பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, December 17, 2009

ஸ்டார்ட் மியூசிக் !

இதை டிசம்பர் சீசன் என்பார்கள். என்னை கேட்டால் இது ஒவ்வொரு வருடமும் சென்னையில் நடைபெறும் ஓர் உலக அதிசயம் அல்லது ஒரு மிகப்பெரிய இசைக் கோலாகலம். நூற்றுக்கும் மேற்பட்ட சங்கீத சபாக்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களுடன் நடத்தும் நானகு வாரத் திருவிழா. நான்கு வாரமென்று சொன்னாலும் இது கிட்டத்தட்ட ஜனவரியின் மத்தி வரை நீளும். திருவையாற்றில் “பூஷ்ய பகுள பஞ்சமி” அன்று நடைபெறும், தியாக ப்ரம்மத்தின் பஞ்ச ரத்ன கீர்த்தனை உத்ஸவம்தான் இந்த இசைத் திருவிழாவிற்க்கு சூட்டப்படும் மகுடம் போன்றது. இது கிட்டத்தட்ட பொங்கல் சமயத்தில் நிகழும். அத்தருவாயில் அனைத்து சங்கீதக் கலைஞர்களும் அங்கு குழுமி ஒரே குரலில் இசைக்கும் பஞ்ச ரத்ன கீர்த்தனங்களை அனுபவிப்பதற்கு இந்த ஆயுள் போதாது.


இந்த சீசனை முதலில் ஆரம்பித்து வைத்த பெருமை அக்கால காங்கிரஸைச் சேரும்.1927ல் காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண கூட்டம் ஒரு இசைச் சங்கமமாகத் துவங்கியதுதான் இன்று நடைபெறும் இந்த டிசம்பர் சீசன் கச்சேரிகள்.

உள்ளே என்ன நடக்கிறது?. கச்சேரி or Carnatic Music(CM) Concert. நமக்கு புரியாத சங்கீதம் ஆனால் தெரிந்த இசை. ரீதிகௌளை என்றால் தெரியாது. ஆனால் தமிழ்நாடு முழுக்க ரசித்த "கண்கள் இரண்டால்" சுப்ரமணியபுரம் பட பாடல், இந்த ராகத்தில் இலக்கண சுத்தமாக அமைந்த பாடல். தவிர, கவிக்குயில் படத்திலமைந்த சின்னக்கண்ணன் அழைக்கிறான், முதல்வனில் அழகான ராட்சசியே மற்றும் தலையைக் குனியும் தாமரையே என்று ரீதி கெளளையில் அமைந்த திரையிசைப் பாடல்களின் பட்டியல் மிக நீளம்.
நம்ம சினிமா டைரக்டர்கள் மெலடி சாங் என்றாலே, மியூசிக் டைரக்டரைக் கூப்பிட்டு கல்யாணி or சிவரஞ்சனி or மோகனம் என்று ராகத்தை செலக்ட் பண்ணுவதுண்டு.

TV சீரியல் டைரக்டர்கள், டைட்டில் சாங் என்றால், கூப்பிடுவது நித்யஸ்ரீ மகாதேவனை.
பாம்பே ஜெயஸ்ரீ , உன்னிகிருஷ்ணன் , சுதாரகுநாதன் எல்லோ௫ம் உங்களுக்கு தெரிந்த பாடகர்கள். ஆக கர்நாடக சங்கீதத்துக்கு ஒரு அறிமுகம் வேண்டியதில்லை என நினைக்கிறேன். சங்கீத இலக்கணத்திற்கு அறிமுகம் வேண்டுமெனில், இங்கே http://www.mahadevanramesh.com/music.html.


கி.மு,கி.பி மாதிரி CMக்கு அ.மு,அ.பி. அதாவது அரியகுடிக்கு முன், அரியகுடிக்கு பின்.
அரியக்குடி என்றால் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். அந்த காலத்தில் CMல் எல்லா வித்வான்களையும் கூப்பிடுவது அவர் பிறந்த ஊர் பெயர் வைத்து தான். பின்னூட்டத்தில் அப்படி இல்லாத அந்த கால வித்வான் பெயர் எழுதவும். உங்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர் தான். "இருக்கும் ஆனா இருக்காது கேஸ்" , ஓகே ). அரியக்குடி தான், CM கச்சேரிகளுக்கு ஒரு முறையை (கச்சேரி பத்ததி) வகுத்தார். இந்த ஃபாஸ்ட் யுகதிற்கு ஏற்றார் போல், இரண்டரை மணி நேர கச்சேரிதான் அவர் கண்டுபிடிப்பு.

