அதில் செல்வராகவன் 10வது தேறியிருக்கிறார். அவர் கல்லூரி வரை செல்ல சொந்த மக்களாகிய நாம்தான் உற்ச்சாகப்படுத்த வேண்டும். குறைகளை சொல்வது வேறு, புழுதி வாரித் தூற்றுவது வேறு. இங்கே புழுதி வாரித் தூற்றுபவர்கள்தான் அதிகம். இத்தனையும் பொறுத்துக்கொண்டு மீடியாவின் முன் வந்து அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொன்னது மட்டுமல்லாமல்,உங்கள் ஆதரவு இருந்தால்தான் நான் முன்னேறமுடியும் என்று தாழ்மையாக ஆதரவு கேட்டுள்ளார். இதையும் தப்பு என்று சொல்பவர்களுக்கு ஒரு பழமொழி உண்டு. காமாலைகாரனுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகத்தான் தெரியுமாம்.ஏற்க்கனவே மணிரத்னத்தை இந்திக்கு விரட்டிவிட்டோம், சிவாஜிக்குப் பின் ஷங்கர் ஷாருக்கோடு போயிருப்பார், ஒரு ரஜினியால் அது தடைபட்டுவிட்டது. இப்போது செல்வராகவனையும் விரட்டிவிடலாம். எஞ்சியிருப்பது, பேரரசு,விஜய் கோஷ்டிதான். வாரம் ஒரு வேட்டைக்காரன் வரும், மாதம் ரெண்டு திருப்பாச்சி வரும். இவர்களும் வெட்கமேயில்லாமல் அதற்க்கு 3 ஸ்டார் கொடுத்து விமர்சனம் எழுதுவார்கள். முதலில் இங்கே யாராவது திறமையான விமர்சகர்கள் உண்டா ? நினைத்தவனெல்லாம் இங்கு விமர்சனம் எழுதுகிறான். ஆனால் ஒன்று, ஆயிரத்தில் ஒருவன் படத்தை மோசம் என்று விமர்சித்தவர்களை கமெண்ட் பகுதியில் பார்வையாளர்கள் விளாசித் தள்ளிவிட்டார்கள். நூற்றுக்கு 90 சதவிதம் பேர் படம் சூப்பர் என்கின்றனர். இதுவே செல்வாவின் மிகப்பெரிய வெற்றி.இன்னொன்று… இது இலங்கை தமிழர் பிரச்சனைதான் என்று செல்வா தைரியமாக சொல்லியிருக்கவேண்டுமாம். சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் ? எவனாவது வேலைவெட்டி இல்லாதவன் படத்தை வெளியிடக்கூடாது என்று வழக்கு போட்டிருப்பான். படம் பெட்டிக்குள் போயிருக்கும். ராஜிவ் கொலை பற்றிய படமான குற்றப்பத்திரிகையின் கதி என்ன ? இன்னும் அதை வெளியிட முடியவில்லை. அதே போல் சிவராசன் சம்பவத்தை பற்றிய படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டது. இங்கு அதற்க்கு தடை. தயவு செய்து நல்ல படங்களை விமர்சியுங்கள். புழுதி வாரித் தூற்றாதீர்கள்.
James Arputha Raj said...
///ஏற்க்கனவே மணிரத்னத்தை இந்திக்கு விரட்டிவிட்டோம், சிவாஜிக்குப் பின் ஷங்கர் ஷாருக்கோடு போயிருப்பார், ஒரு ரஜினியால் அது தடைபட்டுவிட்டது.///
நக்கல் அடிக்கவேண்டியதுதான்
ஆனா இது ரொம்ப ரொம்ப ஓவர்னா
வஞ்சபுகழ்ச்சினா இதுதானா...
Please read review from TamilHindu.com.
At least their review makes more sense.
http://www.tamilhindu.com/2010/01/ayirathil-oruvan-a-dumbo-movie/
// ராஜிவ் கொலை பற்றிய படமான குற்றப்பத்திரிகையின் கதி என்ன ? இன்னும் அதை வெளியிட முடியவில்லை. //
சார், த்ரெதா யுகதுல இருக்கீங்களா? அந்த படம் 2007 ல வந்த்துட்டு போயிடுச்சு..
