பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 29, 2009

சவாலே சமாளி! - ஸ்ரீவத்சன்

தேசத்தை எதிர்நோக்கியுள்ள சவால்களை காங்கிரஸ் கட்சியால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்” என்று பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்கள் பேசியுள்ளார். நேற்றைய தினம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் பிரதமர், அவரின் தலைமை மற்றும் பல்வேறு மட்ட்த்திலான கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் அவர் பேசியதாவது, தேசத்தை தீவிரவாதம், மதவாதம், நக்ஸலிசம், மற்றும் பிராந்திய வேறுபாடுகள் போன்ற பல சவால்கள் சூழ்ந்துள்ளன. அவற்றைத் திறமையாக எதிர்கொள்ள காங்கிரசாலேயே முடியும் என்று பேசியுள்ளார். இதனை ஆமோதித்து தியாக தீபம், அன்னை சோனியாவும் உரை நிகழ்த்தினார்.


அவர் சொன்னது எந்த சவால்களைப் பற்றியோ என்னவோ நமக்குத் தெரியாது. ஆனால் நமக்குத் தெரிந்து காங்கிரஸ் எதிர்கொண்ட சவால்களை இங்கு பார்ப்போம்..

அக்காலத்தில் நம் முன்னோர்கள், “வீட்டைக் கட்டிப்பார், கல்யாணத்தை நடத்திப் பார்” என்று அனுபவத்தை பழமொழியாகச் சொல்லிவிட்டுப் போயினர். இன்று அவர்கள் இருந்திருந்தால், அரசாங்கத்தை நட்த்திப் பார் என்றும் சொல்லிவிட்டிருப்பர். அவ்வாறான சவால்கள் நிறைந்த ஒரு காரியம்தான் அரசாங்கத்தை நிர்வகிப்பது. அவ்வாறான ஒரு சவாலான விஷயத்தைத்தான் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக காங்கிரஸ் நட்த்தி வருகிறது. ஒன்றா, இரண்டா..எவ்வளவு சவால்கள், பிரச்சனைகள், இடையூறுகள்?? அவற்றையும் திறம்பட நிர்வகித்தாலொழிய இன்றுவரை கல்லா கட்டுவது கடினம்.

1999 இல் காங்கிரஸ் ஆட்சியமைத்த விதமே சவாலானதுதான். முதலில் ஜனாதிபதியிடம் 273 எம்.பிக்களின் ஆதரவு இருப்பதாக ஒரு அண்டப்புளுகை அவிழ்த்து விட்டு, பிறகு அது இல்லையென்றான பிறகு மூக்குடைபட்ட்தில் துவங்கி, பிரதமராக வருவதற்கு அயல்நாட்டுப் பின்னணியால் ஏற்பட்ட சட்டச் சிக்கல்களை ஜனாதிபதி விவரித்ததும், இயலாமையைத் தியாகமாகச் சித்தரித்து, அதை இன்றுவரை நிலைநாட்டிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சவால்.



இமாலயத் திருடன் குவாத்ரோக்கியை விடுவிக்கப் பட்டபாடு கொஞ்சமா நஞ்சமா? தேசிய ஜனநாயக்க் கூட்டணியால் முடக்கப்பட்டிருந்த அவனது அயல்நாட்டு வங்கிக் கணக்குகளை விடுவித்த்திலிருந்து, இண்டர்போல் அவனைக் கைது செய்ததை மறைத்து, நீதிமன்றத்தில் அவர் உத்தமதோத்தமர் என்று தோத்திரம் சொல்லி விடுவித்தது வரை எவ்வளவு கஷ்டங்கள்?? சிபிஐ மீது குவாத்ரோக்கி வழக்குத் தொடுக்காத குறை! இதெல்லாவற்றையும் சமாளிப்பதென்பது என்ன சாதாரண காரியமா?

அடுத்த்தாக பிரதமர் குறிப்பிட்ட விஷயம் தீவிரவாதம். இது மிகப்பெரிய சிக்கலான சவால். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின மற்றும் சுதந்திர தின உரைகளில் மட்டும் தீவிரவாத்திற்கெதிரான இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு, பிறகு அடுத்த தாக்குதல் நிகழும் வரை மதச்சார்பின்மையை நிலைநாட்டும் பொருட்டு அமைதி காப்பதும், பிறகு கண்டனம் தெரிவிப்பதும் எவ்வளவு சவாலான காரியம் என்பதை செய்து பார்த்தால்தான் அதன் வலி தெரியும்.

