பலர் ஏன் தினகரன் பத்திரிகை அலுவலகம் எரிப்பு பற்றி எழுதவில்லை என்று கேட்டுள்ளார்கள்.
என்ன தைரியத்தில் என்ன நம்பிக்கையில் அப்படி கேட்டார்கள் என்று தெரியவில்லை. நான் போட்டு என்ன ஆகப்போகிறது ?
இன்று சனிக்கிழமை என்பது போல சில நாளிதழ் அதை நீயூஸாக போட்டார்கள். போன முறை தினமலர் கண்ணீர் அஞ்சலி என்று உயிர் இழந்தவர்களின் படங்களை போட்டார்கள். இந்த வருடம் அது கூட இல்லை.
தினகரன் பத்திரிகையே அதை கண்டுக்கொள்ளவில்லை. "இந்த வழக்கில் நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன்" என கலாநிதி மாறன் சபதம் செய்தார்.. எப்போது ? உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகையில். இப்போது அவர் அதை மறந்துவிட்டார். பாவம் அவருக்கு வேட்டைக்காரன் 18 ரீலீஸ் கவலை. எங்களுக்கு இடையில் காற்று கூட புக முடியாது என்று இப்போது மார்தட்டுகின்றனர். சீக்கிரமே கலாநிதி மாறன் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடிப்பார்கள். அப்பறம் எதற்கு இதை கண்டுகொள்ள வேண்டும் ?
குடும்ப சண்டையில் மூன்று பேர் கொளுத்தப்படார்கள் அவ்வளவு தான். குற்றம் சாட்டப்பட்ட வர்கள் எல்லோரும் விடுதலை. முடிந்தது கதை. அதுமட்டுமா ? ராயல் கேபிள், அரசு கேபிள் என்று எல்ல்லாம் முடிவுக்கு வந்தது.
ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்ட பிறகும், இருவருமே ஒரே கட்சியின் பிரதிநிதிகளாய் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் இந்திய ஜவுளித் துறையை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற தபால்தலை வெளியீட்டு விழாவில், தபால்தலையை ஜனாதிபதி வெளியிட, வாயெல்லாம் பல்லாக பெற்றுக் கொண்டவர்கள் இவ்விருவரும்தான். முன்னர் ஒருவர் மீது ஒருவர் சேற்றையள்ளி இறைத்தனர். கங்கையே சுனாமியாக வந்தால் தான் இந்தியாவின் பாவத்தை கழுவ முடியும்.
இந்த கேஸ் என்று சி.பி.ஐக்கு போனதோ அன்றே அதை சவக்குழிக்குள் போட்டு அடக்கம் செய்துவிட்டார்கள். சினிமாவில் மம்மூட்டி நடிக்கும் சி.பி.ஐ வேற நிஜத்தில் இருக்கும் சி.பி.ஐ வேற. இவர்கள் ரிடையர் ஆன பின் ஏதாவது புத்தகம் எழுதும் போது சில உண்மைகள் வெளியே வரும் என்று நம்புவோம். அவ்வளவு தான்.
கோர்ட் என்ன செய்ய முடியும் ? எல்லோரையும் சட்டப்படி விடுதலை செய்துவிட்டது. அவர்களுக்கு தேவை சாட்சி. முதல் சாட்சியான போலீஸ் துணை ஆய்வாளர் உள்பட அனைத்து சாட்சிகளும் பல்டி அல்லது சாட்சி அளிக்காததால் எல்லா குற்றவாளிகளும் விடுதலை. அடுத்த ரூமில் கருவாட்டு குழம்பு சாப்பிட்டாலே நமக்கு தெரிகிறது ஆனால் நீதிபதிகள் "Did not smell anything fishy"! நல்ல கூத்து. சட்டம் தன் கடமையை செய்யும் என்பது இது தான்!.
மதுரையில் தினகரன் அலுவலகம் கொளுத்தபட்டதும் அங்கு மூவர் கொல்லப்பட்டதும் அதை சன் டிவியில் அடிக்கடி போட்டு அழகிரி ரவுடி என்று சொன்னது எல்லாம் பொய். டிவியில் பார்த்தது எல்லாம் கிராப்பிக்ஸ் என்று போலீஸ் சொன்னாலும் அதை கோர்ட் நம்ப வேண்டும். அது தான் நம்ம சிஸ்டம்.
தினகரன் சம்பவத்தைப் பற்றி ஒருவருமே சாட்சியம் அளிக்கவில்லை என்பதை பார்க்கும் போது அரசுத் தரப்பு எப்படி நடந்துக்கொண்டது என்பதை நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை. தமிழக அரசு சின்னத்தில் கோயில் இருக்கிறது, நிச்சயம் ஆண்டவனுக்கு இவர்கள் பதில் சொல்ல வேண்டும். நம்பிக்கை தானே வாழ்கை!