// நான் யாரை நினைச்சேன்னு உங்களுக்குத் தெரியும் என்றால், அப்போ அது நீங்கதான் என்பது உறுதியாகிறது.//
சத்தியமா தெரியாது ஓய்… ஒக்கே, நான் முகம் தெரியாத ரசிகனாவே இருந்த்துட்டு போறேனே.. ஆனா அது நீர் நெனைக்கற ஆள் இல்லனு மட்டும் சொல்றேன்.
//வசை யாடுதோ// - டைப்பிங் மிஸ்டேக் அத வயசாயுடுத்துன்னு படியிங்கோ.
சரி, சரி, ஒத்துக்கறேன். நீங்க, நீங்க இல்லை. ஆனா நான் நாந்தான். நான், நீங்க யாருன்னு நினைக்கிறேனோ - அவர் இல்லை. ஆனா - நான் அவர் இல்லை என்று நீங்க சொல்வதுதான் - நான் - அவர்தான் என்று சந்தேகப் பட வைத்துவிட்டது. அவரு இந்தப் போஸ்டின் பின்னூட்ட வரிசையில் இதுவரை அவராகவே - எங்கும் காணப்படவில்லையே - இது ஒன்றே என் சந்தேகத்தின் முதல் பாயிண்ட். மீதி எல்லா போஸ்ட்களுக்கும் முதல் ஐந்துக்குள் வருகின்ற அவர், இதுவரை ஏன் இங்கு காணோம்?
//முதல் பாயிண்ட். மீதி எல்லா போஸ்ட்களுக்கும் முதல் ஐந்துக்குள் வருகின்ற அவர், இதுவரை ஏன் இங்கு காணோம்?
//
athanae. manasthan enga erukeenga
//முதல் ஐந்துக்குள் வருகின்ற அவர், இதுவரை ஏன் இங்கு காணோம்?//
ஸ்வாமின், நான் மானஸ்த்தன் தான், ஆனா நீர் நினைக்கற அந்த மானஸ்த்தன் நான் இல்ல, நீர் போட்டு விசு மாதிரி குழப்பினாலும், நான் திரும்பவும் சொல்றேன், நான் உம்ம ரசிகன்.. நீர் நினைக்கற ஆள் நான் இல்ல
// ஸ்வாமின், நான் மானஸ்த்தன் தான், ஆனா மானஸ்த்தன் நான் இல்ல, நீர் போட்டு விசு மாதிரி குழப்பினாலும் ...//
ஆமா, இது ரொம்பத் தெளிவா இருக்கு!
நடக்கட்டும் நடக்கட்டும். எப்போ எப்பிடி வெளியில வரீங்கன்னு மற்ற ருசிகர்களும் பார்க்கத்தானே போறாங்க!
துக்ளக்கின் முதல் இதழையும், வாசகர் கடிதத்தையும் எழுதியவர் யாரையோ தேடுகிறார்போல.. வெளில வாங்களேன்யா..
படம்பாக்காம விமர்சனத்துக்கு கமெண்ட் எழுதுனது யார் யாரு?
கையத் தூக்குங்க பாப்போம்??
பொதுவா ஒரு பிளாக்ல ஒரு படத்துக்கு ஒரு விமர்சனம் தான் வரும்..
இட்லிவடை கொஞ்சம் வித்தியாசம்தான்..அதுவும் ரெண்டு விதமா ஒரே படத்துக்கு விமர்சனம் எழுதிய பெருமையயும் சேர்த்து தட்டிக்கொண்டுபோய்விட்டது..
வாழ்த்துக்கள்.
ரெண்டு நாள் கடைப்பக்கம் வரவில்லை என்றால் எப்டி எல்லாம் காமடி பன்னராங்கப்பா!
திரு kgg. அண்ணா! நான் அனானி-யாக கமெண்ட் போட மாட்டேன்.
தெளிவுபடுத்தவே இந்தப் பின்னூட்டம்.
// திரு kgg. அண்ணா! நான் அனானி-யாக கமெண்ட் போட மாட்டேன்.
தெளிவுபடுத்தவே இந்தப் பின்னூட்டம்.//
ஹி ஹி - பார்த்தீங்களா ஜகன், ஜெயகுமார், அவரை வெளியே இழுத்துக் கொண்டுவந்துட்டேன்!
