ஒரு வருடம் முன்பு 'தி கிங்டம்' ஆங்கில படத்தின் டிவிடியை ஒருவர் எனக்கு கொடுத்து பார்க்க சொன்னார். மறந்துவிட்டேன். சில நாட்கள் முன் இந்த படத்தை பார்த்துவிட்டு அதன் விமர்சனத்தை என்னிடம் அனுப்பினார் 'ஜெய் ஹனுமான்'( அவர் பெயர் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார் ) விமர்சனத்தை பிரசுரிக்கும் முன் நாமும் அந்த படத்தை பார்த்துவிட்டால் நல்லது என்று தோன்றியது. இன்று தான் அதை பார்க்க முடிந்தது.
ஜெய் ஹனுமான்' எழுதிய விமர்சனத்தை கொஞ்சம் எடிட் செய்து இங்கே...
பயங்கராமான ஆக்ஷன் படமோ, திர்ல்லர் படமோ இல்லை. ஆனால், அதை எடுத்துள்ள விதம் சினிமா என்ற உணர்வே இல்லாமல் இயல்பாக பி.பி.சி நியூஸ் சேனலில் காண்பிப்பது போல இருப்பது பலம். 1996ம் ஆண்டு சவுதியில் உள்ள கோபர் டவர்ஸ் என்ற இடத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 19 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை எடுத்துள்ளார்கள்.
எப்படி இப்படி அடிப்படைவாதிகளாக மாறிப்போனார்கள் என்பதை எண்ணெய் வளம் கண்டுபிடிப்பதற்கு முந்தைய சவுதியிலிருந்து கடைசியாக எண்ணெய்வளம் கண்டுபிடித்து அமெரிக்கர்களுடன் இனைந்து ”அராம்கோ” என்ற அமெரிக்க - சவுதி கூட்டு நிறுவனத்தைத் தொடங்கி, எண்ணெய் மூலம் உலகின் ஆதிக்கத்தில் உள்நுழைவதும் அதனால் ஏற்படும் அடுத்தடுத்த மாற்றங்களையும் ஒரு சில நிமிடங்களில் சொல்லிவிட்டு படம் ஆரம்பமாகிறது. அப்படி சொல்லும் போது படத்தில் அவர்கள் காண்பிக்கும் சின்ன சின்ன கிராபிக்ஸ் பல செய்திகளை சொல்லுகிறது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் ஊற்றுக்கண் சவுதிஅரேபியா. ”தூய இஸ்லாம்” என அவர்கள் சொல்லும் வஹாபியிசத்தை உலகமெங்கும் அமைப்பதும், இஸ்லாமைத் தழுவாதவர்களை ( infidels) கொல்வதும் கூட இறைப்பனியே மற்றும் மதக்கடமையே என நம்புபவர்கள். அவர்கள் வணங்கும் ஏக இறைவனுக்கு இனையாக கும்பிடப்படுகிறார்கள் என்று கருதி அவுலியாக்கள் ( இறைநேசச் செல்வர்கள்) உறங்கும் தர்காக்களை இன்று இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தகர்த்துக்கொண்டிருப்பவர்கள் இந்த வஹாபிகளே..கல்வி, இசை, நடனம், விளையாட்டு என்ற எந்தவிதமான பொழுதுபோக்கும் இல்லாமல் இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என கத்திமுனையில் நடத்தும் / நடக்கும் ராஜாங்கம்தான் இந்த வஹாபியிஸம்.இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் சவுதியில் அமெரிக்கர்கள் குடியிருப்பில் நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்களில் பல அமெரிக்கர்கள் இறக்க, அதை புலன்விசாரனை செய்ய ஐந்துபேர் கொண்ட குழு(FBI) சவுதி அரேபியாவில் புலனாய்வு செய்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களிடம் சிக்கியிருந்த புலணாய்வு செய்யவந்த ஐவரில் ஒருவரை மீட்பதுவும்தான் கதை.
திரைப்படத்தின் ஆரம்பத்தில் ஒரு கையில் புனித குரானும், இன்னொரு கையில் இயந்திரத் துப்பாக்கியும் கொண்ட முகமூடி அணிந்த தீவிரவாதிகளை, இன்றைய தேதியில் உலகம் முழுக்க இருக்கும் தீவிரவாதிகளின் அடையாளம்போல ஒரு நொடி கான்பிக்கிறது கேமெரா, உலகம் முழுக்க நடந்த தீவிரவாத செயல்களை அப்படியே ஒவ்வொரு ஃப்ரேமாக கான்பித்துவிட்டு, நேரடியாக சவுதி அரேபியாவின் வறுமை நிறைந்த இருண்ட சரித்திரத்திலிருந்து ஆரம்பித்து அதன் சரித்திரத்தை ஒவ்வொரு காலகட்டமாக கான்பித்துவிட்டு, இன்றைய வளமான சவுதியின் பளபளப்பான மசூதியின் தூபியும், மாலைநேர மறையும் சூரியனையும் காட்டி நிற்கிறது கேமெரா..
