பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 18, 2009

வேட்டைக்காரன் - FIR

டிஸ்கி 1: உள்ளே "நிறைய" விஷயங்கள் சொல்ல போகிறேன். அதனால் படம் பார்க்கும் ஆவல் இருந்தாலும் படித்துவிட்டு பாருங்க.

டிஸ்கி 2: நீங்க ஏற்கனவே விஜய் படம் நிறைய பாத்திருந்தீர்கள் என்றால் இந்த விமர்சனம் எல்லாவற்றையும் நினைவுப்படுத்தும். இது தான் இந்த விமர்சனத்துக்கு ஸ்பாயிலர்.

எச்சரிக்கை: படத்தின் இடையே சாதா டீ/காபி வாங்கிக் குடித்தாலும் மசாலா டீ/காபி சாப்பிட்ட உணர்வு வருவதை தவிர்க்க முடியாது.

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேட்டைக்காரன்.

முதலில் கூட்டம் அதிகமாக இருக்கும் ரயில்வே பிளாட்பாரத்தில் ஒருவர் ஜோல்னா பையுடன் இறங்கி வருகிறார். பிச்சைக்காரன் தட்டை எல்லாம் குடி போதையில் உதைக்கிறார். சரி இவர் தான் வில்லன் என்று நீங்க நினைத்தீர்கள் என்றால், அங்கே தான் டிவிஸ்ட் இருக்கு. ரயில் உள்ளே ஏறுகிறார். அங்கே ரவுடி, ஆள் கடத்தல் எல்லாம் இருக்கு. உடனே இவர் ஜோல்னா பையிலிருந்து துப்பாக்கி எடுத்து அந்த ரவுடியை சுடுகிறார். இவர் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் தேவராஜ் ஐபிஎஸ்(ஸ்ரீஹரி).

அடுத்து தூத்துக்குடியில் இந்த தேவராஜ் கட்டவுட் இருக்கு. எதற்கு என்று போஸ்ட் மேன் விசாரிக்க. அந்த கட்டவுட் வைத்தது விஜய். (நம்ம ஒரிஜினல் ஹீரோ)

இவரை மாதிரி என்கவுண்டர் போலீஸாக விரும்புவது தான் விஜய்யின் லட்சியம். இதுக்கு ஒரு உதாரணம். ஊருக்குள் ஒரு போலீஸ் யாரையோ ஏழையை இடித்துவிட உடனே விஜய் அந்த ஜீப்பை வயலில் எல்லாம் துரத்தி துரத்தி பிடிக்கிறார். திடீர் என்று அங்கே ஒரு குதிரை வருது. அதில் ஏறி துரத்துகிறார். தலையில் கிளிண்ட் ஈஸ்ட் உட் கேப்புடன். போலீஸை அடிக்கும் முன் ஒரு நீட்டமான கல்லை எல்லாம் உடைத்து(அந்த சாதாரண போலீஸுக்கு அது தேவையே இல்லை) தன் வீரத்தை காண்பித்து பிறகு அந்த போலீஸிடம் பணம் ( காமெடியாக) வாங்கி அடிப்பட்ட ஏழைக்கு உதவுகிறார். அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.

அதுல ஆலமர பள்ளிக்கூடத்தை ஆக்ஸ்போர்ட் ஆக்கறேன் என்கிறார்.

இப்ப விஜய் இந்த மாதிரி ஊதாரி தனமாக சுற்றும் போது ( அதாவது போலீஸ் ரவியாக ) எந்த சினிமா அப்பா அம்மாவுக்கு தான் கோபம் வராது? டில்லி கணேஷ் அப்பா. அப்பறம் கொஞ்சம் புதுசா ஒரு அம்மா வருகிறார். வந்து மகனுக்கு அறிவுரை. அதுக்கு விஜய் செய்யும் காமெடி என்று படம் நகர்ந்து கொண்டு இருக்கு. விஜய் தன் நண்பர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டாமா? இருக்கவே இருக்கு. நண்பருக்கு அவர் விரும்பும் பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்.

உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் - இதை வேற நான் சொல்லணுமா? அதே தான். ஸ்லோ மோஷனில் அனுஷ்கா தலையை கோதிவிட்டுக்கொண்டு ரயில் ஏற புறப்படுகிறார். நம் எதிரே யாராவது அது மாதிரி வந்தால் அந்த பொண்ணை பார்த்துக்கொண்டு மற்றவர்களை தான் இடிப்போம் ஆனால் படத்தில் ஹீரோ அப்படி செய்யலாமா? (எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்திலிருந்து ஹீரோயினை பார்த்து பாடல் காட்சியை தவிர ) வழியக்கூடாது. மற்றவர்களை பார்த்து கொண்டு இவரை அக்னிநட்சத்திரம் பிரபு, கார்த்திக் மாதிரி தோளில் இடிக்கிறார். உடனே கீழே விழுந்ததை, சத்த்துகுடிங்க ( ஏன் சாத்துகுடி ? ஊர் தூத்துக்குடி அதனால) எல்லாம் பொறுக்கும் போது என்ன வரும் காதல் தான் (நமக்கு பெருமூச்சு).
இப்படி ஒவ்வொன்றாக நான் விளக்கிகொண்டு இருக்க முடியாது. நீங்களா இனிமே புரிஞ்சிக்கணும்.

இப்ப திரும்பவும் விஜய். மீண்டும் அந்த ரோல் மாடல் போலீஸாக ஆகும் படலம். அந்த தேவராஜ் +2வில் 4 முறை கோட்டு அடித்திருப்பார். இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து... அவர் படித்த அதே காலெஜில் - இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே! இதில பாட்ஷா மாதிரி மஞ்சள் கலர் ஆட்டோ, மஞ்சள் கலர் கர்சீப் எல்லாம். இதற்குள் விஜய் படித்துவரும் காலேஜில் ரவுடிகள் கொலை நடக்க போலீஸாக வரும் ஷாயாஜி ஷிண்டே அதை கண்டுக்கொள்ளாமல் போகிறார். அதனால இவர் கெட்ட போலீஸ். கதை இப்ப தான் பில்டப் ஆகிறது.

