பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 04, 2010

மினிமம் காரன்ட்டீ புத்தகங்கள்!

சினிமாவில் 'மினிமம் காரன்ட்டீ' என்று ஒன்று இருக்கு. "ப்ரீத்திக்கு நான் காரன்ட்டீ" என்று மிக்ஸி விளம்பரத்தில் சொல்லுவது போல புத்தகத்துக்கு யாராவது கேரண்டி கொடுத்தால் நல்லா இருக்கும். விசிறி வாழை போல அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்களில் எதை எடுத்தாலும் அழகாக இருக்கு. தமிழ் நாட்டில் பிரிண்டிங் தொழில் நல்ல முன்னேற்ற அடைந்துவிட்டது.

புத்தகக் கண்காட்சியைப் பார்த்து விட்டு வந்து மக்கள் லிச்சி ஜூஸ் பற்றியும், தக்காளி சூப் பற்றியும், ஸ்ரீகிருஷ்ணா கேண்டீன் பற்றியும் தான் அதிகம் பேசுகிறார்கள். அப்பறம் ஏன் சமையல் குறிப்பு புத்தகங்கள் அதிகம் விற்பனை ஆகாது? மினிமேக்ஸ் ஸ்டாலில் சென்று கிழக்கு பதிப்பகத்தின் சமையல் குறிப்பு புத்தகங்கள் எவ்வளவு சேல்ஸ் ஆகிறது என்று பாருங்கள். வருபவர்கள் எல்லாம் கட்டு கட்டாக வாங்கிகொண்டு போகிறார்கள். ஒரு கிலோ வெங்காயத்தைவிட விலை குறைவு !

அடுத்து கீழே உட்கார்ந்து பேசுவது, "நான் மாலை 6 மணிக்கு வருவேன் உங்களை எங்கே சந்திக்கலாம் ?", "பார்கிங் டோக்கன் சின்னது", "டிக்கெட் பின் என் முகவரி எழுத அங்கேயே பேனா ஒன்று வைக்கணும்", "இவர்களை சந்தித்தேன்...", "இவரை போட்டோ எடுக்கலாமா என்று கேட்டு போட்டோ எடுத்தேன்"...., யார் யார் பை தருகிறார்கள், எந்த பை நல்லா இருக்கு? போன்ற செய்திகள் தான்.

சச்சின், கலாம், பிரபாகரன், சமையல், அகராதி, பொன்னியின் செல்வன், திருகுறள், "சுயமாய் சிந்திப்பது எப்படி?" போன்றவைகளை எடுத்துவிட்டால் பாதி ஸ்டால்கள் கம்மியாகும்.

புத்தகம் பற்றி - மூச், அது எதற்கு நமக்கு !

என்னுடைய மினிமம் கேரண்டி புத்தகங்களான இவற்றை பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல் வாங்கிக்கொள்ளுங்கள். நிச்சயம் கொடுத்த காசுக்கு 50% வது கேரண்டி ! பல பிரபல புத்தகங்களை இங்கே நான் சொல்லவில்லை, அவை உங்களுக்கே தெரியும்.

கிழக்கு பதிப்பக வெளியீடுகள்:
முகலாயர்கள் - முகில் - 250/-
லண்டன் டயரி - இரா.முருகன் - 125/-
கோபுலு : கோடுகளால் ஒரு வாழ்க்கை - எஸ்.சந்திரமௌளீ- 60/-
ராஜிவ் கொலை வழக்கு - ரகோத்தமன் - 100/-
தி.மு.க. உருவானது ஏன் - மலர்மன்னன் - 80/-
சென்னை மறுகண்டுபிடிப்பு - எஸ். முத்தையா - 300/-
இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு - 250/-
அணு: அதிசயம் - அற்புதம் - அபாயம் - ராமதுரை - 100/-
தஞ்சாவூர் அசைவ சமையல் - 25/-
ஒலிப்புத்தகம்: வந்தார்கள் வென்றார்கள் - 207/-


விகடன் பிரசுரம் வெளியீடுகள்
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2 ) - பாக்கியம் ராமசாமி - 60/- ( ஒரு பகுதி தான் படித்திருக்கிறேன், சுமாரா சிரிப்பு வரும் )
பாபநாசம் சிவன் - வீயெஸ்வி - 50/=
இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் - கு.ஞானசம்பந்தன் - 85/-
இதயம் - கே.எம்.செரியன்