கடைசியில் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே வந்துவிட்டார்கள். 'பத்திரிக்கை சுதந்திரம் பத்திரிக்கை சுதந்திரம்' என்று ஒருவர் அடிக்கடி சொல்லுவார் இப்ப தான் அது என்ன என்று புரிந்தது.
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 12, 2009
இரண்டு ரூபாய்க்கு என்ன எதிர்பார்க்க முடியும் ?
Posted by IdlyVadai at 12/12/2009 02:22:00 PM
Labels: செய்திவிமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
26 Comments:
Is it not possible for any public to take the issue and file a suit in the court citing the video evidence appeared in the TV ?
nengal solvathu pola andavan dhan ivarkalai thandikka vendum
நீங்கள் சொல்வது மிகவும் சரி
உங்களுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்யுங்கோ.. நான் எப்ப வேட்டைக்காரன் ரிலிஸ்ன்னு காத்திட்டுருக்கேன்...
Iv,
I feel sorry for the three souls who died for no fault of their's.
When i saw the news report in TOI and New Indian Express I was really ashamed to call myself an Indian.
Who is going to bell this arrogant cat is a million dollar question?
Put blog about Tiger Woods Issue....
மிகவும் அருமையான பதிவு இட்லி வடை.மனமார்ந்த நன்றி.
பெரிய பெரிய ஊடகங்கள் எல்லாம் நமக்கு ஏன் வம்பு என்று இந்த செய்தியை இருட்டடிப்பு செய்யும்போது,எளியவரான தாங்கள் துணிவோடும்,நேர்மையோடும் இப்பதிவினை போட்டிருப்பது ஆறுதலை அளிக்கிறது.நீங்கள் பல்லாண்டு வாழ்க.
மறைந்த அந்த இரண்டு அப்பாவிகளின் ஆத்மாக்களும் உங்களுக்கு நன்றி சொல்லும்.
அதே சமயம் ஒரு எச்சரிக்கை.நம்மை பீடித்துள்ள இரண்டாவது சாத்தானும் லேசுப்பட்டது அல்ல.தருமபுரி பஸ் எரிப்பை மறந்து விட வேண்டாம்.
தி மு க மற்றும் அ தி மு க நாத்திகம் வளர தனியே ஒன்றும் செய்ய வேண்டாம்.அவை இரண்டும் தமிழ் நாட்டில் இருப்பதே பலரை கடவுள் நம்பிக்கையை இழக்க வைத்துள்ளது!
இவை இரண்டும் என்று அழிகிறதோ அன்றே தமிழ் நாட்டின் சுப தினம்
பாடுங்கோ...
நம்பர்.... ஒன்...
நம்பர் ஒன்... ____________....!!!????
பாடுங்கோ...
நம்பர்.... ஒன்...
நம்பர் ஒன்... ____________....!!!????
When more than 85 witnesses turn hostile, the court / law has to do some introspection and punish them for their change of stand if they cannot explain it. Perhaps this requires a constitutional amendment which is unlikely with the type of government we have. What happened to so many patriotic forums and why are they not taking up the issue for further scrutiny?
Strangely, the court has not concluded that the three victims committed suicide. God save the country. - R. Jagannathan
thats tamil pathingala
kadaisiya ayyavum thamizh nattai pirikanum nu sollitar
அங்கிலேயர் ஆட்சி better என்று தோன்றும் அளவிற்கு கொண்டு வந்து விடுவார்கள் என நினைக்கிறன். ஆனால் மனதை தொட்டு சொல்லுங்கள், இவர்களுக்கு எல்லாம் தண்டனை கிடைக்கும் என்று நாம் நினைத்தோமா ?
அம்மாவுக்கு வோட்டு போடுதல் ஒன்று தான் ஒரே வழி.
Well (infact condition of the country/world is not well), these are expected in 'Kali' Yug. & this is just the begining..
What else I can say abt our 'Iyalaaththanam'...
ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை வீசிக் கொண்ட பிறகும், இருவருமே ஒரே கட்சியின் பிரதிநிதிகளாய் மத்திய அமைச்சர்களாக இருக்கிறார்கள். நேற்று முன்தினம் இந்திய ஜவுளித் துறையை சிறப்பிக்கும் வண்ணம் நடைபெற்ற தபால்தலை வெளியீட்டு விழாவில், தபால்தலையை ஜனாதிபதி வெளியிட, வாயெல்லாம் பல்லாக பெற்றுக் கொண்டவர்கள் இவ்விருவரும்தான். முன்னர் ஒருவர் மீது ஒருவர் சேற்றையள்ளி இறைத்தனர். கங்கையே சுனாமியாக வந்தால் தான் இந்தியாவின் பாவத்தை கழுவ முடியும்.
