பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 09, 2009

அப்துல் கலாம் : கனவு நாயகன் - புத்தகவிமர்சனம்

சில புத்தகங்கள் பார் சாக்லேட் மாதிரி. ஒரு கடி கடித்த பிறகு கவர் போட்டு உள்ளே வைக்க முடியாது. ஆரம்பித்தால் கடைசி வரை படித்து முடித்து விட்டு தான் மூட முடியும். கனவு நாயகன் அந்த ரகம் அல்ல. டின்னில் வருமே குலாப் ஜாமூன்,ரசகுல்லா எல்லாம். அந்த மாதிரி. ஒன்று எடுத்து சாப்பிட்டு விட்டு பிரிட்ஜில் வைத்து விட்டு, சற்று கழித்து அடுத்தது. நிதானமாக படிக்க வேண்டிய வகை.இந்த புத்தகத்தை பற்றிய என்னுடைய பார்வையை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். இதை புத்தக விமர்சனம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. விமர்சனம் செய்யும் அளவு எனக்கு வாசிப்பனுபவமோ,முதிர்ச்சியோ இல்லை.இவைகளை என்னுடைய சொந்த கருத்துகளாக மட்டும் கொள்க.

ஆரம்பமே அனல் பறக்கிறது. போக்ரான் பாலைவனத்தை பற்றிய வர்ணனையோடு ஆரம்பமாகும் முதல் அத்தியாயம் முழுதும் ஏதோ திரில்லர் படம் பார்ப்பதை போன்ற உணர்வு. "அணு ஆயுத சோதனை" ப்ரொஜெக்டில் என்னவாக இருந்தீர்கள் கண்ணன்? கூடவே இருந்து பார்த்த மாதிரியான ஒரு விவரிப்பு. Brilliant.

எந்த ஒரு நிகழ்ச்சியை குறிப்பிடும் போதும் கண்டிப்பாக தேதி குறிப்பு,பெயர்குறிப்புகள், சூப்பர் சோனிக்,ஹோவர்க்ராப்ட்,ஸ்பிட்ஃபியர் என்று விமானங்களை குறித்த தகவல்கள் என்று 248 பக்கங்களும் data,data and data. கலாம் சம்பந்தப்பட்ட ஏதாவது தகவல் தேவை ஏற்படின், கூகிள் பண்ணுவதற்கு முன்னால், 'இந்த ச.ந.கண்ணன் ஏதாவது சொல்லி இருக்கிறாரா பார்ப்போம்'என்று தேடலாம். தான் பகிர்ந்திருக்கும் தகவல்களுக்கு disclaimer ஆக ஏராளமான புத்தகங்கள்,பேட்டிகள்,சுட்டிகள் என்று கடைசியில் ஒரு பெரிய லிஸ்ட் தந்தும் இருக்கிறார்.கலாம் அவர்களுக்கு inspiration ஆக இருந்த புத்தகங்களில் இருந்தே ’இதுவும் கடந்து போகும்' மாதிரியான (நிகழ்வுக்கு பொருத்தமான) மேற்கோள்கள் காட்டி இருப்பது புத்திசாலித்தனம்.

ஹீரோ அப்துல் கலாம் தான் என்றாலும், ஆசிரியரின் horizon சற்று அகன்றதாகவே தான் இருக்கிறது. New Horizon?...:-). சிவானந்த சுவாமிகள், கணித மேதை ராமானுஜர் என்று ஆங்காங்கே நிறைய கதை சொல்கிறார். பறவை எப்படி பறக்கிறது, செயற்கைக்கோள் எப்படி வேலை செய்கிறது முதலான அறிவியல் விளக்கங்கள் கூடவே. இஸ்ரோ உருவான கதை, கதிரியக்கத்தினால் ஹிரோஷிமா நாகசாகியில் விளைந்தது என்ன? முதலான நிகழ்வுகளையும் சுருக்கமாக பதிவு செய்திருக்கிறார்.