காலேஜ் தோழனாக சின்னிஜெயந்துக்கு வயசான காரணத்தால் வேறு ஒருவரை பிடித்திருக்கிறார்கள். இவர் காமெடி செய்ய ஸ்கோப் இல்லாத காரணத்தால் இவர் ஹேர் ஸ்டைல், கிருதா எல்லாம் கோணா மாணா என்று வெட்டி காமெடி செய்திருக்கிறார்கள்.

பாபிலோனின் தொங்கு தோட்டமும் மாதிரி தலை மயிர் வைத்துக்கொண்டு முகத்தில் நிறைய வெட்டுக் காயங்களுடன் இருந்தால் அவர் யார்? நூறு மார்க் உங்களுக்கு. சரியா கண்டு பிடிச்சீங்க. அவர் தான் படத்தின் ரவுடி வில்லன். செல்லா.

இதுக்கு முன்னாடி ஒரு பாட்டு வந்துவிட்டது அதை சொல்ல மறந்துவிட்டேன். பில்லா படத்தில் நயன் பில்லா என்ற டாட்டுவுடன் வருவாரே அதே மாதிரி இதில அனுஷ்கா இடுப்பில் வேற ஏதோ டாட்டுவுடன் வருகிறார். என்ன என்று படிப்பதற்குள் போய்விட்டது. இப்ப எடிட்டிங் எப்படி என்று தெரிந்திருக்கணுமே ?

அதுக்குள்ள பெண் காலேஜ் ஸ்டூடண்டை இந்த செல்லா ரவுடி வீட்டுக்கு கூப்பிட நம்ம விஜய் என்ன செய்வார் உடனே பொங்கி எழுகிறார். அவர் இருக்கும் பேட்டைக்கு தனி ஆளாக போய் அவரின் அடியாட்கள் ஒவ்வொருவராக வர அவர்களை தும்சம் பண்ணிவிட்டு கடைசில் இந்த ரவுடியையும் அடித்து சாத்துகிறார். அவர் அடித்து தும்சம் பண்ணிய இடத்தில் சுனாமி வந்தால் கூட அவ்வளவு அழிவு வந்திருக்காது. அவ்வளவு அழிவு ஏற்படுத்துகிறார் விஜய். மீயூசிக் கேட்கவா வேண்டும் கொடுத்த காசுக்கு விஜய் ஆண்டனி தன் பங்கிற்கு வில்லன்களை டிரம்ஸால் அடித்து சாத்துகிறார். அவர் அடித்த அடியில் எனக்கு உச்சாவே வந்துவிட்டது.

இங்கே இடைவேளி என்று நினைத்தால், அது தான் இல்லை. விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும்? ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே? சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். உடனே அவரை என்கவுண்டரில் போட்டு தள்ள முடிவு செய்கிறார்கள். அவரை எங்கோ காட்டுப்பகுதியில் அழைத்துக்கொண்டு போக, அங்கே விஜய் தப்பிக்கிறார். உடனே அவரை போலீஸ் துரத்துகிறார்கள், இவர் ஓட, போலீஸ் துரத்த கடைசியில் எங்கே போய் நிற்பார்? தெருவில் துரத்தினால் முட்டுச்சந்தில் போய் நிற்கணும், காட்டில் துரத்தினால் கடைசியில் அருவியின் தலையில் போய் நிற்கணும் இப்ப என்ன நடக்கும் ? இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா? இப்ப கீழே போகலாம்.

கீழே போன ஹீரோ குளத்திலிருந்து குளித்து எழுதிருப்பது மாதிரி எழுதவுடன் என்ன ஆச்சரியம், (!) முகத்தில் ஒரு காயம் கூட இல்லை!! ஃபிரஷாக இருக்கார். மேக்கப்பை இங்கே பாராட்டியே ஆக வேண்டும்.

தப்பித்த விஜய் நேராக தேவராஜ் வீட்டுக்கு போகிறார். அங்கே விஜக்கு அவர் ஹெல்ப் செய்ய மாட்டேன் என்று சொல்லுகிறார். ஏன் என்று விஜய் கொதிக்க என்ன உடனே ஃபிளாஷ் பேக் தான். இது கூட நான் சொல்லணுமா. இங்கேயும் ஒரு டிவிஸ்ட் இருக்கு.
ஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.

உடனே பாட்ஷாவில் ரஜினி ஜனகராஜ், மற்றும் சிலருடன் வருவது போல கூட்டணி அமைத்துக்கொண்டு வில்லனை அடிக்க ஆரம்பிக்கிறார்கள்.அப்போது தான் படத்தில் இன்னொரு டிவிஸ்ட் இருக்கு. செல்லாவின் அப்பா வேதநாயகம் (சலீம் கவுஸ்) பணக்கார ரவுடி. அதாவது ஜிப்பா போட்ட ரவுடி. இவரை விஜய் போய் மீட் பண்ணுகிறார். அவரும் தன்னுடைய அருமை பெருமைகளை (அதாவது வண்டவாளங்களை) விஜய்க்கு விளக்குகிறார். அதில மக்களுக்கு என்மீது பயம் என்று அடிக்கடி சொல்லி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய ரவுடி என்று பட்டம் என்று தான் வாழ்க்கையில் சாதித்த ரகசியத்தை கிட்டதட்ட ஒப்புதல் வாக்குமூலம் மாதிரி சொல்லுகிறார் விஜய் கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருந்தால் அதை வீடியோ எடுத்து சன் டிவியில் போட்டிருந்தால் சன் டிவிக்கும் ஏ.வி.எமுக்கும் இவ்வளவு செலவு இருந்திருக்காது.

விஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.


