பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 28, 2009

ஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று(திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நடந்தது.

இதையொட்டி அதிகாலை 3.45 மணி அளவில் நம்பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளி மாலை மற்றும் ரத்தின அங்கி அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ரெண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிக்கோட்டான் வாசல் வழியாக மூன்றாம் பிரகாரம் எனப்படும் தங்க கொடி மரம் அருகே வந்தார்.

அங்கிருந்து பரமபத வாசல் பகுதிக்கு வரும் நம்பெருமாள் விரஜாநதி மண்டபத்தில் பட்டர்களின் வேத விண்ணப்பங்களை கேட்டருளினார்.

அதிகாலை 4.45 மணி அளவில் பரமபதவாசல் என்னும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு காத்து நிற்கும் பக்தர்கள் வெள்ளத்துடன் நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சந்திரபுஷ்கரணி கரையை சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மணல்வெளி வழியாக நான்காம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்திற்கு காலை 5.30 மணிக்கு திருக்கொட்டகை வழியாக வந்து சேர்ந்தார். தொடர்ந்து காலை 6.30 மணி வரையில் அங்கு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அங்கு நடைபெறும் சாதரா மரியாதைக்கு பின்னர் காலை 7.30 மணி அளவில் நம்பெருமாள் திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சொர்க்கவாசல் திறப்பு அன்று மூலவர் ரெங்கநாதருக்கு முற்றிலும் நல்முத்துக்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முத்தங்கி அணிவிக்கப்படும். இந்த முத்தங்கியில் 7 நாட்களுக்கு ரெங்கநாதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

உற்சவர் நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) இரவு 12 மணிக்கு புறப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1.30 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஸ்ரீரங்கம் நகரம் முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது.

விழாவை முன்னிட்டு இரவு பகல் 24 மணி நேரமும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

முன்னதாக நேற்று பகல்பத்து திருநாளின் நிறைவு நாளான பத்தாம் திருநாள் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு அர்ச்சுன மண்டபத்திற்கு காலை 7 மணிக்கு வந்து சேர்ந்தார். அர்ச்சுன மண்டபத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

அதன்பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு ஆரியபட்டாள் வாசலுக்கு வந்து அங்கிருந்து திருக்கொட்டார பிரகாரம் வழியாக வலம் வந்து இரவு 7 மணிக்கு கருடமண்டபம் வந்து சேர்ந்தார்.

அங்கு நம்பெருமாளுக்கு சிறப்பு திருவாராதனங்கள் நடந்தது. இரவு 9 மணி அளவில் மூலஸ்தானத்திற்கு சென்றடைந்தார்.


பொதிகை தொலைக்காட்சியில் இன்று காலை மூன்று மணிக்கு ( திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம்) இரண்டு சொர்க்கவாசலையும் திறந்து அசத்தினார்கள்

12 Comments:

Anonymous said...

ka ka

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

செல்வோருக்கு சொர்கம் நிச்சயமா..?

வேதநாராயணன் said...

Thyaankyou for the pictures. I missed the telecast but saw it in your posts.

மிளகாய் பொடி said...

வைகுண்ட ஏகாதசி தவிர இன்று இன்னொரு விசேஷம் மொஹரம் !!!

Anonymous said...

On Namo narayana:

All fine. Why everybody says "Srirangam Nagaram" Why it is not complete "Srirangam Nagaram, Tiruchi"?

Right from the run movie where the hero and comedian is portrayed as they are from srirangam. thats fine. but in the bus they come, it would be srirangam - chennai. Where in the earth, there is a bus service like that? also many people from srirangam area when talking about the city they come from, they stop it at srirangam.

no wonder trichy is not being developed. Everybody should fight and make srirangam temple, the largest temple in india (next only to combodia temple) and thiruvanaikaval to be brought under UNESCO (tamilnadu endownment board is very poor) if temple is good, then only city will be developed. so many encroachments inside/outside the temple. these things needs to be cleared.

பெசொவி said...

//பொதிகை தொலைக்காட்சியில் இன்று காலை மூன்று மணிக்கு ( திருவல்லிக்கேணி, ஸ்ரீரங்கம்) இரண்டு சொர்க்கவாசலையும் திறந்து அசத்தினார்கள் //

//தமிழ் வெங்கட் said...
செல்வோருக்கு சொர்கம் நிச்சயமா..?//

இது குறித்து சற்று விளக்கமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அது சொர்க்க வாசல் அல்ல, பரமபத வாசல். வைணவ சித்தாந்தப்படி, புண்ணியம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் சுவர்க்கம். பாவம் செய்த ஆத்மாக்கள் வாழும் இடம் நரகம்.

