இன்று பாரதியார் பிறந்தநாள். நமக்கு இது எங்கே நினைவு இருக்க போகுது, ஸ்கூல்ல ஸ்வீட் தந்தா நினைவு இருக்கும். இது இண்டர்நெட் யுகம், ஸ்விட் எல்லாம் கிடையாது ஒன்லி டீவிட் மட்டும் தான். 'இன்று பாரதியார் பிறந்த நாள்' என்று டிவீட் அடித்திவிட்டு காபி குடிக்க போய்விட்டார்கள் நம் மக்கள்.
திருவல்லிக்கேணி மக்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள். பாரதியார் இல்லத்தை( வீடு என்று யாரும் சொல்லுவதில்லை ) ஜெயலலிதா கொஞ்சம் 'மாடி'ஃபை செய்தார். அதற்கு பிறகு சேட்டு வீடு மாதிரி நல்லா தான் இருந்தது, வெயில், மழை எது வந்தாலும் ஒழுகாம இருந்தது. இப்ப திமுக கவர்மெண்ட் ஏதாவது செய்ய வேண்டாமா ? உடனே ரிப்பேர் ஆன வீட்டை திரும்ப ரிப்பேர் செய்யறாங்க. பாரதியார் இல்லம் என்ற கல்வெட்டுல எல்லா முதலமைச்சர்களின் பெயர்களும் இருக்க வேண்டாமா ?
இன்று காலை 9 மணிக்கு பார்த்தசாரதி கோயில் முன்புறம் கொஞ்சம் இடம் இருக்கும், பைக் கார் எல்லாம் நிறுத்தும் இடமா என்று கேட்காதீங்க அதே தான். அங்கே காலை கிரேசி மோகனின் வெண்பா தொகுப்பு வெளியீட்டு விழா! பாரதியார் பிறந்த நாள் விழால ஸ்பெஷல் வெளியீடு. சுமார் 149 பிரபலங்கள் வந்திருப்பார்கள். என்னையும் சேர்த்தால் 150 பேர். எல்லோரும் நடு ரோட்டில் நின்றுக்கொண்டு இருந்தது தான் இந்த விழாவின் ஹைலைட்.எனக்கு தெரிந்து கிரேஸி மோகன் வந்திருந்தார், இல.கணேசன், எம்.எல்.ஏ எஸ்.வி.சேகர், பா.ராகவன், ஜே.எஸ்.ராகவன், நேசமுடன் வெங்கடேஷ், சீதாரவி, மதன், ராவ், இரா.முருகன் மற்றும் பலர். மற்றவர்களை சொன்னால் இட்லிவடை யார் என்று ஈஸியா கண்டுபிடுச்சுடுவீங்க அதனால இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.:-). எ.அ.பாலா வரலை இல்லை இன்னேறம் டிவீட் செய்து கழுத்தறுத்திருப்பார். படத்தை பார்க்காமலே சன் டிவியில் விமர்சனம் செய்யும் ரத்னா அப்பறம் சின்ன வயசுல( நாம சின்ன வயசாக இருக்கும் போது ) நியூஸ் படிப்பாங்களே ஷோபனா ரவி இவங்க கூட வந்திருந்தாங்க.
திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட மோகனோட நண்பர் சு.ரவி முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். வெண்பா பற்றி எல்லாம் எனக்கு தெரியாது அதனால் அந்த புத்தகம் பற்றி எல்லாம் எழுத போறதில்லை. எழுதினாலும் 'தல'தட்டுது என்று என் தலையில கை வைப்பீங்க நமக்கு எதுக்கு பொல்லாப்பு.
இரண்டு பெரிய ரைட்டர்ஸ் சீரியஸா டிஸ்கஸ் செய்துக்கொண்டு இருந்தார்கள். சரி என்று என் காதை தீட்டிக்கொண்டு கேட்டேன். அதை அப்படியே இங்கு தருகிறேன்....