புத்தகத்தின் அத்தியாயங்கள் பிரித்திருப்பது கவனமாக கையாள பட்டு இருக்கிறது. தலைவாழை விருந்து மாதிரி சாம்பார் முடித்து ரசம், பிறகு தான் மோர் என்று வரிசையாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை. தாலி மீல்ஸ் மாதிரி. பிடித்ததை முதலில் சாப்பிட்டுக்கொள்ளலாம். நான் பொருளடக்கம் பார்த்ததும் முதலில், "சோனியா-கலாம் என்ன நடந்தது? " என்று 201 ம பக்கத்துக்கு தான் போனேன். ஒவ்வொரு அத்தியாயமும் தனி தனி கட்டுரைகளாவும் வாசிக்கும் அளவுக்கு தேர்ந்தவை.

சமுதாயத்தின் பெரும்பான்மையினரால், வெற்றியாளராக மட்டுமே அறியப்பட்ட ஒருவரின் தோல்விகளையும், துவள வைத்த சம்பவங்களையும் சாமர்த்தியமாக சொல்லி இருப்பதற்கு சபாஷ்.முதல் எஸ்.எல்.வி கடலில் விழுந்ததும், நந்தி ஹோவர் முடங்கியதும் படிப்பவர்களை ’அச்சச்சோ’ சொல்ல வைக்கும். அக்னியின் முதல் இரண்டு முயற்சிகளும் தோற்றதை பற்றிய கேலி கார்டூன்களை பற்றிய குறிப்புகள், அந்த கார்டூன்களுக்காக கூகிள் பண்ண வைக்கும்.

"'கலாமு'க்கு ராமேஸ்வரத்தில் ஒரு 'சிவசுப்ரமணிய ஐயர்' கிடைத்தது போல, ராமநாத புரத்தில் ஒரு 'அய்யாதுரை சாலமன்' கிடைத்தார்" என்று சந்தர்ப்பவசமாக நடந்த சம்பவங்களை கூட, சுவாரஸ்யமான வரிகளாக மாற்றியிருப்பது அழகு.

"பொற்கொல்லர் தன் சொந்த மகளுக்கு நகை செய்யும் போது கூட, அதில் சற்று ஆட்டையை போடுவார். அது அவருடைய தொழில் தர்மம்" என்று சொல்வார்கள். அது மாதிரி தன்னுடைய புத்தகத்தில் கூட ஆங்காங்கே தன் சொந்த அரசியல் கருத்துகளை 'subtle ' ஆக தூவி இருக்கிறார். "ராமர் கட்டிய பாலம் இனி இங்கு தேவை இல்லை" யாம். ஒரு ரூபாய் அரசியல்வாதிகளையும் லேசாக உரசி இருக்கிறார்.

ஒரு விஞ்ஞானி, முன்னாள் குடியரசு தலைவர், இந்நாள் ஆசிரியர், இவரை பற்றிய புத்தகம். முழுக்க முழுக்க சீரியஸாக தான் இருக்கும்,முகத்தை உம் என்று வைத்து கொண்டு தான் படிக்க வேண்டியதாக இருக்கும் என்று எண்ண வேண்டியதில்லை. வெடிச்சிரிப்பு வரா விட்டாலும் 'கோத்தாரியும் நேருவும் அறிவியல் வல்லுனர்களை தேர்ந்தெடுத்தது முதலான' புன்னகைக்கு மினிமம் கேரண்டி தரும் இடங்கள் பல.

தகவல்களும் புன்னகையும் தானா? செண்டிமெண்ட்? இருக்கிறது. போலியோவால் பாதிக்க பட்டவர்களுக்கு கலாம் செய்த காலிப்பர், முக்கியமான தருணங்களில் அவருடைய குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம் என்று நெகிழ வைக்கும் விஷயங்கள், ஆனால் உறுத்தாத அளவில்.

கடவுளை நம்புகிறீர்களா? என்பதற்கான கலாமின் பதிலும், முஷாரப் கலாம் சந்திப்பின் முடிவில், முஷாரப் கலாமிடம் சொல்லும் வரிகளும் 'நச்'கள்.மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.

எஸ்.எல்.வி-3 ஏவுகணை, ரோகினி 1B launching காட்சிகள் விவரிப்பின் முடிவில், கலாமை தோளில் தூக்கி வைத்து கொள்ளும் shaar ஊழியர்களுள் ஒருவராக நாமும் மாறி போகிறோம்.