அதற்கு முன்னால் கச்சேரி மாலை ஏழு மணிக்கு துவங்கி விடிய விடிய போகும். என்ன ஆச்சர்யம் என்றால், எல்லா பாடல்களும் தெலுங்கிலேயே இருக்கும். வேறு வழியே இல்லை. பாரதியார், பெரியபுராணம் பாடல்களில் பக்தி இருந்தாலும், பல்லவி, அனுபல்லவி & சரணம் என்ற கட்டமைப்பு இருப்பதில்லை. அது இருப்பது தியாகராஜ ஸ்வாமிகள்,முத்துஸ்வாமி தீக்‌ஷிதர் மற்றும் ஷ்யாமா சாஸ்திரிகள் பாடல்களில்தான்.

எல்லா வித்வான்களுக்கும் இந்த மூவர் தான் தெய்வம். இவர்களை சங்கீத மும்மூர்த்திகள் என்பார்கள். 18ஆம் நூற்றாண்டடில் வாழ்ந்தவர்கள் இந்த மூவரும் தமிழ் நாட்டில் பிறந்தவர்களே. ஆனால் சுந்தர தெலுங்கினில் பாட்டு இசைத்தனர்.

நம்ம சிங்கார சென்னை தான், கர்நாடக இசையின் மெக்கா. அந்த மெக்காவில் உள்ள mosque தான் சங்கீத வித்வத் சபை எனப்படும் ம்யூசிக் ஆகாடமி. கர்நாடக இசைக்காக 1927-ல் துவங்கப்பட்ட முதல் சபா இதுதான். துவங்கியவர் டி.டி.க்ருணமாச்சாரி, இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சர் மற்றும் பிரபல தொழிலதிபர்( TTK Prestige Cooker மற்றும் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் தயாரிப்பு நிறுவனம்). இங்கே வருடா வருடம் வழங்க படும் "சங்கீத கலா நிதி " விருது தான் நம்ம வித்வான்களுக்கு நோபெல் பரிசு. M.S.சுப்புலக்‌ஷ்மி ஒரு கலாநிதி. இருபது வருடங்களாக முன்னணிப் பாடகர், crowd puller ஆக பாடி வரும் சுதா ரகுநாதனுக்கு இன்னும் வழங்க படவில்லை. Minimum 30 வருடங்கள் இசை தொண்டு, ஒரு பத்மஸ்ரீ ,ஒரு பத்ம விபூஷன்,பத்மபூஷன்,கலைமாமணி இவை எல்லாம் வந்து விடும் அல்லது வந்து இருக்க வேண்டும். இங்கே பாடுவதற்கு சான்ஸ் (prime slot) கிடைத்தால், அவர் அந்த வருடத்தில் உள்ள top 30 வித்வான்களில் ஒருவர் என்று நினைக்கலாம் .

இது மாதிரி ஏகப்பட்ட சபாக்கள் . இப்பொழுது 2009ல் யார் யார் பிரபலம் என்று பார்ப்போம்.
ஒரு சின்ன லிஸ்ட் தான். பிரபலம் என்றால் விஜய் மாதிரி அல்ல. கமல்,சிவாஜி மாதிரி.

Top பாட்டு கலைஞர் : சஞ்சய் சுப்பிரமணியம் (போட்டோவில் இருப்பவர்), T M கிருஷ்ணா.
Top வாத்திய கலைஞர் : Mandolin U ஸ்ரீநிவாஸ்.
Top ஜன ரஞ்சக பாடகர் : அருணா சாய்ராம்.
Crowd puller பெண் கலைஞர் : சுதா ரகுநாதன், நித்யஸ்ரீ மஹாதேவன்.
பிரபல மிருதங்க வித்வான் : Vellore, Trichy, Umayalpuram (பின்னூட்டம் , சரியா !).
Emerging star, பாட்டு கலைஞர் : சிக்கில் குருசரண் . Smart looking, மணிரத்னம் இன்னும் இவரை பார்க்க வில்லை என நினைக்கிறேன்.