மெயின் வில்லனுடன் சண்டை போட்டால் அப்பறம் கிளைமேக்ஸில் என்ன செய்ய முடியும் என்று நினைத்திருப்பார் இயக்குனர். உடனே இருக்கவே இருக்கு மதுரை அங்கிருந்து ஒரு ஆளை கொண்டு வந்துவிட்டார். அவர் வந்து விஜயின் காதலியை கிட்நாப் செய்ய விஜய் காதலியை மீட்டு கொண்டு வருகிறார் என்று நான் சொல்ல வேண்டுமா? அதை செய்து விட்டு பைக்கில் ஏற்றி ரோட்டில் வரும் போது காதலி எனக்கு ஒரு கிராமத்தில் சின்ன வீடு வேண்டும், குழந்தை, தோப்பு, அமைதியான வாழ்க்கை எல்லாம் வேண்டும் என்று நடந்த பரப்பரப்பு எதுவும் இல்லாமல் சொல்லுகிறார். இங்கே தான் மேலும் ஒரு டிவிஸ்ட் இருக்கு. இப்படி சொல்லிக்கொண்டிருக்கும் போது எதிரே ஒரு லாரி வந்து இவர்களை மோதுகிறது. என்ன நடந்ததோ என்று நாம் பரபரக்க ஃபுல் மேக்கப்புடன் "என் உச்சி மண்டையில கிரி கிரி" என்று ஒரு பாட்டு. சும்மா சொல்லக்கூடாது. ரொம்ப செளக்கியமான திரைக்கதை.

இனிமே வேகமா சொல்லிடறேன். எனக்கே பொறுமை இல்லை. மக்கள் தன்னிடத்தில் பயப்படுவதில்லை என்று அமைச்சர் ஆக முயற்சி செய்கிறார் வேதநாயகம். ஆவதற்கு முன்பே அராஜகம் செய்கிறார். விஜய் இவர் இருக்கும் இடத்துக்கு வர முதல் சீனில் அடிவாங்கிய அடியாட்கள் திரும்பவும் கியூவில் வந்து அடிவாங்கிறார்கள். கடைசியில் வில்லனை அடிக்கும் முன் ஒரு டிவிஸ்ட் இருக்கு போலீஸ் வந்து விஜயை பிடிக்கிறார்கள். இன்னும் டிவிஸ்ட் இருக்கு. நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் ? பழிக்கு பழி.

விஜய் நமக்கு எல்லாம் வணக்கம் சொல்லிவிட்டு போலீஸ் ஜீப்பில் போகிறார். உடனே சீட்டை விட்டு எழுதிருக்காதீர்கள், இருக்கு. விஜய் அடுத்து போலீஸ் டிரையினிங் கிரவுண்டில் இருக்கிறார். இங்கேயும் டிவிஸ்ட் இருக்கு. இவரை போலீஸ் ஆகும் படி தேவராஜ் வற்புறுத்துகிறார். ஆனால் விஜய் ஒத்துக்கொள்ளாமல் ( ஹேர் ஸ்டைல் போய்விடுமே ) எல்லோரிடத்திலும் உள்ளே ஒரு போலீஸ் இருக்கு என்று ஏதோ டையலாக் சொல்லிவிட்டு போகிறார். அவரை பார்த்து கண் தெரியாத தேவராஜ் சல்யூட் அடிக்கிறார். என்னை பார்த்து நீங்கள் எல்லாம் சல்யூட் அடிக்க கூடாது என்று விஜய் சொல்லிவிட்டு நகர கடைசி டிவிஸ்ட் நானும் கடைசியில் கொடுத்திருக்கிறேன்.

சன் பிக்சர்ஸும் நிறைய செலவு செய்திருக்கிறார்கள். டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.

இதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு. சன் டிவி விளம்பரத்தில் அடிக்கடி போடுவதால் அதையும் இங்கே சொல்லி மேலும் நம் மக்களை இம்சிக்க விரும்பலைங்கண்ணா!!

கேமரா, எடிட்டிங் : இதற்கு ஸ்டில் போட்டோ கிராபராக இருந்திருப்பார் போல, அதனால் எல்லா இடத்திலும் ஸ்டில் பண்ணுவது எரிச்சல்.

இசை: இருக்கு, வெளியே வந்த பிறகு காது இருக்கா என்று எதுக்கும் செக் செய்துக்கொள்ளுகள்.

இட்லிவடை மார்க் - 4.5/10

என் சீட்டுக்கு பின்னாடி இவ்வளவு நேரம் இந்த படத்தை பார்த்த எங்களுக்கு தான் நீங்க சல்யூட் அடிக்க வேண்டும் என்று ஒருவர் ஏறக்குறைய கத்தினார்.

"குடும்பத்துடன்" பார்க்கலாம். எதுக்கு குடும்பத்துக்கு மஞ்சள் கலர் என்று கேட்கார்தீர்கள் :-)



80 Comments:

(-!-) said...

இட்லிவடை மீது யாரும் FIR போடாமல் இருக்க கூட்டுப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்கிறேன்.

:>

Unknown said...

இட்லிவடை, படத்தை பற்றி இவ்வளவு விரிவாக கூறி, படம் பார்க்கும் சுவாரசியத்தை குறைத்து விட்டார் :(

Dinesh Raju said...

தப்பித்தேன்!!! பிழைத்தேன் !!!

Anonymous said...

As expected your FIR / Review is very boring

காமெடினு நினைச்சு கடிச்சு கொதறியிருக்கே இட்லி வடை..

- ganesh

Anonymous said...

auto vara poguthu

Anonymous said...

IV, one day vijai will become CM and you will be condemned for life to watch his films for 12 hours day non-stop for writing like this :).

சைவகொத்துப்பரோட்டா said...

விமர்சனம் படிக்கும்போதே கண்ண
கட்டுதுங்கண்ணா.


(ஆனாலும் பார்ப்போம்ல)

Anonymous said...

4.5/10 மார்க் கொடுத்திருப்பது ரொம்ப மோசம், இவ்வளவு அருமையானா commedy படத்துக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாவே தந்திருக்கலாம்..LOL...

Maruthiah V said...

முடியல இதுக்கே கண்ண கேட்டுது .... இட்லியாருக்கு நன்றிகே...

picsfoo said...

விமர்சனம் சூப்பர் ... தப்பிச்சோம்டா சாமி !

Anonymous said...

great review...

But i know this before the film starts to shoot...

VIJAY padam epadi iruka mudiyum ithuku mela...

Asusual....:)

ரவிஷா said...

