இட்லி வடையாருக்கு,
இந்த மடலை வேண்டுகோளாக கருதி தங்கள் பதிவில் வெளியிட இயலுமா ?
சென்னையில் வருடம் தோறும் நிகழும் புத்தகத் திருவிழாவிலே உடல் ஊனமுற்றோருக்கு செய்து தரப்படும் வசதிகளை இன்னும் மேம்படுத்தலாம் என்பது என் எண்ணம்
அரங்கத்தின் மிக அருகிலே ஒரு ப்ரத்யேக பார்க்கிங் ஏரியா அமைத்து அவர்களின் வாகனங்களை அது வரை அனுமதிக்கலாம்.. இதனால் வாயிலில் இருந்து அரங்கம் வரை உள்ள நீண்ட வழியில் அவர்கள் நடந்து செல்லும் சிரமத்தை குறைக்கலாம்.
அரங்கத்தினுள் சக்கர நாற்காலி வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் எண்ணிக்கையில் போதுமான அளவில் இல்லை.. தற்போது இரயில் நிலையங்களில் உடல் ஊனமுற்றோருக்கு பயனளிக்கும் வகையில் இயங்கும் பாட்டரி வாகனங்கள் புத்தகக் காட்சி அரங்கத்தினுள்ளும் இயக்க ஆவண செய்யலாம்.
இதற்கு ஏர்டெல் போன்ற புரவலர்களை அணுகினால் அவர்களும் தங்கள் விளம்பரத்தினை அரங்கத்தினுள் செய்துகொள்ள ஏதுவாகவும் அப்படியே உடல் ஊனமுற்றோருக்கு உதவிடவும் ஏதுவாக அமையலாம் அல்லவா
இதனை இட்லி வடையில் ஒரு பதிவாக வெளியிட்டால் பதிப்பகத்தார் சங்கத்தின் கவனத்துக்கு செல்ல அதிக வாய்ப்பாகும் என்பதால் இதனை ஒரு வேண்டுகோளாக ஏற்கவும் ப்ளீஸ்
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 26, 2009
பபாசிக்கு ஒரு வேண்டுகோள்
Posted by IdlyVadai at 12/26/2009 07:21:00 PM
Labels: அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
3 Comments:
மேலும் சில வேண்டுகோள்:
1.வாங்கிய புத்தகங்களை எளிதாக எடுத்து செல்ல தள்ளு வண்டி (trolley) அவசியம்
2 ஒரே ஒரு நாள் நுழைவு கட்டணம் ௦500 ரூபாய் வைத்து ஒரு அனுமதி சீட்டிற்கு 4 பேர் வரை அனுமதிக்கலாம்
உள்ளே ரூ.500௦௦ மதிப்புள்ள புத்தகங்கள் இலவசம் .திருவிழா கூட்டம் குறையும்
3.ஆயிரம் ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்குவோர் பற்றிய தகவல் சேகரித்து அடுத்த வருடம் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பலாம் .ஒரு நாள் அழைப்பிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் என ஒதுக்கலாம்.
செய்வார்களா?
i agree with வலைஞன்.
Good, worthy suggestions.
Post a Comment