சத்தியமான உணமை... தமிழ்நாட்டு மக்கள் பாவம்
You are trying to invoke MK for CHANGING THE TAMILNADU EMBLEM. Expect the TEMPLE replaced with PERIYAR in few days!!
கொடிபிடித்துப் போராடிய பத்திரிகையாளர் சங்கங்களும், அகில இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கமும் ஏன் மௌனம் சாதிக்கின்றன?
குஜராத் வன்முறை என்று தினமும் வாய் ஒயாமல் செய்தி வெளியிடும் “சீப் எடிடர்” ஏன் வாயைத் திறக்கவில்லை?
அ. நாமதேயம்
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா......இலவச டிவி கிடைச்சுதா, ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டாங்களா.....இடைத்தேர்தல்ல கவர் கொடுத்தாங்களா......இது போதும்பா மரத் தமிழனுக்கு (பதிவர் மர தமிழன் அல்ல)
சோற்றாலடித்த பிண்டம்தானே தமிழன். இன்னும் என்னவெல்லாம் நடக்க போதோ?
We must blame our system of justice
and jurisprudence. Our laws are
still based on the ones enacted by
the English masters two centuries
ago. Many of the other nations who
became free from the same Empire after us, have all changed their
laws to suit their needs and conditions etc. We still cling to
those outmoded clauses on evidence, witnesses, etc. etc. (When there is the very real one
of the video shots of the arson
and murder available, why say no
conclusive evidence, etc. etc.?) Both of these can be made absent
by coercion or allurement or any
other means to ensure non-availability. That is the sad
situation in this land of ours.
Before the Anglo Saxon system of
justice was introduced in our country, we used to have fast and
fair dispensation of justice.
Our earlier laws were not all that
primitive or devoid of sense of
justice. Our Constitution makers
and, later, MPs and MLAs failed to
bring in laws suitable to meet
our nation's genius, ethos and
needs. You now see the results
in the very failure of the justice delivery system, specially in Tamil Nadu as evidenced by the Dinakaran daily burning case.
Because rowdies rule and thinkers
cringe. So we deserve what we get.
All said and done, I admire Manjal's talent in turning all anti-national populist freebie schemes into electoral achievements. Right from Reservation to free TV.
Especially the free TV scheme... Taxpayers' money, Kickbacks from TV manufacturer, Satisfying DMK cadres, and above all bringing home his propaganda/campaign thru Govt. money.
IV,
As you rightly said a family fued has cost 3 lives now they have peace between them and no body worries about what has happened.. we ourselves are to blame for this pathetic condition calling GOD in between is uncalled for.. when the common man does not have guts to throw them out of power when there was a chance by democratic means what tosay ... our people are gone greed .. money / free things such as TV land viz ration rice (how many people buy them and how much is sold outside god alone knows) have made them to surrender meekly those who have lost their kids will be feeling the pinch.. who knows what is in store for us for the power struggle which these people are defenitely going to have after muka. Today I saw a article in dinamani in which Dr.Ramadoss is talking about splitting TN in two.. do we have the guts to take this man to task...
IN TN we have no choice as CHO rightly said we have to choose beween the theifs as wo who is better.
Kamesh
//ராயல் கேபிள், அரசு கேபிள் என்று எல்ல்லாம் முடிவுக்கு வந்தது.
//
அப்ப இதுக்காக செலவு செய்த அப்பாவி மக்களின் வரிப்பணம் ???????
Nalla Pathivu
இது என்ன குருக்கள் கசமுச வீடியோவை விட சுவாரஸியமான நியூஸா ?
ithai thavirthu irrukalam , kadapuaa irruku
இந்த வழக்கில் மொத்தம் உள்ள 88 சாட்சிகளில் 87 பேர் பிறழ் சாட்சிகளாக மாறி உள்ளனர். சம்பவம் நடந்த மறு நாளே கருணாநிதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட வேகம், என்ன நடக்கப் போகிறது என்பதை அன்றே உணர்த்தியது. பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள்.
"கலைஞர் குடும்பத்தில் பிளவு ஏற்பட்டதால், மனம் வெதும்பி அந்த மூவரும் தற்கொலை செய்துகொண்டார்கள்" என்று முடிவானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்கள் செய்த பாவத்திற்கு அனுபவிக்காமல் போவார்களா என்ன? எத்துனை குடும்பத்தின் சாபங்களை வாங்கியிருப்பார்கள். காத்திருப்போம்.
Sreedharan from Sharjah said,
When i came to know that AIADMK volunteers celebrated the death of Murasoli Maran with crackers, i was deeply hurt and disappointed.
But now i am witnessing Dinakaran is not even publishing obituary for the three innocents who died while on duty in their own newspaper in the last two years.
These arrogants(Murasoli Maran, Dayanidhi maran and kalanidhi Maran)do not deserve humanity at all.
When any of the remaining goondas die,we should celebrate,not only with crackers but also by distributing sweets.
Post a Comment