டிஸ்கி: வேட்டைக்காரனுக்குப் போட்டியாக கமல், ரஜினி, அஜித் விக்ரம், ஏன் கரண் கதாநாயகனாக நடிக்கும் கனகவேல் காக்க கூட ரிலீஸ் செய்ய தைரியம் இல்லை. மோதிய ஒரே படம் அவதார். விஜய் படத்துடன் தைரியமாக மோதிய அவதார் படத்தை இன்று பார்த்தேன். பார்த்த பின்பு தான் தெரிந்தது வேட்டைக்காரனுடன் நடந்த போட்டியில் அவர்தார் தோற்றுப்போனார் என்று. ஆம் வேட்டைக்காரன் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. அவதார் 13 திரையரங்குகளில் வெளியாகிறது. இவ்வளவு தான் போட்டி. இனி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.
ஸ்பெக்டரம், கோடா, ஏன் ஆர்.எஸ்.எஸ் மீட்டிங்குக்கு டிரவுசருடன் போகும் எடியூரப்பாவே தன் படுக்கை அறைக்கு சில லட்சம் செலவு செய்கிறார்.அதனால் இந்த படத்தின் செலவு 1200கோடி. வெளியான முதல் நாளே எவ்வளவோ கோடியை அள்ளியது போன்ற தகவல் எல்லாம் எனக்கு ஆச்சரியம் தரவில்லை.
டைடானிக் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனின் அடுத்த பிரமாண்டமான படம் இந்த அவர்தார். அந்த காலத்து நீல நிறத்தில் ராமர் வேஷம் போட்ட என்.டி.ஆருக்கு வால் வைத்தால் எப்படி இருக்கும்? அதே போல வருகிறார் நம் பட கதாநாயகன்.லார்ட் ஆப் தி ரிங்க்ஸ், ஸ்டார் வார்ஸ் போன்ற படத்தின் காட்சி அமைப்பு ஞாபகப்படுத்தினாலும், 3D படத்தில் பார்ப்பது தனி சுகம். ஸ்டீபன் ஸ்பில்பேர்க், மைக்கல் பே,ரோலண்ட் எம்ரிச் போன்ற புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர்களுக்கு நல்ல சவால் விட்டிருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். இவர் முன்பு டைட்டானிக், ஏலியன்ஸ், டேர்மினேட்டர் ஆகிய படங்களை இயக்கியவர். அவதாரில் படத்தில் திரைக்கதையும் இவரே. இடைவேளிக்கு முன்பு எப்ப இடைவேளி என்று கையில் இருக்கும் வாட்சை பார்க்க வைக்கும் சுமாரான திரைக்கதை.
கூடு விட்டு கூடு பாய்வது என்பது விட்டாலாச்சாரியார் சமாசாரம். மிஷின் வைத்து அதை செய்தால்? ஹாலிவுட்டில் அதை சைன்ஸ் ஃபிக்ஷன் என்கிறார்கள்.. சாமானியர்களுக்கு புரிய கொஞ்சம் கஷ்டமான கதை என்பதால் சுறுக்கமாக கதையை படித்துவிட்டு படம் பார்க்க செல்வது தான் புத்திசாலித்தனம்.
பூமியிலுள்ள எரிபொருள் மற்றும் சில கணிம வளங்கள் தேடி விண்வெளியில் இருக்கும் பாண்டோரா எனும் வேற்று கிரகத்தை முற்றுகையிட வருகிறார்கள் மனிதர்கள். இதில் மனிதர்களே வில்லன்கள். அங்கே நவி எனும் ஒரு விதமான இனம் வாழ்கிறது. பார்க்க நீல நிறத்தில் ஆதி மனிதன் போல இருக்கும் இவர்கள் இயற்கையை நேசிக்கிறார்கள். ரொம்ப நல்லவர்கள்.இந்த நவி நிற மனிதர்களின் பழக்க வழக்கங்களை கண்டுபிடிக்க அவர்களுடன் உலாவ நவி போன்ற நீல நிற மனிதர்களை டி.என்.ஏயைக் கொண்டு உருவாக்கிறார்கள். பண்டோரா கிரகத்தில் மனிதனால் சுவாசிக்க முடியாது என்பதும் ஒரு காரணம். இந்த மாதிரி ஒரு உருவத்தில் நம் கதாநாயகன் ஜேக் பண்டோராவுக்குள் நுழைகிறார். கிரகத்தின் அழகில் நம்மை போலவே மெய் மறக்கிறார். அங்குள்ள ஒரு நவி பெண்ணுடன் காதல். இதற்கிடையே ஜேக் மனிதர்களின் கைகூலி என்று தெரியவர தர்மசங்கடத்தில் சிக்கிக்கொள்கிறார். அதற்கு பிறகு என்ன என்பதை படத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.