ஒரு குடியரசுத்தலைவராக கலாம் சந்தித்த தர்மசங்கடமான சிக்கல்கள் பற்றி சொல்லி இருக்கிறார். தேர்தல் சீர்திருத்த தீர்ப்பு, பீகார் சட்டமன்ற கலைப்பு, நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிறுவனங்களில் பதவி வகிப்பது குறித்த சட்டம், அப்சல் கருணை மனு முதலான விஷயங்களில், ’அந்த நிலைமையில் கலாம் வேறு எதும் செய்திருக்க இயலாது’ என்பதை போன்ற விளக்கங்கள்.

திருஷ்டி பொட்டுகள் சில கண்ணில் பட்டன. ஒரு பொட்டை பற்றி மட்டும் சொல்கிறேன். ஜமீலாவின் முகூர்த்தத்துக்கு இன்னும் சில மணி நேரங்கள் தான் இருக்கின்றன. கலாம் டி ஆர் டி ஓ வில் இருக்கிறார். ஏவுகணையில் சென்றால் தான் அவ்வளவு விரைவாக ராமேஸ்வரம் போய் சேர முடியும் என்கிறீர்கள். ஆனால் கலாம், மாலை வரை ஒரு திட்ட அறிக்கை வேலை செய்து முடித்து, சமர்ப்பித்து,அதற்கு பிறகு ஒரு ஹெலிகாப்டர் பிடித்து சென்னை வந்து, அங்கிருந்து விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து ரயில் பிடித்து ராமேஸ்வரம் போனதெல்லாம் சரி. ஆனால் சரியான நேரத்தில் திருமணத்தில் கலந்து கொண்டார் என்றும் எழுதி இருக்கிறீர்கள். குழப்புகிறீர்களே கண்ணன்? உண்மையை சொல்லுங்கள். கலாம் ஜமீலாவின் திருமணத்திற்கு சரியான நேரத்தில் போனாரா இல்லையா?

கலாம் பற்றிய புத்தகம் என்பதால் அவர் சிரித்துக்கொண்டோ, யோசித்துக்கொண்டோ இருக்கும் close-up shot தான் அட்டை படத்தில் போடுவதற்கு பொருத்தம் என்றாலும், அக்னிசிறகுகள் அட்டையை யோசித்து இங்கு சற்று வித்தியாசப்படுத்தி இருக்கலாமோ? புத்தக கண்காட்சியில் மேலோட்டமாக பார்ப்பவர்கள், "ஏற்கனவே வாங்கியாச்சு" என்று நினைத்து விடும் ரிஸ்க் இருக்கிறது.

"அக்னிசிறகுகளில் இருந்து உங்கள் புத்தகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது?" என்று நூலாசிரியரிடம் கேட்டதற்கு

"தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்தில் கூட கலாம் பற்றிய முழுமையான வாழ்க்கை வரலாறு கிடையாது. அந்தக் குறையை இந்தப் புத்தகம் போக்கியிருக்கிறது" என்கிறார்.

பா.ராகவன் அவர்களின் twitter கமென்ட்:"ச.ந. கண்ணனின் அப்துல் கலாம் பற்றிய புத்தகம் துதி மாலைகளை விலக்கி அவரைச் சற்றுத் தள்ளி நிறுத்தி அழகாக எடை போடுகிறது"

My verdict: An educating book.

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

நன்றி: ப்ரியா கதிரவன்


ச.ந.கண்ணுக்கு வாழ்த்துகள் அடுத்த போட்டிக்கு இது தான் பரிசு :-)
போன மாசம் கலாம் பேசியது - "இளைய சமுதாயத்தின் சக்தி மகத்தானது. ஒவ்வொரு வீட்டிலும் 20 நல்ல புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் அமைக்க வேண்டும்.
தினமும் ஒரு மணி நேரம் நூலகத்தில் படிக்கும் பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் தமிழகத்தில் அறிவுப்புரட்சி ஏற்படும்"

கிழக்கு ஒரு நூலகம் அமைத்து இந்த மாதிரி நல்ல புத்தகங்களை அங்கே வைக்க வேண்டும் என்று பத்ரியை கேட்டுக்கொள்கிறேன்.


18 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

புத்தக பிரியர்களுக்கு நல்ல செய்தி, சற்று முன் விழுந்த "வெளிச்சத்தில் கூசிய கண்களுக்கு நல்ல மருந்து" இந்த புத்தக விமர்சனம்(கருத்து).