நீங்கள் பின்னூட்டத்தில் சென்னை மியூசிக் சீசனில் எவ்வளவு concert என்று எழுதவும். சரியான விடைக்கு ராமேஷ் மகாதேவன் எழுதிய ""A gentle introduction to Carnatic Music" புத்தகம் பரிசு.

- வேதநாராயணன்

(மியூசிக் சீசன் பற்றி எழுத ஒப்புக்கொண்ட வேதா நாராயணனுக்கு நன்றி - இவ.)
[ கார்டூன் படம் நன்றி: ஹிந்து,
சஞ்சய் படம் படம் நன்றி : http://thetraces.aminus3.com ]

( சில எடிட்டிங்குடன் இந்த பதிவு மீண்டும் )

25 Comments:

sreeja said...

எங்கே எனது comment ?

sreeja said...

சந்தோஷம்.

SUBBU said...

ஊரோரம் புளியமரம் உளுக்கி விட்டா
சலசலக்கும்!!!!
இது எந்த ராகம்???

SUBBU said...

சரிதான்

கௌதமன் said...

இ வ உங்க பேச்சு கா -- ஏன் என்னுடைய கமெண்டை காணாம அடிச்சீங்க?
அவ்வ்வ்வவ்வ்வ் ....

மர தமிழன் said...

அமைச்சரே,,,, ஸ்ருதி குறைந்துவிட்டதே??

வடை போச்சு மன்னா....

அது போகட்டும், எதுக்கும் அந்த பெரிய குத்துவிளக்கை எடுத்து ஓரம் வையுங்கள்..

ஏன் மன்னா??

வரலாறு முக்கியம் அமைச்சரே ..கச்சேரிகள் ஆரம்பிக்க போகிறது

அதற்கு என்ன மன்னா ??

அந்நியன் வருவதாய் ஒற்றன் சொன்னான்..புரிகிறதா..

க க க போ... ::))

பெசொவி said...

//அந்த காலத்தில் CMல் எல்லா வித்வான்களையும் கூப்பிடுவது அவர் பிறந்த ஊர் பெயர் வைத்து தான். பின்னூட்டத்தில் அப்படி இல்லாத அந்த கால வித்வான் பெயர் எழுதவும்//

ஜி.என்.பி.- அதாவது ஜி.என்.பாலசுப்ரமணியம், டி.கே.ஜெயராமன்,டி.கே.பட்டம்மாள்.எம்.எஸ்.சுப்புலட்சுமி

Anonymous said...

எல்லாக் கச்சேரிகளுக்கும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே - அதுவும் அறுபது வயதை தாண்டியவர்களே - வருகிறார்கள். இதிலும் பாதிப் பேர் காண்டீனில் சாப்பிடவே வருகிறார்கள்.

Unknown said...

//ஊரோரம் புளியமரம் உளுக்கி விட்டா
சலசலக்கும்!!!!
இது எந்த ராகம்???

//

nadoodi ragam

வேதநாராயணன் said...

////அந்த காலத்தில் CMல் எல்லா வித்வான்களையும் கூப்பிடுவது அவர் பிறந்த ஊர் பெயர் வைத்து தான். பின்னூட்டத்தில் அப்படி இல்லாத அந்த கால வித்வான் பெயர் எழுதவும்//

ஜி.என்.பி.- அதாவது ஜி.என்.பாலசுப்ரமணியம், டி.கே.ஜெயராமன்,டி.கே.பட்டம்மாள்.எம்.எஸ்.சுப்புலட்சுமி//

Yes, எம்.எஸ்.சுப்புலட்சுமி என்பதே மட்டுமே கரெக்ட். நான் சொல்லியது "இருக்கும் ஆனா இருக்காது கேஸ்" . அவர் பெயரில் M என்பது மதுரை. அனால் மதுரை சுப்புலட்சுமி என்று கூறுவது இல்லை.

கௌதமன் said...