எப்படிங்ணா இவ்வளவு பொறுமையா படத்த பாத்தீங்க! படிக்கும்போதே கொலைவெறியா இருக்கே!

IdlyVadai said...

சினிமா ஒன்றுதான்... இதில் ஹாலிவுட் - கோலிவுட் என்ற பேதம் தேவையில்லை - நடிகர் கமல்ஹாஸன்.

இதையும் சேர்த்து படிங்க :-)

ஸ்ரீராம். said...

இத்தனை ட்விஸ்ட்டுக்கு நடுவில எப்படி குழம்பாம நடிச்சார் விஜய்...நல்ல வேளை.... கடைசி கடைசி ட்விஸ்ட்டாக இது வரை வந்தது விஜய் இல்லை அஜித் என்று முடிக்காமல் இருந்தார்களே....

யதிராஜ சம்பத் குமார் said...

கொஞ்ச நாளைக்கு சென்னைலேந்து மதுரை, திருச்சி அப்பறம் மற்ற தென்மாவட்டங்களுக்கு போறவங்க, அங்கேந்து வரவங்க எல்லாம் பஸ் பயணத்த தவிர்க்கறது நல்லது. இல்லாட்டி வேட்டைக்காரன் டிவிடிய போட்டு வீடியோ கோச் பஸ்ல உயிர வாங்கிடுவாங்க. சொந்த ஊருக்கு போற சந்தோஷமே போய்டும்.

மத்தபடி சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல....டிபிகல் விஜய் படம். 45% ரொம்ப அதிகம்.

Santhappanசாந்தப்பன் said...

முதல் நாளிலேயே படத்தின் மொத்த கதையை கூறி, பல தியேட்டர்காரர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டீர்களே!

இது மாதிரி விமர்சனம் செய்யும் போது லட்சோபலட்சம் திரைப்படத் தொழிலாளர்களையும் மனதில் கொண்டிருக்கலாம்.

vijay vs koundamani said...

watch this : http://www.youtube.com/watch?v=jXy2hK7UBn8

Loganathan - Web developer said...

அனுஸ்கா பற்றி எதுவும் இல்லையா

SAN said...

IV Annnathe,
Epadinganna moonu mani neram ukandhu aracha mavai paathega?

மர தமிழன் said...

மாட்டிகிட்டீங்களா...('௦௦')

வேட்டைக்காரன் படக் கதய எழுதுவீங்கன்னு பாத்தா சுறா கதைய எழுதிட்டீங்களே??? shame shame puppy shame..

Sam said...

தப்பித்தேன்!!! பிழைத்தேன் !!!

Repeat...!

Madhavan Srinivasagopalan said...

"Blogger MMN said...

இட்லிவடை, படத்தை பற்றி இவ்வளவு விரிவாக கூறி, படம் பார்க்கும் சுவாரசியத்தை குறைத்து விட்டார் :("

-- IV Ur attempt getting success, I think..

Rajan said...

படத்த எதுக்கும் ஒருதபா பாக்க போறேன் ....

திரும்பி வரலைனா இந்த லெட்டர கமிசனர் ஆபீசுல குடுத்துருங்க


என் சாவுக்கு காரணம் நடிகர் விஜய் த/பெ எஸ் எ சந்திர சேகர்

kvk pragdhees said...

idly nee chatuny aka pora...

Xathish said...

"அனுஸ்கா பற்றி எதுவும் இல்லையா"

I guess

Anushka'ku 50

Vettaikaran'ku -5

கிரி said...

இட்லிவடை இப்படி டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்களே! :-)

Anonymous said...

NRI's kaha punch dialogue podalame?

பிரபாகர் said...

சத்தியமா இப்படி ஒரு விமர்சனத்த படிச்சிட்டு நான் சிரிச்சதில்ல... கலக்கிட்டீங்க பாஸ்....

பிரபாகர்.

Karthi said...

Hi, Your review is sick.. Its a masala movie.. And the movie has all the stuffs to make it entertaining.. If you are not a big fan of masala movies, why are you bothered to watch the movie on first day even though you know how a vijay movie will be?? And, posting mokka review like this.. If you say that songs are not good, then what to say? Better stay away from these kinda movies if you dont like it..

Unknown said...

அரைத்த மாவையே திரும்ப அரைக்கும் வேட்டைக்காரன் அட்டர் பிளாப்பு.

வில்லு,குருவி லிஸ்டுல வேட்டைக்காரன்.


விஜய் மாறவில்லை. மாறவும் போவதில்லை.
படமும் ஓட போவதில்லை.

டப்பா படம்.குப்பை படம்.

Unknown said...

//பிள்ளையாண்டான் said...
முதல் நாளிலேயே படத்தின் மொத்த கதையை கூறி, பல தியேட்டர்காரர்கள் வயிற்றில் புளியை கரைத்து விட்டீர்களே!

இது மாதிரி விமர்சனம் செய்யும் போது லட்சோபலட்சம் திரைப்படத் தொழிலாளர்களையும் மனதில் கொண்டிருக்கலாம்.
//

பிள்ளையாண்டான் அவ்வளவு நல்லவரா நீங்க? இந்த விமர்சனத்தப் பாத்தா தமிழ்நாட்டு மக்களெல்லாம் படம் பாக்க போகாம இருக்கப் போறாங்க?

IdlyVadai said...

//Hi, Your review is sick.. Its a masala movie.. And the movie has all the stuffs to make it entertaining.. If you are not a big fan of masala movies, why are you bothered to watch the movie on first day even though you know how a vijay movie will be?? And, posting mokka review like this.. If you say that songs are not good, then what to say? Better stay away from these kinda movies if you dont like it..//

சினிமா ஒன்றுதான்... இதில் ஹாலிவுட் - கோலிவுட் என்ற பேதம் தேவையில்லை என்று கமல்ஹாஸன் சொன்னதால் போய் பார்த்தேன். நான் படம் நல்லா இல்லை என்று எங்கே சொல்லியிருக்கேன். குடும்பத்துடன் பார்க்கலாம் என்று தானே சொல்லியிருக்கேன்.

Anonymous said...