அடுத்த காட்சி தொலைக்காட்சியில் ஒரு பெரியவர் அல்லாவின் பெயரால் தாக்குதல் நடத்த ஆனையிடுகிறார். அதைப் பலர் கேட்கின்றனர். அடுத்த காட்சியாக ஒரு பெரியவரும், சிறு பையனும் பைனாகுலரில் அமேரிக்கக் குடியிருப்பைப் பார்க்கின்றனர். முதலில் குடியிருப்பில் நிலவும் மகிழ்ச்சியான மனநிலையும், அப்படியே கேமரா அந்த மகிழ்வான சூழ்நிலையைக் காட்டியபடியே பின்னால் பயணித்து அந்தப் பெரியவரும், சிறு பையனும் பைனாகுலரில் அமேரிக்கக் குடியிருப்பைப் பார்ப்பதில் கொண்டுவந்து நிற்கிறது கேமெரா..சின்ன பையனை அவர்களது உடையும், அந்த சூழ்நிலையுமே ஏதோ விபரீதம் நடக்கப் போவதை உணர்த்துகிறது. அப்படியே நடக்கிறது அந்த விபரீதம்..
போலிஸ் உடையணிந்த ஆயுததாரிகள் அங்கு மகிழ்சியாய் விளையாடிக் கொண்டிருக்கும் அமெரிக்க மக்கள்மீது சரமாரியாக சுட்டுக்கொண்டே வர எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நாலாபக்கமும் சிதறி ஓட, போலிஸ் சீருடையில் இருக்கும் தற்கொலைப்படையைச் சேர்ந்த ஒருவன் எல்லோரையும் ஒன்று சேர்த்துவிட்டு ”அல்லாஹு அக்குபர்”, ”அல்லாஹு அக்குபர்” எனக் கத்திக்கொண்டே தனது உடம்பில் கட்டியிருக்கும் குண்டை வெடிக்கச் செய்கிறான். பெருவாரியான மக்கள் இறந்து போகிறார்கள். எவ்வளவு இயல்பாக இதை எப்படி எடுத்தார்கள் ?
சதித்திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சி அந்தப் பெரியவர் முகத்தில். குண்டுவெடிப்பை பைனாகுலரில் தனது பேரனுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார் அந்தப் பெரியவர். அந்தச் சிறுவனுக்கோ அதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. முகத்தைத் திருப்பிக்கொள்கிறான். ஆனாலும் அவர் அவனது முகத்தை வலுக்கட்டாயமாக திருப்பி அவனைப் பார்க்க வைக்கிறார். இந்த குண்டு வெடிப்பை வீடியோவிலும் பதிவு செய்து வைக்கிறார்.
புலனாய்வு செய்ய வரும் அமெரிக்க குழு தாக்குதல் நடந்த இடங்களில் கிடைத்த தடயங்களை சேகரித்து வைக்கின்றனர். அதில் சில கோலிகுண்டுகள் கிடைக்கிறது. தடயங்களை தாக்குதல் நடந்த போது இறந்தவர்களின் உடல்களில் இருந்தும் சேகரிக்கின்றனர். அதில் கிடைக்கும் தகவல்களும் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றது.
இறுதியில் அவர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனைக்குச் செல்லும் வழியில் அமெரிக்க விசாரனைக் குழுவின் மீது தாக்குதல் நடக்கிறது. பலமான துப்பாக்கிச் சண்டையில் இருதரப்பிற்கும் சேதமிருக்க புலனாய்வுக் குழு தரப்பில் எல்லோரும் தப்பிப்பிழைத்து கடைசியாக இருக்கும் வாகனத்தில் தாக்குதல் நடத்தியவர்களை துரத்திச் செல்கின்றனர். அதில் ஒரு புலனாய்வுக் குழுவில் ஒருவர் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டுவிட அவர்களைப் பிடித்து சிக்கிக்கொண்ட குழு உறுப்பினரைக் காப்பாற்றச் செல்கின்றனர். அவரை தீவிரவாதி குழு வீடியோ காமெரா முன்பு வைத்து கழுத்தில் கத்தியை வைத்து ஏதோ படிக்க அந்த காட்சியில் அந்த அமெரிக்கர்கள் காட்சியில் தெரியும் பயம், இவர் நிஜ தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொண்டாரே என்று என்று நமக்கே பயமாக இருக்கிறது. அவ்வளவு இயல்பு.