உயிர்மை வெளியீடுகள் :
பல நேரங்களில் பல மனிதர்கள் - பாரதி மணி - 100/-

மற்றவை
ஒரு டஜன் கீர்த்தனை என்ன விலை? - பாக்கியம் ராமசாமி - பூம்புகார் பதிப்பகம் - 35/-
பாமர கீதை - ஜ.ரா.சு. - பூம்புகார் பதிப்பகம் - 25/-
அது ஒரு பொற்காலம், கல்கி ராஜேந்திரன் - வானதி பதிப்பகம் - 100/-
தேதியில்லாத டைரி - சுதாங்கன் - தற்போது யார் போட்டிருக்கிறார்கள் என்று தெரியாது.
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் - அல்லயன்ஸ் கம்பெனி - 150/- (சோ.ராமஸ்வாமி)
கலைஞரின் நகைச்சுவை நயம் - நக்கீரன் - 175/-
இன்றைய காந்தி, ஜெயமோகன், தமிழினி பதிப்பகம்
கதிரேசன் செட்டியாரின் காதல் : ஒரு துப்பறியும் நாவல் - மா. கிருஷ்ணன் - மதுரை பிரஸ் ( காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது )
சாவி சிறுகதைகள் - அகிலா பதிப்பகம் - 70.00/-
எம்.எஸ் உதயமூர்த்தி - உரை ( ஆடியோ ) - 50/-
என் மதுரை நினைவுகள் - மனோகர் தேவதாஸ் - கண்ணதாசன் பதிப்பகம் - 150/-
கணிதத்தின் கதை – இரா.நடராசன் – பாரதி புத்தகாலயம் – 50/-

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஸ்டாலில் மசாலா போளி - மினிமம் காரன்ட்டீ, அதில் இருக்கும் நெய்க்கு. உடம்புக்கு ஏதாவது வந்தால் நான் காரன்ட்டீ கிடையாது!

மற்ற மினிமம் காரன்ட்டீ பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன!

16 Comments:

Unknown said...

idlyvadaikku nandri. manasthan enga . ethula kamal rajini pathi ezhutha mudiyuma

Anonymous said...

கிழக்கிற்கு ஜால்ரா போடும இட்லிவடை இடுகைகள் - இதுவும் ஒரு மினிமம் காரண்ட்டீ

ஸ்ரீராம். said...

இன்னும் போகவே இல்லையே...போய் வந்துதான் சொல்லணும்...

Asir said...

I thought that

Anonymous said...

too Idly Vadai...


Killadi yar..

Congrats

கௌதமன் said...

// "ப்ரீத்திக்கு நான் காரன்ட்டீ" என்று மிக்ஸி விளம்பரத்தில் சொல்லுவது போல ...//
அது, ப்ரீத்திக்கு Non-guarantee என்றல்லவா நான் இது நாள் வரை நினைத்திருந்தேன்! புத்தக சிபாரிசு வரிசைக்கு நன்றி.

SAN said...

IV,
Here is the news item from New Indian Express;What is your take?

NEW DELHI: Speaker Meira Kumar Monday said Chemicals and Fertilisers Minister M.K. Alagiri, who wrote to her requesting that he be allowed to answer in Tamil the questions in parliament, has not yet come to meet her.
"I am still waiting for him," Meira Kumar told reporters when asked if the DMK leader has responded to her call for a meeting.
The speaker said she "requested him to kindly come" to discuss the issue, but he was yet to come.
Meira Kumar said she could not comment on the ministers' absence unless she spoke to him.
Alagiri wrote two letters to the speaker before the winter session of the Lok Sabha commenced in November last year.
Alagiri, said to be miffed over not being allowed to answer questions in Tamil, was absent for many days during the budget session and the winter session of parliament.
There was an uproar in Lok Sabha Nov 26 when Alagiri failed to show up even as the issue of shortage of fertilisers and seeds was being discussed in the house.
In September too Alagiri had requested the speaker to allow him to speak in Tamil as he was not fluent in either Hindi or English.
Citing precedents, senior Lok Sabha officials had then said that ministers should answer the questions either in English or Hindi as files containing the answers to questions are written in English and Hindi.
The speaker had many times said that the matter was still under consideration.
Earlier, AIADMK chief J. Jayalalithaa also supported Alagiri's request that the Lok Sabha secretariat should extend an 'interpreter service' to him to answer the queries of MPs in Tamil.

பாரதி மணி said...

இன்றைய தலைமுறையில் எத்தனை பேருக்கு எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியைத் தெரியும்? அவரது சிறுகதை ‘மருமகள் வாக்கு’ உலக இலக்கியத்தில் இடம்பெற தகுதி வாய்ந்ததென்று அசோகமித்திரன் மற்றும் இலக்கிய விமர்சகர்கள் கருத்து. ‘நாஞ்சில்நாட்டில் தோன்றிய மிக முக்கியமான ஒரு -- இல்லை ஒரே எழுத்தாளர் நம்பி’ என்று நகுலன் சொல்வார். இயற்பெயர் அழகிய நம்பி.

சுந்தர ராமசாமியும் இவரும் நெருங்கிய நண்பர்கள். புற்றுநோயால் ஒரு காலை எடுக்கவேண்டிவந்து, 1976-ம் ஆண்டில் தன் 44-ம் வயதில் மறைந்தார். சாகும் வரை சு.ரா.வின் முன்னேற்றத்திலேயே குறியாகவிருந்து (நெடுஞ்செழியனைப்போல) இரண்டாம் இடத்தில் இருப்பதையே விரும்பினார். எழுதிய் சிறுகதைகள் 23 மட்டுமே.

