கடந்த சில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விகளால் வெறுப்படைந்து மனமுடைந்த பாஜக, ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெறும் பதவிக்கான வேள்வியில், தனது கொள்கைகளை அவிர்ப்பாகமாகக் கொடுத்து பதவி வரம் பெற முன்வந்துள்ளது.இந்த வேள்வியில் பாஜகவிற்கு வரமளிக்கும் தேவாதி தேவனாக ஷிபு சோரன் காட்சி தருகிறார்.
81 இடங்கள் கொண்ட ஜார்கண்ட் மாநிலத்தில், ஐந்து கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இவற்றில் பாஜக கூட்டணி 20 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 25 இடங்களிலும், ஷிபு சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 18 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட்டாலும், ஷிபு சோரனின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆட்சியமைக்குமளவிற்கு எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், குழப்பங்களும், குதிரை பேரங்களும் நடைபெற்று வருகின்றன.
எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், சோரனுடன் கூட்டணி சேர்ந்து தனது விட்டுப் போன பழைய உறவை புதுப்பிக்கும் முயற்சியில் இறங்கியது. இதன் காரணமாக, சோரனுடன் சேர்ந்து மதச்சார்பற்ற ஆட்சியை அமைப்போம் என கூறத் துவங்கியது காங்கிரஸ். ஆனால் முதல்வர் நாற்காலியை சோரனுக்கு விட்டுக் கொடுக்கும் நிலையில் காங்கிரஸ் இல்லை. சோரனுக்கும் இதே நிலைதான். நான் எப்போதுமே கிங்தான், கிங் மேக்கர் இல்லை என பஞ்ச் டயலாக் பேசிவிட்டு, எந்த கட்சியுமே எனக்கு எதிரியில்லை. என்னுடன் ஒத்துப் போகும் கட்சியுடன் சேர்ந்து ஊழலற்ற ஆட்சி அமைப்பேன் என்று பாஜகவைக் குறிவைத்து வசனம் பேசினார். பேசிய வசனத்திற்கு இப்போது தக்க பலன் கிடைத்துள்ளது.
காங்கிரஸும், ஷிபு சோரனும் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் கூட்டாளிகள். சென்ற மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சோரன் மத்திய அமைச்சராக இருந்தார். பின்பு அவருடைய செயலாளர் சசிநாத் ஜாவை கடத்திக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இதன் பிறகு மன்மோகன் சிங் அவர்களின் கடுமையான வற்புறுத்தலுக்குப் பிறகு அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு, தலைமறைவானார். இவர் மீது மொத்தம் 9 கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவற்றில் சுமார் எட்டு கொலை வழக்குகள். இவ்வாறான அஹிம்சையை வலியுறுத்திய காந்தி மஹான் வளர்த்த கட்சி, இந்த அஹிம்சாவாதிக்கு அமைச்சர் பதவி வழங்கி கட்சிக் கொள்கையை நிலைநாட்டியது. இது இவரது முதல் சாதனை. பிறகு அமைச்சராக இருந்த போதே தலைமறைவானது இவரது இரண்டாவது சாதனை. பிறகு தில்லி உயர்நீதி மன்றம், சசிநாத் ஜா கொலை வழக்கில் ப்ராசிக்யூஷன் தரப்பும், சிபிஐ யும் சரியான முறையில் செயல்படாமல், வழக்கை பலவீனமாக்கிவிட்டதாக தனது கண்டனத்தையும் தெரிவித்து, வழக்கிலிருந்து ஷிபு சோரனையும் விடுவித்தது. பிறகு தேர்தலில் போட்டியிடாமலேயே ஜார்கண்ட் மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார். அரசியல் சாசனச் சட்டத்தின் படி பொறுப்பேற்ற ஆறு மாதத்திற்குள் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபை உறுப்பினராக வேண்டும். அவ்வாறு 2009 ஜனவரியில் போட்டியிட்ட ஷிபு சோரன், தேர்தலில் மிகவும் மோசமான முறையில் தோற்கடிக்கப்பட்டார். இவரைத் தோற்கடித்தவர் அரசியலுக்கு மிகவும் புதியவர், கட்சியும் புதிது. அவர் சந்தித்த முதல் தேர்தலே இதுதான். இவ்வாறு முதலமைச்சராக இருக்கும்போதே ஒருவர் தோற்கடிக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை. இவ்வாறான பல சாதனைகளுக்கு உரித்தானவர்தான் இந்த ஷிபு சோரன்.