துப்பாக்கியால் ஒரு போடு போட்டால் முடிந்துவிடும்..ஆனால் வீடியோ படமெடுத்து அதை உலகெங்கும் காண்பித்து பயமுறுத்த முயலும் காட்சியும், அதற்காக அந்த அமெரிக்கனின் கழுத்தை அறுத்துக் அவர்கள் மேற்கொள்ளும் முயற்சி அவர்களின் லட்சியம் அமெரிக்கர்களுக்கு பயத்தை உண்டாகுவதுதான் என்பதை வசனமே இல்லாமல் எடுத்திருக்கிறார்கள்.
கடைசியில் அமெரிக்கர்கள் மீது தற்கொலைத்தாக்குதல் நடத்திய அபுஹம்சாவின் வீட்டிற்குள்ளேயே.. அங்கும் பலமான துப்பாக்கிச் சண்டை நடக்கிறது. இறுதியில் விசாரனைக்குழுவில் உள்ள ஒருவர் சண்டை நடக்கும் இடத்தின் கடைசித்தளத்தில் ஒரு குடும்பத்தைக் கான்கிறார். அங்கிருக்கும் குழந்தை பயத்தால வீரிட அவர் அதனை சமாதானப்படுத்த தன்னிடம் இருக்கும் லாலிபாப் மிட்டாயைக் கொடுக்கிறார். அந்தக் குழந்தை பதிலுக்கு ஒரு கோலிகுண்டைத் தருகிறது. இந்த இடத்தில் அந்த குழந்தையின் முகத்தில் தெரியும் இன்னஸன்ஸ் பல செய்திகளை சொல்லுகிறது.
தாகுதல் நடந்த இடத்தில் கிடைத்த தடயத்தில் கிடைத்த அதே போன்ற கோலிக்குண்டு. புலனாய்வுக்குழுவுக்கு அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற உண்மை புலப்பட்டு அங்கு அமர்ந்திருக்கும் பெரியவர்தான் அபு ஹம்சா என்பதைக் கண்டுபிடித்து அவர் சுடப்பட இறுதியில் சாகும் தருவாயில் பேரனிடம் அரபியில் “ எல்லா முஸ்லிம் அல்லாதவரையும் கொன்றுவிடுவோம்.. வெற்றி நமக்கே" என சொல்லிச் சாகிறார் அடுத்த தலைமுறை கொலைபாதகக் கும்பலை உண்டாக்கிவிட்டு உயிர் துறக்கிறார்.
கடைசி காட்சியில் அந்த சிறுவனி கண்களில் தெரியும் கொலை வெறி மேலும் பல செய்திகளை சொல்லுகிறது.இதில் ஆச்சரியப்படும் விஷயம் இந்தப்படம் முழுக்க சவுதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது இந்தப்படம் முழுக்க சவுதியிலேயே எடுக்கப்பட்டுள்ளது போல இருந்தாலும், அரிசொனாவிலும் , ஐக்கிய அரபு எமிரேட்டிலும் எடுக்கப்பட்டது! சிறப்பான ஒளிமற்றும் ஒலிப்பதிவுடன் படம் விறுவிறுப்பாக செல்லும்படிக்கான காட்சிகள். படம் முடிவடைந்த பின்னரே நாம் நிகழுலகிற்கு வருகிறோம். அவ்வளவு அருமையாக திரைப்படத்துடன் ஒன்றச் செய்யும் அளவு சிறப்பான திரைக்கதை..
”அல்லாஹு அக்குபர்” என்று தீவிரவாதிகளும், தீவிரவாதிகளை அழிக்கும் சவுதி போலீஸும் சொல்லுகிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் மனமாற்றம் நடந்தால் தான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். அல்லா அவர்களுக்கு துணையிருக்க பிராத்திக்கிறேன்.
படத்தின் டிரைலர்
எச்சரிக்கை: இன்று அவதார் படம் பார்க்க போகிறேன்...
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 23, 2009
தி கிங்டம் ( The Kingdom ) - சினிமா விமர்சனம்
Posted by IdlyVadai at 12/23/2009 12:05:00 AM
Labels: சினிமா, விமர்சனம், விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
57 Comments:
Interesting.. I will watch this.
This movie also explains how non-Muslims and Non-Saudis are treated in Saudi, especially about the Diplomatic Quarters in Riyadh.
It's a fanatic place ruled/controlled by a fanatic belief.
THALIVA. Go and see "VETTAIKARAN FIRST"
Murali
Murali
i was really surprised to read the whole movie was shot in saudi.Get your facts right IDlyvadai.These days there is something called WIkipedia...........
"எச்சரிக்கை: இன்று அவதார் படம் பார்க்க போகிறேன்..."
வேட்டையனுக்கு போட்டியா வந்துச்சே அந்த படம்தான.
இனி மேல் வாராவாரம் ஒரு படம் விமர்சனம் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!!
AVATAR படம் பற்றிய உங்கள் விமர்சனத்தை மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்...!!
(சென்னையில் 3-D தியேட்டர் உள்ளதா?)