ஒரு கிரிக்கெட் மேட்ச் லாஸ்ட் ஓவர் நடக்குது. நாலு பால் பேட்ஸ்மன் கோட்டை விட்டுட்டான்.அஞ்சாவது பால்ல ஸ்டிரெயிட் டிரைவ். கரெக்டா போலர் மேல போய் அடி பின்னிடுது மைதானமே அலறுது கமண்டேடர் சொல்றார் "ஹி ஹாஸ் ஒன் பால் லெஃப்ட்"
என்ன ஜோக் புரியலையா ? சரி பரவாயில்லை.
அந்த சமயத்துல பாரதியார் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டு ஒருவர் இங்கும் அங்கும் அலைந்துக்கொண்டிருந்தார். பாரதியார் வீட்டை ரீமாடல் செய்துக்கொண்டு இருக்கிறார்களா அதனால் அவருக்கு எங்கே போவது என்று தெரியவில்லை. இவரை பார்த்தால் உடனே வீரம் வந்து மீசையை முறுக்க வேண்டாமா ? யாரும் அது மாதிரி செய்யலை, ஏன் என்றால் வந்தவர்கள் பாதி பேருக்கு மீசை இல்லை. என்ன செய்ய முடியும் ? அதனால் எல்லோரும் இவர் ஏதோ ஃபேன்சி டிரெஸ் காம்படிஷன் மாதிரி காமெடி செய்கிறார் என்று நினைத்துவிட்டார்கள். விவேக் பாரதியார் மாதிரி காமெடி செய்யவில்லையா ? அது மாதிரி.
உடனே பக்கதில் இருந்த பெரிய ரைட்டர் இப்படி கேட்கிறார்
"பமீலா ஆண்டர்சன் பிறந்த நாள் விழாவுக்கு இவர் எப்படி சார் போவார்?"
பாரதியார் பராசக்தியிடம் வரம் வேண்டி ( அது பெரிய லிஸ்ட் ) அவருக்கு அது எல்லாம் கிடைப்பதற்குள் போய்விட்டார், அதனால் அவர் ஆசையை நிறைவேற்ற வருஷா வருஷம் பாரதியாரை ஜதிபல்லக்குல ஏத்தி ஊர்வலம் போகப்போறாங்க. ( இதுவும் அந்த லிஸ்டுல ஒன்றாம்). இது அவர் பர்த்டே ஸ்பெஷல். அதுல கிரேஸி மோகன் புக் ரிலீஸ் ஒரு நிகழ்ச்சி, வானவில் பண்பாட்டு மையம்ங்கற அமைப்பு ஆர்கனைஸ் செய்யறாங்க. நல்லது.
கமல் படம் பற்றி இன்னொரு ரைட்டர் காதைக் கடித்தார்.
.’கமல் அடுத்த படம் ஆரம்பிச்சுட்டாரா?’
"இல்லை. வேலை மட்டும் நடக்குது."
"படம் பேரு?"
‘நாம் இருவர்"
"குடும்ப கட்டுப்பாடு படமா ?"
"தெரியாது"
"இதுக்கு மேல இன்னும் பழசா பேரு கிடைக்கலையாமா?"
இப்ப திரும்பவும் ஒரு ரைட்டர் "சார் பாரதியாரை பல்லக்கில் ஏற்றி ஊர்வலம் எல்லாம் போக பாரதியார் ஒத்துக்கிட்டாரா ?" என்று கேட்க.
பக்கத்தில் இருந்த இன்னொருவர்( அவரும் ரைட்டர் தான்) "ஏங்க கிரேஸி மோகனுக்காக நாமளே கார்த்தால வேலை வெட்டியை விட்டு வந்திருக்கிறோம், பாரதியாருக்கு என்ன ? "
திரும்பவும் பக்கதில் இருந்தவர் "பாரதியார் மாதிரி வேஷம் போட்டவரை ஏற்றிகொண்டு போவார்களா ?"