கடந்த லோக் சபா தேர்தல் மற்றும் சில மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பெரும் சரிவை சந்தித்த பாஜக, இப்பொழுது துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக் கொண்டு சோரனை ஆதரிக்க முனைந்துள்ளது. இதே பாஜக, 2004 ஆண்டு, ஷிபு சோரன் மீதான, 30 ஆண்டுகளாக நிலுவையிலிருக்கும் ஒரு கைது வாரண்டைக் காரணம் காட்டி பாராளுமன்றத்தையே நடக்க விடாமல் அடித்தது. தவிர, இதே ஜார்கண்ட் தேர்தலில் சோரன் தனது கட்சி வேட்பாளர்களாக நக்சல்களைக் களமிறக்கிய போதும் எதிர்ப்புக் குரல் கொடுத்தது. ஆனால் இப்போது பதவி ஆதாயங்களுக்காக, ஒரு கிரிமினல் பின்னணியுடைய, சர்வமும் ஊழல்மயம் என்ற தன்மையுடைய ஒரு நபரை முதல்வராக ஒப்புக் கொண்டுள்ளது.
சோரனுக்கும், பாஜகவிற்கும் கொள்கையளவிலோ அல்லது எந்த விதத்திலும் சிறிதளவு ஒற்றுமை என்பதும் கிடையாது. பாஜக ஆட்சியில் ஊழல் என்பது சொல்லும்படியான அளவில் கிடையாது. ஆனால் அமைச்சராக இருந்த சோரன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன, தவிர பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்தியாவிலேயே தீவிரவாதத்தையும், மாவோயிஸத்தையும் வெளிப்படையாக எதிர்க்கும் ஒரே கட்சி பாஜக. ஆனால் ஷிபு சோரன், இத்தேர்தலில் நக்சலைட்டுகளை தனது வேட்பாளர்களாக களமிறக்கினார். இவ்வாறு பல கொள்கை முரண்பாடுகளை கொண்டுள்ள போதிலும், காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் பொருட்டும், அற்பத்தனமான பதவிகளை அனுபவிக்கும் பொருட்டும், ஒரு நேர்மையான தலைவர்களைக் கொண்ட தேசியக் கட்சி ஒரு கிரிமினலை ஆதரிக்க முன்வந்துள்ளது தேசத்திற்கே மிகவும் தவறான முன்னுதாரணம். இது நல்லதல்ல.
- யதிராஜ்
ஷிபு சோரனை விட தகுதி வாய்ந்தவர் யாராவது இருந்தா சொல்லுங்க
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Saturday, December 26, 2009
யாருக்கும் வெட்கமில்லை!!
Posted by IdlyVadai at 12/26/2009 08:34:00 AM
Labels: அரசியல், செய்தி விமர்சனம், யதிராஜ சம்பத் குமார்
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
மன்னிக்கணும் இது போன இல.கணேசன் பதிவுக்கு//
இங்கு வரலாறு சரியாக சொல்லித்தரப்படுவதே இல்லை... அதனால் வரும் விளைவுகள் தான் இது. இந்த நாடு முதலில் எப்படி இருந்தது இப்போது எப்படி இருக்கிறது மாற்றங்களுக்கான காரணங்கள் என்ன? யார் என்ன செய்தார்கள்? பிற நாடுகளில் அவ்வாறு இல்லையே? ஏன் மாறினார்கள்? ஏன் மாற்றினார்கள்? ஏன் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள்? மாறியவர்கள் என்னத்தை அடைந்தார்கள்? ஏன் வைகுண்ட ஏகாதசி மட்டும் பக்கம் பக்கமாய் பதிவிடுகிறார்கள் முன்னும் பின்னும் வரும் மற்ற கடவுள் சார்ந்த நிகழ்வுகள் ஏன் புகுத்தறிவு கண்களில் படவில்லை? ஏன் இங்கே இவ்வளவு குழப்பம்? குழப்பி மிரட்டி மீன் பிடிப்பவர்கள் யார்?? யார் ??
