புத்தகக் கண்காட்சி பற்றி பா.ராகவன் டிவிட்டர் வழியாக. படங்கள் எல்லாம் பா.ராகவன் புதிதாக வாங்கிய 5MP Mobileலில் எடுத்தது. சோதனைக்காக எனக்கு அனுப்பியது.
* இந்த ஆண்டு எக்கச்சக்க கடைகள். ஒருமுறை முழுக்க நடந்தால் கால் வலி வந்துவிடுகிறது. நக்கீரன் ஸ்டால் வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிலை அழகு.
* ஆனால் அது மகா அலெக்சாண்டரா, கொடித்தோன்றும் தோரண வாயில் காப்போனா என்றுதான் சரியாகத் தெரியவில்லை. ( ராமானுஜ தாத்தாச்சாரியராக இருக்க போகிறார் )
* அதே நாற்ற டாய்லெட். அதே இழுத்துத் தைத்த கோவண கார்ப்பெட் தரை. அதே அபாயகரமான ஊசலாடும் மின்சார ஒயர்கள். அதே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கேண்டீன்.
* அரங்கினுள்ளே கிடைக்கும் டீ, வெளியே கேண்டீனில் கிடைக்கும் தக்காளி சூப் இரண்டும் இன்று நன்றாக இருந்தன. மற்றவை பற்றி அடுத்த தினங்களில்.
* பெங்களூர் புத்தகக் கண்காட்சி மாதிரி என்று கிளப்பிவிட்ட புண்ணியவான்கள் ஒழிக. சென்னை புத்தகக் கண்காட்சி தன் அடையாளங்களை இழக்கவில்லை. ( அப்பாடா )
* தொடக்கவிழா நிகழ்ச்சியின் ஓர் அம்சம் மட்டுமே இக்கட்டுரையில் உள்ளது. என் அனுபவங்கள் தனியே இன்னொரு கட்டுரையாக வரும். ( இந்த பதிவு இல்லை அது வேற :)
* இப்போதெல்லாம் எல்லா கலைஞர் விழாக்களிலும் ஜெயகாந்தன் ஆஜராகிவிடுகிறார். ஆனால் மீசை இன்னும் அதே சைஸில்தான் இருக்கிறது. ( எங்களுக்கு புரிகிறது )
* ஏனோ கலைஞர் மோட்டார் காரில் கண்காட்சிக்குள் வழக்கம்போல் இம்முறை திக்விஜயம் செய்யவில்லை. ஏற்பாடெல்லாம் செய்திருந்தும்.
* விழா மேடையை மீடியாக்காரர்கள் முற்றிலும் மறைத்துவிட்டதால் கூட்டத்தில் யார் கண்ணிலும் கலைஞர் படவில்லை. ரேடியோ கேட்பது போலிருந்தது நிகழ்ச்சி.
* ட்விட்டர் சார்பில் @spinesurgeonஉம் பதிவுலகம் சார்பில் @luckykrishnaவும் வந்திருந்தார்கள். கவிஞர் உமாஷக்தி இலக்கிய உலகம் சார்பாக. ( அவர்களுக்கு இது தான் உலகம் )
* விழா தொடங்குமுன் ஒரு கார் வந்து நின்றது. உடனே கனிமொழியே வருக, கவிமொழியே தருக என்று ஒரு பாட்டு போட்டார்கள். ஆனால் வந்தது, தமிழச்சி. ( கனி மொழி என்றாலே அது தமிழ் தான் இதுல என்ன சந்தேகம் )
* புதிய தலைமுறை ஸ்டாலில் பயங்கரக் கூட்டம். விசாரித்தால் இதழ்கள் இலவசம்! ( புதிய தலைமுறை இலவசம் என்றால் ஓடுகிறார்கள் சரியா ? )
* புதிய தலைமுறை, சூரியக்கதிர் இரண்டு புதிய பத்திரிகைகளும் கண்காட்சியில் ஸ்டால் போட்டிருக்கின்றன. புதிய வரவுகள் ( சூரியக்கதிர்ல 'க்' கிடையாது தெரியுமா ? )
* தமிழினியில் திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு ஒரு கனமான நூலாக வந்திருக்கிறது. வாங்க வேண்டும். ( சபாஷ் சரியான போட்டி )
* கிழக்கு பதிப்பகம் என்ற பெயர்ப்பலகை வைக்க முடியாது என்று பபாசி சொல்லிவிட்டது பற்றி பாரா வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். ( நல்ல வேளையாக கலைஞர் என்பதற்கு பதில் கருணாநிதி என்று தான் எழுதுவேன் என்று அவர்கள் அடம்பிடிக்கவில்லை. )
( கிழக்கு பதிப்பகம் என்ற பெயருக்கு பதிலாக பிரசன்னாவை நிறுத்தியிருக்கிறார்கள். இதை வைத்து அடையாளம் காண்பது சுலபம். இவரிடம் இளையராஜா பற்றி 'தாராளமாக' பேசலாம், கட்டணம் கிடையாது. )
( பிராக்கெட்டில இருப்பது இட்லிவடை கமெண்ட்ஸ் )
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 30, 2009
புத்தகக் கண்காட்சி பற்றி பா.ராகவன் ( டிவிட்டர் வழியாக )
Posted by IdlyVadai at 12/30/2009 11:08:00 PM
Labels: புத்தககண்காட்சி-2010, விருந்தினர்
Subscribe to:
Post Comments (Atom)
14 Comments:
அட, இங்கே பா(ர்)ரா!!!!