அடுத்து மதவாதம். பெரும்பான்மையான ஹிந்துக்களின் ஓட்டுவங்கியால் பதவிகளை அடைந்து விட்டு, பிறகு அவர்களை மட்டம் தட்டுவது ஒரு சவால்தான். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதனை திறம்பட செய்வதில் வல்லவர்கள். ராமர் ஒரு கற்பனை கதாபாத்திரம், ராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து விட்டு, எதிர்ப்பு வரும்போல் தெரிந்ததும், இமயமலை என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் ராமரும் உண்மை, ராமாயணமும் உண்மை என அதே சுப்ரீம் கோர்ட்டில் அந்தர் பல்டி அடிப்பதென்பது ஒரு சவாலில்லை என்று சொல்பவர்கள் அடி முட்டாள்களாகத்தான் இருப்பர். பிறகு அடித்த பல்டிக்கு வலு சேர்க்கும் பொருட்டு, தஸரா பண்டிகையில் வில் அம்பு ஏந்தி ராவணன் பொம்மையின் தலையை சீவி, ஹிந்து வாக்குவங்கியை ஸ்திரப் படுத்திக் கொண்டனர்.


அதே போல் தீவிரவாத்த்திற்கெதிரான நடவடிக்கை எடுத்தால் சிறுபான்மையினர் ஓட்டுக்கள் போய்விடுமென்று, தீவிரவாத்தினை சிறுபான்மையினரோடு, குறிப்பாக இஸ்லாமியரோடு தொடர்பு படுத்துவதென்பது காங்கிரஸாருக்கே உரித்தான கலை.


அடுத்து நக்ஸலிசம். நாட்டை எதிர்நோக்கும் சவால்களில் தீவிரவாதமும், நக்ஸலிசமும் தனித்தனியாக்க் கூறப்பட்டிருப்பதால், காங்கிரஸ் அரசைப் பொருத்தவரை நக்ஸலிசம் தீவிரவாத்தில் சேராது என்பது புலனாகிறது. ஏற்கனவே அரசில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர் பெருமக்கள் இதனைக் கூறியுள்ளனர். வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்ட்த்தினால் உருவாவதே நக்ஸலிசம். அதையும், காஷ்மீர தீவிரவாத்த்தினையும் ஒன்றாக பாவிக்க்க் கூடாது என்றெல்லாம் நக்ஸலிசம் எவ்வாறு காந்தியத்தை பேணுகிறது என்று அறிக்கைகளின் வாயிலாக அளந்து தள்ளினர். கேவலம், ஆயுதமேந்தி, அங்குமிங்கும் மக்களையும், காவலர்களையும் கொன்று குவித்து, ஜனத்தொகையை குறைக்க முயலும் அஹிம்சா கூட்டத்தைப் போய் பொதுமக்களும், எதிர்க்கட்சிகளும் தீவிரவாதிகளென்று நினைக்கிறார்கள். இந்த எண்ணத்தை மாற்ற முனைவது எவ்வளவு பெரிய சவால்?

அனுதினமும், கம்யூனிஸ்டுகள் எப்போது காலை வாருவார்களோ என்று பயந்து பயந்து சுமார் நாலரை வருடம் ஆட்சி நட்த்துவது என்பது நரக வாழ்விற்கு ஒப்பானது. நம்து ஆட்சியில் நல்லது செய்ய எண்ணுவதே அரிது. அதிலும் தப்பித் தவறிப் போய் அநிச்சையாக எதாவது செய்ய முனைந்தாலும் கம்யூனிஸ்டுகளின் கெடுபிடி இருக்கிறதே அப்ப்ப்பா!! தவிர அமைச்சரவையில் நடக்கும் மாற்றங்கள் வேறு வெளியிலிருப்போர் சொல்லித்தான் தெரிய வேண்டிய நிலை என்பது மிகவும் கொடுமை. இதுகூடவா சவாலில்லை?



அடுத்து கூட்டணிக் கட்சியினர் செய்யும் அட்டூழியங்களையும் மீறி ஆட்சி நட்த்துவதை என்னவென்று சொல்வது? ஸ்பெக்ட்ரத்தில் முறைகேடுகள், சேது சமுத்திரத் திட்ட்த்தில் முறைகேடுகள், சிபு சோரனின் தலைமறைவு என எவ்வளவு விஷயங்களை சமாளிக்க வேண்டியிருக்கிறது? இடையிடையே தீவிரவாதிகளின் குடும்பத்தாருக்காக வேறு தூக்கம் பசி இழக்க வேண்டியிருக்கிறது. இதைக் கூடவா சவாலென்று ஒத்துக் கொள்ள மாட்டீர்கள்??