டைட்டானிக் படத்துக்கு இசையமைத்த ஜேம்ஸ் ஹார்னர் தான் இந்த படத்துக்கும் இசை. நன்றாக இருக்கிறது ஆனால் புதுமையாக இருக்கிறது என்று சொல்ல முடியாது.
ஒரு பெரிய மரத்தை அழிக்கும் காட்சியில் நிஜமாகவே பிரம்மாண்டம் தெரிகிறது. ஆர்ட் டைரக்டர் யார் என்று தெரியவில்லை அவ்வளவு கற்பனை. பைபர் வைத்து பூக்களை ஷோக்கேஸுல் பார்த்திருப்போம். அது கொஞ்சம் அதிகமாகவே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். பறவையில் பறக்கும் காட்சி கொஞ்சம் அதிகமாகவே காட்டியதாலோ என்னவோ கொஞ்சம் திகட்டுகிறது. எதை வெட்டணும் எதை வெட்டக்கூடாது என்று குழம்பிபோனதாக தெரிகிறது. நீல நிறத்தில் இருக்கும் மனிதர்கள் வில் வைத்துக்கொண்டு இருப்பர்கள் கடைசியாக வில்லன்களை அழிக்க திடீர் என்று நம்ம நீல நிற ஹீரோ ஜேக் துப்பாகியுடன் வருவது கொஞ்சம் சொதப்பல். இன்னொரு முறை பார்த்தால் கிராபிக்ஸில் என்ன தப்பு என்று நிறைய கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.
சிவாஜி படத்தில் ரஜினியை ஒரு பாட்டுக்கு வெள்ளைக்காரனாக காண்பித்ததற்கே பெருமையாக பேசிக்கொண்ட நாம், அவதார் படத்தில் 60 சதவீதம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மாயாஜாலம் என்றும் போது பெரும் வியப்பாக இருக்கிறது. இந்த படத்தின் இரண்டாம், மூன்றாம் பகங்களை எடுக்க முடிவு செய்திருப்பதாக படித்தேன். அப்படி செய்தால் எவ்வளவு தூரம் அது ஹிட்டாகும் என்று தெரியாது. இன்னும் கொஞ்சம் செலவு செய்தால் இந்த டெக்னாலஜியை வைத்து முழுக்க முழுக்க கம்ப்யூட்டரிலேயே நடிகர் நடிகைகளை வைத்து படம் பண்ணிவிடுவார்கள்.
இந்த படத்தின் வெற்றிக்கு கிராபிக்ஸா மார்கெட்டிங்கா என்றால் ? விடை மார்கெட்டிங்க் என்று சொல்லுவேன்.படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது நாமும் பண்டோரா கிரகத்திலிருந்து வெளியே வரும் உணர்வு. ஆனால் அது கொஞ்சம் நெரம் தான் நீடிக்கிறது.....வெளியே வரும் போது வேட்டைக்காரன் படம் விட்டு வரும் ரசிகர்களை பார்த்துதான் நாம் சென்னையில்தான் இருக்கிறோம் என்று தெரிந்துக்கொள்ள முடிகிறது. வேட்டைக்காரன் ரசிகர்களுக்கு என் நன்றி.
இட்லிவடை மார்க் - 7.0/10
2Dயில் ஓசி டிக்கெட் கிடைத்தாலும் பார்க்காதீங்க.
இந்த படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது எதிர்ப்பாத்த ஒன்று தான்.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத்தேர்தல்களின் முடிவையே எதிர்பார்த்த ஒன்று தான் என்று ஜெயலலிதாவே அறிக்கைவிடும் போது நான் இந்த மாதிரி அறிக்கைவிடக்கூடாதா ?
படத்தின் டிரைலர்
படம் பாக்க கண்ணாடி கொடுத்திருக்கிறேன், பார்த்துவிட்டு திருப்பி தாங்க ப்ளீஸ் :-)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Wednesday, December 23, 2009
அவதார் - விமர்சனம்
Posted by IdlyVadai at 12/23/2009 07:20:00 PM
Labels: இட்லிவடை ஸ்பெஷல், சினிமா, விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
30 Comments:
The Worst ever review done by idlyvadai. I never expect this from you... :(. seems you lost your trade mark...