பெசொவி said...

//ச.ந.கண்ணுக்கு வாழ்த்துகள் அடுத்த போட்டிக்கு இது தான் பரிசு :-)//

போட்டி எப்போது வைப்பீர்கள் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். விமரிசனம் படித்ததுமே, புத்தகத்தை படிக்கவேண்டும் என்ற ஆவல் மேலோங்குகிறது.

Selvakumar Iniyan said...

ரொம்ப நன்றி இட்லிவடை.

/*****போன மாசம் கலாம் பேசியது - "இளைய சமுதாயத்தின் சக்தி மகத்தானது. ஒவ்வொரு வீட்டிலும் 20 நல்ல புத்தகங்கள் கொண்ட சிறிய நூலகம் அமைக்க வேண்டும்.*****/

புத்தகங்களின் மீது பிரிய முடைய எனக்கு நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்.

இட்லிவடையோ அல்லது பின்னூட்டகாரர்களோ மிகச்சிறந்த 20 புத்தகங்களை பட்டியலிட்டால் என் போன்று படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.

vedanarayanan said...

PM ஆக்காமல் ப்ரெசிடென்ட் ஆக்கி ஒபி அடித்து விட்டார்கள். TN Seshan காவது CEC போஸ்ட் கொடுத்து ஒரு autonomous status இருந்தது.
Hanging பண்ணாததற்கு என்ன compulsions என்று புரியவே இல்லை. அதனால் இவரை பற்றி ஓர் glitch இருக்க தான் செய்கிறது.

லைப்ரரி: கலாமின் கனவு பெங்களூர் - இல் நிறைவேறி உள்ளது. Just Books என்று ஒரு பிரைவேட், new tech library நான்கு லோகலிடிக்களில் இயங்கி வருகிறது. website address is
http://www.justbooksbangalore.com/storelocator.php

இது சென்னைக்கு வருவதற்கு அதிக நாட்கள் இல்லை.

R. Jagannathan said...

Dear IV, Thanks for introducing the book and I am sure to buy one at the first opportunity.
Is it available only on-line? Or also at the bookstalls?
- R. Jagannathan

Badri Seshadri said...

Jagannathan: Currently available all over Tamil Nadu in all the book shops, and several other textile shops, grocery stores and so on. Do email support@nhm.in with your location and we can direct you to the nearest place where it is available.

மர தமிழன் said...

//Selvakumar Iniyan said...
புத்தகங்களின் மீது பிரிய முடைய எனக்கு நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கல்.//

//இட்லிவடையோ அல்லது பின்னூட்டகாரர்களோ மிகச்சிறந்த 20 புத்தகங்களை பட்டியலிட்டால் என் போன்று படிக்க ஆரம்பிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்//

இது தவறான அணுகுமுறை நண்பரே... நீங்களே தேடுங்கள் வேண்டுவது கிடைக்கும்..தேடல் முக்கியம். all the best :-)

++++++

// Badri said...
Jagannathan: Currently available all over Tamil Nadu in all the book shops, and several other textile shops, grocery stores and so on. Do email support@nhm.in with your location and we can direct you to the nearest place where it is available.//

'கிழக்கு' பட்டி தொட்டி என எல்லா பக்கமும் வெளுக்கிறது... கவர்ச்சி தூசுகளை தட்டிவிட்டு நல்ல புத்தகங்கள் தேடும் கண்கள் பெட்டிக்கடைகளில் பார்கிறேன்.. தொடரட்டும் உங்கள் பணி.

மர தமிழன் said...

//மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கலாம் சொல்லும் பத்து பத்து உறுதி மொழிகளும், இரண்டு "Ten commandments" களுக்கு சமானம்.//

குழந்தைகளை நேசித்த அம் மனிதர் வாழ்க..

பாரதி மணி said...

புத்தகத்தை வாங்கத்தூண்டும் கச்சிதமான விமர்சனம்.

ச.ந. கண்ணனுக்கு வாழ்த்துகள்!

SAN said...

Hi IV,
Did you go thro today's english papers wherein you can find that all the people involved in Dinakaran office incident are aquitted but the same news does not find mentioning in Dinamalar.Why this double standard?

Anonymous said...