அதற்குள் என் செல் போன் அடிக்க அதற்கு என்ன பதில் என்று தெரியாமல் வந்துவிட்டேன்.
நன்றி: பார்த்தசாரதி பெருமாள் ( அவர் தான் இந்த ஸ்பெஷல் ரிப்போர்ட்டை எனக்கு அனுப்பினார் )
பி.கு: ஜதிப் பல்லக்கிற்கு ஒரு வரலாறே இருக்கிறது. பாரதியார் கவிதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எட்டையபுரத்து மன்னனிடம் சென்று தனது கவிதையை நாடு போற்றுகிறது. மக்கள் போற்றுகிறார்கள். அதனால் எட்டையபுரத்து அரசனாகிய நீங்களும் என்னை பாராட்ட வேண்டும். பாராட்டுவதோடு எனக்கு பரிசுகள், மரியாதைகள் வழங்க வேண்டும். அத்தோடு என்னை ஜதி பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்....இது எல்லாம் நமக்கு எதுக்கு ?
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, December 11, 2009
கிரேஸி - பாரதியார் பிறந்த நாள் விழா !
Posted by IdlyVadai at 12/11/2009 12:59:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
மகாகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
//மகாகவிக்கு பிறந்தநால் வாழ்த்துகள்!!//
ஒரு வாழ்த்தை கிரேஸி மோகனுக்கு சொல்லுங்க.
//இன்று பாரதியார் பிறந்தநாள். நமக்கு இது எங்கே நினைவு இருக்க போகுது, ஸ்கூல்ல ஸ்வீட் தந்தா நினைவு இருக்கும்//
ரைட்டு..
//பாரதியார் இல்லம் என்ற கல்வெட்டுல எல்லா முதலமைச்சர்களின் பெயர்களும் இருக்க வேண்டாமா ? //
கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்டயே விட்டு வைக்கல..
//என்னையும் சேர்த்தால் 150 பேர். எல்லோரும் நடு ரோட்டில் நின்றுக்கொண்டு இருந்தது தான் இந்த விழாவின் ஹைலைட்.//
ஜஸ்ட் மிஸ்..
//ஹி ஹாஸ் ஒன் பால் லெஃப்ட்"//
லெப்ட்ல யா ரைட் ல யா?? :-()
//பமீலா ஆண்டர்சன் பிறந்த நாள் விழாவுக்கு இவர் எப்படி சார் போவார்?//
ரொம்ப கொடுமை சார் இது !!
//நாம் இருவர்"
"குடும்ப கட்டுப்பாடு படமா ?"//
கட்டுப்பாடில்லாத குடும்ப படமா இல்லாம இருந்தா சரி..
//இன்று காலை 9 மணிக்கு பார்த்தசாரதி கோயில் முன்புறம் கொஞ்சம் இடம் இருக்கும், பைக் கார் எல்லாம் நிறுத்தும் இடமா என்று கேட்காதீங்க அதே தான்.//
பெருமாள் கோவில்ல இட்லி வடையா .. சூப்பர். ரிப்போர்ட் அனுப்பியது பார்த்தசாரதி பெருமாளா? ஏதோ உள் குத்து மாதிரி தெரியுது...
//ஒரு வாழ்த்தை கிரேஸி மோகனுக்கு சொல்லுங்க//
congrats sir.