ரொம்ப எதிர்பார்ப்போடு போனால் you will get disappointed... go with a blank mind and you can enjoy the mind boggling graphics... that is what I feel....
:-) விமர்சனம் நல்லா இல்லைனு சொல்லமாட்டேன்.
இன்னும் நல்லா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்..
அறிக்கைவிடக்கூடாதா ?
Today ஆட்டோ Sure..
இந்த படம் ஜில் ஜில் ஜிகர் தண்டா என்பது உண்மை
ஆனால் 3D எபக்ட்ஸ் செம கலக்கல்
7 out of 10 is outrageously low. It should be at least 9.5 or so.....
I am planning to see once more, the first time I am thinking of seeing a movie second time Since Sholay 1974.
Yes, Vittalacharya comparision is apt.
Karthik
Bangalore.
http://www.tamilhindu.com/2009/12/avatar_review/
ஹாசினி பேசும் படம் ஷோவில் , ஹாசினி பேசும் பொழுது ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்ன் magic is not there என்று இருந்தது. மற்ற படி நீங்கள் சொன்னது தான் அவர் சொன்னதும். But ரொம்ப seasonal movie அல்லவா ? கோபென்கஹேன் summit timeல் ஒரு green preservation பற்றிய movie .
3D கண்ணாடி போடும் பொழுது , எல்லோரும் துடைத்து விட்டு போடவும். Viral fever , swaine flu சீசன் இது.
//ஹாசினி பேசும் படம் ஷோவில் , ஹாசினி பேசும் பொழுது ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்ன் magic is not there என்று இருந்தது.//
ஜெயந்தி நடராஜன், சுஹாசினி இருவரும் டிவியில் வந்தால் எனக்கு BP கொஞ்சம் அதிகமாகும். அதனால் பார்ப்பதில்லை.
//அதற்கு பிறகு என்ன என்பதை படத்தில் பார்த்து தெரிந்துக்கொள்ளவும்.//
Why did you not give the full story as you had done for Vettikkaran!
//சுமாரான திரைக்கதை.//விட்டாலாச்சாரியார் சமாசாரம்.// எதை வெட்டணும் எதை வெட்டக்கூடாது என்று குழம்பிபோனதாக தெரிகிறது.//கடைசியாக வில்லன்களை அழிக்க திடீர் என்று நம்ம நீல நிற ஹீரோ ஜேக் துப்பாகியுடன் வருவது கொஞ்சம் சொதப்பல். இன்னொரு முறை பார்த்தால் கிராபிக்ஸில் என்ன தப்பு என்று நிறைய கண்டுபிடிக்கலாம் என்று நினைக்கிறேன்.// After all these, you have given a mark of 7/10! But you will tear Vettaikkaran into pieces even before the release. I expect IV to be a bit fairer in the reviews and comments. (I haven't seen both the films yet)- R. Jagannathan
வேட்டைக்காரன் விமர்சனத்தில் மட்டும் வரிக்கு வரிம் விஜய் பேசும் கடைசிக் காட்சி வசனம் வரை சொல்லிவிட்டு, இதில் "வெள்ளித்திரையில் காண்க"ன்னு சொல்லியிருக்கீரே? இது உமக்கே கொஞ்சம் ஒவரா தெரியல?
இட்லிவடைக்கும் எதோ உள்குத்து இருக்கு?
"வேட்டைக்காரன் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. அவதார் 13 திரையரங்குகளில் வெளியாகிறது"
kind attention to Mr.ஜேம்ஸ் கேமரூன்
இனிமே, இந்த மாதிரி போட்டியெல்லாம் இருக்கப்புடாது.
இட்லி வடைக்கு ஒரு வேளை முஸ்லிம் தீவிரவாதிகளை வில்லன்களாக சித்தரித்திருந்தால் இன்னும் பிடித்திருக்குமோ?
இந்து மதத்தின் தத்துவங்களை ஒத்தும் இயற்கையுடன் ஒன்றி வாழ வேண்டும் என்றும் கருத்தோடும் பின்னிப் பிணைந்து சொல்லப்பட்ட நல்ல படத்தை இப்படி விமர்சிப்பீர்கள் என்று எதிர் பார்க்கவில்லை..வேட்டைக்காரனைப் பார்த்து பயந்து அரண்டு போயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.. :)
Movie, very clearly depicts the Western arrogance of treating anything that they don't understand as beneath them.