:>
யுவ கிருஷ்ணாவை “புதிய தலைமுறை” படத்துடன் கிளிக் செய்தது அருமை..
இளைய தலைமுறை படிக்க வேண்டிய புத்தகங்கள் அல்லது அனைவரும் படிக்கவேண்டிய புத்தகங்கள் என்று நீங்கள் கருதும் ஒரு ௧௦ புத்தகங்களை வரிசை படுத்தி நீங்கள் வெளியிடலாமே ...
கிழக்கு வெளியிட்ட ரகோத்த்மன் புத்தகம் பெரிய அதிர்வு ஏதும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லையே
5 MP மொபைல் கேமரா போட்டோக்கள் நன்றாக இருக்கின்றன.
Idly,
sujatha iruntha aawaard kudupparu..
ippa unna vitta vera yeeara naangka keetkarathu..
IDLY VADAI AWARD LIST PLEASE..
Thanks
Bala
Texas
http://www.youtube.com/watch?v=jQCFjJpj8Q8&feature=related
Enjoy ::)
Thanks
bala
ஆக மொத்தம் இட்லிவடை நடத்துவது கிழக்கு குழுமம் என்பது நிரூபணம் ஆகிறது.
//IDLY VADAI AWARD LIST PLEASE..//
சரி போடுகிறேன். என்ன லிஸ்ட் கொஞ்சம் பெரிசா இருக்கு :-)
பிரசன்னா போனவருடத்துக்கு இந்த வருடம் கொஞ்சம் மெலிந்திருக்கிறாரோ?
//இப்போதெல்லாம் எல்லா கலைஞர் விழாக்களிலும் ஜெயகாந்தன் ஆஜராகிவிடுகிறார். ஆனால் மீசை இன்னும் அதே சைஸில்தான் இருக்கிறது. ( எங்களுக்கு புரிகிறது )//
எனக்கும்... LOL
சாதாரணமாக பொங்கல் விடுமுறையில்தான் கண்காட்சி நிறைவு அடையும். அந்த விடுமுறையில்தான் மக்களும் இங்கு குவிவார்கள்... பத்தாம் தேதியே நிறைவுறச் செய்வது என்ன நியாயமோ?
திரு ஜெயகாந்தன் அவர்கள் தன வாழ்நாளில் பெரும் பகுதியை [தன் இளமைக்காலம் முழுவதும் ]திராவிடர் கழகங்களையும் அதன் தலைவர்களையும் மிகத்துணிவாக எதிர்ப்பதில் செலவழித்தவர்.ஆனால் தமிழர்களின் விட்டேத்தியான மனப்பான்மையாலும் ,பணம் வாங்கி ஒட்டு போடும் இழி செயல்களாலும் இந்த தீய சக்திகள் பெரிய விருட்சமாக வளர்ந்து தமிழ்நாட்டையே நாசமாக்குகின்றன.மனம் வெதும்பி சமாதானமாக போகும் இவரை இப்பொழுது நாம் குறை கூறுகிறோம்
வெட்ககேடு!
ஜே கே செய்வதில் தவறொன்றும் இல்லை!
aamma paaraavum idlyvadaiyum ore aalu thaane.. ethukku thaniyaa intha pathivu?
~Naaratha Muni
Post a Comment