இ.வ, படம் அரிசொனாவிலும் , ஐக்கிய அரபு எமிரேட்டிலும் எடுக்கப்பட்டது... சவுதியில் படம் எடுக்க அனுமதி கிடையாது...முன்பு அமெரிக்கர்களுக்கு இருந்த வரவேற்ப்பு இப்போது சவுதியில் அவர்களுக்கு இல்லை.
Quote from Wikipedia:
On-location filming took place in Abu Dhabi, United Arab Emirates for two weeks in mid-September. Since Universal Pictures does not have an office in the Middle East, the production was facilitated by a local production firm called Filmworks, based in Dubai. Filming also took place at the Emirates Palace hotel in Abu Dhabi.
சீதா, மஞ்சள் ஜட்டி,
நன்றி. மாற்றிவிட்டேன்.
இவ
எச்சரிக்கை: இன்று அவதார் படம் பார்க்க போகிறேன்...//
இனி இது வேறயா?
எச்சரிக்கை: இன்று அவதார் படம் பார்க்க போகிறேன்...
சீக்கிரம் அவதாரம் எடுத்து வா...இ.வ..
நல்ல படங்களை அப்பப்பவே விமரிசனம் பண்ணிடனும்...
//இனி மேல் வாராவாரம் ஒரு படம் விமர்சனம் எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!!
AVATAR படம் பற்றிய உங்கள் விமர்சனத்தை மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டு உள்ளனர்...!!
(சென்னையில் 3-D தியேட்டர் உள்ளதா?)//
ஜெய் ஹனுமான் நினைத்தால் வார வாரம் விமர்சனம் எழுதலாம். Alvin and the Chipmunks பார்த்ததாக தகவல் எழுதுகிறாரா பார்க்கலாம் :-)
கீழே உள்ள விளம்பரத்தை பார்த்து தான் 3-D டிக்கெட் வாங்கியிருக்கேன். பீதியை கிளப்பாதீங்க :-)
http://www.dailythanthi.com/thanthiepaper/23122009/MDSG388297_MDS_ALL.jpg
nice movie
all muslim must be watch
The Kingdom:
வந்தவாசி, திருச்செந்தூரில் வழக்கம் போல் தி. மு. க. முன்னணி.
நன்றி இட்லிவடை
நானும் இந்த படத்தை பார்த்து பிரமிப்படைந்தேன்...
வெகு நேர்த்தியாக எடுக்கப்பட்ட ஒரு படம்...
தீவிரவாதம் அழிக்கப்பட முடியாது. அது தொடரும் என்பதாக படம் முடியும்...
அவதார் பட விமர்சனம் எதிர்பார்க்கிறேன்...
//அவர் சுடப்பட இறுதியில் சாகும் தருவாயில் பேரனிடம் அரபியில் “ எல்லா முஸ்லிம் அல்லாதவரையும் கொன்றுவிடுவோம்.. வெற்றி நமக்கே" என சொல்லிச் சாகிறார் அடுத்த தலைமுறை கொலைபாதகக் கும்பலை உண்டாக்கிவிட்டு உயிர் துறக்கிறார்.//
இப்படியொரு வசனமே கிடையாது!
இஸ்லாம் தாத்தா எதிரிகளை கொல்லுவோம் என்னும் சமயத்தில், அமெரிக்கா ஏஜெண்டும் எதிகளை கொல்லுவோம் எனற மாதிரி வரும்!
இந்த பதிவில் வேணும்மின்னே சில இடைசொருகல் செய்த மாதிரி இருக்குது!
Good post...Bring more reviews like this..
Avatar Cinema Review in Tamil Hindu by Thiru.Aravindan Neelakandan
http://www.tamilhindu.com/2009/12/avatar_review/
விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறைத்தின சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லியவர்கள் இன்று "கிருஸ்துமஸ்"
சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்கிறார்கள் ( கலைஞர் டிவி தான் ) . நாத்திகம் என்றால் என்ன ? யாராவது சற்று விளக்க முடியுமா ?
Nice review. Congrats to "Jai Hanuman" !!
There is a scene in this movie in which the heroine is asked not to touch the body of a muslim, because she is not a muslim !!
it is a nice proof about the untouchability practiced in islam.
I recommend every one to also watch another important movie "The Stone Merchant". It calls the spade as spade.
வால்பையன் ......
////அவர் சுடப்பட இறுதியில் சாகும்
தருவாயில் பேரனிடம் அரபியில் “ எல்லா முஸ்லிம் அல்லாதவரையும் கொன்றுவிடுவோம்.. வெற்றி நமக்கே" என சொல்லிச் சாகிறார் அடுத்த தலைமுறை கொலைபாதகக் கும்பலை உண்டாக்கிவிட்டு உயிர் துறக்கிறார்.//
இப்படியொரு வசனமே கிடையாது!//
இல்லை.. இருக்கிறது..