Na'avi have been shown very docile and Non-violent. They are even shown as hunting the animals and kill them swiftly without prolonging the torture. The heroine character kills the attacking 'Wolf-like' animal and repents for killing a wild animal to save the hero & she even chides the hero that his unwarranted presence induced it, hence he is to blame for its death.
இயற்கையை, அதன் மகாத்மியத்தை ( முழுவதுமாகத் தெரிந்தோ தெரியாமலோ ) நம்பி, அதனைக் காத்து அதனுடன் ஒன்றி வாழ்வதையே மேன்மையாகக் கொண்டிருப்பவர்களை ஏதோ barbarians போல அவர்களுக்கு civilized behaviourஐக் கற்றுக்கொடுக்கிறோம், படிப்பறிவு தருகிறோம், இடத்தை விட்டுப் போ என்றால் போக வேண்டியது தானே என்கிற Western மேட்டிமைப் போக்கை நன்றாகவே வெளிப்படுத்துகிறது இப்படம்..அதை நாயகன் நக்கலும் அடிக்கிறார்..If I remember correctly he says.. 'why should they move.. for a pair of blue jeans?'
அதை விட எனக்குப் பிடித்தது, Na'avi மனமுருக வேண்டி உதவும் போது இயற்கை/அவர்களது கடவுள் அவர்களைக் கைவிடவில்லை..அவர்களது நம்பிக்கை பொய்க்கவில்லை. இயற்கையைப் போற்றும் இப்படத்தின் கருத்துக்களை ஆழ்ந்து விமர்சிப்பீர்கள் என்று நினைத்தேன்.. நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்....ஒரு வேளை நீங்கள் Jakesullyயும், Neytiriயும் ஸ்விட்சர்லாந்தில் கனவு டூயட் பாடுவார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்து விட்டீர்களோ :D
விமர்சனம் டபுள் ஓகே...
ஆனாலும், படம் வேட்டைக்காரன் அளவுக்கு இல்லையாமே...
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு நாளு தூங்க மாட்ட
புலி உறுமுது, புலி உறுமுது
இடி இடிக்குது, இடி இடிக்குது
போன்ற பாடல்கள் இல்லாததால்...
விமர்சனம் டபுள் ஓகே...
ஆனாலும், படம் வேட்டைக்காரன் அளவுக்கு இல்லையாமே...
நான் அடிச்சா தாங்க மாட்ட
நாலு நாளு தூங்க மாட்ட
புலி உறுமுது, புலி உறுமுது
இடி இடிக்குது, இடி இடிக்குது
போன்ற பாடல்கள் இல்லாததால்...
இ.வ,
வேட்டைக்காரன் பார்த்துட்டு...அவதார்ல "ஜேக் சல்லியும், நேத்ரியும் " குத்தாட்டம் போடுவாங்கன்னு நெனைச்சி போயி தியேட்டர் ல உக்கார்ந்தா இந்த மாதிரி தான் விமரிசனம் வருமா?
ஸ்ரீனி எழுதியிருக்கிறது சரியே..முதலில் பாராட்ட கத்துக்குங்க, அப்பால குறை சொல்லலாம்.
நெனைச்சி கூட பார்க்க முடியலப்பா..வேட்டைக்காரன் மாதிரி திராபை எல்லாம் அவதார் போன்ற படங்களுடன் ஒப்பிடறது...
Avathar film review in tamilhindu.com website
http://www.tamilhindu.com/2009/12/avatar_review/
ஸ்ரீனி சொல்வது சரி.
இந்த படத்தில் சில அம்சங்கள் நம் பழக்க வழக்கங்களோடு ஒத்து போகிறது.
1. நீல நிறம். ஏன் டைரக்டர் இந்த கலரை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.
2. நாவிக்கள் அமர்ந்து தியானம் செய்யும் முறை, யோகா செய்வது போல் இருப்பது.
3. இயற்கையை வழிபடுவது. அந்த மரத்தை நம் முன்னோர்கள் என்று கருதுவது. மரங்களோடு பேசுவது.
4. மறுபிறப்பு. கடைசியில் ஜேக் கூடு விட்டு கூடு பாய்ந்து வேறு உடலுக்கு செல்வது.