இவை எல்லாவற்றையும் விட உயர்ந்த இடத்தில் இருப்பதுதான் பரமபதம். இதை வைகுண்டம் என்றும் அழைப்பார்கள். இங்குதான் ஸ்ரீமன் நாராயணன் தன்னுடைய திவ்ய மஹிஷியான ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் நித்ய வாசம் செய்து வருகிறார். ஒரு ஆத்மா, தன்னுடைய புண்ணிய பாவங்களை எல்லாம் விட்டு ஒழித்தபின் ஸ்ரீமன் நாராயணனுடைய கருணையாலே, அந்த உயர்ந்த ஸ்தானமாகிய பரமபதத்தை அடைகிறான் என்று வைணவ சித்தாந்தம் கூறுகிறது.

சற்று விரிவாகக் கூறினால், சுவர்க்கம் சென்ற ஆத்மாக்களும் கூட மறுபடியும் இந்த பூமிக்கு வந்து பிறப்பெடுத்து திரும்பவும் கஷ்டப் பட நேரிடும். ஆனால், பரமபதத்தை அடைந்து விட்ட ஆத்மா ஒரு போதும் பூமிக்கு மீண்டும் வருவதில்லை. அது எப்போதும், அங்கேயே இருந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணனுடைய பாதங்களில் சேவை செய்து மகிழ்வோடு இருக்கிறது.

அதை நினைவூட்டும் விதமாகத்தான் இந்த பரமபத வாசல் திறப்பு ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் எல்லா வைணவ திருக்கோயில்களிலும் விசேஷமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

vethanarayanan said...

I read there is no vaikunda ekadasi next year. Anyone can clarify?

பெசொவி said...

//I read there is no vaikunda ekadasi next year. Anyone can clarify?
//

Yes, there is a chance. But in 2011, we may have two Vaikunda Ekadasis. Its because, the Vaikunda Ekadasi is based on the month of Margazhi, which is spread between December and January. But considering the tamil year (From Chithirai to Panguni), every year, we will have Vaikunda Ekadasi.

cho visiri said...

Shri/Smt Vedanarayanan said,
//I read there is no vaikunda ekadasi next year. Anyone can clarify?//

Peyar sollavirumbavillai said..
//es, there is a chance. But in 2011, we may have two Vaikunda Ekadasis.//

I beg to differ from Peyar solla virumbavillai.

As per Kalnairnay ( A panchangam published in several Indian languages apart from English), in 2010, on 17 of December , 2nd of Margazhi, Vaikunda Ekadesi falls. In this panchangam, it is mentioned as Mokshada Ekadesi. (incidentally Mohurram falls on this day, as well).

But as our friend said, there may be no vaikunda ekadesi in a particular calender English year. This is because, Margazhi 1st to 29th (or 30th as the case may be) may fall on any day between 15th of December and 14th of the following month -Janufary.

R. Jagannathan said...

For those who do not know but interested - Please visit . You can seep hotos of 'Today's events 'and the archives of previous days' functions. - R. Jagannathan

R. Jagannathan said...

My message misses the main item - reference to the site Srirangapankajam. com. Was it edited out? If so, the entire message could have been omitted. - R. Jagannathan

சுடரொளி said...

வைகுண்ட ஏகாதசி பற்றி செய்திகள், படங்கள் போட்டதற்கு ரொம்ப நன்றி. சந்தோஷம்.

இதற்கு நான்கு நாள் பின், திருவாதிரைத் திருநாள் வந்தது (ஜனவரி 1). தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும், குறிப்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் மிக விமரிசையாகக் கொண்டாடும் திருநாள். நடராஜரின் ஆனந்த நடனத்தை முனிவர்களும், உலகம் முழுதும் தரிசித்த நாள். அது பற்றி செய்தி வெளியிடவில்லையே :(( இனிமேல் சிவன் கோயில் திருவிழாக்களையும் நினைவில் வைத்துக் கொண்டு இட்லிவடை வாசகர்களுக்கு ஞாபகப் படுத்துங்க!