Don't fear them my child, we are going to kill them all.
இதுதான் அந்த தாத்தா கடைசியா பேரனிடம் சொல்லும் வசனம் ( ஆங்கில சப்டைட்டிலாக வரும்)
fast movie.last week nan HBO chanela parthen alagan padam.nan neaithathi appadiye eluthirukireerkal.goodddddd.saudi police oruvaroda acting enaku pidithathu.
its a nice mve.
its a nice mve.
//Don't fear them my child, we are going to kill them all.
இதுதான் அந்த தாத்தா கடைசியா பேரனிடம் சொல்லும் வசனம் ( ஆங்கில சப்டைட்டிலாக வரும்) //
அதே வசனத்தை தான் அமெரிக்க ராணுவவீரரும் சொல்லுவார்!
அவ்விடத்தில் ”ஆல்” என்பது எதிரிகளை தானே குறிக்கும்!
வால்பையன்........
// அவ்விடத்தில் ”ஆல்” என்பது எதிரிகளை தானே குறிக்கும்!//
ஆமாம், ஆனால் அந்தச் சிறுவனுக்கு யார் எதிரிகள் என்பதை படத்தில் கான்பிக்கப்படும் முதல் குண்டுவெடிப்பிலேயே கான்பிக்கிறாரே..கவனிக்கவில்லையா?
அந்தச் சிறுவனைப் பொருத்தவரை முதலில் கொன்றதும் எதிரிகளைத்தான், தற்போது எல்லோரையும் கொன்றுவிடமுடியும் என தாத்தா சொல்லிவிட்டு செத்தது எந்த எதிரிகளை என்பதும் தெரியும்..இல்லையா?
@ ஜெய் ஹனுமான்!
இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை எல்லாம் கொல்ல வேண்டும் என பொருள்பட கூறுகிறீர்கள்!
எரிகிற கொள்ளியில் எண்ணை ஊற்ற நீங்கள் ஆசைபடும் போது மண்ணள்ளிபோட நான் யார்!
(ஏற்கனவே டவுசர் கிழிஞ்சி கிடக்கு= நான் என்னைய சொன்னேன்)
I have seen it few times. very good one.
அருமை நண்பர் இட்லி வடை
ரொம்ப அருமையான விமர்சனம்,சிறிது
சிக்கலான விஷயங்களை கொடுக்காமல் இருந்திருக்கலாம், தவறை திருத்திய விதமும் அருமை.இன்னும் அபோகலிப்டோ வெல்லாம் எழுதுங்க பாஸ்
Thank you jai hanuman for the NICE interpretation.
Ppl who see the movie will not relate dialogues to first scene. They will just take them as it is displayed in that particular scene.
Only genius like you will dissect the movie and create too many thesaurus for a word.
Common people will have only vaal payan's view.
YOUR name suggests something
JAI HANUMAN
The "all" denotes the suadi police as well (they are muslims too)
//Common people will have only vaal payan's view.//
கடைசி சண்டையில் உயிர்விடும் போலிஸ்காரர் ஒரு இஸ்லாமியர்!
ஒருவர் கடவுள் நம்பிக்கையாளர் என்றால் அவரது கருத்தில் நான் மாறுபடுகிறேன், அது எந்த மதமாக இருந்தாலும்.
ஒருவர் இஸ்லாமியர் என்பதற்காக வில்லனாக பார்க்க உங்க அளவுக்கு நான் இன்னும் காமன்மேனா ஆகல!
Val Payan,
Actually I was supporting your view.
I was not against you.
I refered what jai hanuman has interpreted is wrong because he has different mind set.
I meant that "all" refers to enimies and not particularly non muslims.
I really appreciate your non biased view.
தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிகனும் அனானி!
தமிங்கிலிஷில் அடித்திருந்தால் புரிந்து கொண்டிருப்பேன்!
//Thank you jai hanuman for the NICE interpretation.//
SORRY VAAL PAIYAN IT IS ME AGAIN.
THE WORD "NICE" IS VANJA PUGALCHI....
MY BAD WRITING SKILL HAS LET ME DOWN.
SORRY AGAIN
வால்பையன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி..
வால்பையனும், அனானியும்..புல்லரிக்க வைக்கிறாங்க..
இருவருக்கும் மதச்சார்பின்மை மஹாத்மாக்கள் பட்டம் வழங்கி கௌரவிக்கிறேன்...
விட்டா பிரதமருக்கே தான் சிறுபான்மையினர்மேல போதுமான அளவு கரிசனம் காட்டலையோன்னு இந்நேரம் சந்தேகம் வந்திருக்கும்.. அவ்வளவு கரிசனம்..
உங்க டவுசர்க்கு கீழ குண்டு வெடிக்காதவரை இப்படித்தான் பேசுவீங்க..