இந்த இடுகைக்குப் பெயர் advertorial. கிழக்கும்,இடலிவடையும் இதற்கென தனி வலைப்பதிவு துவங்கலாம்.
இட்லிவடை வலைபதிவிற்கும், கிழக்கு பதிப்பகத்திற்கும் தொடர்பே இல்லையா. தொடர்பு இருந்தால் அதை எழுத வேண்டியதுதானே.
அரசிடம்,அரசியல்வாதிகளிடம் transparency வேண்டும் என எழுதும்
பத்ரி இதைத் தெளிவுபடுத்த வேண்டும். எழுதுங்கள்,ஒரு disclaimer போட்டு விட்டு எழுதுங்கள். நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை செய்தால் என் பதிவில் நான் வேலைப் பார்க்கும்
நிறுவனத்தின் திட்டத்தை ஆகா ஒகோ எனப் புகழ்ந்து எழுதினால், நான் இந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன், இருப்பினும் இது சொந்தக் கருத்து என்று எழுதுவதுதானே முறை. இட்லிவடைக்கும், கிழக்கு (பத்ரி,பாரா,
ஹரன் பிரசன்னா) கூட்டத்திற்கும்
இது தெரியாதா.

Badri Seshadri said...

அன்புள்ள அனானி: இட்லிவடை பதிவில் வந்த இந்தப் பின்னூட்டம் பற்றி எனக்குத் தெரியவந்தது. அதிகாரபூர்வமாக சிலவற்றைக் கூறமுடியும்.

1. கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பை நடத்தும் நியூ ஹொரைசன் மீடியா என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்ற முறையில், கிழக்கு, நியூ ஹொரைசன் (மற்றும் பிற பதிப்புகளான வரம், நலம், மினிமேக்ஸ், பிராடிஜிம் இன்னபிற) ஆகியவற்றுக்கும் இட்லிவடை வலைப்பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

2. பத்ரி என்ற தனி மனிதருக்கும் இட்லிவடை வலைப்பதிவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. (பிரசன்னா, பாரா போன்றோரின் அந்தரங்க வாழ்க்கை, அவர்களது வலைப்பதிவுகள் ஆகியவை பற்றி நான் எதையும் சொல்லமுடியாது. அதை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.)

3. நியூ ஹொரைசன் மீடியா அலுவலர்கள் என்ற முறையில் பாரா, பிரசன்னா ஆகியோர் தங்கள் சொந்த வலைப்பதிவுகளில்கூட கிழக்கு (+ பிற நியூ ஹொரைசன் மீடியா) புத்தகங்கள் பற்றி எழுதவேண்டும் என்றோ, புரோமோட் செய்யவேண்டும் என்றோ சொல்லப்பட்டது இல்லை. அது அவர்களது employment contract-ல் ஒரு ஷரத்து கிடையாது. அவர்கள் விரும்பினால் செய்யலாம். இல்லாவிட்டால் செய்யவேண்டாம்.

4. பத்ரி என்ற தனி மனிதர்கூட (அதாவது நான்) அவரது வலைப்பதிவில் கிழக்கு பற்றி எழுதவேண்டும் என்று எந்த Shareholder Agreement-லும் சொல்லவில்லை. ஆனாலும் நான் என் விருப்பத்துக்கு ஏற்ப எனக்குப் பிடித்தவற்றை *என்* வலைப்பதிவில் மட்டுமே எழுதுகிறேன். இட்லிவடை என்னிடம் ஏதேனும் கேட்டால் எழுதிக் கொடுத்துள்ளேன். (உதாரணம்: இலங்கைப் பிரச்னை).

5. இட்லிவடை என்ற வலைப்பதிவை நடத்துபவர்(கள்?) யார் என்று எனக்குத் தெரியாது. அவர்களை நான் பார்த்தது இல்லை என்றே நம்புகிறேன்.

நன்றி.
பத்ரி

Paleo God said...