விமரிசனம் என்றால் நச்சுனு சுருக்கமாக இல்லாம படு போராக விமரிசனம் எழுதியவருக்கு முதலில் ஒரு குட்டு வைக்க வேண்டும். படம் பார்த்த பின்பு தான் விமரிசனம் படிக்க வேண்டும். படத்தின் கதையை விலா வாரியாக சொல்வது ஒன்றும் நல்ல விமரிசகருக்கு அழகு அல்ல. அவரை முதலில் விகடன் மற்றும் குமுதத்தில் வரும் விமரிசனத்தை படிக்க சொல்ல வேண்டும். ( விமரிசனம் எப்படி எழுதுவது என்பது பற்றி கற்றுக் KOLLA )

Anonymous said...

Google map'a miss pannina pattikaatan, USsa eppadi suthhuvaano, athu pola iruku kathai.

why dont they remake his old hit movie again with added songs

Vijay Fan Club (What to say then?) said...

Height of the vettaikkaran jokes...
http://penmanam.blogspot.com/2009/12/vettaikkaran-terror.html

mohamed rifath said...

kanna vijay padam ippadhan romba naalaiku appuram theaterla neutral fansum positive review tharanga. atha parkumbothe neenga masala haternu theriyuthu.yen aalalukku loosuthanama enna ennamo expect pannitu poreenga.most of the fans expected a good entertaining masala
they got it they are happy finish.iam not scolding u.watever film it is it haS TO WORK WITH THE TARGETED AUDIENCE.PAST 3 FILMS DID NOT.BUT VETTAIKARAN HAS DONE IT !

masala padam pikalana yen maass entertainer padathukku poreenga.eppdi criticise panni aduthavangala hurt panlamna?

Anonymous said...

FIR - Failure Information Report ?

உண்மைத்தமிழன் said...

ஏதோ என் நேரம்.. எழுத முடியாம இருக்கேன்றதை மனசுல வைச்சுக்கிட்டு இப்படி என் பாணில முழுக் கதையையும் சொல்லி என்னை அவுட் ஆக்கிரலாம்னு நினைக்கிறீரா இட்லிவடையாரே..!

திஸ் இஸ் டூ மச்சு..!

Anonymous said...

// Hi, Your review is sick.. Its a masala movie.. And the movie has all the stuffs to make it entertaining.. If you are not a big fan of masala movies, why are you bothered to watch the movie on first day even though you know how a vijay movie will be?? And, posting mokka review like this.. If you say that songs are not good, then what to say? Better stay away from these kinda movies if you dont like it..//

CORRECT.

வேதநாராயணன் said...

OK, வில்லு படத்தையே ரெண்டாவது தடவையாக பார்க்கலாம் என்று நான் பிளான் போட்டு இருந்தேன். Songs and மியூசிக்காக. So இந்த படம் பார்ப்பதில் கஷ்டம் இருக்காது என நினைக்கிறேன்.

Ashwin-WIN said...

யோவ் இட்லி வடைகாரரே வேட்டைகாரனப்பத்தி கொஞ்சமாவது நல்லா எழுதினது நீங்கதானய்யா. அதுக்கு பொய் கொதிக்குறானுகளே.!
இதையும் கொஞ்சம் பாருங்கோ.
http://ashwin-win.blogspot.com/2009/12/blog-post_17.html

ஸ்ரீநி said...

நல்ல வேலை இந்த படம் வர்றதுக்கு முன்னாடியே என்ன நாடுகடதீட்டங்க

Anonymous said...

படத்த எதுக்கும் ஒருதபா பாக்க போறேன் ....

திரும்பி வரலைனா இந்த லெட்டர கமிசனர் ஆபீசுல குடுத்துருங்க


என் சாவுக்கு காரணம் நடிகர் விஜய் த/பெ எஸ் எ சந்திர சேகர்

December 18, 2009 10:09 PM


-------------

ROFL

Anony8 said...

I thot of watching the Lollu sabha version, but the actual movie itself seems to be like a Lollu sabha spoof.

Anyway I will wait for Lollu sabha, as I've so many responsibilities in my life.

MADURAI NETBIRD said...

//அவருக்கு தான் கண்தெரியாதே//
படத்தோட ரிசல்ட் முன்னாடியே அவருக்கு...................


டிவிஸ்ட்காரன்.....................................டிவிஸ்ட்காரன் ..............................................டிவிஸ்ட்காரன் ...........................................

படம் பார்த்த அனைவருக்கும் எனது அனுதாபங்கள்

கடைசியா ஒரு கேள்வி. படத்தில கதை இருக்கா ?

Gopal said...

Vijay padathhil idhukku mela yenna irukkum.?
Thirudanaip parthu thirundhavittal thiruttai ozhikkamudiyathu.Vijay aa parthu thirunthavitaal Vijay ai thiruthave mudiyathu.

Guru said...

All those people who are condemning for revealing the story of Vettaikaran, can you please tell me what is so different about the story from Vijay's previous movies, that IV revealed to call him a spoilsport ?

sridhar said...

என்னதான் நீங்க சொதப்பலா விமர்சனம் எழுதினாலும், சன் டிவியில் டாப் டென் நிகழ்ச்சியில் முதல் இடத்திற்கு ஒரு வருடத்திற்காவது வரும். இது தமிழனின் தலைவிதி. இதை யாராலும் மாற்றமுடியாது.

Guru said...

IV, why do you have to go through so much torture watching and wasting 3 hours to write a review. Next time, just copy paste the same review for all Vijay's future movies ;)

Senthil said...

Idlyvadai doesnt require this film vimarsanam to get more hits. One need to grow up to accept the comments and take it in a positive manner. Meanwhile I watched almost all vijay films in buses giving tough time to sleep. One other film in this list :-(

வலைஞன் said...

இந்த விமர்சனத்திற்கு வந்துள்ள சில எதிர்ப்புக்கள் வியப்பளிக்கின்றன

ஊரை கொள்ளை அடித்து சேர்த்த பணத்தில் அபத்தமாக படம் எடுக்கலாம்.அதை அவர்கள் சானலில் உயர்த்தி விளம்பரபடுத்தி மக்களை மயக்கி பணம் சம்பாதிக்கலாம்.ஆனால் அதை நியாமாக விமர்சித்தால் அது தவறு!!