”லஜ்ஜா” (Shame) னு ஒரு புஸ்தகம் வங்க எழுத்தாளர் தஸ்லீமா நஸ்றீன் எழுதுனது.. பெங்குவின் பதிப்பகம் போட்டது..படிச்சுப்பாருங்க..
அப்பத் தெரியும்.. நம்ம நண்பர்களெல்லாம் எந்த அளவுக்குப் போவாங்க என்கிற விஷயம்...
பங்களாதேசுல தடை பன்றதுக்குள்ளையே இந்தியாவுல தடைசெய்யப்பட்ட புஸ்தகம். அதாகப்பட்டது பங்களாதேஷ்காரனவிட பங்களதேஷ்மேலையும், நம்மூர் மூஸ்லிம்கள் மேலையும் அவ்வளவு பாசம்...ஏன்னா இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு இழைத்த அநியாயங்களை வெளியுலகுக்கு தெரியப்படுத்துவதால்..
நிச்சயமாச் சொல்றேன்.. வால்பையனுக்கே வாலுல தீப்பிடிக்கும் அதைப் படிச்சா.. அவ்வளவு கோரதாண்டவம் ஆடியிருக்காங்க, பங்களாதேஷ் பரதேசிங்க.. அதோட தொடர்ச்சிதானேய்யா இதுபோன்ற குண்டுவெடிப்புகளும்...
இருக்கட்டும்.. எல்லாத்துக்கும் ஒரு முடிவு வராமலேயேவா போயிரும்..
என்ன சொல்றீங்க ?
மத வெறியர்கள் மீது தான் எனது கண்டனங்களே தவிர, அவர் இந்த/அந்த மதத்துகாரர் என்பதற்காக அல்ல!
எனது பதிவு பக்கம் வந்துருக்கிங்களா நண்பரே!
எனக்கு சிறுபான்மையும் தெரியாது, பெரும்பான்மையும் தெரியாது!
வால் பையனும், அந்த இன்னொரு அனானியும் (மன்னிக்கணும், நான் வேற), சொன்னது போல, இசுலாமியர்கள் `எதிரிகள்` அப்பிடீன்னு சொல்லும்போது அத நாம பொதுவாத்தான் எடுத்துக்கணும் - இசுலாமியரல்லாதவர்கள் என்று அல்ல. இவ்வாறு சொன்னவர்கள் வேற்று மதத்தவரா இருந்தாருன்னா அவருடைய இசுலாமிய விரோதப் போக்கை உடனடியா கண்டிக்கணும். அது தான் மதசார்பின்மை. (பிகு) வால், உங்க இடுகைகள் சிலவற்றைத்(உம் சமிஸ்கிருதம் மற்றும் ஜோசியம் பற்றியது) தவறுதலாக படிக்க நேர்ந்தது. இவைகளெல்லாம் உங்கள் குற்றமா அல்லது அனைவரையும் அனுமதிக்கும் தொழில்நுட்பத்தின் குற்றமா என்று தெரியவில்லை.உதாரணத்துக்கு குரான் மொழி - ஒரு சிறு ஆராய்ச்சி கூடத் தேவையில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி மிகவும் பேத்தியிருந்தீர்கள். வேதங்கள் அனைத்தும் ஹிந்தியில்தான் இருக்கின்றன என்று நீங்கள் உங்கள் பதிவில் உளறாதது எனக்கு வியப்பே.
படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்..
பதிவை படித்ததுமே நினைத்தேன் ..பின்னூட்டம் காரசாரமாக வரும் என்று :-) பொய்க்கவில்லை
வால் பையன் போன்ற இலக்கற்ற நிதானமற்ற மனிதர்களை நாம் எப்ப இக்னோர் செய்யப் படிக்கப் போகிறோமோ அப்போது மட்டுமே இந்த உலகில் தீவிரவாதம் ஒழியும்.
மாறுபட்ட வேற அனானி
இப்படியொரு வசனமே கிடையாது!//
இந்த பதிவில் வேணும்மின்னே சில இடைசொருகல் செய்த மாதிரி இருக்குது!
December 23, 2009 10:58 AM
-------
I again verified the climax just now. Wonder why most Tamil bloggers missing the complete picture and siding with Jihadis in the name of pagutharivu or Liberalism.
Most importantly they are the ones who actually encourage and induce the already notorious self-victimization among Tamil Muslims.
//This movie also explains how non-Muslims and Non-Saudis are treated in Saudi, especially about the Diplomatic Quarters in Riyadh.
//
நானும் எழுதினேன் சாமி. அப்போ பீஸ் பீஸா கிழிச்சாங்க இணைய இஸ்லாமிஸ்டுகள்.