நன்றி கிரேஸி சார் :)
//பி.கு: ஜதிப் பல்லக்கிற்கு ஒரு வரலாறே இருக்கிறது. பாரதியார் கவிதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எட்டையபுரத்து மன்னனிடம் சென்று தனது கவிதையை நாடு போற்றுகிறது. மக்கள் போற்றுகிறார்கள். அதனால் எட்டையபுரத்து அரசனாகிய நீங்களும் என்னை பாராட்ட வேண்டும். பாராட்டுவதோடு எனக்கு பரிசுகள், மரியாதைகள் வழங்க வேண்டும். அத்தோடு என்னை ஜதி பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.... //
அது கவிகளுக்கே உரிய "வித்யா" கர்வம். தன்னைப் புலவன் என்று சொல்லிக் கொள்வதில் பாரதிக்கு எப்போதுமே பெருமை கலந்த ஒரு கர்வம் இருக்கும். அவன் எப்போதுமே ஒரு வேளை சோற்றுக்காக தன்னைத் தாழ்த்தி மற்றவரைப் புகழ்வதில் விருப்பமில்லை. அவனுடைய எல்லா கவிதைகளுமே இதைப் பறை சாற்றும். அவன் கவிஞன். இன்று கலைமாமணிக்காகவும், மற்ற பல சன்மானங்களுக்காகவும் தன்னை விற்ற கலை"வித்த"கர்கள் மத்தியில் நிஜமான, தமிழுக்கே தன்னைத் தந்த, ஒப்பற்ற கவிஞன் பாரதியார். அவன் புகழ் என்றும் மங்காது.
//ஒரு வாழ்த்தை கிரேஸி மோகனுக்கு சொல்லுங்க.//
பாரா அந்த ஆளை பாரதியார் லேவெல்லே கொண்டு பொய் நிறுத்தாதீங்க இட்லிவடை :-(
மகாகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!!
எல்லா புலவர்களை பற்றி பேசும் பொழுது, we talk only of their படைப்புகள். பாரதியாரை பற்றி பேசும் பொது மட்டும் , அவர் attitude பற்றியும் பேசுகிறோம். Must be a man with lots of attitude.
மகாகவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
முண்டாசில் உலகை
முடிந்து வைத்த மணியே !
முரட்டு மீசையுடன்
முத்தமிழ் வளர்த்த முனியே !
வாழ்க நீ எம்மான்..!
ரொம்ப வருடங்கள் கழித்து, என் நண்பர் சு ரவி குறித்து படிச்சது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள், ரவிக்கு, கிரேசி மோகனுக்கு, பாரதியாரின் நூற்று இருபத்தெட்டாவது பிறந்தநாளில் - அவருக்கும்!
ஜதி பல்லக்கில் ஏற்றினால் பரவாயில்லை நண்பரே,,,,இவர்கள், பாரதியை, ஜாதி பல்லக்கிலிருந்து இறக்கிவிட்டால் போதும்.
அருமை
வாழ்க பாரதி!
சில மாதங்களுக்கு முன் என் வலைத் தளத்தில் நான் இட்ட பதிவு கீழே:
http://cinemavirumbi.blogspot.com/2009/04/blog-post_5027.html
நன்றி!
சினிமா விரும்பி
பாரதி இறந்தபோது வந்த கூட்டத்தை விட 150 பேர் என்பது அதிகம்தான்.. அவனையெல்லாம் இன்னும் நினைவில் வைத்திருப்பதற்காகவே நாம் நமக்கே பட்டம் கொடுத்து பல்லக்கில் தூக்கிக் கொள்ள வேண்டும்..
நல்லவேளை கலைஞர் இந்த விழாவை நடத்தவில்லை.. இல்லையெனில் குஷ்புக்களும், நமீதாக்களும் வந்து தமிழை வளர்த்திருப்பார்கள்.. பாரதி மீண்டும் ஒருமுறை மரித்திருப்பான்...
கிரேசிக்கு வாழ்த்துக்களும், மஹாகவி பாரதியாருக்கு வணக்கங்களும்
ஜெயக்குமார்
விஜயகாந்தை விட நல்ல தமிழில் குஷ்பு பேசுகிறார். சரளமாகவும் உச்சரிப்பு சுத்தமாகவும் பேசுகிறார். மானாட மயிலாடாவில் வந்ததால் அவரைக் குறைவாகப் பேசக்கூடாது...
போகட்டும்.
கிரேசிக்கு வாழ்த்துகள்...ஒரு கவிதையைப் போட்டிருக்கலாம்
--டில்லி பல்லி
Post a Comment