வேலு நாயக்கர் பாணியில் சொல்வது என்றால் "அவங்களை முதலில் நிறுத்த சொல்லு,நாங்களும் நிறுத்தறோம் "

25 இளைஞனுக்கு கோடி கணக்கில் செலவழித்து படம் எடுக்க எங்கிருந்து பணம் வந்தது எனக்கேளுங்கள்.பிறகு இங்கு வந்து தப்பு கண்டு பிடிக்கலாம்.

முடிவாக
யதிராஜன் மற்றும் ராதாமணாளன் கமெண்ட்ஸ்...

தூளு மச்சி

கானகம் said...

இப்ப இட்லிவடையின் வேட்டைக்காரன் விமர்சனம்தான் ஃபார்வர்டு மெயிலில் ஹாட் சப்ஜெக்ட்.. (எனக்கு ரெண்டு பேரு அனுப்பிட்டாங்க)

நல்ல விமரிசனம். ஆனால் படத்தை கொத்துப்புரோட்டா போடனும்னே போய் படம்பாத்துட்டு வந்த மாதிரி இருக்கு..

PRASATH said...

tp[a; Nky vd;d NfhgNkh njupatpy;iy
tpkh;rdk; vd;why; rhp gpio nuz;ilAk;
nry;yZk; epq;fs; ahnud njupAJ cq;fs;
vz;zk; tpoq;FJ.........

Unknown said...

//OK, வில்லு படத்தையே ரெண்டாவது தடவையாக பார்க்கலாம் என்று நான் பிளான் போட்டு இருந்தேன். Songs and மியூசிக்காக. So இந்த படம் பார்ப்பதில் கஷ்டம் இருக்காது என நினைக்கிறேன்//

ungalukku thairiam athigam.

Anonymous said...

தலீவா... படத்தை பத்ததிலையே பாதி உயிர் போயிருக்கும்...இதுல விமர்சனம் வேறயா...எனக்கு இந்த விமர்சனம் படிச்சே பாதி போய்டுச்சு...:-(...
simple review: கொடிய மிருகம் வந்திருச்சு...எல்லாரும் ஓடுங்க...

Anonymous said...

// கடைசியா ஒரு கேள்வி. படத்தில கதை இருக்கா ?

@மதுரைநண்பன். அனாலும் உங்களுக்கு இவ்ளோ குசும்பு கூடாது... :-)

SAN said...

HI IV,
request all to visit chennaionline.com for the excellent review on our aracha mavu masala king!

Anonymous said...

y don't vijay re-release his own hit movies again instead of doing a fresh remake with the same story, same formula and same kind of every aspect of his movies.

Muniappan Pakkangal said...

Nalla thahval idlyvadai.

sundaikai said...

இ.வ அவர்களே - எதுக்கு இம்புட்டு அவஸ்தை - எப்போவும் போல அதே குப்பை. ஓசி கலர் டிவியில் பார்த்தால் போதும்னு எழுதி முடித்திருக்கலாமே.

Anonymous said...

புலி இருமுது..புலி இருமுது...
லொக்கு லொக்குன்னு புலி இருமுது...
வேட்டைக்காரன் வர்றதை பார்த்து..
.........................போன்ற தத்துவம் மிக்க பாடல்கள்...

நான் அடிச்சா தாங்க மாட்டே..தியேட்டர் பக்கம் போக மாட்டே....
விஜய் படம் இனிமேல் நான் பாக்க மாட்டேன்..
....................போன்ற கருத்தாழம் கொண்ட பாடல்கள்...

இன்னமும் எவ்வளவு நாளைக்கப்பா இதெல்லாம்?

Anonymous said...

This is the best review. keep it up MR. IDLYVADAI

Anonymous said...

/// இந்த விமர்சனத்திற்கு வந்துள்ள சில எதிர்ப்புக்கள் வியப்பளிக்கின்றன

ஊரை கொள்ளை அடித்து சேர்த்த பணத்தில் அபத்தமாக படம் எடுக்கலாம்.அதை அவர்கள் சானலில் உயர்த்தி விளம்பரபடுத்தி மக்களை மயக்கி பணம் சம்பாதிக்கலாம்.ஆனால் அதை நியாமாக விமர்சித்தால் அது தவறு!!

வேலு நாயக்கர் பாணியில் சொல்வது என்றால் "அவங்களை முதலில் நிறுத்த சொல்லு,நாங்களும் நிறுத்தறோம் "

25 இளைஞனுக்கு கோடி கணக்கில் செலவழித்து படம் எடுக்க எங்கிருந்து பணம் வந்தது எனக்கேளுங்கள்.பிறகு இங்கு வந்து தப்பு கண்டு பிடிக்கலாம்.

முடிவாக
யதிராஜன் மற்றும் ராதாமணாளன் கமெண்ட்ஸ்...

தூளு மச்சி ///

அப்பாடா! இப்பதான் தெரிந்தது இட்லிவடையின் சினிமா விமரிசனத்தின் உள் நோக்கமும் இட்லிவடை அபிமானிகளின் எண்ணமும். விஜயின் படம் பார்க்குமுன் இவ்வளவு உள் நோக்கம் இருந்தால் எப்படி படம் பிடிக்கும்?. அது தான் அவசர அவசரமாக படத்தை முதல் நாளே அதுவும் முதல் ஷோவே பார்த்த காரணம். வழக்கமான மசாலா அடங்கிய இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும். இட்லிவடையும் அதன் ரசிகர்களும் வேறு வேலை பார்க்க போகலாம். நாங்கள் படம் இனிமேல் தன பார்க்க போறோம்.- விஜய் ரசிகர்கள்.

சீனு said...

//அதுக்கு அப்பறம் விஜய் என்ன ஆனார் என்பது தான் மீதி கதை. புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சொல்ல மறந்துவிட்டேன் இங்கே ஒரு பாட்டு இருக்கு.//

சொல்லவே வேண்டாம். எங்களுக்கு தெரியும்.

//டாட்டா சுமோ போகும் போது ரோட்டில் பறக்கும் கிழிந்த பேப்பர் கூட தினகரன்.//

எரிந்த தினகரனா? எரியாத தினகரனா?