எனக்கு தெரிந்து பல நண்பர்களுக்கு நான் கிழக்கு புத்தகங்கள் சிபாரிசு செய்திருக்கிறேன்.. நிச்சயமாக கிழக்கு வெளியிடும் புத்தகங்கள் எல்லாமே சிறப்பான விஷயங்களை உள்ளடக்கி கொண்டிருக்கிறது. சந்தையில் விற்க ஆயிரம் குப்பைகளுண்டு .. நல்ல விஷயங்களை நல்ல விகிதத்தில் கொடுக்க ஒரு துணிவு வேண்டும்.. வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் லேசாக எட்டிப்பார்த்தால் கூட குப்பைகளை தூக்கி சுமக்க வேண்டிய நிலை வந்துவிடும். அந்த வகையில் கிழக்கு சரியான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது இட்லி வடை போன்றவர்(கள்)??!! மூலம் இன்னும் பலருக்கு கிழக்கின் புத்தகங்கள் போய் சேருமென்றால்.. அது நல்லது தான்.

யதிராஜ சம்பத் குமார் said...

யார் யாராக இருந்தால் என்ன?? நமக்கு என்ன விஷயம் வேண்டுமோ அதனை கிரஹித்துக் கொண்டு மற்றவற்றை விட்டு விடலாமே?? எழுதுவோரின் பூர்வோத்திரத்தை ஆராய்வது தேவையற்றது என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயம்.

அனானியின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க பத்ரியும் இவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டாம்.

எது செய்தாலும் அதனை விமர்சனம் செய்ய விமர்சகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

Anonymous said...

Dear Badri / Marathamizhan,

Thanks for the response. I will be getting the book. - R. Jagannathan

Anonymous said...

இட்லிவடை என்னிடம் ஏதேனும் கேட்டால் எழுதிக் கொடுத்துள்ளேன். (உதாரணம்: இலங்கைப் பிரச்னை).

5. இட்லிவடை என்ற வலைப்பதிவை நடத்துபவர்(கள்?) யார் என்று எனக்குத் தெரியாது. அவர்களை நான் பார்த்தது இல்லை என்றே நம்புகிறேன்.

நன்றி.
பத்ரி

Good to know that Badri is such a nice person that he will write for Idlyvadai without knowing who is/are behind this blog.

அவர்களை நான் பார்த்தது இல்லை என்றே நம்புகிறேன்.

This sounds like a statement of a witness during a cross-examination.
Just read the previous sentence.
f you lie, lie consistently. There is nothing wrong in stating that you know who is/are behind Idlyvadai and you will not reveal that.It is as simple as that.

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

s also available in English!

வியாழன், 5 மே, 2011
முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு
உயர்திரு,முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் சமூகத்திற்கு !
05 மே 2011, 12:39 க்குஇல் Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குறிய அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதும் விண்ணப்பம்;------- நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மக்களால் மிகவும் மதிக்கத் தக்கவர் என்பது யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை .அவர் புலால் மறுத்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.அவர் ஏன் உயிர்க்கொலை செயவதையும் புலால் உண்பதையும் தவிர்த்து வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிக்கவில்லை.திருக்குறளை நன்கு படித்தவர்,திருக்குறளில் புலால் மறுத்தல்,கொல்லாமை என்ற இரண்டு அதிகாரங்கள் ௨௦ திருக்குறள் எழுதிவைத்துள்ளார்,வள்ளுவரும் வள்ளலாரும்,உயிர்க்கொலை செயவதால்தான் இந்த உலகம் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறது,என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் தெளிவுபடுத்தி யுள்ளார்கள்.இதை எல்லாம் நமது முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நமது இந்திய நாடு வல்லரசாக மாற வேண்டும் என்பதை விட நல்ல அரசாக மாறினால்,மக்கள் நலமுடன் வாழ்வார்கள் .இந்திய நாட்டில் அருளாளர்கள் அதிகம் வலியுருத்தியது கொல்லாமையும் புலால் உண்ணாமையுமாகும்.நமது மகாத்மாகாந்தியும் அதையே கடைபிடித்து,கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை என்னும் சத்தியாக்கிரகத்தின் முலம சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.வாயில்லாத வாய பேசாத,உயிர்களை கொன்று தின்னும் வரை இந்த உலகம் உருப்படியாகாது.இதுவே ஞானிகளின் சத்திய வாக்காகும்.இறைவன் படைத்த உயிர்களை அழிக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இறைவன் கொடுக்கவில்லை.உயிர்க்கொலை செய்வதும்,புலால் உண்பதும் இறைவன் சட்டத்தை மீறிய செயல்களாகும்.என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இதை முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குரிய பெரியவர் அப்துல்கலாம் அவர்கள் மக்களுக்கு போதிக்கவேண்டும்,என்பது இச்சிறியவனின் விண்ணப்பமாகும்,ஏன் என்றால் உங்களை மக்கள்,மாணவர்கள் மதிக்கின்றார்கள்.நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.உங்கள மேல அந்த அளவிற்கு மக்கள் மதிப்பு வைத்து இருக்கிறார்கள்.நீங்கள் உண்மையை சொல்லுங்கள்.பொய் சொல்லவேண்டாம்.இதுவே மக்களில் ஒருவனாக உங்கள் மீது வைத்துள்ள மரியாதையுடன் தெரியப்படுத்தி கொள்கிறேன்.அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