// எல்லாக் கச்சேரிகளுக்கும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே - அதுவும் அறுபது வயதை தாண்டியவர்களே - வருகிறார்கள். இதிலும் பாதிப் பேர் காண்டீனில் சாப்பிடவே வருகிறார்கள்.//
நான் பார்த்தவரை அப்படி இல்லை. இளைஞர்கள் நிறைய பேர் வருகிறார்கள். இசை பயிலும் அனைத்து சாராரும் வருகின்றனர். காண்டீனில் சாப்பிட கூட்டம் வருகிறது என்பதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் காண்டீனில் சாப்பிட வரும் அப்பகுதி அலுவலர்கள் கூட்டத்தைப் பார்த்திருக்கிறேன். அதற்கு அடுத்தபடி பார்த்தசாரதி சபா காண்டீன். மீதி காண்டீன்களில் கச்சேரிக்கு வந்தவர்கள் கூட்டம்தான் ஜாஸ்தி.

வேதநாராயணன் said...

// எல்லாக் கச்சேரிகளுக்கும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே - அதுவும் அறுபது வயதை தாண்டியவர்களே - வருகிறார்கள். இதிலும் பாதிப் பேர் காண்டீனில் சாப்பிடவே வருகிறார்கள்.//

நிச்சியமாக இல்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை சோமு, காருகுறிச்சி அருணாசலம் அண்ட் lot more famous பெஒப்லே... இவர்கள் எல்லாம் நீங்கள் நினைக்கும் community இல்லை. ஓல்ட் people is true . But youngsters numbers are increasing exponentially.

வேதநாராயணன் said...

//ஊரோரம் புளியமரம் உளுக்கி விட்டா
சலசலக்கும்!!!!
இது எந்த ராகம்???
//

MP3 அனுப்பி வையுங்கள்.
I think புளியமாரி ராகம்.

Ranganathan said...

ஒரு சிறிய விஷயம் :
முத்துசுவாமி தீட்சிதர் பெரும்பாலும் சமஸ்க்ருதத்தில் பாட்டு இசைத்தார்.

Ranganathan said...

சபா கான்டீனில் நன்றாக தின்னலாம், அனால் "அந்த ஒரு தரப்பினர் " மட்டுமே வருகின்றனர். இனி கச்சேரியிலும் 70% இட ஒதுக்கீடு கேளுங்களேன்.

யாருக்கு தெரியுதோ அவர்கள் பாடுகிறார்கள். யாருக்கு புடிக்கிறதோ அவர்கள் டிக்கெட் வாங்கி கேட்க வருகிறார்கள். இந்த இரண்டிலுமே சம்பந்தம் இல்லாதவர்களுக்கு என்ன முனுமுனுப்பு வேண்டியிருக்கு ?

cho visiri said...

//அந்த காலத்தில் CMல் எல்லா வித்வான்களையும் கூப்பிடுவது அவர் பிறந்த ஊர் பெயர் வைத்து தான். பின்னூட்டத்தில் அப்படி இல்லாத அந்த கால வித்வான் பெயர் எழுதvum//

The great Violin Mastero Chowdaiya

But overall, yes you are right, In Musicic Stalwarts of yesteryears were always called with affection - Their native as a prefix.
In this regard, you may notice that One place (be it city/town/village) is prefixed to only one at a time.

One more thing.

In Mridangam (Percussion Category) the author should have added 9ata least it is my wish) Karaikudi Mani and Tiruvarur Bhaktavatsalam.

cho visiri said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said
//ஜி.என்.பாலசுப்ரமணியம்//

Sangeetha kalanidi Madurai GNB.
Similarly, TNS is always known as Madurai TNS.

In this context, it may be interesting to see the great Sangeetha kalanidi Madurai Srirangam Iyengar was living in Manannargudi and the great stalwartwas known for conducting music festival (about five days) in connection with his Gurunathar Poochi Iyengar's Birthday.

I was too a child (or a boy) I still recall a full fledged Kachcheri by a Sangu Vidwan - yes with Sankham he (accompanied by other instrumentalists) gave a full 2 hour concert....(1960s)
(Gopalasamudram West street, Mannargudi, Thiruvarur Dist.