சர்ரியலிஸம், பின் நவீனத்துவம் போன்ற வார்த்தைகள் புழக்கத்துக்கு வருமுன்பே, ’தங்க ஒரு...’ என்ற அற்புதமான கதையை எழுதியவர். தில்லிக்குப்போனபிறகும் நான் லீவுக்கு நாகர்கோவில் வரும்போது, சு.ரா., நம்பியை தினமும் சந்தித்து இலக்கியம் பற்றி இரவெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். பழக, பேசிக்கொண்டிருக்க நல்ல நண்பர்.

அவரது தம்பி வெங்கடாசலத்தின் பெருமுயற்சியால், கிருஷ்ணன் நம்பியின் எல்லா படைப்புகளும் சேகரிக்கப்பட்டு ஒரே புத்தகமாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ என்ற பெயரில் இந்தவருடம் காலச்சுவடு பதிப்பாக வெளிவந்திருக்கிறது. இம்மாதம் முதல் தேதியன்று சென்னை புத்தகவிழாவில் நாஞ்சில் நாடன் வெளியிட, நான் முதல் பிரதியை பெற்றுக்கொண்டேன். ஆரம்ப காலத்தில் கி.ரா.வை எழுதத்தூண்டியவர் நம்பி. நண்பரான ஜெயகாந்தனிடம் ஒருமுறை, ‘இந்த கதையை எழுதியதற்கு, உனக்கு இரும்பில் தான் மோதிரம் பண்ணிப்போடவேண்டும்!’ என்று சொன்னவர்.

இலக்கியத்தில் ஆர்வமுள்ள இளைய தலைமுறையினர் ஒவ்வொருவர் வீட்டிலும் இரு்க்கவேண்டிய புத்தகம். நான் ‘மாக்ஸிமம் காரன்ட்டீ’!

பி.கு: இதை எழுத ‘காலச்சுவடு’ எனக்கு எந்த கமிஷனும் தரவில்லையென்று உத்தரவாதமளிக்கிறேன்! இது சத்தியம்!

அன்புடன்,
பாரதி மணி

Raja said...

naan oru moondru varudangalaaga intha puthaga kankaatchikku poraen. Ponniyin selvan ennavo indraikkum high sales thaanga !!!

Madhavan Srinivasagopalan said...

//kggouthaman said..."அது, ப்ரீத்திக்கு Non-guarantee என்றல்லவா நான் இது நாள் வரை நினைத்திருந்தேன்! " //

what a thought !
btw, I feel, It's wrong to say 'நான் காரன்ட்டீ'. Either it should be 'நான் காரன்ட்டர்' or 'நான் காரன்ட்டீ அளிக்கிறேன்'.

வலைஞன் said...

வெறும் கும்பலை எதிர்பார்த்து நடக்கிற இன்னொரு வர்த்தக பொருட்காட்சி.
ஒரு பத்து % கழிவுக்காக இடிபாடுகளில் சிக்கவேண்டிய அவசியம் இல்லை ஹிக்கின்போதம்ஸ் போனால் ராஜா போல் வாங்கி வரலாம்.

மாலி நடராஜன் said...

தேதி இல்லாத டைரி: நானும் கடந்த் மூன்று வருடங்களாக அலைகிறேன் கிடைக்கவில்லை. சுதாங்கனிடம் நேரில் கேட்டபோது அலையன்ஸ்ல் விசாரிக்கச்சொன்னார். அங்கே விசாரித்தால் ‘ என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு’ அப்படி ஏதும் இல்லை என்றார் அப்பெண்மணி

sathish (bengaluru) said...

தேதி இல்லாத டைரி: I have this in my collection. I purchased in the 29th book fair, chennai.

மர தமிழன் said...

// வலைஞன் said...
வெறும் கும்பலை எதிர்பார்த்து நடக்கிற இன்னொரு வர்த்தக பொருட்காட்சி.
ஒரு பத்து % கழிவுக்காக இடிபாடுகளில் சிக்கவேண்டிய அவசியம் இல்லை ஹிக்கின்போதம்ஸ் போனால் ராஜா போல் வாங்கி வரலாம்//
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

கூடிய சீக்கிரம் அது நடந்துவிடும்போல...நான் பார்த்த நிறைய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்ட விலை மீது அதிக விலையில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தார்கள்... சில ஸ்டால்களில் புத்தகத்தில் விலையே இல்லை..இப்படியே போனால் மக்கள் வாக்கிங் போய் விட்டு கான்டீன் போய் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள்.. சம்பத்தப்பட்டவர்கள் யோசிப்பது நல்லது.

Erode Nagaraj... said...

//நான் ‘மாக்ஸிமம் காரன்ட்டீ’!

பி.கு: இதை எழுத ‘காலச்சுவடு’ எனக்கு எந்த கமிஷனும் தரவில்லையென்று உத்தரவாதமளிக்கிறேன்! இது சத்தியம்!

அன்புடன்,
பாரதி மணி//

உங்கள் பெயரிலேயே
"பார்-அதி-money " இருப்பதால் கமிஷன் அவசியமே இல்லை...

:) :) :)

பாரதி மணி said...

Good One!

Anonymous said...

BHARATHI(YAR!) -kkum MONEY !-kkum Enna appidi oru arumaiyana (aka Aakroshamana) KAIKALAPPU?

sundar