//தெளிவுபடுத்தவே இந்தப் பின்னூட்டம்.//
ஹி ஹி - பார்த்தீங்களா ஜகன், ஜெயகுமார், அவரை வெளியே இழுத்துக் கொண்டுவந்துட்டேன்//
அதென்னங்கானும், நான் மனஸ்தனா தான் இருக்கனுமோ, ஏன், நாரத முனியா இருக்கப்டாதா?
//(This is because Chojee does not like praising women.(Nor do I)//
Ennadhu idhu???
Pengalai praise pannuradhu pidikkaadhu nu solradhu oru bandha vaagi pochu pola??
Chojee ku pidikaadhu ne vachikuvom....unga attitude a pathi ellar kitayum solradhula edhavadhu ull nokam iruka??
Idhu eppadi iruku theriyuma?
"Chee..Chheee...indha pazham pulikum" nu solra madhiri iruku!!
Alladhu, 'Familiarity breeds contempt' maadhiri, praise panni panniye bore adichu appuram pidikaama poirukumo??
Aana ethana yugam vandhaalum ponaalum indha "aana-penna?" sandai mattum oyaadhu pola...??!!!
this movie was gud to me i had read a book on eelam sometime back and the entire second half was in sync to tat
for me , this movie was worth it penny
i don't knw whether people really dint understand the film and the deeper. don't u find a story of lankan massacre.
it surely was . tat too with cholas and the tiger flag flying high !
we can have some heart t appreciate a good director. he got to have lotsa guts to have taken such a film
I got more than wat i thought of !
though the film looked raw, it was good.
enakku paduthula iruntha vishayam etho art maathiri irunthathu.. this is one good film and gr8 try by selva raghavan
படத்துல பாடல் இருந்தா அது என்ன குத்தமா? நல்ல சினிமா பத்தி தெரிஞ்சதா காட்டிக்கிற நினைக்கிற அனைவருக்கும் இது ஒரு பொது வாசகம் போல. நமது கதை சொல்லும் பாணி இதுவாக இருக்கக் கூடாதா? Hollywoodகாரன் பாட்டில்லாம நல்ல படம் எடுத்தான்னா நாம ஒரு படத்த நல்ல படமா காமிக்க அதுல பாட்டு இல்லாத மாதிரி பாத்துக்கணுமா என்னா? `அதிலும் மணிரத்னம், கமல் போன்ற ஜாம்பவான்களே` போன்றவைகளெல்லாம் கொஞ்சம் over தான்.மணிரத்னமெல்லாம் கிராமத்து இருளாயி பாட்டி `அழுதாகூட` Hollywood style-ல அழற மாதிரி தான் காண்பிக்க முயற்சி செய்வாரு. தரம்ங்கிறது Hollywood தரம்னு நாம நெனைக்கிறத நகலெடுக்கிறது இல்லைங்கிறது என்னோட அபிப்பிராயம்.
//பதில் : அட முட்டாள்களா ஒரு பேன்டசி படத்தில் லாஜிக் எங்கே வருகிறது ? என்னமோ மம்மி,அவதார்,2012,கிளேடியேட்டர் போன்ற படங்களை இவர்கள் லாஜிக்கோடு பார்த்த மாதிரியும், இதில் மட்டும் லாஜிக் இல்லை என்பது போலவும் விமர்சிப்பதை எப்படி எடுத்துக் கொள்வது ?//
இத ஒரு பேன்டஸி படம் என்று ஒத்துக் கொண்டால் பரவாயில்லையே. என்னமோ செல்வா இந்த படத்த ஒரு காவியம் ரேஞ்சுக்கு கொண்டு போயிருப்பது தான் உறுத்துது.
//படத்தில் ஆபாசம் அதிகமாம்.
பதில் : டைட்டானிக் படத்தில் ஹீரோ ஹீரோயினை நிர்வாணமாக படுக்க வைத்து படம் வரைவார். அதை வாயை பிளந்துகொண்டு பார்த்துவிட்டு இதில் மட்டும் குறை சொன்னால் கோபப்படாமல் கொஞ்சவா முடியும்.//
அப்படி பாத்தவங்க எல்லாம் ஆண்கள் தானே. இந்த படத்துக்கு எத்தனை பெண்கள் போகமுடியும்? (உடனே இவ மாதிரி பெண்களுக்கும் இந்த படம் பிடித்திருக்குனு சொல்லாதீங்க. அவர் சொன்னது சிட்டியில உள்ள பெண்).
