பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 28, 2009

சொல்வனம் இசைச் சிறப்பிதழ்

அன்புள்ள இட்லிவடை,

பின்வரும் விளம்பரத்தை உங்கள் தளத்தில் வெளியிடமுடியுமா? (இணைத்திருக்கும் படத்தோடு சேர்த்து). உண்மையிலேயே இந்த இதழ் தயாரிப்பில் வேலை பெண்டு நிமிர்த்தி விட்டது. நிறைய வாசகர்கள் படித்தால் உற்சாகமாக இருக்கும்.

அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்
இட்லிவடை வாசகர்கள் பற்றி உங்களுக்கு இப்படி ஓர் எண்ணம் இருப்பது... நான் என்ன செய்ய இதோ நீங்க அனுப்பிய விளம்பரம் கீழே....


அன்புள்ள இட்லிவடை வாசகர்களுக்கு,

25-12-2009 சொல்வனம் இதழ், இசைக்கலைஞர்களின் பேட்டிகள், இசைக்கலைஞர்கள் குறித்த கட்டுரைகள், இசை தொடர்பான சிறுகதைகள் என இசைச்சிறப்பிதழாய் மலர்ந்துள்ளது. படித்துத் தங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.




அன்புடன்,
சொல்வனம் ஆசிரியர் குழுவினர்
http://www.solvanam.com

இட்லி வடை போல அரசியல் செய்யாமல் - சங்கீதத்தில் அரசியல் கலக்காமல் - கலக்க வாழ்த்துகள்.


7 Comments:

Anonymous said...

படித்தேன். லலிதா ராமின் கட்டுரை (பேட்டி)மட்டுமே என்னைக் கவர்ந்தது.

- கோபால்சாமி

பாரதி மணி said...
This comment has been removed by the author.
பாரதி மணி said...

இசையில் ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இந்த சொல்வனம் இதழைப்படிக்கவேண்டும். 3-D கலர் கண்ணாடி போட்டிருந்தால்,அதை கழட்டி வைத்துவிட்டு படிப்பது நலம்.

ஆசிரியர்குழுவுக்கும், சேதுபதி அருணாசலத்துக்கும் என் நன்றி. டி.கே. பட்டம்மாள், தி.ஜா.கதை, சுகா கட்டுரை என அனுபவித்து படிக்கவேண்டியவை.

கானகம் said...

வாழ்த்துக்கள் சொல்வனம் குழுவிற்கு,

இன்னும் எல்லாக் கட்டுரைகளையும் படித்து முடிக்கவில்லை..

ஆனால் படித்தவரை,

பட்டம்மாள் ஒரு சமூக நிகழ்வு,

” எப்படிப் பெயரிட” என்ற இளையராஜாவின் ஆல்பம் குறித்த கட்டுரை,

மற்றும் தேசிகன் எழுதியுள்ள ”கல்யாணி” - என்ற கதை ஆகிய மூன்றும் மிக அருமை. கல்யாணீயில் ( பத்திரிக்கைச் செய்திக் கட்டிங்கைக் கொடுத்து கதையை ஆரம்பிப்பது என்பது மிக வித்தியாசமாய்த் தெரிந்தது...மெலிதான் நகைச்சுவை இழையோட நன்றாய் இருந்தது கட்டுரை..

அவசியம் படியுங்கள்.

அன்புடன்,

ஜெயக்குமார்

மகேஷ் said...

சொல்வனத்தில் அரியக்குடியைப் பற்றி மூன்று இசை ஜாம்பவான்கள் சொல்லியிருக்கும் விஷயங்களைக் கட்டுரையாகத் தந்திருப்பது உண்மையிலேயே பொக்கிஷம். இந்த இண்டர்நெட் யுகத்தில் படிக்கக் கிட்டாத ஒன்று.

மிக்க நன்றி.

கௌதமன் said...

சொல்வனத்திற்கு 'எங்கள்' வாழ்த்துக்கள்.
engalblog

R. Jagannathan said...

Dear IV, you have done a wonderful service by intrioducing me to the Solvanam site. Thank you very much and my best wishes to the authors / editors of Solvanam. I just read one Ulaga Sirukathai but I can't say I enjoyed the translation. Yet, it is an opportunity to read short stories in Tamil by writers worldwide. Thi. Janakiraman's story is written with a wonderful flow just like the subject it handles - Music. Thanks again - R. Jagannathan