பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 11, 2009

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்


மேலே பார்ப்பது போன வார கல்கியில் வந்த விளம்பரம். அட நம்ம நேசமுடன் வெங்கடேஷ் என்று அவரிடம் அடுத்த வார கல்கியில் என்ன ஸ்பெஷல் என்று கேட்டேன். இட்லிவடை கேட்ட கேள்வியை சீரியஸாக எடுத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டுரையே எழுதி தந்துவிட்டார். இதோ அந்த கட்டுரை...

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழைத் தயாரிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ஒரு பெருமை. ஒருசில பத்தாண்டுகளுக்கு முன்பு, சாவி இதழை பாலகுமாரனும் மாலனும் தயாரித்ததாகப் படித்திருக்கிறேன். ஆங்கில தினசரிகளில், டைம்ஸ் ஆஃப் இந்தியா, அவ்வப்போது இந்திய அளவிலான வல்லுநர்களை அழைத்து, கெஸ்ட் எடிட்டராக இதழைத் தயாரிக்க வைக்கும். குமுதம் இதழ்களைப் பிரபலங்களைக் கொண்டு தயாரித்திருக்கிறார் எடிட்டர் எஸ்.ஏ.பி.

ஒரு இதழ், வெளியில் இருந்து ஒரு நபரை அழைத்து, தம் இதழைத் தயாரிக்கச் சொல்வது மிகவும் முக்கியமான முடிவு. அது அந்த நபருக்குக் கொடுக்கப்படும் கெளரவம். அவர் மேல், அவ்விதழ் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு அது.

அந்த வகையில், கல்கியின் ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, இண்டர்நெட் இதழ் தயாரிப்பு பற்றி சொன்னபோது, இந்தச் சரித்திரங்கள்தான் ஞாபகம் வந்தன. கூடவே பொறுப்புகளும் ஞாபகம் வந்தன. இது நான் எழுதும் ‘நேசமுடன்’ மடல் இதழ்களைப் போன்றது அல்ல. ‘நேசமுடன்,’ என் தனியொருவனின் ஆளுமையை வெளிப்படுத்தும், என் கருத்துகளைப் பிரதிபலிக்கும், என் சாய்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டும் தனியிதழ். வாசகர்கள் அனைவரின் ஆர்வங்களுக்கும் ரசனைகளுக்கும் அதில் இடமிருக்குமா என்றும் தெரியவில்லை.

ஆனால், கல்கி அப்படி இல்லை. அவ்விதழை மக்கள் பணம் கொடுத்து வாங்கிப் படிக்கிறார்கள். எல்லா தரப்பினரும் எல்லா வயதினரும் எல்லா ரசனையாளர்களும் அதில் இருக்கிறார்கள். எல்லோருடைய வாசிப்புத் தேவையையும் நிறைவு செய்வது அதன் தலையாயக் கடமை. அதனால், ஜர்னலிசத்தில் சொல்லிக்கொடுக்கப்படும் பாலபாடங்களில் ஒன்று ஞாபகம் வந்தது: ‘வாசகர்களின் பார்வையில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள்.’

அதனால், என் மேதாவிலாசத்தை காட்டிக்கொள்ள இவ்விதழை நான் பயன்படுத்தவில்லை. ரொம்ப டெக்னிக்கலாக எதையும் சொல்லி, யாரையும் நான் பயமுறுத்தவில்லை. எளிமையும் சுவாரசியமும் அடிப்படை. எந்த வித ரசனையுள்ளவர்களுக்கும் கணிசமான பக்கங்கள் இவ்விதழில் இருக்கும். மேலும் இதழைத் தயாரிக்க ஆரம்பித்த பின்னர், இது பெருங்கடலைச் சிமிழுக்குள் அடக்கும் முயற்சி என்பது புரிந்தது. எழுதப்பட்டதைவிட எழுதப்படாததே அதிகம்.

என்.சொக்கனின் டிவிட்டர் சிறுகதை (பத்திரிகைகளில் வெளிவரும் முதல் டிவிட்டர் கதை இதுதானோ?), டோண்டு ராகவனின் சொந்த அனுபவங்கள், இண்டர்நெட்டின் பத்து முக்கிய கணங்கள், மொபைல் புக்ஸ், ஆன்லைன் புத்தகக் கடைகள், டொரெண்ட் நெட்வொர்க், டிவிட்டர் என்று ஏராளமான அம்சங்களைக் கொடுத்திருக்கிறேன். இதழ் எங்கும் இன்னும் பல கலர்ஃபுல் அம்சங்கள் உண்டு.

நான் என்ன செய்திருக்கிறேன் என்று நானே சொல்லுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. அதனால், வரும் ஞாயிறன்று நீங்களே கல்கி இதழை வாங்கிப் படித்துவிட்டு, உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

நேசமுடன்
வெங்கடேஷ்
http://nesamudan.com
Email: venkatesh.nesamudan@gmail.com
(ஒரே வரியை இரண்டு தடவை எழுதியிருந்தார், கூச்சபடாம எடுத்துவிட்டேன் )

கல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் எப்படி இருந்தது என்று விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன. கோபமாகவோ, ஜாலியாகவோ எழுதலாம் அது உங்க இஷ்டம்.

6 Comments:

சைவகொத்துப்பரோட்டா said...

‘வாசகர்களின் பார்வையில் இருந்து பார்க்கக் கற்றுக்கொள்.’


மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய வாசகம். வாழ்த்துக்கள் திரு.ஆர்.வெங்கடேஷ்

கௌதமன் said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பாரதி மணி said...

இது ‘கல்கி’ திரு வெங்கடேஷுக்கு கொடுத்த மரியாதை.

வாழ்த்துகள்!

vedanarayanan said...

On a different note : கல்கி இல் பக்கங்கள் மிக குறைவு . அதனால் எந்த விஷயத்தையும் detail அக பண்ண முடியவில்லை என்று நினைக்கிறேன்.

They can go also in internet with an internet edition and give more details without worrrying about cost of publishing.

அப்பறம் எவ்வளவு நாட்கள் தான் , கல்கிஇன் historic novels , காஞ்சி பரமாச்சார்யா, MSSubbulakshi இவர்களை பற்றி சொல்லி கொண்டு இருப்பார்கள்.

Anonymous said...

what is the circulation of Kalki ? who reads Kalki - except for Brahmins ?

R.Venkatesh always writes his nesamudan blog from a "Pedestal". His writing style is very good but conveys meanings/messages as if he is above all the things happening in the society.

Is my assumption correct that R.Venkatesh's Sunami post and Kamalahassan post only started all the BigFights in tamilmanam ?

Sundar

butterfly Surya said...

வாழ்த்துகள் வெங்கடேஷ்.

நன்றி இட்லி வடை..