//இந்தப் படத்தில் வரும் ஒரு காட்சியாவது வேறு இந்தியப் படங்களில் பார்த்தது போல் இருக்கிறதா ?//
நிச்சயம் இல்லைங்க. ஆனா பாருங்க. நிறைய இங்கிலீஸ் படங்களில் பார்த்தது போல் இருக்கு ;)
கிங் சாலமன் மைன்ஸ், க்ளேடியேட்டர், 300, மெக்கனஸ் கோல்ட் (இத ஏற்கனவே ராம்கி நடிச்ச ஒரு தமிழ் படத்துல காப்பி அடிச்சாச்சு), மம்மி...
//நூற்றுக்கு 90 சதவிதம் பேர் படம் சூப்பர் என்கின்றனர். இதுவே செல்வாவின் மிகப்பெரிய வெற்றி.//
யாருங்க இந்த மனோகர்? செல்வாவின் பி.ஆர்.ஓ.வா?
செல்வாவின் உழைப்பை யாரும் கேள்விகேட்கவில்லை. மாறாக ஏன் அதை சொந்த கற்பனை என்று பில்டப்? என்னமோ மணிரத்னம் உலக படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? மணி எடுத்ததெல்லாம் தமிழில் எடுக்கப்பட்ட ஆங்கில படம். என்ன, வழக்கமான தமிழ் சினிமா பார்முலாவில் இல்லை.
உலக படங்கள் என்றால் அமீரின் ராம், பருத்திவீரன், பாண்டிராஜின் பசங்க, சசிகுமாரின் சுப்ரமண்யபுரம் போன்றவை தான். தவிற பேன்டஸி படங்கள் இல்லை.
ஈரானிய படங்கள் பார்த்திருக்கீங்களா? 2 அல்லது 4 கதாபாத்திரங்களை வைத்து 2 மணிநேரம் உங்களை கட்டி போடும் அந்த லோ-பட்ஜெட் படங்கள் தான் உலக சினிமாக்கள். மாறாக, இத்தகைய பேன்டஸிபடங்கள் இல்லை.
sword fight between parthiban and reema and at the end of fight "palaana palaana" copied from crouching tiger hidden dragon
இந்த படத்தைப் பார்க்காமல் விமர்சனம் செய்யக் கூடாது என்று இருந்தேன். உண்மைக்கு முற்றிலும் புறம்பான கதை அமைப்பு, கதை சொல்வதில் பல குழப்பங்கள், ஆங்கில படங்கள் பலவற்றை நினைவூட்டும் காட்சி அமைப்பு, கர்ண கடூரமான BGM, வக்கிரமான கற்பனைகள், மோசமான தமிழ் உச்சரிப்பு... அட போங்கப்பா, இந்த படத்திற்கு விமரிசனம் ஒரு கேடு!
நன்றி ஹரன், நம்ப taste கு யாரும் இல்லையோனு நெனச்சேன்...நல்ல வேலை நீங்க இருக்கீங்க... வரலாற்றுக்கும் புனைவிற்கும் உள்ள வித்தியாசம் தெரியாததே இந்த கதை. இரண்டாம் பாதி உலகமாக சொதப்பல். இது செல்வவிற்கே இருந்தது நன்றாக screenplay வில் தெரிகிறது...இதில் செல்வாவின் தைரியத்தை மட்டும் பாராட்ட வேண்டுமே தவிர படத்தை அல்ல...
சொந்த காசுல சூனியம் வெச்சிகிறது
அப்படின்னா என்ன தெரியுமா..?
" ஆயிரத்தில் ஒருவன் " படத்துக்கு போறது..!
எனக்கு சுஜாதாவின் வசந்த் சொல்லும் " தல சுத்துது பாஸ் ஒரு ப்ளேட் ரத்தப்பொரியல் கூட ஒரு quarter raw வா rum அடித்தால் தான் தல சுத்தல் மட்டுப்படும்" diologue நினைவு வருது
சாரு எழுதிய விமர்சனம் சரியானதுதான்...
சுருங்கச் சொன்னால்: ஆயிரத்தில் ஒருவன் = Sugarcane Thousand!
Post a Comment