இந்தப் படத்தை எனது நண்பர் ஒருவர் பார்க்கக் கொடுத்தார்.. ராமர் அணிலுக்கு கோடு போட்டதையே நமக்கு நம்ப கஷ்டமா இருக்கு, இதில என்ன சார் அணிலுக்கு ட்ரெஸ் போட்டு படமெடுத்திருக்காய்ங்க.." என்று கேட்டதற்கு
"இதில அணில் பேசும்,, பாடும், ஆடும்" என்றார்
என்ன பிரமாதமா இருக்கப்போகுதுனு நினைத்துக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தேன்...
ஆரம்பம் முதல் கடைசிவரை அப்படியே கட்டிப்போட்டு வைத்திருந்தது படம் என்று சொன்னால் மிகை இல்லை. ஒரு கட்டத்தில் அணில்கள் மீண்டும் டேவிட்டிடம் சேர்ந்தால் பாவம் நல்லா இருந்திருக்குமே என நாமே வருத்தப்படும் அளவு திரைக்கதையும், அதைப் படமாக்கிய விதமும்.. யார் டேவிட் என்பதெல்லாம் கீழே..
ஒரு கிறிஸ்துமஸ் மரத்தில் வாழும் ஆல்வின், தியோடர் மற்றும் சைமன் என்ற பெயர்கொண்ட மூன்று அணில்கள் பேசும், பாடும், ஆடும். சிரித்துக் கும்மாளமிட்டு, விளையாடி அந்த மரத்தில் வாழ்ந்து வருகிறது. ஒரு நாள் , அந்த மரம் வெட்டப்பட்டு நகரத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது கிறிஸ்துமஸ் மரமாக ஒரு பெரிய நிறுவனத்தின் லாபியில் நிறுத்த. மூன்று அணில்களும், அந்த மரத்துடன் நகரத்திற்கு வருகின்றன.
அந்த நிறுவனத்தில் இருக்கும் ஒரு இசைத்தட்டு தயாரிக்கும் நிறுவனத்தில் டேவிட் செவில்லி எனப்படும் நமது கதாநாயகனின் ( இசையமைப்பாளன்) இசை காலத்திற்கு ஏற்றதாக இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறான். வருத்தத்தோடு வெளிவரும் அவனது கையிலுள்ள கூடையில் அணில்கள் அமர்ந்துகொண்டு ஒரு பாதுகாப்பான புகலிடம் தேடி அவனது வீட்டிற்குச் செல்கின்றன.
டேவிட்டுக்குத் தெரியாமல் அந்த வீட்டில் நுழைந்துகொள்ளும் அணில்கள் வீட்டை துவம்சம் செய்கின்றன.. இருப்பினும் தங்களது பாடும் திறனால் டேவிட்டைக் கவர்ந்து வீட்டிற்குள் நிரந்தர இடம் பிடிக்கின்றன.பின்னர் அதைப் பிடித்துவிடும் டேவிட்டிடம் தாங்கள் பேசவும், பாடவும் , ஆடவும் முடியும் எனச் சொல்கின்றன. அவனது வீட்டில் தங்கிக் கொள்ள அனுமதிக்கும்படி வேண்டுகின்றன. முதலில் மறுத்துவிட்டு அவைகளை வெளியே அனுப்பிவிடுகிறான். மழைபெய்கிறது..அனில்கள் மூன்றும் இணைந்து அருமையான குரலில் பாடுகின்றன.. ஆச்சரியம் தாளாமல் கதவைத் திறக்கிறான்.. அங்கு இந்த மூன்று அணில்களும் இருக்கின்றன. அவைகளை உள்ளே அனுமதிக்கிறான்.
இந்நிகழ்ச்சிக்குப் பின்னர், தானே உணவும், தங்க இடமும் தருவதாகவும், அவனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளவும் அனுமதி அளிக்கிறான். அதற்குப் பதிலாக அணில்களை பாடல்களைப் பாடவைத்து அதை அவனை வெளியேற்றிய இசை கம்பெனியிடம் வெளியிடக் கேட்கிறான். அந்தக் குரலுக்கு கிடைக்கும் வரவேற்பைப்பார்த்து டேவிட்டும், அணில்களும் வருமானத்தைப் பங்கிடும் ஒப்பந்தம் செய்து கொள்கின்றனர்
அணில்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகிறது. வருமானம் குவிகிறது. இசைத்தட்டு வெளியிடுபவனுக்கும் ( இயான் ஹாக்), இசையமைப்பாளனுக்கும்...இடையில் பிரிவை உண்டாக்கி அணில்களை டேவீட்டிடமிருந்து பிரிக்கிறான். அணில்களும் இயானை நம்பி டேவிட்டை விட்டுப் பிரிகின்றன.