I wonder if this somebody throws more light on the subject.

cho visiri said...

// எல்லாக் கச்சேரிகளுக்கும் தமிழ்நாட்டின் ஒரு குறிப்பிட்ட சாரார் மட்டுமே - அதுவும் அறுபது வயதை தாண்டியவர்களே - வருகிறார்கள். இதிலும் பாதிப் பேர் காண்டீனில் சாப்பிடவே வருகிறார்கள்.//

While it may be true that Canteens serve delicious dish during Season, the charge is baseless.

Having said that, it is hearbreaking to observe a few of the (or most of the) audience Rasikas go out during Thani Avarthana.
(by the way, one more stalwart who is simply known as Dr.M.Balamurali krishna. I think he can be placed both in yesteryears category and today's category.

He is the one great artiste who would keep the Rasikas Spellbound at any stage.

வேதநாராயணன் said...

// யாருக்கு தெரியுதோ அவர்கள் பாடுகிறார்கள். யாருக்கு புடிக்கிறதோ அவர்கள் டிக்கெட் வாங்கி கேட்க வருகிறார்கள். இந்த இரண்டிலுமே சம்பந்தம் இல்லாதவர்களுக்கு என்ன முனுமுனுப்பு வேண்டியிருக்கு ?
//
If we analyse this phenomenon , it is very simple to explain.
CM என்பதை ஒரு மாடர்ன் ஆர்ட் மாதிரி நினைத்து கொள்ளுங்கள். So அதை பாடுவதற்கு மட்டுமல்ல, அதை கேட்டு அனுபவிபதற்கும் knowledge தேவை படுகிறது. So not only the artist are inherited, even the rasikas are inherited. அந்த காலத்தில் CM ரசிகர்கள் முழுக்க brahmins ஆக இருந்ததால் அது தொடர்கிறது.
OKவா !

வேதநாராயணன் said...

// ஒரு சிறிய விஷயம் :
முத்துசுவாமி தீட்சிதர் பெரும்பாலும் சமஸ்க்ருதத்தில் பாட்டு இசைத்தார்.//

Agreed Ranganathan sir. This article about Season is written standing at 2000ft height (avoid details ) . The scope is not to get to details. Actually I wanted to mention Swathi tirunal, Harikesavanallur and Papanasam sivan.

வேதநாராயணன் said...

//
cho visiri said...

In Mridangam (Percussion Category) the author should have added 9ata least it is my wish) Karaikudi Mani and Tiruvarur Bhaktavatsalam.
//

Agreed. Guru Karaikudi is a big miss. I also wanted to add the following. But too much of a detail.

Top veteran of today : Madurai TNS
Top pair vidwan : Hyderabad
Emerging Pair : Malladi
Emerging Pair (ladies) : R&G
Emerging Instrumentalist : Shashank
Violin Accompnay : many many..
Emerging youngster vocal : kunnakudi & Prassanna venkatraman
Top vidwans (but yet to get due recognition) : suryaprakash, Sriram gangatharan

But I am sure to find some more miss...

வேதநாராயணன் said...

Cho Visiri : Balamurali sir...
Yes...I agree . He is an alltime great CM vidwan. Then how can we miss another all time great Vijay Siva.

Thani walk outs: I think if people cannot understand Thalam, they donot find it interesting to sit through, as it is late in the night normally. What is to be avoided is people walking out in the middle of songs. Not waiting for mangalam to get complted. My personal opinion though.

வேதநாராயணன் said...

For all carnatic rasikas :

Donot Miss,19thDec Sat ,6-7 PM the recorded telecast in Jaya TV of Sanjay Subramanyam giving a thematic concert. More details of the concert at

http://sanjaysub.blogspot.com/2009/12/seaso-kick-off-and-mayuram-viswanatha.html

Erode Nagaraj... said...

I have posted my season schedule here: http://erodenagaraj.blogspot.com/2009/12/december-music-festival-schedule.html

attend if free...

SAIANANDH said...

தலைவா கலகுரிங்க போங்க ஏன நீங்க வேட்டைக்காரன் விமர்சனம் கொடுத்தது சூப்பரோ சூப்பர் பை தல