s also available in English!

வியாழன், 5 மே, 2011
முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுக்கு
உயர்திரு,முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் ஐயா அவர்கள் சமூகத்திற்கு !
05 மே 2011, 12:39 க்குஇல் Kathir Kathirveluஆல்
உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குறிய அப்துல்கலாம் ஐயா அவர்களுக்கு வணக்கத்துடன் எழுதும் விண்ணப்பம்;------- நமது முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் மக்களால் மிகவும் மதிக்கத் தக்கவர் என்பது யாருக்கும் எந்தவித சந்தேகமும் இல்லை .அவர் புலால் மறுத்தவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.அவர் ஏன் உயிர்க்கொலை செயவதையும் புலால் உண்பதையும் தவிர்த்து வாழவேண்டும் என்று மக்களுக்கு போதிக்கவில்லை.திருக்குறளை நன்கு படித்தவர்,திருக்குறளில் புலால் மறுத்தல்,கொல்லாமை என்ற இரண்டு அதிகாரங்கள் ௨௦ திருக்குறள் எழுதிவைத்துள்ளார்,வள்ளுவரும் வள்ளலாரும்,உயிர்க்கொலை செயவதால்தான் இந்த உலகம் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறது,என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்கள் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும் தெளிவுபடுத்தி யுள்ளார்கள்.இதை எல்லாம் நமது முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நமது இந்திய நாடு வல்லரசாக மாற வேண்டும் என்பதை விட நல்ல அரசாக மாறினால்,மக்கள் நலமுடன் வாழ்வார்கள் .இந்திய நாட்டில் அருளாளர்கள் அதிகம் வலியுருத்தியது கொல்லாமையும் புலால் உண்ணாமையுமாகும்.நமது மகாத்மாகாந்தியும் அதையே கடைபிடித்து,கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை என்னும் சத்தியாக்கிரகத்தின் முலம சுதந்திரம் வாங்கித்தந்தார் என்பது உலகம் அறிந்த உண்மையாகும்.வாயில்லாத வாய பேசாத,உயிர்களை கொன்று தின்னும் வரை இந்த உலகம் உருப்படியாகாது.இதுவே ஞானிகளின் சத்திய வாக்காகும்.இறைவன் படைத்த உயிர்களை அழிக்கும் அதிகாரம் மனிதர்களுக்கு இறைவன் கொடுக்கவில்லை.உயிர்க்கொலை செய்வதும்,புலால் உண்பதும் இறைவன் சட்டத்தை மீறிய செயல்களாகும்.என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இதை முன்னால் ஜனாதிபதி மதிப்பிற்குரிய பெரியவர் அப்துல்கலாம் அவர்கள் மக்களுக்கு போதிக்கவேண்டும்,என்பது இச்சிறியவனின் விண்ணப்பமாகும்,ஏன் என்றால் உங்களை மக்கள்,மாணவர்கள் மதிக்கின்றார்கள்.நீங்கள் சொன்னால் மக்கள் கேட்பார்கள்.உங்கள மேல அந்த அளவிற்கு மக்கள் மதிப்பு வைத்து இருக்கிறார்கள்.நீங்கள் உண்மையை சொல்லுங்கள்.பொய் சொல்லவேண்டாம்.இதுவே மக்களில் ஒருவனாக உங்கள் மீது வைத்துள்ள மரியாதையுடன் தெரியப்படுத்தி கொள்கிறேன்.அன்புடன் --ஆன்மநேயன் கதிர்வேலு