இவற்றையெல்லாம் விட மிகப்பெரிய சவால், இட்துசாரிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம்தான். அப்பப்பா!! போதும் போதுமென்றாகிவிட்ட்து அரசைக் காபந்து செய்வதற்குள். எப்படியோ ஒருவிதமாக சமாஜ்வாதி கட்சியிடம் கெஞ்சிக் கூத்தாடி, அடுத்தவர்களுக்கு கவர் கொடுத்து, கழக வழியில் கவர் செய்யுங்கள் என்று சொன்னால், கேமராவுக்கு முன் கொடுத்து மாட்டிக் கொண்டதோடு மட்டுமல்லாமல், பாராளுமன்றத்தில் பாஜக வினர் வேறு கொடுத்த கவரிலிருந்தவற்றைக் கொட்டிக் கலவரப் படுத்திவிட்டனர். எப்படியோ, குப்பற கவிழ்ந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லையென்று ஆஸ்வாசப் படுத்திக் கொள்வதற்குள் அடுத்த தேர்தல் வந்து விட்ட்து.



அடுத்து தேர்தலையும் வெற்றி கொண்ட பின் அடுக்கடுக்கான சவால்கள். மும்பை தாக்குதல், சீன ஊடுருவல், ஆந்திர முதல்வர் நாற்காலிப் பிரச்சனை என எண்ணிலடங்காத பிரச்சனைகளுக்கு திறம்பட தீர்வு கண்டாயிற்று. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போன்றதானதொரு பிரச்சனை தெலங்கானா. சந்திரசேகர ராவின் உண்ணாவிரத்த்தைத் தொடர்ந்து, பா.சிதம்பரத்தை விட்டு, தனி தெலங்கானா உருவாக்குவோமென்று குழந்தையைக் கிள்ளி விட்டு, எதிர்த்த லோக்கல் காங்கிரஸாரைத் திருப்தி படுத்த, இப்போதைக்கு ஒன்றுமில்லை என தொட்டிலையும் ஆட்டி விட்டாகி விட்ட்து. விளைவு, ஆந்திரா பற்றி எரிகிறது. இதை விட திறமையாக எப்படி ஒரு கடினமான சவாலை சமாளிப்பது? இந்த சவால் போதாதென்று, ஆந்திர கவர்னர் வேறு. நல்லகாலம் அவரே ராஜிநாமா செய்து, சவாலை சங்கடத்தில் ஆழ்த்தாமல் விட்டரோ பிழைத்தோம்.



இதற்கிடையே முல்லை பெரியாற்று விஷயம் வேறு. நடுவே கலகமியற்ற முயன்ற கழகத்தை, சிறு சிபிஐ ரெய்டின் மூலம் சிக்க வைக்க முயன்றதால், கழகம், கலகத்தை விட்டு சற்றே கமுக்கமானது. அத்வானி இத்தகைய சவால்களை சந்தித்தாலல்லவா தெரிந்திருக்கும் அரசு நடத்துவது எவ்வளவு சிரம்மென்று?? இது தெரியாமல், நான் வீக்கான பிரதமரென்று பிதற்றித் திரிகிறார்.



இப்படியாக நமது பார்வையில் பல சவால்களைச் செவ்வனே சமாளிக்கும் கட்சியாக காங்கிரஸ் விளங்குகிறது. இப்போதாவது பிரதமர் சொல்வதை ஒத்துக் கொள்ளுங்கள். அரசு எதிர்நோக்கும் சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள காங்கிரஸ் தவிர ஏதாவதொரு கட்சியால் முடியுமா?

- ஸ்ரீவத்சன்


14 Comments:

(-!-) said...

அட! இட்லிவடையில் இன்னும் ஒரு விருந்தினர்!!

ஸ்ரீவத்சன் கைங்கர்யம் தொடர வாழ்த்துகள்!!
:>

Madhavan Srinivasagopalan said...

After hearing PM's words y'day.. Though I laughed @ it initially, I really thought of the statement.. That is 100 % reflected in this article.

Thanks to the author & publisher.


"அடுத்து தேர்தலையும் வெற்றி கொண்ட பின் அடுக்கடுக்கான சவால்கள். மும்பை தாக்குதல், "
----> I think mumbai attack was well before the last lok-sabha elections.

கானகம் said...

அருமையான கட்டுரை.. ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் படிக்க வேண்டிய கட்டுரை. ஒவ்வொரு இந்தியனும் தான் எவ்வளவு மோசமாக காங்கிரஸால் சுரன்டப்படுகிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள இதை அவசியம் படிக்க வேண்டும்..

புது விருந்தினரின் ஆரம்பமே அட்டகாசம்.. மென்மேலும் இதுபோல நல்ல நல்ல கட்டுரைகளை அளிக்கட்டும்..

Baski said...

நீங்க என்ன புலம்பினாலும், காங்கிரஸ்-கு மாற்றாக ஒரு கட்சியாக பா.ஜ.க வை சொல்ல முடியாது. வாஜ்பாய் விலகியதோடு கட்சியின் வருங்கலமும் 'ரெடியர்ட்' ஆகி விட்டது.