பேசாம படத்துக்கு 'ட்விஸ்ட்' அப்படின்னு பேரு வெச்சிருக்கலாம்...

Trailer: http://www.youtube.com/watch?v=jQCFjJpj8Q8

sreeja said...

அட போங்கப்பா...நீங்கதான் இந்த படத்த பத்தி கிண்டல் அடிக்கிறீங்க. சன் நியூஸ்-ல பாருங்க. டைட்டானிக், அவதார், ஜுராஸிக் பார்க் எல்லாத்தையும் விட ரொம்ப ஜோரா வேட்டைக்காரன் கலக்குது-னு சொல்ராங்க நீங்க என்னமோ படம் அப்படி இப்படின்னுட்டு.

Anonymous said...

so it is better to leave the brain behind to watch this movie. That will be a waste of time!!

srini said...

அவதார்க்கும் வேட்டைகாரனுக்கும் போட்டியாமே

இரு விஜய் ரசிகர்கள் பேசிக்கொண்ட டையலாக்...

ஒருத்தன்: ‘2012’ படம் வந்திருக்கே, பார்த்துட்டியா?

மற்றவன்: ஓ! ‘வேட்டைக்காரன்’ ரிலீசானா உலகம் என்ன ஆகும்கிறதை அப்பட்டமா காட்டியிருக்காங்க!

விஜய் படம் ஓடிட்டிருந்த தியேட்டர்ல எக்கச்சக்கக் கூட்டம். என்னடான்னு ஆச்சர்யப்பட்டுக் கேட்டான் ஒருத்தன். அதுக்கு இன்னொருத்தன் சொன்னான், “அதொண்ணுமில்லடா! இந்தப் படத்துக்கு எவனோ ரிசர்வ் பண்ண வந்திருக்கானாம். அவனைப் பார்க்கத்தான் இத்தனைக் கூட்டம்!”

பராக் ஒபாமா பின்லேடனைப் பிடிச்சே ஆகணும்னு தன் ராணுவத்தை முடுக்கி விட்டாரு. ஒசாமா பயந்து, எங்கே ஒளிஞ்சுக்கலாம்னு தன் உதவியாளர் கிட்டே ஆலோசனை கேட்டாரு. “வேட்டைக்காரன் ரிலீசாகப் போகுது. அந்தத் தியேட்டர்ல போய் ஒளிஞ்சுக்குங்க. ஒரு பய வரமாட்டான் அங்கே”ன்னாராம் உதவியாளர். ஒசாமா உடனே, “அடப்போய்யா! தப்பிக்கிறதுக்கு வழி கேட்டா, சாகுறதுக்கு வழி சொல்றியே!”ன்னு கடுப்பாயிட்டாராம்.

jokes from http://shanmugaprathap.blogspot.com/2009/12/vettaikaran-very-funny.html

Vasanth said...

FUNNY Idly vadai, Leaving all your work apart you have prepared this report on Vijay's film.

This clearly shows vijay and his film is growing. Good.

Directly or indirectly you are the looser, not vijay or people's aorund him will be the looser.

Unknown said...

Please write review for "Avatar" in your style. I am pretty impressed with this movie...

Anonymous said...

நான் விஜய் ரசிகனும் இல்லை, விஜய்க்கு எதிரியும் இல்லை. நல்ல தமிழ் படங்களை வரவேர்ப்பவன். நல்ல தமிழ் படங்கள் என்றால் உடனே மணிரத்னம் படமோ இல்ல பாலச்சந்தர் படமோ என்று நினைக்க கூடாது. மசாலா படங்களையும் ரசிப்பேன். ஆனா விஜய் இந்த மாதிரி தொடர்ந்து அரச்ச மாவையே அரச்சா யாருக்கு தான் புடிக்கும். உங்க விமர்சனம் ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சில பேரு உங்க விமர்சனத்துக்கு எதிரா எழுதி இருக்காங்க. அவுங்கள எல்லாம் நெனச்சா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு. இப்படி விமர்சனம் எழுதி, அத நூத்துல தொண்ணூறு பேரு ஆமோதிக்கும் போதே, சில பேர் இந்த படம் நல்லா தான் இருக்குன்னு சொல்லும் போது... கடவுளே இவுங்கள எல்லாம் நீ மட்டும் தான் காப்பாத்த முடியும்.

அருமையான விமர்சனம். இப்படி விஜய் தொடர்ந்து நடித்து வந்தால், இதே விட கேவலமா எழுதுங்க. உண்மையிலேயே மனச தொட்டு சொல்றேன், உங்க விமர்சனத்த படிச்சு வயிறு வலிக்க சிரிச்சேன். தயவு செஞ்சு யாரு என்ன சொன்னாலும், விஜயின் அடுத்த படமான சுராவுக்கும் இதே போல ஒரு விமர்சனம் எழ்துங்க.

எனக்கு விஜய் படம்னா கொஞ்சம் புடிக்கும், ஒரு காலத்துல. அந்த பழைய விஜய் வேணும். இந்த மாதிரி விமர்சனங்களுக்கு அப்புறமாவது அவரு திருந்தி, வித்தியாசமான கதைகளை எடுத்து நடிக்கனும்னு ஆச படறேன். என் ஆசை நிறைவேறுமா ??

Oor Kuruvi said...

1) உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன் - There is no such dialogue in the Movie (it was in different context)

2) விஜயை உடனே போலீஸ் அள்ளிக்கிட்டு போய் என்ன செய்யும்? ஒரு தூசி அதிகமாக இருக்கும் ரூமில் மரசேரில் உட்கார வைத்து கையை கட்டி போட்டு அடிக்கிறது. இப்ப என்ன செய்வார் ஹீரோ 100 ஹார்ஸ் பவர் தீடீர் என்று வந்து சேரை உடைத்து வெளியே வருவார். தூசி பறக்கும் எதுக்கு தூசி உள்ள ரூம் என்று புரிந்திருக்குமே? சரி படத்தில் இது வருகிறது. ஆனால் அங்கே தான் டைரக்டர் வைத்தார் ஒரு டிவிஸ்ட். உடைத்து வெளியே வரும் விஜயை திரும்பவும் போலீஸ் பிடித்துவிடுகிறார்கள். - This sequence is also wrong.

3) நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். - He never comes with coolers in this scene.

I think ithu neer sonthama eluthina vimarsanam illai (mandabathala yaro eluthi koduthathai appadiye bloggittinga) Go and write another write a applogy letter to your Muni:)

Unknown said...

i did not want to comment earlier as i thought it would not be fair to do so without watching the movie.
after watching the movie,i felt that the review is somewhat biased with the intention of pleasing "anti-vijay" fans (disclaimer : i am not a fan of vijay or for that matter of any actor or actress(!))
as oor kuruvi pointed out -
\\உடனே விஜய் அம்மா உனக்கு எப்படா திருமணம் என்று கேட்டவுடன் விஜய் ’எனக்கு என்று ஒருவர் இந்த உலகத்தில் பிறக்காமலா போய்விடுவார்’ என்று சொன்னவுடன்\\
this is out of context

\\இவரும் அதே மாதிரி. அவர் படிப்புக்கு ஆட்டோ ஓட்டு ஃபீஸ் கட்டினாராம். இவரும் அதே மாதிரி ஒரு ஆட்டோ வாடகைக்கு எடுத்து... அவர் படித்த அதே காலெஜில் - இப்பவே உங்களுக்கு கண்ணை கட்டியிருக்குமே!\\
i didnt understand what is there to kanna katta here - sounds logical as there is an explanation given on the earlier scene when vijay's father (delhi ganesh) offers him money to manage his expenses

\\ இரண்டு பக்கமும் திரும்பி பார்த்துவிட்டு காயங்களுடன் ஹீரோ அருவியிலிருந்து குதிக்கிறார். அதை அருமையாக படம் பிடித்து இருக்கிறார்கள். கேமரா சூப்பர். போதுமா? இப்ப கீழே போகலாம்.\\

if the same scene is done is some james bond film (i remember pierce brosnan in one of the bond films does a similar stunt) or for that matter there is a similar scene in apocalypto - why not in this movie?
again, i didn't get your sarcasm here.
\\ஃபிளாஷ்பேக்கில் தேவராஜனுடைய மனைவி மக்கள் எல்லாம் கிளோஸ். இவர் கண்களும் போய்விடுகிறது என்பது மற்றொரு டிவிஸ்ட். அடுத்த டிவிஸ்ட் தேவராஜன் தான் விஜயை போலீஸிலிருந்து காப்பாத்தினார் என்ற டிவிஸ்ட் கூட இருக்கு. எப்படி என்று நீங்களே தியேட்டர் போய் பாருங்க.\\
this too was logical - if i hadnt read ur review, i would have enjoyed this "plot" - again nothing "bad" about this, if you relate this to the earlier scene where devaraj is asked to help vijay but he refuses to.
\\விஜய் இந்த வில்லனுக்கு படிப்படியாக தன் மீது பயத்தை உண்டு பண்ணுகிறார். வில்லனுக்கும் இவருக்கும் போர் ஆரம்பிக்கிறது. விஜயின் நண்பரை வில்லன் கொல்ல உடனே வில்லனின் மகனை ( ரவுடி செல்லா ) கொல்ல இப்படி காமெடியாக போகிறது கதை.\\
the scenes were decently picturised - nothing comical about them. in fact, it was a relief how the junior villain was killed - i expected a "long" one-on-one battle with this guy but it was not to be.
\\நம்ம பழைய தேவராஜ் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு அவருக்கு தான் கண்தெரியாதே துப்பாகியுடன் அந்து வில்லனை சுடுகிறார். அது தானே நியாயம் ? பழிக்கு பழி.\\
again the oor kuruvi has captured your "flaw" here.
\\இதை தவிர படத்தில் பஞ்சமே இல்லாமல் பஞ்ச டயலாக் இருக்கு\\
in fact,compared to the recent movies, vijay has "underplayed" with his punch dialogs in this film!

I am not saying that this film is "perfectly" made - yes it has its own pethals & soddapals - but ur review seems to have been written without verifying the facts.

all in all - it was a "decent" masala movie.

கமால் -அன்பின் உச்சம் said...

ENGALA KAAPPAATHUNATHUKKU ROMMMMMMMMMMMBA NANRIGANNA............. BY
MAYIR ILAYIL UYIR THAPPIYOR SANGAM.

கமால் -அன்பின் உச்சம் said...

ENGALA KAAPPAATHUNATHUKKU ROMMMMMMMMMMMBA NANRIGANNA............. BY
MAYIR ILAYIL UYIR THAPPIYOR SANGAM.

Anonymous said...

I think Iv did this review open heartedly, but some of them try to over hyped about that film and comented abt Iv....

Iv always neutral in my point of view

over look this too..

http://images.orkut.com/orkut/photos/OgAAAH01PkOJH1DfG98el2NaISlKnqWelzDBTDUR7zCIUcxnegxdJ0R6KzFvNEPSSg4v-ctCJtThc2gr0PjVGqK4K1sAm1T1UOmbyhFElHT41-vxzh82HGzIsMs1.jpg

Ranga said...

நான் பார்ப்பேன்........ வீராசாமிய விடவா இதுல ட்விஸ்ட் இறுக்க போகுது ???????

Ranga said...

நான் பார்ப்பேன்........ வீராசாமிய விடவா இதுல ட்விஸ்ட் இறுக்க போகுது ???????

Ranga said...

நான் பார்ப்பேன்........ வீராசாமிய விடவா இதுல ட்விஸ்ட் இறுக்க போகுது ???????

butterfly Surya said...

டிசம்பர் 18ம் தேதி வேட்டைக்காரன் ரிலீஸானது. நேற்றுடன் அப்படம் 30 நாட்களைத் தொட்டுள்ளது. ஆனால் அதற்குள் 40 நாட்கள் போஸ்டரை ஒட்டி விட்டனர்...

இதை பார்க்கவும்...

http://gallery.oneindia.in/main.php?g2_itemId=1509148

sweet said...

vijay-kku simbu better