கேள்விகளுக்கு 5 மார்க் போட்டு வரலாறு சொல்லிக்கொடுத்தால் பிரிச்சிற வேண்டியதுதானே என்றுதான் சொல்வார்கள்.
----------------------------------
இது இந்த பதிவுக்கு::
எனக்கு தெரிஞ்சு தான் சோரம் போனதை பெயராகவே வைத்துக்கொண்டிருக்கும் ஷிபு வை பாராட்ட வேண்டும் :) அவரையே போட்டுடலாம் .. எலிய (தெரிஞ்சே) கோடௌன்ல விட்ட பிரச்சனையில்ல அது உள்ள போய் என்ன பண்ணும்னு தெரியும் மசால் வடை வெச்சு பிடிச்சிடலாம்... வேற ஏதாவதுன்னா????
ஒரு கிரிமினலுக்கு ஏன் 18 இடங்களை கொடுத்திருக்கிறார்கள் மக்கள் என்பதி சிந்திக்க வேண்டிய விஷயம். ஜனநாயகம் ஆபத்தான வழியில் பயணம் செய்துகொண்டிருக்கிறது.
//ஒரு நேர்மையான தலைவர்களைக் கொண்ட தேசியக் கட்சி ஒரு கிரிமினலை ஆதரிக்க முன்வந்துள்ளது தேசத்திற்கே மிகவும் தவறான முன்னுதாரணம். இது நல்லதல்ல.//
”முன்பு ஒரு காலத்தில்” என்று எழுதியிருக்கலாம்.
மிடில் கிளாஸ் மகாஜன் கோடிகளை சேர்த்தது. கோடா,ஜஸ்வந்த் சிங், மற்றும் பல டில்லி பிரதேச தலைவர்களை எல்லாம் பார்த்த பிறகு அப்படி சொல்ல தோன்றவில்லை.
இந்த கோமாளிகள் அரங்கில் இல்லாதிருந்தால் அந்த வெற்றிடத்தில் இந்நேரம் ஒரு நல்ல மாற்று காங்கிரஸ்-க்கு வந்திருக்கும்
அரியான பெண் ருசிகா வழக்கில் தற்கொலைக்குக் காறணமான காவல்துறை அதிகாரிக்கு முறையான தண்டனை பெற்றுத்தர அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளும் முயற்சிக்கிறது.
http://devapriyaji.wordpress.com/2009/12/25/ruchikaa-vs-dinakaran/
ஆனால் தினகரன் அலுவலகத்தில் கமெரா முன் தாக்கிய குற்றவாளிகள் அனைவரும் விடுதலை.
தா.கிருட்டிணன் கொலை வழக்கும் அப்படியே.
தமிழ்நாட்டில் ஒரு நல்ல மீடியாவே கிடையாதா.
Now Every Chief Minister puts blame on other. Politicians wants power and mix with corrupt officials. BJP is no different
Yen, Madhu Koda Irukkiraarey!!
Ore oru varutham, avarukku oru seat
kooda ippo illai!!
ஆம். பல கட்சிகளில் சில கிரிமினல்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில கட்சியில் கிரிமினல்களே பெரும்பாலும் இருக்கிறார்களே அதை என்ன சொல்வது.
//சோரனுக்கும், பாஜகவிற்கும் கொள்கையளவிலோ அல்லது எந்த விதத்திலும் சிறிதளவு ஒற்றுமை என்பதும் கிடையாது.//
இதுதான் அரசியல் மரபு.
கோடாவின் நிர்வாக சீர்கேடுகள் காரணமாகவே அவருக்கு பாஜகவின் சார்பில் நிற்பதற்கு இரண்டாம் முறை தேர்தல் டிக்கெட் வழங்கப்படவில்லை என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும். அதனாலேயே அவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு அவரை பாஜக ஆதரித்தது பதவி ஆதாயங்களுக்காக. அது ப்யூர் அரசியல்.