ஹாலிவுட் காரன் சொன்னா எல்லாரும் எல்லாத்தையும் பொத்திகினு இருப்பாங்க
அமீரகத்தில் கூட அமெரிக்கா காரன் வந்து களையெடுக்கிறானாம். அப்படி களையெடுக்கும் போது நம்மூர் காரங்களுக்கும் கொஞ்சம் அடி கிடைக்குதாம். இதெல்லாம் எழுத மாட்டானுங்க நம்மூர் அரபு அடிமைகள்
வால்பையன் என்னுடைய தளத்துக்கு வந்திருகிறீர்களா என்றாரே என்று சென்று பார்த்தேன்.
முதல் பேராவில எழுதுனதுக்கு கடைசி பேராவில மாறுபடுறார்.
வெறும் வெற்று உளறல்.யாராவது முன்னாடி வேற மாதிரி உளறினாயே என்றால் அது போன மாசம் இது இந்த மாதம் என்கிறார்.
இந்தியாவில் இருக்கும் கருத்து கந்தசாமி. இறைவா இவர்களிடமிருந்து முதலில் எங்களை காப்பாற்று.
சஞ்செய்
//.உதாரணத்துக்கு குரான் மொழி - ஒரு சிறு ஆராய்ச்சி கூடத் தேவையில்லாத ஒரு விஷயத்தைப் பற்றி மிகவும் பேத்தியிருந்தீர்கள். வேதங்கள் அனைத்தும் ஹிந்தியில்தான் இருக்கின்றன என்று நீங்கள் உங்கள் பதிவில் உளறாதது எனக்கு வியப்பே.//
அரபியே நாடுகள் என்று குறிபிட்டு மொழியில் தான் தகவல் பிழை செய்திருந்தேன்! மற்றவர்கள் சொல்லும் முன்னரே பின்னுட்டத்தில் நானே சொல்லிவிட்டேன்!
பதிவில் மாற்றாமல் இருப்பதற்கு காரணம், என் தவறுக்கு நான் என்றும் நியாயம் கற்பிப்பததில்லை!
ஹிந்தி சமஸ்கிருதத்தின் கொள்ளுபேரன் தான்!
//வால் பையன் போன்ற இலக்கற்ற நிதானமற்ற மனிதர்களை நாம் எப்ப இக்னோர் செய்யப் படிக்கப் போகிறோமோ அப்போது மட்டுமே இந்த உலகில் தீவிரவாதம் ஒழியும்.//
ரொம்பச்சரி!
ஆனால் நான் எழுதிகிட்டு தான் இருப்பேன்!
@ சஞ்சய்!
உண்மை தான்!
போன மாதம், போன மாதம் தான்!
இந்த மாதம், இந்த மாதம் தான்!
அதுசரி! இந்த படத்துல கழுத்தருக்கும் காட்சி ஏதேனும் உள்ளதா? நான் கொஞ்சம் பயப்படுவேன். அதான்.
//ரொம்பச்சரி!
ஆனால் நான் எழுதிகிட்டு தான் இருப்பேன்//
அட தேவுடா !! தமிழ் மக்களுக்கு நல்லதே நடக்காதா ????
அல்கொய்தா போன்ற தீவிரவாத இயக்கங்கள் உருவாக காரணமாக இருந்த மெக்கா மசூதி ஆக்ரமிப்பு பற்றிய புத்தகங்களை இட்லிவடை குறிப்பிட்ட இறுதிகாட்சி வசனங்களை எதிர்ப்பவர்கள் படிக்க வேண்டும்.
மசூதிக்குள் நுழைந்து சண்டையிட சவுதி அரசுக்கு மதத்தலைமையின் ஒப்புதல் தேவைப்பட்ட போது, வஹாபியிசத்தை நிலை நிறுத்த, அருமையான சந்தர்ப்பமாகக் கண்ட பின்பாஜ், வஹாபிய அடிப்படைவாதத்தை வலுச்செய்யும் பல கோரிக்கைகளை முன் வைத்து பேரம் பேசியது இவர்களுக்கு தெரியுமா? இந்த பேரத்தின் விளைவாக, சவுதியில் மட்டுமே கற்றுத்தரப்பட்ட கடுமையான அடிப்படைவாத வஹாபி இஸ்லாத்தை உலகெங்கும் பரப்பும் விதத்தில், உலக மதராஸாக்களுக்கு நிதி உதவி செய்வதற்கும், பல நாடுகளில் இருந்தும் முஸ்லீம்களை சவுதிக்கு வரவழைத்து கடுமையான வஹாபி இறையியலில் பயிற்சி அளிப்பதற்கும் எண்ணெய்ப் பணத்தை வாரி இறைக்க சவுதி அரசு ஒப்புக்கொண்டது. உலகெங்கும் ஜிஹாதி தொழிற்சாலை நிறுவ நிதியுதவி செய்யும் நாடாக சவுதி அரேபியா இன்று ஆகியிருப்பதற்கான விதை அன்று பின்-பாஜுடனான பேச்சு வார்த்தையின் முடிவில் விதைக்கப்பட்டது" என்பது உலகுக்கே தெரியும்
அந்த ஆக்ரப்புகளின் போது, சம்மந்தமே இல்லாமல் ஹைதராபாத்தில் நடந்த கலவரங்களில் இந்துக்கள் கொல்லப் பட்டார்களே அதற்கு என்ன சொல்லுகிறார்கள்?