மன்மோகனை விட சிறந்த பிரதமராக அத்வானி இருந்திருக்க முடியாது. மன்மோகன் நாற்காலியின் பெரிய பலம் கட்சி/சோனியா அம்மையார்.
அத்வானியின் பெரிய பலவீனம் அவர் கட்சி/ மற்ற தலைகள்.


வாஜ்பாய்க்கு வலது கரமாக அத்வானி இருந்தார். ஆனால் அத்வானிக்கு அப்படி ஒரு ஸ்திரமான 'தலை' துணை இல்லை.

தமிழகத்தில் எப்படி அ.தி.மு.க. கட்சி எப்படி நாறி கொண்டிருக்கிறதோ, அதே போல் மத்தியில் பா.ஜ.க போய் விட்டது.

வித்தியாசம்.
- பா.ஜ.க வில் நிறைய தலைகள். அதனால் நிறைய தலைவலிகள். (நிறைய கருத்து/கொள்கை வேற்றுமைகள்.)
- அ.தி.மு.க வில் தலைவர்கள் இல்லை. இருக்கும் தலைகளுக்கு கொள்கையும் இல்லை; சரக்கும் இல்லை. நல்ல காலில் விழுவார்கள். ஒட்டுகாக மக்கள் காலில். சீட்டுகாக அம்மா காலில். அம்மாவிற்கும் இந்த மாறி ஆட்கள் தான்பிடிக்கும்.

பா.ஜ.க./அ.தி.மு.க ரெண்டு கட்சியும் மீண்டும் ஆட்சிக்கு வருவது அவ்வுளவு சுலபமல்ல.


காங்கிரஸ் ஆட்சியில் நிறைய ஓட்டைகள் உள்ளது. குவத்ரோச்சி அசிங்கமான ஓட்டை. அவரின் இயலாமையை காட்டும் ஒரு விஷயம்.
இதற்காக அவரின் மற்ற முயற்சிகளை மறைத்து விடுவது இட்லியின் பா.ஜ. கண்ணாடி தான். கொஞ்சம் கழற்றி வைத்து பார்க்கவும்.

cho visiri said...

Shri Srivasthanjee would do well to analyse the BJP's decision to join hands with Sibu Soren (yes - the same person who went underground while he was a CabinetMinister in MMS cabinet in the last tenure and remember the hues and cries BJP raised in those days ).

For my part, i foresee a further weakened party in BJP.
It is a pity that Russy Modi (or Moody) was forthright in recording his view - however personal it turned out to be-.
A weak BJP is far better than a BJP in the company of likes of Sibhu Soren.

Anony8 said...

What have they done to India in this 125 years is total anarchy full of corruption and Divide and Rule.

Cong. is taking us to a crypto Islamo-Evangelist Country. If they are around for 20-25 years more we will become an African country fighting each other for reservation and other resources.

கௌதமன் said...

வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை - மிகவும் சரியான கருத்துகள் கொண்ட கட்டுரை. அருமையாக உள்ளது. கட்டுரை ஆசிரியருக்கு 'எங்கள்' பாராட்டுக்கள்.

பாலாஜி சங்கர் said...

நீங்கள் சொல்வது மிகவும் சரி 


தங்கள் கருத்து நன்றாக உள்ளது 

வலைஞன் said...

இதே கட்டுரையை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சி மீதும் எழுத முடியும்.

காங்.50௦ ஆண்டுகள் ஆண்டதில் அதற்கு மதிப்பெண் -50.

பா ஜ க 10 ஆண்டுகள் ஆண்டதில் அதன் மதிப்பெண் -10

அவ்வளவுதான் வித்தியாசம் !!

சீனு said...

அட்டகாசம்...

vethanarayanan said...

Frankly speaking , any party that comes to power nowadays, has too many "compulsions" due to baggage that they are forced to carry like corrupt politicin and coalition partners orthogonal principles.

Nothing can be done to congress even if Lord Krishna gets mandate to rule India, he can be toppled in the next election with Gandhi family's white colored skin.

ஸ்ரீராம். said...

சாதனைப் பட்டியல்ல ஏதாவது விட்டுப் போய் இருக்கும் நாம எடுத்து இயம்பலாம்னு பார்த்த அதுக்கு வேலையே வைக்கலையே

பெசொவி said...

இதெல்லாவற்றையும் விட ஒரு சாதனை - இதற்கெல்லாம் மதிப்பு கொடுத்து ஒரு பதிவு போட வைத்துவிட்டார்களே, காங்கிரசின் மிகப் பெரிய சாதனை இதுதான்.

Vinoth Thiyagarajan said...

ஆஹா! அருமையான கட்டுரை, சேவை தொடர வாழ்த்துகள்