ஜஸ்வந்த் சிங் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை. தவிர பாஜக வின் மேல்மட்டத் தலைவர்களான வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், மோதி போன்றவர்களும் கறை படியாத கரங்களையுடையவர்கள்.
துக்ளக் ஆசிரியர் கூறுவது போல், இடதுசாரிகளுக்கு அடுத்ததாக பாஜக தான் நேர்மையான தலைவர்ளையுடைய கட்சி என்பதில் எதிர்க்கட்சிகளுக்கே எள்ளளவும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
தவிர இப்போது சோரனின் கட்சியினர் வெற்றி பெற்றுள்ள தொகுதிகளில் பெரும்பாலானவை நக்ஸல் ஆதிக்கம் மிகுந்தவை. இவர் நக்ஸல்களுக்கு தேர்தலில் வாய்ப்பளித்த காரணத்தால் அவருடைய கட்சியினர் வெற்றி பெற்றதில் பெரிய ஆச்சரியமேதுமில்லை. பயத்தின் காரண்மாகக் கூட மக்கள் வாக்களித்திருக்கலாம். தவிர குண்டாந்தடிகளுடன் வலம் வரும் கழகத்தினருக்கே மக்கள் பயப்படும் நிலையில், இயந்திரத் துப்பாக்கிகளுக்கு மக்கள் பயப்படாமலா இருப்பர்?
85 வயதான ஆளுநர் ராசா லீலா செய்கிறார்
கொலை செய்தவர்கள் முதல் அமைச்சர் ஆகின்றனர்
முதல்அமைச்சர் ஆனவர்கள் கொலை செய்கின்றனர்
நீதிபதி கொள்ளை அடிக்கிறார்
போலீஸ் உயர் அதிகாரி கற்பழிக்கிறார்
மருத்துவர்கள் அவயங்களை திருடுகிறார்கள்
அர்ச்சகர் ஆலயத்தை அசிங்கப்படுத்துகிறார்
பணம் வாங்கிக்கொண்டு மக்கள் ஒட்டு அளிக்கின்றனர்
போயே போச்சு!
போயிந்தே!!
Its gone!!!
நம் நாட்டில் தனி மனிதன் மற்றும் பொது ஒழுக்கம், அரசியல் நேர்மை,மற்றும் ஜனநாயகம்
கர்நாடகாவில் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி சேர்ந்த அனுபவம் மறந்து விட்டது, பாவம், பா.ஜ.க.!
//ஜஸ்வந்த் சிங் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகத் தெரியவில்லை//
( நேரடி )பொருளாதார ரீதியாக செய்வது மட்டும் தான் ஊழலா ? இவர் அடித்த பல்டிகள் சாதரனமானவையா ?
இவர்களை விட எனக்கு காங்கிரசை பிடிக்கும் எனெனில் எங்களால் நாட்டுக்கு நல்லது நடக்காது என்பதை சுத்தி வளைத்தாவது சொல்லிவிடுவார்கள். அதனால் ஏமாறுவது ஆவது குறையும்.
ஷிபு சோரன் பற்றி தோல் உரித்து காட்டும் ஒரு article . நான் இவரை அவ்வளவாக follow பண்ணாததால் எனக்கு இவரை பற்றி ரொம்ப தெரியாது.
இதை படித்த பிறகு, நம்ம ஜனநாயகத்தின் மீதே ஒரு சந்தேகம் வருகிறது.
பிஜேபி பற்றி குறை சொல்ல முடியாது. அவர்கள் காங்கிரஸ் மாதிரி ஆகி யுகங்கள் ஆகி விட்டன.
You have forgotten to add that the same Shoren was also involved in"money for support" racket aided by Naramiha Rao and that was brushed under the carpet. Not withstanding all these, it helps for the current generation to know all the facts sequenced by you. At least at one stage people will start realising this.
BJP is no longer the "diffrenet" party which they once claimed. Now they are openly a political front of the RSS which have a entirely different agenda.
Shankar
Post a Comment