"The siege of Mecca" என்ற ஆங்கில புத்தகத்தின் அடிப்படையில் திண்ணை.காம் என்ற இணைய தளத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை படித்தால், குரானின் குறிப்பிடப்பட்டுள்ள "நம்பிக்கை இல்லாதோர்" என்பதற்க்கு அவர்கள் கற்பிக்கும் அர்த்தம் என்ன என்பது விளங்கும்.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=20809043&format=html
வாய்ப்பு கிடைத்தால் "The Siege of Mecca" என்ற ஆங்கில புத்தகத்தை படிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
எல்லா தீவிரவாதிகளும் இஸ்லாமியர்கள் இல்லை
ஆனால் அனேக தீவிரவாதிகள் இஸ்லாம் மதத்தை பின்பற்றுவதாக கூறிகொள்ளும் நபர்கள் என்பது உண்மை.(அவர்களை நாங்கள் இஸ்லாமியர்களாகவே கருதவில்லை - இஸ்லாமின் அடிப்படை தெரியாத மூடர்கள்).
அனால் உங்களில் அநேகர் பொத்தாம் பொதுவாக "அவர்கள்" என்று எங்கள் எல்லோரையும் "தீவிரவாதிகள்" என்று குறிப்பிடுவதுதான் வருத்தமாக இருக்கிறது.
உல்பா தீவிரவாதிகள் இருப்பதால் அந்த இனமே தீவிரவாதிகள் என்றால் என்ன நியாம் ?
மாலேகானில் குண்டு வைத்தது ஒரு பெண் சாமியார் என்பதால் எல்லா பெண் சாமியார்களும் தீவிரவாதிகளா?
குஜராத் மோடி போன்றவர்களை வைத்து எல்லோரையும் தப்பாக நினைக்கலாமா?
இதுபோல் இன்னும் பல உதாரணங்கள் அடுக்கலாம்.
எனது நண்பர்கள் நிறைய பேர் மாற்று மதத்தை சேர்ந்தவர்கள்தான் அவர்கள் யாரும் என்னை தீவிரவாதியாக கருதவில்லை என்பது 100 % உண்மை.
யார் மனதையும் புண் படுத்த இதை எழுதவில்லை - தவறு இருந்தால் மன்னிக்கவும்.
தஸ்லிமா நஸ்ரின் படிக்க சொன்னவர்கள் கொஞ்சம் final solution -ம் பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்
Please write about
1. Traitor
2. Body Of Lies
movie reviews also.
Murugesh
தஸ்லிமா நஸ்ரின் படிக்க சொன்னவர்கள் கொஞ்சம் final solution -ம் பார்க்கும்படி கேட்டுகொள்கிறேன்
December 25, 2009 9:47 AM
-----------
Why are you hitting a same-side Goal.
Hindus accept and entertain views from Minorities and Sickulars as they are naturally liberals. Allowing Final solution movie is a correct example of that, though Hindus largely differ to what's said in that movie.
Can any so-called "moderate" Muslim allow the Danish Cartoonist, Salman Rushdie, Theo-Van Gogh, Geert Wilders, or a Taslima Nasreen in the name of freedom of expression, despite what they say are pure facts.
விரிவான விமர்சனத்துக்கு நன்றி கிடையாது - இப்படி மொத்தத்தையும் உரிச்சு சொல்லிட்டா அப்றம் படம் பாக்க எப்படித் தோணும். இதை எழுதறதுக்கு முன்னாடி உண்மைத்தமிழனோட சினிமா விமர்சனம் எதையாச்சும் படிச்சுட்டு ஆரம்பிச்சிங்களோ? :-)) Just Kidding.... (அப்டீன்னு டிஸ்க்ளெய்மர் போட வேண்டிய அளவுக்கு தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்திருக்கிறது என்பதை 2010-இல் நுழையப்போகும் தமிழனாகிய நான் உணர்ந்தேயிருக்கிறேன்).
மெய்யாலும் விமர்சனம் நல்லாருக்கு. படம் பாக்கணும். போன வாரம் தூக்கம் வராத இரவொன்றில் வேட்டைக்காரனைத் தெரியாத்தனமா பாத்துத் தொலைச்சுட்டு அந்தக் கொலைவெறியைத் தீர்க்க வழிதெரியாமல் அலைஞ்சுக்கிட்டு இருக்கேன். “அது” விலகினதும்தான் வேற எந்தப் படத்தையும் பாக்க முடியும்!!!
நன்றி.
Post a Comment