முக்கியமாக. அங்கு இருக்கும் தொங்கும் மலைகளின் பெயர், "அல்லேலூயா மலைகள்". அந்த மரங்களை பார்த்தால் நாவிக்களுக்கு மிகுந்த பயம் ஏற்படுமாம்.
"The Pandorans call them the Thundering Rocks, and the entire area is sacred to them."
http://james-camerons-avatar.wikia.com/wiki/Hallelujah_Mountains
இப்படி பல விஷயங்கள்.
Tamilhindu.com-ல் கூட சொதப்பி இருந்தார்கள்.
I don't understand,for marking process,,,
this movie 7/10, vettaikaran??less than this movie,,,really very bad,,there is the story in vettaikaran,but this movie, only Immagination,,.Tamillanuku,tamillan than ethery????.
ayo ayo,,,,/
any have ALL PARPANA SATHI.
அடைமொழி இல்லாதவன் said...
இட்லி வடைக்கு ஒரு வேளை முஸ்லிம் தீவிரவாதிகளை வில்லன்களாக சித்தரித்திருந்தால் இன்னும் பிடித்திருக்குமோ?//
அப்ப அவங்க ஹீரோ ன்னு சொல்றீங்களா...??? உங்க பேர அறிவில்லாதவன் ன்னு மாத்துங்க நண்பரே..
நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பொழுது போக்கிற்கான சினிமாவை கூட ஒரு சார்பாக பார்ப்பதைத்தான் சொல்கிறேன் நண்பரே. (எனக்கு Turtles Can Fly படம் மிகவும் பிடிக்கும்).
@Seenu,
"...area is 'sacred' to them."
i think u hav confused it with scared...
what he is trying to say is hallelujah mountains are what himalayas are to us...tamila solanumna punidhathanmai ulla malaigal...
anyway gd observations..
அறிவில்லாதவன் said...
நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. பொழுது போக்கிற்கான சினிமாவை கூட ஒரு சார்பாக பார்ப்பதைத்தான் சொல்கிறேன் நண்பரே. (எனக்கு Turtles Can Fly படம் மிகவும் பிடிக்கும்).//
இன்னும் உங்களுக்கு பெயர் மாற்ற விருப்பமில்லை ... முஸ்லிம் தீவிரவாதிகள் என்பதே தவறு... அவர்களை வில்லனாய் காட்டினால் என்று நீங்கள் சொன்னால் அது இட்லி வடைக்கு பிடிக்கும் என்று சொன்னால்... அதற்க்கும் மேலுள்ள பதிலுக்கும் நீங்கள் போடும் PATCH WORK அவதார் CG மிஞ்சிவிடும் போலிருக்கிறது இப்போதுள்ள பெயரையாவது காப்பாற்றிக்கொள்ளுங்கள் நண்பரே.. (உள்ளத்தில் உள்ளது வெளியில் வந்துவிடும் (எப்படியாவது) உஷார்...!!
Epitome of Negativity,
You are correct. I think I missed that. I read as SCARED (as am I?) ;)
அவதார் பட கதையின் டெக்னிக்கல் விஷயங்களை சொல்லுவீர்கள் என்று ஆவலாய் படித்தால் உங்கள் விமர்சனம் நன்றாய் ஏமாற்றிவிட்டது.
நான் படம் தேவி தியேட்டரில்தான் பார்த்தேன். Wow இனி இதுபோல் படம் வரபோவதில்லை. பண்டோரா நம்மை வியக்க வைக்கும். நம்முடைய சிறுவயது காமிக்ஸ் கதைகளை உணரவைக்கும் என்றால் அது மிகையாகாது.
கேமரூன் இதனுடைய 2 மற்றும் 3 ம் பாகம் தயாரித்தால் நான் முதல் ஆளாய் பார்ப்பேன்.
Hereafter there is no need to read your reviews becoz, they are just jimiks of words not as real as what we see. A worst review.
I think u can do more wonderful movies than avatar with ur g8 thought.
Worst review for this movie ... This is not a movie ... its an experience ...
Vetaikaran sucks .... dont even compare .. You are biased ...
I didnt expected this review from idlyvadai, we can have kandakottai as competition for Vettaikaran, Its true. No where it can compete with avatar. its better to see navi's trying to save nature then Dr vijay going to College from school.
unna mathiri alukellam intha mathiri padam set agathu. vettakaran mokka padam than ungala mathiri aluku set. enga irunthu urupada pothu intha TN.
Post a Comment