இயான் அவைகளை கிட்டத்தட்ட அடிமைகளைப்போல நடத்தி அவைகளை உலகம் முழுக்க சுற்ற வைக்கிறான். இறுதியில் அவனது இரக்கமில்லாக் குணத்தை உணரும் அணில்கள் டேவிட்டிடம் மீண்டும் சேர்வதுடன் சுபம்..
இதில் அணில்களின் கொட்டம் அவைகள் காட்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் மரத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. அதன் குரலும், உடல் மொழியும் கொள்ளை அழகு.கிட்டத்தட்ட மனிதனைப்போலவே பேசியும், சிந்திக்கவும் செய்கின்றன..
பாடல்கள் வெற்றியடைய ஆரம்பித்த பின்பு மேடையில் பம்பரமாய் சுழன்றாடுகின்றன..
மேடைப்பாடகர்களைப்போல வாயருகில் மைக்வைத்து ஆடிக்கொண்டெ பாடும், ஆடும் காட்சிகளும்..அவைகளுக்கு இயான் வீட்டில் கிடைக்கும் அருமையான விருந்துக்கு அவைகள் செய்யும் ரகளையும் கலக்கல்..
நல்ல இனிமையான இசையுடன், நல்ல ஒளி மற்றும் ஒலிப்பதிவுடன் வந்திருக்கும் இந்த படம் குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்ட பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்
வாசகர்கள் எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!!
வாரா வாரம் வெள்ளிக்கிழமை ஜெய் ஹனுமான் சினிமா விமர்சனம் எழுதுவார் என்று நம்புகிறேன் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, December 25, 2009
வெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - ஜெய் ஹனுமான்
Posted by IdlyVadai at 12/25/2009 02:52:00 PM
Labels: சினிமா, விமர்சனம், ஜெய் ஹனுமான்
Subscribe to:
Post Comments (Atom)
9 Comments:
this movie very bore
விமர்சன நடை படிக்க சுவாரசியமாக உள்ளது.
ஜெய் ஹனுமான்
IV, what do you say about the
scurrilous telecast of the currently shown daily "Nijham"
program at 10 PM on Sun TV channel, spreading misinformation and hatred against Hindus by selectively showing animated scenes, meant mainly to hurt the
feelings of millions of Hindus all
over the country as well as the
holy Ganga and holy Varanasi? I
commend for your viewing the latest article in tamilhindu site on
this subject.
நல்ல விமர்சனம். படத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. படத்தின் யூ டியூப் டிரைலரையும் இணைத்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.விரைவில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் என்று நினைக்கிறேன்.
அருமையான படம்
என்னுடைய பதிவு.
http://butterflysurya.blogspot.com/search/label/Alvin%20and%20the%20Chipmunks
ஜெய் ஹனுமான் வாழ்க!!
அவர் தயவால் நமக்கு நல்ல நல்ல படங்களின் அறிமுகம் கிடைக்கிறது!!
IV is taking refuge in films unable to digest the 'historic victories' of DMK :(
IV,
Any post on vidumurai dina sirappu nigazhchigal aka christmas on Kazhaignar TV.
Why this pseudo secularism?
விமர்சனம் நல்லா இருக்கு. இனிமேதான் படம் பாக்கணும் - விமர்சனத்தைப் படிக்காமலேயே பாக்கும் படங்கள் - குழந்தைகளுக்கான அல்லது குடும்பத்தோட பாக்கக்கூடிய அனிமேஷன் படங்கள்தான். கையோடு டிவிடியையும் வாங்கிர்றது வழக்கம்.
பைதிவே - Squirrel க்கும் Chip Munk- க்கும் ஆறு வித்தியாசங்கள் கூறுக! :-)
Post a Comment